52: ஷாலினியின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட்
பவர் அதிகமான தூக்க மாத்திரையை வருணற்கு பரிந்துரைக்கிரான் டாக்டர் அருண். நடு இரவில் குடித்துவிட்டு மருத்துவமனை மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக ஹரி டிராமா செய்ததற்காக அவன் மீது கோபத்தில் இருக்கிறாள் ஆராதனா. ஹரி அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கும் போது, அவனுக்கு கால் செய்த செண்பகம்; அவனை சௌபர்ணிகாவை சென்று பார்க்க சொன்னதால் அங்கு இருந்து சென்றான் ஹரி. சோர்வாக வீட்டுக்கு வந்த சசியிடம் மாலதி ஷாலினியை பற்றி குறை கூற, அதை கேட்ட சசி கடுப்பாகி அவளை திட்டி விட்டு கன்னத்தில் ஒரு அறையை பரிசாக கொடுத்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். கன்னத்தில் தன் கையை வைத்து கொண்டு அந்த வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து இருந்த மாலதி, அழுது கொண்டே தன் கணவன் சசியை திட்டி புலம்ப தொடங்கினாள்.
மாலதி: “நானா ஆசை பட்டு உன்ன கட்டிக்கிறேன்னு சொன்னேன்..?? நீ தானேயா.. எங்க ஆத்தா.. அப்பன்.. கிட்ட வந்து ஒத்த பொம்பள புள்ளைய வச்சிக்கிட்டு தனியா கஷ்டப்படுறேன்னு பேசி என்ன கெஞ்சி கூத்தாடி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த.. இப்ப உன் மவ எவனையோ இழுத்துட்டு ஓடி போயிட்டான்னு.. என்ன கொறை சொல்லி அடிக்கிறியா நீ...?? என்னமோ நான் தான் அவள வளர்த்தேன்னு இன்னைக்கு வாய் கிழிய பேசுற.. அப்ப இத்தனை நாள் நீ என்ன பரதேசம் போய் இருந்தியா... யா...?? 😭 😡 🤬 😤
நீயும் உன் மகளும் இதே வீட்ல தானே இருந்தீங்க..?? ஊர்ல இல்லாத உன் மகள நீ ஒழுங்கா வளர்த்து இருக்க வேண்டியது தானே...?? நானா வேணான்னு சொன்னேன்..?? நீ உன் வாய வச்சுகிட்டு சும்மா இருக்காம எவன் கிட்ட போய் எங்க ஒரண்டை இழுத்தியோ.. யாருக்கு தெரியும்..?? அதான் அவன் உன் வேலைக்கு வேட்டு வச்சுட்டான். இருந்த வேலையை காப்பாத்திக்க துப்பில்ல.. இந்த வயசான காலத்துல என்னையும், இந்த சின்ன வயசுலயே என் புள்ளையயும் வேலைக்கு போய் இந்த குடும்பத்த காப்பாத்த சொல்ற எடுபட்ட பயளே...." என்று கோபமாக சசியின் அறை கதவை பார்த்து சொன்னவள், வலிக்கும் தன் கன்னத்தை ஒரு கையால் தேய்த்த படியே தேம்பி தேம்பி அழுதாள். 😭😭😤 அப்போது அவளுடைய உதட்டோரத்தில் இருந்து லேசாக இரத்தம் வடிய... அதை தன் கையால் தொட்டு பார்த்து அதிர்ந்தவள், “என்னவே ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சுட்டில டா...!!! உன் கை ரெண்டும் விளங்காம போய்டும்.. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட... ஆம்பள திமிருல ஆடுறீல்ல.. ஒரு நாள் இந்த திமிர் எல்லாம் அடங்கி போய் இதே வீட்ல சோறு, தண்ணி, இல்லாம மூலையில கிடப்ப பாரு... அன்னைக்கு தான் உனக்கு என் அருமை தெரியும்." என்று தனக்கு இருந்த வேதனையில் சில பல சாபங்களை இன்ஸ்டன்ட் ஆக தன்னுடைய கணவனுக்கு வழங்கும் இந்த பத்தினி தெய்வம் இதே போல் தானே நேற்று ஷாலினி கஷ்ட பட்ட போது அதை பார்த்து நாம் சந்தோஷ பட்டோமே... அந்த நிலைமை நமக்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிட்டது..?? என்று சிறிதும் யோசித்து பார்க்கவில்லை. தனக்கு வந்தால் தான் அது ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்டினி தான் என்று சொல்லும் கூட்டத்தில் இவளும் ஒருவள் போல.
