தாபம் 47

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 47: ரித்திகாவிற்க்கு ஆறுதல் சொன்ன வருண்

கௌத்தம்: நீ என்ன மாதிரியே இருக்க. உன்ன பாக்கும் போது என்னோட Female வர்சன பார்க்கிற மாதிரி இருக்கு.

ரித்திகா: ஏன் அப்படி சொல்றீங்க..??

கௌத்தம்: நானும் உன்னை மாதிரி தான். எனக்கு டான்ஸ் தான் எல்லாமே. என்னோட உலகத்துல நானும், என் டேன்ஸ் -ம் மட்டும் தான்.

ரித்திகா: சூப்பர். அப்ப நீங்க சொன்னது கரெக்ட் தான். நீங்களும், நானும், ஒன்னு தான்.

கௌத்தம்: “ஆமா. நம்ம ஒன்னு தான்." என்று சிறு புன்னகையுடன் 😁 சொன்னவன், சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு.. “நீ ஏதாவது டான்ஸ் காம்பிடேஷன்ல பார்ட்சுபேட் பண்ணி இருக்கியா..???" என்று கேட்டான்.

ரித்திகா: ஸ்கூல், காலேஜ், படிக்கும் போது நான் நிறைய காம்பெடிஷன்ல பார்டிசுபேட் பண்ணி வின் பண்ணிருக்கேன். எந்த காம்பிடேஷன் வந்தாலும் நானே போய் என் நேம குடுக்காம விட்டாலும் எங்க டீச்சர்ஸ்சே என் நேம லிஸ்ட் -ல என்ன கேக்காமையே கூட add பண்ணிருவாங்க.

கௌத்தம்: நெக்ஸ்ட் மன்த் சென்னையில ஒரு டான்ஸ் காம்பிடேஷன் இருக்கு. நான் அதுல பார்ட்டிசுபேட் பண்ணலாம்ன்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிற..??

ரித்திகா: “பார்ரா..!!! சூப்பர்.. கண்டிப்பா பார்டிசுபேட் பண்ணுங்க. உங்களுக்கு இருக்க டேலண்ட்டுக்கு நீங்க கண்டிப்பா வின் பண்ணுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆல் த பெஸ்ட்." என்றவள், அவனிடம் கை குலுக்குவதற்காக தன்னுடைய கையை அவன் முன் நீட்டினாள்.

கௌத்தம்: தன்னுடைய கையை அவள் முன் நீட்டி அவளுடைய கையோடு கை கோர்த்து குலுக்கியவன், “தேங்க்ஸ். பட் நான் அந்த காம்பிடேஷன்ல பார்டிசுபேட் பண்றதுக்கு நீ தான் மனசு வைக்கணும்." என்று சூசகமாக சொன்னான்.

ரித்திகா: அவன் சொன்னதை கேட்டு குழம்பியவள், “நா மனசு வைக்கணுமா... ஏன் அப்டி..??" என்று கேட்டாள். 🙄

கௌத்தம்: அந்த காம்பிடேஷன்ல கப்பிள்ஸ்சா தான் பார்டிசுபேட் பண்ண முடியும்.

ரித்திகா: ஓ.. நீங்க அப்ப யார் கூட சேந்து ஆட போறீங்க..??

கௌத்தம்: மக்கு ரித்திகா... உன்ன தான் என் கூட சேந்து ஆடுறியான்னு கேக்குறேன். புரியலையா உனக்கு...???

ரித்திகா: அட அப்டி சொல்றிங்களா..??

கௌத்தம்: ம்ம்.. அந்த காம்பிடேஷன்ல என் கூட சேந்து ஆடுவியா..?? அந்த காம்பிடேஷன் -ல வின் பண்ணா 10 லாக்ஸ் பிரைஸ் மணி தராங்க. எனக்கு அந்த பிரைஸ் மணிலலாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல. அந்த மாதிரி சேலஞ்சிங் ஆன டான்ஸ் காம்பிடேஷன்ல பார்டிசுபேட் பண்ணி ஜெயிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.

இப்ப தான் அதுக்கு கரெக்டான டைம் அமைஞ்சிருக்கு. இந்த மாதிரி கப்பிள் டான்ஸ் ஆடுறதுக்கு நமக்கு நம்ம பார்ட்னரோட கம்பர்ட்டபிளா இருக்கணும்.இது வரைக்கும் அப்படி எந்த பொண்ணு கூடையும் எனக்கு கம்பர்ட்டபிளா இருந்தது இல்ல. அதனாலேயே நான் இந்த மாதிரி காம்பிடேஷன்ல பார்டிசுபேட் பண்ணது இல்லை. அன்னைக்கு நீ ஆடும் போது என்ன அறியாம நானே உன் கூட வந்து சேந்து ஆடுனேன். நீ சொன்னா மாதிரி நம்ம சேந்து ஆடுனா கண்டிப்பா ஜெய்ப்போம். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ யோசிச்சு சொல்லு.

