அத்தியாயம் 42: ஷாலினியின் வீட்டிற்கு வந்த விஷ்ணு
“கோபப்படாத ஷாலினி. உனக்காக மாமா நான் இருக்கேன்." என்ற ரவி, அவளை கட்டி பிடித்து கொண்டான். 🤗 தன்னுடைய சக்தி மொத்தத்தையும் திரட்டிய ஷாலினி, அவளுடைய பலத்தை கொண்டு தன்னிடமிருந்து அவனை பிடித்து தள்ளியவள், அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். ஷாலினியிடம் அடி வாங்கிய ரவி, வெறி பிடித்த மிருகமாய் மாறி.. அவனுடைய இறையாக ஷாலினியை பார்த்தவன்; “என்னவே அடிச்சுட்டல.. இன்னைக்கு நான் உன்ன விட மாட்டேன் டி.." என்றவன், ஷாலினியின் மீது பாய்ந்தான்.
நாராயணன் மருத்துவமனையில்...
மருத்துவமனைக்கு வந்த விஷ்ணு, நேராக விஷ்வாவை சென்று சந்தித்து அவனிடம் செண்பகத்திடம் இருந்து தனக்கு கால் வந்தது பற்றியும், அவள் தன்னிடம் சொன்னது பற்றியும் சொன்னான். அதை கேட்ட விஷ்வா, “அம்மா எனக்கும் கால் பண்ணாங்க நான் தான் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால அதை அட்டென்ட் பண்ணல. ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு நம்ப சொல்லலைனாலும் எப்படியும் அம்மாவுக்கு தெரிஞ்சுரும். அதனால நம்மளே சொல்றது (Better) பெட்டர். நீ சித்தார்த்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிரு."
விஷ்ணு: ஆனா அண்ணா... நான் பைக்ல வந்தனே... சித்தார்த்த எப்படி பைக்ல கூட்டிட்டு போறது..??
விஷ்வா: ஆமால சார் இப்பலாம் பைக்ல ஜோடியா போறீங்கன்னு கேள்விப்பட்டேன். புதுசு புதுசா என்ன என்னமோ பண்ற... இருக்கட்டும் பாத்துக்கலாம்..
விஷ்ணு: “அதுக்குள்ள இவருக்கு தெரிஞ்சிருச்சா..?? ஒரு;வேளை ஸ்பை வச்சு நம்மளை வாட்ச் பண்றாரோ.." என்று தன் மனதிற்குள் நினைத்தவன், “ஹி... ஹி... 😅 அண்ணா... நீங்க எவ்வளவு நல்லவரு.. உங்க தம்பி என் மேல நீங்க எவ்வளவு பாசம் வச்சு இருக்கீங்கன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அதான் எப்பயும் நான் என்ன பண்றேன்னு நீங்க வாட்ச் பண்ணிட்டே இருக்கீங்க. ஆனா ப்ளீஸ் அண்ணா இப்ப அம்மா கிட்ட மட்டும் இத பத்தி எதுவும் சொல்லாதீங்க." என்றான்.
விஷ்வா: “அத பத்தி நான் கொஞ்சம் யோசிக்கணும்." என்றவனுக்கு சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தது. அதை நினைத்து பார்த்தவன் விஷ்ணுவை பார்த்து, “உனக்கு அந்த பொண்ணோட ஃபேமிலி பத்தி தெரியுமா..??" என்றான்.
விஷ்ணு: விஷ்வா இந்த கேள்வியை தன்னிடம் கேட்கிறான் என்றால் தனக்கு தெரியாத எதையோ அவன் தெரிந்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்தவன், “எனக்கு தெரியாது அண்ணா. அவளோட பயோ டேட்டாவ மட்டும் தான் பாத்தேன். அவ ஃபேமிலிய பத்தி உங்களுக்கு தெரியுமா..??" என்றான்.
