அத்தியாயம் 88: விஷ்ணுவுடன் ஷாலினி (பார்ட் 2)
வைஷாலி: “நீ ஸ்கூலுக்கு போக ஸ்டார்ட் பண்ணதில இருந்து கொஞ்சம் ஓவரா தான் பண்ற... இருக்கட்டும் வச்சிக்கிறேன் உன்ன." என்று அர்த்தமாக சொன்னவள், தனக்குள் புன்னகைத்தாள். 😁 😁
விஷ்ணு கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்ததால், அவள் என்ன அர்த்தத்தில் பேசிக் கொண்டு உருக்கிறாள் என்று எல்லாம் அவன் கவனிக்கவில்லை. அதனால் அவளை தன்னுடைய பைக்கில் ஏற்றிக்கொண்டு அதை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். 🏍️
விஷ்ணு நாராயணன் பேலஸை நோக்கி சென்று கொண்டு இருக்க, நாராயணன் பேலஸில் இருந்து பள்ளியை நோக்கி ராகவிடுடன் சென்று கொண்டு இருந்த ஷாலினி, விஷ்ணு இந்த நேரத்தில் பள்ளிக்கு வராமல் கூட, பைக்கில் யாரோ ஒரு பெண்ணுடன் சென்று கொண்டு இருப்பதை கண்டாள். ஷாலினி அவர்களை பார்க்கும்போது, அவர்கள் இருவரும் ஜாலியாக பேசி சிரித்த படி இருந்தனர். 😂
பைக்கின் இருபுறமும் தன்னுடைய கால்களை தொங்க போட்டு அமர்ந்து இருந்த வைஷாலி, அவள் முதல் முறை பைக்கில் செல்வதால், பயத்தில்... விஷ்ணுவை இருக கட்டி பிடித்து இருந்தாள். அந்த காட்சியை பார்த்த ஷாலினியின் வயிறு பொசசிவ்னஸ் -ஆல் எரிந்தது. 🔥அவளுக்கு தனக்மட்டும் சொந்தமான இடத்தில், இவள் யார் வந்து அமர என்று தோன்ற.., யார் என்றே தெரியாத அந்த பெண்ணின் மீது ஷாலினிக்கு அதிகமாக கோபம் வந்தது. 😡 🤬 🔥
அதே கோபத்துடன் ஸ்கூட்டியை ஓட்டி கொண்டு இருந்த ரித்திகாவை அழைத்து அவர்களைை கை காட்டியவள், “அங்க பாருங்க அக்கா..!! மேனர்ஸ்சே இல்லாம நடு ரோட்டில எப்டி போறாங்கன்னு." என்று தன் வாய்க்கு வந்தபடி எதை எதையோ சொல்லி அவர்கள் இருவரையும் கரித்து கொட்டினாள். 😒 😡🔥
ரித்திகா: விஷ்ணுவின் மீது இருக்கும் காதலால் தான் பொசசிவ்வாகி இப்படி பேசி இவள் கொண்டு இருக்கிறாய் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது. அதனால், அதை அவள் வாயாலேயே ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்தவள், “ரோட்ல யாரோ எப்படியோ போயிட்டு போறாங்க. அதுக்கு எல்லாம் நீ ஏன் இப்டி ரியாக்ட் பண்ற...??? ?" என்று கேஷுவலாக கேட்டாள்.
ஷாலினி: “அது ஒன்னும் யாரோ இல்ல அக்கா. நம்ம விஷ்ணு, அவன எப்படி எப்படியோ போட்டும்ன்னு நம்ம விட முடியும்...??? என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது." என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி கொண்டு இருந்தாள்.
ரித்திகா: இப்ப உனக்கு என்ன தான் டி பிரச்சன..???
ஷாலினி: “எனக்கு இப்ப உங்க தம்பி தான் அக்கா பிரச்சனை. அவன் எதுக்கு இப்படி கண்ட பொண்ணு கூட எல்லாம் ஊர சுத்திக்கிட்டு இருக்கான்..??? நீங்க இத எல்லாம் கேட்கமாட்டீங்களா..!!!" என்று கோபமாக கேட்டாள். 😕
ரித்திகா: கேப்பனே...!!! கண்டிப்பா கேட்பேன். நீ மட்டும் அவன லவ் பண்றேன்னு ஒரு வார்த்த சொல்லு. உனக்குன்னு என் தங்கச்சி இருக்கும் போது, நீ ஏன் டா கண்ட பொண்ணுங்க கூட எல்லாம் சுத்திக்கிட்டு இருக்கேன்னு... கண்டிப்பா அவன் சட்டையை புடிச்சு கேட்கிறேன். ஆனா அதுக்கு அவன நீ லவ் பண்ணனுமே....!! அவன் மட்டும் தான் உன் பின்னாடி உன்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்கான். நீ தான் அவன கண்டுக்கிற மாதிரியே தெரியலையே...!! அப்புறம் அவன் என்ன பண்ணா உனக்கு என்ன..??? யார் கூட போனா உனக்கு என்ன..???" என்று பாயிண்டாக கேள்வி கேட்டு ஷாலினியை மடக்கினாள்.