ரித்திகா: எனக்கும் அந்த மாதிரி டான்ஸ் காம்பிடேஷன்ல பாட்டிசுபேட் பண்ணி ஆடணும்னு ஆசை தான். ஆனா இப்ப நான் காய்ச்சல் வந்து படுத்து இருக்கேன். இதுல இருந்து நான் ரெக்கவர் ஆகி.. நம்ம எப்டி 1 மந்த் குள்ள பிராக்டிஸ் பண்ண முடியும்..?? அண்ட் இப்ப நான் காம்பிடேஷன் காக சென்னை வரைக்கும் போனும்ன்னு சொன்னா.. அதுக்கு அம்மா, அப்பா, வேற ஒத்துக்குவாங்களான்னு தெரியல.

கௌத்தம்: இந்த மந்த் இப்ப தானே ஸ்டார்ட் ஆகி இருக்கு.. நீ சீக்கிரம் சரியாகி வா. நம்ம பொறுமையா பிராக்டிஸ் பண்ணலாம். அண்ட் நான் ஆல்ரெடி அப்பா, அம்மா, கிட்ட பேசிட்டேன். உனக்கு ஓகேன்னா அவங்களுக்கும் ஓகே தான். உனக்கு ஹெவியான மூவ்மெண்ட்ஸ் லாம் தர மாட்டேன். நீ ஜஸ்ட் எனக்கு கூட இருந்து சப்போர்ட் பண்ணா போதும்.

ரித்திகா: என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..??

கௌத்தம்: நம்பிக்கை இருக்கிறதுனால தானே உன் கிட்ட கேக்குறேன்..??

ரித்திகா: “நீங்க என் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சு இருக்கும் போது அதை எப்படி நான் கெடுக்க முடியும்..??" என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😁

கௌத்தம்: அப்ப நீ என் கூட சேந்து ஆட ரெடியா..??

ரித்திகா: இந்த பிவர் சீக்கிரமா சரி ஆயிடுச்சுன்னா நானும் சீக்கிரமா டேன்ஸ் ஆட ரெடி ஆயிடுவேன்.

கௌத்தம்: “அதெல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும். நம்ம சேந்து ஆடுறோம், ஜெயிக்கிறோம்." என்றவன் hi-fi அடிப்பதற்காக அவள் முன் தன் கையை நீட்டினான்.

ரித்திகா: தன்னுடைய கையை நீட்டி அவனுடன் hi-fi அடித்தவள், “அந்த காம்பிடேஷன்ன பத்தி டீடெயில் ஆ சொல்லுங்க." என்றாள்.

கௌத்தம்: ஏப்ரல் 9 த் அன்னைக்கு காம்பிடேஷன். 8 த் அன்னைக்கி செலக்சன் இருக்கு. அதுல செலக்ட் ஆகுற 5 கப்பிள்ஸ் மட்டும் தான் மெயின் காம்பிடேஷனுக்கு குவாலிஃபை ஆவாங்க. சேலக்சனுக்கு 3 சாங்ஸ் செலக்ட் பண்ணி 3 சாங்கையும் வேற வேற ஸ்டைல் -ல ஆடணும்.

நம்ப அந்த காம்பிடேஷன்னுக்கு அப்ளை பண்றதுக்கே த்ரீ மினிட்ஸ் டான்ஸ் ஆடி அத ரெக்கார்ட் பண்ணி அனுப்பனும். அத பாத்துட்டு நல்லா ஆடுறவங்களை பில்ட்டர் பண்ணி அவங்க சேலக்சனுக்கு நமக்கு இன்விடேஷன் அனுப்புவாங்க. அது ரவுண்ட் 1 மாதிரி. அதுல செலக்ட் ஆகி இன்விடேஷன் கிடைச்சா சென்னையில நடக்கிற செலக்ஷன்ன அட்டென்ட் பண்ண நமக்கு சான்ஸ் கிடைக்கும். மெயின் கம்பிடேஷன் 24 ஹாவர்ஸ் டன்ஸ் சேலன்ஜ். நம்ம 24 மணி நேரம்மும் நிறுத்தாம டான்ஸ் ஆடணும். நம்ம ஸ்லோவா ஆடினாலும் நிறுத்தாம ஆடணும். அது தான் ருல்ஸ்.

