தாபம் 40

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 40: என் ஆளு ஒரு தேவதை

சுதாகர் வெளியே வந்தவுடன் ஷாலினியும், விஷ்ணுவும், ரித்திகாவை பார்க்க உள்ளே சென்றனர். ஷாலினி அங்கே வருவதை பார்த்து மகிழ்ந்த ரித்திகா அவளுடன் விஷ்ணுவும் அங்கே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அன்று கோயிலில் செண்பகத்துடன் விஷ்ணுவை பார்தது அவளுக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது.

விஷ்ணுவை பார்த்தவள், “நீங்க எப்படி இங்க... அதுவும் ஷாலினி கூட..??" என்று ஆச்சரியமாக கேட்டாள் ரித்திகா.

விஷ்ணு: நானும் நீங்க வொர்க் பண்ற ஸ்கூல்ல தான் அக்கா வொர்க் பண்றேன். இப்ப தான் ரீசன்ட்டா ஜாயின் பண்ணேன். ஷாலினி தான் உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க. அதான் உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன். எப்படி அக்கா இருக்கீங்க..?? இப்போ பரவால்லையா..??

ரித்திகா: நான் இப்ப நல்லா தான் இருக்கேன். சாரி அன்னைக்கு உங்க பேர்ர கேட்காம விட்டுட்டேன். உங்க பேர் என்ன..?

ஷாலினி: அப்ப உங்களுக்கு இவரோட பேரே தெரியாதா அக்கா..?

ரித்திகா: ஆமா ஷாலினி.. அது சரி இவர எப்டி உனக்கு தெரியும்..?? இவர பத்தி நீ என் கிட்ட சொல்லவே இல்லையே... நானும் அதே ஸ்கூல் -ல தான் வொர்க் பண்றேன். ஆனா நானே இவர பாத்ததே இல்லையே...

ஷாலினி: “நான் இவர பத்தி உங்க கிட்ட சொல்லி இருக்கேன் அக்கா. நீங்க தான் மறந்துட்டீங்க..." என்று ஒரு வெட்கத்துடன் சொன்னாள். ☺️

ரித்திகா:“சொல்லிருக்கியா...?? அப்புறம் ஏன் எனக்கு ஞாபகமே இல்லை..?? நான் அப்படியெல்லாம் எதையும் மறக்க மாட்டனே... இத எப்படி மறந்தேன்..??" என்றவள், இவனை பற்றி அவள் ஏதேனும் சொல்லி இருக்கிறாளா என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

ஷாலினி: ஒரு வேளை ரித்திகாவிற்கு ஞாபகம் வந்து, அந்த சாம்பவத்தை பற்றி கேட்டு விடுவாளோ என்று நினைத்து பயந்தவள்; “அதான்வரலைல்ல... பரவால்ல விடுங்க. உங்க உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல கண்டத யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க.. அப்புறம் பேசிக்கலாம்." என்று பேச்சை மாற்றினாள்.

விஷ்ணு: “அக்கா.. நீங்க மறந்தா என்ன..?? நான் உங்களுக்கு எல்லாத்தையும் சொல்றேன். எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு. ஷாலினிய பர்ஸ்ட் பர்ஸ்ட் மீட் பண்ண நாளை என் லைஃப்ல மறக்கவே மாட்டேன். எனக்கு அது ரொம்ப ஸ்பெஷலான டே தெரியுமா.. ??” என்று உற்சாகம் நிறைந்த ஆர்வமான குரலில் பேசி கொண்டு இருந்தவன், மேலும் எதையோ பேச வாயை திறந்தான்... அதற்குள் அவனை தடுத்து நிறுத்தினாள் ஷாலினி.

அன்று நடந்தவற்றை அப்போது அவள் லாவண்யாவிடமும், ரித்திகாவிடம், சொன்னபோதே அவளுடைய தோழிகள் அவர்கள் இஷ்டத்திற்கு ஷாலினியை கலாய்த்தது மட்டுமல்லாமல், இட்டுக்கட்டி வேறு பேசினார்கள். இப்போது அது விஷ்ணு தான் என்று ரித்திகாவுக்கு தெரிந்து விட்டால் அவள் தன்னை என்ன நினைப்பாளோ என்று நினைத்த ஷாலினி, “நம்ம இங்க ரித்திகா அக்காவ பாக்குறதுக்கு தான் வந்தோம். நம்மளை பத்தி பேச வர்ல. அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம். அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்." என்று விஷ்ணுவை பார்த்து சொன்னாள்.

