தாபம் 44

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 44: புதிய வாழ்க்கை... புதிய பயணம்...


தனக்கு நாராயணன் பேலஸில் வீடு வேண்டும் என்று பிரின்ஸிபல் சாரதாவிற்கு ஒரு மெயில் போடுமாறு ஷாலினியிடம் சொன்னான் விஷ்ணு. ஷாலினி சாரதாவுக்கு மெயில் செய்வதற்குள் சிவாவிற்கும், செக்யூரிட்டி ஆபீஸர்களுக்கும், சாரதாவிற்கும், மெசேஜ் அனுப்புகிறான் விஷ்ணு. ஷாலினியின் பூட்ட பட்டு இருந்த அறைக்கு வெளியே நின்று அந்த அறையே பார்த்து கொண்டு இருந்த மாலதி, பின் விஷ்ணு இங்கே வந்து இருப்பதை பற்றி தன்னுடைய கணவன் சசிக்கும், அவளுடைய தம்பி ரித்திகாவிற்க்கும், சொல்வதற்காக அவர்களுக்கு கால் செய்கிறாள். சசி, ரவி, இருவருமே மாலதியின் கால் ஐ எடுக்கவில்லை. சசி தான் வேலை பார்க்கும் ஆபீசுக்கு சென்று கொண்டு இருக்க, ரவியோ விஷ்ணுவால் அனுப்ப பட்ட ஆட்களால் அடி வாங்கி ஒயின் ஷாப் வாசலில் மயங்கி கிட்ந்தான்.

மாலதி தொடர்ந்து மாற்றி மாற்றி தன்னுடைய கணவனுக்கும், தம்பிக்கும், கால் செய்து கொண்டே இருந்தாள். இந்த முறை மாலதி ரவிக்கு கால் செய்யும் போது அவளுடைய கால் அட்டென்ட் செய்யப்பட்டது. ஆனால் மற்றொரு முனையில் இருந்து மாலதிக்கு கேட்டது ரவி உடைய குரல் அல்ல. அதனால் குழப்பம் அடைந்தாள் மாலதி. அந்த ஒயின் ஷாப்புக்கு குடிப்பதற்காக சென்ற ஒரு குடிமகன் தான் இந்த மொபைல் காலால் தொந்தரவாகி அந்த கால் ஐ அட்டெண்ட் செய்து மாலதியிடம் பேசினான். அவன் ஏற்கனவே அரை போதையில் இருந்தான். இன்னும் அதை முழு போதையாக ஆக்க தான் அவன் இங்கே வந்திருந்தான். அதனால் மாலதியிடம் பேசும்போது போதையில் உளறினான்.

அவன்: ஹலோ இங்கிட்டு நானு.. அங்கிட்டு யாரு..??

மாலதி: “என்னது நான் யாரா.??? முதல்ல நீ யார்ன்னு சொல்லு டா... என் தம்பி போன எடுத்து நீ ஏன்டா பேசுற...??" என்று கோபமாக கேட்டாள். 😡

அவன்: "ஓய்.. கள்ளி... நீ மட்டும் உன் பேரை சொல்ல மாட்டேங்குற... நான் மட்டும் என் பேரை சொல்லனுமா..?? நான் சொல்ல மாட்டனே.. இந்த கதிரேசன் ரொம்ப தெளிவான ஆளு. என்னை யாரும் ஏமாத்த முடியாது." என்றவன், சிரித்தான். 😂😂😂😂

மாலதி: “யார்ரா இவன்..!!! சரியான குடிகாரன்... நல்லா குடிச்சுட்டு உளறுறான்... ஒரு வேளை இவங்களோட சேந்து தான் இந்த ரவி பையன் குடிச்சிட்டு இருக்கான் போல.. இந்த மாதிரி கண்ட நாயோட சேந்து குடிக்காதன்னு சொன்னா கேக்குறானா இவன்... இப்ப குடிச்சுட்டு எந்த ஒயின் ஷாப்பில மட்டையாகி கிடக்கிறான்னு தெரியலயே.. ச்சை.." என்று நினைத்தவள், “எப்பா கதிரேசா... இப்ப நீ எங்க இருக்க...??” என்றாள் பொறுமையாக.

அவன்: பார்ரா என்ன உனக்கு தெரியுமா...?? என் பேரை கரெக்டா சொல்ற..??

மாலதி: இப்ப நீ தான டா சொன்ன.....