மாலதி பேசி கொண்டு இருந்தது தன் அறைக்குள் இருந்த சசிக்கு தெளிவாக கேட்டது. அதனால் அதை கேட்டு எரிச்சல் அடைந்தவன், “இந்த டி... வெறும் பயன் மவளே...!!! இப்ப வாய மூடுரியா.. இல்ல எந்திரிச்சு வந்து வாய் மேலயே 4 மிதி மிதிக்கட்டுமா..??" என்று உச்ச ஸ்ருதியில் கத்த, அதை கேட்டு பயந்த மாலதி அமைதியாகி விட்டாள். மாலதி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடித்து கொண்டு சத்தம் இன்றி தன் மனதிற்குள் புலம்பி கொண்டு இருக்க, அப்போது அவளுடைய அம்மாவிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது. அதை அட்டெண்ட் செய்த மாலதி, தன்னுடைய துக்கத்தை தனக்குள் வைத்து கொண்டு நார்மலாக பேச நினைத்தவள், “சொல்லு மா... இப்ப ரவி எப்படி இருக்கான்..??" என்றாள், மெல்லிய குரலில். மறுமுனையில் காலில் இருந்த மாலதியின் அம்மா ராணி, ஒரு வார்த்தையும் பேசாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டு இருந்தாள். 😭😭😭
மாலதி: ராணியின் அழுகுரலால் தன்னுடைய தம்பி ரவிக்கு ஏதாவது நடக்க கூடாது ஏதோனும் நடந்து விட்டதோ என்று நினைத்து பயந்தவள், “ஏன் மா இப்படி எதுவுமே பேசாம அழுதுட்டு இருக்க..?? ரவி -க்கு என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா..?? நான் அவன ஒரு நல்ல ஹாஸ்பிடல்ல தானே சேத்தி விட்டுட்டு வந்தேன்..??" என்றாள்.
ராணி: “இனி அவன் எழுந்திருச்சு நடக்கிறதே ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க டிடிடி... என் மவன் இப்படி கை, கால அசைக்க முடியாம கட்டில்ல கிடக்கிறானே டி..." என்று பாதி பாதியாக சொன்னவள், ஓ...!!! என்று ஒப்பாரி வைத்தாள். 😭😭😭😭
மாலதி: என்ன மா சொல்ற..?? அப்படி ஒன்னும் அவனுக்கு பெருசா அடி பட்ட மாதிரி தெரியலையே... டாக்டர் என்ன சொன்னாரு...??
ராணி: யாரோ நல்ல அடிக்க தெரிஞ்சவங்க தான் அவன வெளி காயம் இல்லாம உள்ள இருக்க உடல் உறுப்பு எல்லாத்தையும் சேதாரம் பண்ற மாதிரி நல்லா அடிச்சு இருக்கிறாங்கலாம். அவனோட கை, கால், எலும்பெல்லாம் நொறுங்கி போய் கிடக்குதாம். அவன் எந்திரிச்சு நடக்கிறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க டி. இதுக்கெல்லாம் மருத்துவம் பாக்குறதுக்கே நிறைய செலவாகும்ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அம்புட்டு காசு என் கிட்ட எங்க இருக்கு..?? அதனால நீ அவனை சேத்த்து விட்ட ஹாஸ்பிடல்ல இருந்து இப்ப பெரிய ஆஸ்பத்திரிக்கு நான் கூட்டிட்டு வந்து சேத்து விட்டுடேன். இங்க இருக்கிற டாக்டர் லாம் அவனுக்கு மருத்துவம் பாக்க அதை எடுக்கணும், இத எடுக்கனும்குறாங்க... எனக்கு ஒண்ணுமே புரியல... ரொம்ப பயமா இருக்கு. நீ செத்த கிளம்பி வரியா..??
மாலதி: நான் கிளம்பி வரேன் மா. ஆனா அவனுக்கு மயக்கம் தெரிஞ்சுருச்சா...?? அவன் உன் கிட்ட அவன யாரு அடிச்சதுன்னு ஏதாவது சொன்னானா..?? அவன இப்படி அடிக்கிற அளவுக்கு அவன் யார் கிட்ட போய் இவன் வம்பு இழுத்தான்..??