ரித்திகா: “24 ஹாவர்ஸ் டன்ஸ் சேலன்ஜ்." கேக்கறதுக்கே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. நம்மளால முடியும் னன்னு நீங்க நம்புறீங்கள்ள... நான் உங்கள கண்டிப்பா டிசப்பாயின்ட் பண்ண மாட்டேன். லேட்ஸ் டூ இட்.

கௌத்தம்: நான் கேட்ட உடனே நீ இவ்ளோ கான்பிடன்ட்டா ஒகே சொல்லுவன்னு நான் நினைக்கல. தேங்க்ஸ். அண்ட் ஒன் மோர் திங்... யூ ஆர் வெரி இம்பிரசிவ் ரித்திகா.

ரித்திகா: தேங்க்ஸ். 😁😁😁

இப்படி இவர்கள் இருக்கும் இடத்தை மறந்து வெகு நேரமாக பேசி கொண்டு இருக்க... அதை பார்த்து கடுப்பான நர்ஸ், கௌத்தமை அந்த அறையில் இருந்து வெளியே போக சொன்னவள், ரித்திகாவை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினாள். தான் ரித்திகாவை அதிகமாக தான் தொந்தரவு செய்து விட்டோமோ என்று நினைத்த கௌத்தம், அமைதியாக அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.

அவன் வெளியே சென்ற பின்.. ரித்திகாவிற்க்கு போட பட்டு இருந்த டிரிப்ஸ் முடிய போவதை கவனித்து, அதை மாற்றி விட்டு அங்கு ஓரமாக இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள். ரித்திகாவிற்க்கு ஏற்கனவே மிகவும் சோர்வாக தான் இருந்தது. இதில் விடாமல் இவ்வளவு நேரம் கௌத்தமிடம் பேசியது அவளுடைய உடலை இன்னும் சோர்வாக்கி இருந்தது. அவளுக்கு இருந்த அதிகப்படியான சளியின் காரணமாக மூச்சு விடுவது கூட அவளுக்கு சற்று சிரமமாக தான் இருந்தது.

சில நிமிடங்களில் அது தானாக சரி ஆகி விடும் என்று நினைத்த ரித்திகா, இது பற்றி அங்கு இருந்த நர்ஸ் இடம் எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரம் ரித்திகாவையே கவனித்து கொண்டு இருந்த நர்ஸ், பணி சுமை காரணமாக அவளும் அதிக சோர்வில் இருந்ததால் அப்படியே சுவற்றில் சாய்ந்து தூங்கி விட்டாள். அது டின்னர் டைம் என்பதால் பெரும்பாலான நர்சுகள் சாப்பிடுவதற்காக சென்று இருந்தனர். அதனால் அந்த ஒரு நர்ஸை தவிர வேறு யாரும் ரித்திகாவின் அறையில் இல்லை. சிறிது நேரம் ஓய்வு எடுக்க நினைத்து தன்னுடைய கண்களை மூடிய ரித்திகா, தூங்க முயற்சித்தாள்.

வருணின் வீட்டில்....

தன்னுடைய அறையில் இருந்த பெரிய டி.வி. இல் சீரியல் பார்த்து கொண்டு இருந்தாள் செண்பகம். அப்போது அவளுக்கு புரோக்கர் ஆறுமுகத்திடம் இருந்து கால் வந்தது.

செண்பகம்: சொலுங்க ஆறுமுகம்.

ஆறுமுகம்: அம்மா... நம்ம வருண் தம்பியோட ப்ரொபைலை நிறைய பெரிய குடும்பத்துக்கு அனுப்பி வச்சு இருந்தேன் மா. எல்லாருமே நம்ம குடும்பத்தோட சம்பந்தம் பண்ண தயாரா இருக்காங்க. அதுல இருக்கிறதிலேயே நல்ல படிச்சு, அழகா இருக்குற பொண்ண செலக்ட் பண்ணி உங்களுக்கு வாட்ஸ் ஆப்ல அனுப்பிச்சி இருக்கேன்.

நம்ம குடும்பம் மாதிரியே அவங்களும் நல்ல பண்பாடு தெரிஞ்ச, பாரம்பரியமான குடும்பம். அந்த குடும்பத்துல பொண்ணு எடுத்தா நீங்க நினைச்ச மாதிரியே.. வருண் தம்பிக்கு அந்த பொண்ணு பொருத்தமா இருக்கும் மா.

