அத்தியாயம் 70: இது காதல் மழை (பார்ட் 2)
அவன் சட்டென்று இப்படி தன்னை கீழே விட்டு விடுவான் என்று எதிர்பார்த்து இருக்காத திவ்யா, எந்த பிடிமானமும் இன்றி தரையில் விழ, அவளுடைய முதுபகுதியில் ஏற்பட்ட கூர்மையான வலியின் காரணமாக தன் முதுகை பிடித்துக் கொண்டு “அம்மா" என்று அலறினாள். 😭 அவளுடைய கண்கள் கலங்கி இருந்தது. அவள் நேராக சேரில் இருந்து கீழே விழுந்து இருந்தால் கூட அவளுக்கு இவ்வளவு அடிப்பட்டு இருக்காது. சிவா அவளை தாங்கி பிடிக்கிறேன் என்று பிடித்து விட்டு இப்படி கீழே இருந்த அந்த சேர் இன் மீதே போட்டு விட்டதால்.. சேரில் விழுந்த திவ்யா; பின் கீழே விழ, அவள் மீது அந்த சேர் கிடந்தது.
திவ்யா “அம்மா..!!" என்று கத்திய பின் தான் அவன் என்ன செய்து இருக்கிறான் என்று புரிந்து கொண்ட சிவா, அவசரமாக அவள் அருகில் வந்தவன்; அவள் மீது கிடந்த சேர் ஐ எடுத்து தூக்கி போட்டு விட்டு அவளை தூக்கி அங்கு இருந்த கட்டிலில் அமர வைத்தான்.
திவ்யா கண்ணீர் நிறைந்த கண்களோடு கோபமாக தன் வலியை பொறுக்க முடியாமல் சிவாவை பார்த்தவள், “யோவ்...!!! நான் உன்ன என்ன வந்து தூக்க சொன்னன்னா..??? நானா கிழ விழுந்து இருந்த கூட எனக்கு இவ்ளோ எல்லாம் வலிச்சி இருக்காது. இப்ப எனக்கு எப்டி வலிக்குது தெரியமா..?? சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு இப்டி கதவ தொறந்து பேய் மாதிரி உள்ள வந்து பயமுறுத்துவியா..?? நீ ஒழுங்கா என் பேர்ர சொல்லி கூப்பிட்டு கதவ திறந்து வந்து இருந்தா நான் பயந்து இருக்க மாட்டேன்ல.." 😬 😒 🥺 😢 என்று குழந்தை போல் அவனை பார்த்து கேட்டாள். அவளுக்கு இருந்த வலியில் தன் முன்னே இருப்பது யார் என்று எல்லாம் கூட அவள் யோசிக்கவில்லை.
திவ்யா பேசியவற்றை கேட்டு வாய் அடைத்துப் போய் விட்டான் சிவா. “என்ன டா சிவா.. உன்ன பாத்தாலே பயந்து பம்பி பம்பி சார்.. சார்ன்னு. பேசுவா..!! இப்ப என்னான்னா இப்டி எகிர்றா.." என்று நினைத்தவன், “பாவம் பிள்ளைக்கு நெஜமாவே ரொம்ப வலிக்குது போல." என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளை பாவமாக பார்த்து, “என்ன ரொம்ப வலிக்குதா..??" என்றான் அக்கரையாக. 😊
திவ்யா: “ஆன்ன்ன்ன்...!!! ரொம்ப ஜாலியா இருக்கு போயா அங்குட்டு." என்று தன் கண்களில் இருந்து வழிந்த நீரை துடித்து கொண்டே கோபமாக சொன்னாள். 😡 😤