ராணி: இது எல்லாத்துக்கும் அந்த எடுபட்ட சிறுக்கி மவ ஷாலினி தான் டி காரணம். 😡😤
மாலதி: என்ன மா சொல்ற..?? அவளே ஒரு புள்ள பூச்சி. அவ என்ன பண்ணா..???
ராணி: “யாரு அவ புள்ள பூச்சியா...?? என் வெலக்கமாத்து கட்ட... அவ சரியான விஷம் டி. அமுக்குனி மாதிரி இருந்துகிட்டு எவனோ பெரிய பணக்காரன வளச்சு போட்டு அடியாளுங்கல வச்சு அந்த நாசமா போறவ ராசா மாதிரி இருந்த என் புள்ளையை அடிச்சு சாச்சு தூக்கி போட்டுடா டி." என்று கோபமாக அழுது கொண்டே சொன்னாள்.😭😭😤
மாலதி: அவ அப்டி எல்லாம் பண்ற ஆள் இல்லையே.. நீ எப்டி அவ தான் பண்ணான்னு அடிச்சு சொல்ற...???
ராணி: “ரவி தான் சொன்னான்.. அதனால சரியா பேச கூட முடியல தெரியுமா..?? நல்லா அடிச்சு அவன் வாய உடைச்சு விட்டு இருக்காங்க." என்றவள், மீண்டும் அழ தொடங்கினாள்.
மாலதி: அம்மா முதல்ல அழுகாம ரவி என்ன சொன்னான்னு சொல்லு.
ராணி: “இந்த சினிமாவில லாம் காட்டுவாங்கல்ல கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வருவாங்கல்ல அடியாளுங்க.. அவங்கள என்னமோ பாடி கட்டே -ன்னு சொல்லுவாங்களாம்.. அவனுங்க தான் நாலஞ்சு பேரு இவன தூக்கிட்டு போய் அடிச்சாங்களாம். அவன அடிக்கும் போது இனிமே எங்க ஷாலினி மேடம் இருக்கிற பக்கம் கூட நீ வர கூடாதுன்னு சொல்லி சொல்லி அடிச்சானுங்கலாம். பாரு டி இந்த கொடுமைய.. அந்த பீத்த சிறுக்கி அவனுங்களுக்கு மேடமாம். அவ இப்படி ஆளு வச்சி அடிச்சு என் புள்ளையை கொள்ள பாத்து இருக்காளே...?? நல்லா இருப்பாளா அவ... அவ விளங்கவே மாட்டா. அழிஞ்சு போயிருவா." என்றவள், மீண்டும் அழ தொடங்கினாள். 😭😭😭
தன் அம்மா ராணி சொன்னதை கேட்ட மாலதிக்கு ஏதோ புரிவதை போல் இருந்தது. “பாடி கார்ட் வச்சிருக்க அளவுக்கு பணக்காரர்களா..??" என்று யோசித்த மாலதிக்கு சசி அவளிடம் யாரோ பெரிய பணக்காரனின் தலையிட்டால் தான் தன்னுடைய வேலை பறிபோகி விட்டது என்றும் இனி தன்னால் எங்கேயும் வேலை பார்க்க முடியாது என்று சொன்னதும் ஞாபகம் வர, அதை ஷாலினியோடும், ரவி -க்கு நடந்த சம்பவத்தோடும் தொடர்பு படுத்தி பார்த்தவள், இது அனைத்திற்கும் ஷாலினியும், அவளை கூட்டி கொண்டு சென்றவனும் தான் காரணம் என்ற முடிவிற்கு வந்தாள்.
மாலதி: “ஆமாம் மா. நீ சொன்னது சரி தான். இது எல்லாத்துக்கும் அவ தான் காரணம். ஒரு பக்கம் ரவிய ஆள வச்சு அடிச்சு அர உசுரா போட்டு இருக்கா... இன்னொரு பக்கம் என் புருஷன் வேலைக்கு உலை வச்சிருக்கா. அவள சும்மாவே விட கூடாது மா." என்று கோபத்தில் தன் பல்லை கடித்து கொண்டு சொன்னாள். 😡🤬😤😤
ராணி: “என்ன டி சொல்ற மாப்பிள்ளைக்கு வேலை போயிடுச்சா..??" என்று அதிர்ச்சியாக கேட்டாள். 😳😒
மாலதி: “நான் அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மா. முதல்ல நீ போன வை. அவளுக்கு ஒரு முடிவு கட்டிட்டு வரேன்." என்றவள், அந்த அழைப்பை துண்டித்தாள். சசியை அழைத்த படியே அவன் அறை கதவை தட்டினாள்.
