தாபம் 86

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 86: வருண் வெசஸ் பிரவீன் (பார்ட் 2)

வருண்: சிவாவை தீர்க்கமாக பார்த்தவன், “பிரவீனோட பார்மா சிடிக்கல் அண்ட் காஸ்மெட்டிக்ஸ் கம்பெனியில அவன் பண்ண க்ரைம் எல்லாத்துக்குமே நம்ம கிட்ட ப்ரூப் இருந்துச்சு இல்ல... அத நம்ம தான் ரிலீஸ் பண்ணுனோம்ன்னு தெரியாம பிரெஸ்ல ரிலீஸ் பண்ணிடு." என்றான் உறுதியாக.

சிவா: “எல்லாத்தையுமே ரிலீஸ் பண்ணிடறதா சார்...???" என்று தயக்கத்துடன் கேட்டான்.

வருண்: “ஆமா எல்லாத்தையும் தான். முக்கியமா, அவனுடைய காஸ்மெட்டிக்ஸ் யூஸ் பண்ணி நிறைய பொண்ணுங்களுக்கு ஸ்கின் அலர்ஜி வந்து அவங்க ஸ்கின்னே ஸ்பாயில் ஆகி இருக்குன்னு அந்த பொண்ணுங்களே சொன்ன வீடியோவும், அவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்டையும் ஃபர்ஸ்ட் ரிலீஸ் பண்ணு.

அதுக்கப்புறம் அவனுடைய பார்மா சிட்டிக்கல் கம்பெனிஸ்ல இருந்து ரெடி ஆகி வர மெடிசின்ஸ்ல இருக்கிற, கன்டென்ஸ் எல்லாமே கேன்சர மக்களுக்கு வரவைக்கிற வாய்ப்பு இருக்குன்னு நம்ப ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்ச அந்த ரிப்போர்ட்டையும், அடுத்தடுத்து ரிலீஸ் பண்ணிடு. என் நிம்மதிய கெடுக்கணும்னு நினைச்சு தானே இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்...!! இன்னைக்கு நைட் அவன் அவனோட வீட்ல நிம்மதியா தூங்க கூடாது." என்றவன் தன்னுடைய உதட்டை கோணலாக வளைத்து புன்னகைத்தான். 😁

வருனிடம் விடை பெற்றுக்கொண்டு சென்ற சிவா, அவன் சொன்ன அனைத்து வேலைகளையும் நாசுக்காக செய்து முடித்தான். சில நிமிடங்களில் விஷ்வாவால் பரப்பப்பட்ட செய்தி, நாடு முழுவதிலும் காட்டு தீயாக பற்றி எரிந்தது. அந்த ஒரு செய்தி இதற்கு முன் வந்த அனைத்து பரபரப்பான செய்திகளையும் பின்னே தள்ளி விட்டது.

சிவா அந்த தகவல்களை பரிமாறாத சில நியூஸ் சேனல்கள் கூட, மற்ற சேனல்களை பார்த்து அவர்கள் சொல்லும் அதே செய்திகளை தன்னுடைய சேனல்களிலும் சொல்லி அதை சென்சேஷனல் நியூஸ் ஆக கிரியேட் செய்து கொண்டு இருந்தனர். அதைக் கண்டு மகிழ்ந்த விஷ்வா, அடுத்து அவன் என்ன செய்து இதில் இருந்து தப்பிக்க போகிறான் என்று பார்ப்பதற்காக ஆர்வமாக இருந்தான்.

