தாபம் 43

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 43: விஷ்ணுவிடம் மனம் திறந்த ஷாலினி

ஷாலினியின் கண்களுக்கு அவன் முன்னே நிற்கும் விஷ்ணு அவளை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக தெரிந்தான். விஷ்ணுவை பார்த்தவுடன் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. 😭😭😭 அவளுடைய மனதில் இருந்த வேதனையை போக்கி கொள்ள ஆறுதல் தேட நினைத்தாளோ என்னமோ தெரியவில்லை வேகமாக விஷ்ணுவின் மீது தாவி அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள் ஷாலினி. விஷ்ணுவும் ஷாலினியை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டான். 🤗

நாராயணன் மருத்துவமனை...

சிவாவை தன்னுடைய அறைக்கு கால் செய்து வர சொன்ன விஷ்வா, சித்தார்த்தை அழைத்து கொண்டு நாராயணன் பேலஸுற்க்கு செல்ல சொன்னான். சித்தார்த், ரித்திகா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறைக்கு வெளியே அவளுடைய பெற்றோர்களுடன் அமர்ந்து இருந்தான். சிவா, சித்தார்த்தை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.

சித்தார்த், ரித்திகா விட்டுவிட்டு வரமாட்டேன் என்று அடம் பிடித்தான். ரித்திகாவின் பெற்றோர்களும்... ஏன் கௌதமும் கூட சித்தார்த்தை, சிவாவுடன் செல்லுமாறு எவ்வளவோ சொல்லி பார்த்தனர். ஆனால் அவன் ராகவியை விட்டு விட்டு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்தான். ரித்திகாவே சொன்னா தான் சித்தார்த் கேட்பான் என்று நினைத்த சிவா, நர்சிடம் பர்மிசன் கேட்டு சித்தார்த்தை ரித்திகாவின் அறைக்கு அழைத்து சென்றான்.

ரித்திகாவிற்க்கு இன்னும் காய்ச்சல் குறையவில்லை. அதனால் அவளுக்கு அதிகமான சளியும், இருமலும், இருந்தது. அதனால் சித்தார்த்திற்கு ஏதேனும் infection ஆகி விட கூடாது என்று நினைத்து கவலை பட்ட நர்ஸ், அவனுக்கு மாஸ்க் அணிவித்து அவனை சிவாவுடன் உள்ளே அழைத்து சென்றாள்.

சிரமப்பட்டு சித்தார்த்துடன் பேசிய ராகவி, ஒரு வழியாக அவனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு செல்லுமாறு சொன்னவள்; இனி அவனை தொடர்ந்து பள்ளிக்கும் அடம் பிடிக்காமல் செல்லுமாறு அறிவுறுத்தினாள். எங்கே ராகவி சொல்வதை எல்லாம் தான் கேட்காமல் போய் விட்டால் தன்னிடம் அவள் பேச மாட்டாளோ.. என்று நினைத்து பயந்த சித்தார்த், அவள் சொன்ன படியே கேட்க முடிவு எடுத்தான்.

இருந்தாலும் ரித்திகாவை அப்படியே விட்டுவிட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த பின் தினமும் அவளை இங்கு வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்பினான். சித்தார்த் அங்கு இருந்து கிளம்பியும், வருண் அங்கு இருந்து கிளம்பாமல் அதே அறையில் தான் இருந்தான். அவனுடைய வேலை எல்லாம் முடித்துவிட்டு ஆராதனாவையும், ஹரியையும், சென்று சந்தித்தான் வருண்.

ஆராதனாவின் உடல் நிலை இப்போது சற்று தேறி இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் ஆரதனாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று ஹரி இடமும், வருணிடமும், சொன்னார் டாக்டர். ஆராதனாவை டிஸ்சார்ஜ் செய்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக அவளிடம் உறுதி அளித்தான் வருண்.

ஷாலினியின் வீட்டில்....