சசி: ஏன் டி அடங்க மாட்டியா நீ...??
மாலதி: ஐயோ...!!! நான் சொல்றத கேளுங்க தயவு செஞ்சு கதவ திறங்க. உங்களுக்கு வேலை போனதுக்கு யார் காரணம்ன்னு தெரிஞ்சிருச்சு.
சசி: “என்ன டி சொல்ற..??" என்று அதிர்ச்சியாக கெட்டவன், கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
வெளியே வந்து சசியிடம் தனக்குத் தெரிந்தவற்றை சில எக்ஸ்ட்ரா பிட்டிங்களுடன் திரித்து அவனிடம் சொன்ன மாலதி, “நம்ம எல்லாரையும் ஒன்னும் இல்லாம அழிச்சிட்டு அவ மட்டும் ஏதோ பணக்காரன் கூட ஜாலியா இருக்க கிளம்பி போயிட்டா. அவள சும்மாவே விட கூடாதுங்க" என்று நன்றாக சசியின் கோபத்திற்கு தூபம் போட்டாள்.
சசி: ஆமா..!! அவளுக்கு எவ்ளோ திமிரு இருந்தா இப்படியல்லாம் பண்ணி இருப்பா... அவள சும்மா விட கூடாது. அவள என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.
இந்த வார்த்தை எப்போது சசியின் வாயில் இருந்து வரும் என்று காத்து கொண்டு இருந்தவள் போல மாலதி வேகமாக, “அவ மேல நம்ம போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கணும். என் தம்பிய அர உசுராக்கி பொட்டு இருக்கா. அவள எப்படி சும்மா விடுறது..??"என்று கேட்க.. “ஆமா..!! அவள சும்மா விட கூடாது மாலதி. இந்த தறவ அவ ரொம்ப எல்லை மீறி போயிட்டா. என்னால என்ன பண்ணிட முடியும்ன்னு நெனச்சு தானே அவ இது எல்லாம் பண்றா... என்னால என்ன பண்ண முடியும்ன்னு நான் அவளுக்கு காமிக்கணும். போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்." என்று தயக்கம் இன்றி சொன்னான். அதை கேட்டு மகிழ்ந்த மாலதி, சசியை அழைத்து கொண்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஷாலினியின் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றாள்.
நாராயணன் மருத்துவமனையில்....
சாரதா அந்த பக்கம் பள்ளிக்கு சென்றவுடன் தன்னுடைய பாட்டியிடம் ரித்திகாவை பார்ப்பதாக சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பி வந்தான் சந்தோஷ். சந்தோஷ், ரித்திகா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறையின் அருகே வரும் போது, கேண்டினுக்கு சென்று காலை உணவை சாப்பிட்டுவிட்டு ரித்திகாவின் பெற்றோர்கள் கௌத்தமுடன் பேசிய படியே ரித்திகாவின் அறைக்கு வந்து கொண்டு இருந்தனர். கௌத்தம் இன்னும் கிளம்பாமல் அங்கேயே இருப்பதை பார்த்த சந்தோஷ், பொறாமையில் பொங்கினாள். 😤 சந்தோஷ் ஐ கவனித்த கௌத்தம், மறுபடியும் வந்துட்டானா இவன்... என்பது போல் முறைத்து பார்த்தான். 😒🤨 கௌத்தம் தன்னை பார்த்து முறைப்பதை எல்லாம் கண்டு கொள்ளாத சந்தோஷ் நேராக ரேவதியின் அருகே சென்றவன், அவளை பார்த்து... வந்ததும் வராததுமாக ரவியின் உடல் நலத்தை பற்றி விசாரித்தான்.
ரேவதி: நல்லா தான் பா இருக்கா. காய்ச்சல் தான் இன்னும் குறையல. ஆனா டாக்டர் பயப்பட வேணாம் சீக்கிரம் சரி ஆயிடும்னு சொல்லி இருக்காரு.