விஷ்வா: ம்ம்ம்... அந்த ஸ்கூல்ல மேனேஜ் பண்றேன்னு போயிட்டு நீ அங்க டீச்சரா ஜாயிண்ட் பண்ணும்போதே நீ என்னமோ பண்றன்னு தொனுச்சு. அதனால உன்னை வாட்ச் பண்ணிட்டே இருந்தேன். நீ அந்த பொண்ண லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் அந்த பொண்ண பத்தின எல்லா டிடைல்சையும் கலெக்ட் பண்ணுங்கன்னு நம்ப செக்யூரிட்டி டீம் கிட்ட சொல்லிட்டேன். அவங்க உன்னையும் அந்த பெண்ணையும் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க. நீ வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்க கிட்ட இருந்து ஒரு அப்டேட் வந்துச்சு.
விஷ்ணு: என்ன அப்டேட் அண்ணா.. நான் ஷாலினிய அவங்க வீட்டுல ட்ராப் பண்ணதா..??
வருண்: அதுவும் தான்.
விஷ்ணு: அதுவும் தான்னா.. அப்ப வேற என்ன அப்டேட் இருக்கு...??
வருண்: ஷாலினியின் குடும்பத்தை பற்றி மேலோட்டமாக சொன்னவன், ஷாலினி உடைய அப்பாவின் இரண்டாவது மனைவியின் தம்பியை அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் குடும்பம் திட்டமிட்டிருப்பதாகவும், விஷ்ணு ஷாலினியை அங்கே இறக்கி விட்டு வரும்போது விஷ்ணுவை ரவி கொலை வெறியுடன் பார்த்ததால் அவனால் விஷ்ணுவிற்கு ஏதேனும் ஆபத்து வரக்கூடும் என்று சொன்னவர்கள்,
அந்த ரவி விஷ்ணு, ஷாலினியை கொண்டு வந்து அங்கே ட்ராப் செய்து விட்டு சென்றதை பற்றி அவளுடைய அப்பாவிடம் சொல்லி அவரை கையோடு ஷாலினியின் வீட்டுக்கு அழைத்து சென்று இருப்பதால் விஷ்ணு தொடர்பான ஏதேனும் பிரச்சினை அவர்களுடைய வீட்டில் இப்போது நடந்து கொண்டு இருக்க கூடும் என்று தன்னால் அனுப்ப பட்ட ஸ்பையிடம் இருந்து தகவல் வந்ததாக விஷ்ணுவிடம் சொன்னான்.
விஷ்ணு: ஐயோ..!!! அண்ணா... நான் அவளை அங்கு ட்ராப் பண்ணும் போதே சீக்கிரம் கிளம்புங்க எங்க அப்பா பாத்தா என்ன செருப்பால அடிப்பாருன்னு சொன்னாளே... நெஜமாலுமே ஒரு வேளை அவளை அடிச்சுருப்பாரோ... பாவம் அண்ணா ஷாலினி இப்ப என்ன பான்றது..
வருண்: அந்த பொண்ணுக்கு கால் பண்ணி எல்லாம் ஓகேவான்னு கேளு..
விஷ்ணு: ஓகே அண்ணா கேட்கிறேன். என்றவன், அப்போ சித்தார்த் என்று இழுத்தான்...
வருண்: நான் சிவாவ, சித்தார்த்த வீட்டுல கூட்டிட்டு போய் விட சொல்றேன். நீ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாரு. அந்த குடும்பமே சரி இல்ல.
விஷ்ணு: ஒகே அண்ணா... தேங்க்ஸ்.. என்றவன், வேகமாக அந்த அறையிலிருந்து வெளியே வந்து ஷாலினியின் நம்பருக்கு கால் செய்தான். அவன் பல முறை கால் செய்தும் ஷாலினி எடுக்கவில்லை. அதனால் பதட்டமானவன், நேராக அவளுடைய வீட்டுக்கே சென்று பார்த்து விடலாம் என்று நினைத்து வேகமாக அவனுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து அவளுடைய வீட்டை நோக்கி பறந்தான்.