ஷாலினி: “ஆமா நான் அவன லவ் பண்ணல. ஆனா அவன் என்ன லவ் பண்றான்ல...!!! அப்புறம் எப்படி இப்படி மத்த பொண்ணு கூட எல்லாம் சுத்திட்டு இருப்பான்..?? அப்ப என் மேல இருக்கிற லவ் உண்மை இல்லையா...???" என்று திக்கி திணறி கேட்டவள், தன் வாய்க்கு வந்ததை சொல்லி மலுப்பினாள்.
ரித்திகா: “இது என்ன டி லாஜிக்கு...!! நீ அவன் கிட்ட பிடி குடுத்தே பேச மாட்டேங்குற. நீ இப்படியே லாஸ்ட் வரைக்கும் அவன் லவ்வ அக்ஸப்ட் பண்ணவே இல்லன்னா, அவன் என்ன சாகுற வரைக்கும் சிங்கிளாவே இருக்க முடியுமா..??? அவனும் பையன் தானே... ஷாலினி இல்லனா ஒரு காமினின்னு ஜாலியா போயிடுவான். உனக்கு தான் அவன் வேணாம்ல... அப்புறம் என்ன.??? அவன் என்னமோ பண்ணிட்டு போறான். ப்ரீயா விடு." என்று சாதாரணமாக சொன்னவள், சைடு மிரரில் தெரிந்த ஷாலினியின் முகத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். 😂 😂 😂 😂
ஷாலினி ரித்திகா தனக்கு சாதகமாக தான் பேசுவாள் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்க, அவளோ இவளையே லாக் செய்யும் படி பேசி விட்டதால், இதற்கு மேல் தான் என்ன பேச முடியும் என்று நினைத்து சலித்துக் கொண்டவள், “அட போங்க அக்கா..!!!" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்காதவள் போல், “இப்ப நீ என்ன சொன்ன...??" என்று வேண்டும் என்றே ராகவி கேட்க, “ஒன்னும் இல்ல. நீங்க சீக்கிரம் போங்க." இன்று கடுப்பாக சொன்னாள் ஷாலினி. 😒 ஷாலினியின் ஒவ்வொரு முகம் மாற்றங்களையும் கண்ணாடி வழியாக கவனித்த ராகவி, சிரித்து கொண்டே டிரைவ் செய்தாள்.
நாராயணன் பேலஸில்....
விஷ்ணுவோடு அங்கு வந்த வைஷாலி, ஹாலில் இருந்த சொஃபவில் அமர்ந்து இருந்த செண்பகத்தை பார்த்தவுடன், அத்தை என்று சத்தமாக கத்தி கொண்டே ஓடி சென்று அவளை கட்டி பிடித்துக் கொண்டாள். செண்பகமும் பாசமாக அவளை ஆற கட்டித் தழுவிக் கொண்டாள். அவர்கள் இருவரும் சில நிமிடங்கள் ஒருவரைப் பற்றி ஒருவர், பொதுப்படையாக நலம் விசாரித்துக் கொண்டனர்.
செண்பகம்: பாசமாக வைஷாலியின் தலையை தடவியவள், “சாப்டியா டா தங்கம்..???" என்று அக்கறையாக விசாரித்தாள்.
வைஷாலி: “இல்ல அத்தை. இன்னைக்கு மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் உங்க எல்லார் கூடவும் சாப்பிடணும்னு தான் இயர்லி மார்னிங்கே எந்திரிச்சு கிளம்பி இங்க சீக்கிரமா வந்தேன்." என்று அவளும் சிரித்துக் கொண்டே பாசமாக சொன்னாள்.
செண்பகம்: “நேத்து நைட்டு நீ கால் பண்ணி, நாளைக்கு நீ இங்க வரேன்னு சொன்னதுனால உனக்கு புடிச்ச எல்லாத்தையும் செஞ்சு வைக்கணும்னு நான் காலையிலேயே எல்லாமே செஞ்சு வச்சிட்டேன். வா போய் சாப்பிடலாம்." என்று அவளை அன்பாக அழைத்தாள்.
