தாபம் 18

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 18: ஜான்வியின் பிறந்த நாள்
சித்தார்த்தின் பள்ளியில்…

உணவு இடைவேளை…


விஷ்ணு அவனுடைய வீட்டில் இருந்து சாதாரணமான லஞ்ச் பாக்சில் சாப்பாடு கொண்டு வர சொல்லி; அதை எடுத்து கொண்டு பொதுவாக ஆசிரியர்கள் இருக்கும் ஸ்டாப் ரூமிற்கு சென்று அவர்களோடு அமர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்து சென்றான்.
ஷாலினியும் அங்கே தான் அமர்ந்து சாப்பிடுவாள் என்று அவன் கணக்கு போட்டு விட்டு அங்கே வந்து அமர... அங்கேயோ ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும், வேறு வேறு அறையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். வேறு வழி இன்றி ஆண்களோடு அமர்ந்து சாப்பிட்டான் விஷ்ணு.


ரித்திகா, சித்தார்த்தை பார்ப்பதற்காக சென்றாள். அவள் சொன்ன படியே சித்தார்த் அவனுக்கு என்று ஒரே ஒரு லஞ்ச் பாக்ஸ் மட்டும் கொண்டு வந்திருந்ததால், மகிழ்ச்சி அடைந்த ரித்திகா... அவனை பாராட்டினாள். பின் அவளும் சித்தார்த்துடன் இணைந்து உணவு உண்டாள்.
நாராயணன் குரூப்ஸ் அலுவலக கட்டிடத்தில்...
விஷ்ணுவும், ஹரியும், ஒரு முக்கியமான மீட்டிங் ஐ முடித்து விட்டு லன்ச்க்காக அவரவர்களுடைய ஆபீஸ் ரூமிற்கு சென்று விட்டனர்.


வருண் அலுவலக அறையில்....


கடுமையான முகத்துடன் தன்னுடைய சீட்டில் வந்து அமர்ந்தான் வருண். அவனுக்கு அவனுடைய தலை வெடித்து விடும் அளவிற்கு தலை வலித்து கொண்டு இருந்தது. தன்னுடைய தலையை பின்னால் சாய்த்து சீலிங்கை பார்த்த படி அமர்ந்து அவன் அவனுடைய ஒரு கையால் அவனுடைய தலையை பிடித்து விட்டு கொண்டு இருந்தான்.

அப்போது அந்த அலுவலக அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் அவனுடைய மேனேஜர் சிவா.

சிவா: வருண்டின் நிலையை பார்த்து மனதிற்குள் வருத்த பட்டவன் அவனை பார்த்து, "ஆர் யூ ஓகே சார்... ?" என்றான்.

வருண்: "நான் உன் கிட்ட சொன்ன வேலை என்ன ஆச்சு?" என்று தன்னுடைய முகத்தை கடுமையாக வைத்து கொண்டே கேட்டான்.

சிவா: "அதெல்லாம் நான் மார்னிங் ஏ முடிச்சிட்டேன் சார். மீட்டிங் முடிச்சதுக்கு அப்புறம் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்." என்றான்.

வருண்: "நாளைக்கு எந்த மிஸ்டேக்ஸும் நடக்க கூடாது. நீயே முன்னாடி இருந்து எல்லாத்தையும் பாத்துக்கோ."

சிவா: "ஒகே சார்." சேர்ந்தவன் அங்கு இருந்து சென்று விட்டான்.

சிவா அங்கு இருந்து சென்ற உடன் வருண் தன்னுடைய பர்சனல் லேப் டாப்பை ஆன் செய்தான். அந்த லேப்டாப் ஸ்க்ரீனில் ஒரு புகைப்படம் லாக் ஸ்கிரீனில் இருந்தது. அந்த புகைப்படத்தில்... ஜான்வி ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்க... 🤰 முகம் நிறைய மகிழ்ச்சி கலந்த புன்னகையுடன் 🥰 😁 வருண்டின் தோளில் சாய்ந்த படி நின்று கொண்டு இருந்தாள்.