சந்தோஷ்: ரித்திகாவை பார்க்கும் ஆவலோடு, “அவங்க கண்ணு முழிச்சுட்டாங்கலா ஆண்ட்டி..??" என்றான்.
ரேவதி: நேத்து நீ போன கொஞ்ச நேரத்திலயே கண்ணு முழிச்சிட்டா பா. அவளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவள பாக்க வந்து இருந்தாங்களா.. அதுல அப்படியே உன் கிட்ட அத பத்தி சொல்ல மறந்துட்டேன். எனக்கு அப்புறம் லேட் நைட் தான் ஞாபகம் வந்துச்சு. அதனால காலையில சொல்லலாம்னு விட்டுட்டேன். சாரி.
சந்தோஷ்: “என்ன ஆன்ட்டி இப்டி பண்ணிட்டீங்க... நைட்டு எவ்ளோ நேரம் ஆகி இருந்தாலும் நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்த நான் கிளம்பி வந்து இருப்பேன்." என்று உண்மையான வருத்தத்துடன் சொன்னவன், பின் கௌதமை பார்த்து... “என்ன ப்ரோ நேத்து வேகமா சொன்னிங்க நான் கண்டிப்பா சொல்றேன்னு.. அப்புறம் நீங்களுமா மறந்துட்டீங்க...??" என்றான் அர்த்தத்துடன். 😒
கௌத்தம்: “சாரி ப்ரோ." என்று இரண்டே வார்த்தையில் பதில் சொன்னான்.
ரேவதி: நான் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நீ எந்நேரமா இருந்தாலும் கிளம்பி வந்து இருப்பேன்னு தெரியும் பா சந்தோஷ். ஏற்கனவே கௌத்தம் நேத்துல இருந்து எங்க கூட இருந்து கஷ்டப்படுறான். இதுல உங்களையும் சேத்து சிரம படுத்த வேண்டாமேன்னு தான் நான் சொல்லல.
“ஓகே ஆன்ட்டி." என்ற சந்தோஷ் தன் கையில் அவன் கொண்டு வந்து இருந்த நிறைய பழங்கள் இருந்த பையை ரேவதி இடம் கொடுத்தான். ரித்திகா தொடர்ந்து பத்து நாட்கள் அந்த பலத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழலாம் அந்த அளவிற்கு அத்தனை பழங்களை வாங்கி வந்து இருந்தான் சந்தோஷ்.
கௌத்தம்: அதை கவனித்தவன், “என்ன ப்ரோ இந்த ஹாஸ்பிடல் ஃப்ரூட்ஸ் ஷாப் வைக்க போறீங்களா என்ன... இவ்வளவு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்து இருக்கீங்க...??"என்றான் நக்கலாக. 😂
ரேவதி: ஆமா பா. எதுக்கு இவ்ளோ ஃப்ரூட்ஸ்...?? அவ நல்ல நாளிலயே எத குடுத்தாலும் ஒழுங்கா சாப்பிட மாட்டா. இப்போ உடம்பு சரி இல்லாம படுத்து இருக்கப்ப அவ எங்க பா இத்தனையும் சாப்பிட போற...??? எதுக்கு சந்தோஷ் உனக்கு வீண் செலவு...??
சந்தோஷ்: நம்ப ரித்திகாவிற்கு செய்றது எப்டி ஆன்ட்டி வீண் செலவாகும்..?? அப்படியே குடுத்தா தானே சாப்பிடுறதுக்கு கஷ்டமா இருக்கும்.. நான ஜூஸ் போடறதுக்கு தேவையான எல்லாத்தையும் கையோட வாங்கிட்டு வந்துட்டேன். நானே உங்க கூட இருந்து டைமுக்கு ரித்திகாவுக்கு ஜூஸ் போட்டு தரேன். உடம்பு சரி இல்லாதவங்கள பாக்க வரும் போது வெறும் கைய வீசி கிட்டா வர முடியும்...??" என்றவன், ஓர கண்ணால் கௌத்தமை பார்த்தான்.
ரேவதி: எங்களுக்கு ஒன்னுன்னா இத்தனை பேர் வந்த சப்போர்ட்டா நிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பா.
