தாபம் 46

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 46: நீ, நான், நிலா.. நல்லா இருக்குல..??

முதன் முறையாக தான் அடைக்க பட்டு இருந்த கூண்டில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக பறக்கும் பறவை போல் மகிழ்ச்சியாக இருந்தாள் ஷாலினி. விஷ்ணுவோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன்னை அறியாமலேயே விஷ்ணுவால் ஈர்க்கப்பட்டு அவன் பக்கம் சென்று கொண்டு இருந்தாள் ஷாலினி. 😍🥰

நாம் சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது எத்தனையோ பேர் நம்மை கடந்து செல்வார்கள். அது போல் நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனையோ பேர் வானின் மேகங்களாய் நம்மை கடந்து சென்று இருப்பார்கள். ஆனால் சிலர் ஒரு சில சந்திப்பிலேயே நம்முடைய மனதிற்கு நெருக்கமாகி, நம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை நாம் அறியாமலே ஏற்படுத்தி விடுவார்கள். அப்படி தான் இருள் சூழ்ந்த ஷாலினியின் வாழ்க்கைக்குள் ஒளியாய் வந்தான் விஷ்ணு.

தான் இருந்த இடத்தில் இருந்தே அவனுடைய ஒரே ஒரு மொபைல் போனை மட்டும் பயன் படுத்தி தன்னுடைய கைகளில் சிறிதும் கறை படாமல், கரை படிந்து மங்கி போய் கிடந்த ஷாலினியின் வாழ்க்கையில் இருந்த அனைத்து குப்பைகளையும் அகற்றி, புது ஒளியை காட்டும் கலங்கரை விளக்கமாக மாறிவிட்டான் விஷ்ணு . இப்போது அவன் மட்டும் அவளுடைய வீட்டிற்கு செல்லவில்லை என்றால், எத்தனை நாள் இந்த கொடுமைகளை சகித்து கொண்டு அங்கேயே ஷாலினி வாழ்ந்திருப்பாள் என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.

இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை பற்றி யோசித்து கொண்டு இருந்த ஷாலினி, அமைதியாகவே ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க.. அவளை வேடிக்கை பார்த்து கொண்டு ரோட்டை சரியாக பார்க்காமல் சென்று கொண்டு இருந்த விஷ்ணு அவளை அழைத்தான்.

விஷ்ணு: ஒய்...

ஷாலினி: ம்ம்...

விஷ்ணு: என்ன இந்த பொண்ணுங்க எல்லாம சாட் பண்ணா தான் ஓகே.., ம்ம்ன்னு ரிப்ளே பண்றீங்கன்னு பாத்தா நேர்ல பேசுனா கூட இப்படி ம்ம்ம்... தானா...?? ஒழுங்கா வாய திறந்து பேச மாட்டியா நீ..??

ஷாலினி: “உனக்கு எல்லாம் நிறைய பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கம் இருக்கும். அதனால நீ லோடலோடன்னு பேசுவ. நான் எந்த பசங்ககிட்டேயும் பேசினது கிடையாது. அதனால எனக்கு இப்படி தான் பேச வரும்." என்று தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சொன்னாள்.

விஷ்ணு: “ஆமா..!! நான் அப்படி தான் எல்லார் கிட்டயும் ஜாலியா, ஃபிரென்ட்லியா பேசுவேன். உன்ன மாதிரி எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்றுன்னு வெச்சுட்டு இருக்க மாட்டேன்." என்று சிரித்து கொண்டே சொன்னான். 😂 🤣

ஷாலினி: “ஆமா.. ஆமா... நான் உர்றுன்னு தான் இருப்பேன். எப்ப பாத்தாலும் பசங்க கிட்ட இலிச்சு.. இலிச்சு.. சக்கரையா பேசிட்டு இருப்பாங்கள்ல அந்த மாதிரி பொண்ணு தான் உனக்கு செட் ஆகும். அவங்க கூட போய் பேசு. என் கூட ஏன் பேசுற..?? நான் பாட்டுக்கு அமைதியா தானே இருந்தேன்.. நீ தானே என்ன கூப்பிட்டு பேசுன..?? பேச பிடிக்கலைன்னா எதுக்கு பேசுற..??" என்று கோபமாக கேட்டாள். 😒🤨

