ஹலோ ஃபிரண்ட்ஸ்..
“சாபமாய் வந்த என் உயிரே” நாவல் நம்மளோட தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கோம். இப்பவே அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க ❤️ அடுத்தடுத்த நாவல்களின் அப்டேட்களை பெறுவதற்கு சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க. உங்களுடைய கருத்துக்களை மறக்காம கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க ⚡
நன்றி 🙏
அத்தியாயம் 60: கொஞ்சம் சண்டை நிறைய காதல் (part 1)
சித்தார்த்தின் பள்ளியில்....
உணவு இடைவேளையின் போது சோகமாக இருந்த சித்தார்த்தை பார்த்து கவலைபட்ட பூஜா, தான் கொண்டு வந்திருக்கும் பிரியாணியை அவனுக்கும் தருவதாக சொல்லி அவனை சாப்பிட அழைத்தாள். சித்தார்த்தும் சம்மதித்து அவளுடன் சாப்பிட சென்று அமர, அவன் சரியாக சாப்பிட தெரியாமல் உணவை சிந்தி கொண்டு இருக்க; பூஜாவே அவனுக்கு அந்த சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள்.
அப்போது காவல் நிலையத்திற்கு சென்ற விஷ்ணு இன்னும் திரும்பி வராததாலும், அவனிடம் இருந்து தனக்கு ஒரு காலோ, இல்லை ஒரு மெசேஜோ கூட வராததாலும், அவனை நினைத்து வருத்தப்பட்ட ஷாலினி, சோகமாக சிறிது நேரம் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தாள். ஸ்டாப் ரூமிற்கு வந்த லாவண்யா, அங்கு ஷாலினி இல்லாததால் அவளை அந்த பள்ளி வளாகம் முழுவதும் தேடிக் கொண்டு இருந்தாள். எதையோ பறி கொடுத்தவளை போல் சோகமாக அமர்ந்து இருந்த ஷாலினியை அவளை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் நலம் விசாரித்து விட்டு சென்றனர். அது அவளுடைய வேதனையை குறைப்பதற்கு பதிலாக இன்னும் அதிகப்படுத்தியது. 😒 😣 💔
அதனால் கடுப்பான ஷாலினி, அங்கே அமர்வதற்கு பதிலாக ஸ்டாப் ரூமிற்க்கே சென்றுவிடலாம் என்று நினைத்து.. ஸ்டாப் ரூமை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். அப்போது ஷாலினி தன் தலையை தொங்க போட்டுக் கொண்டு வருவதை கவனித்த லாவண்யா அவள் அருகே செல்ல, இப்போது தான் ஸ்டாப் ரூமில் சென்று ஷாலினியை தேடி விட்டு வந்த விஷ்ணு, அவளை கண்டவுடன் வேகமாக அவள் அருகே சென்றான்.
அதுவரை ஷாலினியை நோக்கி சென்று கொண்டு இருந்த லாவன்யாவின் கால்கள் விஷ்ணுவும் அவளை நோக்கி செல்வதை பார்த்தவுடன் தானாக நின்று விட்டது. அவளுக்கு விஷ்ணுவின் மீது இருக்கும் அன்பினாலும், போசஸ்ஸிவ்னசின் காரணமாகவும், அவர்களுடைய நெருக்கம் அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் இருந்த இடத்திலேயே அப்படியே நின்றவள், அமைதியாக அவர்களை கவனித்தாள்.
விஷ்ணுவை பார்த்தவுடன் வேகமாக அவன் அருகே சென்ற ஷாலினி, “என்னாச்சு..!! உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..??" என்றாள் மூச்சு வாங்கிய படி. விஷ்ணுவின் முகம் உணர்ச்சி என்று காணப்பட்டது. எப்போதும் புன்னகை முகத்துடன் இருக்கும் விஷ்ணுவை அப்படி பார்ப்பது ஷாலினி -க்கு ஏதோ போல் இருந்தது.
விஷ்ணு “அதுலாம் ஒரு பிரச்சனையும் இல்லை. இனிமே அந்த குடும்பம் நீ இருக்கிற பக்கமே வர மாட்டாங்க. நான் கிளம்பும்போதே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீ பயப்படாதேன்னு சொல்லிட்டு தானே போனேன்..?? அப்புறம் ஏன் மூஞ்சிய இப்படி வச்சிருக்க..?? உன் ஃப்பேச யார் பாத்தாலும் உடனே சொல்லிடுவாங்க உனக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்குன்னு. முதல்ல இந்த ரியாக்ஷனா மாத்து." என்றவனின் வார்த்தைகள் அக்கறையாக்கும், அன்பகவும், இருந்தாலும்.. அவன் அதை கடுப்பான குரலில் சொன்னான். 😒
தனக்கு இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்த ஷாலினியின் மனம் நிம்மதி அடைந்தாலும், விஷ்ணுவின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்து கொண்டவளின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. ஷாலினியின் கண்களை கூர்மையாக பார்த்த விஷ்ணு, “இந்தா..!! இந்த பைலை பத்திரமா வச்சுக்கோ." என்றவன், அவள் முன் ஒரு பைலை நீட்ட.. அதை ஷாலினி வாங்கியவுடன் அவளை திரும்பி கூட பார்க்காமல் அங்கு இருந்து சென்று விட்டான் விஷ்ணு.