செண்பகம்: வருணிற்க்கு இது இரண்டாவது கல்யாணம் தான்னும், சித்தார்த்த வர பொண்ணு நல்லா பாத்துக்கணும்ன்னும், அவங்க குடும்பத்துல தெளிவா சொல்லிட்டீங்களா...????

ஆறுமுகம்: அவங்க கிட்ட பேசும் போது முதல்ல நான் அத தான் மா சொன்னேன். எங்க பொண்ணுக்கு நாங்க எல்லா நல்லது, கெட்டதையும், சொல்லி குடுத்து தான் வளர்த்து இருக்கோம். போற இடத்துல எல்லாத்தையும் அனுசரிச்சு நடந்துப்பான்னு அவங்க அம்மா, அப்பா சொன்னாங்க. நானும் அந்த குடும்பத்தை பத்தி விசாரிச்சு பாத்தேன் மா. அவங்க ஜமீன் குடும்பம் மா. இன்னமும் அவங்க ஊர்ல அவங்க தான் பெரிய தலக்கட்டு.

அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க மட்டும் தான். நம்ம குடும்பத்தை பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே.. அதனால நான் நம்ம வருண் தம்பிக்கு அவங்க பொண்ண கேட்டவுடனே அவங்க நாராயணன் குடும்பத்தில சம்பந்தம் பண்றதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்னு சொன்னாங்க. நம்ப ஹரி தம்பியை பத்தியும் அவங்க நிறைய கேள்வி பட்டு இருக்காங்களாம்.

அதனால அவங்க பெரிய பொண்ண வருண் தம்பிக்கும், ரெண்டாவது பொண்ண ஹரி தம்பிக்கும், கல்யாணம் பண்ணி தர சம்மதம்ன்னு சொல்றாங்க. அந்த ரெண்டு பொண்ணுங்களுமே நம்ம குடும்பத்துக்கு பொருத்தமா இருக்காங்க மா. அவங்க ரெண்டு பேரோட டீடைல்ஸ்சையுமே நான் உங்களுக்கு வாட்ஸ்ஆப்ல அனுப்பி வச்சு இருக்கேன்.

நீங்க நாளைக்கே கல்யாணம்.ன்னு சொன்னா கூட பொண்ணு வீட்டுல ஓகே -ன்னு தான் சொல்லுவாங்க. அந்த பொண்ணுங்களை உங்களுக்கு புடிச்சு இருந்துச்சுன்னா.. நீங்க வருண் தம்பி கிட்டயும், ஹரி தம்பி கிட்டயும், ஒரு வார்த்தை கேட்டுட்டு எனக்கு நாளைக்கு என்ன முடிவுன்னு சொல்லுறீங்களா மா..???

செண்பகம்: கண்டிப்பா இன்னைக்கு அவங்க ரெண்டு பேர் கிட்டையும் பேசிட்டு உங்க கிட்ட நாளைக்கு என்னான்னு முடிவு சொல்றேன். நீங்க அவங்க குடும்பத்தை பத்தி சொன்னதுலையே என் மனசுக்கு திருப்தியா தான் இருக்கு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிறனும்ன்னு தான் பாக்கிறேன். அதுக்கு மேல எல்லாம் கடவுள் விட்ட வழி.

ஆறுமுகம்: எல்லா நல்லதா தான் நடக்கும் மா. நீங்க கவலை படாதீங்க. நான் நாளைக்கு உங்களுக்கு கால் பண்றேன். வெச்சிறட்டுமா மா..??

செண்பகம்: “ம்ம்ம்.. சரி பா." என்றவள், அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.

தன்னுடைய மகன்கள் வீட்டுக்கு வந்த பின் இது பற்றி அவர்களிடம் பேச வேண்டும் என்று நினைத்த செண்பகம், அது வரை தான் பார்த்து கொண்டு இருந்த டி.வி. சீரியலை மீண்டும் பார்க்க தொட்ங்கினாள்.

ஹாலில் அமர்ந்து இருந்த பிராத்தனா, கல்லூரிகளுக்கு இடையில் நேற்று நடந்து முடிந்த புட் பால் போட்டியின் போது எடுக்க பட்ட வீடியோவை தன்னுடைய மொபைலில் பார்த்து கொண்டு இருந்தாள். அதில் ஆட்ட நாயகன் பரிசு பெற்று வெற்றி பெற்ற அணியின் சிறந்த விளையாட்டு வீரனின் மீது அவளுடைய கண்கள் நிலைகுத்தி இருந்தது.

