அத்தியாயம் 55: சந்தோஷை நண்பனாக ஏற்று கொண்ட ரித்திகா
வருண்: “யாரோ என்னோட வீக்னெஸ்ச தெரிஞ்சுக்கறதுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்டடா இருக்காங்க." என்று அங்கே இருந்தவர்களை கூர்மையாக பார்த்த படி சொன்னான்.
வருண் ஏன் இப்படி சொல்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாத அவர்கள், அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக அவனை பார்த்து கொண்டு இருந்தனர். 😳
வருண்: நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சைக்காட்ரிஸ்ட் அருண் மீட் பண்ணினேன். எனக்கு இருக்கிற சில மெண்டல் இஸ்யூஸ் பத்தி டிஸ்கஸ் பண்றதுக்காக. அருண் என்ன ஆபீஸ்ல மீட் பண்ணிட்டு இங்க இருந்து வெளில போன உடனே அவருக்கு ஒரு கால் வந்திருக்கு. அவரோட ரெண்டு வயசு குழந்தை தியாவை டே கேர்ல இருந்து கடத்தி இருக்கிறதா சொல்லி நான் சொல்ற இடத்துக்கு நீ தனியா வந்தா தான் உன் குழந்தைய விடுவேன்னு அவர் கிட்ட சொல்லி இருக்காங்க.
அவரும் அந்த கிட்னாபர் சொன்ன இடத்துக்கு போயிருக்காரு. அவர ஏதோ ஒரு இருட்டு ரூம்குள்ள போட்டு லாக் பண்ணி வச்சு அவர் என்ன மீட் பண்றதுக்காக ஆபீஸ் வந்தப்ப நான் எனக்கு என்ன பிரச்சனைன்னு அவர் கிட்ட சொன்னேன்னு கேட்டு மிரட்டி இருக்காங்க. அவர் சொல்லாததுனால அவரோட குழந்தைய கொன்றுவேன்னு மிரட்டி என்னோட மெண்டல் ஹெல்த்த பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அவரோட குழந்தைய அங்க இருந்து சேஃபா வீட்டுக்கு கூட்டிட்டு போனதுக்கு அப்புறமா அந்த டாக்டர் எனக்கு கால் பண்ணி இத இன்போர்ம் பண்ணாரு.
ஹரி: அது எப்படி வருண் யாரோ ஒருத்தர் மிரட்டுனா உடனே உண்மையை சொல்லிருவானா அவன்..?? அவன சும்மாவா விட்ட.. ?? அவன் பொண்ண கடத்தி வச்சுட்டு மிரட்டுனா நம்ம கிட்ட ஹெல்ப் கேட்டு இருக்கலாம்ல்ல... நம்ம ஏதாவது பண்ணி காப்பாத்தி இருப்போமே.
வருண்: ஹரியை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன், “அவர் மேல எந்த தப்பும் இல்ல. நான் ஒரு வேளை அவர் இடத்துல இருந்திருந்தாலும் இதே தான் பண்ணி இருப்பேன். ஒரு அப்பாவோட இடத்துல இருந்து யோசிச்சு பாத்தா தான் அது புரியும். அவர் நமக்கு ஜெனுவனா இருக்கணும்னு நினைச்சதுனால தான் இத பத்தி நம்ம கிட்ட சொல்லி இருக்காரு. அத நம்ம ரெஸ்பெக்ட் பண்ணனும்." என்றான்.
ஹரி: ஓகே தான். பட் யார் இத எல்லாம் பண்ணுதுன்னு தெரிஞ்சுதா...??
வருண்: விசாரிக்க சொல்லி இருக்கேன். எனக்கு ஒருத்தன் மேல தான் டவுட்டா இருக்கு. ஆனா கன்ஃபார்ம் ஆகட்டும்னு வெயிட் பண்றேன்.
