அத்தியாயம் 87: விஷ்ணுவுடன் ஷாலினி (பார்ட் 1)
விஷ்ணுவின் அறையில்....
பள்ளிக்கு செல்வதற்காக விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தன்னுடைய பிரமாண்டமான உயர்தர ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னுடைய க்யூட்டான முகத்தை பார்த்து தன் தலையை வாரி கொண்டு இருந்த விஷ்ணு, அந்த காலால் டிஸ்டர்ப் ஆனவன். தனக்கு இந்த நேரத்தில் யார் கால் செய்கிறார்கள் என்று யோசித்த படியே... தன்னுடைய பெட்டில் கடந்த மொபைல் போனை தேடி கண்டுபிடித்து எடுத்துப் பார்த்தான்.
அவனுடைய மனம் ஷாலினி தன்னை பள்ளியில் கொண்டு போய் டிராப் செய்யும்படி கால் செய்து கேட்டால் நன்றாக இருக்கும் என்று அவனிடம் சொல்லிக் கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம், இப்போது எல்லாம் ஷாலினி ராகவியோடு தானே பள்ளிக்கு வந்து கொண்டும், போய்க்கொண்டும், இருக்கிறாள்; அப்படி இருக்கையில்... தனக்கு ஏன் அவள் கால் செய்யப் போகிறாள்..?? என்று அவனே தனக்குள் கேள்வியும் கேட்டு, அவனே பதிலும், சொல்லிக் கொண்டவன், சலிப்பாக காலர் ஐடியை பார்த்தான். அதில் வைஷாலி என்று போட பட்டு இருந்தது.
வைஷாலியின் பெயரை தன்னுடைய மொபைலில் பார்த்த உடனே விஷ்ணுவின் கண்கள் பிரகாசமானது. 😍 விரிந்த புன்னகையுடன் அந்த காலை அட்டென்ட் செய்து பேச தொடங்கினான் விஷ்ணு. 😁 😁 😁
விஷ்ணு “ஹே வைஷு எப்டி டி இருக்க...??? ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணி இருக்க...!!!" என்று சந்தோஷமாக கேட்டவனின் குரலில் கூட உற்சாகம் வெளிப்படையாக தெரிந்தது. 😍 😄
வைஷாலி: “ஏன் டா இப்பையும் நான் தானே உனக்கு கால் பண்ணி இருக்கேன்...!!! நீ ஒன்னும் எனக்கு கால் பண்ணலையே? போ.. நான் உன் மேல கோவமா இருக்கேன் டா குட்டி மாமா." இது கோபத்தில் சிலிர்த்து கொண்டாள். 😏
விஷ்ணு போனில் தான் பேசி கொண்டு இருந்தாலும், இப்போது அவளுடைய முக பாவங்கள் இப்போது எப்படி இருக்கும் என்று அவனால் நன்கு கற்பனை செய்து பார்க்க முடிந்தது. அதை நினைத்துப் பார்த்தவனின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை வந்தது. 😁 😁 😅 அதே புன்னகையுடன், “சரி.. சரி ... சாரி..!!! டி. கோச்சுக்காத. கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். அதான் உன் கிட்ட பேச முடியல. ஆனா நீ எனக்கு கால் பண்ணி இருந்தீன்னா கண்டிப்பா எடுத்து இருப்பேன்." என்றான்.
வைஷாலி: “யாரு... நீ தானே நல்லா பேசி இருப்ப..!! நடிக்காத. நான் உனக்கு வாட்ஸ் அப்ல எத்தனை மெசேஜ் பண்ணேன்... இப்பலாம் நீ அத பாக்க கூட மாட்டேங்குற..!! நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா..??? ஆனா நீ என்ன கொஞ்சம் கூட மிஸ் பண்ண மாதிரியே தெரியலையே...!!! உண்மைய சொல்லு... உனக்கு என் நினைப்பே வராத மாமா..???" என்று முதலில் கோபமாக பேசியவள், இறுதியில் வருத்தமாக பேசி முடித்தாள். அவருடைய குரலில் உண்மையான சோகம் இலையோடியது. 😕 😣 😞
விஷ்ணு “எனக்கு மட்டும் உன் மேல பாசம் இருக்காதா..?? நிஜமா நானும் தான் உன்னை மிஸ் பண்ணினேன் டி. நீ தான் எப்பவும் இங்க லீவுக்கு வருவயில்ல.. எக்ஸாம் முடிஞ்ச உடனே எங்க கிளம்பி வா. நம்ம ஃபன் பண்ணலாம்." என்றான்.
வைஷாலி: நிஜமாவே நீ என்ன பாத்தா சந்தோஷப்படுவியா மாமா..???
விஷ்ணு: இது என்ன டி கேள்வி...??? சத்தியமா சந்தோஷப்படுவேன்.
வைஷாலி: அப்ப ஓகே. உடனே கிளம்பி வா..!!!
