தாபம் 78

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ரித்திகா: “தேங்க்ஸ், பட் நான் இத பண்றதுனால நீங்களும் இத பண்ணனும்னு அவசியம் இல்ல. இருந்தாலும் இத நீங்க பண்ணனும்னு நினைச்சதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்று சிரித்த முகத்துடன் சொன்னாள். 😁

கௌத்தம்: “இல்ல நான் சும்மா பேச்சுக்கு எல்லாம் சொல்லல. நெஜமாவே உன்ன பாத்த உடனே எனக்கும் இந்த மாதிரி பண்ணனும்னு ஆசை வந்துருச்சு. நிறைய விஷயத்தில உனக்கே தெரியாம நீ என்ன கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டே இருக்க ரித்திகா. என்னோட இந்த சேஞ்ச் எனக்கு பிடிச்சிருக்கு." என்று சிறு வெட்கத்துடன் அவளை பார்த்து சொன்னான். ☺️ 😁

ரித்திகா: ஓகே கௌத்தம் இந்த வீடியோவே நல்லா வந்திருக்குன்னா... நான் கிளம்புறேன். எனக்கு லேட் ஆகுது. அந்த ஆசிரமத்துக்கு போகணும். எனக்கு உடம்பு சரி இல்லாததுனால டூ விக்ஸ் ஆ அங்க போக முடியல. அங்க இருக்கிற பசங்க எல்லாம் நான் எப்ப வருவேன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்களாம். அந்த ஹோம் மேனேஜர் எனக்கு கால் பண்ணி சொன்னாரு. இந்த வீக்காவுது நாங்க கூட போய் டைம் ஸ்பென்ட் பண்ணனும்.

கௌத்தம்: நான் அந்த வீடியோவ ஃபுல்லா செக் பண்ணிட்டேன். பர்ஃபெக்டா வந்து இருக்கு. நீ கிளம்புறதுன்னா கிளம்பு. நோ ப்ராப்ளம்.

கௌத்தம் வீடியோ சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டதால்.. இதற்கு மேல் தான் அங்கே இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று நினைத்த ரித்திகா, ஷாலினியை கூட்டி கொண்டு தன்னுடைய ஸ்கூட்டியில் அங்கு இருந்து கிளம்பினாள். அவர்கள் இருவரும் ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

செல்லும் வழியில்....

ஷாலினி: “அக்கா...!!!" என்று இழுத்தாள்.

ரித்திகா: “சொல்லு டி..!!" என்று ஸ்கூட்டியை ஓட்டி கொண்டே கேட்டாள்.

ஷாலினி: அவருக்கு உங்க மேல ஒரு இது இருக்குன்னு நான் நினைக்கிறேன்.

ரித்திகா: “எவருக்கு என் மேல எது இருக்குன்னு நீ நினைக்கிற..??" என்று அவள் கேட்ட மாடுலேஷனிலேயே அவளிடமே திருப்பி கேள்வி கேட்டாள். 😂

ஷாலினி: கௌத்தம் அண்ணன பத்தி தான் அக்கா சொல்றேன்.

ரித்திகா: அவருக்கு என் மேல என்ன டி இருக்கு...??

ஷாலினி: “அதான் அக்கா.. அது..!!!" என்று மீண்டும் இழுத்தாள்...

ரித்திகா: எது டி? இப்படி இழுக்கமா டைரக்ட்டா சொல்லு. நீ டைரக்ட்டா சொன்னாலே எனக்கு ஒரு எழவும் புரியாது. இதுல நீ இப்டி சிம்பாலிக்கா சொல்றேன்னு இழுத்துகிட்டு இருந்தா எனக்கு ஒன்னுமே விளங்காது.

ஷாலினி: சொல்றேன், ஆனா...நீங்க அத கேட்டுட்டு என் கிட்ட கோச்சுக்க கூடாது.

ரித்திகா: உன் மேல எல்லாம் எனக்கு கோபமே வராது ஷாலு. என்னன்னு சொல்லு.