நியாயமாக அவள் தன்னை இப்டி மரியாதை இல்லாமல் பேசி கொண்டு இருப்பதற்கு சிவாவிற்கு அவள் மீது கோபம் தான் வந்து இருக்க வேண்டும். ஆனால் சிவாவோ அவளுடைய இந்த குழந்தைத்தனமான செய்கையை பார்த்து அவளை ரசித்து கொண்டு இருந்தான். திவ்யா வலியில் புலம்பி கொண்டு இருப்பது கூட சிவாவின் கண்களுக்கு க்யூட்டாக தெரிந்தது. அதனால் தன்னை அறியாமல் அவளை பார்த்து சிரித்தான். 🤭 😁
திவ்யா: அவன் தன்னை பார்த்து சிரிப்பதை கவனித்தவள், “என்ன அழ வச்சிட்டு உன்னால எப்டி இப்டி சிரிக்க முடியுது... மனுஷனா நீ..??" என்று கோபமாக கேட்டாள். 😡 🤬
சிவா: “ஒய்...!! சாரி.. சாரி... நான் அதுக்காக சிரிக்கல. நான் வேற ஒன்ன நினைச்சு சிரிச்சேன். வெயிட்.. என் கார்ல ஃபர்ஸ்ட் எயிட் கிட்டு இருக்கு. நான் போய் அத எடுத்துட்டு வரேன்." என்றவன், தன் காரில் இருந்த ஃபர்ஸ்ட் ஏய்ட் கிட்டை எடுத்து கொண்டு வந்து அவள் அருகே அமர்ந்தான். பின் அவன் அதில் இருந்த ஒரு பெயிண் ரிலீஃப் ஸ்பிரேவை எடுத்து அவளிடம் கொடுத்து, “இந்த ஹைட்ல இருந்து விழுந்ததுக்கு எல்லாம் பெருசா ஒன்னும் ஆகி இருக்காது. இது நல்லா பவர்ஃபுல்லா இருக்கும். இது போட்டு ஜென்டில் மசாஜ் பண்ண சரி ஆயிடும்." என்றான்.
அதை வாங்கிய திவ்யா, அதை தன்னுடைய முதுகில் தேய்க்க முயன்றாள். ஆனால் அதை அவளால் சரியாக செய்ய முடியவில்லை. அவள் சிரமப்படுவதை கவனித்த சிவா, “இங்க குடு அத நான் போட்டு விடுறேன்." என்றான்.
திவ்யா அவனை பார்த்து முறைத்தவள், “இல்ல வேண்டாம். நானே போட்டுக்கிறேன்." என்று வீம்பாக சொன்னவள், மீண்டும் அந்த ஸ்பிரேயை அடைக்க முயற்சித்தாள். அவள் கீழே விழும் போது அந்த வேகத்தில் அவளுடைய ஒரு கையை வைத்து தரையில் நன்றாக அழுத்தி அதன் மேல் தான் விழுந்து கிடந்தாள். அதனால் அவளுடைய கைகளிலும் சிறிதளவு வலி இருந்தது.
அவள் வீம்புக்காக தன்னிடம் அதை கொடுக்காமல் தானே செய்ய முயற்சிக்குத்துக் கொண்டு இருப்பதை பார்த்த சிவா, இதற்கு மேல் இவளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பது எல்லாம் வேலைக்கு ஆகாகாது. என்று நினைத்தவன், அந்த ஸ்பிரே பாட்டிலை அவளிடம் இருந்து பிடுங்கியவன்; அவள் பின்னே சென்று அமர்ந்தான். “வேணா நானே போட்டுக்கறேன் குடு." என்று சொன்ன திவ்யா, அவனிடம் இருந்த அந்த பாட்டிலை பிடுங்க முயற்சித்து கொண்டு இருந்தாள்.
