அத்தியாயம்: 33 மானசாவை சஸ்பெண்ட் செய்த வருண்
மானசாவிடம் சண்டை போட்டு விட்டு தன்னுடைய பைக் ஐ எடுத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் கௌத்தம். தானும் ஹாஸ்பிடலுக்கு சென்று வருணின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்த மானசா, வேகமாக பார்க்கிங் ஏரியாவிற்க்கு வந்தவள், தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து ஹாஸ்பிடலுக்கு கிளம்பினாள்.
தனது அறைக்கு வந்த பிரின்சிபல் சாரதா, அவளுடைய கம்ப்யூட்டரில் ரித்திகாவின் பெற்றோர்களின் மொபைல் நம்பரை தேடி கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு அவளுடைய மகன் சந்தோஷ் இடம் இருந்து கால் வந்தது. சாரதா பிசியாக இருந்ததால் முதலில் அவனுடைய காலை அட்டென்ட் செய்யவில்லை. ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அவளுக்கு கால் செய்து கொண்டு இருந்தான்.
கடுப்பான சாரதா, இவன் கால் ஐ அட்டென்ட் செய்யவில்லை என்றால் இன்னும் அவன் தொடர்ந்து அழைத்து கொண்டே தான் இருப்பான் என்று நினைத்து கால் ஐ அட்டென்ட் செய்து கோபமாக பேசினாள்.
சாரதா: கால் அட்டென்ட் பண்ணல -ன்னா நான் பிஸியா இருப்பேன்னு தெரியும்ல அப்புறம் ஏன் திரும்ப திரும்ப கூப்பிட்டுட்டு இருக்க?
சந்தோஷ்: சாரி மா. கோச்சுக்காதீங்க. நான் இப்ப தான் சாப்பிட்டேன். அதான் நீங்க சாப்டீங்களான்னு கேட்கலாம்னு கால் பண்ணேன்.
சாரதா: நான் இன்னும் சாப்பிடல. பாட்டி சாப்பிட்டாங்களா?
சந்தோஷ்: பாட்டி லாம் சாப்பிட்டாங்க. நீங்க ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? லஞ்ச் டைமே முடிய போகுதுல்ல?
சாரதா: ஒரு பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துட்டா. அவள பாக்க போயிருந்தேன். இப்ப தான் டா வந்தேன். அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. அவ பேறன்ட்ஸுற்க்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணனும். அவங்க நம்பரை தொலவிட்டு இருக்கேன். இருக்க டென்ஷன்ல நீ வேற... சும்மா சும்மா கால் பண்ணி இன்னும் டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்க.
சந்தோஷ்: எந்த பொண்ணு? ஸ்டூடண்ட் ஆ?
சாரதா: “ஸ்டுடென்ட் இல்ல டா டீச்சர்." என்றவள், கம்ப்யூட்டரில் தெரிந்து கொண்டு இருந்த ரித்திகாவின் பெற்றோர்களின் மொபைல் நம்பரை ஒரு பேப்பரில் பார்த்து எழுதி கொண்டு இருந்தாள்.
சந்தோஷ்: “பாவம் அந்த பொண்ணு. ஏதாச்சும் உடம்பு சரியில்லாம இருந்து இருக்கும் போல. உங்க ஸ்கூல் ஓட மேனேஜ்மென்ட் சரியில்ல மா. உடம்பு சரியில்லை -ன்னு லீவு கேட்டா கூட லீவு குடுக்க மாட்டீங்களா... ? இன்னைக்கு ரித்திகாவுக்கும் உங்க ஆபிஸ்ல லீவு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
நீங்க வேணா பாருங்க மா.. நாளைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா கூட லீவு தர மாட்டாங்க. ரித்திகா வேற எப்படி இருக்காளோ தெரியல." என்று அவன் பாட்டுக்கு ஏதேதோ பேசி கொண்டு இருந்தான்.
சாரதா: ஒரு நிமிஷம் இரு என்று அவனை நிறுத்தியவள், “ரித்திகாவ உனக்கு எப்படி தெரியும்?"