அவன்: “ஆமால்ல...!!! நான் தான் மறந்துட்டேன்." என்றவன், மீண்டும் வாய்விட்டு சிரித்தான். 😂😂🤣

அவன் பேசியது மாலதியை எரிச்சலூட்டியது. 🤬 இருந்தாலும் அவனிடம் பொறுமையாகவே பேசினாள். ஏனென்றால், இப்போது புதிதாக வந்து இருப்பவனை ஓடி போய் ஷாலினி திருமணம் செய்து கொண்டு விட்டாள், தயக்கம் இன்றி வாய் கூசாமல் தன்னுடைய அம்மாவும், தம்பியும், இப்போது தான் பள்ளி படிப்பை முடித்து இருக்கும் தன்னுடைய மகள் கௌசல்யாவை ரவிக்கு திருமணம் செய்து தர சொல்லி கேட்டு விடுவார்களோ என்று நினைத்து அந்த குடிகாரனுடன் பேசி ரவி எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு, விஷ்ணு இந்த வீட்டை விட்டு செல்வதற்கு முன் எப்படியாவது தன்னுடைய தம்பியை இங்கே அழைத்து வர வேண்டும் என்று நினைத்து அந்த குடிகாரனுடன் எப்படி எப்படியோ போராடி பேசியவள், ரவி எங்கே குடித்துவிட்டு மயங்கி கிடக்கிறான் என்று தெரிந்து கொண்டு ஒரு ஆட்டோவை வர சொல்லி அந்த இடத்திற்கு விரைந்தாள்.

இப்போது அந்த வீட்டில் ஷாலினி, விஷ்ணு, கௌசல்யா, மட்டுமே இருந்தனர். இப்போது தான் ஒரு மெயில் அனுப்பினால் மட்டும் தனக்கென ஒரு வீட்டை உடனே ஒதுக்கி கொடுத்து விடுவார்களா என்ன..?? என்று நினைத்த ஷாலினி, விஷ்ணு சொன்னதால்.. என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே.. என்று நினைத்து நம்பிக்கை இல்லாமல் சாரதாவிற்கு மெயில் அனுப்பினாள் ஷாலினி.

ஷாலினி மெயில் அனுப்பிய அடுத்த கணமே.. “காத்திருங்கள். நான் உங்களை சிறிது நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்." என்று ஆங்கிலத்தில் ஒரு ரிப்ளை வந்தது. இந்த உடனடி ரிப்ளையை ஷாலினி எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் ஆச்சரியம் அடைந்தாள். அதே ஆச்சரியத்துடன் விஷ்ணுவை அழைத்தவள், தனக்கு வந்த மெயிலை காட்டி..

“விஷ்ணு இங்க பாரு அவங்க ரிப்ளை பண்ணிருக்காங்க. எனக்கு நம்பிக்கையே இல்லை. நீ சொல்றேன்னு தான் நான் மெயில் பண்ணினேன். எப்படியும் இதெல்லாம் பாக்க மாட்டாங்க. பாத்தா கூட கண்டுக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா அடுத்த செகண்ட்டே அவங்க ரிப்ளை பண்ணிட்டாங்க. சூப்பர்ல... இப்ப தான் எனக்கு வீடு கிடைக்கும்ன்ற நம்பிக்கையே வந்துருக்கு." என்று மகிழ்ச்சி பொங்கும் கண்களுடன் அவனை பார்த்து சொன்னாள். 🤩

கண்ணீர் நிறைந்த கண்களோடு ஷாலினியை பார்த்த விஷ்ணுவிற்கு இப்போது அவளை மகிழ்ச்சியாக பார்க்கும் போது தான் நிம்மதியாகவும், திருப்தியாகவும், இருந்தது. 😊 அதே மகிழ்ச்சியுடன்... “நான் தான் சொன்னேன்ல உனக்கு கண்டிப்பா வீடு கிடைக்கும்னு... இனிமே உன்ன கஷ்ட படுத்துற யாரும் உன் லைஃப்ல இருக்க மாட்டாங்க." என்று அர்த்தமாக சொன்னவன், ஷாலினியை தலை முதல் கால் வரை பார்த்தான்.

