அத்தியாயம் 49: திருமணத்திற்கு சம்மதித்த வருண்
செண்பகம்: அவனுக்கு நீ மட்டும் போதும்ன்னு.. நீ சொல்ல முடியாது விஷ்வா. அவன் அம்மா பாசத்துக்கு ஏங்குறான். அத ஒரு அப்பாவா உன்னால புரிஞ்சுக்க முடியலையா வருண்..?? உன் அப்பா இடத்தில இருந்து இந்த குடும்பத்துல இருக்குற எல்லாருக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செய்ற. ஆனா உனக்கும், உன் பையனுக்கும், என்ன வேணும்னு உனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது..??
வருண்: ஒரு பெருமூச்சை விட்டவன், “சரி மா. நான் நீங்க சொல்ற பாயிண்ட்டுக்கே வரேன்.சித்தார்த்துக்கு ஒரு நல்ல அம்மா வேணும்னு நான் ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னே வைங்க... அவளுக்கும் எனக்கும் செட் ஆகுதா, ஆகலையான்றது இரண்டாவது விஷயம். முதல்ல அவளுக்கும், சித்தார்த்துக்கும் செட் ஆகனும்ல..?? சித்தார்த் நம்ப கூடயே இன்னும் முழுசா கிளோஸ் ஆகல. நீங்க திடீர்னு ஒரு பொண்ண காட்டி இது தான் உன் அம்மான்னு சொன்னா அந்த பொண்ண மட்டும் அவன் அம்மான்னு ஏத்துப்பானா..??? நீங்களே சொல்லுங்க." என்றான்.
செண்பகம்: அப்ப சித்தார்த்த பத்தி யோசிச்சு தான் நீ கவலை படுற..??
வருண்: ஆமா மா. எனக்கு அவன் சந்தோசம் தான் முக்கியம். நீங்க சொல்றீங்கன்னு இன்னொரு கல்யாணம் பண்ணி என்னால சித்தார்த்தையும் கஷ்ட படுத்த முடியாது. என்ன கல்யாணம் பண்ணிட்டு வர்ற பொண்ணு கூடவும் சேந்து வாழ முடியாது.
செண்பகம்: அப்ப சித்தார்த் ஏதாவது ஒரு பொண்ண அம்மாவா ஏத்துக்குட்டா அந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணிப்பியா..??
வருண்: அப்பா என் கிட்டயே அவன் நல்லா பழக மாட்டேங்குறான். தெரியாத ஒரு பொண்ண அவன் எப்படி அம்மாவா ஏத்துக்குவானா..??
செண்பகம்: அவன் ஏத்துக்கிட்டா நல்லதுன்னு நினைக்குறியா..?? இல்ல அவன் ஏத்துக்கவே கூடாதுன்னு நினைக்குறியா...??
வருண்: “எனக்கு அத சரியா சொல்ல தெரியல மா. ஆனா நீங்க பண்றது எதுவுமே எனக்கு சரின்னு படல." என்று தன் மனதில் இருந்து உண்மையாக பதில் சொன்னான்.
செண்பகம்: உன்ன விட யாருக்கு எது நல்லது, கெட்டதுன்னு எனக்கு நல்லா தெரியும். நீ சொன்னதுல ஒரு விஷயத்த மட்டும் நான் ஒத்துக்குறேன். வர்ற பொண்ணு கூட உனக்கு செட்டாகி நீங்க ரெண்டு பேரும் சேந்து வாழ்றீங்களோ, இல்லையோ, சித்தார்த்துக்கும் அந்த பொண்ணுக்கும் செட் ஆகணும். நான் பாக்குற பொண்ண சித்தார்த் அவன் அம்மாவா ஏத்துக்கிட்டான்னா.. நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிப்பியா..?? அதுக்கு மட்டும் பதில் சொல்லு.
