தாபம் 71

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 71: இது காதல் மழை (பார்ட் 2)

ஷாலினிக்கு அவளுடைய அம்மா அப்பாவின் கல்யாண ஃபோட்டோ ஞாபகம் வந்தது. அந்த புகைப்படத்தில் அவளுடைய அம்மா தன்னுடைய திருமண நாளில் இதே போன்ற ஒரு புடவையை தான் கட்டி இருந்தாள்.

அதை நினைத்துப் பார்த்த ஷாலினி, தன்னுடைய அம்மாவின் ஞாபகமாக இந்த புடவையை வாங்கி தன்னுடனே இறுதி வரை பத்திரமாக வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து அந்த பொம்மையின் அருகே சென்று அதில் இருந்து ப்ரைஸ் டேகை செக் செய்தாள். அதில் அந்த புடவையின் விலை பத்தாயிரம் ரூபாய் என்று எழுதி இருந்தது. அதை பார்த்த ஷாலினி, அந்த புடவையை வாங்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டாள்.


பின் அங்கு அருகே இருந்த மற்ற புடவைகளை பார்த்த ஷாலினி, அதில் 600 ரூபாய்க்கு இருந்த ஒரு புடவையை தேர்வு செய்து அதை பில் செய்யப் போனவள், மீண்டும் அந்த பொம்மையில் கட்ட பட்டு இருந்த புடவையை ஏக்கமாக திரும்பி திரும்பி பார்த்த படியே நின்று கொண்டு இருந்தாள். அவளுடைய நடத்தை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த விஷ்ணு, அவள் அருகே சென்று “நான் வேணா அத வாங்கி தரட்டுமா..??" என்றான் பாசமாக.

ஷாலினி: இதோட 43 ஆயிருச்சு.

விஷ்ணு: அவள் சொன்னதை புரிந்து கொள்ள முடியாமல், “43 ஆ என்னது..??" என்றான் குழப்பமாக. 🙄

ஷாலினி: “நம்ப இங்க வந்ததுல இருந்து இதே கேள்விய இதோட நீ 43 தடவ கேட்டுட்ட. எத்தன தடவ நான் வேணான்னு சொன்னாலும் உனக்கு புரியாதா..??" என்றாள் கோபமாக.😒

விஷ்ணு: “அது சரி..!! இவ்ளோ டென்ஷன்லயும் நான் எத்தன தடவ கேட்டு இருக்கேன்னு வேற நீ எண்ணிட்டு இருந்துருக்கியா லூசு.. 😂 😂 😂 ஆனா நான் இத்தன தடவ கேட்டும் உனக்கு சரின்னு சொல்றதுக்கு மனசு வரல இல்ல...?? சரி மா நான் வேணா உனக்கு யாரோவாவே இருந்துட்டு போறேன். நான் குடுக்குற காச கடனா வாங்கிக்கோ. நீ அப்பறமா கொஞ்ச கொஞ்சமா திருப்பி குடு இப்ப என்ன..??" என்றான் வருத்தமாக. 😞

ஷாலினி: “கடன் அன்பை முறிக்கும் விஷ்ணு." என்றாள் உறுதியாக.

விஷ்ணு: “அட போ டி. முதல்ல உனக்கு என் மேல அன்பு இருக்கான்னே தெரியல. இதுல அது வேற முரிஞ்சு போயிடும்ன்னு நீ கவலைப்படுறியா..??" என்றான் சலிப்பாக.

ஷாலினி: ப்ளீஸ் விஷ்ணு டிரை டு அண்டர்ஸ்டாண்ட். ஆல்ரெடி நீ எனக்கு நிறைய பண்ணிட்ட. அதுக்கே நான் உனக்கு திருப்பி என்ன பண்ண போறேன்னு தெரியல. இதுக்கு மேல உன் கிட்ட இருந்து எனக்கு வேற எதுவும் வேண்டாம். தேங்க்ஸ் அண்ட் சாரி.

