அத்தியாயம் 19: ரித்திகாவுடன் இணைந்து ஆடிய கௌதம்
ரித்திகா அந்த இளைஞனின் அருகே சென்றாள். அந்த இளைஞன் வேறு ஒரு புறம் பார்த்த படி நின்று கொண்டு இருந்தான். ரித்திகா அவனை அழைத்தாள்.
ரித்திகா: "ஹாய்..." என்று சத்தமாக சொன்னாள்.
யார் அது என்று திரும்பி பார்த்தான் அந்த இளைஞன். அவன் முன் அழகு பதுமையாக நின்றாள் ரித்திகா.
அந்த இளைஞன்: “யாரு இந்த பொண்ணு...?" என்று தன் மனதிற்குள் நினைத்தவன், "யார் நீங்க...?" என்று கேட்டான்.
ரித்திகா: "ஐ அம் ரித்திகா. நீங்க தான் என்ன தேடிட்டு இருந்தீங்கலாம்... இவங்க தான் சொன்னாங்க..." என்று தன் அருகில் இருந்த லாவண்யாவை கை காட்டினாள்.
அந்த இளைஞன்: "பார்ரா....!!! 😍 இந்த பொண்ணு அழகா இருக்காளே... 🥰 நல்லவேளை இவ நம்ம நினைச்ச மாதிரி நம்மள விட பெரிய பொண்ணா இல்ல.. தேங் காட்." என்று தன் மனதிற்குள் நினைத்தவன், "ஒ... ரித்திகா.. ஹாய்.. ஐ அம் கௌதம். நைஸ் டூ மீட் யூ." என்று தன்னை ரித்திகாவிடம் அறிமுக படுத்தி கொண்டவன், கை குலுக்குவதற்க்காக அவனுடைய கையை ரித்திகாவின் முன் நீட்டினான்.
ரித்திகா: ஒரு நொடி தயங்கியவள்... பின் மரியாதைக்காக அவன் முன் தன் கையை நீட்டி அவன் கையோடு கை கோர்த்து குலுக்கியவள், "நைஸ் டூ மீட் யு டூ" என்றாள்.
கௌதம்: "basically I am a professional choreographer. உங்களுக்கு இருக்கிற டான்ஸ் பீரியட் எல்லாமே என் கூட combined ஆ தான் இருக்கும். மோஸ்ட்லி நீங்க எனக்கு அசிஸ்ட் பண்ற மாதிரி தான் இருக்கும்.
சோ நம்ம கிளாஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எல்லாமே கொஞ்சம் பிளான் பண்ணி பண்ணா ஈஸியா இருக்கும். நேத்து நான் லீவ் போட்டு இருந்தேன் அதனால நீங்க தனியா கிளாஸ் அட்டென்ட் பண்ணி இருப்பீங்க. பட் இனி மேல் நம்ப எல்லா க்ளாஸ்-ம் சேர்ந்து தான் அட்டென்ட் பண்ணனும். உங்களுக்கு எந்த டவுட்-னாலும் என்ன கேளுங்க." என்று பெருமையாக சொன்னான்.
ரித்திகா: "ஓகே...!! சார். தேங்க் யூ." என்றாள்.
கௌதம் ரித்திகாவிடம் ஏதோ சொல்ல வந்தான்... அதற்குள் உணவு இடைவேளை முடிந்து அடுத்த பீரியட் தொடங்குவதற்கான பெல் அடித்தது.
கௌதம்: "ஓகே...!! ரித்திகா. இப்ப நமக்கு கிளாஸ் இருக்கு உங்களுக்கு ஏதாவது திங்ஸ் வேணும்-ன்னா எடுத்துட்டு வாங்க. டான்ஸ் பிராக்டிஸ் ஹாலுக்கு போகலாம் ஸ்டூடண்ட்ஸ் டைரக்டா அங்க வந்துருவாங்க."
ரித்திகா: "ஓகே...!!! சார்." என்றவள், அவளுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு கௌதம் உடன் டான்ஸ் பிராக்டீஸ் ஹாலை நோக்கி நடக்க தொடங்கினாள்.
அவர்கள் இருவருமே ஸ்பெஷல் டீச்சர்ஸ் என்பதால்... இருவருமே ஆசிரியர்களுகான யூனிஃபார்ம் அணியவில்லை. அவர்கள் இருவரும் ஜோடியாக செல்வதை அவர்களை கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி வினோதமாக பார்த்து விட்டு சென்றனர்.
