அத்தியாயம் 32: ரித்திகாவை தன் கைகளில் ஏந்திய வருண்
சிவாவின் கையில் இருந்து வாட்டர் பாட்டிலை பிடிங்கிய கௌத்தம், ரித்திகாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க சென்றான். அதை கவனித்த சித்தார்த், “போகாத.. போகாத..." என்று கத்தியபடி மீண்டும் அழ தொடங்கினான். 😭
இது என்னடா இவங்களோட பெரிய ரோதனையா போச்சு.. 😒 உடம்பு சரியில்லாத பொண்ண வச்சு கிட்டு இவங்க இப்படி ஆளாளுக்கு விளையாடிட்டு இருக்காங்க என்று நினைத்தவன், உச்ச கட்ட கோபத்தில் வருணை பார்த்து எதையோ சொல்ல வந்தான் கௌத்தம். அவன் பேச வாயை திறப்பதற்குள் அவன் அருகே சென்ற சிவா, அவன் கையை பிடித்து “மச்சான் அமைதியா இரு." என்று அவனை தடுத்தான்.
வருணுக்கு கௌத்தம் இன் கோபம் நன்றாக புரிந்தது. இந்த விஷயத்தில் தவறு சித்தார்த்தின் மீது தான் தப்பு இருப்பதால் அவன் கோப படாமல் நிதானமாக இதை ஹேண்டில் செய்ய முடிவெடுத்தது சித்தார்த்துடன் அமைதியாக பேச தொடங்கினான்.
வருண்: இங்க பாரு சித் உங்க டீச்சர் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. நம்ம தண்ணி தெளிக்கைலையின்னா அப்புறம் அவங்க எந்திரிக்கவே மாட்டாங்க. உன் கூட பேசவும் மாட்டாங்க. அது உனக்கு பரவாயில்லையா...? என்று அவனுடைய கண்களை நேராக பார்த்த படி கேட்டான்.
சித்தார்த்: “இல்லை" என்று தன்னுடைய தலையை ஆட்டியவன், “ரித்திகா எந்திரிக்கணும். அவ என் கூட பேசணும். ஆனா இவங்க யாரும் அவ கிட்ட போக கூடாது. அவள ஏதாச்சு பண்ணிருவாங்க.. எனக்கு இவங்கள பாத்தாலே பயமா இருக்கு." என்றவன், மீண்டும் அழ தொடங்கினான்.
வருண்: “சரி... !!! சரி..!! அழுகாத. என்னோட சித் ரொம்ப ஸ்டராங் பாய் தானே... சோ அழ கூடாது. நான் போய் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பாக்கட்டுமா.. ? அப்பா அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பாத்து அவங்கள சரி பண்ணிடா அவங்க நார்மல் ஆகி உன் கிட்ட நல்லா பேசுவாங்க. ஓகே வா ?" என்றவன், அவனை சமாதான படுத்த முயற்சித்தான்.
கௌத்தமிற்க்கு அந்த சென்டிமன்ட் காட்சியை பார்க்க ஆத்திர ஆத்திரமாக வந்தது. 🤬 ஒரு சின்ன பையன் அடம் பிடித்தால் அவன் தலையில் ரெண்டு தட்டு தட்டி அவனை ஓரமாக நிற்க வைத்து விட்டு ரித்திகாவுக்கு என்னாயிற்று என்று பார்க்க வேண்டியது தானே அதை விட்டு விட்டு இப்படி அவனுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் இந்த வருணை தூக்கி போட்டு மிதித்தால் தான் என்ன? என்று நினைத்தவனின் பொறுமை எல்லாம் காற்றில் பறந்து கொண்டு இருந்தது. 😡
“ரித்திகாவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.. அப்பனையும், மகனையும், சும்மா விடமாட்டேன்." என்று மெல்லிய குரலில் முனகி கொண்டு இருந்தான் கௌத்தம். அவன் பேசியது அவன் அருகில் இருந்த சிவாவின் காதுகளில் தெளிவாகவே கேட்டது. “கொஞ்ச நேரம் சும்மா இறேன் டா. உனக்கு உயிரோட வீட்டுக்கு போறதுக்கு ஆசை இல்லையா? வாய மூடிட்டு இரு. அதான் அவரு பேசிட்டு இருக்காருல.. அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது." என்று அவனுடைய காதுகளில் மெதுவாக சொன்னான் சிவா.