வருண் மூன்று வயதான சித்தார்த்தை தன்னுடைய கையில் தூக்கி வைத்து கொண்டு அழகாக சிரித்து கொண்டு இருந்தான். 😁 😁 அது ஒரு அழகான குடும்ப புகைப்படம் ஆக இருந்தது. அதை வலி நிறைந்த கண்களுடன் உற்று பார்த்து கொண்டு இருந்தான் வருண்.


அவனை அறியாமலேயே அவனுடைய கண்ணில் இருந்து கண்ணீர் சிந்தியது. 😥 அந்த புகைப்படம் இரண்டு வருடத்திற்கு முன்பு... ஜான்வியின் பிறந்த நாள் அன்று எடுக்க பட்டது. அந்த புகைப்படத்தை பார்க்கும் போது வருண்டிக்கு அவை அனைத்தும் நேற்று தான் நடந்தது போல் இருந்தது.

அன்று நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் நினைவுகளாக அவனுடைய நெஞ்சில் நீங்காமல் நீக்கமற நிறைந்து இருந்தது.
அன்று அவன் முன்னே நிஜமாக இருந்தவள், இன்று கனவாகவும்… புகைப்படமாகவும்... தான் அவன் கண் முன் இருக்கிறாள்.

அதை நினைக்கும் போதே நெஞ்சில் ஒரு கூர்மையான வலியை உணர்ந்தான் வருண். 💔 ஜான்வியை நினைத்து பார்க்கையில்... அவனால் சித்தார்த்தை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஜானகியின் இறப்பிற்கு முன் வரை சித்தார்த்தின் பிடித்தமான, அன்பான தந்தையாக இருந்தான் வருண். 😍❤️

அப்போது எல்லாம் வருண் தான் சித்தார்த் உடைய சூப்பர் ஹீரோவாக இருந்தான். வருண் வால் எது வேண்டுமானாலும் முடியும் என்று அவன் நம்பி கொண்டு இருந்தான்.


ஜான்வியின் இழப்பு வருண்டின் வாழ்க்கையை மட்டும் அல்ல... வருண்டிருக்கும், சித்தார்த்துக்கும், இடையிலுள்ள உறவையும் சிதைத்து விட்டது. இப்போது இருக்கும் சித்தார்த் பொதுவாகவே பயந்தவன் ஆக இருப்பதால்... அவன் வருண்டை கண்டால்... இன்னும் பயந்து அவனை விட்டு ஒதுங்கி விடுகிறான். 😕


சித்தார்த்தை பொருத்த வரை, அவனுடைய அம்மா இப்போது அவனுடன் இல்லாமல் இருப்பதற்கு வருண் தான் காரணம். அவனுடைய சூப்பர் ஹீரோ அப்பா ஏன் அவனுடைய அம்மாவை காப்பாற்றவில்லை... ? என்ற கேள்வி... அந்த குழந்தையின் மணதில் ஏமாற்றமாக மாறி... பின் வருண்டின் மீது வெறுப்பாகவும், பயமாகவும், மாறிவிட்டது.


நாளை தான் ஜான்வியின் பிறந்த நாள் என்பதால்.. அதை நினைத்தவன், ஜான்வியுடனும், குடும்பமாக அவன் சித்தார்த்துடனும் செலவிட்ட ஒவ்வொரு தருணங்களையும் நினைத்து, நினைத்து பார்த்து வேதனையில் உழன்று கொண்டு இருந்தான் வருண்.


ஹரியின் ஆபீஸ் ரூமில்....


பரபரப்பாக அவனுடைய சிஸ்டம் இல் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான் ஹரி. அப்போது ஆபீஸ் ரிசப்ஷன் இல் இருந்து அவனுக்கு ஒரு கால் வந்தது.


ரிசப்ஷனிஸ்ட்: "சார் உங்கள பாக்குறதுக்கு ஒரு பொண்ணு வந்து இருக்காங்க. அவங்க கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இல்ல. நீங்க பிசியா இருக்கீங்க அப்பாயின்மென்ட் வாங்காம உங்கள பாக்க முடியாதுன்னு எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் சார். ஆனா அந்த பொண்ணு கேட்கிற மாதிரி தெரியல. உங்கள பாக்காம இங்க இருந்து போக மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டே இருக்காங்க." என்று அவனுக்கு இன்பர்மேஷன் கொடுத்தாள்.


