அத்தியாயம் 24: இவர் ஜான்வியோட ஹஸ்பன்ட்…
ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய இறந்து போன மனைவி ஜான்வியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி கொண்டு இருந்தான் வருண் நாராயணன். வருண் கேக்கை வெட்டி ஒரு சிறுமிக்கு ஊட்டி விட்டு கொண்டு இருப்பதை கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்து கொண்டு இருந்தாள் ரித்திகா.
அங்கு குழுமி இருந்த மக்கள் அனைவரும் வருண்ஐ பற்றியும், ஜான்வியை பற்றியும், தான் பேசி கொண்டு இருந்தனர். ரித்திகா-க்கு ஜான்வி யார் என்று தெரியும். அவளை பொறுத்த வரை ஜான்வி யாரோ ஒரு பணக்காரர் உடைய மனைவி அவ்வளவு தான்.
நாராயணன் குடும்பத்தின் மருமகள் தான் ஜான்வி என்றும், வருண் நாராயணன் தான் அவளுடைய கணவன் என்றும் ரித்திகாவுக்கு தெரியாது. ஏனென்றால் வருண்இன் சாதனைகளை பற்றிய தகவல்கள் செய்தியாக இணையதளங்களில் வரும். ஆனால் அதில் எந்த செய்தியிலும் வருண்இன் புகைப்படமோ.. இல்லை அவனுடைய குடும்பத்தினர் பற்றிய தகவல்களோ... இல்லை அவர்களுடைய புகைப்படம் ஓ ஒருபோதும் இடம் பெற்றதில்லை.
பிஸினஸ் வட்டாரத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே வருண் நாராயணன் எப்படி இருப்பான் என்று தெரியும். இந்த ஜான்வி ஆதரவற்றோர் இல்லம் வருண் தன்னுடைய சொந்த பணத்தில் ஜான்வியின் பெயரில் தனியாக ஆரம்பித்ததால் அவன் அதை நாராயணன் குரூப்ஸ் -க்குள் இணைக்கவில்லை. அதனால் இந்த இல்லம் வருண்இற்கு சொந்தமானது என்று இந்த இல்லத்திற்க்கு தொடர்பு உடையவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அங்கு குழுமி இருந்த அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இறந்து போன அவனுடைய மனைவியின் மீது வருண் எவ்வளவு பாசமாக இருக்கிறான் என்று அதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள். அதை கவனித்த ரித்திகா, அங்கிருந்த இளம் பெண் ஒருத்தியை அழைத்து அவளிடம் அங்கு இருந்த வருண்ஐ கை காட்டி "இவர் யார்...?" என்று கேட்டாள்.
அந்த இளம் பெண் ரித்திகாவிடம் வருண் தான் ஜானவியின் கணவன் என்றும், அவர் பெரிய பணக்காரர் என்றும் சொன்னாள். அதை கேட்ட ரித்திகா, வருண்ஐ ஆச்சரியமாக பார்த்தாள். பொதுவாகவே பணக்காரர்கள் என்றால் ரித்திகா-க்கு அவர்களின் மீது ஒரு பயமும், அவர்கள் மனசாட்சி அற்றவர்கள் என்ற ஒரு தவறான எண்ணமும் உண்டு.
பொதுவாகவே மனைவி இறந்து விட்டால் எந்த ஒரு ஆண்மகனும் வேறொரு திருமணம் செய்து கொண்டு.. அடுத்து என்ன என்று தன்னுடைய வாழ்க்கையை பற்றி யோசிப்பது தான் வழக்கமாக இருக்கிறது. இதில் பணக்காரராக இருப்பவர்களை பற்றி தனியாக குறிப்பிடவே தேவை இல்லை.
ஆனால் ரித்திகாவின் கண் முன் நிற்கும் இந்த வருண்ஓ தன்னுடைய இறந்த மனைவியின் மீது தான் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார் என்று நினைக்கும் போதே ரித்திகாவின் மனதில் உயர்ந்து விட்டான் வருண். மரியாதை நிறைந்த கண்களுடன் வருண்ஐ பார்த்தாள் ரித்திகா.