ஹரி: “பிரவீன் மேல தானே சந்தேகப்படுற... அவன தவிர நம்ம குடும்பத்துக்குட மோதிரத்துக்கு வேற எவனுக்கும் தைரியம் இருக்காது. ஜான்வி அண்ணி இறந்து போனப்பையே அவன் மேல தானே நமக்கு சந்தேகம் இருந்துச்சு.. நீ தான் ஸ்சாலிடா ப்ரூப் கிடைக்கட்டும்னு இத்தன நாள் அமைதியா இருந்துட்ட. அப்பவே அவன போட்டு தள்ளி இருந்தா இப்ப இவன் இத எல்லாம் பண்ணிட்டு இருப்பானா...?? நீ அவன விட்டு வச்சு ரொம்ப தப்பு பண்ற வருண்" என்று காட்டமாக சொன்னான். 😒
வருண்: “செத்து போனது என்னோட ஜான்வி டா. நான் எப்டி அவன சும்மா விடுவேன்..??? அவன் தான் பண்ணி இருப்பான்னு நம்ம மனசுக்கு தெரியுது. ஆனா அவனுக்கு எதிரா எந்த ப்ரூப்-ம் மாட்ட மாட்டேங்குதே... அவன் மட்டும் தான் நம்ம எனிமின்னு நம்ம முடிவு பண்ணிட்டா வேற யாராவது புதுசா ஒரு எதிரி வந்தா கூட அத நம்ம கவனிக்காம விட்டுறுவோம். நம்மளோட எனிமி யாருன்னு நமக்கு கரெக்டா தெரிகிற வரைக்கும் நம்ம சேப்பா இருக்கிறது எப்டின்னு மட்டும் தான் பாக்கணும். இதுக்கு எல்லாம் யார் காரணம்ன்னு மட்டும் எனக்கு தெரியட்டும். அவனுக்கு என் கையில தான் சாவு." என்றவன் பாலாஜியை பார்த்து, “அருணோட பொண்ண கடத்தி வச்சு இருந்த ஸ்பாட்ல இப்ப யாருமே இல்ல. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அங்க எந்தெந்த மொபைல் நம்பர் ஆக்டிவா இருந்துச்சுன்னு கண்டுபிடிங்க." என்றான்.
பாலாஜி: “ஆல்ரெடி விசாரிக்க சொல்லிட்டேன் சார். இன்னைக்குள்ள அவங்க யாருன்னு கண்டு பிடிச்சு நான் உங்க முன்னாடி கொண்டு வந்து நிருத்துறேன்." என்றான் கம்பீரமாக. 😎
வருண்: ஒகே. உங்க சைடுல இருந்து வேற ஏதாவது சொல்லனும்னா சொல்லுங்க. ஏதாவது வினோதமா நடந்துச்சா..?? அந்த டாக்டர் நம்ப ஆபீஸ்க்கு வந்துட்டு வெளியில போன உடனே அவரோட பொண்ண கடத்திட்டாங்கன்னு அவருக்கு கால் வந்து இருக்கு. அப்ப நான் டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்குனது அவனுக்கு தெரிஞ்சு இருக்கு. அதனால டாக்டர் இங்கே வரதுக்குள்ளயே அவரோட பொண்ண கடத்திட்டான். சோ அந்த இன்ஃபர்மேஷன் எப்படி வெளியில போச்சு..??
பாலாஜி: சார்..!! நீங்க டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்குனது உங்க கூடவே இருக்க சிவாவுக்கு கூட தெரியாது. அப்ப இந்த விஷயம் டாக்டர் சைடுல இருந்து தான் லீக் ஆகி இருக்கும். எனக்கு அந்த டாக்டர் மேலயும் சந்தேகமா தான் சார் இருக்கு. எப்டியும் நம்ம கண்டு பிடிச்சுடுவோம்ன்னு அவர் மேல சந்தேகம் வர கூடாதுன்னு அவரே கூட தானா வந்து உண்மைய உங்க கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல... நான் அவரையும் சஸ்பெக்ட் லிஸ்ட்ல தான் வச்சு இருக்கேன்.
வருண்: “ஓகே." என்றவன் ஆதித்யாவை பார்த்து, “நார்மலா இருக்கிறதை விட செக்யூரிட்டியை கொஞ்சம் டைப் பண்ணுங்க. முக்கியமா என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் 24/7 சர்வைனன்ஸ்ல தான் இருக்கணும்." என்றான்.
ஆதித்யா: “அதெல்லாம் பண்ணிடலாம் சார். ஆனா ஒரு ரெக்குவஸ்ட்..." என்று இழுத்தான்.