ஷாலினியின் வீட்டில்...
இன்று என்ன ஆனாலும் சரி இவளை விட்டு விட கூடாது என்று நினைத்த ரவி, ஷாலினியை துரத்தி கொண்டு இருந்தான். சித்தி, கௌசல்யா, என்று கத்திய ஷாலினி, அந்த வீடு முழுவதும் அவனிடம் இருந்து தப்பிக்க ஓடினாள். தங்களுடைய அறையில் கதவை சாத்திவிட்டு.. அந்த கதவில் தங்கள் காதை வைத்து கேட்டு கொண்டு இருந்த கௌசல்யாவிற்கும், மாலதிக்கும், ஷாலினி கத்திய சத்தம் தெளிவாக கேட்டது.
ஷாலினி உதவிக்காக தங்களை அழைக்கிறாள் என்று தெரிந்திருந்தும் அவர்கள் இருவரும் ஷாலினிக்கு உதவ தயாராக இல்லை. மாறாக ஷாலினி கத்தும் சத்தத்தை ஏதோ சங்கீதம் போல கேட்டு ரசித்து கொண்டு இருந்தனர். 😍 இதற்கு மேல் தன்னால் ஓடி கொண்டு இருக்க முடியாது என்று நினைத்த ஷாலினி, லாபகமாக ஓடி சென்று தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டவள்; கதவை வேகமாக சாத்தி தாளிட்டாள்.
“கதவ திறடி... கதவ திறடி.." என்று கத்திய படி வெறி பிடித்த மிருகம் போல் அவனுடைய ஒட்டு மொத்த பலத்தையும் கொண்டு அந்த கதவை உடைத்து விடுபவன் போல் வேகமாக தட்டி கொண்டு இருந்தான் ரவி. கதவை சாத்திவிட்டு அந்த கதவின் அருகே தரையில் அமர்ந்த ஷாலினி, பயத்தில் அவளுடைய இரு கைகளாலும் அவளுடைய கால்களளய அனைத்து இருந்தாள்.
அழகாக பின்னல் இட பட்டிருந்த அவளுடைய தலை முடி கலைந்து இருந்தது. அதிகப்படியான பயத்தின் காரணமாக அவளுக்கு மூச்சு வாங்கியது. அவளுடைய இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது. அவளுடைய உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து இருந்தது. அவள் அந்த கதவில் சாய்ந்து அமர்ந்து இருந்ததால் அந்த கதவை அவன் வேகமாக தட்டி கொண்டு இருப்பதால் ஏற்படும் அதிர்வை கூட அவளால் உணர முடிந்தது. அது இன்னும் அவளை திகிலூட்டியது.
இப்போது இப்படியே அவன் தட்டி தட்டி அந்த கதவை உடைத்து விட்டு உள்ளே வந்தால் அவளுடைய நிலைமை என்னவாகும்...?? உள்ளே வந்து அவன் இவளை சீரழித்தாளோ, இல்லை கொன்று போட்டு விட்டு சென்றால் கூட அவளுக்காக நியாயம் கேட்பதற்காகவோ இல்லை அவளை பாதுகாக்கவோ யார் வர போகிறார்கள்..?? கண்டிப்பாக அப்படி யாரும் வரப்போவதில்லை என்று நினைத்த ஷாலினியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. 😭😭😭😭
அப்போது ஷாலினியின் அறையை ரவி தட்டி கொண்டிருக்கும் சத்தத்தை கேட்ட மாலதி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள். ரவி இவ்வளவு ஆக்ரோஷமாக அந்த கதவை தட்டி கொண்டிருப்பதை பார்த்த மாலதிக்கு சிறிது பயமாக தான் இருந்தது. எங்கே இவன் இந்த கதவை உடைத்து விட்டு அவளை ஏதாவது செய்து விட்டால் தனக்கும் தன்னுடைய மகளுக்கும் ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று நினைத்து பயந்தவள், அவனை சென்று தடுத்தாள்.