அது வரை மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருந்த விஷ்ணுவின் முகம், ஷாலினி பேசியதை கேட்டவுடன் சுருங்கிவிட்டது. அதை கவனித்த ரித்திகா, “இதில என்ன இருக்கு..?? பரவால்ல நான் இவ்ளோ நேரம் ரெஸ்ட் -ல தானே இருந்தேன்.. நீங்க பேச போறீங்க நான் கேட்க போறேன். அவ்வ்ளோ தானே.. சோ நீங்க சொல்லுங்க... என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. முதல்ல உங்க பேர் என்னன்னு சொல்லுங்க." என்றாள்.

ரித்திகாவே இப்படி சொல்லிவிட்ட பின் இதற்கு மேல் தான் என்ன சொல்ல முடியும்... என்று நினைத்த ஷாலினி, அமைதியாகி விட்டாள். முதன் முதலில் தன்னுடைய காதலியை பற்றி தன்னுடைய நண்பர்களிடம் பேசும் டீன் ஏஜ் பையனை போல் மிகுந்த மகிழ்ச்சியில் ஆர்வமாக இருந்த விஷ்ணு, ரித்திகாவிடம் தன்னை அறிமுக படுத்தி கொண்ட பின் புன்னகை முகத்துடன் அவளிடம் பேச தொடங்கினான்... 😍

விஷ்ணு: "த்ரீ டேஸ் பேக் தான் நான் ஃபர்ஸ்ட் டே இந்த ஸ்கூலுக்கு வந்தேன். அன்னைக்கு நான் ஆபீஸ் ரூமுக்கு போயிட்டு இருந்தனா... அப்போ ரெஸ்ட் ரூம் பக்கத்துல போகும் போது நான் போன் ஐ பாத்துட்டே தரைய பார்க்காம அங்க இருந்த தண்ணில காலை வச்சு வழுக்கி கீழே விழுக போனேன் அப்ப.. இந்த சினிமாவுல காட்டுற மாதிரி.. ஹீரோயின் எப்பயாவது தடுக்கி கீழ விழுவாங்க... ஹீரோ கரெக்ட் ஆ அங்க வந்து அவங்கள தாங்கி பிடிப்பாங்களே அதே மாதிரி என் ஹீரோயின் ஷாலினி என்ன அப்படியே தாங்கி.... பிடிச்சா... அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அக்கா..." என்று அந்த மொமென்ட்டை நினைத்து பார்த்தவனின் உடல் சிலிர்த்து அடங்கியது. 😍 🥰

ரித்திகா: அவன் சொன்ன விதத்திலேயே ஷாலினியை அவனுக்கு எவ்வளவு பிடித்து இருக்கிறது என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதை நினைத்து விஷ்ணுவை பார்த்து சிரித்தவள், “எப்படி இருந்துச்சு..???" என்று நக்கலாக கேட்டாள். 😂

விஷ்ணு: “அதுவா.. அப்படியே வானத்துல பறக்கற மாதிரி ரொம்ப ஜாலியா இருந்துச்சு அக்கா.." 😍☺️ என்று வெட்கபட்டு கொண்டே சொன்னான்.

ரித்திகா: அப்ப ஷாலினி தான் உன்னுடைய ஹீரோயின், நீ தான் அவளுடைய ஹீரோன்னு சொல்லு... 😂 😂

விஷ்ணு: “ஆமா அக்கா..." என்று ஷாலினியை பார்த்து சிரித்த படியே சொன்னாள்.

ஷாலினியோ அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்து கொண்டு இருந்தாள். 🤨 “என்ன என்ன சொல்றான் பாரு... அதுதான் அக்கா என்ன நடந்துச்சுன்னு தானே கேட்டாங்க... அத மட்டும் சொல்ல வேண்டியது தானே இவன்... மனசுக்குள்ள இவனுக்கு பெரிய ரெமோன்னு நினைப்பு... அப்படியே அந்த மாமன்ட்டை ஃபீல் பண்ணி சொல்லிக்கிட்டு இருக்கான்....