விஷ்ணுவை கட்டி பிடித்து கொண்டு இருந்த ஷாலினி, அவளுடைய மனதில் இருந்த பாரம் அனைத்தும் இறங்கும் வரை அழுது தீர்த்தாள். 😭 அவள் மனதில் இருக்கும் பாரம் குறையும் வரை அழட்டும் என்று நினைத்த விஷ்ணு, ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை அப்படியே அழ விட்டான். 🤗 சில நிமிட அனைப்புக்கு பின் அவனிடம் இருந்து பிரிந்தாள் ஷாலினி. அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன்னுடைய கையால் துடைத்தான் விஷ்ணு.

விஷ்ணுவின் அந்த ஒரு செயல் ஷாலினியின் மனதை பெருமளவில் ஆறுதல் படுத்தியது. விஷ்ணுவிற்கு ஷாலினியிடம் பேச வேண்டியதும், கேட்க வேண்டியதும், நிறைய இருந்தது. அதனால் யாருடைய தொந்தரவும் இன்றி அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்த விஷ்ணு, ஷாலினியை அவளுடைய அறைக்குள் அழைத்து சென்று பெட்டில் அமர வைத்து விட்டு அந்த அறையின் கதவை சாத்தி தாழிட்டான்.

விஷ்ணு இப்போது அங்கே வந்தது அவளுடைய மனதிற்கு இதமானதாகவும், ஆறுதலாகவும், இருந்ததால்.. அவன் எப்படி இங்கே வந்தான் என்று ஷாலினி யோசிக்கவில்லை. ஷாலினியின் அருகே அமர்ந்தான் விஷ்ணு. ஷாலினி இன்னும் தன்னுடைய வாயை திறந்து தனக்கு என்ன ஆனது என்று சொல்லவில்லை என்றாலும் ஷாலினி இருக்கும் நிலையை வைத்து அவள் எவ்வளவு வேதனையில் இருக்கிறாள் என்று விஷ்ணுவால் உணர முடிந்தது.

அப்போது ஷாலினி பார்த்து கொண்டு இருந்த அவளுடைய அம்மாவின் புகைப்படம் தரையில் கிடப்பதை கவனித்த விஷ்ணு, அதை தன் கையில் எடுத்தான். அது வரை சற்று அழுகையை நிறுத்தி இருந்த ஷாலினி, அவளுடைய அம்மாவின் புகைப்படத்தை பார்த்த உடன் மீண்டும் மனம் உடைந்து அழ தொடங்கினாள். 😭 விஷ்வா, விஷ்ணுவிற்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் ஷாலினியின் குடும்பம் பற்றிய அணைத்து தகவல்களும் தெளிவாகவும், விரிவாகவும், இருந்தது. அதை முழுதாக படிக்கவில்லை என்றாலும் ஆங்காங்கே படுத்து இருந்தான் விஷ்ணு. அதனால் அந்த புகைப்படத்தில் இருப்பது ஷாலினி உடைய இறந்து போன அம்மா என்று அவனுக்கு நன்றாக தெரிந்தது. இருந்தாலும் எதையும் தான் அறிந்ததை காட்டி கொள்ளாத விஷ்ணு, அவளிடம் அந்த போட்டோவை காட்டி இது யார்..?? என்று கேட்டான்.

அவன் நினைத்து இருந்தால் ஷாலினியின் இந்த கோலத்தை சுட்டிக்காட்டி என்ன நடந்தது என்று முதலில் அதை பற்றி பேசி இருக்கலாம். எப்படியும் ஷாலினி உடைய அப்பா தான் ஏதாவது பிரச்சினை செய்து அவளை அடித்து இருக்கக்கூடும் என்று நினைத்தவன், அதை பற்றி கேட்டு அவளை சங்கட படுத்த வேண்டாம், அவளே சொல்லட்டும் என்று விட்டு விட்டான். ஆனால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளாமல் அவனால் இருக்க முடியவில்லை. அவளே அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் தான் அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அதை வைத்து ஷாலினி இடம் பேச்சை தொடங்கினான்.

