அத்தியாயம் 31: வருணின் வருகை…
வருண், தன்னுடைய ஆபீஸ் ரூமில் சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது உள்ளே வந்த சிவா, மானசா தன்னிடம் சித்தார்த்தை பற்றி சொன்னதை எல்லாம் அவனிடம் தெளிவாக சொன்னான். சிவா; சித்தார்த் தொடர்ந்து அழுது கொண்டு இருப்பதாக சொன்னதை கேட்ட வருண், தன்னுடைய மகனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்து பதறினான்.
அவன் சாப்பிட்டு கொண்டு இருந்த ஸ்பூனை அப்படியே அங்கு இருந்த தட்டில் போட்டு விட்டு... தன்னுடைய கோட்டை எடுத்து மாட்டி கொண்டு, தன் கார் சாவியை ஒரு கையில் எடுத்தவன், வேகமாக வெளியே வந்தான்.
வேகமாக தன்னுடைய ஆஃபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்த வருண், நேராக கார் பார்க்கிங்கிற்க்கு சென்று தன்னுடைய கார் ஐ ஸ்டார்ட் செய்தான். அப்போது அவன் பின்னே ஓடி வந்த சிவா, அவனும் கார் இல் ஏறி கொண்டான்.
தன்னுடைய மகனை வெகு தூரத்தில் அனுப்பி படிக்க வைக்க வேண்டாம் என்று நினைத்ததால் தான் வருண், தன்னுடைய ஆபீஸுற்க்கு அருகே ஒரு இடத்தை வாங்கி அதில் அவனுக்கென ஒரு ஸ்கூலை கட்டினான்.
அதனால் காரை ஸ்டார்ட் செய்த ஐந்தே நிமிடத்தில் சித்தார்த்தின் பள்ளிக்கு வந்து விட்டான் வருண். கார் இல் இருந்து கீழே இறங்கியவன், கார் ஐ லாக் கூட செய்யாமல் அந்த பள்ளியின் உள்ளே சென்றான். அவனுடன் வந்த சிவா, கார் ஐ லாக் செய்து சாவியை எடுத்து கொண்டு வருணின் பின் ஓட்டமும், நடையுமாக சென்று கொண்டு இருந்தான்.
டான்ஸ் பிராக்டீஸ் ஹாலில்…
இன்னும் சித்தார்த், அழுது கொண்டே ராகவியை கட்டி பிடித்த படி அவளின் மீது தான் படுத்து இருந்தான். கௌத்தம் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். சித்தார்த்திற்கு ரித்திகாவின் மீது இருக்கும் பாசம் அவனுக்கு புரிந்தாலும்.. ஏற்கனவே மயங்கி கீழே விழுந்து இருக்கும் ரித்திகாவின் மீது தன்னுடைய மொத்த உடலையும் போட்டு அவளை அழுத்தி கொண்டு இருக்கும் சித்தார்த்தின் மீது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. 😡
சிறிய சிறிய விஷயங்களுக்கு கூட பெரிதாக கோபப்படும் கௌத்தமால் தன் கண் முன் நடக்கும் காட்சியை அமைதியாக பார்த்து கொண்டு இருக்கவே முடியவில்லை. வருண், கார் இல் வரும் போது சிவா, மானசாவிற்கு கால் செய்து.. வருண் அங்கே வந்து கொண்டு இருக்கும் செய்தியை தெரிவித்து இருந்தான்.
அதனால் எப்படியும் இங்கே வருண் வந்துவிட்டால் தன்னுடைய மகனை கன்ட்ரோல் செய்து விடுவான் என்று நினைத்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான் கௌத்தம். இருந்தாலும் அவனுக்கு இருந்த கோபத்தாலும், வருத்தத்தாலும், இயலாமை தனத்தாலும் தன்னையே நொந்து கொண்டான்.
சென்றலைஸ்ட் ஏசி போட பட்டு இருந்த அந்த ஹாலிலும் அவனுக்கு வியர்த்து கொட்டியது.
