அத்தியாயம் 66: சித்தார்த்துடன் லக்ஷனா (பார்ட் 1)
சித்தார்த்தை பார்த்த லக்ஷனா, “இவன் வருனோட பையன்ல்ல... பரவால்ல.. நம்ம அளவுக்கு இல்லைனாலும் ஏதோ கொஞ்சம் க்யூட்டா தான் இருக்கான். சோ இவன் என்ன அம்மான்னு கூப்பிட்டா அப்படி ஒன்னும் மோசமா இருக்காது." என்று நினைத்தவள், சித்தார்த்தை பார்த்து அழகாக சிரித்து ஹாய் சொன்னாள். 😁 🙋 அவளைப் பார்த்து பதிலுக்கு சிரித்த சித்தார்த், “நீங்க தான் என் அப்பாவோட பிரண்டா..??" என்று அழகாக தன்னுடைய மழலை குரலில் கேட்டான்.
லக்ஷனா: அவனுடைய மூக்கை தன்னுடைய 2 விரலால் பிடித்து லேசாக ஆட்டியவள், “ஆமா நான் உன் டாடியோட பிரண்டு தான். என் பேரு லக்ஷனா. உன் பேரு சித்தார்த் தானே எனக்கு தெரியும்." என்று புன்னகை நிறைந்த முகத்துடன் சொன்னாள். 😁 😁
சித்தார்த்: “ஆமா என் பேரு சித்தார்த் தான்." என்றவன் சில நொடி இடைவெளிக்கு பின், “நீங்க எப்பவும் இப்படி தான் இருப்பீங்களா ஆன்ட்டி..??" என்று சிரித்து கொண்டே கேட்டான். 😂
லக்ஷனா: தான் அணிந்து இருக்கும் ஆடை அவனுக்கு பிடித்து இருக்கும் போல அதனால் தான் அதை பற்றி அவன் கேட்கிறான் என்று நினைத்தவள், “ஆமா நான் எல்லா கார்டுனும் பாப்பேன். அது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் இந்த மாதிரி டிரஸ் பண்ணி இருக்கேன். உனக்கு புடிச்சிருக்கா..???" என்று ஆர்வமான குரலில் கேட்டாள். 😍
சித்தார்த்: மீண்டும் அவளை தலை முதல், கால் வரை பார்த்தவன், “ம்ம்.. நல்லா தான் இருக்கு. எனக்கு புடிச்சு இருக்கு. ஆனா..!! இந்த மாதிரி டிரஸ் எல்லாம் என்ன மாதிரி குழந்தைங்க தானே போடணும்..?? நீங்க ஏன் இப்டி எல்லாம் போட்டு இருக்கீங்க..?? நீங்க என்ன குழந்தையா..?? பாக்கவே செம்ம காமெடியா இருக்கீங்க ஆன்டி... எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது." என்று தன்னுடைய வாயை ஒரு கையால் மூடியவன், அவளை பார்த்து நக்கலாக சொனான். 🤭 😜 😁
சித்தார்த் அப்படி சொன்னதை கேட்டு அங்கு இருந்த சுகந்தி உட்பட அனைவரும் சிரித்து விட்டனர். 😂 😂 🤣
லக்ஷனா: “அட ச்சே...!!! என்ன இப்டி சொல்லிட்டான்..😒 நான் அப்பவே இது எல்லாம் வேணாம்னு சொன்னேன்.. இந்த அம்மா தான் நான் சொல்றத கேட்காம எல்லா குழந்தைக்கும் இப்டி டிரஸ் பண்ணா கண்டிப்பா பிடிக்கும்.. அப்படி இப்படின்னு சொல்லி பில் அப் பண்ணி என்ன இத போட வச்சாங்க.. ஆனா இவன் என்னான்னா இப்டி எல்லார் முன்னடியும் என்ன மொக்கை பண்ணி விட்டுடானே.. ஒரு சின்ன பையனால அவமானமா போயிருச்சே மம்மீ..!!" என்று நினைத்தவள், “சரி..!! வா குட்டி பையா நம்ம வீட்டுக்கு போலாம்." என்று சொல்லி சமாளித்தாள். 😁
சுகந்தி, லக்ஷனாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். லக்ஷனா சித்தார்த்தின் கையை பிடித்துக் கொண்டு காரில் ஏற போக, அவளுடைய கையை தன் கையில் இருந்து எடுத்துவிட்ட சித்தார்த், “நான் குழந்தை இல்லை ஆன்ட்டி. நான் பெரிய பையன். நானே மெதுவா ஏறி வருவேன். நீங்க ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம்." என்று சொன்னவன், அவனே சமத்தாக சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டான். “குட்டி பிசாசு..!! இப்ப தானே நீங்க என்ன... என்ன மாதிரி குழந்தையா ஆன்ட்டி இப்டி டிரஸ் பண்றிங்கன்னு கேட்டான். இப்ப இவனே இவன குழந்தை இல்லை. நான் பெரிய பையன்னு சொல்லிக்கிறான். இவனே இப்படி இருக்கானே..!! இன்னும் இவனோட அப்பன் எப்படி இருப்பான்னு தெரியலையே...!!" என்று நினைத்த லக்ஷனா, எதுவும் பேசாமல் அமைதியாக சித்தரத்தை பார்த்தபடி இருந்தாள்.
