அத்தியாயம் 23: இறைவன் நடராஜனின் மகள்..
அங்கு இருந்த ஊழியர்கள் அனைவரும் வருணையும், சிவாவையும், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிவா அதை எல்லாம் புன்னகை முகத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான். 😁 வருணின் முகம் வழக்கத்தை விட இன்று மிகவும் இருக்கமாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருந்தது.
அங்கே இருந்த அந்த வயதான மேனேஜர் வருணையும், சிவாவையும், உள்ளே அழைத்துச் சென்றார். அவர்கள் மூவரும் நேராக ஜான்வியின் ஆள் உயர சிலை இருந்த இடத்திற்கு வந்தனர். அது ஒரு மெழுகு சிலை.
ஜான்வி உயிரோடு இருந்தால் எப்படி இருப்பாளோ அதே உயரத்தில் ஜானகியின் சிலை நேர்த்தியாகவும் அழகாக செய்யப்பட்டு இருந்தது அந்த சிலை.
அந்த சிலை மட்டும் பெரிய கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருக்கவில்லை என்றால்... உயிருடன் ஜான்வி அங்கே நின்று கொண்டு இருப்பதை போல் தான் இருக்கும். சிரித்த முகத்துடன் உயிரற்ற அழகு பதுமையாய் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே சிறைப்பட்டு இருந்தாள் ஜான்வி.
கனத்த இதயத்துடன் அந்த சிலையை பார்த்துக் கொண்டு இருந்தான் வருண். மேனேஜரிடம் அந்த கண்ணாடிப் பெட்டியை திறப்பதற்கான சாவியைக் கொண்டு வரச் சொல்லி அதை திறந்தான் வருண். அவன் அந்த கண்ணாடிப் பெட்டியை திறந்ததும் அவனை அறியாமல் அவனுடைய கை ஜான்வியின் முகத்தை வருடியது.
அப்போது திடீரென்று ஜான்வியின் Perfume smell மீண்டும் வருவதை போல் உணர்ந்தான் வருண். ஜான்வியின் பிரிவு தந்த வலியில் இருந்தவன், இப்போதும் அதை பெரிதாக நினைக்கவில்லை. இது எல்லாம் அவனுடைய பிரம்மை ஆகவே இருக்கும் என்று நினைத்தான்.
சில நிமிடங்களுக்குப் பின் அந்த பர்ஃப்யூமின் மனம் மிகுதியாக இருந்தது. அதை வருணால் தாங்க முடியவில்லை. அவனுக்கு தலை வலிப்பது போலவும்... மயக்கம் வருவது போலவும் இருந்தது. இதற்கு மேல் இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்தவன், அந்த கண்ணாடி கதவை பூட்டிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அங்கு ஓரமாக இருந்த மரத்திற்கு அடியில் போடப்பட்டு இருந்த ஒரு மர பென்ச்சில் வந்து அமர்ந்தான்.
அங்கே தூரத்தில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களோடு இணைந்து குழந்தையோடு குழந்தையாக ஒரு இளம் பெண் விளையாடிக் கொண்டு இருந்தாள். அந்த பெண்ணைப் பார்த்தான் வருண். அவளுடைய முகத்தில் ஒரு கள்ளம் கபடம் அற்ற சிரிப்பு இருந்தது. 😁
அந்த பெண்ணுடைய முகம் அவனுடைய மனதில் ஏதோ ஒரு ஆறுதலை தருவதாக உணர்ந்தான் வருண். அப்போது தான் அந்த முகம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருப்பதாக நினைத்தவன், அவளை உற்றுப் பார்த்தான். நீங்கள் எதிர் பார்த்தது சரியே.. அங்கே இருந்தது நம்ம ரித்திகாவே தான்.
அங்கு இருந்த குழந்தைகளோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தாள் ரித்திகா. அப்போது அங்கு இருந்த ஒரு சிறுமி அவளுடைய குர்தாவின் நுனியை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள்.
அதனால் அந்த குழந்தையின் உயரத்திற்கு கீழே மண்டியிட்டு அமர்ந்த ரித்திகா, அந்த சிறுமியிடம் பேசினாள்.
ரித்திகா: அந்த சிறுமியின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தியவள், "இந்த குட்டி பாப்பாவுக்கு என்ன வேணும்...?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். 😁
அந்த சிறுமி: "அக்கா உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா...?"