வருண் தானே சென்று ரித்திகாவுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பதாக சொன்னதை கேட்டு ஒரு வழியாக சமாதானம் ஆனான் சித்தார்த். அதனால் நேராக ரித்திகாவின் அருகே சென்றவன், கௌத்தம் இன் கையில் இருந்த வாட்டர் பாட்டிலை பிடுங்கி.. அதை திறந்து அதில் இருந்த தண்ணீரை ரித்திகாவின் முகத்தில் தெளித்தான்.
அவன் இரண்டு, மூன்று, முறை தண்ணீர் தெளித்தும் ரித்திகாவின் உடலில் எந்த அசைவும் இல்லை. அதனால் அவளுடைய கையை பிடித்து பல்ஸ் எப்படி இருக்கிறது என்று செக் செய்தான். பல்ஸ் நார்மலாக தான் இருந்தது. ஆனால் அவளுடைய உடல் தான் காய்ச்சலால் நெருப்பாய் கொதித்து கொண்டு இருந்தது. அவளுடைய கையை பிடித்து இருந்த வருண் -வால் அதை நன்றாக உணர முடிந்தது.
இவளை உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்த வருண், அவளுக்கு மூச்சு சீராக வருகிறதா என்று செக் செய்தான். அது சீராக தான் வந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் ரித்திகா இவ்வளவு தண்ணீர் தெளித்தும் ஏன் கண் விழிக்க வில்லை என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே நிறைய நிமிடங்கள் விரையம் ஆகி விட்ட நிலையில்... இனியும் தாமதிக்க கூடாது என்று நினைத்த வருண், சிறிதும் தயக்கம் இன்றி ரித்திகாவை தன் இரு கைகளால் தூக்கி கொண்டு.. அவன் வேகமாக நடக்க தொடங்கி இருக்க.. அதை கண்ட சித்தார்த், பயந்து அவன் பின்னே அழுத படி ஓடினான். 😭
சித்தார்த் இப்படி வேகமாக ஓடுவதை பார்த்த சிவா, அவனும் அவன் பின்னே வேகமாக ஓடி சென்று அவனை தூக்கி கொண்டு வருணின் பின்னே வேகமாக நடந்தான். அந்த டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில் இருந்து.. கார் பார்க்கிங் வரை ஒரு நொடி கூட நிற்காமல் வேகமாக ரித்திகாவை தூக்கி கொண்டு வந்தான் வருண்.
அவன் ரித்திகாவை தூக்கி கொண்டு வருவதை சிலர் கவனிக்க தான் செய்தனர். ஆனால் ரித்திகாவை தூக்கிக் கொண்டு செல்லும் அந்த ஹன்ட்சம் ஆன மனிதன் யார் என்று தான் அவர்களுக்கு தெரியவும் இல்லை. ரித்திகாவுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று புரியவும் இல்லை. இருந்தாலும் அவர்களுக்கு தோன்றிய படி எல்லாம் அவர்களுக்குள் ஏதேதோ பேசி கொண்டு இருந்தனர்.
ரித்திகாவை தூக்கி கொண்டு தன் கார் அருகே வந்தான் வருண். சிவா, பின் சீட்டின் கதவை திறக்க.. ரித்திகாவை உள்ளே படுக்க வைத்து விட்டு முன்னே வந்து டிரைவர் சீட்டில் சென்று அமந்தான் வருண். சிவா, தன் மடியில் சித்தார்த்தை உட்கார வைத்த படி டிரைவர் சீட் இன் அருகே உள்ள சீட் இல் அமர்ந்தான்.