அந்த செய்தி வந்து சில நிமிடங்களிலேயே மக்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் முதலாளியை அரெஸ்ட் செய்யுமாறு கோஷமிட தொடங்கி விட்டனர். அந்த பிரஷரினால் வேறு வழி இன்றி, கமிஷனர், பிரவினை அரெஸ்ட் செய்வதற்காக அரெஸ்ட் வாரண்ட் இஸ்யூ செய்ய; அதைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர், பிரவீனின் அலுவலகத்திற்கு வந்து, தன்னுடைய அறையில் வெற்றி கழிப்பில் குடித்து கொண்டாடிக் கொண்டு இருந்த பிரவீனை, அரெஸ்ட் செய்து கூட்டி சென்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பிரவீனின் ஆட்களின் மூலம் பிரவீன் உடைய மேனேஜருக்கு பிரவீனின் அரெஸ்ட் பற்றிய தகவல் இப்போது தான் வந்து சேர்ந்தது. அவனுடைய மேனேஜர் அதை பற்றி நல்ல போதையில் இருந்த பிரவீனிடம் பேசி புரிய வைத்து அவனை அங்கு இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள், அங்கு போலீசார் வந்து அவனை அரெஸ்ட் செய்து சென்று விட்டனர். பிரவீன் குடிபோதையில் கையில் விலங்குகளுடன் போலீசாருடன் சென்று கொண்டு இருப்பது பத்திரிகையாளர்களால் கவர் செய்யப்பட்டு லைவாக அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் டெலிகாஸ்ட் ஆகி கொண்டு இருந்தது.

அதை பார்த்த பிரவீனின் அம்மா தேவியின் மனம் சுக்குநூறாக உடைந்து விட்டது. 💔 இப்போது தான் அவள் தன்னுடைய மகனுக்கு திருமணம் நல்லபடியாக ஆக நடக்க வேண்டும் என்று நினைத்து கோயிலில் சென்று கடவுளை வேண்டி விட்டு வந்தாள். ஆனால், இப்போது தன்னுடைய மகன் அரெஸ்ட் செய்ய பட்ட செய்தி அவளுடைய தலையில் வந்து இடியாக இறங்கியது. தொடர்ந்து மீடியாவில் வரும் பரபரப்பான செய்திகளை பார்த்துக் கொண்டு இருந்த மக்களின் மன நிலையும் கூட அதுவாக தான் இருந்தது.

ஒரு தரப்பினர், “இந்த பணக்காரங்க எல்லாம் காசு சம்பாதிக்கனும்னு செய்ற தப்பை எல்லாம் செஞ்சுட்டு கடைசியில சாமி கால்லா வந்து விழுந்து மன்னிப்பு கேட்டு பரிகாரம் பண்றேன், நன்கொடை குடுக்கிறேன்னு, எதை எதையோ செஞ்சு சாமியவே ஏமாத்தி தன்னோட பாவத்தை எல்லாம் குறைச்சிடலாம்னு நினைக்கிறாங்க. ஆனா என்னைக்கா இருந்தாலும் அவங்க அவங்க செஞ்ச தப்புக்கு எல்லாரும் தண்டனை அனுபவிச்சு தானே ஆகணும், அதான் இவன் இப்ப மாட்டிக்கிட்டான்." என்று வெளிப்படையாகவே பேசிக் கொண்டு இருந்தனர்.

சிலர், பிரவீனின் வளர்ச்சியை பொறுக்காமல் யாரோ தேவையில்லாமல் இது மாதிரியான பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அவனுக்கு சாதகமாகவும் பேசிக் கொண்டு இருந்தனர். இது மாதிரியான பலவித கருத்துக்கள் இணைய தளங்களில் வளம் வந்த வண்ணம் இருந்தது.

இறுதியில் இன்றைய ஹாட் டாபிக்காக பிரவீனின் அரெஸ்ட் செய்தி தான் இருந்தது. பிரவீன் அரஸ்டாகும் காட்சிகளை செய்திகளில் பார்த்த விஷ்வாவின் மனம் நிம்மதி அடைந்தது. அதனால் இன்று சீக்கிரமாகவே தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்ற விஷ்வா, சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் தூக்க மாத்திரையை போட்டுக்கொண்டு படுத்து நிம்மதியாக உறங்கினான்.

அடுத்த நாள் காலை.....