விஷ்ணு: எங்க கரூருக்கா..??? அடியே..!!! நான் ஸ்கூலுக்கு போலாம்ன்னு கிளம்பிட்டு இருக்கேன். எனக்கு வேலை இருக்கு.
வைஷாலி: “நான் உன்ன அங்க வர சொன்னாலும், நீ எனக்காக அப்படியே அங்க ஓடி வந்து நின்ற மாட்டன்னு எனக்கு தெரியும். சோ நீ அவ்ளோலாம் எனக்காக வந்து கஷ்டப்பட வேணாம். உங்க ஊரு பஸ் ஸ்டாண்டுக்குு வா போதும்." என்று சொன்னவள் குறும்பாக சிரித்தாள். 😂 😂 😂
விஷ்ணு: “என்னது பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரணுமா..!!! அப்ப நீ இங்க பஸ்ல வந்துட்டு இருக்கியா..???" என்று ஆச்சரியமான குரலில் கேட்டான். 😳
வைஷாலி: “வீட்ல இத்தன கார வச்சிக்கிட்டு நான் எதுக்கு பஸ்ல வரனும்..???" என்று நாட்களாக கேட்டாள். 😂
விஷ்ணு: “அப்ப நிஜமாவே இங்க வந்து இருக்கியா...???" என்று ஆர்வமாக கேட்டான். 😍
வைஷாலி: “ஆமா...!!! பஸ் ஸ்டாண்ட் கிட்ட வெயிட் பண்றேன். வந்து என்ன பிக்கப் பண்ணிட்டு போ." என்று உரிமையாக கேட்டாள்.
விஷ்ணு: “கார்ல தானே வந்திருப்ப..!! பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வந்துட்ட, அப்புறம் என்ன..?? அப்படியே இங்க வீட்டுக்கு வந்துரு. நான் எதுக்கு ஒன்னும் தேவை இல்லாம பிக்கப் பண்ணனும்...??" என்று குழப்பமாக கேட்டான். 🙄
வைஷாலி: “அப்ப என்ன இங்க வந்து பிக் கப் பண்றது உனக்கு தேவை இல்லாத வேலையா...???" என்று கோபமாக கேட்டாள். 😒 😠
விஷ்ணு: “அட லூசு அப்படிலாம் இல்ல. நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அதான் அப்படி சொன்னேன்." என்று சொல்லி சமாளித்தான்.
வைஷாலி: “அது எல்லாம் எனக்கு தெரியாது. நீ தானே அந்த ஸ்கூல்லோட ஓனர்..!! நீ லேட்டா போனா உன்ன யார் கேட்க போறாங்க...?? உடனே இங்க கிளம்பி வா அவ்வளோ தான்." என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாள்.
விஷ்ணு: “ஓகே வரேன்...!!!" என்றவன், அந்த கால் ஐ கட் செய்யப் போனான்.
வைஷாலி: அவன் எங்கே காலை கட் செய்து விடுவானா என்று நினைத்து பதறியவள், “ஒய்...!! ஒரு நிமிஷம் இரு." என்று அவசரமான குரலில் சொன்னாவள், “எதுல வர..???" என்று அர்த்தமாக கேட்டாள்.
விஷ்ணு: என்னோட கார்ல தான். ஏன்..??
வைஷாலி: “இப்ப எல்லாம் நீ பைக்கில தானே வெளியில சுத்திட்டு இருக்க..!! அப்புறம் என்ன..?? உன் பைக்கை எடுத்துட்டு வா. எனக்கு உன் கூட பைக்ல போனும்ன்னு ஆசையா இருக்கு மாம்ஸ்." என்று ஏக்கம் நிறைந்த குரலில் சொன்னாள். 😍
விஷ்ணு: “ஏன் திடீர்னு பைக்ல போனுங்கற..?? என்று கேட்டவன், ஒரு நொடி இடைநிறுத்தி, “ஆமா...!!! முதல்ல நான் பைக் வச்சிருக்கறது உனக்கு எப்படி தெரியும்..???" என்று குழப்பமாக கேட்டான். 🙄
வைஷாலி: “அத்தை தான் சொன்னாங்க. நான் தான் இது வரைக்கும் டூவீலர்லல போனதே இல்லையே...!!! அதான் அவங்க சொன்னத கேட்டவுடனே.. எனக்கு உன் கூட பைக்ல போனும்னு ரொம்ப ஆசையாா இருந்துச்சு. என்ன குட்டி மாமா..!! பைக்ல போறது கூட ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கும் இல்ல..???" என்று சிறு வெட்கம் கலந்த புன்னகையோடு கேட்டாள். 😍 🥰
அவள் பைக்கில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதை அவளால் உடனே செய்து விட முடியும். அவளுக்கு பைக்கில் செல்ல வேண்டும் என்பதை விட விஷ்ணுவோடு செல்ல வேண்டும் என்று நான் மிகவும் ஆசையாக இருந்தது. 😍 இத்தனை நாளாக அவள் அந்த ஒரு நொடிக்காக தான் காத்திருந்தாள். எத்தனையோ நாட்கள் அவனோடு செலவிடப் போக்கும் இந்த நிமிடங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறாள். இன்று அவளுடைய கனவு நிறைவேற போகும் சந்தோஷம் அவளுடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 😍
பைக் ரைட் நல்லா இருக்கும்ல என்று அவள் கேட்டவுடன், விஷ்ணுவிற்கு ஷாலினியுடன் முதன்முதலில் அந்த பைக்கில் சென்றது தான் ஞாபகமம் வந்தது. ஷாலினியோடு அவன் சென்ற பைக்கில் இப்போது வேறொரு பெண்ணை ஏற்றிக் கொண்டு செல்வதற்கு அவனுக்கு மனம் இல்லை தான். இருந்தாலும், கேட்பது வைஷாலி என்பதால் அவனால் மறுத்து பேச முடியவில்லை. அதனால் அவளிடம், “ஓகே..!! நீ வெயிட் பண்ணு. நான் அங்க வரேன்." என்று சொன்னவன் காலை கட் செய்து விட்டு கிளம்பி தன்னுடைய பைக்கை எடுத்து பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்தான்.