சந்தோஷ்: என்ன ஆன்ட்டி பக்கத்திலேயே இருக்கோம்... இதுல நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா..?? ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்க வேண்டியது தான். நாளைக்கு எங்களுக்கு ஒன்னுன்னா நீங்க வந்து நிக்க மாட்டீங்களா ஆன்ட்டி..??
ரேவதி: “கண்டிப்பா நாங்க வராமையா..???" என்று சிரித்த முகத்துடன் சொன்னாள். 😁
சந்தோஷ்: நான் இப்ப போய் ராகவிய பாக்கலாமா ஆண்ட்டி..???
ரேவதி: அவ தூங்கிட்டு இருக்கா சந்தோஷ். அப்புறமா அவ எந்திரிச்சுதுக்கு அப்புறம் சொல்றேன் நீ போய் பாரு.
“ஓகே ஆன்ட்டி..!!" என்றவன், பின் கௌத்தமை பார்த்து, “ப்ரோ நீங்க நேத்துல இருந்து இங்க தானே இருக்கீங்க... அதான் நான் வந்துட்டேன்ல.. நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் ரித்திகா இல்ல நான் வெளியில் பாத்துக்கிறேன்." என்றான். கௌத்தம் அவனை மறுத்து பேச வாயை திறக்க.. அதற்குள் அவர்கள் கான்வர்சேஷனில் குறிப்கிட்ட சுதாகர், “ஆமா கௌத்தம் நானே உன்ன கிளம்ப சொல்லலாம்னு இருந்தேன். நீ கிளம்பு. நானே வீட்டுக்கு போயிட்டு வரலாம்னு தான் இருக்கேன். வீட்டில இருந்து கிளம்பும் போது பெருசா எதையும் எடுக்காம அப்படியே கிளம்பி வந்துட்டோம். உனக்கு பக்கம்ன்னா நீ வீட்டுக்கு போற வழியில அப்படியே என்னையும் ட்ராப் பண்ணிட்டு போறியா...?? நான் வீட்டுக்கு போயிட்டு திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு ரெப்பிரேஷ் ஆகிட்டு வந்துட்டா அப்புறம் ரேவதி வீட்டுக்கு போட்டும்." என்றான்.
ரேவதி: ஆமா..!! கௌத்தம் நீ அவர கூட்டிகிட்டு கிளம்பு. இங்க இருக்கிற ரூம்ஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு. இங்கயே கூட ஸ்டே பண்ணிக்கலாம். போய் தேவையான திங்ஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டா போதும்.
ரேவதியும், சுதாகரும் இப்டி சொல்லி விட்டதால் கௌத்தம் -க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நேத்து நர்சின் அஜாக்கிரதையால் ரித்திகா மூச்சு திணறி கொண்டு இருந்தது அவனுக்கு ஞாபகம் வர, ரித்திகாவை தனியாக விட்டு செல்வதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் ரித்திகாவின் பெற்றோர்களை அவனால் மறுத்து பேசவும் முடியவில்லை அதனால்.. “சரி அப்பா. வாங்க கிளம்பலாம்" என்றான் கிளம்ப மனம் இன்றி.
சந்தோஷ்: “போய் வேலைய பாருங்க ப்ரோ. நேத்து தான் ஸ்கூல்ல இருந்து பாதியில வந்துட்டீங்க.. இன்னைக்கும் ஸ்கூலுக்கு லீவு போடுவீங்களா என்ன...??? அந்த ஸ்கூல்ல எங்க அம்மா லீவு கேட்டாலே குடுக்க மாட்டாங்க. நான் தான் வி.ஐ.பி. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா உங்களுக்கு அப்படி இல்லையே..." என்றான் நக்கலாக. 😅
சந்தோஷ் பேசியதற்கு அவனை முறைத்து பார்த்த கௌத்தம், எதுவும் பேசாமல் சுதாகரை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து சென்று விட்டான். கௌத்தம் அங்கு இருந்து சென்ற பின் திருப்தியாக புன்னகைத்த சந்தோஷ் ரித்திகாவின் அறைக்கு எதிராக இருந்த சேரில் சென்று அமர்ந்து கொண்டான்.
