அத்தியாயம்: 63 விஷ்ணுவையும், ஷாலினியையும் பிரிக்க நினைக்கும் லாவண்யா (பார்ட் 2)
பிராத்தனா: “நீ எதுக்கு போய் அவன் கிட்ட பேசணும்...?? அதெல்லாம் தேவையில்லை." என்றாள் அவசரமான குரலில்.. 😒
லில்லி: “என்ன டி இன்னும் அவனோட பேர் கூட என்னான்னு தெரியல. அதுக்குள்ள பொசசிவ்னஸா." என்றாள், கிண்டலாக.🤣
பிராத்தனா: “அப்டி கூட இருக்கலாம். அந்த வீடியோல இருந்தவனும் இவனும் சேம் பர்சன்ன்னு தான் எனக்கு தோணுது. இவன் நம்ம காலேஜ்ல தான் படிக்கிறான்னு எனக்கு இத்தன நாளா தெரியல. அதான் இப்ப தெரிஞ்சிருச்சே..!! இவன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன். அந்த வீடியோல இருந்ததை விட இப்ப நேர்ல பாக்குறதுக்கு இவன் ஹேண்ட்சமா, மேன்லியா, இருக்கான். பாக்கலாம் இவனோட ஸ்டேட்டஸ் என் கூட மேட்ச் ஆச்சுன்னா இவன் எனக்கு தான்." என்று அங்கு விளையாடிக் கொண்டு இருந்தவனை பார்த்து சிரித்த படியே சொன்னாள்.😍 😁
லில்லி: “பார்றா..!!! ஒரு வழியா இந்த காலேஜ் ஓட குயினவே ஒருத்தன் இம்ப்ரஸ் பண்ணிட்டான் போல.. அவன் ரொம்ப லக்கி தான்." என்றாள். 😂 😂
அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த பிராத்தனா தன்னுடைய தோழிகளோடு கேண்டினிற்கு சென்றவள், வழக்கம்போல் அங்கே அமர்ந்து மத்திய உணவை சாப்பிடாமல் சில ஸ்னாக்ஸை மட்டும் வாங்கி கொண்டு மீண்டும் அந்த புட்பால் மேட்ச் நடந்து கொண்டு இருந்த இடத்திற்கு வந்தவள், பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். தன்னை கவனிப்பதையே ஒரு வேலையாக ஒருத்தி செய்து கொண்டு இருப்பதை அறியாத அவனோ வியர்த்து வடிய அங்கு ஃபுட்பால் விளையாடி கொண்டு இருந்தான்.
ஷாலினியின் வீட்டில்...
விஷ்ணு தங்கள் முன் வீசி எறிந்து விட்டு சென்ற அந்த பையையே சசியும், மாலதியும், வெறித்து பார்த்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அந்த பையை எடுத்து அதில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்ப்பதற்கு கூட மிகவும் பயமாக இருந்தது. விஷ்ணு கோபமாக பேசிவிட்டு சென்றாலும் அவனுடைய தோற்றத்தை நினைத்துப் பார்த்த மாலதி, அவன் டீசன்டான பையன் தான் அதனால் அதில் அவன் சொன்னது போல் பத்து லட்சம் பணம் தான் இருக்கும் என்று நினைத்து மகிழ்ந்தவள், அந்த பேக்கை எடுத்து அங்கு இருந்த ஒரு மேஜையின் மீது வைத்து அதை மெதுவாக திறந்தாள்.
மாலதியின் அருகே நின்று கொண்டு இருந்த சசி, அந்த பைக்குள் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தான். விஷ்ணு சொன்னது போலவே அந்த பையில் நிறைய பணம் கட்டுகள் இருந்தன. மாலதியும் சசியும் வாயை பிளந்து கொண்டு அதை பார்த்தவர்கள், விஷ்ணு சொல்லிவிட்டு சென்றதைப் போல் அதில் 10 லட்சம் சரியாக இருக்கிறதா என்று எண்ணி பார்த்தனர்.
