அத்தியாயம் 72: முதல் முத்தம்
ஷாலினி அவன் பேசியதை கேட்டு கடுப்பானவள், தன் பல்லை கடித்துக் கொண்டு.. “ஆமாம்மா..!! நீ இப்படியே சொல்லிட்டே இரு. உன்னால வர வர நான் ரொம்ப கோபக்காரியா மாறிகிட்டே இருக்கேன். எப்ப கொலைகாரியா நீ என்ன மாத்த போறேன்னு எனக்கு தெரியல." என்றாள் காட்டமாக. 😒 🤬
விஷ்ணு: அவளை சமாதானப்படுத்த நினைத்தவன், “சரி..!! சரி..!! கோச்சிக்காத ஷாலு மா. ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு. இதுக்கு மேல நீ வீட்டுக்கு போய் சமைச்சு சாப்பிட வேணாம். போற வழியில அப்படியே டின்னர்ர முடிச்சிட்டு போயிடலாம்." என்றான்.
ஷாலினி: அது எல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நான் வீட்டுக்கு போய் நூடுல்ஸ் வாங்கி கூட செஞ்சு சாப்பிட்டுக்குவேன். உனக்கு சாப்பாடு வேணும்னா நீ இப்படியே இறங்கி போ. போய் சாப்பிடு..!!
விஷ்ணு: “சரி போ. என்னமோ பண்ணு. எனக்கு என்ன..??" என்றவன், அதற்கு மேல் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
சில நிமிட பயணத்திற்கு பின் அந்த ஆட்டோ நாராயணன் பேலஸின் பெரிய கேட்டேன் முன்னே வந்து நின்றது. இப்போது மழை சற்று குறைந்து இருந்தது. இதனால் நிதானமாக ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து செக்யூரிட்டி ஆபீஸில் வைத்தவர்கள், பின் அவை அனைத்தையும் ஒவ்ஒன்றாக ஷாலினியின் வீட்டிற்கு லிப்டின் உதவியால் விரைவாக எடுத்து சென்று விட்டனர். அனைத்து வேலைகளையும் முடித்த பின் ஷாலினியிடம் விடை பெற்றுகொண்டு அவளுடைய வீட்டில் இருந்து கிளம்பினான் விஷ்ணு.
அவன் கிளம்பிய பின் ஷாலினி அனைத்து பொருட்களையும் அதற்கான இடத்தில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். ஷாலினி தான் வாங்கி வந்த அனைத்து பொருட்களையும் கிச்சனில் வைத்த பிறகும் அந்த கிச்சனில் ஏராளமான இடம் காலியாக இருந்தது. ஏனென்றால் அவள் ஒருத்திக்கு மட்டும் தான் அவள் அங்கே சமைக்க போவதால் மிக குறைவான பாத்திரங்களையே அவள் வாங்கி இருந்தாள். அந்த கிச்சனில் ஒரே ஒரு இண்டக்ஷன் ஸ்டவ்வும், இண்டக்ஷன் ஸ்டவ்வில் பயன்படுத்துவதற்கு ஏதுவான முக்கியமான ஒரு சில பாத்திரங்களும், ஒரே ஒரு தட்டும், இரண்டு கரண்டியும், மட்டும் தான் இருந்தது. பின் அங்கே ஓரமாக ஒரே ஒரு மிக்ஸியும், இரண்டு ஜாரும் இருந்தது.
