அத்தியாயம் 56: ஐ லவ் யூ ஹீரோ (பார்ட் 2)
சித்தார்த்தின் பள்ளியில்...
வேகவேகமாக ஸ்டாப் ரூம்க்கு வந்த விஷ்ணு, அங்கு ஷாலினியை தேடி கொண்டு இருந்தான். அந்த பெரிய ஸ்டாப் ரூமின் ஒரு மூலையில் இருந்த ஜன்னலில் அருகே நின்று கொண்டு இருந்த ஷாலினி, சத்தம் இன்றி அழுது கொண்டு இருந்தாள். 🥺 ஷாலினியின் அருகே சென்ற விஷ்ணு அவளுடைய பெயரை சொல்லி அவளை அழைக்க, விஷ்ணுவை பார்த்த உடன் வேகமாக திரும்பிய ஷாலினியின் கண்கள் முழுதும் கண்ணீர் தேங்கி இருந்தது. 🥺
ஷாலினி: வலி நிறைந்த கண்களோடு விஷ்ணுவை பார்த்தவள், “என்ன அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிருவாங்களா விஷ்ணு..??" என்று அவள் நடுங்கிய குரலில் கேட்க... அவளுடைய கண்களில் இருந்து வலிந்த கண்ணீர் அவளுடைய கண்னத்தை நினைத்தது.
விஷ்ணு: இப்ப எதுக்கு அழுவுற..?? மொதல்ல கண்ண தொட. போலிஸ் இங்க இருந்து கிளம்பிட்டாங்க. உனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. நான் பாத்துக்குறேன். நீயே இப்படி அழுது மத்தவங்களுக்கு காமிச்சி குடுத்திராத.
ஷாலினி: என் மேல அத்தன செக்ஷன்ல கேஸ் பைல் பண்ணி இருக்கேன்னு சொன்னாங்க. அப்புறம் எப்படி இப்போ எதுவும் சொல்லாம அப்படியே கிளம்பி போயிட்டாங்க.
விஷ்ணு: உன் மேல எந்த தப்பும் இல்ல. அதனால தான் உன்னை அரஸ்ட் பண்ணாம போயிட்டாங்க.
ஷாலினி: என் மேல எந்த தப்பும் இல்லை என்று ப்ரூ பண்றதுக்கு நம்ம என்ன கோர்ட்டுக்கா போனோம்..?? அது எப்படி என்ன அரெஸ்ட் பண்றேன்னு வந்தவங்க அரெஸ்ட் பண்ணாம போவாங்க.. ?? உண்மைய சொல்லு நான் அங்க இருந்து வந்ததுக்கு அப்புறம் நீ அவங்க கிட்ட என்ன சொன்ன..?? நீ ஏதோ விசிட்டிங் கார்டு மாதிரி ஏதோ ஒரு கார்டை அந்த போலீஸ் கிட்ட காட்டுனதுக்கு அப்புறம் தான் அவரு என்ன போன்னு சொன்னாரு. அது என்ன கார்ட்...??
விஷ்ணு: அது என்னோட பிசினஸ் கார்ட். என்னோட அண்ணா ஒரு சின்ன கம்பெனி வச்சிருக்காரு. அதுல நானும் வொர்க் பண்றேன். அதனால எங்க ஆபீஸ் கார்ட தான் அவர் கிட்ட காமிச்சேன். எங்க அண்ணனுக்குனு சொசைட்டி -ல ஒரு மரியாதை இருக்கு. அதனால தான் நான் சொன்ன உடனே அவர் கேட்டாரு. சோ அந்த கம்ப்ளைன்ட் குடுத்தவங்களை விட நானும் என் அண்ணனும் அவருக்கு பெரிய ஆளா தெரிஞ்சு இருப்போம். அதனால அவரு எந்த பிரச்சினையும் பண்ணல.
அந்த கம்ப்ளைன்ட் குடுத்தவங்களே அத வாபஸ் வாங்கிட்டா உனக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு அவரு சொன்னாரு. அதனால நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அவங்க கூட பேசி அந்த கம்ப்ளீட்டா வாபஸ் வாங்க வைக்கிறேன்னு சொன்னேன்.
ஷாலினி: “நீ இப்ப போய் பேசினா.. அவங்க உடனே அந்த கேச வாபஸ் வாங்கிடுவாங்களா...?? எனக்காக நீ எதுக்கு விஷ்ணு இவ்ளோ கஷ்டப்படணும்..?? என்னால போலீஸ் ஸ்டேஷன்ல போய் நின்னு பதில் சொல்லணும்னு உனக்கு என்ன தலை எழுத்தா ..??? அவங்க என் மேல கோவத்துல இருக்காங்க. அதான் என்ன ஏதாவது பண்ணனும்னு தான் இப்டி பண்ணிருக்காங்க. இது என்னோட பிரச்சனை. சோ இத நானே பாத்துக்கிறேன். இதுல நீ இன்வால்வ் ஆகி உன் லைஃப கெடுத்துக்காத. நானே போய் போலீஸ்ல சரண்டர் ஆகிறேன்." என்று தீர்மானமாக சொன்னவள், தன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கொண்டு நடக்க தொடங்கினாள்.