விஷ்ணு: “அம்மா தாயே நான் சும்மா தான் சொன்னேன். நீ உடனே சாமி ஆடாத." என்றவன், சில நொடி இடைவேளைக்கு பின்.. “என்ன தான் நீ மூஞ்சிய உர்றுன்னு வச்சு இருந்தாலும்... நீ அழகாக தான் இருக்க ஷாலு மா." என்றான் குறும்பாக. ☺️😅😁

ஷாலினி: ஓ.. 😒🤨

விஷ்ணு: என்ன ஓ... ?? 😂

ஷாலினி: “அட போடா.." என்று சலிப்பாக சொன்னாள்.

விஷ்ணு: “என்னது டாாாாா வா...??" 😳🙄

ஷாலினி: ஆமா டா ..

விஷ்ணு: “சூப்பர் டி. உரிமை இருக்கவங்களை தானே இப்படி எல்லாம் கூப்பிட முடியும்.. நீ என்ன இனி இப்டியே கூப்டு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஷாலு. விஷ்ணு ஹாப்பி அண்ணாச்சி." 😍🥰 என்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் சிக்ஸர் அடித்தான்.

ஷாலினி: இப்ப நீ எதுக்கு என்ன டின்னு கூப்பிடுற..??

விஷ்ணு: அது என்ன நியாயம்..?? நீ மட்டும் என்ன டான்னு சொல்லலாம்.. நான் மட்டும் உன்ன டி போட்டு கூப்பிட கூடாதா..??

ஷாலினி: “சப்பா..." என்று பெருமூச்சு விட்டவள், “சரி பரவால்ல கூட்டுக்கோ போ..." என்று சலிப்பாக சொன்னாள்.

விஷ்ணு: “இப்ப எதுக்கு நீ இப்படி சலிச்சுகிற..?? நான் எவ்ளோ ஜாலியா இருக்கேன்.. நீ ஏன் அப்படி ஜாலியா இருக்க மாட்டேன்கிற..??" என்று அப்பாவியாக கேட்டான்.

ஷாலினி: ம்ம்... சந்தோஷமா இருக்கணும்ன்னா அதுக்கு ஒரு காரணம் வேணும். இப்ப நான் இருக்கிற நிலைமையில நான் எதை நினைச்சு ஜாலியா இருக்கணும்ன்னு சொல்ற..??

விஷ்ணு: எஞ்சாய் லிட்டில் திங்ஸ் ஷாலினி. சரி இப்ப நான் ஏன் ஜாலியா இருக்கேன்னு சொல்லு பாக்கலாம்..???

ஷாலினி: ஏன்னா உன் மனசுல எந்த கவலையும் இல்லை. அதனால நீ ஜாலியா இருக்க. எல்லாரோட வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காதுல்ல..

விஷ்ணு: “எனக்கு மட்டும் கவலையே இல்லைன்னு நான் உன் கிட்ட சொன்னேன் ஆ..??? இப்ப கூட எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்ன்னு உன் கிட்ட சொன்லனும்னு எனக்கு ஆசையா தான் இருக்கு. சொன்னா நீ என் கூட பேசாம போயிருவியோன்னு பயமா இருக்கு. இந்த மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் கவலை மனசுக்குள்ள இருக்க தான் செய்யும்.

ஆனா இந்த நிமிஷம் உன் கூட நைட்ல பைக் டிரைவ் போறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..??? இதே மாதிரியே உன் கூட லைப் லாங் இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. அது நடக்குமான்னு தெரியல. அதுக்காக நாளைக்கு என்ன நடக்கும்னு நினைச்சு இந்த நிமிசத்தை என்ஜாய் பண்ணாம இருக்க முடியுமா..??" என்றவன், சைடு கேப்பில் ஷாலினியின் மீது தனக்கு இருக்கும் காதலையும் சொல்லாமல் அவளிடம் சொல்லி விட்டான்.