லாவண்யாவும் தூரத்தில் இருந்து அவர்கள் செல்வதை பார்த்தாள். கௌதம் மாதிரி ஹான்ட்சம் ஆன பையன் மீது யாருக்கு தான் craze வராமல் இருக்கும்? அதற்கு லாவண்யா மட்டும் விதி விலக்கா என்ன?
அவளுக்கு பிடித்த பையன் வேறு ஒருத்தியுடன் இப்படி நெருக்கமாக பேசி கொண்டு செல்வது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதே வருத்தத்துடன் தன்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு அவள் செல்ல வேண்டிய வகுப்பு அறைக்கு சென்றாள்.
கௌதம்: "நேத்து first day கிளாஸ் எப்படி இருந்துச்சு....? ஸ்டுடென்ட்ஸ் அதிகமா இருந்து இருப்பாங்களே... உங்களுக்கு handle பண்ண tough ஆ இருந்துச்சா...?"
ரித்திகா: "கொஞ்சம் tough ஆ தான் இருந்துச்சு. பட் நல்லா தான் போச்சு." என்றாள்.
கௌதம்: "ஓகே..ஓகே... இதுக்கு முன்னாடி நீ நிறைய கிளாஸ் எடுத்து இருப்ப. ஆனா இந்த கிளாஸ் நீ முன்னாடி எடுத்த கிளாஸ் மாதிரி இருக்காது. ஸ்டுடென்ட்ஸ் நிறைய பேர் இருந்தாலும் நம்ம அவங்கள டிவைட் பண்ணி இன்டிவிஜுவாலா எல்லா ஸ்டுடென்ட்ஸ் ஐயும் போகஸ் பண்ணனும்.
பிகினிங் ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் போக போக ஈசி ஆயிரும். யூ டோன்ட் வரி நான் உங்களுக்கு எல்லாமே சொல்லிதரேன்." என்று அவன் தான் என்னமோ ரித்திகாவை காப்பாற்ற வந்த ஆபத்பாண்டவன் போல் பெரியதாக பில்டப் செய்து பேசி கொண்டு இருந்தான்.
ரித்திகாவுக்கும் அவன் கொஞ்சம் அதிகமாகவே பேசி கொண்டு இருக்கிறான் என்று தான் தோன்றியது. ஆனாலும் அவன் பேசிய விதத்தை வைத்து அவன் மிகவும் எளிமையான மற்றும் அனைவரிடத்திலும் நன்றாக பழக கூடியவன் என்று நினைத்தாள் ரித்திகா.
ஏனோ அவன் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டு இருக்க அவளுக்கு மிகவும் பிடித்தது.
இப்படியே இருவரும் பேசிய படி டான்ஸ் பிராக்டிஸ் ஹாலுக்கு வந்தனர்.
அவர்கள் அங்கே வரும் போது கிட்ட தட்ட 100 மாணவ, மாணவியர்கள் இருந்தனர். அந்த டான்ஸ் பிராக்டிஸ் ஹால் விசாலமாகவும், கலை நயத்துடனும் இருந்தது. அந்த ஹாலின் முன் புறமும், பின் புறமும், இருந்திருந்த சுவற்றில் அந்த சுவர் அளவிற்கு ஒரு பெரிய கண்ணாடி பதிக்க பட்டு இருந்தது..
வலது மற்றும் இடது பக்கத்தில் இருந்த சுவர்களில் பல்வேறு வகையிலான நடனங்களை பிரதிபலிக்கும் நோக்கத்தில் அது சம்பந்த பட்ட ஓவியங்கள் தீட்ட பட்டு இருந்தன. அந்த ஹாலில் ஒரு ஓரத்தில் மரத்தால் ஆன ஒரு மேஜை இருந்தது. அந்த மேஜையின் மேல் கோபுரம் போல் ஒரு அமைப்பு வடிவமைக்க பட்டு இருந்தது. அந்த மேஜையின் உள்ளே தங்கத்தால் ஆன நடராஜர் சிலை ஒன்று இருந்தது.
அந்த தங்க சிலையை பாதுகாக்கும் பொருட்டு அந்த மேஜையை சுற்றி ஒரு கண்ணாடி அறையும் மேலும் சில வேலைப்பாடுகளும் செய்ய பட்டு இருந்தது. அந்த பெரிய ஹாலின் நாலாபுறத்திலும் பாதுகாப்பு நோக்கத்திற்காக சி.சி.டிவி. கேமரா பொருத்த பட்டு இருந்தது.