வருண்: இதற்கு மேல் தான் எதை சொல்லியும் தன்னுடைய அம்மாவை சமாளிக்க முடியாது என்று நினைத்தவன், “ஓகே மா. கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா ஒன்னு மட்டும் மறந்துடாதீங்க.. அந்த பொண்ணு இந்த வீட்டு மருமகளா இருக்கலாம், சித்தார்த்துக்கு அம்மாவாவும் இருக்கலாம், ஆனா அவ ஒரு நாளும் என்னோட பொண்டாட்டியா மட்டும் ஆக முடியாது. இதெல்லாம் தெளிவா சொல்லி பொண்ணு பாருங்க. அந்த பொண்ணு இதுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அப்புறம் இன்னொரு விஷயம், என் கல்யாணத்துல அவசர படுற மாதிரி.. ஹரியோட கல்யாணத்துலையும் அவசரப்படாதீங்க. அவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டு செய்ங்க." என்றவன், எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.
செண்பகம்: செல்லும் விஷ்வாவையே பார்த்து கொண்டு இருந்தவள், “போ டா.. போ... “தாலி கட்டி வீட்டுக்கு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தா.. அது எப்படி உனக்கு அவ மேல பொண்டாட்டின்னு நினைப்பு வராம இருக்கும் -ன்னு நானும் பாக்குறேன். முதல்ல அந்த பொண்ண சித்தார்த் கிட்ட பழக விடுறேன். அப்புறம் மத்ததெல்லாம் சித்தார்த்தே பாத்துப்பான்." என்று நினைத்தாள். அப்போது அவளுக்கு விஷ்ணு இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று ஞாபகம் வர அவனுக்கு கால் செய்தாள்.
விஷ்ணு இன்னும் ஷாலினியின் வீட்டில் தான் இருந்தான். அப்போது அவனுக்கு செண்பகத்திடம் இருந்து கால் வந்தது. அவன் அருகே அமர்ந்து அவனிடம் பேசி கொண்டு இருந்த ஷாலினியை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு அந்த கால் ஐ அட்டெண்ட் செய்து பேசினான் விஷ்ணு.
விஷ்ணு: சொல்லுங்க மா.
செண்பகம்: ஏன் டா மணி எத்தனை ஆகுது.. இன்னும் வீட்டுக்கு வராம எங்க டா சுத்திட்டு இருக்க..?? விஷ்வாவே வீட்டுக்கு வந்துட்டான். இன்னும் உனக்கு என்ன வெளியில வேலை..??
விஷ்ணு: என் பிரண்டுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல மா. அதனால தான் அவன் கூட இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பி வந்துடுவேன்.
செண்பகம்: என்ன டா ஆளாளுக்கு பிரண்டுக்கு உடம்பு சரியில்லைன்னு கதை சொல்லிட்டு இருக்கீங்க..?? படிக்கும் போது வீட்டில இருக்கவங்களுக்கு உடம்பு சரி இல்லைனு சொல்லி லீவு போடுற மாதிரி.. சும்மா பிரண்டுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லிட்டு வெளியில சுத்திட்டு இருக்கீங்களா..??? ஹரியும் இப்படி தான் சொல்லிட்டு வெளியில போனான். அவன இன்னும் ஆள காணோம். எங்க போனான், எப்ப வருவான்னு ஒன்னும் தெரியல. இப்ப நான் கால் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறான். வர... வர... உங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்றீங்க.. வீட்டுக்கு வாங்க உங்களுக்கெல்லாம் இருக்கு." என்று காட்டமாக சொன்னாள். 😒
விஷ்ணு: எப்பா..!!! பேசி முடிச்சிட்டீங்களா..?? கொஞ்சம் மூச்சு வாங்குங்க. ஏன் மா இப்படி கேப் விடாம பேசுறீங்க..??
செண்பகம்: இந்த நக்கல் பண்ற வேலை எல்லாம் வேண்டாம். முதல்ல கிளம்பி வீட்டுக்கு வந்து சேரு.
விஷ்ணு: பக்கத்துல தான் மா இருக்கேன் வந்துருவேன். எனக்காக நீங்க வெயிட் பண்ண வேணாம் சாப்பிடுறீங்க.
