தாபம் 15

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 15: எங்கேயோ பார்த்த மயக்கம்... 😍

நாராயணன் பேலஸுல்…


அனைவரும் இரவு உணவு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். "இனி நான் ஸ்கூல்-க்கு அடிக்கடி சென்று அதை பராமரிக்கிறேன்" என்று வருண்டமும், செண்பகத்திடமும், கூறினான் விஷ்ணு. வருண் வரும் வழியில் ரித்திகா ஆட்டோகாரரிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்ததை பற்றி செண்பகத்திடம் சொல்லி அவளை தவறானவள் என்று நிரூபிக்க முயற்சித்துக்கொண்டு இருந்தான்.


அதை கேட்ட செண்பகம், வருண் வாயை அடைக்கும்படி, "நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டங்களை பற்றி நமக்கு தெரியாத போது அதை பற்றி குறை கூறுவது சரியில்லை" என்று வருண்ற்கு அறிவுரை சொன்னார். பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து அவரவர் அறைக்கு கிளம்பினர்.


ஹரியின் அறையில்...
தன்னுடைய லேப் டாப்பில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டு இருந்தான் ஹரி. அப்போது அவனுடைய அறைக்கு கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் வருண். பின் இருவரும் வேலை சம்பந்தமாக அவர்கள் புதிதாக துவங்க இருக்கும் காஸ்மெட்டிக்ஸ் கம்பெனி பற்றி பேசினார்கள். அவன் ஹரியிடம் பேச நினைத்ததை எல்லாம் பேசி விட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டான் வருண்.


வருண் அங்கு இருந்து சென்றதும், தன்னுடைய லேப் டாப்பை மூடி வைத்து விட்டு அவனுடைய பெட்டில் சாய்ந்தபடி அமர்ந்த ஹரி, சீலிங்கை உற்று பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மொபைல் போனில் இருந்து மெசேஜ் வந்து இருபதற்கான நோட்டிபிகேஷன் சவுண்ட் கேட்டது.


சலிப்பாக தன்னுடைய மொபைலை எடுத்த ஹரி, வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தான். அதில் "குட் நைட் பேபி" என்று ஒரு மெசேஜ் வந்து இருந்தது. அந்த மொபைல் நம்பர் காண்டாக்டில் டார்ச்ர் என்று சேவ் செய்யப்பட்டு இருந்தது. அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் டிபி-யை திறந்து பார்த்தான் ஹரி. அதில் ஒரு அழகான இளம் பெண் வெள்ளை ஆடையில் தேவதை போல் சிரித்தபடி தோட்டத்தில் நிற்பது போல் ஒரு போட்டோ இருந்தது.


அதை சில நிமிடம் வெறித்து பார்த்த ஹரி, வழக்கம் போல் இன்றும் அந்த மெசேஜ்க்கு ரிப்ளை செய்ய மனம் இல்லாத ஹரி, போனை ஆப் செய்து ஒரு மூலையில் தூக்கிப் போட்டவன்; அவனுடைய அறையில் இருந்து வெளியே வந்து நேராக மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.
சில நிமிடம் அங்கு வானத்தில் இருந்த நிலாவை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தவன், அவனுடைய பாக்கெட்டில் இருந்த சிகரெட்டையும், லைட்டர் ஐயும் எடுத்தவன்; சிகரெட்டை பற்றவைத்து புகை பிடித்துக்கொண்டு இருந்தான்.


காலை பொழுது அழகாக விடிந்தது.
ரித்திகாவின் வீட்டில்...
ரித்திகா தலைக்கு குளித்து முடித்து விட்டு தலையில் துண்டுடன் அவளுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள். அப்போது ரேவதி அவர்களின் வீட்டை வாடகை விடுவது தொடர்பாக வீடு புரோக்கரிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.
ரேவதி: ரித்திகா தலைக்குளித்து விட்டு தலையை துவட்டாமல் துண்டோடு சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்தவள், ரித்திகாவைப் பார்த்து.... "போய் முதல்ல தலைய தொவட்டு இப்படியே சுத்திட்டு இருந்தா உடம்பு சரி இல்லாம போய்டும்" என்று சொல்லி விட்டு மீண்டும் போனில் பேச தொடங்கினாள்.