ரித்திகா: "தெரியுமே.... 😁"
அந்த சிறுமி: "நீங்க எங்க எல்லோருக்கும் ஆட சொல்லித் தரீங்களா இப்ப நீங்க ஆடுங்க. நாங்க பாக்கணும். எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு அக்கா பிளீஸ். 😍" என்று அழகாக கேட்டாள்.
ரித்திகா: இவ்வளவு க்யூட்டாக அந்த குழந்தை கேட்கும் போது ரித்திகாவால் எப்படி மறுக்க முடியும்...? அதனால் உடனே "சரி" என்று சொன்னாள்.
அந்த சிறுமி: "சூப்பர் அக்கா" என்று தன்னுடைய கையை தட்டியவள், அங்கு இருந்த எல்லா குழந்தைகளிடமும் சென்று "ரித்திகா அக்கா டான்ஸ் ஆடப் போறாங்களாம் வாங்க பார்க்கலாம்" என்று மகிழ்ச்சியாக சொன்னாள்.
அந்த குழந்தைகளுக்கு இடையே இருந்த ஆர்வமும், மகிழ்ச்சியும் உற்சாகமும் ரித்திகாவையும் தொற்றிக் கொண்டது. அதனால் தன்னுடைய மொபைல் போனில் இருந்து தனக்கு பிடித்த ஒரு பாடலை ப்ளே செய்த ரித்திகா ஆடத் தொடங்கினாள்.
ரித்திகாவுடைய மொபைலில் "ரவுடி பேபி" என்ற பாடல் சத்தமாக ஓடிக் கொண்டு இருந்தது.
அந்த பாடலில் நடிகர் தனுஷும், நடிகை சாய் பல்லவியும், அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்கள்.
ரித்திகா தனியாக அந்த பாடலுக்கு ஆடினாலும் அவள் ஒருத்தியே அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் அளவிற்கு நேர்த்தியாகவும், அழகாகவும் ஆடினாள்.
தூரத்தில் இருந்து அவனை பார்த்துக் கொண்டு இருந்த வருணுக்கு அங்கே என்ன பாடல் ப்ளே ஆகிக் கொண்டு இருக்கிறது என்று கேட்கவில்லை என்றாலும் அவள் ஆடும் முவ்ஸை வைத்து அவள் என்ன பாடலுக்கு ஆடுகிறாள் என்று அவன் கெஸ் செய்து விட்டான்.
ரித்திகா தன்னுடைய கூந்தலை ஃப்ரீயாக விட்டு இருந்ததால் அவள் ஆட ஆட அவளுடைய சுருள் கூந்தலும் அவளோடு சேர்ந்து ஆடியது.
சில நிமிடங்கள் தன்னையும் அறியாமல் அவள் ஆடும் அழகை ரசிக்கத்தான் செய்தான் வருண். அவனுடைய மனதில் இருந்த பாரங்கள் எல்லாமே விலகி மனம் லேசாகி புத்துணர்ச்சியுடன் இருந்தான் வருண்.
அப்போது திடீரென்று அவனுக்கு ரித்திகாவும், சித்தார்த்தும் பள்ளியில் பேசிக் கொண்டு இருந்த வீடியோ ஃபுட்டேஜைப் பார்த்த ஞாபகம் வந்தது. அதை நினைத்துப் பார்த்தவனுக்கு ரித்திகாவின் மீது மீண்டும் கோபம் வந்தது. 😒
அவன் தொடர்பு இல்லாத எதை எதையோ தொடர்பு படுத்தி யோசித்தான்.
அப்போது அந்த ஹோம் இன் வயதான மேனேஜர் அங்கே வந்தார். வருண், ரித்திகாவைப் பார்த்துக் கொண்டே இருப்பதை கவனித்தவர்... ரித்திகாவைப் பற்றி அவனிடம் தானாகவே பேசத் தொடங்கினார்.
"சார் இந்த பொண்ணு பேரு ரித்திகா. இங்க வாலண்டியரா வந்து இருக்காங்க. ஏதோ ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்குறாங்கன்னு சொன்னாங்க. இந்த பொண்ணு டான்ஸராம். ஃப்ரீயா இங்க இருக்கிற மாதிரி ஆதரவற்ற பிள்ளைகளுக்கு தானா போய் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறார்களாம். இந்த பொண்ணு அந்த சாமி நடராஜனோட மகள் மாதிரி.