இதுல இவன் ஹீரோவாம்.. நான் ஹீரோயினாம்... நான் கொஞ்சம் அழகா தான் இருக்கேன். என்ன ஹீரோயின்னு சொன்னா கூட பரவால்ல.. ஆன இவன எந்த அங்கிள்ள பாத்தாலும் ஹீரோ மாதிரியே இல்லையே... எவ்ளோ தைரியம்..??? இவனே இவன ஹீரோன்னு சொல்கிறான்... சரியான காமெடி பீசு.. எப்பயாவது, எங்கேயாவது தனியா மாட்டுவான்ல.. அப்ப இருக்கு இவனுக்கு. நல்ல நங்கு நங்குன்னு நாலு கொட்டு மண்டையில கொட்டிவிட்டுறனும்.. இந்த ஷாலினி சாஃப்ட்ன்னு நினைச்சு தானே டா நீ இவ்ளோ பேசிகிட்டு இருக்க... நான் எவ்வளவு டேரர்ன்னு உனக்கு காமிக்கிறேன்.." என்று தன் மனதிற்குள் நினைத்தவள், பின் ரித்திகா பார்த்து...

“இந்த ரித்திகா அக்காவுக்கு என்ன ஆச்சு... அவன் தான் லூசாட்டம் ஏதாவது உளறிட்டு இருக்கான்னா.. இவங்களும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனுக்கு ஈக்வலா பேசிட்டு இருக்காங்க...?? இவங்களுக்கு நான் தானே பிரிண்ட்டு..?? அப்புறம் ஏன் இப்படி பண்றாங்க..??" என்று தன் மனதிற்குள் சிறு குழந்தை போல் ரித்திகாவையும், விஷ்ணுவையும், மாறி மாறி வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள் ஷாலினி. 😒

இன்னுமும் விஷ்ணு, ஷாலினியை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று ரித்திகாவிடம் சொல்லி கொண்டு தான் இருந்தான். அப்போது திடீரென்று அவனுக்கு பொரை ஏறியது... அவன் இரும்பினான்.. 😣

ரித்திகா: பாத்து பாத்து வெளிய போய் முதல்ல தண்ணி குடிங்க விஷ்ணு...

விஷ்ணு: இருமி கொண்டே பேசியவன்.. “அது எல்லாம் ஒன்னும் தேவை இல்ல அக்கா. ஏதாவது கெட்ட சக்தி என்ன சபிச்சு இருக்கும்.. அதான் இப்படி.. கொஞ்ச நேரத்தில தானா சரியாகிரும்.” என்று ஷாலினியை பார்த்த படியே சொன்னான்.

ஷாலினி: “இப்ப தானே இவன் என்ன ஹீரோயின்னு சொன்னான்.. அதுக்குள்ள நான் இப்ப இவனுக்கு கெட்ட சக்தியா..??" என்று தன் மனதிற்குள் நினைத்தவள், அவனை பார்த்து முறைத்த படியே.. “ஹலோ... எதுக்கு என்ன நீங்க கெட்ட சக்தி -ன்னு சொல்றீங்க..??" என்று சீறினாள்... 😒🤨

விஷ்ணு: ஐயையோ... உங்களை யாருங்க இப்ப கெட்ட சக்தின்னு சொன்னது...?? நான் பொதுவா சொன்னேன். ரெண்டு ரெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதைங்க... 😍

ஷாலினி: நான் ஒன்னும் உன் ஆள் இல்லை... 😒

விஷ்ணு: “நீங்க தான் என் ஆள் இல்ல -ல.. அப்புறம் என்ன...?? ஃப்ரீயா விடுங்க.." 😂 😂 என்று அவளை வம்பு இழுத்தான்.