ஏதோ ஒரு வேகத்தில் தன் மனதில் இருப்பதை எல்லாம் விஷ்ணு அப்படியே ஷாலினியிடம் சொல்லி விட்டான். ஆனால் இதை கேட்டு அவள் கோபப்பட்டு எங்கே பாதியிலேயே இறங்கி தானே தனியாக சென்று கொள்வதாக சொல்லிவிடுவாளோ என்ற பயம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

அவன் எதிர்பார்த்ததை போல் ஷாலினி இடமிருந்து எந்த நெகட்டிவான ரியக்சனும் வரவில்லை. அவள் பாஸிடிவ் ஆகவும் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவள் நெகட்டிவாக பேசாததே தனக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் என்று நினைத்த விஷ்ணு, மீண்டும் தைரியமாக பேச தொடங்கினான்.

விஷ்ணு: உண்மைய சொல்லு ஷாலினி... இந்த நைட் ரைட், சில்லுனு அடிக்கிற காத்து, நீ, நான், நம்மள வானத்தில இருந்து வேவு பாக்குற நிலா.. ஒரு மாதிரி இதெல்லாம் நல்லா இருக்கு தானே..??

ஷாலினி: ஆமா..!! நல்லா தான் இருக்கு. என்றவளின் உதட்டோரம் சிறு புன்னகை அரும்பியது. ☺️ 😁

விஷ்ணு: “என்ன வெட்கமா..??" என்று சிரித்து கொண்டே கேட்டான். 😂🤣

ஷாலினி: தன்னுடைய வெட்கத்தை அவனிடம் மறைத்தவள், வெளியில் சிடு சிடு என்று.. “ஒழுங்கா ரோட்ட பாத்து ட்ரைவ் பண்ணு. சும்மா எதையாவது பேசி கிட்டு இருக்கிற என்றாள். 😒

இவர்கள் இப்படி செல்ல சண்டை போட்ட படியே சந்தோஷமாக நாராயணன் பேலஸ்சை நோக்கி சென்று கொண்டு இருக்க... அவர்களுடைய பாதுகாப்பிற்காக வாரூனால் அனுப்ப பட்ட பாடிகார்டுகள் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து கொண்டு இருந்தனர்.

அப்போது நாராயணன் பேலஸில் சித்தார்த்தை இறக்கி விட்டு விட்டு, விஷ்ணு சொன்ன வேலையையும், சில ஆபீஸ் வேலைகளையும், முடித்துவிட்டு வருணி காரில் நாராயணன் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டு இருந்தான் சிவா. அப்போது ஷாலினியுடன் சந்தோஷமாக பைக்கில் சென்று கொண்டு இருந்த விஷ்ணு சிவாவை கடந்து சென்றான்.

ஷாலினியுடன் கடலை போட்ட படியே டிரைவிங்கில் இருந்த விஷ்ணு சிவாவை கவனிக்கவில்லை. ஆனால் வருணின் அந்த பெரிய விலை உயர்ந்த காரில் சென்று கொண்டு இருந்த சிவா, அவர்களை கவனித்தான். எப்போதும் பொறுப்பு இல்லாமல் விளையாட்டு தனமாக சுற்றி கொண்டு இருக்கும் விஷ்ணு இப்போது ஒரு பெண்ணிற்காக இத்தனை செய்வதை நினைத்து பார்த்த சிவாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் தன்னை விட வயதில் சிறியவர்கள் எல்லாம் கமிட்டாகி ஜோடியாக சுற்றும் போது தான் மட்டும் இப்படி இன்னும் சிங்கிளாக இருக்கிறோமே என்று நினைத்து வருத்த பட்டான்.

“என்ன பண்றது அவனுக்கு அமையுது.. நமக்கு அமையல.." என்று நினைத்தவன், ட்ரிவிங்கில் கவனம் செலுத்த தொடங்கினான். அப்போது அவனுடைய பர்சனல் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. டிஸ்ப்ளேவில் வெறும் தொலைபேசி எண் மட்டும் தெரிய... யாராக இருக்கும்..?? என்று நினைத்த படியே கால் ஐ அட்டெண்ட் செய்து பேசினான் சிவா. மறு முனையில் இருந்து ஒரு அழகான இளம் பெண்ணின் இதமாய் குரல் சிவாவின் காதுகளில் பாய்ந்தது.