அவளுடைய காலில் தன்னுடைய ஒரு கையை ஊன்றி அதில் அவளுடைய கண்ணத்தை வசதியாக சாய்த்து வைத்து கொண்டு அந்த பத்து நிமிட வீடியோவை மீண்டும், மீண்டும், ப்ளே செய்து பார்த்து கொண்டு இருந்தாள் பிராத்தனா. பிராத்தனாவின் பக்கத்தில் அமர்ந்து தன்னுடைய அனைத்து ஹோம் வொர்க்களையும் எழுதி முடித்துவிட்டு இருந்த சித்தார்த், தன்னுடைய நோட்டு, புத்தகங்களை எடுத்து கொண்டு அவனுடைய அறைக்கு சென்றான்.

தன்னுடைய அறைக்கு வந்து அதை எல்லாம் அவனுடைய ஸ்கூல் பேக்கில் அழகாக அடுக்கி வைத்தவன், விளையாடுவதற்காக அவனுக்கு மிகவும் பிடித்தமான பூனை 🐈 பொம்மையை தேடினான். அந்த அறை முழுவதும் அவன் தேடியும், அந்த பொம்மையை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் ஹாலுக்கு வந்தவன், அங்கு இருந்த பிராத்தனாவிடம் தன்னுடைய பொம்மையை கண்டு பிடித்து தருமாறு கேட்டான்.

மொபைல் போனில் ஓடி கொண்டு இருந்த வீடியோவில் தன்னை தொலைத்து இருந்த பிராத்தனா, “நான் பிஸியா இருக்கேன் சித்தார்த். நீ போய் பாட்டி கிட்ட கேளு." என்றாள். தன்னுடைய முகத்தை கூட மொபைல் போனில் இருந்து அகற்றாமல். பிராத்தனா இப்படி சொல்லி விட்டதால்.. செண்பகத்தின் அறைக்கு ஓடி சென்ற சித்தார்த், அவளிடமும் அந்த பொம்மையை எடுத்து தருமாறு கேட்டான்.

மும்மரமாக டி,வி. இல் சீரியல் பார்த்து கொண்டு இருந்த செண்பகம், அதை தான் அப்புறம் தேடி எடுத்து தருவதாக சொல்லி அவனை அனுப்பி வைத்தாள். இப்போது தான் என்ன செய்வது என்று யோசித்த சித்தார்த், சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்த சுகந்தி இடம்.. “என் பூனை பொம்மைய காணோம். எடுத்து குடுங்க." என்று கேட்டான்.

சமையல் அறையில் பிஸியாக சமைத்து கொண்டு இருந்த சுகந்தி, சமைத்து முடித்து விட்டு அப்புறம் வந்து அதை தான் எடுத்து தருவதாக சித்தார்த்திடம் சொல்லி அவனை அங்கு இருந்து அனுப்பினாள். தான் இத்தனை முறை கேட்டும் அந்த பொம்மையை தனக்கு யாரும் எடுத்து தராததால் சோகமாக தன்னுடைய அறைக்கு வந்த சித்தார்த், தனியாக அவனுடைய பெட்டிற்க்கு வந்து அவனுடைய தலையை கீழே குனிந்த படி அமர்ந்து கொண்டான்.

அவனுடைய கண்கள் கலங்கியது. 🥺 ரித்திகா அவனிடம் யாரிடமும் எதையும் கேட்டு அடம் பிடிக்க கூடாது என்று சொல்லி இருந்ததால் யாரிடமும் அந்த பொம்மையை கேட்டு அடம் பிடிக்காமல் அவன் அமைதியாக இங்கு வந்து அமர்ந்து விட்டான். ஆனால் அவனுக்கு பிடித்தமான அவனுடைய பொம்மை காணாமல் போனது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. “எனக்கு என் மியா வேணும்" என்று மெல்லிய குரலில் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டு இருந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சத்தம் இன்றி தாரை தாரையாக வழிந்தது. 😭😭😭

நேற்று இரவு அவன் அந்த பூனை பொம்மையை தூக்கி போட்டு விளையாடி கொண்டு இருக்கும் போது அவனை அறியாமல் அந்த பொம்மையை அங்கே ஓரமாக இருந்த ஒரு மர கபோர்டிற்கு பின் சித்தார்த் தான் தூக்கி எறிந்து இருந்தான். அந்த கப்போர்ட் அவனுடைய கட்டிலுக்கு பின்னே இருந்தது. அந்த கபோர்டு -க்கும் சுவற்றிற்கும் நடுவே இருந்த கேப் இல் விழுந்து கிடந்த பூனை பொம்மை, தானாக எழுந்து நின்றது.