சித்தார்த், ரித்திகாவை திரும்பி பார்த்த படி அழுது கொண்டே இருந்தான். வருண் காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட தொடங்கினான். தொடர்ந்து வருணும், சிவாவும், அவனை சமாதான படுத்திய படியே கார் இல் சென்று கொண்டு இருந்தனர். சில நிமிட பயணத்திற்கு பின் ஹரி, ஆராதனாவை அட்மிட் செய்து இருந்த அவர்களுக்கு சொந்தமான அதே ஹாஸ்பிடலுக்கு தான் ரித்திகாவை அழைத்து வந்தான் வருண்.
வருண் ஹாஸ்பிடல் இன் முன் வந்து தன் கார் ஐ நிறுத்தி விட்டு கீழே இறங்கினான். பின் கார் ஐ திறந்து ரித்திகாவை தூக்கி கொண்டு வெளியே வந்தான். அவனுடன் வந்த சிவாவும், சித்தார்த்துடன் வருணின் பின்னே வேகமாக நடந்தான். அவர்களை பார்த்தவுடன் அந்த ஹாஸ்பிடலே பரபரப்பாகிவிட்டது.
வருண் ஒரு பெண்ணை தூக்கி கொண்டு வருவதை அங்கு இருந்த பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். உடனே அங்கு இருந்த வார்ட் பாய் ஒரு ஸ்டரக்சர் உடன் அவன் முன்னே வேகமாக வந்தான். ரித்திகாவை அந்த ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தான் வருண். வார்ட் பாய் அந்த ஸ்ட்ரெக்சர் ஐ எமர்ஜென்சி சிகிச்சை பிரிவை நோக்கி தள்ளிக் கொண்டு செல்ல; வருணும், சிவாவும், சித்தார்த் உடன் வேகமாக அவனின் பின்னே நடந்து கொண்டு இருந்தனர்.
சில நொடிகளிலேயே ரித்திகா அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டாள். வருணே அவளை அங்கே அட்மிட் செய்து இருந்ததால் அந்த மருத்துவமனையில் இருக்கும் பெஸ்ட் டாக்டர்களால் ரித்திகா -க்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. அங்கு இருந்த ஒரு நர்ஸ் அட்மிஷன் பிராசஸ் -க்காக ரித்திகாவை பற்றிய டீடைல்ஸை வருணிடம் கேட்டாள். ரித்திகாவை பற்றிய அனைத்தையும் மனப்பாடம் செய்து வைத்து இருந்தவன் போல, அந்த நர்ஸ் கேட்க கேட்க அனைத்தையும் சரியாக சொன்னான் வருண்.
ரித்திகாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்து கொண்டு இருக்க, அதை கதவில் இருந்த துவாரம் வழியாக பார்த்தான் வருண். கீழே நின்ற படி வருணின் பேண்ட் ஐ பிடித்து இழுத்த படி இருந்த சித்தார்த், தானும் ரித்திகாவை பார்க்க வேண்டும் என்று அழுதான். 😭 அதனால் சித்தார்த்தை தூக்கிய வருண், அந்த கதவின் ஓட்டை வழியாக ரித்திகாவை காண்பித்தான்.
அந்த கதவின் மீது தெரிந்த ரித்திகாவின் உருவத்தின் மீது கை வைத்த சித்தார்த், “ரித்திகா -க்கு என்ன ஆச்சு.. ?" என்று அழுது கொண்டே கேட்டான். 😭
வருண்: “அவளுக்கு ஒன்னும் இல்ல சீக்கிரம் சரி ஆயிடுவா. நீ அழுகாத. நீ அழுதன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ உன்ட பேச பாட்டா. சோ குட் பாய் ஆ அமைதையா இரு." என்று எதை எதையோ சொல்லி அவனை சமாதான படுத்தி கொண்டு இருந்தான்.