வருண்: “என்ன..???" என்றான் கம்பீரமான குரலில்... 😎
ஆதித்யா: “மத்த எல்லாத்தையும் சர்பேலன்ஸில வைக்கிறது ஒன்னும் பிரச்சனை இல்ல சார். ஆனா உங்க பேமிலி மெம்பர்ஸை பாத்துக்கறது தான் எனக்கு பெரிய பிரச்சினையா இருக்கு. விஷ்ணு சார் திடீர்னு லோகல் ஆன ஏரியாகுள்ள பைக்ல சுத்திட்டு இருக்காரு. நீங்களும், ஹரி சாரும், பாடிகார்ட்ஸ் இல்லாம திடீர் திடீர்னு கிளம்பி எங்கையாவது போயிடுறீங்க... உங்கள ஃபாலோ பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு." என்று பயத்தில் பாதி வார்த்தையை மென்று விழுங்கி வேறு வழி இன்றி சொல்லி முடித்தான்.
வருணற்கு ஆதித்யா ஏன் இப்படி சொல்கிறான் என்று புரிந்தது. இது ஆதித்யாவிற்கு சிரமமான பணி என்பதை விட இது அவர்களுடைய குடும்பத்திற்கு மிகவும் ஆபத்தான செயல் என்பதை அவன் அறிந்து இருந்தாலும்... அவனை முறைத்து பார்த்தவன், “உங்களோட வேலையே அது தான் மிஸ்டர் ஆதித்யா..!!" என்றான். 😒 🤨
ஹரி: அதானே....!!! சேஃப்டி முக்கியம் தான். அதுக்காக எங்களுக்குன்னு ஒரு பர்சனல் லைஃப் இருக்க கூடாதா..?? ஏற்கனவே நான் எங்க போனாலும் ஸ்பை வச்சு கண்டு புடிக்கிறீங்க. இதுல நான் சொல்லிட்டு போகாதது தான் பிரச்சனையா..??? அதான் நீ திரும்ப ஊருக்கு வந்துட்டில.. பேசாம நீயும் வந்து நம்ம வீட்டிலேயே தங்கிடு.
வருண்: ஆமா அதி நீ வீட்டுக்கு வந்துரு.
அவர்கள் சொன்னதற்கு ஆதி சம்மதம் சொல்ல, பின் அவர்கள் இருவரும் ஆஃபீஸ் சம்பந்தமான பிற விசயங்களை பற்றி பேசிவிட்டு அந்த மீட்டிங்கை இருந்து கலைந்தார்கள். ஹரி அந்த மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே வரும்போது செண்பகத்திடம் இருந்து அவனுக்கு கால் வந்தது. அந்த காலை அட்டென்ட் செய்யாத ஹரி, மொபைலை சைலன்டில் போட்டு விட்டான். இதோடு சேர்ந்து செண்பகத்திடம் இருந்து அவனுக்கு ஏராளமான தவறிய அழைப்புகள் வந்து இருந்தன. செண்பகம் எதை பற்றி பேச போகிறாள் என்று தெரிந்ததால் தான் ஹரி அந்த கால் ஐ அட்டென்ட் செய்யவில்லை.
ஹரி தன்னுடைய கால் ஐ அட்டென்ட் செய்யாததால் செண்பகம் அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தாள். அந்த மெசேஜில்... “என்ன டா நீ என் கால் ஐ அட்டென்ட் பண்ணலைன்னா உன்ன நான் அப்படியே சும்மா விட்டுவிடுவேன்னு நினைச்சியா..?? நீ எங்க இருந்தாலும் சரி. உடனே கிளம்பி வீட்டுக்கு வா. இப்ப நீ மட்டும் வீட்டுக்கு வரலைன்னா நான் வீட்டை விட்டு கிளம்பி வெளியில போயிருவேன். உனக்கு அரை மணி நேரம் தான் டைம்." என்று அதில் இருந்தது.
அதை படித்து கடுப்பான ஹரி, “இந்த அம்மாவுக்கு எப்ப பாத்தாலும் நம்மளைய ப்ளாக் மெயில் பண்றதே வேலையா போயிருச்சு." என்று நினைத்தவன் தன்னுடைய இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக வருணின் ஆபீஸ் ரூம் இருக்கும் தளத்திற்கு சென்று அவனிடம் பேசினான். நடந்தவற்றை ஹரியிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்ட வருண், “வீட்டுக்கு தானே வர சொன்னாங்க... பரவால்ல. போற வழியில அப்படியே ஆராதனாவையும் கையோட கூட்டிட்டு போயிடலாம்." என்றான்.
ஹரி: என்ன டா சொல்ற...!!! ஆராதனாவ இப்பவே கூட்டிட்டு போறதா..??? அம்மா என் மேல ஏற்கனவே செம காண்டுல இருக்காங்க. இப்ப இன்னும் அவங்க கோபத்தை ஏத்தி விடுற மாதிரி அவளையும் கூட்டிட்டு போனா எப்டி அவள வீட்ல சேத்துப்பாங்க..??