செண்பகம்: சரி. சீக்கிரம் வா என்றவள், அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
செண்பகத்துடன் பேசிவிட்டு தன்னுடைய மொபைல் போனை அந்த கட்டிலில் தூக்கி எறிந்துவிட்டு சாவகாசமாக அந்த கட்டிலில் சாய்ந்து படுத்த விஷ்ணு, “சப்பா... எவ்ளோ கேள்வி கேக்குறாங்க.." என்றான் சலிப்பாக.
ஷாலினி: அவனை ஏக்கத்துடன் பார்த்தவள், “ஃபோன்ல யாரு உங்க அம்மாவா..??" என்று கேட்டாள்.
விஷ்ணு: ஆமா..!! அவங்க தான். ஏன் இன்னும் வீட்டுக்கு வரலைன்னு கேட்டு திட்டுறாங்க.
ஷாலினி: உன் மேல இருக்குற அக்கறையில தானே கேக்குறாங்க.. அதுக்கு ஏன் இப்படி சலிச்சுகிறா..??? 😒
விஷ்ணு: அக்கறையில தான் கேக்குறாங்க. சரி தான். ஆனா ஒரு நாளைக்கு எத்தனை தடவ கால் பண்ணுவாங்க தெரியுமா..?? சம் டைம்ஸ் கட்டுப்பாகும்.
ஷாலினி: “அவங்க இப்படி அடிக்கடி கால் பண்றது உனக்கு கடுப்பாகுது. ஆனா அப்படி நம்ம கிட்ட யாராவது அக்கறையா பேசுறதுக்கு இல்லையேன்னு நினைச்சு வருத்தப்படுறவங்களுக்கு தான் அம்மாவோட அருமை தெரியும்." என்று வலி நிறைந்த குரலில் சொன்னாள். 💔
விஷ்ணு: உனக்கு அம்மா இல்லைன்னு நினைச்சு ஃபீல் பண்றியா...??
ஷாலினி: “அதுலாம் எப்பவும் இருக்கிற பீலிங் தான். கண்டிக்காத ப்ரீயா விடு. நீ கெளம்பு. உங்க அம்மா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கல்ல.." என்று வரவழைக்க பட்ட புன்னகையுடன் சொன்னாள். 😁
ஷாலினியின் உதட்டில் புன்னகை இருந்தாலும், தனக்கென யாரும் இல்லையே என்ற வேதனை அவளுடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை விஷ்ணு புரிந்து கொண்டு அவளுடைய மன நிலையை மாற்ற நினைத்தான். அதனால் அவளை காதலோடு பார்த்தவன், “நீ புது வீட்டுக்கு வந்து இருக்கல.. அதுக்கு எனக்கு ட்ரீட் கிடையாதா..?? ஒரு குச்சி மிட்டாய் கூட எனக்கு வாங்கி தராம அப்படியே என்ன வீட்டுக்கு போ.. போன்னு.. சொல்லி அனுப்பி விட்டுறலாம்ன்னு பார்க்கிறாயா..?? எனக்கு பசிக்குது. எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கி குடு. " என்றான்.
ஷாலினி: “சாரி விஷ்ணு. நீ சொல்றதுக்கு முன்னாடி நானே உன்ன சாப்பிட சொல்லி கேட்டு இருக்கணும். உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் ஆர்டர் பண்ணி வாங்கி தரேன்." என்று சொன்னவளுக்கு.. அப்போது தான் விஷ்ணு தனக்காக வர வைத்து இருந்த டெம்போவிற்க்கு தான் இன்னும் எவ்வளவு காசு என்று கேட்டு கொடுக்க வில்லை என்று ஞாபகம் வந்தது. அதனால் “அந்த டெம்போக்கு காசு குடுக்கணும்ல.. அது எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு. அதையும் குடுத்தர்றேன்." என்றாள்.
விஷ்ணு: அதெல்லாம் அவங்களுக்கு அப்பவே ஜி.பே. பண்ணிட்டேன். சோ காசு தர தேவையில்லை. அப்புறம் எனக்கு இந்த ஆர்டர் பண்ணி சாப்பிடுறது எல்லாம் சுத்தமா பிடிக்காது. நம்ப வெளிய போய் சாப்பிடலாம்.