ஹரி: "யார் அது? அவங்க பேரை சொல்லலையா?" என்று ஒரு பக்கம் ரிசீவரை காதில் வைத்து கொண்டு... இன்னொரு பக்கம் சிஸ்டம் இல் ஏதோ டைப் செய்தபடி பேசினான்.


ரிசப்ஷனிஸ்ட்: "சார் அவங்க பேரு ஆராதனான்னு சொல்றாங்க. உங்களுக்கு அவங்களை நல்லா தெரியும்னு சொன்னாங்க. உங்களுக்கு அவங்களை தெரியுமா சார்? நான் உங்க ரூம் -க்கு அனுப்பி வேக்கட்டா.... ?" என்று கேட்க,

ஹரி: "ஆராதனா" என்ற பெயரை அவன் கேட்ட உடனே அவனுடைய விரல்கள் டைப் செய்வதை நிறுத்தி விட்டது.

அவசரமான குரலில்... "ஆராதனான்னு எனக்கு யாரையும் தெரியாது. நான் இம்பார்டன்ட் ஆன மீட்டிங்ல இருக்கேன்ன்னு சொல்லி அவங்களை அனுப்பிருங்க." என்று தன் இதயத்தை கல்லாக்கி கொண்டு சொன்னான்.‌


ரிசப்ஷனிஸ்ட்: "ஓகே சார்... !!" என்றவள், கால் ஐ கட் செய்ய போனாள்.

ஹரி: "ஒரு நிமிஷம்... அவங்கள ஹுர்ட் பண்ணாம வெளியில அனுப்பிடுங்க" என்று வலி நிறைந்த குரலில் சொன்னான். 😞

ரிசப்ஷனிஸ்ட்: அந்த ரிசப்ஷனிஸ்ட்க்கு ஏதோ ஏதோ புரிவது போல் இருந்தது. அதனால் இனி எப்போதும் அந்த புதிய பெண்ணை மரியாதை குறைவாக நடத்த கூடாது என்று தன்னுடைய மனதிற்குள் குறிப்பு எடுத்து வைத்து கொண்டாள்.

"ஒகே சார்." என்றவள்; கால் ஐ கட் செய்து விட்டு, ஆராதனா விடம் ஏதேதோ சொல்லி அவளை சமாதான படுத்தி வெளியே அனுப்பி விட்டாள்.


ஆராதனாவும் ஏதேதோ விதத்தில் ஹரியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிராகரிப்பு அவளுக்கு வழக்கமாக நடப்பது தான் என்றாலும் அவளுடைய மனதில் ஆழமான ஒரு வலியை உணர்ந்தாள். 💔 😥


அவள் கண்களில் இருந்து வழிந்த நீரை யாருக்கும் தெரியாமல் துடைத்த படி அங்கு இருந்து கனத்த இதயத்துடன் வெளியே சென்றாள் ஆராதனா. 😥 💔 அவள் அங்கு இருந்து செல்லும் வரை நடந்த அனைத்தையும் சி சி.டிவி. கேமரா வழியாக நேரடியாக பார்த்து கொண்டு இருந்தான் ஹரி.


ஹரியின் மனம் வெறுமையாக இருந்தது. அவளை ஒரு ஒரு முறையும் நிராகரிக்கும் போதும் அவள் அடையும் வேதனையை விட அதிகமான வலியையும், வேதனையும், உணர்வது ஹரி தான். அவனுக்கு இது வேதனையாக இருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் அதை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவன் இருப்பதால் தினந்தோரும் அதை செய்து கொண்டு இருக்கிறான். 😕 ❤️ 😥


சிறுது நேரம் ஆராதனா பற்றி யோசித்து கொண்டு இருந்த ஹரி, பின் இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்தவன்; மீண்டும் அவனுடைய வேலைகளைப் பார்க்க தொடங்கி விட்டான்.