வருண்: அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நம்ம அவள எப்ப கூட்டிட்டு போனாலும் பிரச்சனை வர தானே போகுது... அது இனிக்காவே இருக்கட்டும். நாளைக்கு நம்ம சென்னை பிரான்சுக்கு நான் விசிட் போறேன். நான் போயிட்டு ரிட்டன் வர லேட் ஆகும். அது வரைக்கும் ஆராதனாவ ஹாஸ்பிடல்லையே வச்சுக்கிட்டு இருக்க முடியாது.
ஹரி: “சரி..!!! நீ ஏதோ முடிவு பண்ணிட்ட. வா நம்ம ஆரதனாவ கூட்டிட்டு சீக்கிரம் போலாம். அவங்க சொன்ன டைம்க்குள்ள நம்ம வீட்டுக்கு போகலைன்னா அம்மா வீட்டை விட்டு வெளிய போனாலும் போயிடுவாங்க." என்று சொல்ல ஹரியை அழைத்து கொண்டு ஆபீஸில் இருந்து கிளம்பிய வருண், செல்லும் வழியில் ஹாஸ்பிடலில் இருந்த ஆராதனாவையும் அங்கு இருந்து அழைத்து கொண்டு தங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தான்.
நாராயணன் மருத்துவமனையில்...
தூக்கத்தில் இருந்து எழுந்த ரித்திகா, தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொன்னதால் வெளியே நின்று கொண்டு இருந்த ரேவதியை உள்ளே வருமாறு அழைத்தாள் நர்ஸ். ரித்திகாவிற்கு துணையாக இருந்த ரேவதி, அவளுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ரித்திகாவின் அறையில் இருந்து வெளியே வந்த ரேவதியை ஆர்வமாக பார்த்த சந்தோஷ், தான் ரித்திகாவை இப்போது சென்று சந்திக்கலாமா என்று பாசமாக கேட்டான்.
ரித்திகா இப்போது தான் ரேவதியிடம் தனக்கு ஹாஸ்பிடலில் இருப்பது மிகவும் போர் அடிப்பதாக சொல்லி இருந்ததால் இப்போது சந்தோஷ் உள்ளே சென்றால் அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருப்பார்களே என்று நினைத்த ரேவதி சந்தோஷமாக அவனை உள்ளே அனுப்பி வைத்தாள். ரித்திகாவை பார்க்க போகும் மகிழ்ச்சியில் ஆசையாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் சந்தோஷ்.
ரித்திகா சந்தோசோடு அதிகம் பேசி பழகி இருக்கவில்லை அதனால் திடீரென்று அவனை உள்ளே பார்த்தவுடன் சிறிது சங்கடமாக உணர்ந்தவள், வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவனை வரவேற்றாள் . ரித்திகாவோடு பேச போகும் ஆர்வத்தில் இருந்த சந்தோஷ், ரித்திகாவின் முக மாற்றங்களை கவனிக்கவில்லை. அங்கு ஓரமாக கிடந்த ஒரு சேரை எடுத்து போட்டு ரித்திகாவின் பெட்டியின் அருகே அமர்ந்த சந்தோஷ், அவளை பார்த்து பேச தொடங்கினான்.
சந்தோஷ்: எப்படி இருக்கீங்க ரித்திகா..??
ரித்திகா: நான் நல்லா இருக்கேன். நீங்க சந்தோஷ் தானே..??
சந்தோஷ்: “சந்தோஷ்ன்ற என் பேர நீ சொல்லி கேட்கும் போது.. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ரித்திகா..!!" என்று நினைத்தவன், “ஆமா..!! என் பேரு சந்தோஷ் தான்." என்றான்.
ரித்திகா: “அம்மா சொன்னாங்க நீங்க எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிங்கன்னு.. தேங்க்ஸ்.” என்றாள் நன்றி உணர்வுடன். 😊
சந்தோஷ்: “நமக்குள்ள எதுக்குங்க தேங்க்ஸ் எல்லாம்.. உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு நான் செய்ய போறேன்.!!" என்றான் சிறு வெட்கத்துடன். ☺️
ரித்திகா: அவன் இப்படி சொல்லி விட்ட பின் பதிலுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்து சமாளித்து விட்டு பேச தொடங்கியவள். “நீங்க என்ன பண்றிங்கேட்டாள்.என்று கேட்டாள்.