திவ்யாவின் இரு கைகளையும் தன்னுடைய ஒரு கையால் பிடித்தவன், அவளுடைய கையை அவளுடைய தலைக்கு மேல் தூக்கி பிடித்து கொண்டான். “அதான் வேணான்னு சொல்றேன்ல.. என்ன விடு டா ப்ளீஸ்..!!" என்றவள், தன்னுடைய கைகளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள போராடி திமிறி கொண்டு இருந்தாள். அவள் பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளாத சிவா, அவளை கட்டிலில் கிடத்தியவன், அவளை குப்புற படுக்க வைத்து அவளுடைய ஆடையை விலக்கி; அவளுடைய இடுப்பில் அந்த ஸ்பிரேயை அடிக்க தொடங்கினான்.
திவ்யா ஒரு கிராப் ட்டாப்-ம், ஜீன்ஸ் பேண்ட்ம், தான் அனிந்து இருந்தாள். அவளுடைய வெள்ளை நிற சிற்றிடையில் அந்தச் சில்லென்ற ஸ்ப்ரே பட, அது திவ்யாவின் உடலை சிலிர்க்க வைத்தது. 🥰 திவ்யாவை பிடித்து இருந்த கைகளை சிவா இன்னும் விலகிக் கொள்ளவில்லை. சிவாவின் முரட்டு பிடியில் இருந்து தன்னுடைய கைகளை விடுவிக்க முடியாத திவ்யா, போராடி பார்த்துவிட்டு சோர்ந்து போய் அவன் என்னமோ செய்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டாள்.
தன்னுடைய சூடான கையை திவ்யாவின் இடுப்பில் வைத்த சிவா, ப்ரொபஷனலாக மசாஜ் செய்பவனை போல நேர்த்தியாக மசாஜ் செய்தான். அவனுடைய நெருக்கம் திவ்யாவை பாதித்தாலும், அவனுடைய தொடுகையில் எந்த தவறான எண்ணமும் இருக்க வில்லை என்று புரிந்து கொண்ட திவ்யா, அமைதியாக இருந்தாள். ஒரு ஐந்து நிமிட மசாஜிற்க்கு பின் திவ்யாவின் கைகளை விடுவித்த சிவா, “அவ்ளோ தான்..!! இதுக்கு எதுக்கு நீ இவ்ளோ சீன் போடுற..??" என்றான் கேஷுவலாக.
எழுந்து அமர்ந்த திவ்யா, தன்னுடைய ஆடைகளை சரி செய்து கொண்டு அவளுடைய இடுப்பை லேசாக அசைத்து பார்த்தாள். சிவாவின் கைகள் செய்த மாயா ஜாலத்தால் அவளுடைய வலிகள் அனைத்தும் பறந்து போய் இருந்தன. அதனால் மகிழ்ந்தவள் சிவாவை பார்த்து, “தேங்க்ஸ்" என்றாள். அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்த சிவா, “சரி அவங்களோட திங்ஸ் எல்லாம் எங்க இருக்குன்னு சொல்லு நானே எடுத்து வைக்கிறேன்." என்றவன், ஆராதனாவின் அனைத்து பொருட்களையும் திவ்யாவோடு சேர்ந்து எடுத்து தன்னுடைய காரில் போட்டுக்கொண்டு அங்கு இருந்து நாராயணன் பேலஸை நோக்கி கிளம்பினான்.
ஷாலினியோடு ஒரு ஷாப்பிங் மாலிற்க்கு பர்சேஸ் செய்வதற்காக வந்து இருந்தான் விஷ்ணு. விஷ்ணுவை பாலோ செய் தபடி அவர்களுடைய பாதுகாப்பிற்காக அவர்களுக்கு தெரியாமல் பாடி கார்டுகளும் அவர்களை சுற்றி இருந்தனர். ஷாலினி ஒவ்வொரு பொருளிலும் விலை என்னவென்று செக் செய்துவிட்டு தரமானதாகவும், விலை குறைந்ததாகவும், இருக்கும் பொருட்களை மட்டும் பார்த்து பார்த்து வாங்கினாள்.