விஷ்ணுவின் வருகைக்காக பஸ் ஸ்டாண்டிற்கு அருகே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, அந்த காரின் அருகே நின்று கொண்டு ரோட்டையை பார்த்துக் கொண்டு இருந்தாள் வைஷாலி. விஷ்ணு எப்போது வருவான் என்று நினைத்து, அவளுடைய கண்கள் இரண்டும் ஏங்கி தவித்து கொண்டு இருந்தன. 😍
அப்போது பைக்கில் ஹெல்மெட் கூட அணியாமல், அவனுடைய, முடி காற்றில் பறக்க, கூலிங் கிளாஸ் உடன், ஸ்டைலாக அந்த பைக்கை ஹீரோ போல் ஓட்டி கொண்டு தூரத்தில் அவன் வந்து கொண்டு இருந்ததை கவனித்தாள், வைஷாலி. 🤩 😍 🤩
விஷ்ணுவை கண்டவுடன், அவளுடைய கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது. 😍 அவன் அவளுடைய அருகில் வர வர முதல் முறை அவனைப் பார்ப்பது போல் அவளுடைய இதயம் வேகமாக துடித்தது. ❤️ விஷ்ணு அவளை் பார்த்தவுடன், அவள் அருகே வந்து தன்னுடைய பைக்கை நிறுத்தினான். விஷ்ணுவோடு படப்பட வேண்டும் ஃபோனில் பேசியவள் இப்போது அவனை நேரில் கண்டவுடன், அவனிடம் பேச வார்த்தை இன்றி தவித்தாள். 🤩
விஷ்ணு அவளைப் பார்த்தவுடன் கேஷுவலாக புன்னகைத்தவன், “என்ன டி வாலு... சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாயிட்ட போல..!!!" என்று சொல்லி வழக்கம்போல் அவளைை கிண்டல் அடித்தான். 😂 😂 😂 ஆனால் உண்மையில் அவள் மிகவும் ஒல்லியாக தான் இருந்தாள். சிறு வயதில் அவள் குண்டாக, க்யூட்டாக, பப்ளிமாஸ் போல் க்யூட்டாக இருப்பாள். அதனால், அப்போதில் இருந்து இப்போது வரை அதைச் சொல்லியே இவன் அவளை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறான்.
அவன் தன்னை குண்டாக இருப்பதாக சொன்ன உடனே அதைக் கேட்டு கருப்பான வைஷாலி, தன்னுடைய நார்மல் மோடிக்கு உடனே வந்து விட்டாள். அவனை முறைத்துப் பார்த்தவள், “டேய் எருமை...!! நீ தான் டா சோத்து சட்டி. வீட்டிலயே ஜிம்ம வச்சுக்கிட்டு நீ தான் எக்சர்சைஸ் கூட பண்ண மாட்ட. நீ என்ன சொல்றியா..???" என்று நக்கலாக கேட்டவள் அவனுடைய மண்டையில் நங்கு என்று கொட்டி விட்டாள். 😂 😂 😂
அந்த அடியை ஆனந்தமாக பெற்றுக்கொண்ட விஷ்ணு, “யம்மா தாயே..!!! எனக்கு லேட் ஆகுது. உன்ன கொண்டு போய் வீட்ல விட்டுட்டு நான் ஸ்கூலுக்கு போனும். சீக்கிரம் வா கிளம்பலாம்." என்று அவன் ஷாலினியை பார்க்கப் போகும் ஆர்வத்தில், எப்படியாவது இவளை சீக்கிரமாக வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவளிடம் சொன்னான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
மேலும் எங்களுடைய ஆடியோ நாவல்களை தேனருவி தமிழ் நாவல் youtube சேனலில் கேட்டு மகிழுங்கள்.

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 87
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.