அத்தியாயம் 67 சித்தார்த்துடன் லக்ஷனா (பார்ட் 2)
திடீரென்று அங்கு வந்த சித்தார்த்தை கண்டு மகிழ்ந்த ராகவி; அவன் இன்னும் பள்ளி சீருடையிலேயே இருப்பதை கவனித்தவள், “ஒய்..!! சித்து... என்ன டைரக்டா ஸ்கூல்ல இருந்து அப்படியே இங்க வந்துட்டியா..??" என்று ஆச்சரியமான குரலில் கேட்டாள்.
சித்தார்த்: “ஆமா நான் உன்ன நிறைய மிஸ் பண்ணேன். அதான் உன்ன பாக்குறதுக்காக வந்தேன். நீயும் என்ன மிஸ் பண்ணியா..??" என்று அப்பாவியாக கேட்டான். 😁
ராகவி: “ஆமா...!! நானும் என் சித்து குட்டியே ரொம்ப மிஸ் பண்ணுனேன்." என்று அவனிடம் சொன்ன ராகவி, சந்தோஷ் ஐ பார்த்து, “சந்தோஷ் இவனுக்கும் ஜூஸ் சேத்து போடு." என்றாள்.
சந்தோஷ் அவர்கள் மூவருக்கும் ஜூஸ் போட்டான். அதை ஒரு யூஸ் அண்ட் த்ரோ கப்பில் ஊற்றி சித்தார்த்திடமும், ராகவியிடமும், கொடுத்துவிட்டு அவனும் சேர்ந்து அவர்களோடு குடித்துக் கொண்டு இருந்தான். அந்த அறைக்கு வெளியில் நின்று கொண்டு இருந்த ரேவதியின் அருகே வந்த லக்ஷனா, “இஃப் ஐ அம் நாட் ராங் நீங்க தானே ராகவி டீச்சரோட அம்மா..??" என்று கேட்டாள். லக்ஷனா, சித்தாத்தோடு வந்து இருந்ததால் அவள் தான் சித்தார்த்தின் அம்மாவாக இருக்க கூடும் என்று நினைத்த ரேவதி, “ஆமா மா. ராகவி என் பொண்ணு தான். நீங்க சித்தார்த்தோட அம்மாவா..??" என்று கேட்டாள்.
லக்ஷனா: ரேவதி சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், “ஐயையோ...!! ஆன்டி...!! என்ன பாத்தா அவ்ளோ பெரிய பையனுக்கு அம்மா மாதிரியா தெரியுது..??? அவன் என்னோட பையன் இல்லை. நான் அவங்க ஃபேமிலி பிரிண்ட். சித்தார்த்த ஸ்கூல்ல இருந்து பிக் கப் பண்ணிட்டு வரும்போது அவன் ராகவிய பாக்கணும்னு சொன்னான். அதனாலா தான் அவன இங்க கூட்டிட்டு வந்தேன்." என்றாள்.
ரேவதி: ஓ..!! ஐ அம் சாரி. நான் சித்தார்த்தோட அம்மாவை பார்த்தது இல்லை. அதனால நீங்க அவன் கூட வரவும் நீங்க தான் அவன் அம்மான்னு நினைச்சுட்டேன்.
லக்ஷனா: இட்ஸ் ஓகே ஆன்ட்டி. அன்ட் சித்தார்த்துக்கு அம்மாவே இல்ல. அவங்க இறந்துட்டாங்க.
ரேவதி: அச்சச்சோ..!! அப்படிங்களா...!! எனக்கு தெரியாது. நான் அவனோட அப்பாவை மட்டும் தான் பாத்து இருக்கேன். அவரு ரொம்ப நல்லவரு. அவருக்கு போய் இப்படி நடந்து இருக்கு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு மா.