சந்தோஷ்: அவ நம்ம பக்கத்து வீட்ல தான் இருக்கா. பாவம் அவளுக்கு ரொம்ப உடம்பு சரி இல்ல. காயிச்சல் அதிகமா இருந்துச்சு. காலைல நான் தான் அவள ஸ்கூல்ல டிராப் பண்ணினேன். அவளுக்கு ஹாப் டே ஆவது லீவு கொடுங்க ம்மா. நான் வேணா வந்து திரும்பி அவள பிக்கப் பண்ணிக்கிறேன்.
சாரதா: மயக்கம் போட்டு விழுந்ததே ரித்திகா தான் சந்தோஷ்.
அதை கேட்டவுடன் சந்தோஷ் அதிர்ச்சி அடைந்தான். பின் ரித்திகாவுக்கு என்ன ஆனது என்று அக்கறையாக விசாரித்தான். சாரதா, ரித்திகா இப்போது மருத்துவமனை இருக்கிறாள் ரித்திகாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்றால் சாரதா. அதை கேட்டு சந்தோஷ் ஏன் இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள் என்று அவளிடம் கோபப்பட்டான் சந்தோஷ்.
யாரோ ஒருத்திக்காக தன் மகன் தன்னிடமே இப்படி கோபமாக பேசுவது சாரதாவுக்கு மிகவும் ஆச்சரியமாகவும், புதிதாவும் இருந்தது. வருணை பற்றியும் சித்தார்த்தை பற்றியும் யாரிடமும் சொல்ல கூடாது என்று அந்த பள்ளியில் எழுத படாத ஒரு விதி இருந்தது. அதனால் தன் மகனாகவே இருந்தாலும் வருணை பற்றி அவனிடம் சாரதா சொல்லவில்லை.
தன் பள்ளியில் படிக்கும் சித்தார்த் என்ற மாணவன் ரித்திகாவை பிடித்து கொண்டு விட மாட்டேன் என்று அடம் பிடித்ததால் அவனுடைய அப்பாவே வந்து அவனை சமாதான படுத்தி அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டதாக சந்தோஷ் இடம் சொன்னாள் சாரதா.
அதை கேட்ட சந்தோஷ், பின் ரித்திகா எந்த மருத்துவமனையில் அட்மிட் செய்ய பட்டு இருக்கிறாள் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டு.. தானே ரித்திகாவின் பெற்றோர்களிடம் இது பற்றி சொல்லி அவர்களையும் அழைத்து கொண்டு நேராக அவன் மருத்துவமனைக்கு செல்வதாக சொல்லி விட்டு கால் ஐ கட் செய்தான்.
ரித்திகாவை அழைத்து செல்வது வருண் என்பதால் தான் சாரதாவால் எதுவும் பேச முடியாமல் நடப்பதை பார்த்து கொண்டு அமைதியாக இருந்து விட்டாள். ஆனால் எப்படியும் சித்தார்த்திற்க்காகவாவது ரித்திகாவை வருண் நன்றாக பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை சாரதாவிற்கு இருந்தது. இருந்தாலும் அந்த பள்ளியில் இருந்து வெளியே வந்த சாரதா, ஒரு ஆட்டோவை பிடித்து மருத்துவமனைக்கு அவளும் கிளம்பினாள்.
நாராயணன் மருத்துவமனையில்...
இன்னும் ரித்திகா சுயநினைவு இன்றி ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக் கொண்டு இருந்தாள். டாக்டர்கள் அவளுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டு இருந்தனர். அந்த அறைக்கு வெளியே போட பட்டு இருந்த சேரில் சித்தார்த், வருண் மற்றும் சிவா அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கே முதலில் ரித்திகாவை பார்க்க கௌத்தம் வந்தான்.