நாராயணன் இண்டோ சைனீஸ் ரெஸ்டாரன்ட்உயர்தர
என்ற பிரம்மாண்டமான பேர் பலகையை பார்த்த படியே அந்த உயர்தர உணவகத்திற்குள் நுழைந்தாள் சௌபர்ணிக்கா. அந்த உணவகத்தின் உட்புற கட்டமைப்பை பார்த்து “நம்ம ஊர்ல இப்படி ஒரு ரெஸ்டாரண்டா..??" என்று நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அது ஒரு இண்டோ சைனீஸ் ரெஸ்டாரன்ட் என்பதால்.. இரண்டு நாட்டின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் நிறைய ஓவியங்களும், சிற்பங்களும், அனைத்து இடங்களிலும் காண்போரின் கண்களை கவரும் வண்ணம் இருஎன்றாலும்
அது ஒரு ரெஸ்டாரன்ட் தான் என்றாலும் பல தளங்களுடன் பிரம்மாண்டமாக இருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்கு பிளே ஏரியா முதல் மினி தியேட்டர் வரை சகல வசதிகளுடன் இருந்த ரெஸ்டாரன்ட்ற்குள் நுழைந்த சௌபர்ணிகா ரிஷப்ஷனில் நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் தன்னுடைய பெயரை சொல்லி தான் ஹரியை பார்க்க வேண்டும் என்றாள்.
செண்பகத்திடம் இருந்து அவள் அங்கே வரும் தகவல் ஏற்கனவே அனுப்ப பட்டு இருந்தது. அதனால் மரியாதையாக அவளை வரவேற்ற ரிசப்ஷனிஸ்ட், அவளை அங்கே இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு மேனேஜருக்கு கால் செய்து அவரை அங்கே வரவழைத்தாள். உடனே வேகமாக அங்கு வந்த மேனேஜர், சௌபர்ணிகாவை மரியாதையாக செண்பகம் அவர்களுக்காக புக் செய்து இருந்த பிரைவேட் அறைக்கு அழைத்து சென்றான்.
ஹரியை பார்க்க போகும் ஆர்வத்தால் அந்த அறையை நோக்கி சென்று கொண்டு இருந்த சௌபர்ணிகாவின் இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது. அந்த அறையின் கதவு வரை வந்த மேனேஜர் அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டான். நடுங்கிய கைகளுடன் அந்த கதவை திறந்த சௌபி, “மே ஐ கம் இன் சார்..??" என்று பிரின்சிபல் அறைக்குள் செல்ல பர்மிஷன் கேட்கும் மாணவியை போல் பயத்துடன் கேட்டு விட்டு உள்ளே எட்டி பார்த்தாள். அந்த அறையில் உயிரற்ற பொருட்களை தவிர வேறு யாரும் இல்லை.
ஹரி இங்கே வருவதற்குள் தான் முதலில் வந்து விட்டதை நினைத்து பெருமூச்சு விட்ட படி உள்ளே சென்றாள் சௌபர்ணிகா. அந்த அறை காதலர்களுக்காக பிரத்தியோகமாக கட்ட பட்ட அறை. அந்த அறையை செண்பகம் தான் அவர்களுக்காக தேர்ந்தெடுத்து இருந்தாள். காதலர்கள் ஒன்றாக இருப்பது போன் சேடோ ஓவியங்கள், வண்ணமயமான வால் போஸ்டர்கள், மலர்கள், காதல் கவிதைகள், இதய வடிவிலான சோபா என அந்த அறையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காதல் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது.
அதை அனைத்தையும் ரசித்து பார்த்த சௌபர்ணிகா, “அவருக்கும் நம்பல புடிச்சு இருக்கு போல.. அதான் நம்மள இம்ப்ரஸ் பண்றதுக்காக இவ்ளோ டெக்கரேஷன் பண்ணி இருக்காரு... ஹவ் ரொமான்டிக் ஹி இஸ்...." 😍🥰 என்று நினைத்தவள், சிறகு இன்றி கற்பனை வானில் பறந்து கொண்டு இருந்தாள். பின் அந்த இதய வடிவ சோபாவில் வந்து சாவகாசமாக அமர்ந்தவள், அங்கு இருந்த டேபிளில் ஓரமாக வைக்க பட்டு இருந்த கண்ணாடி ஜாடியில் இருந்த ஒரு சிகப்பு ரோஜாவை தன் கையில் எடுத்து அதை ரசித்து பார்த்தாள். பின்.. “சௌபி...!!! இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட ட்ரீம் பாய் இங்க வந்து உன் கிட்ட இதே மாதிரி ரோஸ் இல்லைன்னா ஒரு காச்டிலியான ரிங் குடுத்து.. வில் யு மேரி மீ கேப்பாரு... ஆர் ஐ லவ் யூ -ன்னு சொல்லி ப்ரொபோஸ் கூட பண்ணலாம்..." என்று பலவாறாக நினைத்து அந்த ரோஜா பூவை பார்த்து சந்தோஷமாக சிறு வெட்கத்துடன் பேசி கொண்டு இருந்தாள்.