லக்ஷனா: “எஸ் அண்ட்டி.'" என்றவள், டிரைவர் இடம் இருந்த பழங்கள் நிறைந்த பெட்டியை வாங்கி ரேவதி இடம் கொடுத்து, “இதாங்க ஆன்ட்டி. அவங்களுக்கு ஜூஸ் போட்டு குடுங்க." என்றாள்.
ரேவதி: எதுக்கு மா இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்..?? விஷ்வா சார் எங்களுக்கு ஆல்ரெடி நிறைய ஹெல்ப் பண்ணிட்டாரு.
லக்ஷனா: “பரவால்ல ஆன்ட்டி. அவர் பண்ண ஹெல்ப் -ப அக்சப்ட் பண்ணிக்கிட்டிங்க இல்ல..??? இத எனக்காக அக்செப்ட் பண்ணிக்கோங்க." என்று சொன்னவள், என்று சொன்னவள், அந்த பழங்கள் நிறைந்த பெட்டியை ரேவதி இடம் கொடுத்தாள்.
வேறு வழி இன்றி தேவதியும் அவற்றை லக்ஷனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டாள். அமைதியாக லக்ஷனாவின் அருகே நின்று கொண்டு இருந்த சுதந்தி, அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தாள்.
லக்ஷனா: “ஓகே..!! ஆன்ட்டி. நான் சித்தார்த்த கூட்டிட்டு கிளம்புறேன். அவன வர சொல்லுங்க." என்றாள் ரேவதியிடம்.
லக்ஷனா அவனை அழைப்பதாக சொல்லி சித்தார்த்தை ரேவதி வெளியே வரச் சொல்ல, “இன்னும் கொஞ்ச நேரம் நான் உன் கூடவே இருக்கனே.. ராகா.. ப்ளீஸ்...!!" என்று ராகவியிடம் கெஞ்சினான் சித்தார்த். 😣
ராகவி: “நான் தான் உன்ட நேத்தே சொன்னேன்ல... நீ ரொம்ப சின்ன பையன். இங்க ரொம்ப நேரம் ஹாஸ்பிடல் -ல நீ இருந்தான்னா உனக்கு இன்பெக்சன் ஆயிடும். சோ நீ இப்ப கிளம்பு. நாளைக்கு வந்து என்னை பாரு. ஓகேவா..??" என்று சொல்லி அவனை சமாதானப்படுத்த முயற்சித்தாள்.
சித்தார்த்: அங்கு இருத்த சந்தோஷ் ஐ கை காட்டியவன், “என்ன மட்டும் போக சொல்ற... அந்த அங்கிள் மட்டும் ஏன் இங்கயே இருக்காரு..?? அப்ப அவரையும் போக சொல்லு. அவரு போனா தான் நானும் போவேன்." என்றான். 😒
சந்தோஷ்: சித்தார்த் பேசியதை கேட்டு அதனை பார்த்து முறைத்தவன், “எங்க இருந்து டா என் லவ்வுக்கு சதி செய்றதுக்கு மட்டும் கரெக்ட்டா கிளம்பி வரீங்க..??? அவள பாக்க வந்தா பாத்துட்டு கம்முனு போக வேண்டி தானே டா குல்லா..!! இந்த கௌத்தம் தான் கூட இருந்துகிட்டு இடைஞ்சல் பண்றான்னு பாத்தா இப்ப இவன் வந்து அவன் இல்லாத குறைய தீர்க்கிறான்." 😒 என்று நினைத்தவன், ராகவி தன்னை போக வேண்டாம் என்று சொல்வாளா என்று எதிர்பார்த்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். 😍
ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக சந்தோஷ் ஐ பார்த்த ராகவி, “ஆமா சந்தோஷ். நீயும் கெளம்பு. நீ வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு. சோ வீட்டுக்கு போ." என்றவள், மீண்டும் சித்தார்த்தை பார்த்து... “அந்த அங்கிள் கிளம்பிடுவாரு. நீயும் கிளம்பி வீட்டுக்கு போ. ஓகேவா..?? போமாட்டேன்னு அடம் பிடிக்க கூடாதுன்னு நான் ஆல்ரெடி உன் கிட்ட சொல்லி இருக்கேன். எப்பவும் குட் பாய இருக்கணும் சித்தார்த்." என்றாள்.
