அத்தியாயம் 45: அவளை வாழ விட மாட்டேன்
ஷாலினியை பார்த்த விஷ்ணு, “வா உன்னோட திங்க்ஸை எல்லாம் பேக் பண்ணலாம்." என்றவன், அவள் கையை பிடித்து அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்றான். விஷ்ணுவை மறுத்து பேசாத ஷாலினி, அவன் பின்னே அமைதியாக சென்றாள். விஷ்ணு சொன்னதை கேட்ட கௌசல்யா, செல்லும் அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள். 😒🤨
தன்னுடைய அறைக்கு வந்த ஷாலினி அவளுடைய பீரோவை திறந்தாள். அதில் இருந்த ஆடைகளை பார்த்த ஷாலினிக்கு அதை தன்னுடைய புது வீட்டிற்கும் கூட எடுத்து செல்ல வேண்டுமா என்று மனம் வலித்தது. அதனால் எதையும் எடுத்து வைக்காமல் அதையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். பீரோவை திறந்து வைத்து விட்டு எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டு இருக்கும் ஷாலினியை பார்த்த விஷ்ணு, “எதையும் எடுத்து வைக்கலையா..??" என்று கேட்டான்.
ஷாலினி: இதெல்லாம் எடுத்துட்டு போலாமா, வேணாமான்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.
விஷ்ணு: “உன்னோட ரூம் -ல உன்னோட திங்ஸ் தானே இருக்கும்... அத எடுத்துட்டு போறதுக்கு எதுக்கு யோசிக்கணும்..??" என்று குழப்பமாக கேட்டான். 🙄
ஷாலினி: இது என்னோடதா இருந்தா நான் ஏன் யோசிக்க போறேன்..??
விஷ்ணு: “அப்ப இதெல்லாம் உன்னோடது இல்லையா..??" என்று அந்த பீரோவில் இருந்த ஆடைகளை சுட்டி காட்டி கேட்டான்.
ஷாலினி: இல்லை என்று தன் தலையை ஆட்டியவள், நான் சம்பாதிச்ச காசுல கூட இதெல்லாம் தேவை இல்லாத செலவுன்னு என்ன ஒரு புது ட்ரெஸ் வாங்க விட மாட்டாங்க என் சித்தி. கௌசல்யாவும், நானும், சேம் சைஸ்ல தான் இருப்போம். அதனாலேயே அவ யூஸ் பண்ணி வேணான்னு தூக்கி போட்ட டிரஸ்ஸ தான் எனக்கு தருவாங்க.
நான் திபாவளிக்கு மட்டும் தான் அடம் புடிச்சு புது டிரஸ் வாங்குவேன். நான் பொறந்த அன்னைக்கு தான் எங்க அம்மா இறந்தாங்க. அதனால என் வாழ்க்கையில நான் என் பர்த்டேவ செலிபரேட் பண்ணதே இல்ல. தீபாவளிக்கு வாங்கின டிரஸ்சும், நான் இப்போ இங்க ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்றதுக்காக வாங்கின யூனிஃபார்ம் மட்டும் தான் என்னோட டிரஸ்.
விஷ்ணு: அப்ப உன்னோட டிரஸ்ஸ மட்டும் எடுத்துட்டு வா. இனி மேல் போடறது எல்லாமே புதுசா வாங்கிக்கலாம். 365 நாளுக்கும் டெய்லி புதுசா டிரஸ் போடு. இனிமே உன்ன யாரு கேக்க போறா...