அவனுக்கு இன்னும் சித்தார்த்தின் மீதும், வருணின் மீதும், அதிகப்படியான கோபம் இருந்தது. அது அவனுடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. வருனுடன் பேச விரும்பாத கௌத்தம், நேராக சிவாவின் அருகே சென்று... “ரித்திகா எப்படி டா இருக்கா" என்றான்.
சிவா: தெரியல. இன்னும் அவங்களுக்கு சுய நினைவு வரல. டாக்டர் பார்த்திட்டு இருக்காங்க. இன்னும் எதுவும் சொல்லல.
கௌத்தம்: “அவங்க சொல்லலைன்னா என்ன ஆச்சுன்னு நீங்க கூப்பிட்டு கேட்க மாட்டீங்களா?" என்றான் கோபமாக.
சிவா: உனக்கு டென்ஷன் -ல மூளை கூட வேலை செய்யாதா டா..? சிகிச்சை பண்ணிட்டு இருக்க டாக்டர் ஐ போய் எப்படி டா குறுக்க disturb பண்ண முடியும்..? லூசு மாதிரி பேசாத சரியா.
சிவா, வருணிற்கே ஆதரவு செய்வதால் கௌத்தமிற்கு அவனிடமும் பேச விருப்பம் இல்லை அதனால் அங்கு ஓரமாக இருந்த இன்னொரு சேரில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டான். அப்போது அங்கே வேகமாக நடந்து வந்து கொண்டு இருந்தாள் மானசா. அவள் அங்கே வருவதை பார்த்த கௌத்தமிற்கு அவள் மீதும் கோபமாக வந்தது. மானசா ஒரு வேளை ரித்திகா கேட்ட போதே அவளுக்கு லீவு கொடுத்து இருந்தால் இந்த அளவுக்கு அவள் நிலைமை சீறியஸ் ஆகி இருக்காதே என்று அவனுக்கு தோன்றியது.
இப்போது இவள் இங்கே என்ன ட்ராமா போடுவதற்காக வந்திருக்கிறாளோ என்று நினைத்தவன், அவளை முறைத்து கொண்டு இருந்தான் கௌத்தம். ரித்திகாவை நினைத்து பதட்டமாக இருப்பவளை போல் நடித்த மானசா, நேராக வருணின் அருகே சென்று ரித்திகாவுக்கு என்ன ஆனது என்று விசாரித்தாள்.
மானசா என்ற ஒருத்தி அங்கு இருப்பதே தன்னுடைய கண்களுக்கு தெரியவில்லை என்பது போல் அமைதியாக இருந்தான் வருண். அதனால் சிவா அவளுக்கு பதில் சொன்னான். பின் சிவாவிடம் ரித்திகாவை பற்றி தொடர்ந்து பேசி கொண்டு இருந்தாள் மானசா.
அப்போது அங்கே அமைதியாக இருந்த வருண், ரித்திகாவை பற்றித்தான் யோசித்து கொண்டு இருந்தான். அவன் தான் ரித்திகாவை தூக்கி வந்து இருந்தான் என்பதால்... ரித்திகாவின் உடல் எவ்வளவு வெப்பமாக இருந்தது என்று இப்போது கூட அவனால் உணர முடிந்தது.
அதை நினைத்து பார்க்கையில் அவனுக்கு ரித்திகாவின் மீது கோபம் கோபமாக வந்தது. இவ்வளவு காய்ச்சல் அடிக்கும் போது அவள் ஏன் லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்காமல் பள்ளிக்கு வர வேண்டும்? என்று நினைத்து அவளின் மீது கோபப்பட்டான் வருண்.
அந்த கேள்வியை தன் மனதிற்குள்ளேயே வைத்து கொண்டு இருக்காமல் தன் முன் நின்று கொண்டு இருந்த மானசாவிடமே அதை வெளிப்படையாக கேட்டும் விட்டான் வருண். அதற்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென்று விழித்து கொண்டு இருந்தாள் மானசா. மானசா என்ன தான் சொல்ல போகிறாள் என்று பார்க்கலாம் என்று நினைத்த கௌத்தம், அமைதியாக அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான். மானசா பதில் சொல்லாததால் வருண்வே மீண்டும் பேச தொடங்கினான்.