சென்று கொண்டு இருந்த ஷாலினியின் கையை பிடித்து தடுத்து தன் பக்கம் இழுத்து நிறுத்திய விஷ்ணு அவளுடைய கண்களை நேராக பார்த்தவன், “நீ எங்கயும் போக கூடாது" என்றான் அழுத்தமான குரலில். “இல்ல விஷ்ணு என்னால உனக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம். என்னால யாரும் கஷ்டப்படுறது எனக்கு பிடிக்காது." என்ற ஷாலினி மீண்டும் நடக்க தொடங்க... அவளுடைய கையை பிடித்து தடுத்து நிறுத்திய விஷ்ணு, “உன் மேல எந்த தப்பும் இல்லை. இது நான் செஞ்ச தப்பு. என்னால வந்த பிரச்சனைய நானே சரி பண்றேன். இது என்னால சரி பண்ண முடியாத அளவுக்கு பெரிய பிரச்சனை இல்ல." என்றான் நிதானமான குரலில்.
ஷாலினி: “என்ன சொல்ற இது உன்னால வந்த பிரச்சினையா..?? நீ என்ன பண்ண...??" என்று விஷ்ணுவை பார்த்து கேட்ட ஷாலினிக்கு அப்போது தான் அந்த போலீஸ்காரர்கள் சசியின் வேலை பறிபோனது பற்றியும், ரவியை யாரோ ஆள் வைத்து அடித்தது பற்றியும், அவர் சொன்னது அவளுக்கு ஞாபகம் வர; அது விஷ்ணுவின் வேலை தான் என்று அவளுக்கு புரிந்தது. அதனால் அது வரை சோகமாக இருந்த ஷாலினியின் முகம் இப்போது கோபத்தில் சிவந்தது. “நான் தான் உன் கிட்ட எந்த பிரச்சனையும் வேண்டாம். இப்ப இங்க இருந்து போனா மட்டும் போதும்னு சொல்லிட்டு தானே அங்க இருந்து கிளம்பினேன்.. இப்ப இந்த பிரச்சனை எல்லாம் தேவையா நமக்கு...?? நீ ஏன் என்ன கேக்காம இப்படி பண்ண..??
நான் அப்பவே நினைச்சேன். நான் வீட்டை விட்டு வந்ததுக்காகவா அங்க இவ்வளவு பெரிய கம்ப்ளைன்ட் என் மேல குடுத்து இருக்காங்கன்னு... இப்ப தான் எனக்கு புரியுது. அது நீ பாத்த வேலையால தான்னு. ரவுடியா நீ..?? அவன் பாதி உசுர ஹாஸ்பிடல் -ல அட்மிட் ஆகுற அளவுக்கு அவன ஆள வச்சு இப்டி அடிச்சு இருக்க...?? அப்டி அவங்க மேல உனக்கு ஏன் இவ்ளோ கோபம்..?? அவங்க என்ன கஷ்டப்படுத்தினா அதுக்கு நீ இவ்ளோ எல்லாம் பண்ணனுமா..??" என்று மூச்சு விடாமல் பேசியவளின் முகத்தில் கோபம், வருத்தம், சோகம் என கலவையான உணர்ச்சிகள் இருந்தன.
விஷ்ணு: “நீ கஷ்ட பட்ட எனக்கு என்னவா..?? நீ கஷ்டப்படுறத பாக்கும் போது எனக்கு வலிக்குது டி. அன்னைக்கு உன்ன அப்படி பாக்கும் போது எனக்கு எப்படி இருந்துச்சுன்னு உனக்கு சொன்னாலும் புரியாது. உங்க அப்பாவ கூட நான் மன்னிச்சு விட்டுருவேன். ஆனா அந்த ரவி, அவனுக்கு எல்லாம் வாழவே தகுதி இல்லை.
அப்போ மட்டும் நீ வேகமா உன் ரூம்குள்ள போய் டோர லாக் பண்ணலேன்னா அவன் உன்ன என்ன பண்ணி இருப்பான்னு உனக்கே தெரியும். இப்ப அத நினைச்சா கூட அவன என் கையால கொல்லனும்ங்குற அளவுக்கு எனக்கு ஆத்திரமா வருது. அவன அப்படியே சும்மா விட்டா.. அவன் உன்ன எப்பயுமே நிம்மதியா இருக்க விட மாட்டான்னு எனக்கு தோணுச்சு. அதான் எங்க அண்ணா கிட்ட சொல்லி அவன் இனிமே உன் வாழ்க்கைக்குள்ள வரதுக்கு நினைக்க கூட கூடாதுன்னு அவனுக்கு நல்லா புரியிற மாதிரி 4 தட்டு தட்டி சொல்லுங்கன்னு சொன்னேன்.