ஷாலினி: “அதெல்லாம் வீண் செலவு. எனக்கு அவ்ளோ ஆசை எல்லாம் இல்ல. சும்மா ஒரு பத்து, பாஞ்சு டிரஸ் வாங்கி வச்சா போதும். வருஷம் Full ah அதையே போட்டுக்க வேண்டியது தான். என்று சொன்னவள், தன்னுடைய அறையை சுட்டி காட்டி, “இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் என் காசுல நான் வாங்குறதுக்கு நான் சாப்பிடாம, அழுது, அடம் பிடிச்சு வாங்கினது. சோ இதெல்லாம் கண்டிப்பா இங்க இருந்து எடுத்துட்டு போகணும்." என்றவளின் மனதில் அந்த ஒவ்வொரு பொருளுக்கும் அவளுக்கும் இருந்த அந்த நினைவுகள் படமாக ஓடியது. அதை நினைத்து பார்த்தவளின் கண்கள் கலங்கியது. 🥺
விஷ்ணு: ஷாலினி தன் மனதில் இருப்பதை வாயை விட்டு வெளியே சொல்லவில்லை என்றாலும் அவனால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவள் அருகே சென்றவன், “பழச பத்தி யோசிச்சு யோசிச்சு வருத்தப்படாத ஷாலினி. எல்லாமே ஒரு நாள் மாறும்ன்னு இத்தன நாளா நெனச்சிட்டு இருந்துருப்பில.. அந்த ஒரு நாள் இன்னைக்கு தான்ன்னு நெனச்சுக்கோ. நான் சொல்றேன்.. நீ வேணா பாரு... இனி மேல் உன்னோட லைஃப்ப நீ எப்படி எல்லாம் வாழனும்னு ஆசை பட்டியோ அந்த மாதிரி தான் இனி வாழ போற." என்று தீர்க்கதரிசி போல் சொன்னான்.
வெலியில் அவன் அவளை சமாதான படுத்துவதற்காக பேசி இருந்தாலும் அவன் மனதிற்குள் ஷாலினியை ஒரு மகாராணியாக வாழ வைக்க வேண்டும் என்று ஆசை பட்டான். ஷாலினிக்கு விஷ்ணு சொன்னது போல ஒரு நாள் அவளுடைய வாழ்க்கை அழகாக மாறும் என்று எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் பேசியது அவளுடைய மனதிற்கு இதமாக இருந்தது.
விஷ்ணுவை அங்கு இருந்த கட்டிலில் அமர சொன்ன ஷாலினி, ஒரு சிறிய ட்டராவல் பேகை எடுத்து அவளுடைய ஆடைகளை மட்டும் அதில் எடுத்து வைத்தவள், பின் அவளுடைய சர்டிபிகேட்டுகள் மற்றும் முக்கியமான பொருட்களை அந்த பையில் பத்திரமாக எடுத்து வைத்தாள். அங்கு இருந்த சிறிய பொருட்களை ஒரு அட்டை பெட்டியில் போட்டு பேக் செய்தாள். ஷாலினி மட்டும் தனியாக வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்தவன், தானே அவளுக்கு உதவ முன் வந்தான்.
ஷாலினிக்கு தன்னுடைய சுமைகளை மற்றவர்களின் மீது ஏற்றி வைத்துவிட்டு நாம் அமைதியாக இருப்பது சுத்தமாக பிடிக்காது. அதனால் அவன் கேட்டவுடன் மறுத்து விட்டாள். எங்கே தான் மீண்டும், மீண்டும் போய் கேட்டு கொண்டு இருந்தால் தன்னிடம் கோபப்படுவாளோ என்று நினைத்தவன், அமைதியாய் அமர்ந்து அவளை பார்த்து ரசிக்க தொடங்கினான். 😍🥰
ஷாலினி ஆடையை மாற்றி கொண்டு வெளியே வரும் போது கௌசல்யாவின் குறுக்கீட்டால் அவன் அவளை சரியாக பார்க்கவில்லை. இப்போது தான் ஷாலினியை ஒழுங்காக பார்த்தான் விஷ்ணு. சசியின் கை விரல் ஷாலினியின் கண்ணத்தில் அப்படியே பதிந்திருந்ததால் அதை மறைப்பதற்காக எக்ஸ்ட்ரா மேக்கப் போட்டு இருந்தாள் அவள். இப்போது அவள் வேலை செய்து கொண்டு இருப்பதால் ஆங்காங்கே பூத்த வியர்வை மொட்டுகளால் அவளுடைய மேக்கப் சிறிதளவு கலைந்து இருந்தது.
இன்று ஷாலினி ஒரு சாதாரண டார்க் ப்ளூ கலர் குர்த்தாவும், பிங்க் கலர் லெகின்ஸ் பேண்டும், பிங்க் கலர் சாலும், அணிந்து இருந்தாள். அந்த ஆடையை பார்க்கும் போதே அது எவ்வளவு பலசானது என்று அவனால் தெறிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவனுக்கு அவள் கௌசல்யாவின் ஆடையை தான் எப்போதும் அனிவாள் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அதை நினைத்து பார்த்தவனுக்கு இப்போதும் இவள் அணிந்து இருப்பது கூட அவளுடைய ஆடையைக தான் இருக்க கூடும் என்று தோன்றியது.