வருண் அவனை சமாதான படுத்தியதால் சித்தார்த் தன் அழுகையை நிறுத்தி இருந்தான். ஆனாலும் அவனுடைய முகம் சோகமாகவே இருந்தது. அவர்களை பார்த்து கொண்டு இருந்த சிவா, தனியாக வந்து பிரின்சிபல் சாரதாவுக்கு கால் செய்து.. ரித்திகாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டது பற்றி இன்ஃபார்ம் செய்து விட்டு.. அதை அவளுடைய பெற்றோர்களிடமும் இன்போர்ம் செய்து விடும் படி சொல்லி விட்டு கால் ஐ கட் செய்தான்.
சாரதாவுக்கு கால் வரும் போது கௌத்தம், சாரதா மற்றும் சில ஆபீஸ் ஸ்டாஃப்கள் இன்னும் டான்ஸ் பிராக்டீஸ் ஹாலில் தான் பேசி கொண்டு இருந்தனர். கௌத்தமிற்க்கு, ரித்திகாவுக்கு என்ன ஆகி இருக்கும் என்று ஒரே பதட்டமாக இருந்தது. அதனால் சாரதா பேசி விட்டு காலை கட் செய்தவுடன், அவளுக்கு என்ன ஆனது என்று அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
ரித்திகாவை எப்படியும் நாராயணன் ரூப்ஸுற்க்கு சொந்தமான அருகிலுள்ள மருத்துவமனையில் தான் அட்மிட் செய்திருப்பார்கள் என்று நினைத்த கௌத்தம், அவளை பார்ப்பதற்காக கிளம்பினான். சாரதா, ஆபீஸ் ரூமிற்கு சென்று ரித்திகாவின் பெற்றோர்களின் நம்பரை தேடி பிடித்து அவர்களுக்கு இன்பார்ம் செய்ய வேண்டும் என்று நினைத்தவள், தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
வருணிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்த மானசா, ரித்திகாவை பார்த்து கொள்ளும் சாக்கில் அவனிடமும், சித்தார்த் உடனும் ஒட்டி கொள்ள வேண்டும் என்று ப்ளான் போட்டு அவளும் மருத்துவமனைக்கு செல்ல கிளம்பினான். மானசா, அந்த ஹாலில் இருந்து வெளியே செல்லும் போது கௌத்தம் தன்னுடைய பேக் ஐ பாக் செய்து விட்டு அவனும் வெளியே வருவதை கவனித்து அவனை தடுத்து நிறுத்தினாள்.
கௌத்தம்: “இப்போ உனக்கு என்ன பிரச்சனை..? நான் வெளியில போகணும் நகுறு." என்று கடுப்பாக சொன்னான். 😒
மானசா: நீ இங்க சாதாரண டீச்சர் தான். நான் இங்க ஆபீஸ் அட்மின். அது உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கறேன். கொஞ்சம் மரியாதையா பேசு. என்று தன் பல்லை கடித்த படி சொன்னாள். 😒
கௌத்தம்: நீ யாரா வேணா இரு. எனக்கு என்ன? என் வழில எதுக்கு இப்ப நீ குறுக்க நிக்கிற? ஒழுங்கா போயிரு. எனக்கு லேட் ஆகுது.
மானசா: இப்ப நீ எங்க போற?
கௌத்தம்: நான் எங்க வேணா போவேண். உனக்கு என்ன? 🤨
மானசா: இப்ப நீ அந்த ரித்திகாவை தானே பாக்க போற?
கௌத்தம்: ஆமா. இப்ப அதுக்கு என்ன..?
மானசா: இப்ப நீ யார கேட்டு வெளியில போற? 🤨
கௌத்தம்: யார கேக்கணும்?
மானசா: என்ன கேக்கணும். நான் பர்மிஷன் குடுத்தா தான் நீ இங்க இருந்து வெளியில போக முடியும் தெரியும்ல.
கௌத்தம்: “உன் பர்மிஷன் எனக்கு தேவையில்லை. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ." என்றவன், மானசாவை ஒரு புறமாக தள்ளி விட்டு அவளை கண்டு கொள்ளாமல் வெளியே வந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க பட்டு இருந்த அவனுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து ஹாஸ்பிடலுக்கு சென்றான்.
- நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.