விஷ்ணு எப்போதும் ஃபிராண்டு பார்த்து தான் எல்லா பொருட்களையும் வாங்குவான். இருப்பதிலேயே எந்த ஃபிராண்ட் பிரபல்யமாகவும், விலை அதிகமாகவும் இருக்கிறதோ அதை உடனே வாங்கி விடுவான். இப்போது ஷாலினியுடன் ஷாப்பிங் வந்திருக்கும் இந்த அனுபவம் அவனுக்கு புதிதாக இருந்தது. ஷாலினி தேவை இல்லாமல் ஒரு ஹேர் பின் கூட வாங்கவில்லை. அவள் கையில் இருந்து செலவாகும் ஒவ்வொரு ரூபாயையும் யோசித்து யோசித்து செலவு செய்து கொண்டு இருந்தாள்.
இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த விஷ்ணுவிற்கு அப்போது தான் ஒரு ரூபாயின் மதிப்பு கூட எவ்வளவு பெரியது என்று புரிந்தது. இது வரை அவனுடைய வாழ்க்கையில் அசால்டாக எத்தனையோ ஆயிரங்களை ஒரே நாளில் செலவழித்து தீர்த்து இருக்கிறான். அதை எல்லாம் இபோது யோசித்துப் பார்த்தவனுக்கு அதிகமாக பணம் இருக்கிறது என்பதால் இஷ்டத்திற்கு அதை தான் எவ்வளவு உதாரியாக செலவழித்து இருக்கிறோமே என்று தோன்ற, அதை நினைத்து அவன் வருத்தப்பட்டான். 😞
வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்கிய ஷாலினி, தனக்கான சில ஆடைகளை வாங்குவதற்காக லேடீஸ் செக்ஷனுக்குள் சென்றாள். சில ஷாப்பிங் பைகளை கையில் ஏந்திய படி விஷ்ணு அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தான். ஷாலினி குறைந்த விலையில் தனக்கான சில ஆடைகளை வாங்கிவிட்டு புடவை செக்ஷனுக்குள் நுழைந்தாள்.
அங்கே முதலில் விலை குறைந்த சேலைகளில் இருந்து, பின் விலை அதிகமான பட்டு சேலை வரை தனித்தனியாக அடுக்கி வைக்க பட்டு இருந்தது. ஷாலினிக்கு புடவை கட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுடைய யூனிபார்ம் சாரியை தவிர வேறு எந்த புடவையும் அவளிடம் இல்லை. ஏனென்றால் தினமும் அவள் யூனிபார்ம் தான் அதிகமாக அணிவதால், வேறு எங்காவது வெளியில் சென்றாலும் சாதாரணமாக குர்தாவே போதுமானதாக இருக்கும் நிலையில் வீணாக புடவையில் செலவு செய்து காசை அவள் வீணாக்க விருப்பவில்லை.
ஆனால் இப்போது ஷாலினிக்கு தனக்கென ஒரே ஒரு பட்டுப்புடவையாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது. அப்போது அவளுடைய கண்களால் அங்கு இருந்த ஒவ்வொரு புடவைகளையும் ஸ்கேன் செய்து கொண்டு இருந்தவள், அங்கு இருந்த ஒரு பொம்மையின் மீது கட்ட பட்டு இருந்த புடவையை பார்த்தாள்.
ராயல் ப்ளூ நிறத்தில் இருந்த அந்த பட்டு புடவையில், சிவப்பு நிறத்தில் டபுள் பார்டர் டிசைன் செய்ய பட்டு இருந்தது. அது ஒரிஜினல் காஞ்சிப்பட்டு என்பதால் பார்ப்பதற்கே பளபளப்பாகவும், தரமானதாகவும் இருந்தது. அந்த புடவையை பார்த்த ஷாலினிக்கு அவளுடைய அம்மா அப்பாவின் கல்யாண போட்டோ ஞாபகம் வந்தது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய திருமண நாள் அன்று அவளுடைய அம்மா இதே போன்ற ஒரு புடவையை தான் கட்டி இருந்தாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 70
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.