அதில் நிஜமாகவே பத்து லட்சம் பணம் இருப்பதை மீண்டும் மீண்டும் எண்ணி பார்த்து உறுதி செய்து பேரானந்தம் அடைந்தனர். ஷாலினியால் அவர்களுக்கு இத்தனை பணம் கிடைக்கும் என்று அவர்கள் ஒரு போதும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இதை ஷாலினிக்காக தான் அவன் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான் என்று நினைக்கும் போதே.. மாலதிக்கு அந்த ஷாலினியை கட்டி பிடித்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது போல் ஒரே நிமிடத்தில் ஷாலினியின் மீது அவளுக்கு அத்தனை பாசம் பொங்கியது. 😍
சசியும் கிட்டத்தட்ட அதே மன நிலையில் தான் இருந்தான். இத்தனை நாள் தான் தண்டமாக சோறு போட்டு வளர்த்து கொண்டு இருக்கிறோம் என்று நினைத்து தன் மகள் மூலியமாக இப்போது இத்தனை லாபம் கிடைத்து இருக்கிறது என்று நினைத்தவன், தன்னை தானே நினைத்து பெருமிதம் கொண்டான்.
மாலதி: “நான் கூட யாரோ வெறும் பயன் மவன தான் அவ இழுத்துட்டு ஓடி போய்ட்டானு நினைச்சேன். ஆனாலும் அவ கைகாரி தான். புடிச்சாலும் நல்ல பெரிய புலியும் ரொம்ப தான் புடிச்சிருக்காயா உன் மக. அவளால உனக்கு வேல போனது கூட நல்ல விஷயம் தான். நீ சாகுற வரைக்கும் வேலைக்கு போயிருந்தா கூட உன்னால பத்து லட்ச ரூபாய் சம்பாதிச்சிட முடியாது." என்றாள், அந்த பண கட்டுகளை நுகர்ந்து பார்த்தபடியே.
சசி: ஆமாம் டி. அவள சும்மா வீட்ல வச்சு சோறு போடுறது தண்டம்ன்னு நினைச்சு தான் உன் தம்பிகரனுக்கு கட்டி தரலாம்னு நினைச்சேன். அவள பாறேன் ஒன்னும் தெரியாதவ மாதிரி இருந்துட்டு.. பெரிய பணக்காரனா பிடிச்சிட்டா. ஆனா இத அவன் உன் தம்பி ஹாஸ்பிடல் செலவுக்கு வச்சுக்கோங்கன்னு சொல்லில குடுத்துட்டு போனான்... இப்ப நீ நமக்கு இவ்ளோ காசு வந்து இருக்குன்னு உன் ஆத்தாகாரி கிட்ட சொன்னா பாதி காசு குடுன்னு பங்கு கேட்டாங்கன்னா என்ன பண்றது..??
மாலதி: என்ன தான் இருந்தாலும் அவன் என் தம்பி. அவன் இப்டி அடிபட்டு அர உசுரா ஹாஸ்பிடல்ல கிடக்கும் போது என்னால அவனுக்கு எதுவும் செய்யாம இருக்க முடியாது. எங்க அம்மா அவன கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் -ல கொண்டு போய் சேர்த்திருச்சு. அங்க அவனுக்கு பெருசா செலவு ஒன்னும் இருக்காது. அதனால பாவம் என் தம்பி தானே போனா போகுதுன்னு ஒரு அம்பதாயிரமோ, ஒரு லட்சமோ குடுத்திடலாம். ஆனா அது நம்ம கை காசுல இருந்து குடுத்ததா தான் இருக்கணுமே தவிர அந்த பையன் குடுத்த காசு தான் இதுன்னு அவனுக்கு தெரிய கூடாதுகங்க. அவனுக்கு மட்டும் நம்ம இவ்ளோ காசு வச்சிருக்கறது தெரிஞ்சுச்சுன்னா அந்த பொறுக்கி பையன் நம்ம கிட்ட இருந்து எல்லா காசையும் புடுங்கிக்குவான்.
சசி: “ஆமா டி. இந்த காசுக்காக அவன் நம்மள கொலை பண்ண கூட தயங்க மாட்டான்." என்றவனின் குரலில் சிறிதளவு பயம் எட்டிப் பார்த்தது.
மாலதி: “எனக்கு ஒன்னு தோணுதுங்க. ஆனா அத சொன்னா நீங்க கோவிச்சுக்க கூடாது." என்று இழுத்தாள்.