ஷாலினி இதுவரை அவளுடைய கஷ்டங்கள் பற்றியும், அவளுடைய குடும்பத்தை பற்றியும், அவள் யாரிடமும் மனம் திறந்து பேசியதில்லை. ஆனால் இப்போது விஷ்ணு அவளுடைய அம்மாவின் புகைப்படத்தை காட்டி அதை யார் என்று கேட்கவும், அவளுடைய மனதில் இருக்கும் ஒட்டுமொத்த பாரத்தையும் அவனிடம் இறக்கி வைத்து விட வேண்டும் என்று அவளுடைய மனம் துடித்தது. தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தவள், தன்னை சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்டு விஷ்ணுவின் கையில் இருந்த அவளுடைய அம்மாவின் புகைப்படத்தை வாங்கி பார்த்த படி பேச தொடங்கினாள்..

ஷாலினி: இந்த ஃபோட்டோல இருக்கிறது என் அம்மா. நான் பிறக்கும் போது தான் அவங்க இறந்துட்டாங்க. நான் பொறக்குறதுக்கு முன்னாடி எங்க அப்பா ரெண்டு, மூணு, ரைஸ்மில் வச்சிருந்தாரு. எங்க குடும்பம் ஓரளவுக்கு வசதியா தான் இருந்துச்சு. எங்க அப்பா வச்சிருந்த ரைஸ்மிலுக்கு எங்க அம்மா வேலைக்கு வந்தாங்க. எங்க அம்மாவை பாத்து பிடிச்சு போய் என் அப்பா அவங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

நான் பொறந்த உடனே டெலிவரி அப்போ எங்க அம்மா இறந்ததுனால அவங்க இறந்ததுக்கு என்னோட ராசி தான் காரணம்னு ஊரே பேசுச்சு. அதனால எங்க அப்பா மொத்தமா என்ன வெறுத்துட்டாரு. என் முகத்தை கூட பாக்க அவருக்கு பிடிக்கலன்னு எப்பவும் சொல்லிட்டே இருப்பாரு. நான் தான் அவர் கிட்ட இருந்து எங்க அம்மாவை பிரிச்சுட்டேன்னு சொல்லுவாரு.

அவருக்கு ஏற்கனவே என் மேல இருந்த வெறுப்பு இன்னொரு கல்யாணம் பண்ண உடனே இன்னும் அதிகமாயிருச்சு. என் சித்திக்கும் என்ன பிடிக்கல. அப்புறம் அவங்களுக்குன்னு இன்னொரு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எங்க அப்பாவை பொருத்தவரைக்கும் அவரோட ஒரே பொண்ணு கௌசல்யா தான்னு ஆயிருச்சு. நான் இந்த வீட்டில ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆயிட்டேன். என்ன இந்த வீட்டை விட்டு தூக்கி வெளில போடணும்னு நினைச்சாங்க.

ஆனா இந்த வீட்டை எங்க அப்பாவுக்கும், எங்க அம்மாவுக்கும், கல்யாணம் ஆகும் போது தான் அவர் வாங்கினாரு. அதனால இந்த வீட்டை எங்க அம்மா பேருல வாங்கிட்டாரு. அந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் தான் என்னை இந்த வீட்டை விட்டு துரத்தாம வச்சிருந்தாங்க. அவர் 2 ஆவது கல்யாணம் பண்ணும் போது அத எனக்காக தான் பண்ற மாதிரி சீன் போட்டு கல்யாணம் பண்ணாரு. அதனால எங்க என்ன ஒழுங்கா பாத்துக்கலைன்னு யாராச்சு கேட்டாங்கன்னா அவர் குடும்ப கௌரவம் குறைஞ்சுருமோன்னு போனா போகுதுன்னு என்ன கவர்மெண்ட் ஸ்கூல்ல சேத்து படிக்க வெச்சாரு.

