அத்தியாயம் 68: ரித்திகா தான் என் மருமகள் (பார்ட் 1)
செண்பகம்: “அப்ப இன்னைக்கு உன்னை ஒரு ஆன்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கல்ல... அவங்க உன்னோட ஃபிரண்டு இல்லையா..??” என்று ஆர்வமாக கேட்டாள்.
சித்தார்த்: “இல்ல அந்த ஆன்ட்டி ஒன்னும் என்னோட பிரண்டு இல்ல. அவங்க அப்பாவோட ஃபிரண்ட் ." என்று ஒரு நொடியும் தாமதிக்காமல் வேகமாக சொன்னான்.
செண்பகம்: “உன் அப்பாவுக்கு அந்த பொண்ணு ஃப்ரெண்ட்ன்னா உனக்கும் ஃப்ரெண்ட் தானே..?? ரித்திகா விற்கும் அந்த பொண்ணுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தான் இருக்கும். நீ அந்த பொண்ணு கூட பிரண்டா இருந்தா.. நம்ப அந்த பொண்ண நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்து நம்ம கூடயே வச்சுக்கலாம். நீ டெய்லியும் ஜாலியா அவ கூட விளையாடலாம் ஒகே வா..??? நம்ப அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா...??" என்று ஆர்வம் நிறைந்த கண்களுடன் அவனுடைய இரு கைகளையும் பற்றி கொண்டு கேட்டாள். 🤩
சித்தார்த்: “ஐயோ வேணாம் பாட்டி...!!! எனக்கு அந்த ஆண்டியை புடிக்கல. ரித்தி மட்டும் தான் என்னோட பிரண்டு. எனக்கு புதுசா வேற எந்த பிரெண்டும் வேண்டாம். நீங்க வேணா ரித்திய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. ரித்தி இங்க வந்தா ரொம்ப ஜாலியா இருக்கும். அவ என் கூட விளையாடுவா. அந்த ஜோக்கர் ஆண்ட்டிய எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க. நான் போய் ஹோம் ஒர்க் எழுதுகிறேன் பாட்டி. பாய்." என்றவன் எழுந்து தன்னுடைய அறைக்கு ஓடிவிட்டான்.
செண்பகம்: சித்தார்த் சென்றவுடன் சுகந்தியை சோகமாக பார்த்தவள், “என்ன சுகந்தி இவன் இப்படி சொல்லிட்டு போயிட்டான்.. வருணுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்ற என்னோட ஆசை வெறும் பகல் கனவாவே போயிரும் போல..!! இன்னும் நான் அவனுக்கு போய் வேற எங்க எங்க பொண்ணு பாக்குறது...??" என்று வருத்தமாக சொல்லி சுதந்தியிடம் ஆதங்கப்பட்டாள். 😞
சுகந்தி: தீர்கமான கண்களுடன் செண்பகத்த்தை பார்த்து, “சித்தார்த் தம்பியே அவருக்கு என்ன வேணும்னு தான் அவரே சொல்லிட்டு போய்ட்டாரே மா...!! அப்புறம் என்னா மா..?? அதே மாதிரியே செஞ்சிருங்கலேன்..." என்றாள் ஒரு உள் அர்த்தத்துடன்.
செண்பகம்: “என்ன சுகந்தி சொல்ற..?? அவன் என்ன சொல்லிட்டு போனான்..?? எனக்கு ஒன்னும் புரியல..." என்றாள் குழப்பமாக. 🙄
சுகந்தி: “அதான் சித்தார்த் தம்பி தெளிவா சொன்னாரே.. அந்த பொண்ணு ரித்திகாவை தவிர வேற யாரும் இந்த வீட்டுக்கு வர கூடாதுன்னு. இப்ப ரித்திகாவை ஃப்ரண்டா நினைக்கிற சித்தார்த் தம்பி, நாளைக்கே அந்த பொண்ண அம்மாவா ஏத்துக்கிறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு இல்ல மா..??? நீங்க இத பத்தி யோசிச்சு பாருங்க மா. எல்லாம் சரியா வரும்னு எனக்கு தோணுது." என்றாள் சிறு புன்னகையுடன். 😁 😁
செண்பகம்: சித்தார்த், ரித்திகா மேல பாசமா இருக்கிறத பாத்துட்டு அந்த ரித்திகா மாதிரி ஒரு பொண்ண பாத்து நம்ம வருணுக்கு கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு நெனச்சேன் சுகந்தி. ஆனா அந்த ரித்திகாவே கல்யாணம் பண்ணி வச்சா என்னன்னு நான் யோசிக்காம விட்டுடேன் பாறேன். அந்த பொண்ணு அழகுளையும் சரி, குணத்துலையும் சரி, வருணுக்கு பொருத்தமா இருப்பா.
எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. அவ என் பேரன் சித்தார்த்துக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா ஏற்கனவே வருண் அந்த பொண்ணு மேல சந்தேகப்பட்டு அவள வேவு பாத்துகிட்டு திரிஞ்சான். இப்ப அவள போய் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா இவன் ஒத்துக்குவான்னு தெரியல.. சரி இவன் கூட சித்தார்த்துக்காக ஒத்துக்கிறான்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கிட்டா கூட... அந்த பொண்ணோட வீட்ல ஒத்துக்கணும்ல்ல..?? நம்ம போய் கேட்டா உடனே அந்த பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்துருவாங்களா சுகந்தி..???
சுகந்தி: இன்னைக்கு நான் ஹாஸ்பிடலுக்கு போனப்ப அந்த பொண்ணோட அப்பாவையும், அம்மாவையும், பாத்தேன் மா. அவங்களும் ரொம்ப நல்லவங்களா தான் தெரியுறாங்க. நீங்க நான் சொன்னா கூட நம்ப மாட்டீங்க மா... ரித்திகாவோட அம்மாவ பாத்த உடனே சித்தார்த் தம்பி வேகமா ஓடி போய் அவங்கள கட்டி புடிச்சுகிட்டு சகஜமா பேசுறாரு. அத பாத்த எனக்கு எவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு தெரியுமா மா...??
செண்பகம்: என்ன சுகந்தி சொல்ற...!! சித்தார்த் என் கிட்ட கூட அப்டி எல்லாம் பாசமா இருந்தது இல்லையே..?? அந்த அளவுக்கு அவங்க குடும்பத்துக்கு கூட ஒட்டிக்கிட்டானா..??
சுகந்தி: “ஆமா மா. அதான் சொல்றேன்..நம்ம வருண் தம்பிக்கு ரித்திகா வே கல்யாணம் பண்ணி வைக்குறத பத்தி யோசிச்சு பாருங்க. நம்ம குடும்பத்துல சம்பந்தம் பண்றதுக்கு யாருக்கு மா கசக்க போகுது..?? நீங்க போய் பொண்ணு கேளுங்க மா. அவங்க வருண் தம்பிக்காக இல்லைன்னாலும், நம்ம சித்தார்த்துக்காகவாவது பொண்ணு தருவாங்கன்னு எனக்கு தோணுது." என்று நம்பிக்கையாக சொன்னாள்.
செண்பகம்: நீ சொல்றது சரி தான் சுகந்தி. அதுவும் இல்லாம என் பையன் வருணை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு பெரிய மருமகளா வர்றதுக்கு அந்த பொண்ணு குடுத்து வச்சிருக்கணும். ஆரம்பத்துல அப்படி இப்படின்னு இருந்தாலும்.. என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ண வருண் நல்லா பாத்துக்குவான்.
சுகந்தி: ஆமா மா. நான் பார்த்து வளர்ந்த பையன் மா. நம்ம வருண் தம்பிய பத்தி எனக்கு தெரியாதா..?? அதெல்லாம் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தா தங்கமா வச்சிக்குவாரு.