அந்த குரலை கேட்ட உடனே அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் என்று அவன் கண்டு கொண்டான். ஆனால் அதை அவன் வெளியில் காட்டி கொள்ளவில்லை. சிவா காலை அட்டென்ட் செய்தும் பேசாமல் அமைதியாக இருந்ததால் அந்த பெண்ணே மீண்டும் “ஹலோ.. சிவா..." என்றவள், பின் தயக்கத்துடன்... “இது சிவா சார் நம்பர் தானே.. நான் அவர் கிட்ட பேசணும்." என்றாள்.

சிவா: ஒரு புன்முறுவலுடன்.. “ஆமா..!! இது என் நம்பர் தான். நான் தான் பேசுறேன். சொல்லுங்க.. நீங்க யாரு..??" என்றான் குரும்பாக. 😁

அவள்: நான் திவ்யா பேசுறேன் சார்...

சிவா: திவ்யான்னா..?? எந்த திவ்யா..??

திவ்யா: “இவனுக்கு எத்தன திவ்யாவ தெரியுமாம்....?? அப்படியே என்ன அதுக்குள்ள மறந்துட்ட மாதிரி எப்படி நடிக்கிறான் பாரு குரங்கு பையன்...." என்று நினைத்தவள், “மறந்துட்டீங்களா சார்.. நான் ஆரதனா பிரின்ட் திவ்யா பேசுறேன்." என்றாள்.

சிவா: ஓ.. நீங்களா.. சொல்லுங்க திவ்யா என்ன விஷயம்..??

திவ்யா: ஆராதனா இப்ப எப்படி இருக்கா..??

சிவா: இப்ப அவங்க நல்லா தான் இருக்காங்க. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம் -ன்னு டாக்டர் சொல்லிட்டாரு.

திவ்யா: “ ஓகே சார். இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. ஆராதனா ஃபேமிலி இருந்து அவளுக்கு மாத்தி மாத்தி கால் பண்ணிட்டே இருக்காங்க சார். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. விட்டா நேர்லையே கிளம்பி ஹாஸ்டலுக்கே வந்துருவாங்க போல. எனக்கு பயமா இருக்கு சார்." என்றவளின் குரலில் உண்மையான பதட்டமும், பயமும், அப்பட்டமாக தெரிந்தது.

சிவா: நீங்க ஏதாச்சும் சொல்லி சமாளிக்க ட்ரை பண்ணுங்க.

திவ்யா: அவ அண்ணன் எப்பயும் போல கால் பண்ணாங்க. அவங்களோட கால்ல ஆராதனா எப்பவுமே எடுக்க மாட்டா. நானும் எடுக்கல. அதனால அவரு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா அவ அண்ணனை தவிர அவ குடும்பத்துல இருக்குற மத்த எல்லார்கிட்டயும் பேசுவா. அவங்க அம்மா இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கால் பண்ணிட்டே இருக்காங்க.

நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சாலும் அவ அம்மா எனக்கு மனசு சரியில்ல மா. ஆரதானா கிட்ட பேசணும். அவள பேச சொல்லு ப்ளீஸ்ன்னு கெஞ்சுறாங்க. என்னால அவங்களை சமாளிக்கவே முடியல. ஆராதனாவ எப்படியாச்சும் அவ அம்மா கிட்ட பேச வைக்கனும்.

சிவா: ஒரு நொடி அமைதியாக இருந்தவன், “நான் இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் போயிட்டு இருக்கேன். நீங்க கிளம்பி ரெடியா இருங்க. போர வழில அப்படியே உங்கள பிக் அப் பண்ணிட்டு போறேன்." என்றான்.

திவ்யா: ஓகே சார் என்றவள் , கால் ஐ கட் செய்து விட்டு கிளம்பினான்.

திவ்யாவிடம் பேசி விட்டு காரை அவளுடைய ஹாஸ்டலை நோக்கி திருப்பி ஓட்டி கொண்டு சென்ற சிவா,

நேற்று நான் உன்னை…

பார்த்த பார்வை வேறு..

நீங்காத எண்ணமாக…

ஆனாய் இன்று… 😍

உன்னோடு நானும் போன...

தூரம் யாவும் நெஞ்சிலே… ❤️

ரீங்கார நினைவுகளாக…

அலையய் இங்கே மிஞ்சுதே… 🥰



நூலறுந்த பட்டம் போலே…

உன்னை சுற்றி நானும் ஆட…

கைகள் நீட்டி நீயும் பிடிக்க…

காத்திருக்கிறேன்… ☺️

இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன…??