ஸ்கூல் முடிச்சுதுக்கு அப்புறமா ஒரு பார்ட் டைம் ஜாப் ஜாயின் பண்ணினேன். அப்புறம் நானே எந்த காலேஜில் ஃபீஸ் கம்மின்னு விசாரிச்சு ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ணி நானே பீஸ் கட்டி படிச்சேன். அதுக்கப்புறம் இங்க வேலை கிடைச்ச உடனே ஜாயின் பண்ணினேன். எப்பவுமே நான் சம்பளம் வாங்கின உடனே எனக்குன்னு கொஞ்சம் காசு எடுத்து வச்சுட்டு என் சித்தி கிட்ட குடுத்துருபேன். ஆனா அவங்க அப்ப கூட என்ன நிம்மதியா இருக்க விடல. இந்த வீட்டை விட்டு என்ன அனுப்ப முடியலைன்னு எங்க சித்தியோட தம்பிக்கு என்ன கல்யாணம் பண்ணி இங்க இருந்து துரத்தி விடனும்னு நினைச்சாங்க.

அவன் படிக்கலைனாலும் நல்லவனா இருந்தா கூட நான் பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணி இருப்பேன். எங்க அப்பா முன்னாடி மட்டும் தான் அவன் நல்லவன் மாதிரி நடிப்பான். ஆனா அவனுக்கு இந்த உலகத்துல இருக்குற எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. அவன கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்ன டார்சர் பண்ணிட்டே இருந்தாங்க. கொஞ்ச நாளைக்கு ஆவது இந்த கல்யாணத்தை தள்ளி போடனும்னு அவங்க என் ஜாதகத்தை பாக்கும் போது ஜோசியக்காரர் கிட்ட கைல, கால்ல, விழுந்து எனக்கு 25 வயசு வர்றதுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் பண்ணா என்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் செத்து போய்டுவான்னு பொய் சொல்ல சொன்னேன்.

அவரும் என் மேல பரிதாபப்பட்டு அந்த பொய்ய சொன்னாரு. அவங்க தம்பி உயிருக்கு ஏதாவது ஆயிட்டா என்ன பண்றதுன்னு எங்க சித்தியும் 25 வயசுக்கு மேல கல்யாணத்தை வச்சிக்கலாம்னு விட்டுட்டாங்க. இன்னைக்கு நீ வந்து என்ன டிராப் பண்ணிட்டு போனத அந்த கிறுக்கன் ரவி பாத்துட்டான் போல.. அத போய் எங்க அப்பாகிட்ட சொல்லி அவர கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான். என்றவள், அவள் வீட்டிற்கு வந்த பிறகு என்ன நடந்தது என்று அனைத்தையும் விஷ்ணுவிடம் சொன்னாள்.

அவள் சொன்னது அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்த விஷ்ணுவின் கண்கள் கோபத்தால் சிவந்து இருந்தது. 😡 ஷாலினியின் மீது கோபப்பட்டு அவளுடைய தந்தை தான் அவளை அடித்திருப்பார் போல என்று தான் நினைத்தான் விஷ்ணு. அதற்கே அவனுடைய மனம் கொந்தளித்தது.இப்போது ரவி, ஷாலினியை நடத்திய விதமும், அவளிடம் அவன் தப்பாக நடந்து கொள்ள முயன்றது அனைத்தையும் தெரிந்து கொண்ட பின் விஷ்ணுவிற்கு ரவியின் மீது கொலை வெறி வந்தது.😡🤬🔥

விஷ்ணு: கோபத்தில் தன்னுடைய கைகளை இறுக்கி மூடி ஷாலினியை தீர்க்கமாக பார்த்தவன், “உனக்கு நான் இருக்கேன். நான் அவன சும்மா விட மாட்டேன்." என்றான்.