அவள் ஒரு சாதாரண நைட்டி தான் அணிந்து இருந்தாள். அவளுடைய கூந்தல் கலைந்து இருந்தது. அவளுடைய ஆடை கசங்கியும், கிழிந்தும் இருந்தது. பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் இருந்தாள் ஷாலினி. அதனால் அது வரை தாளிடப்பட்டு இருந்த அந்த அறையின் கதவை திறந்தவன், “நான் வெளியிலே இருக்கேன். நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெடி ஆகு. உன்னோட திங்ஸ்ச இங்க இருந்து எடுத்துட்டு போறதுக்கு அதுக்குள்ள நான் ஏதாவது வண்டி அரேஞ்ச் பண்றேன்." என்றவன், வெளியே செல்ல போனான்.

ஷாலினி: “அவங்க சொல்றேன்னு தான் சொல்லி இருக்காங்க. இன்னும் கன்ஃபார்மா சொல்லல. அதுக்குள்ள நீ வண்டி குப்புடுற அளவுக்கு யோசிக்கிற... ரொம்ப எக்சைட் ஆகாத. அவங்க கால் பண்ணி இல்லைன்னு சொல்லிட்டா கஷ்டமா இருக்கும்." என்று தன் முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொன்னாள். 😞

விஷ்ணு எதையோ செல்வதற்காக தன் வாயை திறந்தான். அப்போது சரியாக ஷாலினியின் மொபைல் போன் அலறியது. சாரதா தான் அவளுக்கு கால் செய்து இருந்தாள். விஷ்ணுவை அமைதியாக இருக்கும் படி சைகை செய்த ஷாலினி, அந்த கால் ஐ அட்டெண்ட் செய்து பேசினாள். மறு முனையில் பேசிய சாரதா, இப்போது ஒரு தனி வீடு காலியாக இருப்பதால் அதை இவளுக்கு ஒதுக்கி தருவதாக சொன்னவள்; நேராக நாராயணன் பேலஸ்க்கு சென்று அவளுடைய அடையாள அட்டைகள் அனைத்தையும் அங்குள்ள செக்யூரிட்டி ஆபீஸர்களிடம் சரிவர காண்பித்து அவர்கள் அதை வெரிஃபை செய்தவுடன் அவர்களிடமிருந்து அவளுக்கான சாவியை பெற்று கொள்ளலாம் என்று அறிவுறுத்தியவள், மேலும் சில இன்ஸ்டரக்சன்களை சொல்லி விட்டு இறுதியாக ஒரு வேளை வேறு யாராவது ஷாலினியை போன்ற இன்னொரு பெண்ணிற்கும் வீடு தேவைப்பட்டால் அவளையும், இன்னும் சில பெண்களையும் கூட அவளோடு தங்க வைத்து கொள்ள வேண்டிய நிலைமை வர கூடும் என்று சொல்லி விட்டு கால் ஐ கட் செய்தாள்.

அந்த தனி வீடு விஷ்ணு கேட்டு கொண்டதால் ஷாலினிக்காக மட்டுமே என்று தனியாக ஒதுக்கப்பட்டது. ஷாலினியை தவிர வேறு யாரும் அந்த வீட்டில் ஒருபோதும் தங்க போவதில்லை. ஷாலினிக்கு சந்தேகம் வர கூடாது என்று விஷ்ணு சொல்லி இருந்ததால் தான் இறுதியாக வேறு யாரும் கூட அவளுடன் தங்க வர வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு பிட்டை போட்டு வைத்தாள்.

சொல்லியது சாரதா என்பதால் அதை அப்படியே நம்பிய ஷாலினி மகிழ்ச்சி அடைந்தவள், சாரதாவிற்க்கு முழு மனதாக நன்றி தெரிவித்துவிட்டு அந்த காலை துண்டித்தாள். சற்று நேரத்திற்கு முன் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று நினைத்து வருத்த பட்டு கொண்டு இருந்த ஷாலினி, இப்போது புது தெம்பு கிடைத்தது போல் புத்துணர்ச்சி அடைந்தாள். 🥰

தனக்கு வீடு கிடைத்து விட்ட செய்தியை சந்தோஷமாக விஷ்ணுவிடம் சொன்னாள் ஷாலினி. இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் நடித்த விஷ்ணு, அதை கேட்டு புதிதாக சந்தோஷப்படுபவன் போல் காட்டி கொண்டு.. அவளை ரெடியாக சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான். விஷ்ணு வெளியே சென்ற பின் அந்த அறையின் கதவை சாத்திய ஷாலினி, இப்போது நிம்மதியாக அந்த கதவின் மீது சாய்ந்து மேலே இருந்த சீலிங்கை பார்த்தாள்.

