அத்தியாயம் 35: ரித்திகா ஒரு மாயக்காரி
ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து இருந்த ரேவதியின் புடவையை பிடித்து கொண்டு அவளை அப்பாவியாக பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்தை தூக்கி தன் மடியில் அமர வைத்து கொண்டாள் ரேவதி. அந்த காட்சியை சிவாவும், வருணும், ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தனர். ரேவதியின் முகத்தை அப்பாவியாக பார்த்த சித்தார்த், அவளிடம் பேச தொடங்கினான்.
சித்தார்த்: “ரித்திகாவுக்கு என்ன ஆச்சு..? எல்லாரும் நைட்டு தானே தூங்குவாங்க; அவ ஏன் இப்படி இங்க தூங்கிட்டு இருக்கா...? நான் ரொம்ப நேரமா அவள கூப்பிட்டு பாத்தேன். எந்திரிக்க சொன்னேன். ஆனா அவ எந்திரிக்கவே இல்ல. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சி.. நான் அலுத்துட்டேன் தெரியுமா பாட்டி? அவ இனிமே என் கிட்ட பேசமாட்டாளா?" என்று தன்னுடைய மழலை குரலில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் ரேவதியை பார்த்து கேட்டான்.
ரேவதி: சித்தார்த்தின் பேச்சு அவளுடைய தாய் உள்ளத்தை தொட்டது. சித்தார்த்தை சமாதான படுத்த நினைத்தவள், அவனுடைய முகத்தை தன்னுடைய இரு கைகளால் தாங்கி அவனை தன்னுடைய முகத்தை நேரடியாக பார்க்கும் படி செய்து அவனிடம் பேச தொடங்கினாள்.
“ரித்திகாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனால தான் அவ தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா. கொஞ்ச நேரத்தில அவளுக்கு சரியாயிடும். சரியான உடனே அவ உன் கிட்ட பேசுவா. சரியா? சித்தார்த் அழுதா நல்லாவே இல்ல தெரியுமா..? நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுதுட்டு இருக்க கூடாது." என்றவள், சித்தார்த்தின் கண்களில் இருந்து வந்த கண்ணீரை தன் கையாள் துடைத்து விட்டாள்.
சித்தார்த்: சரி என்று தன் தலையை ஆட்டியவன், “இனி மேல் சித்தார்த் அழவே மாட்டேன். குட் பாய் ஆ இருப்பேன். ரித்திகா தூங்கி எந்திரிச்ச உடனே என் கிட்ட அவள பேச சொல்லுங்க." என்றான்.
ரேவதி: “கண்டிப்பா சொல்றேன்." என்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் சொன்னாள்.
சித்தார்த்: “ப்ராமிஸ்..?" என்றவன், ரேவதியிடம் தன்னுடைய குட்டி கையை நீட்டினான்.
ரேவதி: “ப்ராமிஸ்." என்றவள், சித்தார்த்தின் கையை பிடித்து அதன் மேல் தன்னுடைய கையை வைத்து சத்தியம் செய்தாள்.
சித்தார்த், ரேவதியை பார்த்து அழகாக சிரித்தான். தன்னுடைய மகளுக்கு உடல் நிலை சரி இல்லாத இந்த நிலையில் ரேவதியுடைய மனம் அதிகப்படியான வேதனையில் துடித்து கொண்டு இருந்தது. ஆனால் சித்தார்த் உடைய அருகாமை அவளுடைய மனதிற்கு இதமான ஆறுதலை கொடுத்தது.
இம்முறை சித்தார்த்தை பார்த்து மனதார புன்னகைத்த ரேவதி, அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டாள். பதிலுக்கு ரேவதியை பார்த்து சிரித்த சித்தார்த், அவளை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டான். ரேவதியின் இருப்பு சித்தார்த்துக்கு ரவியுடன் அவன் இருப்பது போல் ஒரு உணர்வை கொடுத்தது. ரேவதிக்கும் எப்படியும் தன்னுடைய மகளுக்கு சரியாகிவிடும் என்று ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது.