இவனால் அவனை என்ன செய்து விட முடியும்..?? என்று நினைத்த ஷாலினி, ஏதோ இவன் தன்னை ஆறுதல் படுத்துவதற்காக தான் சொல்கிறான் என்று தனக்குள் நினைத்து கொண்டாலும் அவளுடைய மனதிற்கு அவன் சொல்லியது ஆறுதலாக இருந்தது. எனக்கென யாரும் இல்லையே என்று நினைத்து தனக்குள் மருகி கொண்டு இருந்தவளுக்கு தனக்கென குரல் கொடுக்க ஒரு ஜீவன் இருக்கிறது என்று யோசிக்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது தான் ஷாலினியின் முகம் சற்று தெளிவாகவும், அவளுடைய மனம் நிம்மதியாகவும், இருந்தது.

விஷ்ணு: இப்ப அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க...??

ஷாலினி: தெரியல. ஆனா நான் எதாவது கண்டிப்பா பண்ணியே ஆகணும். இந்த ரவி வர வர ரொம்ப எல்லை மீறி நடந்துக்குறான். இதுக்கு மேல எனக்கு இங்க இருக்குறதுக்கே ரொம்ப பயமா இருக்கு.

விஷ்ணு: இந்த வீடு உங்க அம்மா பேருல தானே இருக்கு.. அதனால உன்ன இந்த வீட்டை விட்டு வெளிய போன்னு யாராலையும் சொல்ல முடியாது. பேசாம உங்க அப்பா மேலயும், அவன் மேலயும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்திரு. அப்ப தான் ரெண்டு பேரும் அடங்குவாங்க.

ஷாலினி: நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கேன் விஷ்ணு. இதுக்கு மேல என்னால போய் போலீஸ், கேஸ்ன்னுலாம் அலைய முடியாது. அண்ட் நான் அவங்க மேல கேஸ் குடுத்துட்டு இந்த வீட்டுக்கு வந்தா... என் சித்தியும், கௌசல்யாவும், என்ன இங்க நிம்மதியா இருக்க விடுவாங்களா சொல்லு...

விஷ்ணு: அப்ப அவங்க ரெண்டு பேத்தையும் நான் பாத்துக்குறேன். அவங்க இனி நீ இருக்க பக்கமே வர மாட்டாங்க அதுக்கு நான் பொறுப்பு. நீ நாராயணன் பேலஸ்க்கு போயிடு. ரித்திகா அக்கா கூட அங்க தானே இருக்காங்க... அண்ட் அங்க பர்மிஷன் இல்லாமல் யாரும் உள்ள வர முடியாது. சோ நீ safeஆ இருக்கலாம்.

ஷாலினி: ரவியையும், எங்க அப்பாவையும், உன்னால என்ன பண்ண முடியும்...?? அந்த ரவி ஒரு ரவுடி. எனக்கு ஹெல்ப் பண்றேன்னு நீ எந்த தேவையில்லாத பிரச்சினைளையும் போய் மாட்டிக்காத.

விஷ்ணு: அவங்களை என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன். எனக்கு ஒன்னும் ஆகாது. நீ நாராயணன் பேலஸ்க்கு போறியா..?? அதை பத்தி மட்டும் சொல்லு.

ஷாலினி: அங்க போனா நல்லா தான் இருக்கும். அனா வெளியூரில இருந்து இங்க வந்து வேலை பார்க்கிறவங்களுக்கு தானே அங்க வீடு தருவாங்க..?? என்ன எப்படி அங்க தங்க விடுவாங்க..??

விஷ்ணு: அதெல்லாம் லேடிஸ் கேட்டா தருவாங்க. நீ ட்ரை பண்ணிப்பாரு. பிரின்சிப்பள் மேடம்க்கு ஒரு மெயில் மட்டும் பண்ணு. அவங்க கண்டிப்பா ரெஸ்பாண்ட் பண்ணுவாங்க.

ஷாலினி: எனக்கு நம்பிக்கை இல்லை விஷ்ணு.