ஷாலினி: “நம்ம வெளியில போயே சாப்பிடலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா அந்த டெம்போ காரர்க்கு எவ்ளோ குடுத்தன்னு சொல்லு நான் இப்பவே குடுத்தர்றேன்." என்றவள், தனக்கு அருகில் இருந்த தன்னுடைய பேக்கை எடுத்தாள்.
விஷ்ணு: நான் இப்போ உன் கிட்ட எனக்கு காசு குடுன்னு கேட்டனா..?? இப்போ நீ எதுக்கு ரிட்டன் பண்ணியே தீருவேன்னு அடம் பிடிக்கிற..??
ஷாலினி: நீ கேட்கலைன்னா நான் காசு குடுக்காம இருக்க முடியுமா..?? நீ எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு.
விஷ்ணு: சரி..!! நீ குடுக்கும்ன்னா கூட அத இப்பவே குடிக்கணும்னு அவசியம் இல்லைல்ல.. பொறுமையா குடு. இப்ப தான் நீ புது வீட்டுக்கு வந்திருக்க. இன்னும் வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கணும் எவ்ளோ செலவு இருக்கு.. மொதெல்ல அத பாரு..
ஷாலினி: “இந்த மந்த் சேலரி எனக்கு இன்னைக்கு தான் கிரெடிட் பண்ணாங்க. என்னோட இந்த மந்த் சேலரி ஃபுல்லா அப்படியே என் கிட்ட தான் இருக்கு. என் கிட்ட காசு குடுன்னு கேக்குறதுக்கு இங்க சித்தியும் இல்ல. அண்ட் நான் புதுசா வீட்டுக்கு திங்ஸ் வாங்கினா கூட இருக்கிற காசுல எது தேவையோ அத மட்டும் பாத்து வாங்கிப்பேன். சோ எனக்கு மணிக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ எவ்ளோ காசுன்னு சொல்லு நான் குடுத்துடறேன்.
இப்ப மட்டும் என் கிட்ட இருந்து நீ காசு வாங்கலைன்னா.. நாளைக்கே உண்மையாலுமே எனக்கு காசு ஏதாவது தேவைப்பட்டாலோ, இல்ல வேற ஏதாவது ஹெல்ப் தேவைன்னா கூட பண்ணுன்னு நான் உன் கிட்ட கேக்க மாட்டேன். உன்ன வான்னு கூப்பிடவும் மாட்டேன் பாத்துக்கோ." என்று அவனை மிரட்டினாள்.
எப்போதும் ஆண்களிடம் தனக்கு இது வேண்டும், அது வேண்டும், என்று முடிந்த வரை கேட்டு அவர்களுடைய காசில் அனைத்தையும் வாங்கி கொண்டு அவர்களை தனக்கு ஏற்றாற்போல் பயன் படுத்தி கொள்ளும் பெண்களை தான் இது வரை பார்த்து இருக்கிறான் விஷ்ணு. தானே விரும்பி இத்தனை முறை காசு வேண்டாம் என்று சொல்லியும், அதை கொடுத்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்ணை இப்போது தான் அவன் முதன் முதலில் பார்க்கிறான்.
என்னுடையவளுக்கு செலவு செய்வதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா..?? என்று ஒரு புறம் அவள் மேல் அவனுக்கு கோபம் வந்தாலும், இன்னொரு புறம் அவளுடைய இந்த குணம் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனால் வேறு வழி இன்றி அமௌன்ட் ஐ குறைத்தாவது அவளிடம் சொல்லலாம் என்று நினைத்தவன், 3,500 ரூபாயை பாதியாக குறைத்து 1500 ரூபாய் என்றான் அவளிடம்.
ஷாலினி: “அவ்ளோ தான் கேட்டாரா என்ன..??" என்று ஆச்சரியமாக கேட்டாள்.
விஷ்ணு: அவர் எனக்கு ரொம்ப தெரிஞ்சவர் தான். அதனால கம்மியா தான் வாங்கிட்டாரு.