ஷாலினி: ஆனா நீ இப்ப என்ன தானே சொன்ன..?? 😒 ☹️

விஷ்ணு: “அப்ப நீ என் ஆளுன்னு ஒத்துக்குறியா..??" என்று அவளை மடக்கினான். 😂

ஷாலினி: அவன் பேசியதை கேட்டு கடுப்பானாள். விஷ்ணுவின் மீது அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறந்து விட்டது. “அடேய்.. நானும் பாத்துட்டே இருக்கேன்.. நீ என்ன அப்பல இருந்து ஓவரா பேசிட்டு இருக்க...??" என்று சண்டைக்கு வரிந்து கட்டி கொண்டு போனாள். 😡🔥

அவர்கள் சண்டை போடுவது ரித்திகாவிற்கு க்யூட்டான கப்பில் செல்ல சண்டை போடுவது போல் தான் தோன்றியது. அதனால் அவர்களை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள். அப்போது அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நர்ஸ், அவர்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டு இருப்பதை பார்த்து... “ஹாஸ்பிடல்ல எப்படி உங்களுக்கு பிஹே பண்ணனும்னு தெரியாதா..?? பேசண்ட்ட டிஸ்டர்ப் பண்ற மாதிரி எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க..??" என்று காட்டமாக கேட்டாள். 😒

விஷ்ணு: “நான் எதுவும் பண்ணல சிஸ்டர். இந்த பொண்ணு தான் என் கிட்ட சண்டைக்கு வர்றா.." என்று அங்கு இருந்த ஷாலினி ஐ கை காட்டினான்.

ஷாலினி: இவன் தான் என்ன டென்ஷன் பண்ற மாதிரி பேசினான் சிஸ்டர்.

நர்ஸ்: இங்க நின்னு சத்தம் போடாதீங்கன்னு சொன்னா அதுக்கு இன்னொரு சண்டைய ஸ்டார்ட் பண்றீங்க...?? உங்க சண்டைய வெளில போய் கண்டின்யூ பண்ணுங்க.. முதல்ல இங்க இருந்து 2 பேரும் வெளியில போங்க.. 😒 🤨

ரித்திகா அவர்கள் இருவரும் நர்சிடம் திட்டு வாங்குவதை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள். 😂 நர்ஸ் சொன்னதை கேட்ட இருவரும் ரித்திகாவை பார்த்து.. அவளுடைய உடம்பை அவளை நன்றாக பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தனர்.

ஷாலினியும், விஷ்ணுவும், அந்த அறைக்குள் பேசி கொண்டது அந்த அறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்த சுதாகருக்கும், ரேவதிக்கும், கூட தெளிவாக கேட்டது. அதனால் அவர்கள் அந்த அறையில் இருந்து வெளியே வரும்போது அவர்களை பார்த்த ரித்திகாவின் பெற்றோர்கள் அர்த்தமாக தங்களுக்குள் சிரித்து கொண்டனர். 😅

அவர்கள் இருவருடைய மனதிலும் ஒன்றே ஒன்று தான் ஓடியது, “நம்ம ஸ்கூல்ல வேலை பாக்கும் போது... காதலிக்கிறதுக்கு முன்னாடி ஸ்டார்டிங்ல இப்படி தானே ஒருத்தர் கூட ஒருத்தர் சண்டை போட்டுட்டு இருப்போம்..?? என்பது தான். ரேவதியை பார்த்த ஷாலினி தனக்கு மிகவும் லேட் ஆவதால் அவள் சீக்கிரம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னவள், ரித்திகாவை பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினாள்.

விஷ்ணுவும், ஷாலினி சொன்னது போலவே ரேவதியிடம் சொல்லிவிட்டு ஷாலினியின் பின்னாலேயே ஓடி வந்தான். அந்த மருத்துவமனையின் வாசலுக்கு வந்த ஷாலினி, ஒரு ஓரமாக நின்று ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தாள். அவள் அருகே வந்த விஷ்ணு, தானே அவளை அவளுடைய வீட்டில் டிராப் செய்வதாக சொன்னான்.