விஷ்ணு: சும்மா ஒரு ட்ரை தானே பண்ணி பாரு ஷாலினி..

ஷாலினி சரி என்றவள், தன்னுடைய பர்சனல் மெயிலில் இருந்து சாரதாவின் ஆபீஸ் மெயில் ஐடிக்கு மெயில் செய்ய தொடங்கினாள்.

ஷாலினி சாரதாவுக்கு மேல் செய்து முடிப்பதற்குள் தன்னுடைய மொபைலை எடுத்த விஷ்ணு, சாரதாவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். அந்த குறுஞ்செய்தியில் ஷாலினி அவளிடம் வீடு கேட்டு மெயில் செய்தால் அந்த மெயிலுக்கு உடனே ரிப்ளை செய்யுமாறும், அவளுக்கென ஒரு வீடும் அவளுக்கு சந்தேகம் வராத படி பேசி அரேஞ்ச் செய்து தருமாறும் சொல்லி இருந்தான்.

ஷாலினியிடம் இருந்து சாரதாவுக்கு மெயில் செல்வதற்கு முன்பாகவே விஷ்ணுவின் மெசேஜ் சென்று விட்டது. அதை பார்த்த சாரதா, உடனே அவன் கேட்டபடி அனைத்தையும் செய்து தருவதாக ரிப்ளை செய்தாள். அந்த ரிப்ளையை பார்த்தவுடன் விஷ்ணு, விஷ்வா தனக்கு அனுப்பி இருந்த செக்யூரிட்டி ஆபீஸர்களின் நம்பருக்கு மெசேஜ் அனுப்ப தொடங்கினான். அந்த மெசேஜில்... ரவி எங்கே இருந்தாலும் அவனை தேடி கண்டு பிடித்து நையப்புடைத்து அனுப்பி விடுமாறு சொன்னவன், இனி ஷாலினியின் வழியில் அவன் குறுக்கே வந்தால் அவனுக்கு மரணம் பரிசாக வழங்கப்படும் என்று அவனுடைய மண்டையில் உறைக்கும் படி தெளிவாக சொல்லி விடும்படியும் டைப் செய்து அனுப்பினான்.

இருந்தாலும் அவனுக்கு ஷாலினியின் அப்பாவை அப்படியே விட்டுவிட மனமில்லை. அப்போது அவனுக்கு ஷாலினியின் குடும்பத்தைப் பற்றி அவன் படித்த ரிப்போர்ட் ஞாபகம் வந்தது. அந்த ரிப்போர்ட்டில் முதலில் ஷாலினி உடைய அப்பா அவள் சொன்னது போலவே மிகவும் வசதியாக தான் வாழ்ந்து வழ்ந்திருக்கிறார். பின் வியாபாரத்தில் தொடர்ந்து வந்த நஷ்டம் காரணமாக அந்த தொழிலை விட்டுவிட்டு இப்போது ஒரு சாதாரண செக்யூரிட்டி சர்வீஸ் கம்பெனியில் வாட்ச் மேனாக வேலை செய்து கொண்டு இருக்கிறார் என்று தெளிவாக எழுத பட்டு இருந்தது.

அதை நினைவு கூர்ந்த விஷ்ணு, சிவாவிற்கு மெசேஜ் செய்தான். அதில் இன்னும் பத்து நிமிடத்தில் ஷாலினியின் அப்பா பார்த்து கொண்டு இருக்கும் வேளை அவருக்கு இருக்க கூடாது என்றும், இனி அவருக்கு வேறு எங்கேயும் வேலை கிடைக்காத படி செய்து விடும் படியும் டைப் செய்து அனுப்பினான். அதை உடனே பார்த்துவிட்ட சிவா, “டன்" என்று ஒரே ஒரு வார்த்தையில் ரிப்ளை அனுப்பினான். இனி அனைத்தையும் சிவா பார்த்து கொள்வான் என்று நினைத்த விஷ்ணுவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