ரவி: “அக்கா என்ன விடு -க்கா. இன்னைக்கு நான் இவளை சும்மா விட மாட்டேன். இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்துச்சுன்னா என்னைவே அடிச்சு இருப்பா...!!!" என்றவன், தன்னை பிடித்திருந்தால் மாலதியின் கையை எடுத்து விட்டு கதவை நோக்கி சீறிப் பாய்ந்தான்.
மாலதி அவனை இழுத்து பிடித்தவள், “போதும் டா விடு. வெளியில போன அந்த ஆளு எப்ப வேணா திரும்பி வருவான். அவன் வரும்போது நீ இப்படி பண்றத பாத்து கல்யாணத்தை நிறுத்திட்டா என்ன பண்றது...?? என்ன தான் அந்தாளுக்கு இவ பிடிக்காத பொண்ணா இருந்தாலும், பெத்த பாசம் இவ மேல கொஞ்சமாவது இருக்கும்ல... எங்க போய்ட போறா.. இவ எங்க சுத்தினாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வீட்டுக்கு தானே வருவா... அப்ப பாத்துக்கலாம் விடு..
மாலதியின் இந்த பேச்சு ரவியின் கோபத்தை குறைப்பதற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் இதற்கு மேலும் இந்த வீட்டில் அவனுக்கு இருக்க பிடிக்கவில்லை. அதனால் மாலதியிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினான். அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் ஷாலினியை தான் இறக்கிவிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு.
நடுரோட்டில் நின்று கொண்டிருந்த விஷ்ணு, சுற்றி முற்றி பார்த்தான். ஷாலினியின் வீடு எங்கே இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை. அதனால் விஷ்வாவிற்கே கால் செய்து கேட்டு விடலாம் என்று நினைத்த விஷ்ணு, அவனுக்கு கால் செய்தான். கால் ஐ அட்டன் செய்த விஷ்வா, ஷாலினியை வேவு பார்ப்பதற்காக அவன் அனுப்பி வைத்திருந்த ஆட்கள் அவனுக்கு அனுப்பி இருந்த அனைத்து ரிப்போர்ட்களையும், அவர்களுடைய தொலைபேசி எண்களையும், இப்போது அவர்கள் இருக்கும் லைவ் லொகேஷனையும் விஷ்ணுவிற்கு அனுப்பி வைத்தான் வருண்.
வருண் அனுப்பி வைத்த தகவல்களை எல்லாம் மேலோட்டமாக பார்த்தான் விஷ்ணு. அதில் ஷாலினியின் குடும்ப வரலாறு முதல் குடும்ப புகைப்படம் என அனைத்தும் இருந்தது. இறுதியாக அதில் அவன் அனுப்பி இருந்த செக்யூரிட்டி ஆபீஸர்களின் நம்பரை பார்த்த விஷ்ணு, அவர்களுக்கு கால் செய்தான். அவர்களின் உதவியால் ஷாலினியின் வீட்டை கண்டு பிடித்தவன் அங்கே சென்றான்.
அவன் அந்த வீட்டின் உள்ளே செல்வதற்கு முன், இப்போது அந்த வீட்டில் யார், யார் இருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டான். விஷ்ணுவிற்கு இப்போது ஷாலினியை தவிர அவளுடைய குடும்பத்தில் இருக்கும் வேறு யாரிடமும் பேச விருப்பம் இல்லை. அதனால் ஷாலினியின் அப்பாவோ இல்லை ரவியோ வந்து தேவையில்லாத பிரச்சினை செய்தால் தன்னுடைய அடையாளத்தை ஷாலினியிடம் வெளிப்படுத்தி விடும் நிலைமை வந்துவிடும் என்று நினைத்த விஷ்ணு, அவர்கள் இருவரும் உள்ளே இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் உள்ளே சென்றான்.