ஷாலினி இப்படி சொல்லிவிட்டதால் இதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என்று நினைத்த விஷ்ணு, “சரி நீ என்னமோ பண்ணு. நீ வாங்கிட்டு வெளிய வர்றதுக்குள்ள எனக்கும் கொஞ்சம் டிரஸ் வாங்க வேண்டி இருக்கு. நானும் வாங்கிட்டு வந்துருறேன்." என்று சொன்னவன், அவளிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான்.

பின் ஷாலினி தனக்கு தேவையான அனைத்தையும் பில் செய்து வாங்கிவிட்டு அந்த மால் ஐ விட்டு வெளியே வந்து விஷ்ணுவிற்கு கால் செய்ய, அவனை வெளியே வரச் சொன்னாள் ஷாலினி. கையில் நான்கு, ஐந்து, பைகளுடன் அங்கே வந்தான் விஷ்ணு. பின் இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்து அதில் அவர்கள் வாங்கி வந்த அனைத்து பொருட்களையும் வைத்துவிட்டு ஆட்டோவில் அமர்ந்தனர்.

அங்கு இருந்து அந்த ஆட்டோ கிளம்பியதும், அது வரை மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானத்தில் இருந்து மழை பொழிய தொடங்கியது. 🌧️ 🌧️ 🌧️ ⛈️ ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த விஷ்ணுவின் மீதும் ஷாலினியின் மீதும் குளிர்ந்த காற்று தழுவ, அந்த மழையில் அவர்கள் இருவரும் ரசித்து கொண்டு இருந்தனர்.🥰

குளுரில் நடுங்கி கொண்டு இருந்த ஷாலினி, தன்னுடைய இரு கைகளையும் உரசி அதில் இருந்து வரும் வெப்பத்தில் தன்னை சரி செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தாள். அப்போது அந்த ஆட்டோக்காரர் எப். எம். ரேடியோவை ஆன் செய்து விட,

அதில்...

“என்ன மக்களே இந்த அழகான ராத்திரி நேரத்துல சட்டுன்னு பெஞ்ச மழைல எல்லாம் நடுங்கிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்...!! இது கால மழை அல்ல காதல் மழை. நீங்கள் கேட்டுக் கொண்டு இருப்பது காதலே..!! காதலே..!! வித் மீ ஆர். ஜே விஜய். உங்க காதலனோடவோ, காதலியோடவோ, நம்ம ப்ரோக்ராம கேட்டு என்ஜாய் பண்ணிட்டு இருக்க எல்லாருக்காகவுமே இப்ப நான் ஒரு ஸ்பெஷலான பாட்ட ப்ளே பண்ண போறேன். அது என்ன பாட்டுன்னு யோசிக்குறீங்களா..?? நான் முன்னாடியே சொன்ன மாதிரி இந்த காதல் மழைய செலிபிரேட் பண்ற மாதிரியான ஒரு பாட்டு...!! இதோ அந்த பாட்டு உங்களுக்காக நீங்களும் அந்த பாட்டை கேட்டு உங்களோட காதல செலிப்ரேட் பண்ணுங்க. உங்க வாழ்க்கை 4, மூணு, 44 கலர்ல சூப்பர் ஆ மாறிடும்." என்று அந்த ஆர். ஜே. பேசி முடிக்க,

“வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை ❤️⛈️

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்...😍

யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்..

முதலில் என் கண்களை... கண்களை....

இரண்டாவது என் இதயத்தை... ❤️

இதயத்தை... ❤️❤️


மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே. 😘 😘 😘

முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை...

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

முதலில் என் பொய்களை...பொய்களை....

இரண்டாவது என் கைகளை... கைகளை...

மூன்றாவது ....வெட்கத்தை... ஹ ஹ ஹ ஹ.
வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ."