ஷாலினியின் அறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்த மாலதி, உள்ளே இருந்து பூட்ட பட்டிருந்த அவளுடைய அறையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். அப்போது அவள் அருகே வந்த கௌசல்யா மெதுவான குரலில், “யாரோ ஒருத்தன் வந்து அவன் பாட்டுக்கு அவ ரூம்குள்ள போய் இவ்ளோ நேரமா ரெண்டு பேரும் உள்ள தனியா இருக்காங்க. நீ பாட்டுக்கு வேடிக்கை பார்த்துட்டு இருக்க..?? விட்டா நீயே இவள அவன் கூட அனுப்பி வச்சிட்டு Bye சொல்லி டாட்டா காட்டிட்டு இருப்ப போல... உடனே அப்பாவுக்கும், ரவி மாமாவுக்கும், கால் பண்ணி அவங்களை இங்க வர சொல்லு." என்று அவளுடைய காதில் ஓதினாள்.

மாலதி: ஆமா டி. நீ சொன்ன மாதிரி அவன் கூட இவ ஓடி போயிட்டான்னு வெச்சுக்கோ உன் அப்பன் என்ன கொன்னே போட்றுவான்.

கௌசல்யா: “தெரியுதுல இந்த கால் பண்ணு." என்றவள், அங்கு ஓரமாக இருந்த மாலதியின் மொபைல் போனை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிய மாலதி முதலில் ஷாலினியின் அப்பா சசிக்கு தான் கால் செய்தாள். மாலதி கால் செய்யும் போது ஒரு வீட்டின் வாசலில் செக்யூரிட்டியாக நின்று கொண்டு இருந்த சசி, வேறு ஒரு காலில் பேசி கொண்டு இருந்தான். சசி வேலை பார்க்கும் அந்த செக்யூரிட்டி ஏஜென்சியின் மேனேஜரிடம் இருந்து தனக்கு வந்த காலை தான் சசி பேசி கொண்டு இருந்தான். அதனால் மாலதியின் காலை அவன் அட்டென்ட் செய்யவில்லை.

அந்த காலில் சசியுடைய மேனேஜர் அவனிடம் செய்யும் வேலையை அப்படியே விட்டு விட்டு கிளம்பி நேராக ஏஜென்சிக்கு வருமாறு சொல்லிவிட்டு காலை கட் செய்தார். அதனால் அங்கு இருந்து வேகமாக தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிய சசி மாலதி பல முறை கால் செய்தும் அதை எடுக்கவில்லை. அதனால் கடுப்பான மாலதி, தன்னுடைய தம்பி ரவிக்கு கால் செய்தாள்.

ஒரு வைன் ஷாஃப்பின் வாசலில் ஓரமாக அறை மயக்க நிலையில் பாதி உசுராக ரவி இப்போது கிடக்க, அருகே அவனுடைய மொபைல் போன் சத்தமாக அலறியது. பாவம் ஆனால் அதை எடுத்து அந்த காலை அட்டென்ட் செய்து பதில் சொல்லும் நிலையில் தான் ரவி இருந்திருக்கவில்லை.

சில நிமிடங்களுக்கு முன்...

ஷாலினியின் மீது அவனுக்கு அதிக கோபம் இருந்ததால் அதை தீர்த்து கொள்வதற்காக தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாக வந்த ரவி, ஒரு வைன் ஷாப் இன் முன் வந்து தன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்று குடிக்க தொங்கினான். போதை தலைக்கு ஏறி தன்னுடைய நிதானத்தை தொலைக்கும் அளவிற்கு குடித்தான்.