சந்தோஷ்: நான் ஒரு வி.ஐ.பி.-ங்க. இப்ப தான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். நல்ல வேலையா தேடிட்டு இருக்கேன். எனக்கு பெங்களூர்ல இருந்து கூட நல்ல ஜாப் ஆஃபர் வந்துச்சு. அம்மாவையும், பாட்டியையும் இங்க தனியா விட்டுட்டு எனக்கு அங்க போறதுக்கு மனசு இல்ல அதான் போகல.
ரித்திகா: “இங்கயே உங்களுக்கு நல்ல ஜாப் கிடைக்கும். பீல் பண்ணாதீங்க." என்றவள், சிறுது இடைவேளை விட்டு “ஆமா உங்க ஏஜ் என்ன..??" என்று கேட்டாள்.
சந்தோஷ்: தன்னை போல் ரித்திகாவிற்கும் தன் மீது ஈர்ப்பு இருக்கிறது போல என்று நினைத்தவன் அவசரமான குரலில்... “எனக்கு 22. உங்களுக்கு...???" என்று கேட்டான் ஆர்வமாக.. 😍
ரித்திகா: “ஐ அம் 24." என்று சிரித்து கொண்டே சொன்னவள்; சந்தோஷ்க்கு தன்னை விட வயது குறைவு என்பதால் இனி அவனை தன்னுடைய தம்பியாக நினைத்து தயக்கம் இன்றி பழகலாம் என்று நினைத்தவள் நிம்மதியாக உணர்ந்தாள். 😊
ரித்திகா தனக்கு 24 வயதாகிறது என்று சொன்னதை கேட்டவுடன் சந்தோஷின் குட்டி இதயம் குட்டி குட்டியாக உடைந்து விட்டது. 💔 இன்னும் ரித்திகாவிற்கு தன்னுடைய வயதை விட அதிகமான வயது இருக்கும் என்று அவனால் நம்ப முடியவில்லை. ரித்திகா தன்னிடம் பொய் சொல்லி விளையாடுகிறாளோ என்று தான் அவனுக்கு தோன்றியது. ஏனென்றால் ரித்திகாவின் தோற்றத்தை பார்த்தால் அவளுக்கு அத்தனை வயது ஆகிறது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். உயரத்திலும் சரி, உருவத்திலும் சரி, சிறிய பெண்ணாக இருக்கும் ரித்திகா இப்போது தான் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு இருக்கும் பள்ளி மாணவியை போல் தான் இருப்பாள்.
சிறிது நேரம் ரித்திகாவின் முகத்தை பார்த்த படி அமைதியாக இருந்த சந்தோஷ் யோசித்து பார்த்தான். “இப்ப என்ன அவளுக்கு நம்மள விட ரெண்டு வயசு அதிகம். சோ வாட்..?? இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம் சந்தோஷ். நமக்கு இவள புடிச்சிருக்க மாதிரி.. இவளுக்கும் நம்மள புடிச்சிருந்துச்சுன்னா... வேற என்ன பிரச்சனை வந்துட போது..!! முதல்ல நம்ப அந்த கௌத்தம ஓவர் டேக் பண்ணி இவ மனசுல இடம் புடிக்கணும். அத பத்தி மட்டும் தான் இப்ப நம்ம யோசிக்கணும்." என்று நினைத்தவன், ரித்திகா இடம் மீண்டும் சகஜமாக பேச தொடங்கினான்.
சந்தோஷ் தன்னை விட வயதில் சிறியவன் என்று தெரிந்து கொண்ட ரித்திகாவும் அவனிடம் தயக்கம் இன்றி பேசினாள். சந்தோஷ் ரித்திகாவிடம் நீங்க.. வாங்க.. போங்க.. என்று மரியாதையாக பேசிக் கொண்டு இருக்க அதை கவனித்த ரித்திகா, “சந்தோஷ் நீ என்ன அக்கான்னு கூப்பிடலைன்னா கூட பரவால்ல. நீங்க வாங்கன்னு இவ்ளோ ஃபார்முலா பேச தேவை இல்லை. ரித்திகான்னே கூப்பிடு நோ ப்ராப்ளம்." என்று நட்பாக புன்னகைத்த படி சொன்னாள். 😁
ரித்திகா தன்னை ஒரு சின்ன பையனாக நினைத்து தான் பேசி கொண்டு இருக்கிறாளோ என்று நினைத்த சந்தோஷ்க்கு மீண்டும் ஒரு மினி ஹார்ட் அட்டாக் வந்து விட்டு சென்றது. 💔 அவளுடைய இந்த எண்ணத்தை உடனே மாற்ற வேண்டும் என்று நினைத்தவன், “ஆமா நமக்குள்ள எதுக்கு மரியாதை வேண்டி கிடக்கு...!! நீ எனக்கு பிரண்டு தானே..!!" என்று சொன்ன சந்தோஷ்; இதன் மூலம் நீ எனக்கு சகோதரி அல்ல. நான் உன்னை அப்படி பார்க்கவில்லை என்று அவளிடம் சொல்லாமல் சொன்னான்.