அவளுக்கு இது வரை நடந்ததும், இப்போது நடந்து கொண்டு இருப்பதும், ஏதோ ஒரு கனவு போல் தோன்றியது. அவளுடைய கஷ்டங்கள் அனைத்தும் அனல் மேல் பட்ட சிறு பனித்துளியாய் சட்டென்று மாயமானதை போல் உணர்ந்த ஷாலினி, மகிழ்ச்சியாக கிளம்ப சென்றாள். ஷாலினியின் அறையில் இருந்து வெளியே வந்த விஷ்ணுவை ஹாலில் நின்ற படி முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள் கௌசல்யா. 😒🤨

அவளை ஒரு பொருட்டாக மதிக்காத விஷ்ணு தன்னுடைய மொபைலை எடுத்து கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான். விஷ்ணு மட்டும் தனியாக செல்வதை பார்த்து மகிழ்ந்த கௌசல்யா, சென்று ஷாலினியின் அறை கதவை தட்டிய படி, “அக்கா..!! அக்கா..!!" என்று ஷாலினியை அழைத்தாள். சிறிது நேரத்திற்கு முன் ஷாலினி உதவிக்காக கௌசல்யாவையும், அவளுடைய அம்மாவையும், அவ்வளவு சத்தமாக அழைத்தும் அவர்கள் இருவரும் இவளுக்கு வந்து உதவவில்லை.

“இப்ப இவ வந்து கூப்டா.. உடனே நான் மட்டும் கதவ திறக்கனுமா..??" என்று நினைத்த ஷாலினி, அவளை கண்டு கொள்ளாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அப்படியே தட்டி கொண்டு இருக்கட்டும் என்று விட்டு விட்டு தான் அது வரை பார்த்து கொண்டு இருந்த வேலையை தொடர்தாள். இரண்டு, மூன்று முறை, ஷாலினியை அழைத்து பார்த்த கௌசல்யா "திமிறு புடிச்சவ..!!" என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்டு அமைதியாக ஹாலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஷாலினியின் வீட்டு வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்த விஷ்ணு, முதலில் அவனுடைய கல்லூரி தோழன் மதனுக்கு கால் செய்து.. எனக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் வீட்டை காலி செய்ய வேண்டும். அதற்காக ஒரு டென்பொவை கூட்டி கொண்டு, உதவிக்காக இரண்டு பேரையும் கையோடு அழைத்து கொண்டு தான் அனுப்பும் (Live location) லைவ் லொகேஷன்க்கு வருமாறு சொன்னான்.

விஷ்ணுவின் குடும்ப பின்னணி பற்றி மதனுக்கு நன்றாக தெரியும். விஷ்ணு ஒரு வார்த்தை சொன்னால் அதை உடனே செய்து முடிக்க எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று நன்கு அறிந்து இருந்த மதன், ஒரு வேளை தன்னுடைய வீட்டிற்கு தெரியாமல் அவனுடைய காதலிக்கு உதவி செய்ய தான் விஷ்ணு தன்னை அழைக்கிறான் போல என்று நினைத்து கொண்டவன், “ஓகே மச்சான். தெரிஞ்ச பசங்கலாம் இருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. உடனே கூட்டிட்டு வந்துர்றேன்" என்றான்.

விஷ்ணு: “அப்புறம் இன்னொரு விஷயம் டா.." என்று இழுத்தான்...

மதன்: “என்ன டா வேற ஏதாவது பெரிய பிரச்சனையா..??? உங்க அண்ணன் கிட்ட மட்டும் கோத்து விட்டுறாத டா சாமி... அவரு கூட்டிட்டு போய் வச்சு கும்மிடுவாரு. என் பாடில அடி தாங்குற அளவுக்கெல்லாம் ஸ்ட்ரென்த் இல்ல டா." என்று உண்மையான பயத்துடன் சொன்னான். இதை சொல்லும் போதே உண்மையில் விஷ்வாவின் கையால் அடி வாங்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். அந்த கற்பனையே அவனுடைய இதயத்தை பயத்தில் வேகமாக துடிக்க வைக்க போதுமானதாக இருந்தது.