ஷாலினி அவன் பேசியதையே கண்டு கொள்ளவில்லை. அப்போது அந்த ரோட்டை ஒரு ஆட்டோ கடந்து செல்ல, ஆட்டோ... ஆட்டோ... என்று கத்தியபடியே ஷாலினி ஆட்டோவின் பின் ஓடினாள். அந்த ஆட்டோக்காரன் ஷாலினியை கண்டு கொள்ளாமல் வேகமாக சென்றுவிட்டான். அதை கண்டு கடுப்பான ஷாலினி, “ச்சே..." என்று சொன்னவள்; அந்த ரோட்டில் அவளுடைய காலுக்கு கீழே கிடந்த ஒரு சிறிய கல்லை எட்டி உதைத்தாள்.

அவள் எட்டி உதைத்த அந்த கல் அங்கு ஓரமாக சென்று கொண்டு இருந்த ஒரு குட்டி தெரு நாய் என் மீது பட, அந்த தெரு நாய்.. ஷாலினியை பார்த்து கோபமாக “வ்வவ்.... வ்வவ்.." என்று குறைத்தது.. 🐕 காற்றில் ஏதாவது சிறிய பூச்சி பறந்தாலே.. அதை கண்டு பயப்படும் குணம் கொண்ட ஷாலினி, அந்த நாய் தன்னை பார்த்து குறைத்ததால் அவளை கடித்து விடுமோ என்று நினைத்து பயந்தாள். 😟

பயத்துடன் ஷாலினி அங்கு இருந்த விஷ்ணுவின் அருகே சென்று நின்று கொண்டாள். அவளை பார்த்து மெலிதாக சிரித்தான் விஷ்ணு. 😁 மீண்டும் அந்த குட்டி நாய் ஷாலினியை பார்த்து குறைத்தது. “வ்வவ்.... வ்வவ்.." 🐕இப்போது பயத்தில் ஷாலினி உடைய முகமெல்லாம் வியர்த்து கொட்டியது. விஷ்ணுவின் பின்னே நின்று கொண்ட ஷாலினி, பயத்தில் அவனுடைய தோளை தன் இரு கைகளாலும் பற்றி கொண்டாள்.

ஷாலினியின் தொடுகை விஷ்ணுவின் உடலில் மின்சாரத்தை பாய்சுவதை போல் இருந்தது. அவனுடைய இதயம் ஓட்ட பந்தயத்தில் ஓடும் குதிரை போல் வேகமாக துடித்தது. ❤️ விஷ்ணு, அவனுக்கான காதல் உலகில் தத்தளித்து கொண்டு இருக்க, அந்த குட்டி நாய் மீண்டும் குறைத்து.... அவனுடைய கவனத்தை அதன் பக்கம் திருப்பியது. 🐕

அப்போது தான் ஷாலினியின் பயத்தை உணர்ந்த விஷ்ணு அந்த நாய் குட்டியை அங்கு இருந்து துரத்தி விட்டான். அப்போது ஷாலினியின் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. ஷாலினி உடைய அப்பா தான் கால் செய்து இருந்தார். ஷாலினியிடம் அவள் ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று கோபமாக கேட்டவர், அவளை சீக்கிரம் வீட்டுக்கு வரும் படி சொல்லிவிட்டு கால் ஐ கட் செய்தார்.

ஷாலினி உடைய அப்பா சத்தமாக அவளிடம் மொபைலில் பேசியது, அவள் அருகே நின்று கொண்டு இருந்த விஷ்ணுவிற்கும் கூட தெளிவாக கேட்டது. அதனால் அவளிடம் மீண்டும் தானே அவளை அவருடைய வீட்டில் ட்ராப் செய்து விடுவதாக சொன்னான் விஷ்ணு. இப்போது ஷாலினிக்கு வேறு வழி எதுவும் இல்லாததால் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.