அவன் கொடுத்த குறிப்பை சரியாக புரிந்து கொள்ளாத ரித்திகா, “என் சின்ன பசங்க கூட எல்லாம் ஃபிரண்டா இருக்க கூடாதா என்ன..??" என்று நினைத்தவள், “ஆமா..!! நீ என் பிரண்டு தான்." என்றாள் அப்பாவியாக. தன் மனதை புரிந்து கொண்டதால் தான் இவள் இப்படி தன்னை சமாதானப்படுத்துவதற்காக சொல்கிறாள் போல என்று நினைத்த சந்தோஷ், உள்ளுக்குள் மகிழ்ந்தான்.
காவல் நிலையத்தில்...
தன்னுடைய பைக்கில் சாதாரணமாக வந்து இறங்கிய விஷ்ணுவை ராஜ மரியாதையோடு வரவேற்ற எஸ்.ஐ. தன்னுடைய அறையில் அவனை அமர வைத்து விட்டு வெளியே நின்று கொண்டு இருந்த சசியையும், மாலதியையும், உள்ளே வரும்படி அழைத்தார். ஷாலினியை எதிர்பார்த்து உள்ளே வந்த மாலதி அங்கே அவள் இல்லாததால் எரிச்சலடைந்தாள். 😒
அது போலீஸ் ஸ்டேஷன் என்று கூட கருத்தில் கொள்ளாத மாலதி அங்கு இருந்த இன்ஸ்பெக்டரை பார்த்து... “இவன் தான் சார். எங்க வீட்டு பொண்ணு மனசு கெடுத்து அவள இழுத்துக்கிட்டு ஓடுனவன். இவன் தான் அவ பின்னாடி இருந்து எல்லாமே பண்ணிக்கிட்டு இருக்கான். எங்க இவன் மட்டும் தான் இங்க இருக்கான்.. அவள காணோம்..?? என் தம்பிய கொலை பண்ண பாத்த கொலைக்காரி சார் அவ. முதல்ல அவள புடிச்சு ஜெயில்ல போடுங்க." என்று தன் இஷ்டத்திற்கு கத்தி கொண்டு இருந்தாள். ☹️😡
அவள் ஷாலினியை கொலைக்காரி என்று சொன்னதை பொறுத்து கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த விஷ்ணு, “யாரு என் ஷாலினி கொலைகாரியா..?? நீங்க தான் மனுச ஜென்மமே கிடையாது. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம அவள எவ்ளோ டார்ச்சர் பண்ணிங்க...!! உங்களுக்கு எல்லாம் அவள பத்தி பேசுறதுக்கு கூட தகுதி இல்லை." என்று சீறினான். 😡 🤬🔥 விஷ்ணுவின் கணீர் குரல் அந்த அறை எங்கும் ஒலித்தது. அவனுடைய குரலில் இருந்த கோபத்தை உணர்ந்து கொண்ட மாலதிக்கு கூட ஒரு நொடி உடல் நடுங்கியது.
“சார்..!! இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க. அவங்க கிட்ட ஏதோ பேச வந்தீங்களோ.. அத பத்தி பேசுங்க அது தானே இப்ப முக்கியம்..!!" என்று இன்ஸ்பெக்டர் சொல்லி அவனை சமாதானப்படுத்த முயற்சி செய்ய அமைதியானன் விஷ்ணு. சசியையும், மாலதியையும், முறைத்து பார்த்தவன்; “ஷாலினி மேல எந்த தப்பும் இல்ல. அது என்ன விட உங்களுக்கு நல்லா தெரியும். நீங்க தான் அவளை அடிச்சு கொடுமைப்படுத்தி இருக்கீங்க. உங்க விரல் பதிந்த தடம் கூட இன்னும் அவ கன்னத்துல இருக்கு. இத்தன நாளா சம்பளம் இல்லாத வேலைக்காரி மாதிரி உங்க வீட்டுல இருந்து அவ உழைச்சிருக்கா.