அந்த அப்பார்ட்மென்ட் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த ரித்திகா அங்கு வெயில் அடித்ததால் அங்கு நின்று தன் தலையை துவட்ட தொடங்கினாள். அவளுடைய நீண்ட சுருள் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டி கொண்டு இருந்தது. அதை அந்த பக்கமும் இந்த பக்கமும் போட்டு மாறி மாறி துடைத்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா.
அந்த நேரத்தில் அங்கே ஒரு இளைஞன் வேர்க்க விருவிருக்க ஜாகிங் செய்து முடித்து விட்டு லிப்டை கூட பயன்படுத்தாமல் வியர்வை சொட்ட சொட்ட அங்கே நடந்து வந்து கொண்டு இருந்தான். அப்போது ரித்திகா தன்னுடைய நீண்ட சுருள் கூந்தலை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் தூக்கிப் போட்டபடி திரும்பினாள்.


அப்போது அந்த இளைஞன் சரியாக அவள் அருகில் வர அவளுடைய கூந்தலில் இருந்து வடிந்த நீர் அவனுடைய முகத்தில் பட்டது. யாரோ தன் மீது வேண்டும்மென்றே தண்ணீர் தெளித்து விளையாடுகிறார்கள் என்று நினைத்து கடுப்பான அந்த இளைஞன் கோபப்பட்டான்.
அந்த இளைஞன்: "யார் அது...? இப்படி தண்ணி தெளிச்சுட்டு இருக்கிறது...?" என்று கடுப்பான குரலில் கேட்டான். 😠


ரித்திகா: அப்போது தான் அங்கு ஒருத்தன் இருப்பதை கவனித்த ரித்திகா, என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டு; அவசரமான குரலில்... "சாரி சார். தெரியாம பட்டுருச்சு." என்று சொன்னாள்.
அந்த இளைஞன்: ரித்திகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் மனதில்....


எங்கேயோ பார்த்த மயக்கம்... 😍
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்... 👩‍❤️‍👨
தேவதை இந்த சாலை ஓரம்...
வருவது என்ன மாயம் மாயம்... 🥰
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும் ....😍🥰
என்ற பாடல் ஓடியது..


முதல் பார்வையிலேயே ரித்திகாவின் மீது ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உணர்ந்தான் அந்த இளைஞன். ரித்திகா மன்னிப்பு கேட்டும் இன்னும் அந்த இளைஞன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க, இன்னும் அவன் கோபமாக இருக்கிறான் என்று நினைத்த ரித்திகா மீண்டும் அவனிடம் பேசினாள்.


ரித்திகா: "சாரி...!!! சார். என் மேல தான் தப்பு. நான் தான் நீங்க வந்ததை கவனிக்கல." என்று மெல்லிய குரலில் பதட்டமாக சொன்னாள்.

அந்த இளைஞன்: "இட்ஸ் ஓகே..!!! எதுக்கு இப்ப இவ்ளோ பெனிக் ஆகுறீங்க ஷில்." என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.

ரித்திகா ஒரு பேண்ட்டும் சாதாரணமான குர்தாவும் தான் அணிந்து இருந்தாள். அவள் இப்போது தான் குளித்து விட்டு வந்து இருந்ததால், அவளுடைய முகத்தில் துளியும் மேக்கப் இல்லை. இருப்பினும் அழகு தேவதையாக மின்னினாள் ரித்திகா.

ரித்திகா: "ஓகே...!!!" என்று சொன்னவள், அங்கு இருந்து தன் வீட்டிற்குள் செல்ல திரும்பினாள்.