அவள் சொன்னதை கேட்டு துள்ளி குதித்த விஷ்ணு பார்க்கிங் ஐ நோக்கி ஓடினான். அவனை பார்த்த செக்யூரிட்டி மரியாதையாக அவனிடம் சாவியை பெற்று கொண்டு அவனுடைய பைக் ஐ ஸ்டார்ட் செய்து கொண்டு வந்து அவன் முன் நிறுத்தினான். அவனிடம் இருந்து பைக் ஐ வாங்கிய விஷ்ணு, ஷாலினியின் அருகே சென்று பைக்கை நிறுத்தி அவளை ஏறுமாறு முன் செய்தது போலவே கண்ணால் சைகை செய்தான். 😍

வழக்கம் போல் தனக்குள் அவன் செய்வதை எல்லாம் ரசித்தவள், வெளியில் அவனை பார்த்து முறைத்த படி பைக்கில் ஏறி அமர்ந்தாள். விஷ்ணு அவனுடைய காதல் வாகனத்தை ஸ்டார்ட் செய்து பறந்தான். 🏍️ ❤️ 👩‍❤️‍👨 ஷாலினி அவளுடைய வீட்டிற்கு செல்ல விஷ்ணுவிற்கு வழி சொல்ல.. விஷ்ணு அவள் சொன்ன படியே சென்று கொண்டு இருந்தான்.

சில நிமிடப் பயணத்திற்குப் பின் ஷாலினியின் வீடு இருக்கும் தெரு வந்தது. அதை கவனித்த ஷாலினி, விஷ்ணுவை வண்டியை நிறுத்த சொன்னாள். ஷாலினியின் வீடு வந்துவிட்டது போல என்று நினைத்த விஷ்ணு, அவன் வண்டியை நிறுத்தினான்.

விஷ்ணு: அங்கு ஒரு மளிகை கடை இருந்தது. அதன் அருகே இருந்த ஒரு வீட்டை கை காட்டியவன், “இது தான் உங்க வீடா...??" என்று ஷாலினியிடம் கேட்டான்.

ஷாலினி: இல்ல எங்க வீட்டுக்கு இன்னும் கொஞ்சம் தூரம் உள்ள போகணும். நான் அப்டியே நடந்து போய்க்கிறேன் நீங்க கிளம்புங்க.

விஷ்ணு: அப்ப வந்து வண்டில ஏறு. நான் உன்ன உங்க வீட்டுக்கிட்டையே கொண்டு போய் விடுறேன்.

ஷாலினி: “எதுக்கு நான் என் அப்பா கிட்ட செருப்படி வாங்குறதுக்கா..?? ப்ளீஸ் சீக்கிரம் இங்க இருந்து கிளம்புங்க." என்றவள், விஷ்ணுவை திரும்பி பார்க்காமல் அவளுடைய வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.

ஷாலினி அவனுடைய பார்வையில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்த விஷ்ணு, “ச்சே.. எப்ப பாத்தாலும் ஃபேமிலில இருக்கிறவங்க லவ்க்கு ஆப்போசிட்டாவே இருக்காங்க..." என்று நினைத்தவன், அதனுடைய பைக் ஐ ஸ்டார்ட் செய்ய போனான். அப்போது அவனுக்கு சரியாக செண்பகத்திடம் இருந்து கால் வந்தது.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஷ்ணு, “ஐயோ நான் பேசினது அம்மாவுக்கே கேட்டுருச்சு போல.." என்று நினைத்தவன்; கால் ஐ அட்டன்ட் செய்தான். சித்தார்த் ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவனிடம் கேட்ட செண்பகம், விஷ்ணு வரும் போது சித்தார்த்தையும் அவனோடு அழைத்து வரும்படி சொன்னாள்.

அதை கேட்ட விஷ்ணு, எங்கே சித்தார்த்துக்கு நடந்ததை எல்லாம் செண்பகத்திடம் சொன்னாள், அதை கேட்டு அவள் பயந்துவிடுவாளோ என்று நினைத்து, நடந்ததை சொல்லாமல் மறைத்தவன், சித்தார்த் அவனோடு தான் இருப்பதாகவும், அவன் வீட்டுக்கு வரும் போது அவனையும் தன்னோடு அழைத்து வருவதாகவும் சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

“இப்ப மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு போனுமா..!!" என்று நினைத்து சலித்து கொண்ட விஷ்ணு, வண்டியை திருப்பிகொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தான். விஷ்ணு ஷாலினியை இங்கே வந்து இறக்கி விட்டதில் இருந்து, இப்போது அவன் கிளம்பும் வரை, நடந்தது அனைத்தையும் ஒரு இளைஞனுடைய கூர்மையான இரு கண்கள் நோட்டமிட்டு கொண்டு இருந்தது. அவனுடைய முகத்தில் எள்ளும், கொள்ளும், வெடித்து கொண்டு இருந்தது. 😡 🤬