விஷ்ணு: “இது எல்லாம் சரியே இல்ல அம்மா. உன் பொண்ணுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் உன்னை நல்லா ஐஸ் வச்சிராங்க. நீயும் அவங்க கேட்கிறது எல்லாத்தையும் உடனே... உடனே... செஞ்சு கொடுத்துடுற. நான் உன் கிட்ட ஒரு மாசமா பணியாரம் வேணும்னு கேக்குறனே நீ சுட்டு தந்தியா..???" என்று சிறு கோபத்துடன் கேட்டான்.
வைஷாலி: “டேய் மாமா..!!! ஒரு பணியாரத்துக்கு எதுக்கு டா இவ்ளோ சீன் போடுற..??? நமக்கு எத்தன ஹோட்டல் இருக்கு...!! அங்க எங்கயாவது போய் சாப்பிட வேண்டியது தானே..???" என்று நக்கலாக கேட்டாள்.
செண்பகம்: அவன் அடிக்கடி வெளியில போய் சாப்பிடுற ஆள் தான் பாப்பா. ஆனா இந்த பணியாரம் மட்டும் என்னான்னு தெரியல.. அவனுக்கு நான் செஞ்சு குடுத்தா தான் பிடிக்கும்.
விஷ்ணு: “ஆமா...!!! அது அம்மா செய்யுற டேஸ்ட்டு வேற எங்கேயுமே வராது. அதுலயும் அதுக்கு சைட் டிஷ்ஷா, த்ரீ டைப் ஆஃப் சட்னி செய்வாங்க பாரு அதான் வேற லெவல்." என்று சொன்னவனுக்கு... அவன் இறுதியாக சாப்பிட்ட அந்த பணியாரத்தின் சுவை இப்போது கூட அவனுடைய நாக்கில் இருப்பதை போல் தோன்றியது. அதையெல்லாம் நினைத்து தன்னுடைய அம்மாவின் சமையலை தனக்குள் மெச்சி கொண்டான்.
வைஷாலி: “அத்தை அப்ப அத எப்டி செய்யறதுன்னு எனக்கு சொல்லி குடுங்க. இனி மேல் மாமா கேக்குறப்ப எல்லாம் உடனே நான் அதை செஞ்சு குடுக்கிறேன்." என்று கண்களில் ஆசை மின்ன செண்பகத்தை பார்த்து கேட்டாள்.
செண்பகம்: சொல்லி தரேன் மா. இதுக்கு நைட் நம்ப அந்த பணியாரம் செய்யலாம்.
வைஷாலி: செண்பகம் சொன்னதை கேட்டு மகிழ்ந்தவள் விஷ்ணுவை பார்த்து, “மாமா இனி மேல் உனக்கு பணியாரம் வேணும்ன்னா நீ அத்தைய கேட்டு டார்ச்சர் பண்ணாத என் கிட்ட கேளு, நான் உனக்கு செஞ்சு தரேன். ஓகேவா....???" என்று கண்களில் காதல் மின்ன கேட்டாள். 😍 🥰
விஷ்ணு: “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல எனக்கு பசிக்குது, வாங்க சாப்பிடலாம். நான் சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்பனும், டைம் ஆகுது. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு." என்று தன்னுடைய வாட்சில் நேரத்தை பார்த்த படியே சொன்னான். நேரம் ஏற்கனவே காலை 9:30 மணியை கடந்து இருந்தது.
விஷ்ணுவோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட வைஷாலி, அவனோடு வேகமாக டைனிங் டேபிளுக்கு சென்றாள். அவர்கள் மூவரும் சாப்பிட அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, விஷ்ணுவை பார்த்த வைஷாலி, “இனிமே நானும் உன் கூட ஸ்கூலுக்கு வரேன் மாமா." என்றாள். அப்போது ஒரு தண்ணீர் கிளாசை எடுத்து தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த விஷ்ணு, அவள் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில் அதை அப்படியே வெளியே துப்பி இருப்பான். இருப்பினும் எப்படியோ சமாளித்து தன்னை சமப்படுத்தி கொண்டவனுக்கு, பொறை ஏறியது. அதனால் இரும்பி கொண்டே அவளைப் பார்த்தவன், “ஸ்கூலுக்கு வந்து நீ என்ன பண்ண போற..???" என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டான். 😳
வைஷாலி: அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், “இப்ப நீ மட்டும் அங்க போய் என்ன பண்ணிட்டு இருக்க...???" என்று பதில் கேள்வி கேட்டாள்.