விஷ்ணுவிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்த உடனேயே ஐந்து நிமிடத்தில் ரவி இருக்கும் லொகேஷனை கண்டு பிடித்து விட்டனர் அந்த செக்யூரிட்டி ஆபீஸர்கள். அங்கே வந்தவர்கள் தங்களோடு வந்த பாடிகார்ட்களை உள்ளே அனுப்பி அந்த ரவியை கொத்தாக தூக்கி கொண்டு வெளியே வருமாறு ஆணையிட்டனர். அந்த பாடி கார்ட்கள் உள்ளே வரும் போது முழு போதையில் இருந்த ரவி, “அடியே ஷாலினி நான் உன்னை விட மாட்டேன் டி.. உன்னை விட மாட்டேன் டி.." என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி உளறி கொண்டிருந்தான்.

நெடு நெடுவென்று நன்கு வளர்ந்து Fit-டாக கருப்பு உடை அணிந்து இருந்த ட்ரெயின்ட் புரோபஷனல் பாடிகார்ட்கள் 5 பேர் ரவியை அமுக்கி பிடித்து தூக்கி கொண்டு வெளியே நடந்தனர். அந்த போதையிலும் தன்னை யாரோ தூக்கி கொண்டு செல்வதை கவனித்த ரவி, “யாரு டா நீங்க..?? என்ன விடுங்க டா. நான் யாருன்னு தெரியுமா...??? எவ்ளோ தைரியம் இருந்தா என்னவே தூக்கிட்டு போவிங்க.. என்ன விடுங்க டா.." என்று திமிறினான்.

ஐந்து சிறுத்தைகள் போல் இருந்த அந்த பாடி கார்ட்களின் கையில் ஒரு சிறு பூனையாய் மாட்டி கொண்ட ரவியால் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. அந்த ஒயின் ஷாப்பில் இருந்து அவனை தூக்கி கொண்டு வந்தவர்கள், அங்கு சிறிது தூரத்தில் ஆளரவமற்று இருந்த ஒரு சந்தில் கொண்டு போய் போட்டனர். அப்போதும் போதையில் இருந்த ரவி, “யாரு டா நீங்க எல்லாம்.. என்ன விடுங்க.. விடுங்க.." என்று பிதற்றி கொண்டே இருந்தான்.

அங்கு இருந்தவர்களில் அதை கேட்டு கடுப்பான ஒருவன் அவன் வாயிலேயே நன்றாக நாலு மிதி மிதித்தான். பின் அங்கு இருந்த ஒவ்வொரு பாடிகார்டுகளும் தங்களால் முடிந்த வரை சிறப்பாக ரவியை கவனித்தனர். முதலில் அவனை அடித்தவன் நன்றாக அவனுடைய வாயை அடித்து உடைத்து இருந்ததால் அவனால் வழியில் சத்தம்போட்டு கூட கத்த முடியவில்லை.

இப்படி இங்கே ஒரு சம்பவம் நடந்து கொணடு இருப்பது வெளியில் இருக்கும் யாருக்கும் தெரியாத அளவிற்கு நாசுக்காக செய்து முடித்தவர்கள், மீண்டும் அவனை தூக்கி கொண்டு வந்து அந்த ஒயின் ஷாப் இன் வாசலில் கசங்கிய குப்பையாய் விட்டெறிந்து சென்றனர். இப்போது இவனை யாராவது கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தாலும் அவனுடைய உடம்பில் ஏதேனும் பாகங்கள் சரியாக இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆவது டாக்டருக்கு தேவைப்படும் அந்த நிலைமையில் இருந்தான் ரவி.

ஆனால் வெளியில் இருந்து அவனை யாராவது பார்த்தால் அவன் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடக்கிறான் என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் அவன் வாங்கிய அடிகள் அப்படி... அனைத்தும் உள் காயங்கள் மட்டுமே. வெளியில் ரத்தம் வருமளவிற்கு அவர்கள் இவனை அடிக்கவில்லை. அவன் வாயிலேயே வாங்கிய பல மிதிகளால் அவன் வாய் கிழிந்து அதில் இருந்து மட்டும் சிறிதளவு ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.

- நேசம் தொடரும்....
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.