அப்போது பிரின்சிபல் சாரதா.. சில முக்கிய ஆஃபிஸ் ஸ்டாஃப்களையும், சித்தார்த்தின் வகுப்பு ஆசிரியை மற்றும் சில ஆசிரியர்களையும், தன்னுடன் அழைத்து கொண்டு அந்த ஹாலிற்கு வந்தாள். மயங்கி விழுந்து இருக்கும் ரித்திகாவின் மீது சித்தார்த் படுத்து கொண்டு இருப்பதை பார்த்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
அங்கு வந்த அனைவரும் சித்தார்த்தை கெஞ்சி, கொஞ்சி சமாதான படுத்த முயன்றனர். ஆனால் யார் சொல்வதையும் சித்தார்த் கேட்பதாக இல்லை. அங்கு இருந்த மாணவர்கள் வேறு சித்தார்த் அழுவதை பார்த்து அவர்களும் அழ தொடங்கி விட்டனர். அதனால் அந்த ஹால் முழுவதும் அந்த குழந்தைகளின் அழு குரலால் நிறைந்து இருந்தது. 😭
அதனால் சாரதா உடன் வந்த மற்ற ஆசிரியர்கள் சித்தார்த்தை தவிர அங்கு இருந்த மற்ற அனைத்து குழந்தைகளையும் சமாதான படுத்தி அவர்களுடைய வகுப்புகளுக்கு அழைத்து சென்று விட்டனர். இப்போது அந்த பெரிய ஹால் முழுவதும் சித்தார்த்தின் அழுகுரல் எதிரொலித்து கொண்டு இருந்தது. 😭 இதை எதையும் அறிந்திராத ரித்திகா எந்த அசைவும் இன்றி தாரையில் படுத்து கிடந்தாள்.
அப்போது ஆஃபீஸ் ரூமில் சித்தார்த் எங்கே இருக்கிறான் என்று கேட்டு விசாரித்து கொண்ட வருண், நேராக அந்த ஹாலிற்கு வந்து கொண்டு இருந்தான். அவன் அந்த நீண்ட வராண்டாவில் வந்து கொண்டு இருக்கும் போதே டேன்ஸ் பிராக்டிஸ் ஹாலில் இருந்து வரும் சித்தார்த்தின் அழுகுரலை வருணால் தெளிவாக கேட்க முடிந்தது. வருணின் இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது.
தாய் இல்லாத தன் மகனை அவன் சரியாக பார்த்து கொள்ள வில்லையோ என்று நினைத்து பதறிய படியே கலங்கிய கண்களுடன் ஓட்டமும், நடையுமாக அந்த ஹாலின் உள்ளே வந்தான். 🥺
அங்கு இருந்தவர்களை தவிர இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டு இருப்பது வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் அனைவரும் அவர் அவர்களுடைய வகுப்பு அறையில் பிசியாக இருந்தனர்.
வருண், அந்த ஹாலுக்குள் நுழைந்தான். அவன் பின்னே சிவாவும் வேகமாக உள்ளே வந்தான். அவன் உள்ளே வரும் போது சித்தார்த்தின் அழு குரல் அவன் அருகே தெளிவாக கேட்டது. சித்தார்த்தை சுற்றி நிறைய ஆசிரியர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
அதனால் அவனால் சித்தார்த்தை பார்க்க முடியவில்லை.
வருணின் விலை உயர்ந்த ஷூ, அவன் உள்ளே வரும்போது பெரிய சத்தத்தை எழுப்பியது. அந்த சத்தத்தால் அங்கே இருந்த மானசா, அவனை திரும்பி பார்த்தாள். வருணை பார்த்தவுடன் அவன் அருகே ஓடி சென்ற மானசா, அவன் நடக்க நடக்க... அவனுடனே நடந்து வந்த படியே சித்தார்த் இன் மீது அவளுக்கு தான் அதிக அக்கறை இருக்கிறது என்பது போல்... அவனை பற்றி பேசி கொண்டே வந்தாள்.
மானசாவின் பேச்சு சத்தார்த்தால் அங்கு இருந்த சிலர் திரும்பி பார்த்து விட்டு... வருண் வந்து இருப்பதை உணர்ந்து கொண்டு விலகி நின்றனர். சித்தார்த்தின் அருகே வந்த வருணால் சித்தார்த் ஏதோ ஒரு பெண்ணின் மேல் படுத்து கொண்டு அழுது கொண்டு இருப்பதை மட்டும் தான் பார்க்க முடிந்தது.
ஆனால் அந்த பெண் யார் என்று அவனால் பார்க்க முடிய வில்லை.
அந்த காட்சி அவனை உலுக்கியது. ஜான்வி இறக்கும் போது, அவளுடைய இறந்த உடலின் மேல் படுத்து கொண்டு சித்தார்த் இப்படி தான் அழுதான். அந்த காட்சி அவன் கண் முன்னே வந்து சென்றது. அப்போது சித்தார்த்திற்க்கு முதன் முறையாக Fix வந்தது. அது மட்டும் அல்லாமல் அவன் உடல் அளவிலும், மனதளவிலும், அதிகம் பாதிக்க பட்டு வெகு நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் இருந்தான்.