கேட்க வேண்டும் உன்னை…

காலம் கை கூடினால்...😍❤️💫💫✨

என்ற பாடலை பாடிய படி டிரைவ் செய்தான்.

நாராயணன் மருத்துவமனையில்...

அவளுக்கு கொடுக்க பட்டு இருந்த மருந்தின் தாக்கத்தால் அது வரை நல்ல தூக்கத்தில் இருந்த ஆராதனா, வெகு நேரத்திற்குப் பிறகு கண் விழித்தாள். அவளுடைய கண்கள் முதலில் அந்த அறையை சுற்றி ஹரியை தான் தேடியது. அந்த அறையின் மூலையில் தன்னுடைய லேப் டாப்பை மடியில் வைத்த படி ஒரு சேர் இல் அமர்த்து சீரியசாக எதையோ டைப் செய்து கொண்டு இருந்தான் ஹரி.

அவனை கவனித்த ஆராதனா, அவனுடைய பெயரை சொல்லி அழைத்தாள். அவளுடைய குரல் மிகவும் மெதுவாக வந்ததால் அது ஹரி உடைய காதுகளை சென்றடையவில்லை. அதனால் சத்தமாக “ஹரி' என்று அழைத்தாள் ஆராதனா. அது வரை தூங்கி கொண்டு இருந்த ஆராதனா, திடீரென்று தன்னை இவ்வளவு சத்தமாக அழைத்ததால்... பதறி போன ஹரி; தன்னுடைய லேப் டாப்பை அப்படியே கீழே வைத்து விட்டு வேகமாக அவள் அருகில் ஓடி வந்து “என்ன ஆச்சு..?? என்ன ஆச்சு..??" என்று பதட்டமாக விசாரித்தான்.

ஆராதனா: “கூல்..!! கூல்..!! ஏன் இவ்ளோ பதட்ட படுற..?? ஐ அம் ஆல்ரைட்." என்று அவனை சமாதான படுத்துவதற்காக வெளியில் சொன்னாலும், “நமக்கு ஒன்னுன்னா இவன் இவ்ளோ பதர்றானே..!!" என்று தன் மனதிற்குள் நினைத்து மகிழ்ந்தாள். 😍 🥰

ஹரி: நீ அவ்ளோ சத்தமா கூப்பிட்ட உடனே உனக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு பயந்துட்டேன்... அதான்..

ஆராதனா: பர்ஸ்ட் மெதுவா தான் கூப்பிட்டேன். நீ கவனிக்கல. அதான் ரொம்ப சத்தமா கூப்பிட்டுட்டேன் போல. சாரி.

ஹரி: சாரி. நான் வொர்க்ல பிஸியா இருந்ததுனால கவனிக்கல.

ஆராதனா: இட்ஸ் ஓகே விடு. இப்ப டைம் என்ன..??

ஹரி: 7: 30

ஆராதனா: ஆஃப்டர்நூன் தூங்க போனேன். அதுக்குள்ள இவ்ளோ நேரம் ஆய்டுச்சா..??? ரொம்ப நேரம் தூங்கிட்டேன்.

ஹரி: பரவால்ல ரெஸ்ட் எடு.

ஆராதனா: என்ன இங்க அட்மிட் பண்ணதுல இருந்து நீ இங்க தானே இருக்க..?? வீட்டுக்கு போகலையா...??

ஹரி: உன்ன இங்க இப்படி விட்டுட்டு நான் எப்படி வீட்டுக்கு போவேன்..??

ஆராதனா: ஆனா ஆன்டி ஏன் நீ வீட்டுக்கு வரலைன்னு கேப்பாங்கள்ல..??

ஹரி: அதுலாம் நிறைய தடவை கால் பண்ணி கேட்டுடாங்க. என் ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்ல அதனால அவன் கூட ஹாஸ்பிடலுக்கு சொல்லிட்டேன்.

ஆராதனா: ஆராதனா கூட தான் இருக்கேன் மான்னு உன்னால சொல்ல முடியாதுல்ல..??