அப்போது பலத்த சத்தத்துடன் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஹரி, சௌபர்ணிகாவின் அருகே வந்து... “கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. தேங்க்ஸ் பார் யுவர் பேடியன்ஸ். அண்ட் கிளப் டு மீட் யூ மிஸ். சௌபர்ணிகா." என்று சொன்ன படியே அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தான்.
சௌபர்ணிகாவிக்கு அவனை பார்த்த உடன் வார்த்தைகள் எல்லாம் தொண்டையில் சிக்கிக் கொண்டு வெளியே வர மாட்டேன் என்று தவித்து கொண்டு இருந்தது. கண்கொட்டாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தவள், திக்கி.. திணறி.. “நைஸ் டூ மீட் யூ சார்." என்றாள்.
ஹரி: “எதுக்கு என்ன பாத்து பயந்து இப்டி திக்கி தெனரி பேசுறீங்க...?? அவளோ டேர்றோர் ஆவா நான் இருக்கேன்..??" என்று சிரித்து கொண்டே கேட்டான். 😂🤣
அவன் சிரித்து கொண்டே கேஷுவலாக தான் கேட்டான். ஆனால் அவனுடைய அந்த கேள்வி சௌபர்ணிகாவின் ஹார்ட் பீட்டை வேகமாக எகுர வைத்தது. அதனால் பதட்டமானவள், அவசரமான குரலில்.. “அப்டிலாம் இல்ல சார் சாரி." என்றாள்.
ஹரி: “அட... அதுக்கு எதுக்கு இப்போ சாரி சொல்றீங்க...?? முதல்ல நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க. இந்தாங்க இந்த தண்ணிய குடிங்க." என்பவன், தன் அருகில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் தண்ணீர் ஊற்றி அதை அவளிடம் கொடுத்தான்.
அதை பெற்று கொண்ட சௌபர்ணிகா, வேக வேகமாக அந்த தண்ணீரை குடித்து விட்டு அவனை பார்த்து சிறு புன்னகையுடன், “தேங்க்ஸ்" என்றாள். அவள் தன்னை சகஜமாக காட்டிக் கொள்ள முயன்றாலும் ஹரியின் காந்தம் போன்ற பார்வையின் முன்னால் அவளால் அப்படி இருக்க முடியவில்சரியா க
ஹரி இரண்டு நாட்களாக ஆராதனாவுடன் மருத்துவமனையில் இருப்பதால் சரியாக தூங்காமல் சிறிது டல்லாக தான் இருந்தான். நேற்று இரவு அவன் மூச்சு முட்ட குடித்து இருந்ததினால் அவனுடைய கண்கள் சிவந்து காணப்பட்டன. அவன் மருத்துவமனையில் இருந்து நேராக அப்படியே வந்து இருந்ததால் தன்னுடைய ஆடையை கூட மாற்றவில்லை. விலை உயர்ந்த ஜீன்ஸ் பேண்டும், ஸ்கை ப்ளூ டி-ஷர்ட்டும், கேஷுவல் சூவும் தான் அவன் அணிந்து இருந்தான். ஆனால் அவனுடைய முகத்தில் ஒரு அமைதியும், ஆளுமையும், இருந்தது.
இவன் பார்மன ஆக டிப் டாப்பாக வருவான் என்றுதான் சௌபர்ணிகா எதிர்பார்த்து இருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பு வீணாகி இருந்தாலும் ஹரியின் இந்தத் தோற்றம் அவளை ஈர்க்காமல் இல்லை. அவளை அந்த கோலத்தில் பார்த்த அவள் தன் மனதிற்குள், “ஹி இஸ் சிம்பிளி சூப்பர்." என்று நினைத்து கொண்டாள். 😍🥰
- நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 52
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.