ஷாலினி: அந்த அண்ணா உங்கள லவ் பண்றாருன்னு நினைக்கிறேன்.

ரித்திகா: “யாரு... கௌத்தம் என்ன லவ் பண்றாருன்னு சொல்றியா? அப்டிலாம் இருக்காது டி." என்று கேஷுவலாக சொன்னாள்.

ஷாலினி: அப்படி தான். அவரே அத இன்டைரக்டா சொன்னாரு. நீங்க கவனிக்கலையா..???

ரித்திகா: அப்படி எனக்கு தெரியாம.. அவரு எப்ப என்ன சொன்னாரு...???

ஷாலினி: உங்க கிட்ட நானே அக்கா சொன்னாரு....!!!

ரித்திகா: அதான் என்ன சொன்னாருன்னு கேக்றேன்.

ஷாலினி: அட போங்க அக்கா. நீங்க சரியான ட்யூப் லைட்ட இருக்கீங்க. உங்க கிட்ட எல்லாம் பேசி என்னால புரிய வைக்க முடியாது. ஒரு நாள் அவரே டைரக்டா உங்க கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணுவாரு பாருங்க. அப்ப தான் உங்களுக்கு தெரியும். இதை அன்றே கணித்தாள் ஷாலினின்னு.

ரித்திகா: அவர் என்ன லவ் பண்றாருன்னு உனக்கு அவ்ளோ ஸ்ட்ராங்கா தோணுதா என்ன...??

ஷாலினி: ஆமா அக்கா. அண்ட் உண்மைய சொல்லுங்க உங்களுக்கும் அவர பிடிக்கும் தானே...???

ரித்திகா: இதுல உண்மைய சொல்றதுக்கு என்ன இருக்கு..?? நான் அவர எனக்கு பிடிக்காதுன்னு சொல்லவேலவே இல்லையே...!!!

ஷாலினி: சரியான கேடி அக்கா நீங்க. இப்படி எல்லாம் சொல்லி சமாளிக்காதீங்க. அவர புடிக்கும்னா டைரக்டா புடிக்கும்னு சொல்லுங்க.

ரித்திகா: “சரி சொல்றேன். எனக்கு அவர பிடிக்கும். போதுமா..???" என்று சிரித்து கொண்டே கேட்டாள். 😂

ஷாலினி: “அப்ப அவர் உங்க கிட்ட வந்து டைரெக்ட் ஆ ப்ரொபோஸ் பண்ணா நீங்க உடனே ஓகே சொல்லிடுவீங்களா..???" என்று ஆர்வமான குரலில் கேட்டாள். 😍

ரித்திகா: “சரி சொல்றேன். எனக்கு அவர பிடிக்கும். போதுமா..???" என்று சிரித்து கொண்டே கேட்டாள். 😂

ஷாலினி: “அப்ப அவர் உங்க கிட்ட வந்து டைரெக்ட் ஆ ப்ரொபோஸ் பண்ணா நீங்க உடனே ஓகே சொல்லிடுவீங்களா..???" என்று ஆர்வமான குரலில் கேட்டாள். 😍

ரித்திகா: எனக்கு லவ் பண்றதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல ஷாலு. அவரே வந்து என் கிட்ட டைரக்ட்டா ப்ரொபோஸ் பண்ணாலும் நான் அவர் கிட்டயும் இத தான் சொல்லுவேன்.

ஷாலினி: உங்களுக்கு இப்ப இன்ட்ரஸ்ட் இல்ல சரி. இன்னும் கொஞ்ச நாள் போனா நீங்களும் அவரும் கிளோஸ் ஆகி ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் அவர் உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணா... உங்களுக்கும் அவர புடிச்சிருந்தா.. நீங்க அப்ப கூட ஓகே சொல்ல மாட்டீங்களா...??