அதைப் பார்த்தவளுக்கு அவள் விஷ்ணுவிடம் ஆட்டோவில் வரும் போது தானே நூடுல்ஸ் ஆவது சமைத்து சாப்பிட்டுக் கொள்வதாக சொன்னது ஞாபகம் வந்தது. அவள் வெறும் பாத்திரங்களை மட்டும் தான் வாங்கி வந்து இருந்தாலே தவிர சமைப்பதற்கு தேவையான மளிகை பொருட்களை அவள் வாங்கி வந்து இருக்கவில்லை. பின் அவள் எப்படி நூடுல்ஸ் சமைப்பாள்..?? என்று அதை எல்லாம் பற்றி யோசித்து பார்த்தவளுக்கு, “பேசாம அவன் கூப்பிட்டப்பயே வீம்பு பாக்காம வெளியில போய் சாப்பிட்டு வந்து இருக்கலாம். இப்ப திருப்பி இந்த மழையில போய் அதெல்லாம் எப்படி வாங்கிட்டு வர முடியும்..?? வயிறு வேற பசிக்குதே..!!" என்று யோசித்த படியே தன்னுடைய வயிற்றில் கையை வைத்து கொண்டு சாப்பாட்டை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவளுடைய வீட்டின் காலிங் பெல்லை யாரோ அடிக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. “இந்த நேரத்துல யாரு காலிங் பெல் அடிக்கிறது..??? ஒரு வேளை போன விஷ்ணு திரும்ப வந்துட்டானோ..??" என்று நினைத்தவள், கதவின் அருகே வந்த அதில் இருந்து லென்ஸின் வழியாக வெளியே யார் நிற்கிறார்கள் என்று பார்த்தாள். வெளியே ஒரு டெலிவரி பாய் தன்னுடைய கையில் இரண்டு, மூன்று, பெட்டிகளோடு நின்று கொண்டு இருந்தான்.
தான் நினைத்ததைப் போல் வந்து இருப்பது விஷ்ணு இல்லை என்று தெரிந்தவுடன், ஷாலினி, ஏமாற்றம் அடைந்தாள். இருந்தாலும், தான் எந்த பொருட்களையும் ஆர்டர் செய்து இருக்காத நிலையில் எதை டெலிவரி செய்வதற்காக இவன் வந்திருக்கிறான்..?? என்று நினைத்து குழம்பியவள், 🙄 அதே குழப்பத்துடன் கதவை திறந்தாள்.
டெலிவரி பாய்: மேடம் நீங்க ஷாலினி தானே..??
ஷாலினி: ஆமா ஆனா நான் எதுவும் ஆர்டர் பண்ணலையே..!!
டெலிவரி பாய்: எஸ் மேம் நீங்க எதுவும் ஆர்டர் பண்ணல. ஆனா உங்க பேர்ல வேற ஒருத்தர் ஆர்டர் பண்ணி இருக்காரு.
ஷாலினி: என் பேர்லையா யாரு..??
டெலிவரி பாய்: விஷ்ணுன்ற பேர்ல ஆர்டர் பிளேஸ் ஆகி இருக்கு மேம்.
ஷாலினி: ஓ ஓகே..!! இதுல என்ன இருக்கு..??
டெலிவரி பாய்: இது எல்லாமே கிராசாரி ஐட்டம்ஸ் தான் மேம்.
ஷாலினி: சரி. டோட்டல் அமௌன்ட் எவ்வளவுன்னு சொல்லுங்க நான் குடுத்துடறேன்.
டெலிவரி பாய்: “இது ப்ரீ பெய்ட் ஆர்டர் மேம். ஆல்ரெடி அவர் பே பண்ணிட்டாரு. திரும்பவும் மழை வர மாதிரி இருக்கு. நீங்க இத எல்லாம் உள்ள எடுத்து வச்சுக்கிட்டீங்கன்னா நான் கிளம்புவேன்." என்று இழுத்தான்.
ஷாலினி: சாரி...!! நீங்க போங்க. நான் எடுத்து வச்சுக்கிறேன்.
டெலிவரி பாய்: “தேங்க்ஸ் மேடம்." என்றவன் அங்கு இருந்து சென்று விட்டான்.