பின் அங்கு இருந்த குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. அந்த குழந்தைகள் அமர்ந்து இருந்த வரிசையில் அந்த குழந்தைகளோடு ஒருவராக வருண்உம் அமர்ந்து கொண்டான். அந்த இல்லத்தில் இருந்த ஊழியர்களோடு இணைந்து ரித்திகாவும் அங்கு இருந்த குழந்தைகளுக்கு உணவு பரிமாறினாள்.
அப்போது அங்கு இருந்த குழந்தைகளுடன் சிரித்து பேசி விளையாடியே அவர்களுக்கு உணவு பரிமாறினாள் ரித்திகா. வருண்இன் அருகே சிவா அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது வருண் சாப்பிடாமல் எதையோ உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்த சிவா, வருண் எதை பார்க்கிறான் என்று அவன் பார்வை செல்லும் வழியில் அவனும் பார்த்தான்.
வருண் கூறிய விழிகளுடன் ரித்திகாவை தான் பார்த்து கொண்டு இருந்தான். அதை கவனித்த சிவா தன் மனதிற்குள், “பாவம் இந்த பொண்ணு எப்ப பார்த்தாலும் இவர் கிட்டேயே வந்து மாட்டிக்கிறா. அந்த பொண்ணு எவ்வளவு சிரிச்ச முகமா இருக்கு... 😁 அவளை போய் பாத்து எப்படி தான் இவருக்கு முரைக்க தோணுதோ தெரியல. நீ தான் கடவுளே... இவர் கிட்ட இருந்து அந்த அப்பாவி பொண்ண காப்பாத்தணும்." என்றான்.
தான் செய்ய வேண்டிய அனைத்து வேலையையும் முடித்து விட்டு கிளம்ப தயாரானான் வருண். அப்போது மேனேஜர் அறையில் அமர்ந்து இருந்த வருண் அந்த வயதான மேனேஜரை சிவாவை விட்டு அழைத்து வர சொன்னான். சில நிமிடங்களில் அந்த மேனேஜருடன் உள்ளே வந்தான் சிவா.
மேனேஜர்: "சொல்லுங்க சார்." என்று கேட்க,
வருண்: "உங்க பொறுப்புல தான் இந்த ஹோம் இருக்கு. இப்ப புதுசா வந்தவங்க எல்லாரையும் நோட் பண்ணிக்கிட்டே இருங்க. இங்க எந்த தப்பும் நடக்காம நீங்க தான் பாத்துக்கணும். சந்தேகப்படுற மாதிரி எது நடந்தாலும் உடனே எனக்கு இன்போர்ம் பண்ணுங்க." என்று ரித்திகாவை மனதில் வைத்து கொண்டு சொன்னான்.
மேனேஜர் வருண் எது சொன்னாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்று அறிந்து இருந்த மேனேஜர் அவன் சொல்வதை எல்லாம் கேட்டு விட்டு அப்படியே செய்வதாக உறுதியளித்தார்.
பின் சிறிது நேரம் அந்த ஹோமை பற்றியும், மற்ற ஊர்களில் இருக்கும் ஹோம் இன் பிரான்சுகள் பற்றியும் சிறிது நேரம் மேனேஜருடன் பேசி விட்டு அங்கு இருந்து சிவாவுடன் கிளம்பினான் வருண்.
அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் ரித்திகாவும் அங்கு இருந்து கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு சென்றாள். தன்னுடைய வீட்டிற்கு வந்த ரித்திகா, சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள்.
அவள் சந்தோஷமாக சிரித்த படி டீவியை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாலும் அவள் மிகவும் சோர்வாக இருப்பதாக நினைத்தார் சுதாகர். ஒரு வேளை அங்கேயும், இங்கேயும், ஆட்டோ கிடைக்காமல் பாதி நடந்தும் பாதி ஆட்டோவிலும் நடந்து கொண்டு இருப்பதால் தான் இவள் இப்படி இருக்கிறாளோ என்று நினைத்தவர், அவர் அருகில் சென்று அமர்ந்தார்.