லக்ஷனா முதலிலேயே உள்ளே ஏறிவிட்டதால் லக்ஷனாவின் அருகே சித்தார்த் அமர, சித்தார்த்தின் அருகே சுகந்தி அமர்ந்து கொண்டாள். தனக்கு கிடைத்து இருக்கும் இந்த கொஞ்ச நேரத்தையும் இப்படி அமைதியாகவே இருந்து வேஸ்ட் செய்து விட கூடாது என்று நினைத்த லக்ஷனா, மெதுவாக சித்தார்த்திடம் பேச்சு கொடுத்தாள். சித்தார்த் தன்னுடைய முகத்தை சோகமாகவே வைத்து இருந்தான். 😔
லக்ஷனா: “சித்தார்த் செல்லத்துக்கு என்ன பிடிக்கும்..??" என்று சிரித்து கொண்டே கேட்டாள். 😁
சித்தார்த்: “எனக்கு எதுவும் பிடிக்காது." என்று பட்டென்று சொன்னான்.
லக்ஷனா: “ஓ... காட்..!! எத்தன பால் போட்டாலும் இப்டி நோ பாலாவே போனா நான் என்ன தான் பண்றது..!!" என்று நினைத்தவளுக்கு, அவளுடைய அம்மா அவளிடம் கொடுத்த சாக்லேட்கள் ஞாபகம் வந்தது. அதனால் வேகமாக தன்னுடைய ஹேண்ட் பேக்கை திறந்தவள், அதில் இருந்த பெரிய பெரிய பிராண்டட் சாக்லேட்களை எடுத்து சித்தார்த்திடம் நீட்டி... “ “இந்தா தங்கம் சாக்லேட் சாப்பிடு. ஆன்ட்டி இத எல்லாம் உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன்." என்று தேனொழுக பேசினாள். 😁
சித்தார்த்: அந்த சாக்லேட்டுகளை ஒரு பார்வை பார்த்தவன், “எனக்கு வேண்டாம். நிறைய சாக்லேட் சாப்பிட்டா பல்லு கெட்டு போயிடுமாம். அப்புறம் டாக்டர் பெரிய பெரிய ஊசியா போடுவாங்களாம். ரித்தி சொல்லி இருக்கா. ஊசி போட்டா எனக்கு வலிக்கும். இத நீங்களே வச்சுக்கோங்க." என்றான்.
லக்ஷனா: “நிறைய சாப்பிட்டா தான் பல்லு கெட்டுப் போயிடும். நீ ஒன்னே ஒன்னு மட்டும் சாப்பிடு. பல்லுக்கு ஒன்னும் ஆகாது." என்று சொல்லி அவளை சமாதானப்படுத்த பார்த்தாள்.
சித்தார்த்: “இல்ல எனக்கு வேண்டாம்." என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.
லக்ஷனா: “அப்போ உனக்கு வேற என்ன வேணும்னு சொல்லு. இல்ல நம்ம வேணா எங்கையாவது வெளிய போகலாமா..?? நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு வாங்கி தரேன்." என்று சொல்லி அவனுக்கு ஐஸ் வைக்க முயற்சித்தாள்.