ரேவதியை சித்தார்த் மிகவும் தொந்தரவு செய்து கொண்டு இருப்பதாக நினைத்த வருண், சிவாவை அனுப்பி அவனை அழைத்து வர சொன்னான். சிவா வந்து தன்னை அழைக்கவும், அவனிடம் அடம் பிடிக்காமல் உடனே வர சம்மதித்து வந்தான் சித்தார்த். அதை பார்த்து ஆச்சரியமடைந்த சிவா; அவனை கூட்டி கொண்டு வருணின் அருகே வந்தவுடன், “என்ன ஆச்சரியமா இருக்கு..? வா -ன்னு சொன்ன உடனே அடம் பிடிக்காம வந்துட்ட" என்று சித்தார்த்தை பார்த்து கேட்டான்.
சித்தார்த்: குட் பாய்ஸ்லாம் யார் கிட்டயும், எதுக்காகவும், அடம் பிடிக்க மாட்டாங்க -ன்னு ரித்திகா சொல்லி இருக்கா அதான்." என்று சிரித்து கொண்டே சொன்னான்.
சிவா: “சூப்பர். சித்தார்த் குட் பாய் ஆயிட்டான்." என்றவன், சித்தார்த்தின் தலையை செல்லமாக வருடினான்.
சித்தார்த்: “என் ஹேர் ஸ்டைல்ல கலைக்காதீங்க அங்கிள்." என்றவன், தன்னுடைய தலையில் இருந்த அவனுடைய கையை எடுத்து விட்டான்.
அது வரை ரித்திகாவை நினைத்து அழுது கொண்டு இருந்த சித்தார்த், இப்போது அந்த ரித்திகாவுக்காகவே சமதானமாகி சிரிப்பதை பார்த்த வருணுக்கு அப்போது தான் அவன் மனதில் அழித்து கொண்டு இருந்த பாரம் நீங்கி மனம் லேசானது. ஆனால் “ரித்திகா" என்ற பெயர் ஒரு மந்திர சொல் போல், அவள் எது சொன்னாலும் இவன் கேட்கிறானே என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும்; அவள் பெயரை சொன்னால் கூட யார் என்ன சொன்னாலும் அதை கேட்டு அப்படியே சித்தார்த் செய்கிறானே என்று நினைத்த வருணின் மனதில் மீண்டும் ரித்திகாவின் மேல் சிறிதாக கோபம் வந்தது.
வருணிற்கு அவன் கண் முன்னே இருக்கும் முக்கிய பிரச்சனையாக ரித்திகா தெரிந்தாள். அவளை என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எள் தான் என்னைக்கு காய்கிறது, எலி புழுக்கை ஏன் காய வேண்டும்..? என்பது போல், ரித்திகா, கண் விழித்து தன்னிடம் பேச வேண்டும் என்று சித்தார்த் அவளுக்காக காத்து கொண்டு இருக்கிறான்.
சித்தார்த்தை சிவாவிடமோ, அல்லது சுகந்தியை வர சொல்லி அவளிடமோ, அவனை பார்த்து சொல்லி விட்டு விட்டு அங்கு இருந்து தன் ஆஃபிஸுக்கு சென்று வருண் தனக்கு அடுத்து இருக்கும் முக்கியமான மீட்டிங் ஐ அட்டென்ட் செய்து இருக்கலாம். சித்தார்த் இப்போது நார்மல் ஆகி விட்டான் இனி மேல் அவன் ரித்திகாவை நினைத்து அழுது கொண்டு இருக்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாக தெரிந்தும், அவன் ஏன் இன்னும் இங்கே இருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
தன்னுடைய மொபைல் போனை நொண்டிய படி சிவாவுடனும், சித்தார்த்துடனும், அங்கு இருந்த சேரில் அமர்ந்து இருந்தான் வருண். சந்தோஷ் உடன் பேசிய படி நின்று கொண்டு இருந்த சாரதா, வருண் இன்னும் கிளம்பாமல் தன் மகனுடன் அங்கேயே வெய்ட் செய்து கொண்டு இருப்பதை ஆச்சரியமாக பார்த்தாள்.
ரேவதியும், சுதாகரும், கூட தாங்களே ரித்திகாவை பார்த்து கொள்வதாக சொல்லி சித்தார்த்தையும், வருணையும் அங்கு இருந்து கிளம்ப சொன்னார்கள். சித்தார்த், ரித்திகா தன்னுடன் பேசாமல் இங்கு இருந்து கிளம்ப மாட்டேன் என்று சிட்ரிக்ட் ஆக சொல்லி விட்டான். வருணும் தானும் அவர்களுடன் இங்கேயே இருப்பதாக சொல்லி விட்டு மீண்டும் அதனுடைய மொபைல் ஐ பார்க்க தொடங்கினான்.