அதுக்காக நீங்க அவள நல்லபடியா நடத்தலைன்னா கூட பரவால்ல... மோசமா நடத்தாம இருந்து இருக்கலாம். ஆனா நீங்க என்ன பண்ணிங்க..?? அவளுக்கு அந்த உருப்படாத ரவுடி பையன் ரவிய அவளுக்கு விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ணி வைக்க பாத்திருக்கீங்க.. இதுல அந்த பரதேசி நேத்து நடந்த பிரச்சனைக்கு அப்புறம் ஷாலினி கிட்ட தப்பா நடக்க வேற ட்ரை பண்ணி இருக்கான். அதுக்கு நீங்களும், உங்க இரண்டாவது பொண்ணும் உடந்தை. தப்பு செய்றது மட்டும் தப்பு இல்ல. அந்த தப்புக்கு துணை போறதும் தப்பு தான்." என்றவன், அங்கு இருந்த இன்ஸ்பெக்டரை பார்த்து.. “என்ன சார் நான் சொல்றது கரெக்ட் தானே..??" என்றான்.
இது வரை அவன் சொல்லியது அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த அந்த இன்ஸ்பெக்டர், “எஸ் சார். நீங்க சொல்றது கரெக்ட் தான். ஒரு வேளை நீங்க சொன்ன எல்லாத்தையும் இவங்க பண்ணிருந்தாங்கன்னா அதுக்கான எல்லா செக்ஸளையும் இவங்க மேல கேஸ் போட்டா இவங்களால காலத்துக்கும் வெளியில வரவே முடியாது."என்றார். அதை கேட்ட மாலதியும், சசியும், பயந்துவிட்டனர். தன்னுடைய பயத்தை தனக்குள் மறைத்துக் கொண்ட மாலதி அந்த இன்ஸ்பெக்டரை பார்த்து, “என்ன சார் பாதிக்கப்பட்டவங்க நாங்க கேஸ் குடுக்கலாம்னு வந்தா.. எங்க கேஸ் -ச எடுத்துக்காம... எங்க மேலையே இப்ப கேஸ் போடுவேன்னு சொல்றீங்களா...??" என்றாள்.
“யாரு.. யாரு மேல கேஸ் குடுத்தாலும் அத எடுத்துக்கிட்டு யார் மேல தப்புன்னு விசாரிக்கிறது தான் என் வேலை." என்றார் அந்த இன்ஸ்பெக்டர். அதைக் கேட்ட மாலதி எங்கே தன்னை அரெஸ்ட் செய்து விடுவார்களோ என்று நினைத்து பயந்து அமைதி ஆகிவிட்டாள். சசி, விஷ்ணு சொன்னதை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தான். அவன் சொன்னதில் முக்கால்வாசி அது சசிக்கும் தெரிந்து நடந்தது தான். ஆனால் ரவி ஷாலினியிடம் தவறாக நடந்துக் கொள்ள பார்த்தது அவனுக்கு தெரியாமல் நடந்த ஒன்று.
இப்போது அவள் ஏன் வீட்டை விட்டு சென்றாள் என்ற காரணம் அவனுக்கு புரிய... மாலதி மீதும் , ரவியின் மீதும் அவனுக்கு கோபம் வந்தது. அதனால் எதுவும் பேச முடியாது நினைவில் அவனும் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தான். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த விஷ்ணு, மீண்டும் பேச தொடங்கினான்.
விஷ்ணு: அங்கு இருந்த சசியையும், மாலதியையும், தீர்க்கமாக பார்த்தவன்; “ஷாலினிக்கு உங்க மேல கேஸ் குடுக்கிறதுல விருப்பம் இல்ல. அதனால தான் நீங்க இத்தன பண்ணியும் அவ அமைதியா இருந்தா. ஆனா இதுக்கு மேல அவ அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல. நீங்க இப்ப ஷாலினி மேல கேஸ் குடுத்தாலும் எவ்ளோ லட்சம் செலவினாலும், கோடியே கோடியா செலவானாலும், நான் அவள உடனே ஜாமின்ல எடுப்பேன். ஆனா அவ பதிலுக்கு உங்க மேல கேஸ் குடுத்தா உங்க நிலைமை என்னாகும்ன்னு நீங்களே யோசிச்சு பாருங்க. நீங்க இந்த கேச வாபஸ் வாங்குனீங்கன்னா யாருக்கும் பிரச்சினை இல்லாம இத இங்கயே முடிச்சுக்கலாம்." என்றான் தீர்க்கமான குரலில்.