ஷாலினி: “ஓ.. ஓகே..!!" என்றவள், தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து 1,500 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
விஷ்ணு: அதை பெற்று கொண்டவன், அதில் இருந்த ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து அவளிடம் கொடுத்து, “இதுல உன் சைன் போட்டு தா." என்றான்.
ஷாலினி: அவன் ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல் குழப்பமாக அவனை பார்த்தவள், “எதுக்கு..??" என்றாள்.
விஷ்ணு: பர்ஸ்ட் டைம் எனக்கு நீ இத குடுத்து இருக்கிற.. அது எப்படி நான் செலவு பண்ணுவேன்..?? அதான் இத ஒரு மெமரிஸ் காக எடுத்து வச்சுக்குறதுக்கு தான் உன் சைன் கேட்டேன். பிளேஸ் பொட்டு குடேன்..
அதை கேட்டு அவனை விசித்திரமாக பார்த்த ஷாலினி, அவனை மறுத்து பேச மனமின்றி அந்த 500 ரூபாய் தாளில் கையெழுத்து போட்டு கொடுத்தாள். அதை மகிழ்ச்சியாக பெற்று கொண்ட விஷ்ணு, அதை தன் சட்டை பாக்கெட்டில் வைத்தவன், “இனிமே இது என் ஹார்ட்க்கு க்ளோசா இருக்கட்டும்." என்று தன் நெஞ்சை தடவிய படி சொன்னான். பின் அவளை சாப்பிடுவதற்காக வெளியே அழைத்து சென்றான் விஷ்ணு. ஷாலினி தான் தனியாக இருப்பதை நினைத்து வருத்த பட கூடாது என்று தான் அவளிடம் அவன் ட்ரீட் கேட்டான். இருந்தாலும் விஷ்ணுவிற்க்கு அவளுக்கு இருக்கும் பண கஷ்டத்தில் அவளை அதிகம் செலவு செய்ய வைக்க மனமில்லை. அதனால் ஷாலினியை தன் பைக்கில் அமர வைத்து சென்று கொண்டு சென்று இருந்தவன், ஒரு தள்ளு வண்டி கடை முன் வண்டியை நிறுத்தினான்.
ஷாலினி: இங்க ஏன் ஸ்டாப் பண்ற..??
விஷ்ணு: கீழே இறங்கு. நம்ம இங்கவே சாப்பிடலாம்.
ஷாலினி: இங்கயா..?? ஆர் யூ சூர்..??
விஷ்ணு: ஏன் இந்த மாதிரி கடையில உனக்கு சாப்பிட பிடிக்காதா..??
ஷாலினி: அப்படி எல்லாம் இல்ல. இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி கடையில சாப்பிட்டதில்ல. ஆனா சாப்ட்டா நல்லா இருக்கும்ன்னு நினைச்சிருக்கேன். உனக்கு ஓகேன்னா இங்கயே சாப்பிடலாம்.
ஷாலினி இங்கேயே சாப்பிடலாம் என்று சொன்னவுடன், தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கு இருந்த ஒரு சேரை எடுத்து போட்டு அமர்ந்தவன், அவளுக்கும் ஒரு சேரை எடுத்து போட்டு அவளையும் அமர வைத்து விட்டு அவளுக்கு என்னேன்ன பிடிக்கும் என்று கேட்டு விஷ்ணு ஆர்டர் செய்து அவற்றை வாங்க, இருவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு பிடித்த அனைத்தையும் வயிறு முட்ட சாப்பிட்டும் மொத்தமாகவே 250 ரூபாய் தான் ஆனது. ஷாலினி தான் அந்த கடைக்காரருக்கு பணம் கொடுத்தாள்.
ஷாலினியை போல் விஷ்ணுவும் இன்று தான் முதல் முறையாக இது போன்ற கடைகளில் சாப்பிடுகிறான். அவனுடைய நண்பர்களோடு அவன் சாப்பிட வெளியே சென்றாலும், அவர்களை உயர்தர ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவனே செலவு செய்வான். இல்லை என்றால் அவர்களுக்கு சொந்தமான ஏதாவது ஒரு நட்சத்திர உணவகத்தில் இலவசமாக அனைவருக்கும் போதும் போதும் என்கிற அளவிற்கு உணவுகளை வாங்கி தருவான். இப்போது ரோட்டோர கடையில் சாப்பிடுவது அவனுக்கு புது அனுபவமாக இருந்தாலும், அவன் ஷாலினியுடன் இருப்பதால் சங்கடப்படாமல் அவளோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து சாப்பிட்டான்.