ஹரி: ஏன் சொல்ல முடியாதுன்னு உனக்கே தெரியம்ல ??

ஆராதனா: எல்லாம் தெரியும். இப்ப என் கூட இங்க ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு சொல்றதுக்கே பயப்படுற நீ என்ன டிஸ்சார்ஜ் பண்ணி எப்படி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவ..???

ஹரி: வீடு வரைக்கும் ஈஸியா கூட்டிட்டு போயிருவேன். ஆனா அம்மாவ சமாளிச்சு உன்ன வீட்டுக்குள்ள எப்படி கூட்டிட்டு போறது -ன்னு தான் தெரியல.

ஆராதனா: ஓ... அப்ப எந்த தைரியத்தில நீ எத பத்தியும் யோசிக்காம இப்படி கேஷுவலா இருக்க...??

ஹரி: எல்லாம் வருண் இருக்குற தைரியம் தான்.

ஆராதனா: வருண் அண்ணா ஜான்வி அக்கவ லவ் பண்றேன்னு வந்து ஆண்டி கிட்ட சொல்லும் போது எவ்வளோ பிரச்சனை நடந்துச்சு அவங்க கல்யாணம் நடக்குற வரைக்குமே.. அதெல்லாம் நீ மறந்துட்டியா..?? சித்தார்த் பொறக்குற வரைக்குமே ஜான்வி அக்காவ ஆண்டி ஏத்துக்கல.

ஜான்வி அக்கா மேல அவங்களுக்கு எந்த கோவமும் இல்ல. பட் அவங்களவே இவங்க ஏத்துகிறதுக்கு அவ்வளவு நாள் ஆச்சு. என்ன எல்லாம் ஆண்டி விரோதியா நினைச்சுட்டு இருக்கிறாங்க. என்ன எப்படி அவங்க ஏத்துக்குவாங்க..??

ஹரி: நீ கேட்ட கொஸ்டின்லையே ஆன்சர் இருக்கு. எந்த பிரச்சினை வந்தாலும் அதை எல்லாத்தையும் சமாளிச்சு வருண் உனக்கும், எனக்கும் எப்படியோ கல்யாணம் பண்ணி வச்சிருவான். அம்மா நம்ம மேல கோவமா தான் இருப்பாங்க. சித்தார்த் மாதிரி நமக்கும் மூணு, நாலு, பசங்க பொறந்தா அப்படியே அவங்களுக்காக நம்மளையும் மன்னிச்சு ஏத்துப்பாங்க.‌ ப்ராப்லம் சால்வ்ட்.

ஆராதனா: ஓ... 1, 2லாம் இல்ல. உனக்கு 3, 4 தான் வேணும் ஆ..???

ஹரி: ஏன் உனக்கு வேணாமா..??

ஆராதனா: “வேணான்னு நான் எப்ப சொன்னேன்..??" என்றவள், வெட்கத்துடன் சிரித்தாள். ☺️😁

ஹரி: சிவா கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு. திவ்யாவ கூட்டிட்டு இங்க வரானாம்.

ஆராதனா: ஒகே வரட்டும். நான் உன் கிட்ட ஒன்னு கேக்கட்டுமா..??

ஹரி: என்ன சொல்லு...

ஆராதனா: நீ லாஸ்ட்டா என் கிட்ட எப்ப ஐ லவ் யூ சொன்னன்னு உனக்கு ஞாபகம் இருக்கா..??

ஹரி: இல்லை என்று தன் தலையை ஆட்டினான்.

ஆராதனா: நீ தான் என் கிட்ட டைரக்டா லவ்வ சொன்னதே இல்லையே.. அப்புறம் எப்படி உனக்கு ஞாபகம் இருக்கும்..??

ஆராதனாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை அதனால் அமைதியாகவே இருந்தான் ஹரி.

ஆராதனா: “நாம ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்தப்பவும் நீ சொல்லல. இப்ப நான் உனக்காக செத்து பிழைச்சு வந்து இருக்கேன். இப்ப கூட அந்த மூணு வார்த்தைய என் கண்ண பாத்து சொல்றதுக்கு உனக்கு மனசு வரலல்ல..???" என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். 🥺

ஹரி: எனக்கு தோணும் போது கண்டிப்பா நானே சொல்றேன் ஓகே வா..??? இப்ப நீ தேவை இல்லாதத யோசிச்சு ஸ்டிரஸ் ஆகாத. உனக்கு பசிச்சுதுன்னா சொல்லு. நான் சாப்பாடு கொண்டு வர சொல்றேன்.