விஷ்ணுவின் குரலில் இருந்த உறுதியை கவனித்த சசி; ஏற்கனவே தனக்கு வேலை போனது பற்றியும், ரவி ஷாலினிக்கு செய்ததையும், யோசித்துப் பார்த்தான். அவனுக்கு இந்த கேஸை வாபஸ் வாங்குவது தான் சரியாக பட்டது. அதனால் .. “நான் குடுத்த கேச நானே வாபஸ் வாங்கிக்கிறேன்." என்றான் சசி. தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்று நினைத்து பயந்த மாலதி, அவனை மறுத்து பேசவில்லை.
நாராயணன் பேலஸுல்...
ஹரியின் வருகைக்காக காத்திருந்த செண்பகம் ஹாலில் போட பட்டு இருந்தது நீண்ட சோபாவில் கோபமாக அமர்ந்து வாசலை பார்த்து கொண்டு இருந்தாள். ஹரியையும், ஆராதனாவையும், தன்னுடன் அழைத்து கொண்டு வருண் அவனுடைய பிரம்மாண்டமான மாளிகைக்குள் நுழைந்தான். பதட்டத்தில் இருந்த ஆராதனா ஹரியின் கையை இறுக்கமாக பிடித்து இருந்தாள். தன்னுடைய மகன்களோடு ஆராதனாவும் வருவதை பார்த்து பொங்கி எழுந்த செண்பகம் தன்னுடைய கையை அவர்கள் முன் நீட்டிய படி “அங்கயே நில்லுங்க" என்று உச்ச ஸ்ருதியல் கத்தினாள். 😡 🤨 😤
சென்பகத்தின் சத்தத்தால் பயந்து போன ஆராதனா அப்படியே நின்று விட்டாள். “இப்ப நீ தான் டா அண்ணா என்ன காப்பாத்தணும்." என்று நினைத்த ஹரி உதவிக்காக வருணை பார்த்தான். “எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ அமைதியா இரு." என்பது போல் சைகை செய்த வருண், செண்பகத்தை பார்த்து பேச தொடங்கினான்.
வருண்: “அம்மா இவளுக்கு ஏற்கனவே உடம்பு சரி இல்ல. இப்ப தான் இவள ஹாஸ்பிடல்ல இருந்து டிச்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வறோம். எதுவா இருந்தாலும் உள்ள போய் பொறுமையா பேசிக்கலாம். வழி விடுங்க." என்றான் நிதானமான குரலில்..
செண்பகம்: இதுல பொறுமையா பேசுறதுக்கு என்ன இருக்கு வருண்..?? இவள நான் என் வீட்டுக்குள்ள விட மாட்டேன். அவளுக்கு உடம்பு சரி இல்லைன்னா.. அவ அவங்க அம்மா வீட்டுக்கு போட்டும். அவள இங்க ஏன் கூட்டிட்டு வரீங்க..?? இவ குடும்பத்தால நம்ம அனுபவச்சதெல்லாம் போதாதா..??
வருண்: இவ குடும்பத்தில் இருக்கிறவங்க பண்ண தப்புக்கும் இவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க தப்பான வங்கன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கூட இருக்க பிடிக்காம தானே வெளியில வந்து இத்தனை நாளா அவளுக்குன்னு ஓரு வேலை தேடிக்கிட்டு ஹாஸ்டல்ல இறந்து கஷ்ட படுறா... இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சும் நீங்க இப்படி பேசலாமா மா?
செண்பகம்: “அதுக்காகலாம் என்னால இவள என் வீட்டுக்குள்ள சேர்த்துக்க முடியாது. உங்களுக்கு அவ தான் முக்கியம்ன்னா சொல்லிருங்க. அவ இங்க வந்து ராணியாட்டம் சொகுசா இருக்கட்டும். நான் இந்த வீட்டை விட்டு
வெளிய போய்டுறேன்." என்றாள் கோபமாக. 😡 😤
- நேசம் தொடரும்....
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 57
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.