செண்பகம்: ஆமா..!! நான் முடிவு பண்ணிட்டேன் சுகந்தி. அந்த ரித்திகா தான் என் வீட்டோட மூத்த மருமக. அவளுக்கு உடம்பு சரி ஆகி அவ ஹாஸ்பிடல் -ல இருந்து டிஸ்டார்ஜ் ஆகி வீட்டுக்கு போகட்டும். நான் முதல்ல அவ கிட்ட பேசி பாக்குறேன். அவ இதுக்கு ஒத்துக்கிட்டான்னா.. நான் அப்புறமா அவ குடும்பத்துல பேசி சம்மதம் வாங்குறேன்.
சுகந்தி: சரிங்க மா. நீங்க ஆசைப்படுற மாதிரியே எல்லாமே நல்லதா நடக்கும். நீங்க வேணா பாருங்க இதே வீட்ல அந்த பொண்ணும், வருண் தம்பியும் 100 வருஷம் சந்தோசமா வாழ்வாங்க.
செண்பகம்: “இந்த ஹாரி பண்ணி வச்ச வேலையால நான் ரொம்ப டென்ஷனா இருந்தேன் சுகந்தி. இப்ப தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. உன் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்." என்று மகிழ்ச்சியாக சொன்னாள். 😁 😁 😁
ஷாலினியின் வீட்டில்...
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த ஷாலினி, ரெப்ரஷ் ஆகி வேறொரு ஆடையை உடுத்தியவள், தன்னுடைய பீரோவில் இருக்கும் அவளுடைய ஆடைகளை பார்த்துவிட்டு.. உடனடியாக தனக்கு தேவையான சில ஆடைகளையும், வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்க வேண்டும் என்று நினைத்து கிளம்பி கொண்டு இருந்தாள். அப்போது அவளுடைய வீட்டின் காலிங் பெள்ளை யாரோ தொடர்ந்து அடித்து கொண்டு இருந்தனர்.
அந்த காலிங் பெல்லின் சத்தம் அவளை பதட்டப்படுத்தியது. வந்து இருப்பது யாரோ என்று நினைத்து பயத்துடனே கதவின் அருகே சென்ற ஹாலினி, கதவில் இருந்த லென்ஸின் வழியாக வெளியே நிற்பது யார் என்று பார்த்தாள். டீ சர்ட் டும், ஜீன்ஸ் பேண்ட்ம், அணிந்து கேஷுவலாக ஒரு குலிங் கிளாஸ் உடன் நின்று கொண்டு இருந்த விஷ்ணுவை கதவில் இருந்து லென்ஸ் -ன் வழியாக பார்த்தாள் ஷாலினி. “இப்ப இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான்..??" என்று அவள் யோசித்து கொண்டு இருக்க, “நான் தான் விஷ்ணு. ஷாலினி கதவ தொற..!!" என்று சத்தமாக அவளை அழைத்த விஷ்ணு, வெளியே இருந்து கதவை தட்டினான்.
லாவண்யா ஏற்கனவே குழப்பி விட்டிருந்ததால் ஷாலினியை இன்னும் அதிகமாக குழப்பத்தில் இருந்ததால்.. இப்போது அவள் விஷ்ணுவை சந்திக்க விரும்பவில்லை. இருந்தாலும், அவன் விடாமல் வெளியே நின்று கதவை தட்டி கொண்டே இருந்ததால் வேறு வழி இன்றி கதவை திறந்தாள் ஷாலினி. ஷாலினி கதவை திறந்ததும், அவளை பார்த்த விஷ்ணு, அழகாக ஹாய் சொன்னான். 🙋 எப்போதும் விஷ்ணுவை பார்மல்ஸ் பார்த்து பழகியவள், இன்று தான் முதன் முறையாக அவனை கேஷுவல்சில் பார்க்கிறாள் ஷாலினி.