அங்கு இருந்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்து கொண்டு இருந்தனர். அந்த இடமே பெரும் சத்தத்தால் நிரம்பி இருந்தது. ரித்திகாவும், கௌதமும், உள்ளே வருவதை பார்த்த மாணவர்கள் அமைதியாகி விட்டனர்.
எப்போதும் படிப்பு... படிப்பு... என்று இருந்து கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு இந்த இந்த பீரியட் மிகவும் பிடிக்கும் என்பதால் அனைவரும் புதிதாக நடனம் கற்று கொண்டு ஆட போவதை நினைத்து மகிழ்ச்சியாகவும், ஆர்வத்துடனும், இருந்தனர்.
கௌதம், ரித்திகா இடம் சொன்ன படியே அங்கு இருந்த மாணவர்களுக்கு பொதுவாக ஒரு ஸ்டெப் பை சொல்லி கொடுத்து அதை அங்கு இருந்த அனைவரையும் ஆடி காட்ட சொல்லி அதில் சிறப்பாக ஆடுவர்களை தனியாக பிரித்து, சரியாக ஆட தெரியாதவர்களை தனியாக பிரித்து.... ஒரு குழுவில் சிறப்பாக ஆட தெரிந்தவர்கள் மற்றும் ஆட தெரியாதவர்கள் இன்று சரிசமமாக தனித்தனியாக சிறு சிறு குழுக்களாக பிரித்தான்.
முதலில் நன்கு ஆட தெரிந்தவர்களை தனியாக அழைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து விட்டு, பின் அவர்களை வைத்து ஆட தெரியாதவர்களுக்கு தனி தனியாக பயிற்சி கொடுக்கலாம் என்று ரவியுடன் இணைந்து திட்டம் போட்டு மாணவர்களை பிரித்து அவர்களுக்கு ஏற்ற படி இருவரும் பயிற்சி கொடுத்தனர்.
இப்படியே ஒவ்வொரு பேட்ச் மாணவர்களையும் அவர்களுடைய திறமைக்கு ஏற்ற படி சிறு சிறு குழுக்களாக பிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இப்படியே அடுத்து அடுத்து வரும் பீரியட்-களிலும் மாணவர்களை குழுக்களாக பிரிப்பதையே வேலையாக செய்து கொண்டு இருந்தனர்.
லாவண்யா ஒரு வகுப்பு அறையில் இருந்து வெளியே வந்தாள். லாவண்யாவும் ஷலினியை போல் ஒரு அசோசியேட் டீச்சர் ஆக தான் அங்கே பணியாற்றி கொண்டு இருக்கிறாள். அவள் அடுத்து எந்த கிளாஸ்-க்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய டைம் டேபிலை பார்த்து கன்ஃபார்ம் செய்து விட்டு அங்கே சென்றாள்.
அவள் வெகு தூரத்தில் இருந்த வகுப்பு அறையில் இருந்து வந்ததால் அவளால் சரியான நேரத்திற்கு அவள் செல்ல முடியவில்லை. அவளுக்கு லேட் ஆகிவிட்டதால் வேகமாக மூச்சு வாங்க அந்த வகுப்பறைக்குள் வந்தாள் லாவண்யா.
அப்போது வகுப்பு அறையில் இருந்த மர டேபிளிலின் முன் சாய்ந்து நின்ற படி மாணவர்களுடன் சுவாரஸ்யமாக சரளமான ஆங்கிலத்தில் எதையோ பேசி கொண்டு இருந்தான் விஷ்ணு. முதல் முறை ஒருவன் வானத்தில் பறக்கும் ஏரோபிளேன் ஐ வாயை பிளந்து கொண்டு பார்ப்பது போல் விஷ்ணுவை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் லாவண்யா.
விஷ்ணு அங்கே பேசி கொண்டு இருக்கும் காட்சி ஏதோ சினிமாவில் வரும் ஒரு சீன் போல் அவளுக்கு தோன்றியது. சிலை என சமைந்தவள், விஷ்ணுவின் மீது இருந்து தன்னுடைய பார்வையை விலக்காமல் இருந்தாள் லாவண்யா.
"இப்படியே எவ்வளவு நேரம் நின்னுட்டு இருப்பீங்க லாவண்யா...?" என்ற குரல் அவளின் பின்னே இருந்து கேட்டது. அந்த கணீர் குரல் அவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வருவதற்கு போதுமானதாக இருந்தது.