பின் அந்த பூனை பொம்மை மெதுவாக எழுந்து அந்த கப்போர்டின் மீது ஏறி நடந்து வந்தது. சித்தார்த் வேறு ஒரு பக்கம் பார்த்த படி அமர்ந்து இருந்ததால் அதை அவன் கவனிக்கவில்லை. சத்தம் இன்றி நடந்து வந்த அந்த பூனை பொம்மை, சித்தார்த்தின் காலுக்கு அருகில் வந்து அசைவு இன்றி படுத்து கொண்டது. தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு அங்கு இருந்து எழுந்த சித்தார்த், அவனுடைய அறையை விட்டு வெளியே செல்ல நடந்தான்.

அப்போது கவனிக்காமல் கீழே கிடந்த அந்த பூனை பொம்மையை மிதித்து விட்டான். பின் தான் எதையோ மிதித்து கொண்டு இருப்பதை உணர்ந்தவன், கீழே குனிந்து பார்த்தான். அது அவன் இவ்வளவு நேரம் தேடி கொண்டு இருந்த அதே பூனை பொம்மை தான். அந்த பொம்மை இப்போது அங்கே எப்படி வந்தது என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.

அந்த பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் அதை தன் கையில் எடுத்து கொண்டு ஹாலுக்கு ஓடி சென்றவன், மீண்டும் பிராத்தனாவின் அருகே அமர்ந்து கொண்டு ஹாலில் ஓடி கொண்டு இருந்த டி.வியை பார்க்க தொடங்கினான். சேனலை மாற்றி அவனுக்கு பிடித்த டோரிமோன் வரும் படி வைத்தவன், அந்த பூனை பொம்மையை தன் மடியில் வைத்து கொண்டு அதை கட்டி பிடித்த படி சந்தோஷமாக அந்த டி.வி. பிரோக்ராமை பார்த்து கொண்டு இருந்தான்.

நாராயணன் மருத்துவமனையில்...

ரித்திகாவின் அம்மா தனக்கு மிகவும் தலை வலிப்பதாக அவளுடைய கணவர் சுதாகரிடம் சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்ட கௌத்தம், ரித்திகாவின் அருகே இருந்து அவளை தான் பார்த்து கொள்வதாக சொன்னவன், அவர்கள் இருவரையும் கேன்டீனுக்கு சென்று ஒரு டீ குடித்து விட்டு வரும்படி சொன்னான். ரித்திகாவின் பெற்றோர்கள் இருவருமே மிகவும் வயதானவர்கள் என்பதால் ஒரே இடத்திலேயே வெகு நேரமாக அமர்ந்து கொண்டு இருப்பது அவர்கள் இருவருக்குமே சோர்வாக இருந்தது.

அதனால் கௌத்தம் அவர்களை டீ குடித்து விட்டு வருமாறு சொன்னது அவர்களுக்கும் சரி என்று பட்டதால் அவனை ரித்திகாவை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கேன்டீனுக்கு சென்றனர். அவர்கள் சென்ற பின், தன்னுடைய மொபைலை பார்த்த படி அங்கு இருந்த சேரில் அமர்ந்து கொண்டான் கௌத்தம். அந்த மருத்துவமனையின் மொட்டை மாடியில் அவனுடைய மேனேஜர் தர்ஷனுடன் நின்று கொண்டு இருந்த ஹரி, ஆராதனாவை எப்படி சமாதான படுத்துவது என்று அவனிடம் பேசி கொண்டு இருந்தான்.

“விடுங்க பாஸ். ஆராதனா மேடம் உங்கள ரொம்ப லவ் பண்றாங்க. அதனால தான் உங்களுக்காக சூசைட் பண்ற அளவுக்கு போயிருக்காங்க. ரொம்ப நேரம் அவங்களால உங்க மேல கோவமா இருக்க முடியாது. நீங்க வேணா பாருங்க.. நீங்களே அவங்க கூட பேசாம இருந்தாலும்.. அவங்களே உங்க கூட தானா வந்து பேசுவாங்க." என்று எதை எதையோ சொல்லி தர்ஷன் ஹரியை சமாதான படுத்த முயற்சித்து கொண்டு இருந்தான்.