ஆனா என் மேல இருக்கிற ஒரே ஒரு மிஸ்டேக் நான் இப்டி ஏதாவது பண்ணா அவங்க கோபம் உன் மேல திரும்பிருமோன்னு நான் யோசிக்காம விட்டது தான். நான் முன்னாடியே இத பத்தி யோசிச்சு இதுக்கு ஏதாவது பண்ணி இருந்தா இப்டி ஆகி இருக்காது. சாரி என்னால வந்த பிரச்சனைய நானே பாத்துக்கறேன்." என்றவன், பாதி உண்மையோடு பாதி பொய்யை கலந்து அவள் நம்பும் படி சொல்லி விட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
கலவையான உணர்ச்சிகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. விஷ்ணு சொல்லி விட்டு சென்ற ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய காதுகளில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருந்தது. “நீ கஷ்டப்படுறத பாக்கும் போது எனக்கு வலிக்குது டி." என்று அவன் சொல்லிய அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்த ஷாலினிக்கு அவனுடைய வார்த்தைகளில் இருந்த வலி நன்றாக புரிந்தது.
“அப்டி நான் இவனுக்கு என்ன செஞ்சுட்டேன்னு இவன் என் மேல இவ்ளோ பாசமா இருக்கான்..??" என்று நினைத்த ஷாலினிக்கு ஒரு வேளை உண்மையாகவே அவன் தன்னை காதலிக்கிறான் போல என்று தோன்றியது. ஆனால் இப்போது அதை நினைத்து சந்தோஷ படுவதா இல்லை தன்னால் தானே அவனுக்கு இத்தனை கஷ்டம் என்று நினைத்து வருத்தப்படுவதா என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்..
பல அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தின் உள்ளே வந்த ஹரி, பொதுவாக மீட்டிங் நடக்கும் தளத்திற்கு வந்தான். அந்த மீட்டிங் ஹால் -க்கு வெளியே நிறைய செக்யூரிட்டி டீம் இன் ஹெட் ஆக இருப்பவர்கள் நின்று கொண்டு இருந்தனர். ஹரி அந்த மீட்டிங் ஹாலுக்கு உள்ளே செல்லும்போது அங்கே விஷ்வாவும், சிவாவும், செக்யூரிட்டி டீம் சீப் கேப்டன் பாலஜி, பாடி கார்ட் டீம் சீஃப் கேப்டன் ஆதித்யாவும் இருந்தனர்.
செக்யூரிட்டி டீம், பாடி கார்ட் டீம், இவர்கள் இருவருடைய வேலையுமே நாராயணன் குரூப்ஸ் -க்கு கீழ் உள்ள அனைத்தையும், அனைவரையும், பாதுகாப்பது தான். அந்தந்த டீமுக்கு தனித்தனியாக அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஹெட் இருந்தாலும் அவர்களை வழி நடத்தும் கேப்டன் போன்றவர்கள் பாலாஜியும், ஆதித்யாவும், தான்.
செக்யூரிட்டி டீம் இன் வேலை 24/ 7 சி. சி.டிவி. கேமராவின் உதவியால் அனைத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மற்றும் அவர்களைச் சுற்றி ஏதேனும் தவறாக நடந்தால் அதை உடனே கண்டுபிடிப்பது ஆகும். இவர்கள் சில சமயங்களில் ஸ்பையாகவும் பயன் படுத்தப்படுபவதால் நல்ல தொழில்நுட்ப அறிவுடன் இருப்பார்கள்.
பாடி காட்டிகளின் வேலை எப்போதும் சண்டைக்கு தயாரான நிலையில் துப்பாக்கியை ஏந்திய கைகளோடு, எதிரியை தேடி கொண்டு இருக்கும் கண்களோடு எப்போதும் தயாராக இருப்பது தான். இவர்கள் அனைவரும் உடலளவில் பலசாலியாகவும், நன்கு சண்டை பயிற்சி எடுத்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த இரு பெரும் பாதுகாப்பு அணியின் தலைவர்களையும் அழைத்த விஷ்வா, சந்தேகப்படும் படி ஏதாவது நடந்ததா என்று விசாரித்து கொண்டு இருந்தான். அப்போது அந்த அறைக்குள்ளே வந்த ஹரி, விஷ்வாவிற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
விஷ்வா: “யாரோ என்னோட வீக்னெஸ்ச தெரிஞ்சுக்கறதுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்டடா இருக்காங்க." என்று அங்கே இருந்தவர்களை கூர்மையாக பார்த்த படி சொன்னான்.
விஷ்வா ஏன் இப்படி சொல்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாத அவர்கள், அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக அவனை பார்த்து கொண்டு இருந்தனர்.
- நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 56
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.