ஷாலினியின் அப்பாவோ இல்லை ரவியோ விஷ்ணு அங்கே வந்திருக்கும் தகவலை தெரிந்து கொண்டு தங்களுடைய வீட்டிற்கு வர நினைத்தால் கூட பாதி வழியிலேயே அவர்களை தடுத்து விடுவதாக செக்யூரிட்டி ஆபீஸர் விஷ்ணுவிற்கு உறுதி அளித்தனர்.
கதவின் அருகே அமர்ந்திருந்த ஷாலினிக்கு மாலதி ரவியிடம் பேசியது அனைத்தும் தெளிவாக கேட்டது. மாலதியின் அந்த கொடூரமான பேச்சு ஏற்கனவே வேதனை நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஷாலினியின் மனதில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எரிய விட்டதை போல் இருந்தது. அதனால் அங்கிருந்து எழுந்த ஷாலினி, நேராக தன்னுடைய பீரோவை சென்று திறந்தாள். அந்த பீரோவில் இருந்து அவளுடைய அம்மாவின் பழைய புகைப்படத்தை எடுத்த ஷாலினி, அந்த பீரோவின் கதவை சாத்தி விட்டு அப்படியே தரையில் அந்த புகைப்படத்தை கட்டி பிடித்த படி அழுது கொண்டு அமர்ந்து இருந்தாள். 😭😭😭
பின் அந்த புகைப்படத்தை பார்த்த ஷாலினி தன்னுடைய இறந்து போன அம்மாவிடம் பேச தொடங்கினாள். “ஏன் மா இவ்ளோ கொடூரமானவங்களுக்கு நடுவில என்ன தனியா விட்டுட்டு போன..?? அப்போ உனக்கு கூட என்ன பிடிக்கலையா..?? நான் என்ன தப்பு பண்ணேன்னு இப்போ இவ்ளோ கஷ்ட படுறேன்னு எனக்கு புரியலம்மா.
இத்தனை வருஷத்துல நான் யாருக்காவது நல்லது செஞ்சு இருக்கனா, இல்லையான்னு, எனக்கு தெரியல. ஆனா என் மனசு அரிஞ்சு நான் யாருக்கும் எந்த கெட்டதும் செஞ்சது இல்ல. அப்புறம் ஏன் எனக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது...?? என்ன சுத்தி இத்தனை பேர் இருக்காங்க. ஆனா சத்தியமா சொல்றேன் மா சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் என்னோட நல்லது, கெட்டதுல யாருமே எனக்கு துணையா என் கூட இருந்தது இல்லை.
எனக்கு யாருமே வந்து எதுவும் செய்யலைன்னா கூட பரவால்ல மா. எப்பயும் என்ன விட்டுட்டு போகாம என் கூட இருந்து “உனக்காக நான் இருக்கேன்னு" யாராச்சும் ஆறுதலா பேசுறத கேட்கணும்னு ஆசையாயிருக்கு. ஆனா அப்படி சொல்ல எனக்காக யார் இருக்கா மா...?? அப்படி யாரும் இல்ல..." என்று கதறி கதறி அழுது கொண்டே சிறு விசும்பல்களுடன் மூச்சுவாங்க தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை பார்த்து பேசி கொண்டு இருந்தாள் ஷாலினி. அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் கையில் வைத்திருந்த அவளுடைய அம்மாவின் புகைப்படத்தை நினைத்தது. 😭😭😭😭
ஷாலினியின் வீட்டிற்குள் வந்த விஷ்ணு, அவளுடைய பெயரை சொல்லி அழைத்த படியே வீடு முழுவதும் அவளை தேடி கொண்டு இருந்தான். தங்களுடைய அறையில் இருந்த மாலதியும், கௌசல்யாவும், விஷ்ணுவின் குரலை கேட்டு வெளியே வந்தனர். விஷ்ணுவை பார்த்த மாலதி, அவன் யார் என்று விசாரித்தாள். ஷாலினியின் குடும்பத்தை பற்றி அவன் தெரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இவர்கள் அனைவருக்கும் அதிக மரியாதை கொடுத்து பேசியிருப்பான் விஷ்ணு.