சுதாகர்: "பாப்பா நீ ஸ்கூட்டி வாங்கனும்ன்னு சொன்னியே... மா இன்னைக்கு ப்ரீயா தானே இருக்க.. போய் வாங்கிட்டு வந்துடலாமா ...?" என்று கேட்க,
ரித்திகா: "ஆமா அப்பா. நானும் இந்த சண்டே போகலாம் -ன்னு இருந்தேன் மரந்துட்டேன். ஆப்டர் நுண் தானே ஆகுது போயிட்டு வரலாமா..?" என்று பதிலுக்கு கேட்டாள்.
சுதாகர்: "நான் கெளம்பி தான் மா இருக்கேன். இப்ப கூட போகலாம்."
ரித்திகா: "சரி" என்றவள், கிளம்புவதற்தாக எழுந்திருந்தாள். அப்போது தான் ஷாலினி வெளியே போகலாம் என்று சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதனால் தன்னுடைய மொபைலை எடுத்தவள், ஷாலினியை அழைத்து அவளிடம் விஷயத்தை சொல்லி அவளை தன்னுடைய வீட்டிற்கு லாவண்யாவுடன் வர சொன்னாள்.
சிறிது நேரத்தில் லாவண்யாவும், ஷாலினியும், நாராயணன் பேலஸை வந்து அடைந்தனர். அவர்கள் இங்கே இதுவரை வந்தது இல்லை என்பதால் செக்யூரிட்டி ஆபீஸர்கள் அவர்களை உள்ளே விடவில்லை. அதனால் ரித்திகாவுக்கு கால் செய்த ஷாலினி, அவளை கீழே வந்து தங்களை அழைத்து செல்லுமாறு சொன்னாள்.
சில நிமிடங்களில் செக்யூரிட்டி ஆபிஸ் ரூம் -க்கு வந்தாள் ரித்திகா.
ரித்திகாவை பார்த்தவுடன் ஷாலினியும், லாவண்யாவும், நட்பாக புன்னகைத்தனர். 😁 அவர்கள் இருவரும் யார் என்று அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபீஸர்களிடம் விவரித்த ரித்திகா, அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
சுதாகரும், ரேவதியும், அவர்கள் இருவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். பின் அவர்கள் நால்வரும் ஸ்கூட்டி வாங்குவதற்காக ஷோ ரூமிற்கு சென்றனர். செல்லும் வழி எல்லாம் ஷாலினியும், லாவண்யாவும், நாராயணன் பேலஸ் ஐ பற்றி தான் வியந்து பேசி கொண்டு இருந்தனர்.
அவர்கள் இருவருமே இந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நாராயணன் பேலஸில் தங்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்க வில்லை. இன்று ரித்திகாவால் அந்த இடம் எப்படி இருக்கும் என்று பார்க்க முடிந்ததால் இருவருமே அந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இப்படியே நாராயணன் பேலஸ் பற்றி பேசிய படி அவர்கள் நால்வரும் ஷோ ரூம் ஐ வந்து அடைந்தனர்.
ஹாஸ்பிட்டலில்…
ஆராதனா சுய நினைவு இன்றி ஹாஸ்பிடல் பெட்டில் படுத்து இருந்தாள். மூச்சுக்காக அவளுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்த பட்டு இருந்தது. அந்த ரூமின் ஒரு மூலையில் ஒரு சேரை போட்டு அமர்ந்தபடி ஆராதனாவயே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் ஹரி. அவனுடைய முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
ஆனால் அவனுடைய கண்கள் ஆராதனாவின் முகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை.
அப்போது மெதுவாக கதவை திறந்து உள்ளே வந்தான் ஹரியின் மேனேஜர் தர்ஷன்.
தர்ஷன் "பாஸ் நீங்க ரொம்ப நேரமா இப்படியே உக்காந்து இருக்கீங்க. நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்ததுல இருந்து தண்ணி கூட குடிக்கல. இன்னைக்கு நமக்கு முக்கியமான மீட்டிங் இரண்டு இருந்துச்சு. நீங்க எப்படியும் வரமாடிங்கன்னு நான் கேன்சல் பண்ணிட்டேன். ஆனா நம்ம ஸ்டார்ட் பண்ண போற காஸ்மெட்டிக்ஸ் கம்பெனி சம்பந்தமா நம்ப ஷேர் ஹோல்டர் நெரைய டவுட் ரைஸ் பண்ணி இருக்காங்க. அட்லீஸ்ட் ஒரு கால் பண்ணியாச்சு அவங்க கிட்ட பேசுங்க பாஸ். அண்ட் கொஞ்சமாவது ஏதாவது சாப்பிடுங்க ப்ளீஸ்." என்றான்.