செண்பகமும், சுகந்தியும், சமையல் அறையில் சமைத்துக் கொண்டு இருந்தனர். அந்த மாளிகை போன்ற பெரிய வீட்டை தங்களால் தனியாக சுத்தம் செய்து கொண்டு இருக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த வீட்டை பராமரிப்பதற்காக மட்டுமே அங்கு ஏராளமான வேலையாட்கள் வேலை செய்கின்றனர். ஆனால் சமையல் அறைக்குள்ளும், பூஜை அறைக்குள்ளும், மட்டும் செண்பகம் சுகந்தியைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டாள்.

தன்னுடைய அறையில் இருந்த ஆராதனா, மிகவும் சலிப்பாக உணர்ந்தாள். 😞 அவள் நாராயணன் பேலஸிற்கு வந்ததில் இருந்து, அங்கு வரும் வரை அவள் பார்த்துக் கொண்டு இருந்த வேலைக்கும் அவள் செல்லாததால், இங்கேயே ஒரே அறைக்குள், ஹரி ஆபீசுக்கு சென்ற பின், தனியாக இருப்பது அவளுக்கு மிகவும் போரிங் ஆக இருந்தது. 😣 தன்னுடைய மனைவியாக போகும் ஆராதனாவை யாரோ ஒருவரின் கம்பெனியில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புவதற்கு ஹரி விரும்பாததால், அவளை இனி மேல் எங்கேயும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

சிறிது நேரம் தன்னுடைய மொபைல் போனை நோண்டி கொண்டு இருந்த ஆராதனாவிற்கு தான் ஏன் சமையல் அறையில் சென்று செண்பகத்துடன் இணைந்து சமைக்க கூடாது என்று தோன்றியது. இவள் இப்படியே செண்பகத்திற்கு பயந்து கொண்டு அவளுடன் பேசாமலேயே இருந்து விட்டால், எப்படி அவளுடன் மீண்டும் சகஜமாக பழகுவதுஎன்று அவளுக்கு தோன்றியது. அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று செண்பகத்துடன் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்த ஆராதனா, தைரியத்தை வர வழைத்துக் கொண்டு தரை தளத்தில் இருக்கும் சமையலறைக்கு கிப்ட் இன் வழியாக கீழே சென்றாள்.

செண்பகமும், சுகந்தியும் மும்மரமாக அங்கே சமைத்துக் கொண்டு இருந்தனர். ஏதோ தைரியத்தில் சமையல் அறைக்குள் வந்த ஆராதனா, செண்பகத்தை பார்த்து தயக்கத்துடன் “ஆன்ட்டி" என்று அழைத்தாள். அது வரை சாந்த சொரூபிணியாக இருந்த செண்பகம் ஆராதனாவின் குரலை கேட்டவுடன், பத்ரகாளி ஆகிவிட்டாள்.

செண்பகம்: “யார கேட்டு இங்க வந்த..?? முதல்ல என் கிச்சன விட்டு வெளியில போ." என்று உச்சகதியில் கத்தினாள். 😒

ஏற்கனவே பதட்டத்தில் இருந்த ஆராதனா, செண்பகத்தின் குரலில் இருந்த கடுமையை உணர்ந்து பயந்துவிட்டாள். அதனால் அவளுடைய வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வர மறுத்து விட்டன. கண்கள் கலங்க அமைதியாக நின்று செண்பகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள், ஆராதனா. 🥺

தான் அவளை இங்கே இருந்து வெளியே போக சொல்லியும் அவள் போகாமல் இருந்ததால், செண்பகத்திற்கு ஆராதனாவின் மீது இன்னும் அதிகமாக கோபம் வந்தது. 😡 அதனால், ஆத்திரத்தில் தன் கையில் ஒரு இருந்த கரண்டியை தூக்கி வேகமாக ஆராதனா நின்று கொண்டு இருந்த பக்கம் விட்டு எறிந்தாள், செண்பகம். அந்த கரண்டி ஆராதனாவின் மேல் விழாமல், அவளுக்கு அருகே கீழே, பலத்த சத்தத்துடன் வேகமாக விழுந்தது.