சித்தார்த்: “இல்ல எனக்கு வெளியில எங்கயும் போக வேண்டாம்." என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போது தான் அவனுக்கு தான் எங்கேயோ போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தது அவனுக்கு ஞாபகம் வர, அது என்ன இடம் என்று யோசிக்க.. அவன் நேற்று ஹாஸ்பிடல் இல் இருந்து வரும்போது தினமும் சாயங்கால வேளையில் ராகவியை வந்து பார்ப்பதாக அவளிடம் சொல்லிவிட்டு வந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதனால் லக்ஷனாவிடம், “நான் ஹாஸ்பிடலுக்கு போகணும். என்ன அங்க கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்...??" என்றான் ஆர்வமாக அவளைப் பார்த்து. 🤩
லக்ஷனா: “என்னாச்சு..!! சித்தார்த் உனக்கு ஏதாவது உடம்பு சரி இல்லையா..??? இப்ப எதுக்கு ஹாஸ்பிடல் -க்கு போகணும்னு சொல்ற...??" என்று கேட்டவள், அவனுடைய நெற்றியில் தன்னுடைய கையை வைத்து தொட்டு பார்த்தாள். அவனுடைய பாடி டெம்பரேச்சர் நார்மனாக தான் இருந்தது.
சித்தார்த், ரித்திகாவை பார்ப்பதற்காக தான் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும் என்று சொல்கிறான் என்று சுகந்திக்கு புரிந்து விட்டது. ஆனாலும் அவள் அதை பற்றி லக்ஷனாவிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சித்தார்த்: ரித்தி ஹாஸ்பிடல்ல இருக்கா. அவள பாக்க போனும்.
லக்ஷனா: ராகவா அது யாரு..??
சித்தார்த்: அவ என்னோட பிரண்டு.
லக்ஷனா: ஓ..!! ஃபிரண்டா...!! உன் கூட அந்த பொண்ணு ஸ்கூல்ல படிக்கிறாளா..??
சித்தார்த்: இல்லை என்று தன் தலையை ஆட்டினான்.
இப்போது அவர்களுடைய கான்வர்சேஷனில் குறிக்கிட்ட சுகந்தி, “அந்த பொண்ணு பேரு ராகவி மா. தம்பி படிக்கிற ஸ்கூல்ல தான் டீச்சர்ரா வேலை பார்க்கிறார்ங்க. அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காங்க. சித்தார்த் தம்பிக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும். அதனால தான் அங்க போய் அவங்கள பாக்கணும்னு சொல்றாரு.
லக்ஷனா: “இந்த வயசுல எல்லா ஸ்டுடென்ட்ஸும் டீச்சர்ச பாத்தாலே பயப்படுவாங்க. இவனுக்கு இவன் டீச்சர் ஃபிரண்டாமா.. ஆனா இவ்ளோ க்யூட்டா இருக்க என் கிட்ட மட்டும் இவன் ஒழுங்காவே பேச மாட்டேங்குறான். இவன் குடும்பத்தில எல்லாரும் ஒரு டைப்பா தான் இருப்பாங்க போல.." என்று நினைத்தவள் சுகந்தியை பார்த்து, “அதான் அவன் அவங்களை பாக்கணும்ன்னு ஆசைப்படுறான்ல... அதனால நம்ம ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போயிரலாம். ஒன்னும் பிரச்சனை இல்லயே..??" என்று கேட்டாள்.
சுகந்தி: ஒன்னும் பிரச்சனை இல்ல மா. முதல்ல ஹாஸ்பிடலுக்கே போலாம்.
லக்ஷனா: சுகந்தி தன்னை “மா" என்று சொல்லி அழைப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் டைரக்டாகவே அதை அவளிடம் சொல்லி விட நினைத்தவள், “ஓகே. பட் நீங்க மேய்ட் தானே..?? என்ன போம்மா வாமான்னு எல்லாம் கூப்பிடாதீங்க. மேடம்ன்னு கூப்பிடுங்க. எனக்கு அதான் பிடிக்கும்." என்று அவளுடைய முகத்தில் அறைந்ததை போல் சொல்லிவிட்டாள்.