வருண்: “இப்படி நீங்க பேசாம இருந்தா என்ன அர்த்தம்...? டீச்சர் ஆ இருக்கிறவங்க பொறுப்புடன் இருக்க வேண்டாமா..? இப்ப புதுசு புதுசா எவ்ளோ வைரஸ் ஸ்பிரெட் ஆயிட்டு இருக்குன்னு தெரியும்ல..? இப்படி நீங்க எல்லாம் பொறுப்பு இல்லாமல் இருந்து அந்த வைரஸ் ஸ்டூடண்ட்ஸ்க்கு பரவிட்டா என்ன பண்ணுவீங்க..? அதற்கு யார் பொறுப்பு..?" என்று சரமாரியாக மானசாவிடம் பல கேள்விகள் கேட்டான்.
முதலில் அமைதியாக இருந்த மானசா, பின்... “ஆமா சார். இப்பலாம் யாரும் பொறுப்புடன் இருக்குறது இல்ல. என்ன பண்றது..?" என்று அனைத்து பழியையும் தூக்கி ரித்திகாவின் மீது போட்டாள். அதை கேட்ட கௌத்தம், உச்ச கட்ட கோபத்தில் எழுந்து அவர்கள் அருகே வந்தவன், மானசாவை முறைத்து பார்த்தான்.
மானசாவும், கௌத்தமை கவனித்து கொண்டு தான் இருந்தாள். இப்போது இவன் இங்கே என்ன சீன் கிரியேட் பண்ண போகிறானோ என்று நினைத்து பயந்தாள் மானசா. வருணை பார்த்த கௌத்தம், ரித்திகா, மானசாவிடம் காலையிலேயே லீவ் கேட்டும் அவள் தான் தரவில்லை என்று சொல்லி விட்டான். அது பற்றி மானசாவிடம் விசாரித்தான் வருண்.
இதற்கு மேல் மாத்தி பேசினாலோ, பொய் சொல்லாலோ, நாம் தான் மாட்டி கொள்வோம் என்று நினைத்த மானசா; தன் தவரை ஒப்பு கொண்டாள். அதை கேட்டு அவளின் மீது கோபப்பட்ட வருண், அவளை 15 நாள் சஸ்பெண்ட் செய்து விட்டான். ரித்திகாவை இந்த பள்ளியில் இருந்து விரட்ட வேண்டும் என்று நினைத்து அவள் போட்ட பிளான்.. இன்று அவளுக்கு எதிராக திரும்பி அவளே இந்த பள்ளியை விட்டு வெளியே போகும் நிலை ஏற்பட்டு விடுமோ என்று நினைத்து பயந்தாள் மானசா.
வருணிடம் தன்னுடைய சஸ்பென்ஷன் ஐ கேன்சல் செய்யுமாறு எவ்வளவோ கெஞ்சினாள் மானசா. அவளை கண்டு கொள்ளாமல் மீண்டும் அவன் அமர்ந்து இருந்த சேரில் சென்று அமர்ந்து கொண்டான் வருண். மானசாவிடம் சென்று பேசிய சிவா, இதற்கு மேலும் அவள் இங்கே நின்று பேசி கொண்டு இருந்தாள்... மொத்தமாக அவளுடைய வேலையே பறிபோய்விடும் என்று அவளிடம் பேசி அவளை அங்கு இருந்து அனுப்பி வைத்தான்.
மானசாவிற்கும் சிவா சொல்வது தான் சரி என்று பட்டது. அதனால் வேறு வழி இன்றி அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவள், நேராக தன்னுடைய காரை எடுத்து கொண்டு மீண்டும் பள்ளிக்கு சென்றாள். மானசா அங்கு இருந்து சென்ற சில நிமிடங்களில் சந்தோஷ், ரித்திகாவின் பெற்றோர்களுடன் அந்த மருத்துவமனையை வந்தடைந்தான்.
- நேசம் தொடரும்
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.