ரித்திகா: “அதான் நீயே கொஸ்டின் ஐயும் கேட்டு, நீயே ஆன்சரையும் சொல்லிட்டியே... எனக்கு இப்ப இருக்கிற மெயின்ட் செட்க்கு லவ் பண்ற ஐடியா இல்ல. ஒரு வேளை நீ சொல்ற மாதிரி பியூச்சர்ல அவர எனக்கு பிடிக்க கூட செய்யலாம். லைப் இஸ் அன்பிரிடிக்டபில் ஷாலு. இன்கேஸ் நீ சொல்ற மாதிரியே நடந்துச்சுன்னா அப்ப என் மனசுல அவருக்கு என்ன பதில் சொல்லணும்ன்னு தோணுதோ அத பிராங்க்கா அப்படியே அவர் கிட்டட சொல்லிடுவேன். சிம்பிள்..." என்று கேஷ்பலாக சொன்னாள். 😄

ஷாலினி: சூப்பர் அக்கா. எனக்கு என்னமோ நீங்களும் அவரும் தான் ஒன்னு சேருவீங்கன்னு தோணுது. யூ நோ வாட்..?? கேமரால உங்க ரெண்டு பேரையும் பேராா பாக்கும் போது.. மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருந்தீங்க. உங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. உங்களுக்கு செட் ஆகும். நீங்க வேணா பாருங்க.

ரித்திகா: “அது நடந்தா பாத்துக்கலாம்." என்று சொன்னவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாலையில் தன்னுடைய கவனத்தை வைத்து தன்னுடைய ஸ்கூட்டியை ஓட்டி கொண்டு இருந்தாள்.

சில நிமிட பயணத்திற்கு பின் ஷாலினியும், ராகவியும், ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்தை வந்தடைந்தனர். அந்த ஆசிரமத்திற்குள் வந்த ரித்திகா, மேனேஜரை பார்த்து விட்டு அங்கு இருக்கும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றாள். ராகவியை பார்த்த மகிழ்ச்சியில் சந்தோஷமாக துல்லி குதித்த அங்கு இருந்த குழந்தைகள், வேகமாக ஓடி வந்து அவளை சுற்றி நின்று கொண்டு அவளை கட்டி பிடித்து கொண்டனர். 🤗 🤩 அவர்கள் ராகவியை எதிர்பார்த்து தான் காத்திருந்தனர். இப்போது ரித்திகாவோடு ஷாலினியும் வந்திருப்பதால் அது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

ரித்திகா இனி தொடர்ந்து இங்கே வாரம் வாரம் வந்து குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தருவதாக சொல்லி இருந்ததால், அந்த இல்லத்தின் மேனேஜர் அவளுக்காக ஒரு மியூசிக் சிஸ்டமே ரெடி செய்து வைத்து இருந்தார். அதனால் சென்ற முறை போல பாடலை ப்ளே செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தாமல் டைரக்டாக தனக்கு பிடித்த அனைத்து பாடல்களையும் மியூசிக் சிஸ்டத்தில் ப்ளே செய்த ராகவி, அங்கு இருந்த குழந்தைகளோடு சேர்த்து ஷாலினிக்கும் நடனம் கற்பித்தாள். 💃

சில நிமிடங்களிலேயே அந்த குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றிப் போய்விட்ட ஷாலினி, ராகவி சொல்லிக் கொடுக்கும் முமண்டுகளை எல்லாம் அவர்களோடு சேர்ந்து ப்ராக்டிஸ் செய்து கொண்டு இருந்தாள். 💃 இப்போதெல்லாம் தன்னுடைய அதிகப்படியான நேரத்தை ஷாலினி, ராகவியோடு தான் செலவிட்டு கொண்டு இருக்கிறாள். அதனால் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்கு புரிந்து கொண்டு நட்பையும் தாண்டி, உண்மையான சகோதரிகளாகவே மாறிவிட்டனர்.

அதனால் தன்னுடைய கஷ்டங்கள், பிரச்சினைகள், அனைத்தையும் மறந்து விட்ட ஷாலினி ராகவியோடும், அவளுடைய குடும்பத்தினரோடும், இணைந்து தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் அனுபவித்துது வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். 😍 ஆனால் இன்னும் அவள் விஷ்ணுவுடன் தன்னுடைய உறவு எப்படி இருக்க வேண்டும் என்று தான் ஒரு முடிவு எடுத்த பாடில்லை.