நாராயணன் பேலஸில்...
டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு ஒவ்வொருவராக அவரவர் அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். ஹரிக்கு கால் செய்தாள் செண்பகம். தன் நண்பனோடு ஹாஸ்பிடலில் இருப்பதால் தன்னால் வீட்டுக்கு வர முடியாது என்று சொன்ன ஹரி, இதற்கு மேல் தன்னுடைய அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தால்.. அவள் மேலும்.. மேலும்.. ஏதாவது கேள்வி கேட்டு கொண்டே இருப்பாள்; என்று நினைத்து அந்த கால் ஐ வேகமாக கட் செய்து விட்டான்.
அதனால் கடுப்பான செண்பகம், “நேரா நேரத்துக்கு எவனும் ஒழுங்கா வீட்டுக்கு வர மாட்டேங்குறான். இதுக்காகவே இவனுங்களுக்கு எல்லாம் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும். அப்ப தான் பொண்டாட்டிய பாக்கணுன்ற நெனைப்புலயாவது சீக்கிரம் வீட்டுக்கு வருவானுங்க." என்று புலம்பிய படி தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். தன்னுடைய அறைக்கு வந்த விஷ்வா, இன்று அவன் ஹாஸ்பிடலுக்கு சென்றதால் அவன் பார்க்காமல் பாதியில் விட்ட வேலையை தன்னுடைய லேப் டாப் ஐ எடுத்து வைத்து பார்க்க தொடங்கினான்.
இரவு பத்து மணி...
தன்னுடைய முகத்தை ஒரு நீண்ட கருப்பு சாலால் மூடி இருந்த மானசா, ஒரு 5 நட்சத்திர ஹோட்டலின் வாசலில் கால் டாக்ஸியில் வந்து இறங்கினாள். தன்னை யாரும் பார்க்கவில்லை என்று சுற்றி முற்றி பார்த்து உறுதி செய்து கொண்ட மானசா, அந்த ஹோட்டலுக்குள் சென்றாள். ரிசப்ஷனிஸ்ட் இடம் அறை எண் 108 -க்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்ட மானசா, அங்கு சென்று அந்த அறையின் கதவை மூன்று முறை தட்டினாள்.
ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் அந்த அறையின் கதவை திறந்து வெளியே எட்டி பார்த்தான். வந்திருப்பது மானசா தான் என்று உறுதி செய்த பின், அவளை உள்ளே விட்டு விட்டு அவன் வெளியே சென்று விட்டான். அந்த அறைக்குள் வந்த மானசா, கதவை சாத்தி தாளிட்டு விட்டு அங்கு இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். அப்போது பாத் ரூமில் தண்ணீர் விழும் சத்தம் அவளுக்கு கேட்டது.
அவன் தான் குளித்து கொண்டு இருக்கிறான் போல என்று நினைத்த மானசா, அவன் வெளியே வந்து தன்னிடம் எப்படி நடந்து கொள்ள போகிறானோ என்று நினைத்து பதட்டமானாள். அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. சில நிமிடங்களுக்கு பின் அந்த பாத் ரூமின் கதவு திறக்க பட்டது. அதில் இருந்து இடுப்பில் துண்டுடன் தலையில் நீர் சொட்ட சொட்ட அதை தன்னுடைய ஒரு கையால் துண்டில் துடைத்த படியே ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞன் வெளியே வந்தான்.