இத்தனை பேர் ரித்திகாவுக்காக இங்கே இருக்கும் போது, தானும் இங்கே இருக்க தேவை இல்லை என்று நினைத்த சாரதா; சந்தோஷ் இடம் சொல்லி விட்டு அங்கு இருந்து கிளம்பி மீண்டும் பள்ளிக்கு சென்று விட்டாள். ஆனால் அவள் செல்வதற்கு முன் ரித்திகாவின் பெற்றோர்களை சந்தோஷ் இங்கே கூட்டி வந்தது வரை சரி. அதற்கு பிறகும் அவன் ஏன் இங்கே இருக்க வேண்டும்? என்று நினைத்து, அவனை வீட்டுக்கு கிளம்ப சொன்னாள்.
சாரதா தனியாளாக இருந்து அவனை கஷ்ட பட்டு வளர்த்தாள். அதனால் சாரதாவின் வார்த்தைக்கு சந்தோஷ் எப்போதும் மறு பேச்சு பேசியதே இல்லை. ஆனால் இப்போது அவனால் ரித்திகாவை அப்படியே விட்டு விட்டு செல்ல முடியவில்லை. அதனால் சாரதா எவ்வளவு சொல்லியும் அவன் இங்கேயே இருப்பதாக சொல்லி விட்டான்.
அப்படி அந்த ரித்திகா என்ன மாயம் செய்து இத்தனை பேரை தனக்காக இப்படி எல்லாம் செய்ய வைக்கிறாளோ என்று நினைத்து அவள் மீது கோபப்பட்டவள், சந்தோஷ் இடம் எதுவும் பேசாமல் அங்கு இருந்து சென்று விட்டாள். சாரதா அங்கு இருந்து சென்றும், இன்னும் ஏன் சந்தோஷ் அங்கு இருந்து செல்லாமல் இருக்கிறான்..? என்று நினைத்த கௌத்தம்; அவனை முறைத்து பார்த்தான்.
கௌத்தம்: “ரித்திகா உடம்பு சரி இல்லைன்னு கேட்டப்ப இவங்க ஸ்கூல்ல அவளுக்கு லீவு குடுக்கல. இப்ப இவன் மட்டும் எப்படி இங்க வந்து நிக்கிறான்? இவன -லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்களா? ஒரு வேளை இப்படி எல்லாம் பண்ணி ரித்திகாவையும், அவளோட பெற்றோர்களையும் கரெக்ட் பண்ண ட்ரை பண்றானோ..? அப்படி தான் இருக்கும்." என்று அவனே தனக்குள் கேள்வியும் கேட்டு அவனே பதிலும் சொல்லி கொண்டவன், கௌத்தம் ஐ பார்த்து முறைத்தான் சந்தோஷ்.
வருணின் அருகே அமர்ந்து இருந்த சித்தார்த், அவனுடைய தோளில் தன்னுடைய தலையை சாய்த்தான். அது வரை ஏதோ ஒரு முக்கியமான மெயிலை டைப் செய்து கொண்டு இருந்த வருண், தன் மகனை திரும்பி பார்த்தான்.
சித்தார்த்: “வயிறு பசிக்குது" என்று தன்னுடைய வயிற்றில் ஒரு கையை வைத்து தடவிய படி சொன்னான்.
வருண்: “அப்ப நீ ஸ்கூல்ல சாப்பிடலையா..?"
சித்தார்த்: “இல்ல. இன்னிக்கு ரித்திகா என் கூட சாப்பிடுறதுக்கு வரல. அதனால நான் சாப்பிடல."
வருண்: “சரி..! அப்ப வா போய் சாப்பிடலாம்." என்றவன், சித்தார்த் உடைய கையை பிடித்தான்.
அவன் சித்தார்த்தின் கையை பிடித்த படி எழுந்து நிற்கும் போது அவனுக்கு எதிரே அமர்ந்து இருந்த ரித்திகாவின் பெற்றோர்களை பார்த்தான். ரித்திகாவின் பெற்றோர்களுக்கு வருணின் அம்மா செண்பகத்தை விட வயது அதிகம் ஆக இருக்கும்.