அடுத்த நாள்: திங்கட்கிழமை.

சித்தார்த்தின் பள்ளியில்...

தான் செல்லவிருக்கும் ஆங்கில வகுப்பிற்காக தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் ராகவி. அப்போது அங்கே அவளை தேடி வந்த கீர்த்தனா அவளை அழைத்தாள்.

கீர்த்தனா: மேடம் நீங்க தானே ரித்திகா...??

ரித்திகா: எஸ். நீங்க..???

கீர்த்தனா: ஐ அம் கீர்த்தனா. இங்கிலீஷ் டீச்சர். நீங்க இங்க ஜாயின் பண்ணி கொஞ்ச நாள் கழிச்சு தான் நானும் ஜாயின் பண்ணேன். நீங்க மெடிக்கல் லீவ் னல போயிருந்தனால உங்களுக்கு அசைன் பண்ணி இருந்த எல்லா கிளாஸையும் இது வரைக்கும் நானும், இன்னொரு சாரும் தான் அட்டென்ட் பண்ணிட்டு இருந்தோம். இப்போ உங்களுக்கு 8 -த் பி தானே உங்களுக்கு போட்டு இருக்காங்க..???

ரித்திகா: எஸ் மேம். அங்க தான் இப்ப போலாம்ன்னு கிளம்புனேன்.

கீர்த்தனா: இன்னும் கொஞ்ச நாள்ல பைனல் எக்ஸாம் வரப்போகிறனால நான் அங்களுக்கு ஒரு டெஸ்ட் குடுத்து இருக்கேன். அண்ட் பெண்டிங் இருக்கிற லெசன்சும் நான் ஆல்ரெடி பிரிப்பர் பண்ணிட்டேன். சோ நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா...???

ரித்திகா: சொல்லுங்க மேம்.

கீர்த்தனா: “எனக்கு இப்ப ஃப்ரீ தான். சோ அந்த கிளாசுக்கு நானே போறேன். எனக்கு கொஞ்சம் டெஸ்ட் பேப்பர்ஸ் அண்ட் மாடல் எக்ஸாம் பேப்பர்ஸ் எல்லாம் கரெக்ஷன் பண்ண வேண்டியது இருக்கு. நீங்க அத எனக்கு கரெக்ஷன் பண்ணி குடுக்கிறீர்களா..???" என்றவள், தன் கையில் இருந்த பேப்பர் கட்டுகளை அவளிடம் நீட்டினாள்.

ரித்திகா: அதை பெற்று கொண்டவள், “ஓகே மேம். நோ ப்ராப்ளம். கரெக்ஷன் தானே.. நான் பண்ணிடறேன். கொஸ்டின் பேப்பர் மட்டும் இருந்தா குடுங்க." என்றாள்.

கீர்த்தனா: “கொஸ்டின் பேப்பர் அதுக்குள்ளேயே இருக்கு. ஆன்சர் -ம் அதுலயே மார்க் பண்ணி இருக்கேன். செக் பண்ணிக்கோங்க. கிளாஸ் -க்கு லேட் ஆகுது நான் கிளம்புறேன். பை..!!" என்று சொன்னவள், வேகவேகமாக அங்கு இருந்து கிளம்பி விட்டாள்.

கீர்த்தனா அங்கு இருந்து சென்றவுடன், அவள் தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற பேப்பர் கட்டுகளை பிரித்து பார்த்தாள் ராகவி. ராகவி எதிர்பார்த்ததை விட அதில் அதிகமான மாணவர்களின் டெஸ்ட் பேப்பர்களும், எக்ஸாம் பேப்பர்களும், இருந்தது. இந்த ஒரு பீரியட்க்குள் இத்தனை பேப்பர்களை எப்படி கரெக்ஷன் செய்வது என்று நினைத்த ரித்திகா, அதில் இருந்த கொஸ்டின் பேப்பரை எடுத்து அதை வைத்து ஆன்சர் சீட்களை சரி பார்த்து கரெக்ஷன் செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது ரவுண்ட்ஸ் சென்று கொண்டு இருந்த மானசா, ரித்திகா மட்டும் வகுப்பிற்கு செல்லாமல் தனியாக ஸ்டாப் ரூமில் அங்கே அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.