அவள் அப்படி சொல்லவும், சுகந்தியின் முகம் மாறிவிட்டது. “சாரி மேடம். இனிமே அப்படி சொல்ல மாட்டேன்." என்றாள் பணிவாக.
லக்ஷனா: “ம்ம் குட். அந்த ஹாஸ்பிடல் எங்க இருக்கு..??" என்று அதிகார தோரணையில் கேட்டாள்.
சுகந்தி அந்த மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று வழி சொல்ல, சில நிமிட பயணத்திற்கு பின் அவர்கள் நாராயணன் மருத்துவமனை வாசலில் வந்து இறங்கினர். முதலில் காரில் இருந்து கீழே இறங்கிய லக்ஷனா, அந்த மருத்துவமனைக்கு எதிரில் ஒரு ஃப்ரூட் ஷாப் இருப்பதை கவனித்தாள். அதனால் தன்னுடன் வந்த சித்தார்த்தை பார்த்தவள், “உன் பிரண்டுக்கு உடம்பு சரி இல்லைல.. அதனால அவங்கள பாக்க போகும் போது நம்ப சும்மா போக கூடாது. அவங்களுக்கு ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு போலாமா..??" என்று தன்னால் முடிந்த வரை சித்தார்த்தை கரெக்ட் செய்வதற்காக அவனிடம் எப்படி எல்லாம் நல்ல விதமாக பேச முடியுமோ அப்படி எல்லாம் நல்லவிதமாக பேசினாள்.
லக்ஷனா தனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டபோது அதை உடனே மறுத்துவிட்ட சித்தார்த், இப்போது அவள் ராகவிக்காக ஏதாவது வாங்கி கொண்டு செல்லலாம் என்று சொன்ன உடனே வேகமாக சரி என்று உற்சாகமாக சொன்னான். 😍 அதை கவனித்த லக்ஷனா, “இவன் என்ன அந்த டீச்சரோட ரொம்ப அட்டாச்டா இருப்பான் போலவே..!!!" என்று நினைத்தவள் டிரைவரிடம் 2 ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து, ஃப்ரெஷான நல்ல விலை உயர்ந்த பலன்களை வாங்கி வருமாறு சொல்லி அனுப்பினாள்.
டிரைவர் ஒரு அட்டை பெட்டி முழுவதும் பழங்களை வாங்கிக் கொண்டு வர, அவரையும், அழைத்து கொண்டு சுகந்தியுடனும், சித்தார்த்துடனும், சேர்ந்து மருத்துவமனைக்குள் சென்றாள் லக்ஷனா. பின் அவர்கள் ராகவி அட்மிட் செய்ய பட்டு இருக்கும் அறை எங்கே இருக்கிறது என்று ரிசப்ஷனில் கேட்டு தெரிந்து கொண்டு உள்ளே சென்றனர். ராகவியின் பெற்றோர்களை பார்த்த சித்தார்த், வேகமாக ஓடி சென்று ரேவதியின் கால்களை கட்டி பிடித்து கொண்டு.. “நான் போய் ராகவா பாக்கட்டுமா..??" என்று பாசமாக கேட்டான். 😍 🤗
அவனுடைய தலையை பாசமாக தடவிய ரேவதி, “அவ உள்ள தான் இருக்கா. போய் பாரு." என்று சொல்லி அவனை உள்ளே அனுப்பினாள். சித்தார்த் ராகவியின் அறைக்குள் செல்லும் போது அங்கே சந்தோஷ் ராகவிக்காக ஜூஸ் போட்ட படி அவளிடம் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டு இருந்தான். சந்தோஷை புறக்கணித்த சித்தார்த், வேகமாக ஓடி சென்று ரித்திகாவின் அருகே நின்று கொண்டவன், அவளுடைய முகத்தை தன்னுடைய ஒரு கையால் பிடித்து... “நான் உன் கிட்ட சொன்ன மாதிரியே இன்னைக்கும் உன்ன பாக்க வந்துட்டேனே..!!" என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😍 😁
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 66;
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.