அதிர்ச்சியுடன் பின்னே திரும்பி பார்த்தாள் லாவண்யா. அங்கே பிரின்சிபால் சாரதா நின்று கொண்டு இருந்தாள்.
லாவண்யா: "இவங்க இப்படி ரவுண்ட்ஸ் வர்ற டைம்-ல தான் நான் கரெக்டா மாட்டனும் ஆ...?" 😒 என்று தன் மனதிற்குள் நினைத்தவள், வரவழைக்க பட்ட புன்னகையுடன் சாரதாவை பார்த்து... "குட் ஈவினிங் மேம்" என்றாள். 😁
சாரதா: "கிளாஸ்-க்கு வந்ததே லேட். இதுல உள்ள போகாம இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" 🤨
லாவண்யா: "இல்லை-ங்க மாம். சார் ரொம்ப இன்ட்ரஸ்டா ஸ்டூடன்ட்ஸ் கிட்ட பேசிட்டு இருந்தாரு. அதான் டிஸ்டர்ப் பண்ண மனசு இல்லாம அப்படியே நின்னுட்டேன்" என்று சொல்லி சமாளித்தாள்.
சாரதா: "அதுக்கு நீங்க உங்க வேலைய பாக்க மாட்டீங்களா...?"
லாவண்யா: அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதனால் "சாரி மேடம்" என்றாள்.
அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டு இருந்த விஷ்ணு, சாரதாவை பார்த்து.... "பரவால்ல விடுங்க மேடம்" என்றான்.
விஷ்ணுவே இப்படி சொல்லி விட்டதால் சாரதாவுக்கு மேலும் எதையும் பேச தைரியம் இல்லை. அதனால் லாவண்யாவை பார்த்தவள், "இனி மேல் இப்படி கேர்லெஸ் ஆ இருக்காதிங்க." என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
லாவண்யா: "தேங்க் யூ சார்" 😍 என்று விஷ்ணுவை பார்த்து... தன் மனதார சொன்னாள்.
விஷ்ணு: "இட்ஸ் ஓகே நீங்க உங்க வொர்க் பாருங்க." என்று புன்னகைத்த படி சொன்னான். 😁
எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் விஷ்ணுவின் முகம் லாவண்யாவிற்கு மிகவும் பிடித்தது. லாவண்யாவை போல் அசிஸ்டன்ட் ஆக வரும் ஆசிரியர்களை மெயின் சப்ஜெக்ட் ஹாண்டில் செய்யும் ஆசிரியர்கள் பொதுவாகவே மதிப்பதில்லை.
அதனால் இன்று அவளுக்காக முதன் முறை ஒருவன் பேசி இருப்பது அவளுடைய மனதில் விஷ்ணுவின் மேல் பெரிய மரியாதையை வரவைத்தது. அவள் தன் முன்னே இருப்பவனின் பெயரை கூட அறிந்து இருக்கவில்லை.
ஆனால் அவனை முன்னே பார்த்த கௌதம் உடன் ஒப்பிட்டு பார்த்தாள்.
ஸ்டைலாக இருக்கும் கௌதம் ஐ விட தன்மையாக அனைவரிடத்திலும் நடந்து கொள்ளும் விஷ்ணு அவளுடைய மனதில் உயர்ந்தவன் ஆனான்.
லாஸ்ட் பென்ச் இன் அருகே சென்று நின்று கொண்ட லாவண்யா, மாணவர்களை கவனிக்காமல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த விஷ்ணுவை தான் கவனித்து கொண்டு இருந்தாள். இதை பற்றி அறிந்திராத விஷ்ணு கடமையே கண்ணாக பாடம் நடத்தி கொண்டு இருந்தான்.
டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில்..
இடைவிடாமல் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டு இருந்ததால் ரித்திகா சோர்வாக இருந்தாள். அதை கவனித்த கௌதம் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் அவள் அருகே சென்று அவளை அழைத்தான்.
கௌதம்: "இந்தா தண்ணி குடி." என்று அவர் முன் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
ரித்திகா: திடீரென்று அவன் தண்ணீரை கொண்டு வந்து நீட்டுவதை கேள்வியாக பார்த்தாள். 🙄
கௌதம்: "என்ன பாக்கிற...? 🤨 மயக்கம் போட்டு விழுந்துடாத தண்ணி குடி." என்று அக்கறையாக சொன்னான்.