அதனால் பொதுவாகவே எப்போதும் சித்தார்த் எந்த சிறிய விஷயத்திற்கும் வருத்த படாமல், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் எப்போதும் அவனை கண்ணாடி போல் பக்குவமாக பார்த்து கொள்வான் வருண். இப்போது சித்தார்த் தன் கண் முன்னே அழுது கொண்டு இருப்பதை அவனால் தாங்கி கொள்ளவே முடிய வில்லை. மீண்டும் அவனுக்கு அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று மிகவும் பயந்தான்.
வருண் தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் கூட அசராமல் நின்று அதை எதிர் கொண்டு வெற்றி பெறுவான். ஆனால் அவனுடைய மகனுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அவன் ஒரு பலவீனமான மற்றும் அன்பான அப்பாவாக மாறி விடுகிறான். அவனுக்கு சித்தார்த்தை சமாதான படுத்துவதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது.
அப்போது திடீரென்று சத்தமாக அழுத சித்தார்த், “ரித்தி எந்திரி... ரித்தி எந்திரி..." என்று சிறு விசும்பல்களுடன் கத்தினான்.. 😭 அங்கே நின்று அதை பார்த்து கொண்டு இருந்த வருண், யார் அந்த “ரித்தி" என்று ஒரு நிமிடம் யோசித்தான்.
அப்போது தான் அவனுக்கு ரித்திகாவின் முகமும், அவளுடைய பெயரும் ஞாபகம் வந்தது.
அதனால் மீண்டும் சித்தார்த்தின் அடியில் மயங்கி கிடந்த அந்த இளம் பெண்ணை உற்று பார்த்தான். அது ரித்திகா என்று அவன் உணரும் போது, ஏன் என்று தெரியவில்லை... “ஜான்வியை உன் கண் முன்னே இழந்து விட்டதை போல்.. ரித்திகாவையும் இழந்து விடாதே" என்று அவனுடைய மனம் அவனிடம் சொல்லி கொண்டே இருந்தது.
அதனால் தன்னை அறியாமல் அவன் அருகே சென்று அமர்ந்தான் வருண்.
அவனுடைய கண்ணில் இருந்து வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் அவனுடைய கன்னத்தில் இருந்து வழிந்து கீழே விழுந்தது. 😢
சிவா, அங்கு இருந்த ஒரு ஆசிரியரிடம் தண்ணீர் பாட்டிலை கொண்டு வரும் படி சொல்லி கொண்டு இருந்தான். கூட்டத்தில் இருந்து அதை கேட்டு கொண்டு இருந்த கௌத்தம், வேகமாக ஓடி சென்று தண்ணீர் பாட்டிலுடன் வந்தவன்; சிவாவிடம் அதை கொடுத்தான். அதை பெற்று கொண்ட சிவா, வருணின் அருகே சென்று அமர்ந்து மெதுவான குரலில் அவனிடம் சித்தார்த்தை ரித்திகாவின் மீது இருந்து எழுப்பி விட்டு, அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்புமாறு சொன்னான்.
அது வரை எதை எதையோ யோசித்து கொண்டு இருந்த வருணிற்கு அப்போதுதான் தான் இங்கே எதற்கு வந்தோம் என்ற நினைவே வந்தது. சித்தார்த்தை அழைத்த வருண், அவனை ரித்திகாவின் மீது இருந்து தூக்க முயற்சித்தான். வருணின் குரலை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்ட சித்தார்த், கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் தலையை திருப்பி அவனை பார்த்தான். 🥺
அவனுக்கு வருணின் மீது பயம் இருந்தாலும் தெரியாத நபர்களை விட அவனுக்கு நன்கு தெரிந்த அவனுடைய அப்பாவின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது. தெரியாத பல மனிதர்கள் இருக்கும் கூட்டத்தில் தனியாக ஆபத்தில் மாட்டி கொள்ளும் போது, ஒரு தெரிந்த முகத்தை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியும், நிம்மதியும், சித்தார்த்தின் மனதில் ஏற்பட்டது
அந்தனால் பாசத்தோடு 😍 வருணை பார்த்த சித்தார்த், கர கரத்த குரலில் “அப்பா" என்று அழைத்தான். சித்தார்த் தன்னை “அப்பா" என்று அழைத்தவுடன், வருணின் இரும்பு இதயம் ❤️ உருகி கரைந்து. அவனுடைய கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது. 😭
ஜான்வியின் இறப்பிற்கு பின் தன்னை பார்த்து பயந்து ஓடுபவன், இன்று தான் முதன் முறையாக சித்தார்த் அவனை “அப்பா" என்று அழைக்கிறான்.