அந்த பெட்டிகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டு வந்து ஹாலில் வைத்த ஷாலினி, முதலில் அதை திறந்து அதில் இருந்த பில்லை தேடி கண்டு பிடித்து எடுத்து பார்த்தாள். அதில் அரை மீட்டருக்கு இரண்டு மூன்று பில் இருந்தது. அதில் இருந்த மொத்த அமௌண்ட்டையும் கூட்டி பார்த்தாள் ஷாலினி. அது 5000 ரூபாய்க்கு மேல் வந்தது. அதில் இருந்த பொருட்களை இரண்டு மாதத்திற்கு தாராளமாக பயன்படுத்தினாலும் தீர்ந்து போகாத அளவிற்கு அத்தனை பொருட்களையும் வாங்கி தந்து இருந்தான் விஷ்ணு. ஷாலினி சொன்ன நூடுல்ஸ் பாக்கெட்டதிலும், அதை சமைப்பதற்கு தேவையான முட்டை முதல் காய்கறிகள் வரை அனைத்தும் கூட அதில் இடம்பெற்று இருந்தது.
அதை அனைத்தையும் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட ஷாலினி, “கிறுக்கு பையன். இவன வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல. பையன் லூசா இருந்தாலும், கொஞ்சம் ஸ்வீட் தான். ம்ம்ம்...!!! கொஞ்சம் தானா இல்ல கொஞ்சம் அதிகம் தான்." என்று தனக்குள் அவனை நினைத்து பைத்தியக்காரியை போல் பேசிக் கொண்டு இருந்தவள், சிரித்து கொண்டே அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு அத நூடுல்ஸ் ஐ சமைக்க தொடங்கினாள். ☺️ ☺️
திவ்யாவை ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்த சிவா, மீண்டும் ஆதித்யா இருந்த இடத்திற்கு சென்று அவன் பாதியில் விட்டு விட்டு வந்த காரியத்தை தொடர்ந்தான். பின் சில மணி நேரத்திற்கு பின் ஆதித்யாவுடன் விஷ்வாவின் அலுவலகத்திற்கு வந்தான் சிவா.
விஷ்வா: “போன வேலை என்னாச்சு..??" என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டான்.
சிவா: அந்த குமார பிடிச்சிட்டோம் சார். பட் நோ யூஸ்.
விஷ்வா: ஏன் அவன் உண்மையை ஒத்துக்க மாட்டேங்கிறானா..??
ஆதித்யா: அப்படிலாம் இல்ல பாஸ். அந்த நாய் ரெண்டு தட்டு தட்டுனோனே எல்லா உண்மையும் கக்கிருச்சு. பட் நமக்கு யூஸ் ஆகுற மாதிரி எந்த இன்பர்மேஷனும் கிடைக்கல.
விஷ்வா: அவன் என்ன சொன்னான்னு கிளியரா சொல்லு.
ஆதித்யா: இந்த அசைன்மென்ட்டா அவனுக்கு யார் குடுத்தாங்கன்னு அவனுக்கே தெரியாது. அவனுக்கு ஏதோ ஒரு அனானிமிஸ் கால் வந்து இருக்கு. அவனுக்கு அவ்வளவு காசு தறேன் இவ்ளோ காசு தறேன்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணி இத செய்ய சொல்லி இருக்காங்க. அதே மாதிரி அவனோட அக்கவுண்ட்லயும் லட்ச லட்சமாக கிரெடிட் பண்ணி இருக்காங்க.
அந்த பேங்க் அக்கவுண்ட்ல இருந்து கால் வந்த நம்பர் வரைக்கும் எல்லாத்துக்கும் ட்ரேஸ் பண்ணியாச்சு. அது ஒரு ஃப்ஏக் அக்கவுண்ட். அண்ட் அவனக்கு வந்த கால்ஸ் எல்லாமே ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நம்பர்ல இருந்து வந்து இருக்கு. அதுல எந்த நம்பரையும் டிரேஸ் பண்ண முடியல. ஒவ்வொரு டைமும் ஒவ்வொரு லொகேஷன் காமிக்குது. சோ உருப்படியா ஒரு இன்ஃபர்மேஷனும் இல்லை. இத யார் பண்ணி இருந்தாலும் சரி அவன் கிட்ட ஒரு ஸ்ட்ராங்கான டெக் டீம் இருக்கு. அத மட்டும் என்னால கரெக்ட்டா சொல்ல முடியும். அவன் இந்த வேலைய செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா அவங்க இவனை திருப்பி காண்டாக்ட் பண்ணவே இல்லைன்னு சொல்றான்.