⛈️ ⛈️ 🌧️ 🌧️ 🌧️ 🌧️ ❤️ 💫 🌟✨

என்ற பாடல் ஓடிக் கொண்டு இருந்தது. அந்த பாடலை மெய் மறந்து கேட்டுக் கொண்டு இருந்த விஷ்ணு, ஷாலினியோடு தன் வாழ போகும் வாழ்க்கையை நின்னைத்து கற்பனை செய்து கொண்டு இருந்தவன், தன்னை அறியாமல் தன் அருகில் அமர்ந்து இருந்த ஷாலினியின் தோளில் சாய்ந்து கொண்டான். 😍 🥰 அந்த பாடல் தந்த பூரிப்பிலும், வெளியே பெய்து கொண்டு இருக்கும் மழை தந்த சிலிரிப்பிலும் தன்னை மறந்து இருந்த ஷாலினியும், விஷ்ணுவின் மீது சாய்ந்து கொண்டாள். ☺️

ஒரு ஐஸ்கிரீம் பர்லருக்கு வெளியே தன்னுடைய அண்ணனுடன் நின்று கொண்டு இருந்த லாவண்யா; விஷ்ணுவும், ஷாலினியும், இப்படி ஒருவர் தோலின் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு ஆட்டோவில் சென்று கொண்டு இருப்பதை பார்த்தாள். அதனால் அந்த மழை நேரத்திலும் அவளுடைய வயிறு பொறாமை தீயில் எரிந்து கொண்டு இருந்தது. 🔥“என்ன இவ சரியான வெட்கங்கெட்டவளா இருப்பா போல..!! அப்ப தான் அவன் எனக்கு வேணாம். இது எல்லாம் சரிப்பட்டு வராது, அப்படி இப்படின்னு ,பேசினா... இப்ப அதுக்குள்ள அவன் கூட ஒரசிக்கிட்டு இப்படி ஆட்டோல போறா...!! ச்சீ.. கருமம். இவ எல்லாம் என்ன ஜென்மமோ..!!" 😒😤 என்று தன் மனதிற்குள் நினைத்த லாவண்யா, ஷாலினியை தன் வாய்க்கு வந்த படி எல்லாம் அவளுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தாள்.

நாராயணன் பேலஸில் ஆராதனா விடையே பொருட்களை எல்லாம் திவ்யா உடன் கொண்டு போய் வைத்துவிட்டு மீண்டும் அவளோடு திரும்பி காரில் வந்து கொண்டு இருந்த சிவா, ரேடியாவில் ஓடி கொண்டு இருந்த அந்த பாடலை கேட்டு என்ஜாய் செய்தவன், தன் அருகில் அமர்ந்து இருந்த திவ்யாவை சைட் அடித்தபடியே காரை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

சிவா தன்னை தான் பார்த்துக் கொண்டு இருப்பதை திவ்யா கவனித்தாலும், தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் கேஷுவலாக அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பவளை போல் நடித்துவிட்டு ஓர கண்ணால் அவளும் அவனை பார்த்த படி இருந்தாள். 😍

விஷ்ணுவும், ஷாலினியும், ஒருவருடைய தோலில் இன்னொருவர் சாய்ந்த படி மழையையும், ரேடியோவில் ஓடி கொண்டு இருந்த பாடலையும் ரசித்த படி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். 😍 🥰 அப்போது அந்த ஆட்டோக்காரர் சடன் பிரேக் போட, அதன் தாக்கத்தால் இரண்டடி முன்னே சென்று விட்டு பின் தன்ன்னுடைய இடத்தில் வந்து மீண்டும் அமர்ந்த ஷாலினி, அப்போது தான் விஷ்ணு அது வரை தன் மீது சாய்ந்து கொண்டு இருந்ததை கவனித்தாள்.