விஷ்ணுவிற்கு நிறைய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் படும் கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்து இருக்கிறான். நடுத்தர குடும்பங்களில் இந்த மாதிரி விசயங்கள் சாதாரணமாகவே நடக்கும் என்று அவன் அறிந்திருந்தாலும், அது ஷாலினிக்கு நடப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஷாலினிக்கும் அவனுக்கும் திருமணமான பின் அவளை கூட்டி கொண்டு இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து கடைகளிலும் சுற்றி அவளுக்கு புடித்த அனைத்தையும் வங்கி தர வேண்டும் என்று தன் மனதில் குறிப்பு எடுத்து கொண்டான் விஷ்ணு.
ஷாலினி உடைய இந்த எளிமையான தோற்றம் கூட அவனை ஈர்த்தது. இருபத்தி நான்கு மணி நேரமும் தங்களை பகட்டாக காட்டி கொள்ளும் பெண்களை விட ஷாலினி அவன் கண்களுக்கு அழகாக தெரிந்தாள். இப்படியே அவன் ஷாலினியை ரசித்து கொண்டு அவளை பற்றி யோசித்து கொண்டு இருக்க, அவனுக்கு வந்த கால் அவனுடைய சிந்தனையை கலைத்தது. ஷாலினியின் வீட்டு வாசலில் ஒரு டெம்போ உடன் வந்து நின்று கொண்டு இருந்த மதன் தான் விஷ்ணுவிற்கு கால் செய்து இருந்தான்.
மதனின் காலை அட்டெண்ட் செய்து பேசிய விஷ்ணு, “இரு டா நான் வெளிய வரேன்." என்றவன், ஷாலினியை பார்த்து.. “டெம்போ வந்துருச்சு ஷாலினி. ஹெல்ப்புக்கு ரெண்டு பேர வர சொல்லி இருக்கேன். நீ எதையும் எடுத்து வைக்க வேண்டாம். அவங்களே பாத்துப்பாங்க. உன் பேக மட்டும் எடுத்துட்டு வா போலாம்." என்றவன், மதனுடன் போனில் பேசிய படியே ஷாலினியின் வீட்டிற்கு வெளியே வந்தான்.
அங்கு நடப்பது அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த கௌசல்யாவிற்கு பயமாக இருந்தது. அவளை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லாத நிலையில்... வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து ஷாலினியை பற்றி தன்னிடம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று நினைத்து பதறினாள். ஷாலினியை அந்த வீட்டின் இலவச வேலைக்காரியாக தன் இத்தனை நாளாக வைத்து இருந்தார்கள். இப்போது ஷாலினி இந்த வீட்டை விட்டு சென்று விட்டால் அனைத்து வேலையும் தன் தலையில் வந்து தானே விழும் என்ற பயம் வேறு கௌசல்யாவிற்கு இருந்தது.
அதனால் எப்படியும் இவளை வீட்டை விட்டு செல்ல விட கூடாதே என்று நினைத்தவள், வேகமாக பக்கத்து வீட்டிற்கு ஓடி சென்று அங்கு இருந்தவர்களிடம் தன்னுடைய அம்மாவிற்கு அவசரமாக ஒரு கால் செய்ய வேண்டும் என்று கெஞ்சி அவர்களுடைய போனை வாங்கி மாலதிக்கு கால் செய்தாள். ரவியை மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டு மாலதி இன்னும் அங்கேயே தான் காத்திருந்தாள். அப்போது அவளுக்கு கௌசல்யாவிடம் இருந்து கால் வர.. அதை அட்டன் செய்து பேசினாள்.
கௌசல்யா: “அம்மா.. அந்த ஷாலினி அவனோட வீட்டை விட்டு போறா.. பெரிய வண்டிலாம் இங்க இருந்து திங்ஸ் எடுத்துட்டு போரதுக்கு வர வச்சு இருக்காங்க மா. எதை எதை இங்க இருந்து எடுத்துட்டு போக போறான்னு தெரியல. நீ சீக்கிரம் கிளம்பி வா மா. நான் மட்டும் இங்க இருந்துட்டு என்னால என்ன பண்ண முடியும்..??" என்று அவசரமான குரலில் சொன்னாள்.