ராகவி இப்படி சொல்லிவிட்டதால் அவள் மீது பேரன்பு கொண்ட சித்தார்த்தும், சந்தோஷ் -ம், உடனே அங்கு இருந்து கிளம்பினர். சித்தார்த்தை அழைத்துக் கொண்டு சுகந்தியுடன் நாராயணன் பேலஸ்க்கு வந்தாள் லக்ஷனா. தன்னுடைய வீட்டிற்கு வந்தவுடன் லக்ஷனாவை கண்டு கொள்ளாத சித்தார்த், அவனுடைய அறைக்கு ஓடிச் சென்று விட்டான். லக்ஷனாவே ஹாலில் இருந்த செண்பகம் வரவேற்று, அமர வைத்து அவளிடம் பேசிக் கொண்டு இ0ருந்தாள்.
சித்தார்த்தே இந்த ஆடை காமெடி ஆக இருக்கிறது என்று சொல்லிவிட்டதால், செண்பகமும் தன்னை இதை வைத்து தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த லக்ஷனா, “நான் சித்தார்த்துக்கு பிடிக்கும்னு தான் இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்தேன். என்ன தப்பா நினைச்சுக்காதீங்க ஆன்ட்டி." என்றாள்.
செண்பகம்: “பரவால்ல மா. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு...?? நீ அவனுக்காக இது எல்லாம் யோசிச்சு இருக்கன்னு நினைக்கும் போதே எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எப்டி டிரஸ் பண்ணாலும் அழகா தான் இருப்ப." என்றாள்.
சுகந்தி அவர்கள் இருவருக்கும் டீயும், ஸ்நாக்ஸும், கொண்டு வந்து கொடுக்க; அவற்றை சாப்பிட்டபடியே இருவரும் ஒருவருடைய குடும்பத்தை பற்றி மற்றொருவரிடம் சொல்லி கொண்டு இருந்தனர். செண்பகத்திற்கு லக்ஷனாவை பிடித்து இருந்தது. இருந்தாலும் இந்த விஷயத்தில் சித்தார்த்தின் சம்மதம் தான் முக்கியம் என்று நினைத்தவள், இந்த திருமணத்தைப் பற்றி விஷ்வாவிடமும் சித்தார்த்திடமும், பேசிவிட்டு உங்களுடைய குடும்பத்திற்கு தகவல் சொல்வதாக சொல்லி லக்ஷனாவை அங்கு இருந்து அனுப்பி வைத்தாள்.
பின் செண்பகத்திடம் விடை பெற்றுக்கொண்டு அங்கு இருந்து தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றாள் லக்ஷனா. லக்ஷனா, அங்கு இருந்து சென்றவுடன், சுகந்தியை அழைத்த செண்பகம்.. லக்ஷனா பள்ளிக்கு வந்து நொடியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் வரை நடந்த அனைத்தையும் அவளிடம் விசாரித்து தெரிந்து கொண்டாள். சுகந்தி தன்னை லக்ஷனா மேடம் என்று அழைக்க சொன்னதை தவிர மற்ற அனைத்தையும் அப்படியே செண்பகத்திடம் சொன்னாள்.
செண்பகம்: உனக்கு என்ன தோணுது சித்தார்த் இந்த பொண்ண அம்மாவ ஏத்துக்குவானா..???
சுகந்தி: “அந்த பொண்ண பாத்தா அப்டி ஒன்னும் ரொம்ப தப்பான பொண்ணு மாதிரி எல்லாம் தெரியல மா. ஆனா சித்தார்த் தம்பி அந்த பொண்ண அம்மாவா ஏத்துக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். வாய்ப்பு ரொம்ப கம்மி." எந்த தன் மனதில் இருந்து உண்மையாக பதில் சொன்னாள்.