ஆனால் இப்போது அவன் அவர்களை பற்றி தெரிந்து கொண்ட பின் இவர்களை ஒரு மனித ஜென்மமாக கூட அவன் மதிக்க விரும்பவில்லை. அதனால் மாலதி பேசி கொண்டு இருந்ததை விஷ்ணு கண்டு கொள்ளவே இல்லை. தன்னுடைய வீட்டிற்கே ஒருவன் வந்து தன்னை மதிக்காமல் அந்த ஷலினியின் பெயரை சொல்லி அவளை அங்குமிங்கும் தேடி கொண்டு இருக்கிறானே என்று நினைத்த மாலதிக்கு அதிகப்படியான கோபம் வந்தது. 😡
அப்போது கௌசல்யா விற்கு ரவி ஒருவனுடன் ஷாலினி பைக் இல் வந்து இறங்கியதாக சொன்னது ஞாபகம் வந்தது. அந்த ஒருவன் இவராகத்தான் இருக்க கூடும் என்று நினைத்தவள், அதை தன்னுடைய தாயிடம் சொன்னாள். அதை கேட்ட மாலதிக்கும் அப்படி தான் தோன்றியது. அதனால் முன்பை விட இப்போது அவளுக்கு விஷ்ணுவின் மீது அதிக கோபம் வந்தது. ஷாலினி அங்கே இருக்கிறாளா என்று பார்ப்பதற்காக விஷ்ணு சமையலறைக்குள் சென்று கொண்டு இருந்தான்.
அவன் கையை பிடித்து அவனை தடுத்த மாலதி, “இப்ப நீ இங்க இருந்து போகலைன்னா நான் போலீசை கூப்பிடுவேன்.." என்று மிரட்டினாள். த கிரேட் பிசினஸ் கிங் வருணின் தம்பி இந்த மாலதியின் மிரட்டல்களு எல்லாம் பயப்படுவானா என்ன...?? தன் மீது இருந்து மாலதியின் கையை வேகமாக தட்டிவிட்ட விஷ்ணு, அவளை பார்த்து முறைத்தான். 😒 🤨 அவனுடைய கண்களில் கோப தீ எரிந்து கொண்டிருந்தது. 🤬 எப்போதும் கல கலப்பாக புன்னகை மாறாத முகத்துடன் இருக்கும் விஷ்ணு, இப்போது அதிகார தோரணையில் அச்சுறுத்துபவனாக இருந்தான். 😡
விஷ்ணுவை அப்படி பார்த்த மாலதிக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை அவளுடைய மனதில் இவனிடம் பிரச்சனை செய்யதே என்று அவளிடம் அவளுடைய மனசாட்சி சொல்லி கொண்டே இருந்தது. அதனால் அமைதியான மாலதி, நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஷாலினியை தேடிய விஷ்ணு இறுதியாக ஒரு அறையின் முன் வந்து நின்றான்.
அந்த அறையின் கதவை திறக்க முயன்றான் விஷ்ணு. யாரோ தன்னுடைய அறையை மீண்டும் திறக்க முயலும் சத்தத்தை கேட்ட ஷாலினியின் உடல் பயத்தால் நடுங்கியது. அந்த கதவை தட்டிய விஷ்ணு ஷாலினியின் பெயரை சொல்லி அவளை அழைத்தான். ஷாலினி அதீத பதட்டத்தில் இருந்ததால் அந்த கதவின் முன்னே நின்று தன்னை யார் அழைக்கிறார்கள் என்று அவளால் உணர முடியவில்லை.
ஷாலினி இந்த அறைக்குள் தான் இருக்கிறாள் என்று விஷ்ணுவின் மனது அவனிடம் சொல்லி கொண்டே இருந்தது. அதனால் விடாமல் அவளுடைய பெயரை சொல்லியபடியே அந்த கதவை தட்டி கொண்டு இருந்தான் விஷ்ணு. சில நொடிகளுக்கு பின்பு தான் அது விஷ்ணுவின் குரல் என்று அடையாளம் கண்டு கொண்டாள் ஷாலினி.