மாலதி: என்னா டி நமக்கு இப்படி சோதனை மேல சோதனையா வருது.. இப்ப தான் உங்க அப்பா அவருக்கு வேலை போயிருச்சுன்னு போன் பண்ணி சொன்னாரு. இப்ப என் வீட்டையே இவ மொத்தமா காலி பண்ணிட்டு போக பார்க்கிறாளே... அவ சரியான எமகாதகி என்ன வேணாலும் செய்வா. நான் உன் அப்பாவுக்கு போன் பண்ணி சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு போக சொல்றேன். செத்த பாத்துக்கோ டி.. வீட்டையே மொத்தமா தொடச்சி தூக்கிட்டு போய்ட போறா...
கௌசல்யா: நான் என்ன மா செய்றது..?? அவ தனியா இருந்தா கூட ஏதாவது பேசலாம். இப்ப புதுசா வேற இன்னும் மூணு பசங்க வந்து இருக்கானுங்க. என்னால என்ன செய்ய முடியும்..??
மாலதி: அமுக்குனி மாதிரி இருந்துட்டு எத்தன பேரை மயக்கி வச்சுருக்கிறா பாரு இவ.. சரி நீ வை. நான் உங்க அப்பன்னுக்கு கால் பண்றேன்.
கௌசல்யா: “ம்ம்ம்.. சீக்கிரம் வா மா." என்றவள், அந்த அழைப்பை துண்டித்தாள்.
கௌசல்யாவிடம் பேசிய பின் சசிக்கு கால் செய்த மாலதி, தன் வீட்டில் நடப்பது பற்றி தன் மகள் அவளிடம் சொன்னது அனைத்தையும் தெளிவாக சொன்னாள். ஏற்கனவே அதித கோபத்திலும், விரக்தியிலும், இருந்த சசிக்கு மாலதி ஷாலினியை பற்றி சொன்னது இன்னும் எரிச்சலூட்டியது. 😡🤬
சசி: “அவ எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன..?? எவனாவது இத்தரை பையனோட ஓடி போய் கடந்து பிச்சை எடுக்கட்டும். என் வீட்ல நல்ல சோறு போட்டு வளத்தேன்ல அந்த கொழுப்பில தான் அவ இதுலாம் பண்ணிட்டு இருக்கா. எப்படியோ போய் சாவட்டும். இனி மேல் அவ அங்க போனா, இங்க போனான்னு சொல்றதுக்கு எல்லாம் எனக்கு கால் பண்ணாத. நானே யாரு என்ன வேலைக்கு ஓலை வெக்க சொன்னாங்கன்னு தெரியாம ஒவ்வொருத்தன் கிட்டயும் போயி கெஞ்சி... கெஞ்சி... விசாரிச்சிட்டு இருக்கேன். இருக்கிற பிரச்சனைல நீ வேற சும்மா நோய்யு நோய்யின்னு... கால் பன்னிகிட்டு.. மொதெல்ல போன வை." என்று பொரிந்து தள்ளினான்.
மாலதி: அதுக்கு இல்லைங்க.. அவ ரெண்டு, மூணு, பசங்களை வேற வர வச்சு பொருள் எடுத்துட்டு போறதுக்கு பெரிய வண்டியையும் கொண்டு வந்து வாசல்ல நிறுத்தி வச்சுருக்காலாம். எனக்கு பயமா இருக்குங்க. வீட்ல இருக்கிற எல்லா பொருளையும் வாரி வழிச்சு போட்டுட்டு போய்ட போறா... நான் ரவி கூட ஹாஸ்பிடல்ல இருக்கேன். நீங்க போய் கொஞ்சம் என்னான்னு பாருங்க..
சசி: “ஆமா..!!! நீ உங்க அப்பன் வீட்டில இருந்து வண்டி வண்டியா சீர் கொண்டு வந்து அந்த வீடு முழுசும் இறக்கி வச்சிருக்க.. அதை எல்லாம் அவ அள்ளிட்டு போய்ட போறான்னு நீ ரொம்ப கவலை படுற.. மூடிட்டு போன வை டி." என்று தேல் ஐ போல் வார்த்தையால் கொட்டிவிட்டு மாலதியின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கால் ஐ கட் செய்து விட்டான்.