அதனால் கோபப்பட்ட ஷாலினி; விஷ்ணுவிடம் அதை பற்றி கேட்பதற்காக அவன் பக்கம் திரும்ப, அது வரை ஏதோ ஒரு கிரகத்தில் இருந்த விஷ்ணு ஷாலினியை காதலோடு பார்க்க; அந்த ஆட்டோ மீண்டும் ஒரு பள்ளத்தின் மீது ஏறி இறங்கியதால் அது வேகமாக குலுங்க, விஷ்ணு, ஷாலினியின் உதட்டின் அருகே முத்தம் கொடுத்து விட்டான். 👩‍❤️‍👨 👩‍❤️‍💋‍👨 😘

அந்த எதிர்பாரா திடீர் முத்தம் அவர்கள் இருவருடைய உடலிலும் ஏகப்பட்ட ரசாயன மாற்றங்களை அவர்களுக்குள் உருவாக்கியது . 🥰 ரியர் வியூ மிரர் வழியாக அந்த காட்சியை கவனித்த வயதான ஆட்டோ காரர் அவர்களைப் பார்த்து சத்தமாக சிரித்தான். 😂 😂 😂 அந்த சிரிப்பு சத்தத்தால் தொந்தரவான அவர்கள் தங்களுடைய கனவு உலகத்தில் இருந்து வெளியே வந்து சட்டென்று ஒருவரை விட்டு ஒருவர் விலகி அமர்ந்தனர்.

ஷாலினியின் இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது. ❤️ தன்னுடைய பதட்டத்தை மறைத்துக் கொண்டு கோபமாக விஷ்ணுவை பார்த்தபதையே அந்த ஆட்டோக்காரரிடம், “அண்ணா ரோர்ட பாத்து மெதுவா போங்க. எங்களுக்கு ஒன்னும் அவசரம் இல்ல. எவ்ளோ நேரம் ஆனாலும் பரவால்ல." என்றாள் ஷாலினி. 😒

இப்போதும் அவளை கண்ணாடி வழியாக புன்னகை முகத்தோடு பார்த்த அந்த ஆட்டோக்காரர், “சரி மா..!! சரி மா..!! நான் ரேட்ட பாத்து போறேன். நீ பாத்து ஒழுங்கா உட்காரு. பக்கத்துல இருக்கிற கம்பிய நல்லா பிடிச்சுக்கோ. இது மழை காலம்ல... அதனால ரோடு இப்டி தான் குண்டும், குழியுமா தான் இருக்கும்." என்று நக்கலாக சொன்னான். 😂 😂

அந்த ஆட்டோகாரருக்கு பதில் சொல்லாத ஷாலினி, விஷ்ணுவை முறைத்து பார்த்தாள். 😒 🤨 ஷாலினியை பார்த்து அழகாக புன்னகைத்த விஷ்ணு, சிறு வெட்கத்துடன், “ச்சா... ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு இல்ல..!!" என்றவன், மீண்டும் மீண்டும் அந்த காட்சியை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான். ☺️ 😁 விஷ்ணு தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதை போல் மகிழ்ச்சியாக இருந்தான். ☺️

அதனால் கடுப்பான ஷாலினி தன் காலுக்கு அருகில் அவள் வைத்து இருந்த ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை எடுத்து விஷ்ணுவின் தலையில் அடித்தவள், “நீ வேணும்னு தானே இப்டி பண்ண எனக்கு தெரியும் டா." என்றாள். 😒 ஷாலினி மெதுவாக தான் அவனை அடித்தாள். அதனால் அவளுடைய அடிக்களை எல்லாம் சந்தோஷமாக பெற்றுக் கொண்ட விஷ்ணு, “இது ஆக்சிடென்ட்லி நடந்ததுன்னு உனக்கே நல்லா தெரியும். அப்புறம் எதுக்கு டி என் மேல கோபப்படுற..?? என்ன ஷாலினி என் கூட உன்னால சண்டை போடாம இருக்க முடியலையா..?? உண்மைய சொல்லு..!! உனக்கு என் கூட சண்டை போடுறது ஜாலியா இருக்குல்ல..?? வர வர நீ என்னோட வைஃபா மாறிக்கிட்டு வரில்ல...??" என்று ஆர்வமான குரலில் கேட்டான். ☺️🤩

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 71
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.