அது விஷ்ணுவின் குரல் தான் என்று அவளுடைய மனசாட்சி அவளிடம் சொல்லி கொண்டே இருந்தாலும், அவளுடைய மூளை அவனுக்கு இது தான் தன்னுடைய வீடு என்று தெரியாத நிலையில்.. அவன் இப்போது எப்படி இங்கே வந்திருக்க கூடும் என்று அவளிடம் கேள்வி கேட்டது.. அதனால் குழம்பிய ஷாலினி, இது தன்னுடைய கற்பனையாக தான் இருக்க கூடும் என்று நினைத்தவள், கதவை திறக்கவில்லை.
தான் இத்தனை முறை தட்டியும் ஏன் ஷாலினி கதவை திறக்க வில்லை...?? என்று நினைத்த விஷ்ணுவிற்கு பதட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. “ஷாலினி நான் தான் விஷ்ணு. ப்ளீஸ் கதவ தொற.." என்று சொன்ன படியே கதவை தட்டினான் விஷ்ணு. விஷ்ணுவின் குரல் காந்தம் போல் ஷலினியை கதவின் அருகே இழுத்து வந்து விட்டது. இருந்தாலும் அவளுக்கு இருந்த பயத்தால் அவள் கதவை திறக்க துணியவில்லை.
தன்னுடைய கையை கதவின் மீது வைத்து பார்த்தால் ஷாலினி. விஷ்ணு வெளியே இருந்து தட்டி கொண்டு இருந்ததால் அந்த கதவு லேசாக ஆடியது. அப்போது தான் விஷ்ணு உண்மையாகவே வந்திருக்கிறான் என்று ஷாலினியின் மூளைக்கு உறைத்தது. ஆச்சரியமடைந்த ஷாலினி, அதே திகைப்புடன் கதவை திறந்தாள்.
ஷாலினி கதவை திறந்தவுடன் அவளை பார்த்த விஷ்ணு அதிர்ச்சி அடைந்தான். ஷாலினியின் உதட்டில் இருந்து இன்னும் சிறிதளவு ரத்தம் கசிந்து கொண்டு தான் இருந்தது. ரவி அவளை பிடித்து இழுத்ததால் கை பகுதியில் இருந்த அவளுடைய ஆடை கிழிந்து இருந்தது. அழுது அழுது அவளுடைய கண்கள் சிவந்தும் அவளுடைய கன்னங்கள் வீங்கியும் காணப்பட்டது. சிறிது நேரத்திற்கு முன் அவன் பார்த்த ஷாலினிக்கும் இப்போது அவன் பார்த்து கொண்டு இருக்கும் ஷாலினிக்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்து பார்த்த விஷ்ணுவின் மனம் வலித்தது. அவனுடைய கண்கள் தானாக கலங்கியது. 🥺
இந்த கொஞ்ச நேரத்திற்குள் ஷலினிக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் போதே அவனுடைய நெஞ்சம் எல்லாம் பதறியது. ஷாலினியை வலி நிறைந்த பார்வை பார்த்த விஷ்ணு, அவளுடைய பெயரை சொல்லி அழைத்தான். அப்போது அவனுடைய கண்களில் இருந்து வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் கன்னத்தை தொட்டு தரையை தொட்டது. 😢
ஷாலினியின் கண்களுக்கு அவன் முன்னே நிற்கும் விஷ்ணு அவளை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக தெரிந்தான். விஷ்ணுவை பார்த்தவுடன் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. 😭😭😭 அவளுடைய மனதில் இருந்த வேதனையை போக்கி கொள்ள ஆறுதல் தேட நினைத்தாளோ என்னமோ தெரியவில்லை வேகமாக விஷ்ணுவின் மீது தாவி அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள் ஷாலினி. விஷ்ணுவும் ஷாலினியை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டான். 🤗
- நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 42
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.