விஷ்ணு: அட அப்படிலாம் இல்ல டா. எங்க அண்ணனுக்கு எல்லாமே தெரியும். அந்த பொண்ணுக்கு தான் எதுவும் தெரியாது.

மதன்: எந்த பொண்ணு டா...??

விஷ்ணு: நம்ம ஷாலினிக்கு தான்...

மதன்: “நம்ம ஷாலினின்னா யாரு அலைபாயுதே படத்தில வந்த ஷால்னியா..??" என்று நக்கலாக கேட்டான். 😂😂

விஷ்ணு: என்ன டா கொழுப்பா நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்... நீ என்னன்னா விலையாடிட்டு இருக்க.. 😒

மதன்: பின்ன என்ன டா... நீ எதுவும் சொல்லாம சும்மா மொட்டையா சொன்னா...?? உலகத்துல இருக்குற எல்லா ஷாலினியையும் பத்தி எனக்கு தெரியுமா...??

விஷ்ணு: ஆமால்ல சாரி டா. நான் அவளை பத்தி உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். இப்ப எக்ஸ்பிளைன் பண்ணலாம் டைம் இல்ல. அவளுக்கு என் ஃபேமிலி பேக்ரவுண்ட் தெரியாது. எங்க ஸ்கூல்ல தான் அவ வேலை பாக்குறா. நானும் அதே ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்குறேன்னு அவ நெனச்சிட்டு இருக்கா. சோ நீ என்ன பத்தி எதுவும் ஓளறி வச்சுராம இருந்தா அதுவே போதும்.

மதன்: “ஓகே மச்சான் பாத்துக்கலாம். நான் கிளம்புறேன்." என்றவன், அந்த அழைப்பை துண்டித்து விட்டான்.

விஷ்ணு வாட்ஸ் ஆப்பில் ஷாலினி வீட்டின் லொகேசன்னை மதனுக்கு அனுப்பினான். பின் இப்போது அவன் ஷாலினியுடன் அவன் நாராயணன் பேலஸ்க்கு சென்றால் அங்கே இருக்கும் செக்யூரிட்டி ஆபீஸர்கள் அவனுக்கு கொடுக்கும் மரியாதையால் ஷாலினிக்கு சந்தேகம் வந்து விடக்கூடும் என்று நினைத்தவன், செக்யூரிட்டி டீம் இன் ஹெட் ஆஃபிசர்க்கு கால் செய்து.. அவன் அங்கே இன்று தன்னுடன் கூட்டி கொண்டு வரும் பெண்ணோடு இனி அவனை எப்போது பார்த்தாலும் அவனை ஒரு சாதாரண நபராக தான் நடத்த வேண்டும் என்று அனைவரிடமும் வலியுறுத்துமாறு ஆணையிட்டான். அந்த ஆபீஸர் அவன் சொன்ன படியே செய்வதாக உறுதியளித்தார்.

தான் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் சரியாக செய்து முடித்துவிட்ட விஷ்ணு, ஷாலினி வீட்டிற்குள் சென்றான். மாலதி ஆட்டோவில் அந்த மொபைலில் பேசிய குடிகாரன் சொன்ன ஒயின் ஷாப்பின் வாசலில் வந்து இறங்கினாள். அந்த ஆட்டோவை தனக்காக காத்திருக்க சொல்லிவிட்டு மீண்டும் தன்னுடைய தம்பி ரவியின் நம்பருக்கு கால் செய்தாள் மாலதி.

ரவியின் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அதனால் கடுப்பான மாலதி, “இந்த எழவெடுத்தவனோட ஒரே இம்சையா இருக்கு... பொறுக்கி பையன்.. இவனுக்காக எங்கலாம் வர வேண்டியதா இருக்கு.." என்று புலம்பிய படியே அவள் நின்ற இடத்தில் இருந்தே ரவியை கண்களால் தேடினாள். அப்போது அந்த ஒயின் ஷாப் வாசலில் ஓடி கொண்டு இருந்த சாக்கடையின் அருகே ஒருவன் மயங்கி கிடப்பதை கண்டாள் மாலதி.

அது யார் என்று அவளால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் இப்போது அவன் அணிந்திருக்கும் சட்டை அவள் ரவியை பார்க்கும் போது அவன் அணிந்திருந்த சட்டையை போலவே இருந்ததால் ஒரு வேளை இது அவனாக இருந்தால் என்ன செய்வது என்று நினைத்து பதறிய மாலதி, வேகமாக அவன் அருகே சென்றாள். அவன் அருகே வந்த பின் அது தன்னுடைய தம்பி ரவி தான் என்று அறிந்து கொண்ட மாலதி, அதிர்ச்சி அடைந்தாள்.