விஷ்ணு அவனுடைய வண்டியில் வேகமாக செல்ல, செல்பவனின் முதுகை பார்த்து கொண்டு இருந்தவன் கண்களில் கொலை வெறி இருந்தது. 😡 விஷ்ணு அந்த ஹாஸ்பிடலில் இருந்து சென்று விட்டதை உறுதி செய்த சிவா, சித்தார்த்தை ரித்திகாவை பார்ப்பதற்காக அழைத்து வந்தான். ரித்திகாவிற்கு மயக்கம் தெளிந்து விட்டது என்பதை அறிந்த சித்தார்த் அவளை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்றான்.

நர்சிடம் பர்மிஷன் கேட்ட சிவா, சித்தார்த்துடன் ரித்திகாவின் அறைக்குள் சென்றான். அது வரை அசதியாக அந்த பெட்டில் படுத்து இருந்த ரித்திகாவின் முகத்தில் சித்தார்த்தை பார்த்தவுடன் ஒரு பிரகாசம் தோன்றியது. 😍 அவள் மயங்கி விழுந்த உடன் சித்தார்த் செய்தவற்றை எல்லாம் ரேவதியிடமிருந்து அவள் கேட்டு தெரிந்து கொண்டு இருந்ததால் சித்தார்த்தின் மேல் அவளுக்கு இன்னும் பாசம் அதிகமானது.

ரித்திகாவை பார்த்தவுடன், அவளை ஓடி சென்று கட்டி பிடித்து கொண்டான் சித்தார்த். அதை பார்த்து ஒரு வேலை ரித்திகா இடம் இருந்து சித்தார்த்திற்கு ஏதாவது இன்பெக்சன் ஆகிவிடுமோ என்று நினைத்து பயந்த நர்ஸ், வேகமாக சென்று அவர்கள் இருவரையும் பிரித்து விட்டாள். அதனால் சித்தார்த் அழ தொடங்கிவிட்டான். 😭

அந்த காய்ச்சலால் அதிகம் பேச முடியாத நிலைமையில் இருந்தாலும் ரித்திகா சிரமப்பட்டு அவனிடம் பேசி அவனை சமாதானப்படுத்த முயற்சித்தாள். சிவாவும் அவனால் முயன்றவரை சித்தார்த்தின் அழுகையை நிறுத்த போராடினான்.

ரித்திகா அங்கு இருந்த ஒரு பெரிய ஊசியை கை காட்டியவள், “எனக்கு உடம்பு சரியில்ல. அதனால அதை எனக்கு போட்டாங்க தெரியுமா...!!! என் கூட வந்து நீ பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தா.. உனக்கு அப்புறம் காய்ச்சல் வந்துடும். அப்புறம் இந்த மாதிரி உனக்கு பெரிய பெரிய ஊசி லாம் போடுவாங்க. சித்தார்த்துக்கு வலிக்கும் நானே... அது எல்லாம் வேண்டாம்ல.. அதனால அழுகாத.. உனக்கு காய்ச்சல் வந்துற கூடாதுன்னு தான் நர்ஸ் அப்படி பண்ணாங்க." என்று எதை எதையோ சொல்லி ஒரு வழியாக சித்தார்த்தை சமாதான படுத்தினாள்.

சித்தார்த்: “உனக்கு நெஜமாலுமே பெரிய பெரிய உசியா போட்டாங்களா..???" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான்.

ரித்திகா ஆமாம் என்று தன் தலையை ஆட்டினாள்.

சித்தார்த்: அப்போ உனக்கு நிறைய வலிச்சுதா..?? 🥺

ரித்திகா: “நான் வளர்ந்து பெரிய பொண்ணு ஆயிட்டேன்ல.. அதனால எனக்கு கொஞ்சமா தான் வலிச்சுது." என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😁 சித்தார்த்தின் கள்ளம் கபடமற்ற அன்பு அவளுடைய மனதை நிறைத்தது. ❤️🥰

-நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் 🙏
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 40
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.