“இனி இந்த கூறு கெட்ட மனுசன் கிட்ட பேசுனா வேலைக்கு ஆகாது. நாம தான் போய் எதாச்சும் பண்ணணும்." என்று நினைத்த மாலதி, ரவியை அப்படியே விட்டு விட்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள். ஒரு ஆட்டோவை பிடித்து தன்னுடைய வீட்டிற்கு விரைந்தவள், வரும் வழியில் அவளுடைய அம்மாவிற்கு போன் செய்து ரவியை அட்மிட் செய்து இருக்கும் ஹாஸ்பிடலை பற்றி சொல்லி அங்கே சென்று அவனை பார்த்து கொள்ளுமாறு சொன்னாள்.
மாலதி அவ்வளவு வேகமாக அடித்து பிடித்து அங்கே வந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவள் அங்கே வருவதற்குள் ஷாலினி தன்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு விஷ்ணுவுடன் கிளம்பி இருந்தாள். தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த மாலதி அனைத்து இடங்களிலும் ஏதாவது பொருட்கள் குறைந்து இருக்கிறதா என்று சுற்றி பார்த்தாள். அனைத்து பொருட்களும் அதன் இடத்தில் அப்படியே இருந்தது.
இறுதியாக ஷாலினி அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தாள் மாலதி. அங்கு சில குப்பைகளும், கௌசல்யா ஷாலினிக்கு கொடுத்த பழைய ஆடைகள் தவிர வேறு எந்த பொருட்களும் இல்லை. தன்னுடைய பீரோ முதல் பெட்சிட் வரை அனைத்தையும் அங்கு இருந்து எடுத்து சென்று இருந்தாள் ஷாலினி. அதை பார்க்க பார்க்க மாலதியின் வயிறு பற்றி எரிந்தது. அவளுடைய காதுகளிலில் இருந்து புகை வராத குறைதான். 😡🤬🔥
இப்போதே ஷாலினி எங்கு இருந்தாலும் அவளை தேடி கண்டு பிடித்து அவளுடைய இரு கன்னங்களிலும் மாறி.. மாறி.. பளார் பளார்... என்று அறைய வேண்டும் என்று மாலதியின் கைகள் பரபரத்தன. அதனால் கௌசல்யா முதல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை அனைவரிடமும் ஷாலினி எங்கே சென்று இருக்கிறாள் என்று தெரியுமா..?? என்று விசாரித்து பார்த்தாள். இருந்தும் அவள் எவ்வளவு முயன்றும் அவளுக்கு ஷாலினியை பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
அது அவள் மாலதிக்குள் எரிந்து கொண்டு இருந்த நெருப்பில் இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது. அந்த ஷாலினி எங்கே போனாலும், யாருடன் இருந்தாலும், அவளை நன்றாக வாழ விட கூடாது என்று (Instant) இன்ஸ்டன்ட் ஆக ஒரு சபதம் எடுத்தாள்.
மணி இரவு 7:00 ஐ கடந்து இருக்க...
நீண்ட தார் சாலையில் வேகமாக ஷாலினியின் பொருட்களை சுமந்து கொண்டு ஒரு டெம்போ சென்று கொண்டு இருந்தது. அந்த டெம்போவின் பின் மதன் அவனுடைய இரண்டு நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தான். அவர்களின் பின்னே ஷாலினியை தன்னுடைய காதல் வாகனத்தில் ஏற்றி கொண்டு சிறகடித்து பறந்து கொண்டு இருந்தான் விஷ்ணு. 🏍️ ❤️
ஷாலினியை எப்போதும் புடவையிலேயே பார்த்து பழகி இருந்த விஷ்ணுவுக்கு இன்று முதல் முறையாக அவளை இந்த மாதிரி குர்தாவில் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. முதலில் அவனுடைய பைக்கில் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் போது தன்னையும், அவனையும், யாராவது சேர்த்து வைத்து பார்த்து விட்டால் இதை வைத்து வீட்டில் பிரச்சினை ஆகி விடுமோ.. என்று நினைத்து ஒரு பயத்திலேயே இருந்தாள் ஷாலினி. ஆனால் இப்போது அவளுடைய மனதில் அந்த மாதிரி எந்த பயமோ, தயக்கமோ, இல்லை.
முதன் முறையாக தான் அடைக்க பட்டு இருந்த கூண்டில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக பறக்கும் பறவை போல் மகிழ்ச்சியாக இருந்தாள் ஷாலினி. விஷ்ணுவோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன்னை அறியாமலேயே விஷ்ணுவால் ஈர்க்கப்பட்டு அவன் பக்கம் சென்று கொண்டு இருந்தாள் ஷாலினி. 😍🥰
- நேசம் தொடரும்....
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 45
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.