முதலில்.. “குடிகார பையன்... குடிகார பையன்... குடிச்சிட்டு வந்து எங்க விழுந்து கிடக்கிறோம்ன்னு கூட தெரியாம எப்படி விழுந்து கெடக்குறான் பாரு.." என்று நினைத்த மாலதி, ஒரு கடையில் தண்ணி பாட்டிலை வாங்கி வந்து அவனுடைய முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை எழுப்ப முயற்சித்தாள். அவள் அவன் மீது ஒரு பாட்டில் தண்ணீரை முழுவதுமாக ஊற்றியும் ரவியிடம் ஒரு அசைவும் இல்லை.

அதனால் பயந்து போன மாலதி, அவனுக்கு என்ன ஆனது என்று உற்று பார்த்தாள். அப்போது தான் அவளுடைய கண்களில் அவனுடைய உடலில் ஆங்காங்கே கன்னி சிவந்து வீங்கி போய் இருப்பதும், சிறிதளவு ரத்தம் கசிந்து கொண்டு இருப்பதும் பட்டது. அவனுடைய சட்டையிலும், பேண்ட்டிலும் கூட ஆங்காங்கே யாரோ சுவால் அவனை மிதித்த மார்க்குகள் இருந்தது. அதை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பார்த்தவள், ரவிக்கு என்ன ஆகியிருக்கும் என்று புரிந்து கொண்டாள்.

அதை நினைத்து பார்த்தவளின் நெஞ்சமெல்லாம் பதறியது. “அய்யோ ரவி... உனக்கு என்ன டா ஆச்சு...??? யாரு டா உன்ன இப்படி எல்லாம் பண்ணது..??" என்று ரவியின் தலையை தன் மடியில் எடுத்து போட்டு விட்டு தன் மார்பில் அடித்து கொண்டு சத்தமாக அழுதாள் மாலதி. 😭😭😭 மாலதியை அங்கு அழைத்து வந்த ஆட்டோ காரர் அவர்களுடைய குடும்பத்திற்கு நன்கு பழக்கப்பட்டவன் என்பதால் மாலதி அழுவதை பார்த்து பயந்தவன், அவள் அருகே ஓடி வந்தான்.

ரவியின் நிலையை கவனித்த அந்த ஆட்டோகாரர் மாலதியிடம் அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லலாம் என்று கூற, அதை கேட்ட மாலதி, சரி என்று சொல்ல... இருவரும் ரவியை ஆட்டோவில் தூக்கி போட்டு கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றனர். ரவியின் நிலைமையை பற்றி சசியிடம் சொல்வதற்காக அவனுக்கு கால் செய்தாள் மாலதி. செக்யூரிட்டி ஏஜென்சிக்கு வந்து இருந்த சசி தன் வயதை கூட பொருட்படுத்தாமல் அவனை விட வயது குறைவான மேனேஜரின் காலில் விழுந்து..

“சார்.. சார்.. ப்ளீஸ் சார் என்ன வேலையை விட்டு அனுப்பிடாதீங்க... இப்ப திடீர்னு வேலைய விட்டு போன்னு சொன்னா.. நான் எங்க சார் போவேன்..?? இப்ப தான் சார் என் பொண்ணு பிளஸ் டூ படிச்சு முடிச்சா. அவள காலேஜில படிக்க வைக்கணும். அதுக்கு எல்லாம் காசுக்கு நான் எங்கே போவேன்..?? என் மேல ஏதாச்சு தப்பு இருந்தா சொல்லுங்க சார். நான் அத சரி பண்ணிக்கறேன். ஆனா என்ன வேலையை விட்டு மட்டும் போக சொல்லாதீங்க." என்று கண்ணீருடன் கெஞ்சி கொண்டு இருந்தான். 😭😭😭

மேனேஜர்: சசியை எழுப்பி விட்டவன்‌, “வயசான நீங்க என் கால்ல விழுந்து எதுக்கு சார் எனக்கு பாவத்தை சேத்து வைக்கிறீங்க...?? நீங்க சும்மா இல்லாம பெரிய இடத்துல ஏதோ பிரச்சினை பண்ணி இருக்கீங்க. போய் அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க. அப்ப தான் நீங்க பொழைக்க முடியும். நீங்க வேற யார் கிட்ட என்ன பேசினாலும் பிரயோசனமில்லை. இதுக்கு மேல நீங்க வேற எங்க போய் வேலை கேட்டாலும் கிடைக்காது. யார் கிட்ட பிரச்சினை பண்ணுனிங்களோ போய் அங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க."என்றவன் எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.