சிக்ஸ் பேக் வயிற்றுடன் மாடல் போல் கவர்ச்சியாக வந்து மானசாவிற்க்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவன், அவளிடம் ஒரு வார்த்தையும் பேச வில்லை. ஒரு நொடி அமைதியாக அவனையே குறு.. குறுவென்று.. அவனையே பார்த்து கொண்டு இருந்த மானசா, பின் எழுந்து அவன் அருகே சென்று... “நான் துவட்டி விடுறேன் சார்." என்றவள், அவன் கையில் இருந்த துண்டை வாங்கி அவனுடைய தலையை துவட்டி விட ஆரம்பித்தாள்.
அவனுடைய தலையை துவட்டிய படியே இன்று காலை பள்ளியில் நடந்தது முதல், ஹாஸ்பிடலில் நடந்தது வரை அவளுக்கு தெரிந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள். அவள் சொன்னது அனைத்தையும் பொறுமையாக கெட்டவன் ஒரு வில்லத்தனமான புன்னகையுடன், “விஷ்வாவுக்கு ஃபேமிலி சென்டிமென்ட் ரொம்ப அதிகமா இருக்கு. அதனால அவன அடிக்கிறதை விட, அவன் ஃபேமிலிய அடிச்சா தான் அவனுக்கு அதிகமாக வலிக்கும்." என்றான்.😁
மானசா: “எஸ் சார். அந்த ராகவி மட்டும் குறுக்க வரலைன்னா நான் இந்நேரம் சித்தார்த் கூட கிளோஸ் ஆயிருப்பேன். அவ எல்லாத்தையும் கெடுத்து இப்ப எனக்கு சஸ்பென்ஷன் வேற வாங்கி குடுத்திட்டா." என்று கோபமாக சொன்னாள். 😡🤬🔥
அவன்: ஆமா..!! நீ இப்படியே ரீசன் சொல்லிட்டே இரு. அங்க விஷ்வாவோட அம்மா அவனுக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க.
மானசா: இல்ல சார். ராகவிய அந்த ஸ்கூல்ல இருந்து துறத்துறதுக்கு பக்காவா ஒரு பிளான் ரெடி பண்ணி வச்சிருக்கேன். அத நான் எக்சீக்யூட் பண்றதுக்குள்ள அவளால என்ன சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.
அவன்: போதும்..!!! என்பது போல் அவள் முன் தன் கையை நீட்டி பேசி கொண்டு இருந்தவளை தடுத்தவன், “எனக்கு உன் கிட்ட இருந்து அப்டேட்ஸ் இல்ல... ரிசல்ட்ஸ் மட்டும் தான் வேணும். இங்க பாரு... அந்த விஷ்வாவோட வாழ்க்கையில யார் இருக்கணும், போகணும், வரணும்னு, இந்த பிரவீன் தான் முடிவு பண்ணணும். ஏன் அவன் எப்ப அழனும், எப்ப சிரிக்கணுன்றத கூட நான் தான் டிசைட் பண்ணுவேன்." என்றவன், மானசாவை பார்த்து சைக்கோ போல் ஆக்ரோஷமாக சிரித்தான். 😂🤣
அவன் சிரிப்பை பார்த்த மானசாவிற்கு உள்ளுக்குள் பயமாக தான் இருந்தது. அதனால் தன்னை அறியாமல் எழுந்து நின்றவளின் கால்கள் நடுங்கின. அது வரை சோபாவில் அமர்ந்து இருந்தவன், மானசா எழுந்து நிற்பதை பார்த்தவுடன், தானும் எழுந்து நின்று.. அவன் அனிந்து இருந்த துண்டை கழற்றி சோபாவில் விட்டடேறிந்தவன், “வர.. வர.. நீ இதுக்கு மட்டும் தான் நீ யூஸ் ஆகுற.." என்று சொன்ன படியே கட்டிலில் சென்று அமர்ந்தான். இப்போது அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்ட மானசா, தன்னுடைய அனைத்து ஆடைகளையும் கலைந்து விட்டு அவனுக்கு கட்டிலில் சேவை செய்ய தொடங்கினாள்.
நாராயணன் பேலஸில்...