தான் இருந்த அந்த மருத்துவமனையின் ரெஸ்ட்ங் ரூம் இன் கதவை சாத்திவிட்டு அந்த ஏரியாவில் இருந்து வெளியே வந்த வருண், மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் பாதையை நோக்கி நடந்த படி ஹரிக்கு கால் செய்து... “நான் வீட்டுக்கு போறேன். நீ வரியா டா..??" என்றான். ஹரிக்கு ஆராதனாவை தனியாக விட்டு விட்டு செல்வதற்கு மனம் இல்லாததால்.. “நான் வரல வருண் நீ போ." என்று சொல்லி விட்டு கால் ஐ கட் செய்தான்.

ஹரி இடம் பேசிவிட்டு தன்னுடைய மொபைலை பார்த்த படியே நடந்து வந்து கொண்டு இருந்தான் வருண். விஷ்ணுவின் பின்னே அவன் அனுப்பி இருந்த பாடிகார்ட்களிடம் இருந்து அவனுக்கு நிறைய அப்டேட்கள் மெசேஜ் ஆக வந்து இருந்தது. அதை கவனித்தவன், தரை தளத்தில் இருந்த வி.ஐ.பி வார்டின் அருகே போட பட்டு இருந்த சோபாவில் அமர்ந்து அதை எல்லாம் பார்க்க தொடங்கினான்.

விஷ்ணுவின் வீர.. தீர... சாகசங்களை எல்லாம் அவர்கள் அனுப்பிய மெசேஜ் மூலம் பார்த்து தெரிந்து கொண்ட வருண் புன்னகைத்தான். அதில் விஷ்ணுவும், ஷாலினியும், பைக்கில் செல்லும் புகைப்படங்கள் கூட இருந்தது. எதன் மேலும் நாட்டம் இல்லாமல் விளையாட்டு தனமாக சுற்றி கொண்டு இருந்த தன்னுடைய தம்பி ஒரு பெண்ணிற்காக இப்படி எல்லாம் செய்வானா என்று நினைத்த வருண், “ஒரு வழியா விஷ்ணு வளந்துட்டான் போல." என்று நினைத்து திருப்தியாக புன்னகைத்தான். 😁

அனைத்து மெசேஜ்களையும் பார்த்து முடித்து விட்டு தன்னுடைய மொபைல் போனை கோர்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு எழுந்தவன், வெளியே செல்ல திரும்பினான். அப்போது வி.ஐ.பி ஏரியா அவனுடைய கண்களில் பட, அவனுக்கு ரித்திகாவின் ஞாபகம் வந்தது. செல்வதற்கு முன் ஒரு முறை ரித்திகாவை பார்த்து விட்டு வந்து விடலாம் என்று நினைத்தவன், அவளுடைய அறைக்கு சென்றான்.

அந்த அறைக்கு வெளியே அமர்ந்து இருந்த கௌத்தம், மும்மரமாக தன்னுடைய மொபைலை பார்த்து கொண்டு இருந்ததால்.. வருண் ரித்திகாவின் அறைக்குள் சென்றதை அவன் கவனிக்கவில்லை. ரித்திகா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறைக்குள் வந்த வருணி கண்களில் முதலில் ஓரமாக அமர்ந்து சுவற்றில் சாய்ந்து அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த நர்ஸ் தான் தென்பட்டாள்.

அவளை புறக்கணித்த வருண், ரித்திகா பார்த்தான். பாதி கண்களை மூடிய நிலையில் மூச்சு விடுவதற்காக சிரம பட்ட ரித்திகா, திணறி.. திணறி.. மூச்சு வாங்கி கொண்டு இருந்தாள். மூச்சு திணறலால் சிரமப்பட்டு கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்த வருண், பதட்டம் அடைந்தான். அவனுடைய இதயம் வேகமாக துடித்தது. அதனால் ரித்திகாவின் அருகே ஓட்டி சென்றவன், அவளுடைய பெயரை சொல்லி சத்தமாக கத்தினான்.

அவன் போட்ட சத்தத்தால் தொந்தரவாகி.. பயந்து தூக்கத்தில் இருந்து கண் விழித்த அந்த நர்ஸ், வேகமாக ரித்திகாவின் அருகே வந்தாள். ரித்திகா மூச்சுக்காக சிரமப்பட்டு கொண்டு இருப்பதைப் பார்த்து பயந்துவள், வேகமாக அங்கு இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை ரித்திகாவிற்க்கு மாட்டிவிட்டாள். அரை மயக்கத்தில் பயத்தில் இருந்த ரித்திகா, தன் அருகே நிற்பது யார் என்று தெரியாமல் பயத்தில் வருணி கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

ரித்திகா பிடித்து இருந்த தன்னுடைய கையை அவனுடைய இன்னொரு கையால் மூடியவன், “ஒன்னும் இல்ல ரித்திகா பயப்படாத." என்று சொல்லி அவளை ஆறுதல் படுத்த முயன்றான். வருனிடம் இருந்து கிடைத்த ஆறுதலாலும், தனக்கு பொருத்த பட்டு இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கின் உதவியாலும், அவளுக்கு ஏற்கனவே கொடுக்க பட்டு இருந்த மருந்தின் தாக்கத்தாலும் அயர்ந்து தூங்கி விட்டாள் ரித்திகா.