இதுவரை தன்னுடைய மகனே தன்னை இப்படி வெறுத்து ஒதுக்குகிறானே என்று வருணின் மனதில் அவனை அழுத்தி கொண்டு இருந்த பெரிய பாரம் இப்போது தான் இறங்கி அவன் மனம் லேசாக ஆனதை உணர்ந்தான்.
இப்படி தன்னையும், தன்னுடைய மகனையும், பற்றி யோசித்து கொண்டு இருந்த வருண், சுய நினைவு இன்றி கீழே மயங்கி கிடக்கும் ரித்திகாவை மறந்து விட்டான்.
அவனுடைய கண்கள் சித்தார்த்தை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தது. வருண், இப்படி வேகமாக வந்து என்ன புரோஜனம்..? அவன் ரித்திகாவை பார்க்காமல் தன் மகனை பார்த்து கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறானே... என்று நினைத்த கௌத்தமிற்க்கு தான் கோபம் அதன் எல்லையை கடந்து கொண்டு இருந்தது. 😡
கௌத்தமை தவிர அங்கு இருந்த மற்ற அனைவரும் ரித்திகாவை மறந்து விட்டு வருணை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தனர். அங்கு இருந்த ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் வருண் யார் என்று தெரியும். அதனால் தான் அவர்களுக்கு இவ்வளவு ஆச்சரியமாக இருந்தது... கடின தன்மைக்கு பெயர் போன ரக்கட் பாய் வருணா இது..? இப்படி தன் மகன் முன்னே கண்ணீர் சிந்தி கொண்டு இருப்பது..? என்று தான் அவர்களுடைய மனதில் ஓடும் ஒரே எண்ணமாக இருந்தது.
வருண் யார் என்று அறியாதவர்கள் கூட அவனை ஆச்சரியமாக தான் பார்த்தனர். இந்த பள்ளியில் படிக்கும் எந்த ஒரு குழந்தையின் குடும்பமாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக இந்த சமூகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் பணக்கார குடும்பத்தில் ஒருவராக தான் இருக்க கூடும் என்பதால் தான் அவர்களுக்கு அந்த ஆச்சரியம்.
பொதுவாக பணக்காரர்கள் என்றாலே அன்பிற்கும், மரியாதைக்கும், முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்று பொதுவாக ஒரு எண்ணம் பரவி இருக்கும் நிலையில்.. தன் மகனின் மீது இவ்வளவு பாசமாக இருக்கும் ஒரு அப்பாவை முதன் முறையாக இப்போது தான் அவர்கள் காண்கிறார்கள்.
அங்கே இருந்தவர்களுள் கௌத்தம் மட்டும் தான் வருணின் மீது கொல வெறியில் 😡 இருந்தான்.
எப்படி தான் இந்த மக்கள் பணக்காரர்களால் ஒரு நொடியில் ஈர்க்க படுகிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை.
அவர்களை எல்லாம் கண்டு கடுப்பான கௌத்தம், நேராக வருணின் அருகே சென்று... “சார் மொதெல்ல ரித்திக்காவுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க." என்று கோபமான குரலில் சொன்னான். 😒
அப்போது தான் அங்கு இருந்த அனைவருக்கும் ரித்திகாவை பற்றிய நினைவே வந்தது. சட்டென்று எழுந்து நின்ற வருண், சித்தார்த்தை ரித்திகாவின் மீது இருந்து தூக்கினான்.
ரித்திகாவின் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறி இருந்ததால் அவளுடைய முகம் முழுவதும் வியர்வை முட்டுக்களால் நிறைந்து இருந்தது. சிவாவின் கையில் இருந்து வாட்டர் பாட்டிலை பிடிங்கிய கௌத்தம், ரித்திகாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க சென்றான். அதை கவனித்த சித்தார்த், “போகாத.. போகாத..." என்று கத்திய படி மீண்டும் அழ தொடங்கினான். 😭
இது என்னடா இவங்களோட பெரிய ரோதனையா போச்சு.. 😒 உடம்பு சரியில்லாத பொண்ண வச்சு கிட்டு இவங்க இப்படி ஆளாளுக்கு விளையாடிட்டு இருக்காங்க என்று நினைத்தவன், உச்ச கட்ட கோபத்தில் வருணை பார்த்து எதையோ சொல்ல வந்தான் கௌத்தம். அவன் பேச வாயை திறப்பதற்குள் அவன் அருகே சென்ற சிவா, அவன் கையை பிடித்து “மச்சான் அமைதியா இரு." என்று அவனை
தடுத்தான்.
- நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.