அவர்களும் எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று நினைத்த வருண், சிவாவிடம் அவர்களையும் தங்களுடன் சாப்பிட வருமாறு அழைத்து வர சொல்லி அனுப்பினான். சிவாவும் அவர்களின் அருகே சென்று அவர்களை சாப்பிட வருமாறு அழைத்தான். தங்களுடைய மகள் இப்படி சுய நினைவின்றி ஹாஸ்பிடலில் இருக்கும் போது அவர்களால் எப்படி சாப்பிட முடியும்...? அதனால் வர மறுத்து விட்டனர்.
ஆனால் சிவாவும் அவர்களை அப்படியே விடுவதாக இல்லை.
சிவா: “ரித்திகாவுக்கு இப்ப உடம்பு சரி இல்ல. நீங்க அவங்களை பாத்துக்கனும் -ன்னு நினைச்சா, அதுக்கு முதல்ல நீங்க நல்லா இருக்கணும்ல? உங்களுக்கும் சாப்பிடாம இருந்து ஏதாவது ஆயிடுச்சுன்னா நீங்க எப்படி அவங்களை பாத்துக்குவீங்க?" என்று எதை எதையோ சொல்லி அவர்களை சமாதான படுத்த முயற்சித்தான்.
அவர்கள் பேசி கொண்டு இருப்பதை கவனித்த சித்தார்த், வருணின் கையை விட்டு விட்டு ரேவதியின் அருகே ஓடி சென்று அவளுடைய புடவையை பிடித்து கொண்டு அவர்களை சாப்பிட வரும்படி அழைத்தான்.
சுதாகர்: சிவாவை பார்த்தவர், “பரவால்ல பா. சாப்பிடணும்ன்னா அப்புறமா நாங்களே போய் சாப்பிட்டுக்கறோம் உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத சிரமம்." என்றார்.
சிவா: “இதில எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை அங்கிள். இந்த ஹாஸ்பிடலும் நாராயணன் குரூப்ஸ் -க்கு சொந்தமானது தான். உங்க பொண்ணு அவங்க கிட்ட தானே வேலை பாக்குறாங்க. அப்ப அவங்களுக்கு இங்க எல்லாமே பிரீ தான். உங்களுக்கு தெரியாதா?"
சுதாகர்: “ஆமா பா. ரித்திகா ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்ணும்போதே இது பத்தி சொன்னாங்கன்னு அவ சொன்னா. நான் தான் மறந்துட்டேன்."
சிவா: “அப்புறம் ஏன் அங்கிள் யோசிக்கிறீங்க..? ஆன்ட்டியை கூட்டிட்டு வாங்க சாப்பிடலாம்."
ரேவதி: “இல்ல பா. ரித்திகாவை இப்படி தனியா விட்டுட்டு எப்படி வர்றது..?"
ரேவதி இப்படி சொன்னவுடன், அங்கு ஓரமாக நின்று கொண்டு இருந்த கௌத்தமை அழைத்த சிவா, “மச்சான் நீ சாப்டியா..?" என்று கேட்டான்.
கௌத்தம்: “ம்.. சாப்பிட்டேன் டா."
சிவா: “அப்ப நீ இங்க இருந்து ரித்திகாவை பாத்துகுறியா..? நாங்க போய் சாப்பிட்டு வந்துர்றோம்."
கௌத்தம்: “சரி..! நான் பாத்துக்குறேன் மச்சான். நீங்க போயிட்டு வாங்க."
சந்தோஷ்: அவர்கள் பேசியதை கவனித்தவன், “அவரையும் கூட்டிட்டு போங்க. ரித்திகாவை நான் பாத்துக்குறேன்." என்றான் வேகமாக.
கௌத்தம்: “இல்ல நான் பார்த்துக்குறேன்." என்றான், சந்தோஷை முறைத்தபடி.
சிவா ரித்திகாவின் பெற்றோர்களை பார்த்தவன், “அவங்க ரெண்டு பேரும் பாத்துகட்டும் ஆண்டி. நாம போயிட்டு வந்துடலாம் வாங்க" என்றான்.
கௌத்தமும், சந்தோஷும் கோரஸாக: “ஆமா ஆண்டி நாங்க பாத்துக்கிறோம். நீங்க போய்ட்டு வாங்க" என்றனர்.
-நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.