சசி: நான் இவ்ளோ காச கையில வாங்கி பாத்து பல வருஷம் ஆயிடுச்சு. அதனால நான் இப்போ இந்த பணம் வந்த சந்தோஷத்துல இருக்கேன். நீ எதுனாலும் சொல்லு நான் கோவப்பட மாட்டேன்.
மாலதி: அந்த ஷாலினிக்கு ஒரு பிரச்சனைன்னோனே இந்த பையன் 10 லட்ச ரூபாயை அப்படியே பத்து ரூபா மாதிரி எடுத்து சர்வ சாதாரணமா தூக்கி போட்டுட்டு போயிட்டானே...!! அப்ப நம்ம ஷாலினி பேர சொல்லியே அவன் கிட்ட எவ்ளோ பணம் கறக்க முடியும்..?? யோசிச்சு பாருங்க..!! நம்ம ஷாலினிய அவன் வீட்டுக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்டா நம்ம பெரிய பணக்கார வீட்டுக்கு சம்பந்தக்காரங்க ஆயிடலாம்.
அவள வச்சே இதே மாதிரி பெரிய பணக்கார வீட்ல நம்ம கௌசியையும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டா நமக்கு வாழ்க்கை முழுக்க பிரச்சனையே இல்லைங்க. அந்த ரவிய யோசிச்சு எல்லாம் நம்ப பயப்படவே தேவையில்லை. அவனுக்கு நம்ம ஷாலினிய கட்டி குடுக்குறதுல நமக்கு 10 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை.
சசி: நீ சொல்றது சரி தான். நானும் இத யோசிச்சு பாத்தேன். எங்க குடும்பமும் ஒரு காலத்துல நல்லா செழிப்பா வாழ்ந்த குடும்பம் தான். அந்த ஷாலினி சனியன் பொறந்த ராசியில தான் எல்லாமே போயிடுச்சு. இப்ப அவளே அது எல்லாத்தையும் எனக்கு சம்பாரிச்சு தரட்டும். அவ கூட நல்லா பேசி பழகி அவள கைக்குள்ள போட்டு வச்சுக்கணும். நான் அவ இப்ப எங்க தங்கி இருக்கான்னு விசாரிக்கிறேன்.
மாலதி: அப்படியே அந்த பையனோட குடும்பத்த பத்தியும் விசாரிங்க.
சசி: ஆமா...!! முதல்ல அவன் யாருன்னு தெரிஞ்சுக்கணும்.
சித்தார்த்தின் பள்ளியில்...
உணவு இடைவேளையில் விஷ்ணுவை பற்றி லாவண்யாவும், ஷாலினியும், பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
“நீயே அவன நல்ல பையன்னு சொல்ற.. அப்புறம் வேற என்ன பிரச்சனை..?? இந்த மாதிரி நல்ல பசங்க எல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் டி. ஒரு வேளை அவரே வந்து உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணா ஓகே -ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா செட்டில் ஆக வேண்டியது தானே..?? எத நினைச்சு நீ தயங்கிட்டு இருக்க..??" என்ற லாவண்யா, எதை எதையோ சொல்லி ஷாலினியின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.
ஷாலினி: “நான் தான் உன் கிட்ட சொன்னனே... நான் சொல்ல வரத கூட கேட்காம என்ன அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு சொல்லிக்கிட்டு இருந்த அந்த இன்ஸ்பெக்டர், விஷ்ணு அவனோட கார்ட காமிச்ச உடனே எதுவுமே சொல்லாம என்ன அங்க இருந்து போக விட்டுட்டாரு தெரியுமா..?? விஷ்ணு அவனோட அண்ணன் ஏதோ சின்ன பிசினஸ் தான் பண்றாருன்னு சொல்றான், ஆனா அதுக்கே அவன் ஒரு வார்த்த சொன்னா போலீஸ் கூட அத அப்படியே கேக்குறாங்க.