தனக்கு தெரிந்த கலையை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுத்து காசு ஆக்கணும்னு நினைக்காம எல்லாருக்கும் உதவி செய்யணும்னு நினைக்கிற நல்ல மனசு இந்த பொண்ணுக்கு இருக்குன்னு நம்ம கரூர் பிரான்ச்சில் இருக்க அட்மின் மேடம் கூட பெருமையா சொன்னாங்க." என்று ரித்திகாவைப் பற்றி பெருமையாக பேசினார் அந்த மேனேஜர்.
வருணுக்கு ரித்திகாவின் மீது இருந்த சந்தேகம் இன்னும் தீர்ந்து இருக்க வில்லை என்பதால் அவர் சொல்லுவனவற்றை எல்லாம் கூர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கு சட்டென்று கரூரில் இருக்கும் அட்மின் மேடம் இவளைப் பற்றி ஏன் புகழ்ந்து பேசுகிறார்?
அங்கு இருப்பவர்களுக்கு இந்த ரித்திகாவைப் பற்றி எப்படி தெரியும்...? என்று நினைத்தவன், அதையும் அந்த மேனேஜரிடமே கேட்டும் விட்டான்.
மேனேஜர்: "அதுதான் அந்த பொண்ணுக்கு சொந்த ஊராம் சார். நம்ம அங்க ஹோம் ஸ்டார்ட் பண்ணதுல இருந்தே அந்த பொண்ணு அங்க வாலண்டியரா வராங்களாம். இப்போ அவங்களுக்கு இந்த ஊர்ல வேலை கிடைச்சு இங்க ஷிப்ட் ஆகி வந்ததுனால இங்க இருக்கிற ஹோம்முக்கு வந்து இருக்காங்க. கரூர் பிரான்ச் அட்மின் மேடம் ரெக்கமெண்ட் பண்ணதுனால நானும் இந்த பொண்ண அலவ் பண்ணிட்டேன்." என்றார்.
அவர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த வருண், அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் தன் மனத்திற்குள் ரித்திகாவைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய மூளை இதுவரை அவன் ரித்திகாவைப் பற்றி அறிந்தது எல்லாம் வைத்து இப்படிதான் நடந்திருக்க வேண்டும் என்று ஒரு ரிப்போர்ட் கொடுத்தது.
முதலில் இருந்தே ரித்திகா அவனுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். தன்னை நல்லவளாக காட்டிக் கொள்வதற்காக இப்படி பொது சேவை செய்பவள் போல் வெளியே ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வதற்காக வாலண்டியராக அவள் ஊரில் இருக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கு சொந்தமான ஹோமில் சேர்ந்து இருக்க வேண்டும்.
பின் அவள் சரியான தருணம் வரும்வரை காத்திருந்து சித்தார்த் படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்து அவனிடம் நல்ல பெயர் பெற்று தன்னுடைய குடும்பத்திற்குள் நுழைந்து ஏதாவது அவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டுகிறாள் போல.... என்று வருணின் மூளை அவனிடம் சொல்லிக் கொண்டு இருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன்னை அறியாமல் ரித்திகாவை ரசித்த அவனுடைய இதயமும் அவளுக்கு எதிராகவே யோசித்தது. இப்படி எதை எதையோ யோசித்துக் கொண்டு இருந்த வருண் அமைதியாகவே இருந்தான்.
பாவம் அங்கு இருந்த மேனேஜர் தான் இவரு ஏன் இப்படி அமைதியாக இருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார். தான் அவரிடம் ஏதாவது தவறாக பேசி விட்டோமோ என்று தன் மனதிற்குள் புலம்பியவர் பதற்றத்துடன் வருணைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.
அந்த மேனேஜருக்கு மேலும் சிரமம் கொடுக்காமல் அங்கே வேகமாக வந்த சிவா நேராக வருணின் அருகே சென்றவன், அவனை அழைத்தான்.
சிவா: "சார் எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க வந்தீங்கன்னா கேக் கட் பண்ணிடலாம்." சிவாவின் குரலால் தன்னுடைய சிந்தனைகளில் இருந்து வெளியே வந்த வருண், "சரி.. !!" என்றவன், அவனுடன் கிளம்பி கேக் வெட்டப் போகும் இடத்திற்கு சென்றான்.