சித்தார்த்தின் பள்ளியில்....


ஆண் ஆசிரியர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் விஷ்ணு. அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசிய படியே சாப்பிட்டு கொண்டு இருந்தனர். வந்து அமர்ந்த பத்தாவது நிமிடத்திலேயே அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி விட்டான் விஷ்ணு. என்ன தான் அவன் அனைவரிடமும் சகஜமாக பேசி கொண்டு இருந்தாலும் மனதிற்குள் ஷாலினியை எப்போது பார்ப்போம் என்று ஆவலாகவும், தவிப்புடனும் இருந்தான்.


சித்தார்த்துடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து விட்ட ரித்திகா, ஸ்டாப் ரூமிற்கு வந்தாள். அவள் அங்கே வரும் போது அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு கதை அலந்து கொண்டு இருந்தனர்.


அங்கே ஷாலினி இன்னும் இரண்டு இளம் வயது பெண்களுடனும், லாவண்யா உடனும், இணைந்து சிரித்து சிரித்து எதையோ பேசி கொண்டு இருந்தாள். அதை பார்த்த ரித்திகா அவள் அருகே சென்றாள்.


ஷாலினி: ரித்திகாவை பார்த்தவள், "என்ன அக்கா இன்னைக்கும் நீங்க உங்களேட ஃப்ரண்ட் கூட சேர்ந்து சாப்பிட்டு இருப்பீங்க போல.... 😁😁😁" என்று கிண்டலாக கேட்க,

ரித்திகா: "ஆமா நீங்களா சாப்பிட்டீங்களா?" என்று அக்கறையுடன் விசாரித்தாள்.

ஷாலினி: "சாப்பிட்டோம் அக்கா."

ரித்திகா: "நான் வரதுக்கு முன்னாடி எல்லாரும் ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க என்ன விஷயம்...?" என்று ஆர்வமாக கேட்க,

லாவண்யா: "அது வந்து அக்கா..." என்று எதையோ செல்ல தயங்கினாள்.

ஷாலினி: "சொல்லாத சும்மா இரு" என்று மெல்லிய குரலில் சொன்னவள், லாவண்யாவின் கையில் லேசாக கிள்ளி வைத்து விட்டாள்.


லாவண்யா நிஜமாகவே அவளுக்கு வழித்து விட்டதை போல் நடித்த அவள் லேசாக அலறினாள்.


இவர்கள் இப்படி விளையாடி கொண்டு இருக்க அதற்குள் முந்தி கொண்ட அங்கு இருந்த இன்னொரு பெண், "அது ஒன்னும் இல்ல அக்கா... இன்னைக்கு ஒரு செம சீன் நடந்து இருக்கு. அத பத்தி தான் பேசிட்டு இருந்தோம்." என்றாள்‌.

ரித்திகா: "பர்ரா... ஏதோ இன்ட்ரஸ்டிங்கா நடந்து இருக்கும் போல... என்னான்னு சொல்லுங்க."
ஷாலினி வேண்டாம் என்று அனைவருக்கும் சைகை காட்டினார் ஆனால் அதை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை, லாவண்யாவே பேச தொடங்கினாள்.

லாவண்யா: இன்று காலை ஷாலினியும், விஷ்ணுவும், சந்தித்து கொண்டதில் இருந்து அவர்கள் பேசி கொண்டது வரை அனைத்தையும் தெளிவாக சொன்னாள்.

ரித்திகா: "இப்படி எல்லாம் சினிமால மட்டும் தான் நடக்கும்ன்னு நினைச்சேன். நிஜத்துல கூட நடக்குதா?" 🙄 என்று ஆச்சரியமாக கேட்டாள்.


லாவண்யா: "எங்களுக்கும் அதே ஆச்சரியம் தான். என்ன அந்த காட்சிய இன்னும் நேர்ல பாத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.." என்று ஆர்வமுடன் சொன்னாள்.