ஹரிக்கு தேவை இல்லாத ஏமோஷனல் ட்ராமா செய்வது எல்லாம் பிடிக்காது. அதனால் அங்கு இருந்த நர்ஸ் இடம் ஆராதனாவை பார்த்து கொள்ள சொல்லி விட்டு அமைதியாக தர்ஷன் உடன் வெளியே சாப்பிடுவதற்காக முதலில் ஹரி சாப்பிடுவதற்காக பிரத்தியேகமாக உணவை வி.ஐ.பி. வெயிட்டிங் ரூமில் வாங்கி வந்து வைத்து இருந்தான் தர்ஷன்.
அந்த அறைக்கு வந்த ஹரி நானும் சாப்பிடுகிறேன் என்று கொஞ்சமாக சாப்பிட்டான். பின் ஷேர் ஹோல்டர்களுக்கு கான்ஃபரன்ஸ் கால் செய்து அவர்களுடன் பேச தொடங்கினான்.
சில மணி நேரங்கள் கடந்தும், அவன் மொபைலில் அவர்களுடனே பேசி கொண்டு இருந்தான். அப்போது அவன் இருந்த அறைக்குள் வேகமாக கதவை திறந்த படி ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள்.
சீரியஸாக அந்த கால் இல் பேசி கொண்டு இருந்த ஹரி, அந்த நர்ஸ் ஐ முறைத்து பார்த்தான். எதையோ அவனிடம் சொல்ல வந்த நர்ஸ், ஹரி அவளை பார்த்து முறைத்ததும் பயந்த படி அமைதியாக நின்று அவனையும், தர்ஷனையும் பார்த்து கொண்டு இருந்தாள்.
அந்த நர்ஸுன் பயத்தை உணர்ந்த தர்ஷன், அவள் அருகே சென்று... "சொல்லுங்க ஏன் டென்ஷன் ஆ இருக்கீங்க...? ஏதாச்சு எமர்ஜென்சியா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அந்த நர்ஸ் திக்கிய குரலில் தர்ஷனை பார்த்து...
"அது வந்து சார்... ஆராதனா மேடம் கண்ணு முழிச்சுட்டாங்க. கண்ண முழிச்ச உடனே ஹரி சாரை தான் பார்க்கணும்னு சொன்னாங்க. அதான் அவரை கூப்பிடலாம்னு வந்தேன்" என்றாள்.
அவ்வளவு தான் இந்த வார்த்தையை கேட்ட பின் ஹரி, அவனாகவே இல்லை. அவன் போனில் பேசி கொண்டு இருந்தவர்களிடம் ஒரு எக்ஸ்கியூஸ் கூட கேட்காமல் அப்படியே அவன் மொபைல் ஐ தர்ஷனின் கையில் கொடுத்து விட்டு ஆராதனா இருந்த அறையை நோக்கி ஓடினான்.
அவளுடைய அறை வரை வேகமாக வந்தவன், அந்த அறையின் கதவை திறப்பதற்கு தயங்கிய படி அப்படியே நின்று விட்டான்.
அவனுக்கு ஆராதனாவின் முகத்தில் எப்படி முடிப்பது என்ற தயக்கம் இருந்தாலும்.. அவளை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அதைவிட அதிகமாக இருந்தது.
அதனால் கதவை மெதுவாக திறந்தவன் அதன் வழியே ஆராதனாவை பார்த்தான். அவள் நர்ஸிடம் மீண்டும் மீண்டும் "நான் ஹரியை பார்க்க வேண்டும்" என்று புலம்பிக் கொண்டு இருப்பது அவனுடைய காதுகளில் விழுந்தது. இதற்கு மேலும் அவனால் அவளை பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை
அதனால் வேகமாக உள்ளே சென்றான்.
-நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.