அந்த கரண்டி தன்னை தான் தாக்கப் போகிறது என்று நினைத்து பயந்த ஆராதனா, தன்னுடைய முகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டு அம்மா என்று பயத்தில் அலறி விட்டாள். அதை பார்த்த செண்பகத்திற்கு இன்னும் ஆராதனாவின் மீது இருந்த கோபம் அவளின் தலைக்குகு ஏறியது. 😒 🔥 இப்போது செண்பகத்தின் பார்வைக்கு ஆராதனா; ஏமாற்றுக்காரியாகவும், நடிப்புக்காரி ஆகுவும், தான் தெரிந்தாள்.

தான் அவளை எதுவும் செய்திராத போதும்,, அவள் இப்படி சத்தமிட்டு அனைவருடைய கவனத்தையும் அவள் பக்கம் ஈர்த்து, தன்னை மற்றவர்களின் பார்வையில் மோசமான ஆளாக காட்சி படுத்துகிறாளோ..?? என்று நினைத்தாள் செண்பகம். தன்னுடைய இரு மகன்களும் தான் சொல்வதை கூட கேட்காமல் இந்த ஆராதனாவின் பக்கம் நின்று கொண்டு தன்னையே எதிர்த்துப் பேசுவதால், அவளுக்கு தன்னுடைய மகன்களின் மேல் இருந்த விரக்தி, ஆராதனாவின் மீது கோபமாக பாய்ந்தது.

செண்பகம்: “இன்னும் எதுக்கு டி இங்கயே நிக்கிற..??? அதான் உன்ன போக சொன்னேன்ல்ல... போய் தொலையேன்...!!! எதுக்கு என் கண்ணு முன்னாடி வந்து என் உயிர வாங்குற...???? உன் பிளான் எனக்கு புரிஞ்சுருச்சு டி.... நல்லா புரிஞ்சிருச்சு...!! இப்படியே உன் மூஞ்சிய காட்டி... காட்டி.... என்னை டென்ஷன் பண்ணி பண்ணியே அப்படியே எனக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சி என்ன போட்டு தள்ளிரலாம்ன்னு நினைக்கிற...!! அதுதானே..??? நான் ஒருத்தி இங்க இல்லைனா உனக்கு ஈஸியா ரூட்டு கிளியர் ஆயிடும்.

என் ரெண்டு பசங்களையும் உன் இஷ்டத்துக்கு நீ ஆட வைப்ப. ஒருத்தனுக்கு உன் மேல தங்கச்சி பாசம், இன்னொருத்தனுக்கு உன் மேல காதல் மோகம். நல்லா இருக்கு டி.... உன் பிளான். சபாஷ்...!!!! உன் குடும்பத்துல மட்டும் தான் அடுத்தவங்க குடும்பத்த எப்படி எல்லாம் கெடுக்கிறதுன்னு சின்ன வயசுல இருந்து ட்ரைனிங் குடுத்து வளப்பாங்க்க போல. உன் அண்ணன்கரன் பிசினஸ் பண்றேன்ற பேர்ல குவாலிட்டி இல்லாத ப்ராடக்ட்ஸ் ஐ எல்லாம் மேனுஃபேக்சர் பண்ணி ஊர அடிச்சு ஓலையில் போட்டு பாவத்தை சேர்த்துட்டு இருக்கான்.