ஃபார்மல்சில் நீட்டாகவும், மேன்லியாகவும், இருக்கும் விஷ்ணு.. கேஷுவல்சில் க்யூட் ஆகவும், ஹேண்ட்சம் ஆகவும், ஷாலினியின் கண்களுக்கு தெரிந்தான். அதனால் அவன் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை கூட மறந்து விட்ட ஷாலினி, தன்னை அறியாமல் அவனை வெளிப்படையாக சைட்டு அடித்து கொண்டு இருந்தாள். 😍 🥰
அதை கவனித்த விஷ்ணு தனக்குள் சிரித்துக் கொண்டு, “இவ சைட் அடிக்கிறது எல்லாம் நல்லா தான் அடிக்கிறா..!! ஆனா திடீர் திடீர்னு என் கிட்ட ஏன் கோச்சுக்கிறான்னு தான் தெரியல.." 😁 😁 என்று நினைத்தவன், தான் அங்கு இருப்பை ஷாலினிக்கு உணர்த்துவதற்காக அவளுடைய முகத்திற்கு நேரே தன்னுடைய ஒரு கையை அசைத்தவன், “ஹலோ மேடம்..!! நான் ரொம்ப ஹேண்ட்ஸாமா தான் இருக்கேன்னு எனக்கே தெரியும். அதுக்கு நீ எவ்ளோ நேரம் இப்படியே பாத்துட்டு இருப்பீங்க..??" என்றான் நக்கலாக. 🙋 😂 😂
ஷாலினி: அவன் பேசியதை கேட்டு சுய நினைவுக்கு வந்தவள், “ச்சே..!! ச்சே...!! நான்லாம் உன்ன ஒன்னும் சைட் அடிக்கலையே. சும்மா அப்படியே உன் இஷ்டத்துக்கு உளறிட்டு இருக்காத சொல்லிட்டேன்." என்று கோபமாக அவசரமான குரலில் சொன்னாள். 😒 😡
விஷ்ணு: “ஆமா..!! ஆமா..!! டி. கரெக்டு தான். நீ என்ன சும்மா சைட் எல்லாம் அடிக்கல. அப்படியே என்ன கட்டிச்சு திங்கிற மாதிரி பாத்துட்டு இருந்த தெரியுமா..??" என்றவன், அவளுடைய முகத்திற்க்கு முன் தன்னுடைய முகத்தை கொண்டு சென்று அவளை கடித்து விழுங்குவதை போல் செய்து காட்டினான். 😜 😝
ஷாலினி: தன் அருகில் நெருக்கமாக வந்த விஷ்ணுவின் நெஞ்சில் தன்னுடைய 2 கையையும் வைத்து அவனை தள்ளிவிட்டவள், “ச்சீ..!! ச்சீ..!! நான் அப்படி எல்லாம் பாக்கவே இல்லை. பொய் சொல்லாத டா எருமை. அப்புறம் நீ ரோட்ல எங்கயாவது போனினா மாடு முட்டிடும் பாத்துக்கோ. உனக்கு அவ்ளோ எல்லாம் சீன் இல்ல ஓகே வா. முதல்ல நீ எதுக்கு இங்க வந்த...?? உன்ன யார் இப்ப இங்க வர சொன்னா..???" என்றாள் கோபமாக. 😡🔥
விஷ்ணு: “அடியே..!! படிச்சவ தானே நீ..?? உனக்கு மேனர்ஸ் தெரியாதா..?? இப்படி தான் உன்ன பாக்கிறதுக்கு வீட்டுக்கு வர்றவங்க கிட்ட எதுக்கு வந்தீங்கன்னு கேட்டு உன்னோட முட்ட கண்ண.. உருட்டி உருட்டி காமிச்சு 👀 பயமுறுத்துவியா..??" என்றான் நக்கலாக. 😂 😂 🤣
ஷாலினி: ம்ம்..!! விஷ்ணுன்னு பேரு வச்சவன எல்லாம் நான் வீட்டுக்குள்ள விடுறது இல்ல. அதான் எதுக்கு நீ இங்க வந்தேன்னு கேட்டு அப்டியே உன்ன துரத்திவிட்டுறலாம்ன்னு கேட்டேன் போதுமா...??? நீ எனக்கு மேனர்ஸ் பத்தி சொல்லி தரத்துக்கு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் கிளாஸ் எடுக்க வந்திருந்தா அப்படியே ஓடி போயிரு. எனக்கு வேற வேலை நிறையா இருக்கு" என்றவள், கதவை சாத்த போனாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 68
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.