விஷ்ணு: நான் அங்க போய் பர்சனாலிட்டி அண்ட் ஸ்கில் டெவலப்மென்ட் கிளாஸ் எடுக்கிறேன். நீ அங்க வந்து என்ன பண்ண போற..???
வைஷாலி: நீ உனக்கு தெரிஞ்சத சொல்லிக் கொடுக்கிற மாதிரி, நான் எனக்கு தெரிஞ்சத சொல்லிக் கொடுக்க போறேன். அவ்ளோ தானே...!!!
விஷ்ணு: ஆமா..!!!! நீயே இப்ப தான் டிகிரி கம்ப்ளீட் பண்ணி இருக்க. உனக்கு என்ன தெரியும்னு நீ சொல்லிக் குடுக்கப் போற...??
வைஷாலி: ஹலோ மாம்ஸ்..!!!! நான் ஒரு நேஷனல் லெவல் ஸ்போர்ட்ஸ் பிளேயர் மறந்துட்டியா...??? அங்க ஸ்கூல்ல ஒரே ஒரு ஜென்ஸ் ஸ்டாப் மட்டும்தானே இருக்காங்க பீ. இட். டி -க்கு... நான் வந்தா கேர்ள்ஸ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் தனியா எல்லா கேம்சையும் சொல்லித் தருவேன். சோ என்ன பீட்டி டீச்சர் அப்பாயின்ட் பண்ணு.
விஷ்ணு: “நீ ஸ்போர்ட்ஸ் பிளேயர் தான். ஆனா உனக்கு எல்லா கேம்ஸ்ச்சும் தெரியுமா..???" என்று சந்தேகமாக கேட்டான்.
வைஷாலி: செண்பகத்தை பார்த்தவள், “என்க்கு இந்த ஃபீல்டுல இருக்கிற எக்ஸ்பீரியன்ஸ்க்கு நான் நினைச்சா ஒரு ட்ரெய்னிங் அகாடமியே ஸ்டார்ட் பண்ணலாம். உங்க பையன பாருங்க அத்தை, அவன் ஸ்கூல்ல எனக்கு ஒரு பீ.ட்.டி டீச்சர் வேலை கூட குடுக்கிறதுக்கு எவ்ளோ யோசிக்கிறான்...!!!" என்றவள் தனக்கு ஆதரவாக பேசும் படி செண்பகத்தை அழைத்தாள்.
செண்பகம்: “அவ சொன்ன மாதிரி அவளுக்கு எக்ஸ்பீரியன்ஸ் -ம் இருக்கு, குவாலிபிகேஷன் -ம், இருக்கு. அப்புறம் என்ன டா..??? நீ இன்னைக்கே அவள அப்பாயிண்ட் பண்ணி, நீ கிளம்பும்போது அவளையும் உன் கூட கூட்டிட்டு போ." என்று ஸ்டிக்ட்டாக சொல்லிவிட்டாள்.
செண்பகம் அவருடைய முடிவில் தீர்மானமாக இருப்பதால் வேறு வழி இன்றி ஒப்புக்கொண்ட விஷ்ணு, அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், வைஷாலியையும் தன்னுடன் பைக்கில் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றான். செல்லும் வழியிலேயே அவன் தன்னுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு அங்கே வேலை பார்ப்பது பற்றியும் அவளிடம் தெளிவாக சொல்லி, அவளையும் அங்கே அப்படியே இருக்கும் படி அறிவுறுத்தினான். விஷ்ணுவோடு இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்த வைஷாலியும், அவன் சொன்ன அனைத்து கண்டிஷன்களுக்கும் ஒப்புக் கொண்டாள்.
சித்தார்த்தின் பள்ளியில்.....
பிரின்சிபல் இன் அறைக்கு வைஷாலியை அழைத்து வந்த விஷ்ணு, அவளை பிரின்சிபல் சாரதாவிற்கு அறிமுகப்படுத்திவிட்டு, அவளுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை ரெடி செய்து தரச் சொன்னான். ஆபீஸ் ஸ்டாப்புகளின் உதவியோடு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரையும், அவளுக்கான டைம் டேபிளையும் ரெடி செய்து, அவளிடம் கொடுத்து அவளை அங்கு இருந்து அனுப்பி வைத்தாள் சாரதா.
அதை மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்ட வைஷாலி ஸ்டாப் ரூமிற்கு செல்ல, விஷ்ணுவும் தன்னுடைய வேலையை பார்ப்பதற்காக சென்று விட்டான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள். மற்றும் youtubeல் தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து அதில் வரும் ஆடியோ நாவல்களை கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 88
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.