நீ உங்களுக்கு போட்டியா இருக்கிற எங்க கம்பெனிய ஒன்னும் இல்லாம பண்ணனுமன்னு, இங்க என் வீட்டுக்குள்ளேயே வந்து உக்காந்துகிட்டு குடும்பத்தில இருக்கிற எல்லாருக்கும் நடுவுலயும் பிரச்சினையை உருவாக்கி தனித்தனியா பிரிக்க பாக்குற...!!! சத்தியமா... என் வயிறு எரிஞ்சு சொல்றேன் டி, நீயும் உன் குடும்பமும் நல்லாவே இருக்க மாட்டீங்க. இத்தன பேர் பாவத்தை கொட்டிக்கிட்டு நீங்க மட்டும் நல்லா இருந்தர்லாம்ன்னு கனவுல கூட நினைச்சுறாதநீங்க. அழிஞ்சு போயிடுவீங்க." என்று அதீத கோபத்தில் கண்கள் சிவக்க மூச்சு வாங்க ஆராதனாவை பார்த்து கோபமாக பேசினாள். 😡 😡 🔥

செண்பகத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆராதனாவின் மனதை நெருஞ்சி முள்ளாய் தைய்த்தது. 💔 அதனால் அவளுடைய உள்ளம் சுக்கு நூறாய் உடைய, அதற்கு மேலும் அங்கு இருந்து செண்பகத்தின் வாயில் இருந்து வரும் இன்னொரு வார்த்தையை கேட்பதற்கு துளியும் சக்தியற்றவளாய், அங்கு இருந்து வெளியே ஓடிவந்த ஆராதனா, லிஃப்டிற்கு கூட காத்திருக்காமல் படிகளில் ஏறி தன்னுடைய அறைக்கு அழுது கொண்டே ஓடிச் சென்றாள். 😭 😭 😭

சுகந்திக்கு கூட ஆராதனாவின் நிலையை பார்ப்பதற்கு சற்று பரிதாபமாக தான் இருந்தது. ஆனாலும் ஏற்கனவே டென்ஷனில் இருக்கும் செண்பகத்தைச் ஆராதனாவை பற்றி பேசி இன்னும் டென்ஷன் ஆக்க வேண்டாம் என்று நினைத்த சுகந்தி, அது பற்றி அவளிடம் எதுவும் பேசாமல், அவளை சமாதானப்படுத்தி மீண்டும் சமைக்க தொடங்கினாள்.

விஷ்ணுவின் அறையில்....

பள்ளிக்கு செல்வதற்காக விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தன்னுடைய பிரமாண்டமான உயர்தர ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னுடைய க்யூட்டான முகத்தை பார்த்து தன் தலையை வாரி கொண்டு இருந்த விஷ்ணு, அந்த காலால் டிஸ்டர்ப் ஆனவன். தனக்கு இந்த நேரத்தில் யார் கால் செய்கிறார்கள் என்று யோசித்த படியே... தன்னுடைய பெட்டில் கடந்த மொபைல் போனை தேடி கண்டுபிடித்து எடுத்துப் பார்த்தான்.

அவனுடைய மனம் ஷாலினி தன்னை பள்ளியில் கொண்டு போய் டிராப் செய்யும் படி கால் செய்து கேட்டால் நன்றாக இருக்கும் என்று அவனிடம் சொல்லிக் கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம், இப்போது எல்லாம் ஷாலினி ராகவியோடு தானே பள்ளிக்கு வந்து கொண்டும், போய்க்கொண்டும், இருக்கிறாள்; அப்படி இருக்கையில்... தனக்கு ஏன் அவள் கால் செய்யப் போகிறாள்..?? என்று அவனே தனக்குள் கேள்வியும் கேட்டு, அவனே பதிலும், சொல்லிக் கொண்டவன், சலிப்பாக காலர் ஐடியை பார்த்தான். அதில் வைஷாலி என்று போட பட்டு இருந்தது.

வைஷாலியின் பெயரை தன்னுடைய மொபைலில் பார்த்த உடனே விஷ்ணுவின் கண்கள் பிரகாசமானது. 😍 விரிந்த புன்னகையுடன் அந்த காலை அட்டென்ட் செய்து பேச தொடங்கினான் விஷ்ணு. 😁 😁 😁

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 86
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.