அந்த இளைஞன்: "ஒரு நிமிஷம்... நீங்க இங்க தான் தங்கி இருக்கீங்களா...?"

ரித்திகா: "ஆமா...!! ஏன் கேக்கிறீங்க...?"

அந்த இளைஞன்: "நான் உங்களுக்கு பக்கத்து வீடு தான். அதனால தான் கேட்டேன்."

ரித்திகா: "ஓ... ஒகே... ஒகே..."
அந்த இளைஞன்: "உங்க பேரு...?"

ரித்திகா: "ரித்திகா" என்றவள், "நீங்க...?" என்றாள்.

அந்த இளைஞன்: "ஐ அம் சந்தோஷ். நைஸ் டு மீட் யூ" என்றான்.

ரித்திகா: "நைஸ் டு மீட் யு டூ மிஸ்டர் சந்தோஷ். ஐ அம் சாரி எனக்கு லேட் ஆகுது. நான் சீக்கிரம் கிளம்பனும்" என்றாள்.

சந்தோஷ்: "ஒகே யூ கேரி ஆன்."

பின் இருவரும் அவரவர் வீட்டிற்குள் சென்று விட்டனர்.
சுதாகர்: ரித்திகாவைப் பார்த்தவர் "இங்க வந்து உட்காரு" என்று தன் அருகில் இருந்த சோபாவை காண்பித்தார்.

ரித்திகா: "சொல்லுங்க அப்பா."

சுதாகர்: "நான் நேத்தே உன்கிட்ட பேசலாம்ன்னு நினைச்சேன். நீ சாப்பிட்டு உடனே தூங்கீட்ட அதனால பேச முடியல. நேத்து பர்ஸ்ட் டே ஸ்கூல் எப்படி போச்சும்மா...?"

ரித்திகா: "நேத்து ரொம்ப டயர்டா இருந்துச்சு அப்பா. அதனால தான் சாப்பிட்டு உடனே தூங்கிட்டேன். பஸ் டே ஸ்கூல் நல்லா தான் போச்சு."

சுதாகர்: "சரி..ம்மா. கூட வேலை பாக்குறவங்க எல்லாம் நல்ல படியா பேசுறாங்களா...?"

ரித்திகா: "அதுலாம் எல்லாரும் நல்லா தான் பேசுறாங்க. நம்ம ஊர்ல டுயூஷன் எடுக்கும் போது யாழினி-ன்னு ஒரு பாப்பா வருவால ரொம்ப துரு துருன்னு இருப்பாளே..."

சுதாகர்: "ஆமா..ம்மா.. நல்லா படிக்கிற பொண்ணு ஆச்சே..."

ரித்திகா: "அவளை மாதிரியே ஷாலினி ஒரு பொண்ணு... லொட லொட-ன்னு பேசிட்டே இருக்கா. பிரண்ட்லியா பேசுறா. பர்ஸ்ட் டேவே என்கிட்ட ரொம்ப க்ளோஸ் ஆயிட்டா."

சுதாகர்: "யாரும்மா...? ஸ்டூடண்ட் ஆ...?"

ரித்திகா: "இல்ல அப்பா டீச்சர்."

சுதாகர்: "டீச்சர் ஆ..?" 😁

ரித்திகா: "ஆமா...!! அப்பா. டீச்சர் தான் ஆனா குழந்தை மாதிரி பிகேவ் பண்றா."

சுதாகர்: "சிலர்லாம் அப்படி தான்மா. பாக்குறதுக்கு மட்டும் தான் வளர்ந்து இருப்பாங்க. ஆனா குழந்தையாவே இருப்பாங்க. அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க."

ரித்திகா: "அது உண்மை தான் அப்பா" என்றவள், திடீரென ஞாபகம் வந்தவளாய்; "அப்பா நான் ஒரு ஸ்கூட்டி வாங்கலாம்னு இருக்கேன்." என்றாள்.