ஜான்வியின் சிலைக்கு முன்பு ஒரு பெரிய டேபிளில் பல அடுக்குகள் உடைய பிரம்மாண்டமான ஸ்டாபெரி கேக் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கேக்கையும், ஜான்வியையும் பார்த்த வருண்... ஒரு பெருமூச்சு விட்டான். அவன் கண் முன்னே இருக்கும் அந்த ஸ்டாபெரி கேக் அவன் ஜான்வியுடன் வாழ்ந்த வாழ்க்கையை அதிகம் நினைவு படுத்தியது.
ஜான்விக்கு ஸ்டாபெரி கேக் பிடிக்கும் என்பதால் அவனுடைய வீட்டில் எப்போதும் ஃபிரிட்ஜில் ஸ்டாபெரி கேக் இருக்கும்படி அடிக்கடி வாங்கி வைத்து விடுவான் வருண். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு மனம் வலித்தது. கனத்த இதயத்துடன் அந்த கேக்கின் முன் சென்று நின்றான் வருண்.
கேக்கை வெட்டுவதற்காக அவனிடம் ஒரு கத்தியை எடுத்துக் கொடுத்தான் சிவா. வருணுக்கு அந்த கேக்கை கட் செய்வதற்கு மனம் வரவில்லை. அதனால் சுற்றி முற்றி பார்த்தான். அங்கு இருந்ததிலேயே ஒரு சிறு பெண் குழந்தையைப் பார்த்தவன், அந்த சிறுமியை தன் பக்கம் வருமாறு தன்னுடைய கையால் சைகை செய்து அழைத்தான்.
மற்றவர்களைப் போல் வருணைப் பார்த்து துளியும் பயப்படாத அந்த சிறுமி சிரித்த முகத்துடன் அவன் அருகே வந்து நின்றாள். அந்த சிறுமியின் கைகளில் கத்தியைக் கொடுத்தவன் அந்த சிறுமியின் கையைப் பிடித்து அந்த கேக்கை வெட்டினான் வருண். பின் அவர்கள் வெட்டிய அந்த கேக்கின் துண்டை தன்னுடைய கையில் எடுத்த வருண் அந்த சிறுமிக்கு ஊட்டி விட்டான்.
அந்த சிறுமிக்கு அந்த கேக்கின் சுவை மிகவும் பிடித்து இருந்தது போல அதை ரசித்து சாப்பிட்ட பின் வருணைப் பார்த்து... "தேங்க்ஸ் அங்கிள் எனக்கு இது ரொம்ப பிடிக்கும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😍 😁
அதை கேட்ட வருண், மெல்லிய புன்னகையுடன் அந்த சிறுமியைப் பார்த்தவன்.. செல்லமாக அவளுடைய கன்னத்தில் தட்டினான்.
தங்கள் கண் முன் நடந்து கொண்டு இருக்கும் காட்சியை பார்க்கும் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிசினஸ் சாம்ராஜ்யத்தையே அடக்கி ஆளும் அளவிற்கு அதிகாரமும், எவனும் அவன் அருகில் நெருங்கி பேச முடியாத அளவிற்கு தனக்கென ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதில் ராஜாவைப் போல் அமர்ந்திருக்கும் அவன் ஒரு சிறு குழந்தையிடம் இப்படி சகஜமாக பேசுவது யாராலும் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.
சிவாவிற்குமே வருணின் இந்த செயல்கள் எல்லாம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒரு வேளை சித்தார்த் தன்னிடம் நெருங்கி பழகாததால் ஏற்பட்ட ஏக்கத்தினால் தான் வருண் மற்ற குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்கிறான் போல என்று நினைத்தான் சிவா.
இங்கு நடந்து கொண்டு இருப்பதையும், அதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அவர்களுக்குள் ஆச்சரியமாக வருணைப் பற்றி பேசிக் கொண்டு இருந்ததையும் கூட்டத்திற்குள் ஒருவராக நின்று கேட்டுக் கொண்டு இருந்த ரித்திகா, வருணைப் பார்த்தாள்.
-தேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் அடுத்தடுத்த நாவல்களின்
அப்டேட்ஸ், மற்றும் ஆடியோ நாவல்கள் தொடர்பான தகவல்களை பெற பேஸ்புக்கில் தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற குரூப்பில் இணையுங்கள்.)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.