ரித்திகா: "தேங்க்ஸ்" என்றவள், அவன் சொல்லும் விதம் ஒரு மாதிரி இருந்தாலும் அதிலிருந்த அக்கறையை புரிந்து கொண்டதால் அவன் கொடுத்த பாட்டிலை வாங்கி தண்ணீர் குடித்து விட்டு அதை திருப்பி அவனிடமே கொடுத்தாள்.
ரித்திகா ஆடுவதை பார்க்க விரும்பிய கௌதம், அவளை அவளுக்கு பிடித்த ஏதாவது ஒரு பாடலை ப்ளே செய்து ஆட சொன்னான்.
ரித்திகா-க்கு பல விதமான நடனங்கள் தெரியும் என்றாலும் அவள் சிறு வயதில் முதலில் பரத நாட்டியம் தான் கற்று கொண்டாள். அதனால் எப்போதுமே அவள் மனதிற்கு பிடித்த நடனமாக பரத நாட்டியம் தான் இருந்தது.
ரித்திகா அங்கு இருந்த டேப் ரெக்கார்டரில் பரத நாட்டியம் ஆடுவதற்கு ஏதுவாக அவளுக்கு பிடித்த பாடல்களில் ஒன்றை தேர்ந்து எடுத்து ப்ளே செய்தாள். அந்த ஹால் முழுவதும் பொருத்த பட்டு இருந்த பெரிய ஸ்பீக்கர்களின் உதவியால் அவள் ப்லே செய்த பாடல் அந்த ஹால் முழுவதும் எதிரொலித்தது.
தான் அணிந்து இருந்த சுடிதார் உடைய சாலை நடனமாடுவதற்கு ஏதுவாக கட்டிய ரித்திகா ஆட தொடங்கினாள். அது ராதா மற்றும் கிருஷ்ணருக்கு இடையிலான காதலை வெளி படுத்தும் வகையிலான தெய்வீக பாடல். கர்நாட்டிக் இசையில் அந்த பாடலை கேட்பதற்கு மனதை உருக்கும் படி இருந்தது.
அந்த பாடலை ப்ளே செய்வதற்கு முன்பு வரை சக்தியை இழந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்த ரித்திகா, அந்த பாடல் ப்ளே செய்ய பட்டவுடன் ஏதோ புது சக்தி கிடைத்தவள் போல் தன்னுடைய பாதம் நிலத்தில் படாத அளவிற்கு மயில் போல் அந்த இசையில் தன்னை துளைத்து மெய் மறந்து ஆடினாள்.
அவள் ஆடுவது அழகு என்றால்... போனி டெயில் போட பட்டு இருந்த அவளுடைய கூந்தல் எந்த பயிற்சியும் இன்றி அவளுடைய அசைவிற்கு ஏற்ப தானாக ஆடியது. அவள் ஆடுவதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் கௌதம்.
அதுவரை பெண் பாடகர் பாடிய வரிகள் ஓடி கொண்டு இருந்தது. அது முடிந்து ஆண் பாடகர் பாடும் வரி தொடங்கியது. அப்போதும் ரித்திகா ஆடி கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவள் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் அமர்ந்து இருந்த கௌதம், எழுந்து வந்து அவளுடன் இணைந்து அந்த பாடலுக்கு ஏற்ப சிறிதும் பிசிறு தட்டாமல் அவளுக்கு சரிக்கு சரியாக பரத நாட்டியம் ஆடினான்.
அது ரித்திகாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் ஸ்டைலாக இருந்ததால் அவனுக்கு மேல் நாட்டு நடனங்கள் மட்டும் தான் தெரியும் என்று அவள் நினைத்து இருந்தாள். ஆனால் அவன் இவ்வளவு கச்சிதமாக பரத நாட்டியம் ஆடுவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.
கௌதம் இன் அளவிற்கு ரித்திகா-க்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாமல் இருந்தாலும் இருவருடைய நடனமும் நேர்த்தியாகவே இருந்தது. அங்கு இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவர்கள் இருவரும் இணைந்து ஆடுவதை ரசித்து பார்த்தனர்.
அந்த பாடல் முடியும் நேரத்தில் பைனல் டச் ஆக இருவரும் சேர்ந்து ஒரு போஸ் கொடுத்தனர். அப்படியே அந்த பாடல் முடிய அந்த பெரிய ஹால் முழுவதும் நீண்ட கை தட்டல்களின் ஓசையால் நிறைந்து இரு
ந்தது. அதை பார்த்த ரித்திகாவும், கௌதமும் திருப்தியாக புன்னகைத்தனர். 😁 😁
-நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.