ஷாலினியை அவளுடைய விட்டில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த விஷ்ணு, நிம்மதியாக அவனுடைய அறையில் உறங்கினான். நேரம் மணி 12 :00 ஐ கடந்து இருந்தது. இன்னும் விஷ்வா தன்னுடைய அறையில் லேப் டாப்பில் வேலை பார்த்து கொண்டு தான் இருந்தான். இன்னும் அவன் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறைய இருந்தாலும், அவனுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. அதனால் லேப் டாப்பை ஷட் டவுன் செய்து அதை ஓரமாக எடுத்து வைத்து விட்டு, தன் கண்ணை மூடி கட்டிலில் படுத்தான் விஷ்வா. அவனுக்கு இருந்த அதிக களைப்பின் காரணமாக கண்ணை மூடிய சில நொடிகளிலேயே ஆழ்ந்து உறங்கி விட்டான் விஷ்வா.
இரவு 2:00 மணி...
நன்கு அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த விஷ்வாவிற்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில்....
ஜான்வி ஆக்சிடெண்டில் இறந்த காட்சி தான் அது. ஆனால் சற்று அது வேறு மாதிரி இருந்தது. கார் இல் இருந்து வெளியே வீசி அடிக்க பட்ட விஷ்வா, தரையில் மயங்கி விழுந்து கிடக்கிறான். அவளுடைய வெள்ளை கவுன் முழுவதும் அவளுடைய ரத்தத்தால் சிவப்பாகி இருக்க... விஷ்வாவின் அருகே வந்த ஜான்வி; அவனை பிடித்து ஆட்டி மயக்கத்தில் இருந்து அவனை எழுப்ப முயற்சித்தவள், தன் வயிற்றில் இருந்த குழந்தையைக் காட்டி...“நம்ம குழந்தைய காப்பாத்து விஷ்வா..!!! ப்ளீஸ் வேக் ஆப்... நீ தான் அந்த குழந்தைய காப்பாத்தணும்..!!! விஷ்வா..!!! விஷ்வா..!!!" என்று அவள் கதறி அழ, அந்த காட்சியுடன் கனவு முடிந்தது.
அந்த கனவின் தாக்கத்தால் பதறி எழுந்த விஷ்வாவின் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து இருந்தது. அவனுக்கு மூச்சு விடக் கூட சிரமம் ஆக இருந்தது. அதனால் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக சிறிதளவு தண்ணீரை எடுத்து குடித்து விட்டு, ஒரு தலையணையை தன் மடியில் எடுத்து வைத்து கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான். தனக்கு வந்த கனவை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தான் விஷ்வா.
ஜான்வி இறந்த நாளில் இருந்து இது போன்ற கனவு அவனுக்கு தினமும் வந்து அவனை தொல்லை செய்து கொண்டு இருக்கிறது. தூக்கத்தில் இருக்கும் விஷ்வா, இந்த கனவு வந்தவுடன் பதறியடித்து இதே போல் தான் தினமும் எழுந்து உட்கார்ந்து விடுகிறான். அதற்கு பின் அவன் எவ்வளவு முயன்றாலும் அவனால் முன்பு போல் தூங்க முடிவதில்லை. அதனால் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷ்வா, தூக்க மாத்திரையை போட்டு தூங்கினாலும் மீண்டும் அந்த கனவு வந்து சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து விடுவான்.
அவன் எப்போது யோசித்து பார்த்தும் இந்த கனவு அவனுக்கு ஏன் வருகிறது என்று மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் காலப்போக்கில் இது தானாக சரியாகிவிடும் என்று நினைத்தவன் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அது சரி ஆகமல் இருப்பதால் முதலில் ஒரு சைகாட்ரிஸ்ட் ஐ சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்த விஷ்வா, மீண்டும் அவன் மூடி வைத்த லேப் டாப்பை திறந்து ஆபீஸ் வேலையை பார்க்க தொடங்கி விட்டான். எவ்வளவு பணம் இருந்தும் என்ன பிரயோஜனம்..?? நிம்மதியான தூக்கம் இன்றி தவிக்கிறான் இவன். இவனுடைய வாழ்வில் எப்போது ராகவி தேவதையாக வந்து இவனை மாற்றுவாளோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
- நேசம் தொடரும்....
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 49
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.