செல்பவனின் முதுகையே குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தாள் ஷாலினி. இவன் ஏன் திடீரென்று இப்படி நடந்து கொள்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை இந்த பிரச்சினையில் இருந்து தன்னை மீட்பதற்காக அவன் மிகவும் சிரமப்பட்டு இருக்க கூடுமோ...!! அதனால் தான் இது அனைத்தும் தன்னால் தானே நடந்தது என்று நினைத்து தன் மீது கோபமாக இருக்கிறான் போல என்று அவளே தனக்குள் கேள்வியும் கேட்டு அவளே பதிலும் சொல்லி கொண்டாள்.
இப்படி யோசித்து பார்த்த ஷாலினிக்கு இப்போது விஷ்ணுவின் மீது கோபம் தான் வந்தது. அதனால்... “இப்ப எதுக்கு இவன் தேவை இல்லாம என் கிட்ட இப்படி மூஞ்சிய காட்டுறான்..?? நான் தான் அப்பவே இது என்னோட பிரச்சனை நானே பாத்துமக்கிறேன்னு சொன்னேன்ல..?? அப்புறம் இவன் தான் பெரிய இவனாட்டம் இது என்னால வந்த பிரச்சனை நானே சரி பண்றேன்னுட்டு போனான்..!! இவன் தானே சும்மா இருந்த அவங்கள இவன் அண்ணன வச்சு பழிவாங்குறேன்னு சொறிஞ்சு விட்டுட்டான். அதனால தானே அவங்க என் மேல கம்ப்ளைன்ட் குடுத்தாங்க..?? இவன் சும்மா இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதே..!! பண்றத எல்லாம் இவன் பண்ணிட்டு இப்ப ஏதுக்கு இவன் என் மேல கோவிச்சுக்கிறான்..?? நான் தான் நியாயமா இவன் மேல கோவமா இருக்கணும். கரெக்ட் ஷலைனி, நம்ம அவன் மேல கோவமா தான் இருக்கணும். இப்ப நம்ம இவன எதுவும் சொல்லாம இப்படியே விட்டுட்டா அது அவன என்கரேஜ் பண்ற மாதிரி இருக்கும்." என்று நினைத்தாள், அப்போது அவள் அருகே வந்தால் லாவண்யா; அவளை அழைக்க தன்னுடைய சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள் ஷாலினி.
லாவண்யா: “இவ்ளோ சீரியஸா ரெண்டு பேரும் என்ன டி பேசிட்டு இருந்தீங்க..?? இந்த பைல்ல அவர் தானே உன்ட குடுத்துட்டு போனாரு..!! என்ன பைல் இது..??" என்றாள் ஷாலினியின் கையில் இருந்த அந்த பைலை சுட்டி காட்டினாள்.
இந்த விஷயத்தை பற்றி இங்கு பேசினால் அது சரியாக இருக்காது என்று நினைத்த ஷாலினி, “இது என்ன பைல்னு எனக்கு தெரியாது. ஆனா இம்பார்டன்ட் ஃபைல்ன்னு நினைக்கிறேன். நம்ம ஸ்டாப் ரூமுக்கு போய் இதெல்லாம் பேசிக்கலாம்." என்றவள் லாவண்யாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள். ஷாலினி இழுத்த இழுப்பிற்கு அவள் பின்னே சென்று கொண்டு இருந்த லாவண்யா, “இங்க என்ன டி நடக்குது..?? எனக்கு ஒண்ணுமே புரியல. மார்னிங் தானே அப்படியே ரெண்டு பேரும் ஜாலியா பேசிட்டு இருந்தீங்க. இப்ப என்ன ஆச்சுன்னு இவ்ளோ சீரியஸா இருக்கீங்க..??" என்றாள் குழப்பமாக. 🙄
ஷாலினி: “இப்ப எதுக்கு கத்துற..?? நம்மளை யாராவது நோட்டிஸ் பண்ணி இப்ப என்ன பிரச்சனைன்னு கேட்கணுமா..?? அமைதியா வா. உன் கிட்ட நான் எல்லாத்தையும் க்ளியரியா சொல்றேன்." என்றவள், ஸ்டாப் ரூமிற்கு லாவண்யாவுடன் வந்து அதிக ஆட்கள் இல்லாத இடத்தில் அமர்ந்தாள். அவளுக்கு லாவண்யாவிற்கு பதில் சொல்வதை விட விஷ்ணு கொடுத்த பைலில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருந்தது. அதனால் அந்த பைலை பிரித்து அதை பார்க்க தொடங்கினாள்.