மானசா: “இப்ப உனக்கு கிளாஸ் இருக்குல்ல...!! கிளாஸ்க்கு போகாம நீ இங்க என்ன பண்ற..???" என்று கோபமாக கேட்டாள். 😡

ரித்திகா: கீர்த்தனா தன்னிடம் சொல்லிவிட்டு சென்றதை அவளிடம் சொன்னவள், “அதான் மேடம்..!! பேப்பர்ஸ் கரெக்ஷன் பண்ணிட்டு இருக்கேன்." என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

மானசா: ஓ...!! அப்டியே நீங்க உங்க இஷ்டத்துக்கு எல்லாமே டிசைட் பண்ணிக்கலாம்ன்னா.. நான் இங்க எதுக்கு..??? நீங்க இந்த மாதிரி ஆல்ட்ரேஷன் எல்லாம் பண்ணா என் கிட்ட இன்ஃபார்ம் பண்ணனும் இல்ல..??

ரித்திகா: சாரி மேம். இந்த மாதிரி சாதாரணமா நடக்கிற சின்ன விஷயத்தை எல்லாம் ஆபீஸ்ல இன்பார்ம் பண்ணனும்ன்னு எனக்கு தெரியாது. இனிமே எல்லாத்தையுமே இன்ஃபார்ம் பண்ணிறேன்.

மானசா: “என்ன இந்த மாதிரி விஷயத்த எல்லாம் இன்பார்ம் பண்ணியே ஆகணுமான்னு சர்காஸ்டிக்கா பேசுறியா...???" என்று காட்டமாக கேட்டாள். 😒

ரித்திகா: “நோ மேம். நீங்க கேட்டதுக்கு நான் ஜஸ்ட் ஆன்சர் பண்ணேன். உங்களுக்கு ஏன் இப்படி தோணுதுன்னு எனக்கு புரியல." என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொன்னாள். 😊

மானசா: “இனிமே என் கிட்ட பேசும் போது பாத்து பேசு." என்று தன்னுடைய ஆள் காட்டி விரலை ராகவியின் முன் நீட்டி கோபமாக சொன்னவள், 😡 அங்கு இருந்து சென்று விட்டாள்.

ரித்திகா: “இவங்களுக்கு அப்டி என் மேல என்ன கோபம்ன்னே தெரியல. எப்ப பாத்தாலும் எதையாச்சும் சொல்லி என்ன திட்றதுக்கு இவங்க ரீசன் கண்டு பிடிச்சுகிட்டே இருக்காங்க." என்று நினைத்தவள், மீண்டும் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கி விட்டாள்.

அந்த பீரியட் முடியும் வரை, கீர்த்தனா தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற பேப்பர்களை கரெக்ஷன் செய்து கொண்டு இருந்தாள் ரித்திகா. பின் அடுத்த பீரியட் அவளுக்கு டான்ஸ் கிளாஸ் இருந்ததால், டான்ஸ் பிராக்டீஸ் ஹாலுக்கு சென்று விட்டாள். அங்கே ஒன்றாம் வகுப்பை சேர்ந்த அனைத்து பிரிவின் மாணவர்களும் வந்து இருந்தனர். அதனால் சித்தார்த்தும், அவனுடன் பையிலும் மாணவர்களும் அங்கே இருந்தனர். சித்தார்த் ரித்திகாவை பார்த்தவுடன் குடு... குடுவென்று அவள் அருகே ஓடி சென்றவன் அவளுடைய புடவையை பிடித்துக் கொண்டு, “ராத்தி.... இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து டான்ஸ் ஆட போறோமா...???" என்
று ஆர்வம் மிகுந்த கண்களுடன் கேட்டான். 😍

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 78
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.