அப்போது தான் மாலதியிடம் இருந்து சசிக்கு கால் வந்தது. தன்னுடைய வேலை பறிபோன வேதனையில் இருந்த சசி மாலதியின் கால் ஐ அட்டென்ட் செய்யவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் ரவிக்கு கால் செய்து கொண்டே இருந்தாள் மாலதி. கடுப்பான சசி காலை அட்டன்ட் செய்தான். மாலதி, ரவியின் நிலைமையை பற்றி சசியிடம் சொல்லி அழுதவள், அவனை அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டு காத்திருப்பதாக சொன்னாள்.

ஏற்கனவே தன் தலைக்கு மேல் தாங்க முடியாத பாரத்தை வைத்து கொண்டு இருக்கும் சசி, இப்போது ரவியை பற்றி எல்லாம் கவலைப்படும் மன நிலையில் இல்லாததால், “உன் தம்பிக்கு என்ன ஆனா எனக்கு என்ன டி..?? எனக்கு வேலை போயிடுச்சு தெரியுமா..?? அந்த மேனேஜர் இனிமே எனக்கு வேற எங்க்கையும் வேலை கிடைக்காதுன்னு சொல்றான். இனிமே நம்ப சோத்துக்கு சிங்கீதான் அடிக்க போறோம். இப்ப உன் தம்பிய பத்தின கவலை தான் உனக்கு பெருசா இருக்கா..??" என்று உச்ச கதியில் பொரிந்து தள்ளினான். 😡🤬

ஏற்கனவே ரவியை நினைத்து கவலையில் இருந்த மாளதிக்கு இப்போது சசி சொன்னது இடியாய் தலையில் இறங்கியது. அதே அதிர்ச்சியில்... “என்னங்க ஆச்சு... எதுக்கு இப்போ உங்கள திடீர்னு வேலையில இருந்து தூக்குனாங்க..??" என்ற சசியிடம் கேட்டாள். மேனேஜர் தன்னிடம் சொன்னது அனைத்தையும் மாலதியிடம் சொல்லி ஆதங்கப்பட்டார் சசி.

ஷாலினியின் வீட்டில்...

ஹாலில் கௌசல்யா அமர்ந்து இருந்த சோபாவிற்கு எதிரே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாள் விஷ்ணு. அழகாக தயாரான ஷாலினி தன்னுடைய அறையின் கதவை திறந்து வெளியே வந்து விஷ்ணுவை அழைத்தாள். அதுவரை தன்னுடைய மொபைலை பார்த்து கொண்டு இருந்த விஷ்னு, ஷாலினி தன்னை அழைத்தவுடன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.

ஷாலினியை பார்த்தவுடன் ஓடி சென்று அவளை கட்டி பிடித்து கொண்ட கௌசல்யா, “அக்கா உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருக்கு. உனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன். இப்ப எப்படி இருக்க அக்கா..??" என்று பாசமான தங்கை போல் நடித்தவள், நீலிக் கண்ணீர் வடித்தாள். 😭😭

அவளுடைய டிராமாவை எல்லாம் பார்த்து பதில் சொல்லி கொண்டு இருக்க ஷாலினிக்கு விருப்பம் இல்லை. அதனால் அவளை தன்னிடம் இருந்து பிரித்த ஷாலினி ஒரு வார்த்தையும் அவளிடம் பேசவில்லை. ஷாலினியை பார்த்த விஷ்ணு, “வா உன்னோட திங்க்ஸை எல்லாம் பேக் பண்ணலாம்." என்றவன், அவளை கையை பிடித்து அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்றான். விஷ்ணுவை மறுத்து பேசாத ஷாலினி, அவன் பின்னே அமைதியாக சென்றாள். விஷ்ணு சொன்னதை கேட்ட கௌசல்யா, செல்லும் அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள். 😒🤨

- நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 44
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.