அந்த பைலில் விஷ்ணுவிடம் இன்ஸ்பெக்டர் கொடுத்த இரண்டு காப்பிகள் இருந்தது. அதில் ஒன்று ஷாலினியின் மீது சசி கொடுத்த கம்ப்ளைன்ட்டை அவன் வாபஸ் வாங்கியதற்கான காப்பியும், மற்றொன்றில் ஷாலினிக்கும் தங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை, அவள் மேஜர் என்பதால் அவளுடைய வாழ்க்கையை அவளே பார்த்துக் கொள்ளலாம் என்றும், அவள் மீது இருந்த வன்மத்தின் காரணமாக தான் நான் அவள் மீது பொய் புகார் கொடுத்தேன் என்றும் சசி எழுதி கையெழுத்து போட்டு இருந்த காப்பியும் இருந்தது. அதைப் பார்த்த ஷாலினிக்கு இனி அவர்களால் தனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நினைக்கும் போது அது அவளுக்கு நிம்மதியாகவும், ஆறுதலாகவும், இருந்தது. 😊
விஷ்ணு தேவை இல்லாமல் எதையெதையோ செய்து இந்த பிரச்சனையை இழுத்து வைத்து விட்டான் என்று அவன் மீது அவளுக்கு கோபம் இருந்தாலும், அவன் அப்படி செய்ததால் தான் இன்று அவள் முழுமையாக அவர்களிடம் இருந்து விடுதலை பெற்று விட்டதாக ஷாலினிக்கு தோன்றியது. அதனால் இப்போதே இதற்காக அவனிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தாள் ஷாலினி.
இதுவரை சோகமாக இருந்த ஷாலினியின் முகம் இப்போது அந்த பைலை பார்த்தவுடன் இப்படி பிரகாசமானதை கவனித்த லாவண்யா, அப்படி அந்த பைலில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பைலை ஷாலினியிடம் இருந்து வாங்கி பார்த்தாள். அதில் இருந்தவற்றை படித்த லாபன்யாவின் முகம் கலவையான உணர்ச்சிகளால் காணப்பட்டது. அதில் இருந்த தேதியை கவனித்தாள் லாவண்யா. அது இன்றைய தேதி தான் என்று சரி பார்த்து உறுதி செய்தவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது; ஷாலினியின் அர்ரெஸ்ட் மற்றும் இந்த கேஸ் வாபஸ் இரண்டும் ஒரே நாளில் நடந்து இருக்கிறது. ஏனென்றால் என்று ஷாலினியை யாரும் அர்ரெஸ்ட் செய்யவில்லை என்று அவளுக்கு நன்றாக தெரியும்.
அந்த பைலையும், விஷ்ணுவையும், கனெக்ட் செய்து பார்த்தவள்; என்ன நடந்து இருக்கும் என்று தோராயமாக யூகித்தாள். இருந்தாலும் ஷாலினியிடம் இருந்து என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ள நினைத்தவள், “என்ன டி இங்க இவ்ளோ நடந்து இருக்கு..!! நான் இங்கயே தான் இருந்து இருக்கேன். எனக்கு எதுவுமே தெரியல. நீ ஏன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல..?? நீ விஷ்ணு கூட பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குறான்ல..??" என்று கோபமாக கேட்டாள். 😒
ஷாலினி: “உன் கிட்ட எதையும் சொல்ல கூடாதுன்னு நினைச்சா இப்ப மட்டும் நான் ஏன் இதையெல்லாம் சொல்ல போறேன்...!!! விஷ்ணு அப்பவே சொன்னான் யார் கிட்டையும் சொல்லாதன்னு. நான் உன்ன என் ஃபிரிண்ட்ன்னு நினைச்சதுனால தான் உன் கிட்ட சொன்னேன். விஷ்ணுவ விட நீ தான் எனக்கு க்ளோஸ். நீயே இப்டி சொல்றது எனக்கு கஷ்டமா இருக்கு டி." என்றாள், உண்மையான வருத்தத்துடன். 🥺
ஷாலினி சொன்னதை கேட்ட லாவண்யா சமாதானம் அடைந்தாள். ஒரு பக்கம் விஷ்ணு அவளுக்கு உதவியதை நினைத்துப் பார்த்தால் விஷ்ணு எவ்வளவு நல்லவனாக இருக்கிறான் என்று அவளுக்கு தோன்றினாலும், இன்னொரு பக்கம் இதை அனைத்தையும் அவன் ஏன் ஷாலினிக்கு செய்கிறான்..?? ஒருவேளை அவன் இவளை காதலிக்கிறானோ என்று நினைத்த லாவண்யாவிற்கு மனம் வலித்தது. ஒரு வேளை விஷ்ணுவே ஷாலினியை காதலித்தாலும் ஷாலினி அவனை காதலிக்க வாய்ப்பில்லை என்று நினைத்த லாவண்யா, அப்படி நடந்தாலும் அதை நடக்க விட கூடாது என்று மனதிற்குள் இன்ஸ்டன்டாக ஒரு திட்டம் போட்டவள், அதை ஷாலினியின் வாயில் இருந்தே வர வைக்க விரும்பி அவளிடம் பேச தொட்ங்கினாள்.
-நேசம் தெடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 60
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.