அப்ப அவங்க குடும்பத்து மேல வெளியில எவ்ளோ மரியாதை இருக்கணும்...?? இப்படி ஒரு ஃபேமிலி பேக்ரவுண்டை வச்சுக்கிட்டு இப்படி இங்க சாதாரணமா வேலை பாக்கிற அளவுக்கு விஷ்ணு சிம்பிளான ஆளா இருக்கலாம். அவனுக்காக இப்ப அவனோட அண்ணன் எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்காலாம். ஆனா நாளைக்கே நானும், விஷ்ணுவும், லவ் பண்றேன்னு போய் அவங்க முன்னாடி நின்னா அவங்க அண்ணனோ.. அந்த பேமிலியோ... எங்கள ஏத்துப்பாங்களா சொல்லு...??
அவங்க கேஸ்ட் பாக்க மாட்டாங்களா..?? இந்த காலத்துல கேஸ்ட் கூட ஒரு பிரச்சனை இல்லைன்னு வை; என்னோட ஃபேமிலி பேக்ரவுண்டும், பினான்சியல் ஸ்டேட்டஸும் பாப்பாங்கல்ல..?? என் கிட்ட சொல்லிக்கிற அளவுக்கு எதுவுமே இல்ல டி. எனக்கு இவ்ளோ செஞ்சிருக்கற விஷ்ணுவுக்கு நான் என்ன திருப்பி செய்ய போறேன்னு கூட எனக்கு தெரியல. முன்னாடி ஆச்சு எனக்கு பேருக்குன்னு ஒரு ஃபேமிலி இருந்துச்சு. இப்ப அது கூட இல்லை. சோ எந்த ஆங்கில்ல பாத்தாலும் விஷ்ணுவுக்கும் எனக்கும் செட் ஆகாது. ஹி டிசர்வ்ஸ் பெட்டர்." என்ற சோகமாக பேச தொடங்கியவள், ஒரு விரக்தி புன்னகையுடன் சொல்லி முடித்தாள். 😁 😁
இப்போது ஷாலினிக்கு இருக்கும் பிரச்சினை இன்பிரியாலிட்டி காம்ப்ளக்ஸ் தான் என்று லாவண்யா நன்கு புரிந்து கொண்டாள். ஷாலினி சொன்னதை கேட்டவுடன் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அதே மகிழ்ச்சியில் தன்னை அறியாமல், “ஆமா...!!! உனக்கும், விஷ்ணுவுக்கும், செட் ஆகாது." என்று அவளிடம் உளறிவிட்டாள் லாவண்யா. “பாரு..!! இப்ப உனக்கே இப்டி தோணுதுல.. எனக்கும், அவனுக்கும், செட் ஆகாதுன்னு... அப்புறம் அவங்க பேமிலி -ல எப்டி என்ன ஏத்துப்பாங்க..??" என்று சோகமான குரலில் கேட்டாள் ஷாலினி.😣
அப்போது தான் தான் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து தான் சத்தமாக பேசிவிட்டதே உணர்ந்த லாவண்யா, “சாரி ஷாலு பீல் பண்ணாத. நீ சொன்னத யோசிச்சு பாத்தேன். அது எனக்கும் சரின்னு தான் தோணுச்சு. அதனால தான் அப்படி சொல்லிட்டேன். நீயே ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்ட. இனிமே ஆச்சு கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இரு. உனக்கு செட் ஆகிற மாதிரி ஒருத்தன் வருவான். அப்ப அவன கல்யாணம் பண்ணிக்கோ. அதான் உன் லைஃப்க்கு நல்லது.
இந்த பணக்காரங்கள எல்லாம் நம்ம நம்ப முடியாது. அவங்க சோசியல் ஸ்டேட்டஸ் காக என்ன வேணாலும் செய்வாங்க. இன்னைக்கு உன்ன வேணும்னு நினைக்கிற விஷ்ணுவே.. நாளைக்கு அவங்க ஃபேமிலில உன்ன வேணான்னு விட்டுட்டு வர சொன்ன என்ன செய்வான்னு நமக்கு தெரியாது. சோ எடுத்த உடனே யாரையும் நம்பாத." என்று அக்கறையாக சொல்வதைப் போல் சொன்னவள், தன்னால் முடிந்த வரை ஏற்கனவே குழம்பி இருந்த ஷாலினியின் மனதை இன்னும் குழப்பி விட்டாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 63
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.