ஷாலினி: "ஆமா அப்பத்தானே இன்னும் உங்களுக்கு என்ன ஓட்டுறதுக்கு ஈசியா இருக்கும்... 😒"

ரித்திகாவும் அங்கு இருந்த அனைவரும் ஷலினியை கிண்டல் செய்து சிரித்தனர். அப்போது அங்கு இருந்த பெண்களில் ஒருத்தி ரித்திகாவை பார்த்து, "அக்கா நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா.... ?" என்று கேட்டாள்.

ரித்திகா: "இல்லையே... 🤷‍♀️"

லாவண்யா: "நிஜமாவே ஒரு தடவை கூட பண்ணது இல்லையா?"

ரித்திகா: "நோ."

ஷாலினி: "அப்போ உங்களுக்கு யார் மேலே ஒரு கிரேஷ் கூட வரலையா?"

ரித்திகா: "வரலையே.... 🤷‍♀️"

ஷாலினி: "ஏன் அக்கா...?"

ரித்திகா: "இதெல்லாம் பண்ணனும்னா முதல்ல அத எப்படி பண்ணனும்னு நமக்கு தெரியணும். எனக்கு தான் அது தெரியாதே..." என்று அப்பாவியாக சொன்னாள்.


ஷாலினி: "என்ன அக்கா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க... 🙄"

லாவண்யா: "இந்த காலத்துல யாராவது லவ் பண்ண தெரியாது -ன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு? சும்மா நாங்க கேக்கிறோம்ன்னு அடிச்சு விடாதீங்க அக்கா." என்றாள் அவளை நம்பாமல்.


ரித்திகா: "பிலிங்ஸ் அண்ட் ஏமோஷன்ஸ் எல்லாமே நம்ப எக்ஸ்பீரியன்ஸ் பண்ணா மட்டும் தான் நம்ம அத பத்தி புரிஞ்சுக்க முடியும். நான் அப்படி எதையும் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணவே இல்ல. நிறைய பேர் லவ் இதுதான் அப்படின்னு அவங்களுக்கு தோன்றது எல்லாம் சொல்லுவாங்க.
அது எல்லாமே உண்மையாவே இருந்தாலும் அது உண்மை தான் என்று நம்ப அனுபவிச்சு பாக்காம எப்படி தெரியும். அதான் சொல்றேன் எனக்கு லவ்ன்னா என்னானும் தெரியாது. அதை எப்படி பண்ணனும்ன்னும் தெரியாது." என்றாள்.


ஷாலினி: "அட போங்க அக்கா நீங்க இன்னும் வளரவே இல்ல."

ரித்திகா: "ஆமா நான் இன்னும் வளரல. நீ தான் வளந்துட்டியே... நீ சொல்லு... இன்னைக்கு பாத்த அந்த பையன் அ உனக்கு அந்த பிடிச்சிருக்கா?"

ஷாலினி எதுவும் பேசாமல் வெட்க பட்டாள். ☺️

ரித்திகா: "உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்ப சொல்லு... 😂" என்று நக்கலாக கேட்டாள்.

ஷாலினி பதில் சொல்ல வருவதற்குள் அங்கிருந்த இன்னொரு பெண் முந்தி கொண்டு, "அவளுக்கு தான் ஆள் இருக்கே... இந்த பையனை அவ ஏன் பாக்க போறா...?" என்றாள்.

அந்த பெண் சட்டென்று அப்படி சொன்னவுடன் ஷாலினியின் முகம் மாறிவிட்டது. அதை லாவண்யாவும், ரித்திகாவும், கவனிக்க தான் செய்தனர்.

லாவண்யா உடனே அந்த பெண்ணை பார்த்து, "தேவை இல்லாம இப்ப எதுக்கு பேசுற... ?" என்று அவளை அதட்டினான்.

லாவண்யா ஏன் அப்படி சொல்கிறாள் என்று புரிந்து கொண்ட அந்த பெண் அமைதியாகி விட்டாள். ஷாலினிக்கு என்ன பிரச்சனை என பிறகு பொறுமையாக அவளிடம் விசாரித்து கொள்ளலாம் என்று நினைத்த ரித்திகா, மேலும் எதுவும் கேட்டு அவளை சங்கட படுத்த வில்லை.