ரித்திகாவின் மூச்சு சீராக வரும் வரை அவளுடைய கையை பிடித்து இருந்தவன், அவள் நார்மலான பின் தன்னுடைய கையை அவரிடம் இருந்து விடுவித்து கொண்டான். பின் அந்த நர்சை கோபமாக பார்த்த வருண், ஏன் இவ்வளவு கவன குறைவாக இருக்கிறாள்..?? என்று சரமாரியாக கேள்வி கேட்டு திட்டினான். வருணி அந்த ஆவேசமான பேச்சு அந்த அறைக்கு வெளியில் இருந்த கௌத்தமிற்க்கு தெளிவாக கேட்டது.

அதனால் ரித்திகாவிற்க்கு என்ன ஆனதோ என்று நினைத்து பதறியவன், அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள். அவன் உள்ளே வரும் போது, வருண் அந்த நர்ஸ் ஐ திட்டி கொண்டு இருந்ததை வைத்தே அங்கே என்ன நடந்து இருக்கும் என்று உடனே புரிந்து கொண்ட கௌத்தம், கோபத்தில் அவனும் தன் பங்கிற்கு வார்த்தைகளால் வறுத்து எடுத்தான். 😡🔥

வருண் தான் அந்த மருத்துவமனையின் முதலாளி என்று நன்கு அறிந்து இருந்த அந்த நர்ஸ், அவர்கள் இருவரும் மாறி மாறி தன்னை திட்டி கொண்டு இருப்பதை பார்த்து பயந்து போனவள், எங்கே தன்னுடைய வேலையே இந்த ஒரு சிறு தவறால் பறிபோய்விடுமோ என்று நினைத்து தயக்கமின்றி வருணி காலில் விழுந்து தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சினாள்.

அந்த நர்ஸ் இன் மீது அவனுக்கு வந்த கோபத்திற்கு அவளை வேலையை விட்டு அனுப்பி விடவேண்டும் என்று தான் நினைத்தான் வருண். ஆனால் அவள் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சியதால் மனமிறங்கியவன், அவளை சென்று டாக்டரை அழைத்து வருமாறு சொன்னான்.

அவள் வேகமாக ஓடிச்சென்று சீஃப் டாக்டரை அழைத்து வர, ரித்திகாவை செக் செய்த அந்த சீஃப் டாக்டர்; ரித்திகாவிற்க்கு இருந்த அதிக சளியின் காரணமாக தான் அவளுக்கு மூச்சு திணறல் வந்து இருப்பதாகவும், டியூப் வைத்து உள்ளே இருக்கும் சளியை வெளியில் எடுத்து விட்டால் அவளுடைய சுவாச குழாய் சீராகி இனி அவளால் ஆக்ஸிஜன் மாஸ்க் இன்றியும் சீராக மூச்சு விட முடியும் என்று சொன்னவர், பயப்படும் படி ரித்திகாவிற்க்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றார்.

டாக்டர் சொன்ன அனைத்தையும் பொறுமையாக அங்கு இருந்து கேட்ட வருண், அந்த டாக்டர் சென்ற பின், அந்த நர்ஸை எச்சரித்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே சென்றான். மெயின் கேட் ஐ நோக்கி சென்று கொண்டு இருந்த வருணை அவன் பின்னே வேகமாக வந்த கௌத்தம், அவன் அருகே சென்று.. “தேங்க்ஸ் சீனியர்" என்றான். அவனை பார்த்த வருண், உணர்ச்சியற்ற குரலில்.. “எதுக்கு..??" என்றான்.

கௌத்தம்: எல்லாத்துக்கும் நான் சீனியர்.

அவன் சொன்னதை கேட்ட வருண், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அங்கு இருந்து வெளியே சென்று விட்டான். வருண் தன்னுடைய கண்களில் இருந்து மறையும் வரை செல்பவனின் முதுகையே பார்த்து கொண்டு நின்றிருந்தான் கௌத்தம்.

- நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 47
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.