செண்பகம்: எனக்கும் அப்டி தான் தோணுது. இருந்தாலும் நான் இத பத்தி சித்தார்த் கிட்ட பேசி பாக்கிறேன். அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம். நீ போய் அவன கூட்டிட்டு வா.
“சரி மா." என்று சொன்ன சுகந்தி, சுத்தார்த்தை அழைத்து வருவதற்காக அவனுடைய அறையை நோக்கி சென்றாள்.
சித்தார்த்திடம் எடுத்த எடுப்பில் லக்ஷனாவை பற்றி பேசாமல் சுற்றி வளைத்து பேசி அவனுடைய மனதில் இருப்பவற்றை தெரிந்து கொள்ள நினைத்த செண்பகம், அவனிடம் பேச தொடங்கினாள்.
செண்பகம்: சித்து கண்ணா...!! இன்னைக்கு உன் பிரண்டை பாக்குறதுக்கு நீ ஹாஸ்பிடல் போனியாமே... அந்த பொண்ணு இப்ப எப்டி இருக்கா..??
சித்தார்த்: நல்லா இருக்கா பாட்டி. அவளுக்கு சீக்கிரமா சரி ஆயிடும்னு சொன்னா.
செண்பகம்: சரி பா. உனக்கு அந்த பொண்ணு ரொம்ப பிடிக்குமா...??
சித்தார்த்: “ஆமா...!! பாட்டி. எனக்கு ராகாவ ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப... பிடிக்கும்." 😍 என்றவன், அவனுடைய குட்டி கைகளை அவனால் முடிந்த வரை பெரிதாக விரித்து ராகவியை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அவளிடம் சொன்னான்.
செண்பகம்: “பர்றா..!! அவ்ளோ பிடிக்குமா? அப்போ உனக்கு அந்த பொண்ண இந்த பாட்டிய விட அதிகமா ரொம்ப புடிக்கும் போலவே.." என்று விளையாட்டாக முறைத்த படி கேட்டாள்.🤨
சித்தார்த்: “ஆமா பாட்டி." என்று சிரித்து கொண்டே வெள்ளந்தியாக சொன்னான். 😁 😁 😁
செண்பகம்: “பாத்தியா..!! அப்போ உனக்கு செண்பா பாட்டிய பிடிக்காதா..??" என்று பொய்யான கோபத்துடன் கேட்டாள். 😒
சித்தார்த்: “எனக்கு உங்களையும் பிடிக்கும் பாட்டி." என்றான் உண்மையாக. 😁
செண்பகம்: “சரி..!! உனக்கு ஏன் அந்த பொண்ண இவ்ளோ புடிச்சிருக்கு...???" என்று கேட்டாள் ஆர்வமாக.
சித்தார்த்: “ஏன் பிடிக்கும்...??" என்று சொன்னவன், அவனுடைய ஒரு குட்டி விரலை தானுடைய கன்னத்தில் வைத்து சில நொடிகள் யோசிப்பதை போல் பாவனை செய்தவன், “ஏன்னா அவ என்னோட பெஸ்ட பிரண்டு. அதான் எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்." என்று அவனுக்கு தோன்றிய ஒரு காரணத்தை கண்டு பிடித்து அவளிடம் சொன்னான்.
செண்பகம்: அப்ப அந்த ராகவி மட்டும் தான் உன்னோட பெஸ்ட பிரண்டா..??
சித்தார்த்: ஆமா..!! எனக்கு இருக்கிற ஒரே ஒரு பிரெண்டு என் ராகா மட்டும் தான்.
செண்பகம்: அப்ப இன்னைக்கு உன்ன ஒரு ஆன்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கல்ல... அவங்க உன்னோட ஃபிரண்டு இல்லையா..??
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 67
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.