விஷ்வா: இதே தான் எப்பவும் நடக்குது. நமக்கு எப்ப பிரச்சனை வந்தாலும் அது யார் பண்ணாங்கன்னு கரெக்ட்டா கண்டு புடிச்சு ஒரு அளவுக்கு அவங்க பக்கத்துல வரைக்கும் போறோம்.. ஆனா கடைசில அவங்க யாருன்னு கண்டு பிடிக்க முடியல. கண்டிப்பா அவனுக்கே தெரியாம ஏதாச்சும் ஒரு தப்பு பண்ணி நமக்கு அவனே ஒரு குழுவ குடுப்பான். அந்த குழுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நம்ம டெக் டீம்ல ஏதாச்சு இம்ப்ரூவ்மெண்ட் பண்ண பாருங்க.
சிவா: நமக்கு வேணும்னா எவ்ளோ காசு குடுத்து வேணாலும் டெக் எக்ஸ்பர்ட்ச அப்பாயிண்ட் பண்ணலாம். அவங்க எபிசியன்ட்டா இருப்பாங்க. பட் ட்ரஸ்ட் வர்த்தியா இருப்பாங்களான்னு தெரியல. நம்ம திடீர்னு யாரோ ஒருத்தர கொண்டு வந்து உள்ள விட்டு அவங்க நமக்கு ஹெல்ப் பண்றதுக்கு பதிலா அவங்களே நமக்கு பெரிய பிராப்ளம் ஆயிட்டா என்ன பண்றது பாஸ்..?? அத நான் அந்த அப்பாயின்ட்மென்ட்ட கொஞ்சம் அப்படியே பாஸ் பண்ணி வச்சிருக்கேன்.
விஷ்வா: அதுக்குன்னு நம்ம யாரையும் அப்பாயிண்ட் பண்ணாம இருக்க முடியாது. இத பத்தி நீ ஹரி கூட டிஸ்கஸ் பண்ணு. அவன் உனக்கு யாரையாவது சஜஸ்ட் பண்ணுவான்.
சிவா: பாஸ் நீங்க ஹரி சார் பேர சொன்னவுடனே எனக்கு ஞாபகம் வருது.. அவரோட ஃப்ரெண்டு ஒரு பொண்ணு டெக் எக்ஸ்பெர்ட் ஆ இருக்காங்கல்ல..!! இப்ப அவங்க லண்டன்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஹரி சார கேட்ட தெரியும்.
விஷ்வா: யாரு கிருஷ்ணன் அங்கிளோட டாட்டர்ர சொல்றியா...??
சிவா: ஆமா சார். இந்த ஃப்பீல்ட்ல இருக்கிறவங்கல்லையே பேமஸா இருக்காங்க. அவங்க இப்ப கூகுள்ல டாப் போசிசன்ல வேலை பாக்குறாங்க. இப்ப எத்தன டிஜிட்ஸ்ல யூ. எஸ். டி. ல சேலரி வாங்கிட்டு இருக்காங்களோ தெரியல. அவங்கள திரும்பவும் இந்தியாவுக்கு வர சொன்னா வருவாங்களா..??
ஆதித்யா: நீ தானே அவங்க ஹரி சாரோட பிரிண்ட்ன்று சொன்ன.. அப்ப அவர் கூப்பிட்டா கூட மாட்டாங்களா..??
விஷ்வா: அவ இங்க இருக்க பிடிக்காம தான் இந்தியாவே வேணான்னு கிளம்பி அங்க போனா. சோ திரும்பி அவ இங்க வர்றது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் நான் ஹரிய அவ கிட்ட பேச சொல்றேன்.
சிவா: ஓகே சார். அவங்க மட்டும் இங்க வந்துட்டாங்கனா நமக்கு இருக்கிற பாதி பிரச்சனை சால்வ் ஆகிடும். நமக்கு பிரச்சனை பண்றதையே ஒரு வேலையா வச்சுட்டு இருக்கிறது யாருன்னு நம்ம சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 72
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.