ஆராதனா: உனக்கு அது எல்லாம் தேவை இல்லாதது தான் விடு.

ஹரி: ஆராதனா ப்ளீஸ் இப்ப இது வேண்டாமே....

ஆராதனா: நான் தான் விடுன்னு சொல்லிட்டனே ஹரி. விட்று...

ஹரிக்கு ஏற்கனவே ஆராதனாவின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. இதில் இப்போது அவள் தன் இடமே.. “ஒரு தடவை ஆச்சு என் கிட்ட ஐ லவ் யூ சொல்லி இருக்கியா..??" என்று கேட்டது இன்னும் அவனை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ஆராதனாவை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று அவனுக்கு தெரியவில்லை. அதனால் அவளிடம் பேசுவதை தவிர்த்து விட்டான்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும் வரை யோசிக்கும் இவன் ஏன் தன்னிடம் அவனுடைய காதலை மட்டும் வெளிப்படையாக காட்ட மாட்டேன் என்கிறான் என்று நினைத்து... நினைத்து... வேதனையில் வாடி கொண்டு இருந்தாள் ஆராதனா. அப்போது அவர்கள் இருந்த அறையின் கதவை திறந்த படி சிவாவுடன் உள்ளே வந்தாள் திவ்யா. ரெத்த வெள்ளத்தில் பார்த்த தன்னுடைய தோழி இப்போது நலமாக இருப்பதை காண திவ்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஓடி சென்று மருத்துவமனை கட்டிலில் அமர்ந்து இருந்த ஆராதனாவை கட்டி பிடித்து கொண்ட திவ்யா, அழ தொடங்கினாள். 😭 திவ்யாவை இப்போது பார்த்ததால.. இல்லை ஹரி அவளிடம் பேசிய விதத்தினாலா... என்று தெரியவில்லை. ஆராதனா வின் கண்களில் இருந்தும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.😭 தான் அழுததால் தான் உடம்பு சரி இல்லாத ஆராதனாவும் அழுகிறாள் போல என்று நினைத்த திவ்யா, தன்னுடைய கண்ணீரை கட்டு படுத்தி கொண்டு ஆராதனாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டாள்.

திவ்யா: ஏன் டி இப்படி பண்ண... நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா..???

ஆராதனா: “சாரி. என்னால தான் எல்லாருக்கும் தேவை இல்லாத கஷ்டம் ஆயிடுச்சு." என்று “தேவை இல்லாத" என்ற வார்த்தையை அழுத்தி சொன்னவள், ஓர கண்ணால் அங்கு நின்று கொண்டு இருந்த ஹரியை பார்த்தாள்.

அதை கவனித்த ஹரி குற்ற உணர்ச்சியால் தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டான்.

திவ்யா: எதுக்கு டி லூசு மாதிரி சாரி சொல்ற..?? எங்க யாருக்குமே உன்ன பார்த்துக்கறது ஒன்னும் கஷ்டம் இல்லை. நீ கண்ணு முழிக்கிறதுக்கு முன்னாடி உனக்கு எதுவும் ஆகிற கூடாதேன்ற பயம் தான் இருந்துச்சு. என்ன விட ஹரி தான் ரொம்ப பயந்துட்டாரு தெரியுமா..??

இத்தன பேரு உன் மேல இவ்வளவு பாசம் வச்சு இருக்கும் போது எப்படி தான் எல்லாரையும் விட்டுட்டு உன்னால போக முடிவு எடுக்க முடிஞ்சுதுன்னு தான் எனக்கு தெரியல. உங்க அம்மா உனக்கு கால் பண்ணிட்டே இருக்காங்க. ப்ளீஸ் முதல்ல அவங்க கிட்ட பேசு. பாவம் டி அவங்க. நீ இப்படி பண்ணது எல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சா அத அவங்களால தாங்கவே முடியாது.