லஞ்ச் பீரியட் முடிய போகும் சமயம் வந்து விட்டதால்... அனைவரும் அவர்கள் அடுத்து செல்ல போகும் வகுப்பிற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.


ரித்திகா அடுத்து நடன பயிற்சி வகுப்பிற்கு செல்ல வேண்டி இருந்ததால்... அவளுக்கு தேவையான சலங்கை போன்ற பொருட்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.

அப்போது "ரித்திகா... ரித்திகா..." என்று அழைத்தபடி பெண்களுக்கான அந்த ஸ்டாப் ரூமிற்க்குள் ஒரு ஸ்டைலான, அழகான, இளம் வயது இளைஞன் உள்ளே வந்து கொண்டு இருந்தான்.

முதல் பார்வையிலேயே அனைவரையும் அவன் பக்கம் இழுத்துவிடும் அளவிற்கு அவன் வசீகரமான தோற்றத்துடன் இருந்தான்.


லாவண்யா தான் முதலில் அவன் ரித்திகாவின் பெயரை ஏலம் விட்டுக் கொண்டு உள்ளே வருவதை கவனித்தாள்.


லாவண்யா: அந்த இளைஞனின் அருகில் சென்றவள், "நீங்க ரித்திகா அக்காவ தேடுறீங்களா... ?" என்றாள்.


அந்த இளைஞன்: "என்னாது ரித்திகா அக்காவா... 🙄 அப்ப ஏதோ ஒரு வயசான ஆள நம்ம தலையில கட்டிட்டாங்க போலவே..." 😕 என்று தன் மனதுக்குள் நினைத்தவன்; "ஆமா அவங்கள தான் தேடுறேன்" என்றான்.

லாவண்யா: "இருங்க நான் அவங்கள வர சொல்றேன்." என்று சொன்னவள், ரித்திகாவை அழைத்து வர சென்று விட்டாள்.


அந்த இளைஞன்: "தேங்க்ஸ்" என்றவன், அழகாக புன்னகைத்தான். 😁 😁
லாவண்யா: அந்த இளைஞன் அவளை பார்த்து புன்னகைத்ததால் வைக்கப்பட்டு கொண்டே அங்கு இருந்து சென்றாள். ☺️


நேராக ரித்திகாவை தேடி அவள் அருகே சென்றவள், அவளிடம் எதுவும் சொல்லாமல்... அவளுடைய கையை பிடித்து வேகமாக இழுத்து கொண்டு வந்தாள்.

ரித்திகா: "அடியே இவ்ளோ வேகமா எங்க கூட்டிட்டு போற?" 🙄 என்று குழப்பத்துடன் கேட்டாள்.


லாவண்யா: "அட சீக்கிரம் வாங்க அக்கா. அங்க வந்து பாத்தா உங்களுக்கே தெரியும்." என்றாள், ரித்திகாவின் கையைப் பிடித்த படி வேகமாக நடந்தாள்.


வேற வழி எதுவும் இல்லாததால், ரித்திகாவையும் லாவண்யாவின் பின்னே சென்றாள். சிறிது தூரம் ரித்திகாவை அழைத்து வந்தவள், அங்கு இருந்து ஒரு இளைஞனை கை காட்டி... "அவர் தான் உங்களை தேடிட்டு இருந்தாரு அக்கா. அதனால தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்." என்றாள் லாவண்யா.

லாவண்யா காட்டிய திசையில் திரும்பி பார்த்தாள் ரித்திகா, அங்கே ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டு இருந்தான். அந்த இளைஞனை சில நொடி குறு குறுவென்று
பார்த்த ரித்திகாவுக்கு அவனை எங்கும் இது வரை கண்டதாக நினைவில்லை என்றாலும்... ஏதோ அவனுடன் வெகு காலம் பழகியது போல் ஒரு உணர்வு தோன்றியது.

-நேசம் தொடரும்....

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.