ஆராதனா: நீ அவங்க கிட்ட எதுவும் சொல்லிடாத. இத பத்தி தெரிஞ்சா உடனே கிளம்பி வந்துருவாங்க.

திவ்யா: நான் எதுவும் சொல்லல நீ அவங்க கிட்ட பேசு. என்றவள், தன்னிடம் இருந்த ஆராதனாவின் மொபைலை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

ஆராதனா: “பேசுறேன்." என்றவள், தன்னுடைய மொபைலை வாங்கி அதில் தனக்கு வந்து இருந்த தவறிய அழைப்புகள் அனைத்தையும் பார்த்தாள். பின் தன்னுடைய அம்மாவிற்கும், பிற நண்பர்களுக்கும் கால் செய்து பேசினாள்.

இதற்கிடையில் சிவா, நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில் நிறுத்தி வைக்க பட்டு இருந்த அவனுடைய காரை அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவனிடம் கொண்டு வந்து நாராயணன் மருத்துவமனையில் நிறுத்தி விட்டு, சாவியை தன் இடம் கொடுக்க சொல்லி இருந்தான். அதனால் திவ்யா ஆராதனாவிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்ப.. தானே அவளை ஹாஸ்டலில் டிராப் செய்வதாக சொல்லி சிவா அவளை கூட்டி கொண்டு பார்க்கிங்ற்கு நடந்தான்.

திவ்யாவும், சிவாவும் அங்கு இருந்து சென்ற பின் ஆராதனா தன்னுடைய மொபைல் போனை பார்த்தபடி அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளுடைய அந்த அமைதி ஹரியை ஏதோ செய்தது. அவள் ஏதாவது பேசி சண்டை போட்டு இருந்தால் கூட அதற்கு இவனும் பதில் பேசி அந்த பிரச்சனையை முடித்து இருப்பான். ஆனால் அவளே இவை அனைத்தையும் தவிர்க்க நினைத்து அமைதியாக இருக்க, அதையே நாமும் செய்து விடலாம் என்று நினைத்தவன், தன்னுடைய லேப் டாப்பை எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தான் ஹரி.

ரித்திகா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறையில் அவளுடைய பெட்டிற்க்கு அருகே ஒரு சேரை எடுத்து போட்டு அமர்ந்தான் கௌத்தம். ரித்திகாவின் கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டு இருந்தது. சோர்வாக ஹாஸ்பிடல் பெட்டில் படுத்து இருந்தாள்.

ரித்திகா: நீங்க இன்னுமா இங்கே இருக்கீங்க..?? வீட்டுக்கு போகலையா..??

கௌத்தம்: வீட்டுக்கு போய் மட்டும் அங்க என்ன பண்ண போறேன்னு தோணுச்சு. அதனால போகல.

ரித்திகா: கஷ்டமா இருக்கு.

கௌத்தம்: எதுக்கு..??

ரித்திகா: என்னால இத்தனை பேர் கஷ்ட படுறத பாக்குறதுக்கு தான்.

கௌத்தம்: அப்ப சீக்கிரம் சரி ஆகி வா.

ரித்திகா: வரேன். வந்து ஒரு நல்ல ஃபொல்க் சாங்கா போட்டு மூச்சு வாங்க டான்ஸ் ஆடணும்.

கௌத்தம்: இப்ப கூட டான்ஸ் பத்தி தான் யோசிப்பியா..??

ரித்திகா: ஆமா..!! டான்ஸ் தவிர வேற எதை பத்தியும் நான் அதிகமா யோசிச்சது இல்ல.

கௌத்தம்: நீ என்ன மாதிரியே இருக்க. உன்ன பாக்கும் போது என்னோட Female பிமேல் வர்சன பார்க்கிற மாதிரி இருக்கு.

ரித்திகா: ஏன் அப்படி சொல்றீங்க..??

கௌத்தம்: நானும்
உன்னை மாதிரி தான். எனக்கு டான்ஸ் தான் எல்லாமே. என்னோட உலகத்துல நானும், என் டேன்ஸும் மட்டும் தான்.

ரித்திகா: சூப்பர். அப்ப நீங்க சொன்னது கரெக்ட் தான். நீங்களும், நானும், ஒன்னு தான்.

- நேசம் தொடரும்....

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 46
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.