சுதாகர்: "என்னம்மா திடீர்ன்னு ஸ்கூட்டி?"

ரித்திகா: "இல்ல அப்பா... எப்போ எது வாங்கனும்னாலும் எல்லாமே தூர தூரமா தான் இருக்கு. அதான் ஸ்கூட்டி இருந்தா ஈசியா இருக்கும்ன்னு."

சுதாகர்: "அதுவும் கரெக்டு தான்மா. நமக்கு-ன்னு ஒரு வண்டி இருந்துச்சுன்னா டக்குனு எங்கனாலும் எடுத்துட்டு போகலாம்."

ரித்திகா: "எஸ். ஆட்டோவுக்கு ரொம்ப செலவு ஆகுது. அதுக்கு பெட்ரோல் செலவு பண்ணிட்டு போயிடலாம் அப்பா."

சுதாகர்: "இப்ப திடீர்னு ஸ்கூட்டி வாங்கினாலும் அதிகமாக செலவாகுமேம்மா என்ன பண்றது..?"

ரித்திகா: "இ.எம்.ஐ. போட்டுக்கலா அப்பா ஒன்னும் பிரச்சனை இல்ல."

சுதாகர்: "சரிம்மா. ஏதாச்சு பாத்து பண்ணுவோம்."

ரித்திகா: "சரி அப்பா. நான் போய் கிளம்புறேன். நேத்தே லேட்டா போய் ப்ரின்சிபால் கிட்ட திட்டு வாங்குனேன்."

சுதாகர்: "லேட் ஆயிடுமே-ன்னு அவசரமா போகாத சீக்கிரமாக கிளம்பு."

ரித்திகா: "சரி அப்பா" என்றவள், கிளம்புவதற்காக தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.

நாராயணன் பேலஸுல்…


அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தனர். சுகந்தி சித்தார்த்தை குளிக்க வைத்து கிளப்பி விட்டு அவனை லிவிங் ஏரியாவில் இருந்த சோபாவில் அமர வைத்தாள்.

செண்பகம்: சுகந்தியை பார்த்தவள், "சீக்கிரம் சித்தார்த்துக்கு சாப்பாடு கொண்டு வந்து ஊட்ட ஆரம்பி. இவன் இப்ப சாப்பிட ஆரம்பிச்சா தான் ஸ்கூல் ஸ்டார்ட் ஆகுரதுக்குள்ள சாப்பிட வச்சு கூட்டிட்டு போய் விட முடியும்." என்றாள்.


சுகந்தி: "சரிங்க அம்மா." என்றவள், சித்தார்த்திற்கு உணவு கொண்டு வருவதற்காக சமையல் அறைக்கு சென்று விட்டாள்.
செண்பகம் சித்தார்த்தின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். அப்போது பிராத்தனா கிளம்பி வீட்டை விட்டு வெளியே செல்ல போனாள். அதை கவனித்த செண்பகம் அவளை அழைத்தார்.

செண்பகம்: "சாப்பிட்டு போ பிராத்தனா."

பிராத்தனா: "பசிக்கலம்மா. பசிச்சாலும் நான் வெளியில எங்கயாவது சாப்பிடுகிறேன்.


செண்பகம்: "வெளில சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காத" என்று மேலும் எதையோ சொல்ல வந்தாள்.

பிராத்தனா: செண்பகம் சொல்ல வருவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கும் அளவிற்கு அவளுக்கு பொறுமை இல்லாததால்... "அத எல்லாம் நான் பாத்துக்குறேன்மா." என்று சொல்லியபடியே அங்கிருந்து வெளியே சென்று விட்டாள்.

பிராத்தனா சென்றதற்குப் பின் வருண்டவும், ஹரியும், ஒருவரோடு ஒருவர் பேசியபடியே படியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். பிராத்தனாவிடம் சொல்லியதைப் போல் செண்பகம் அவர்களிடமும் சாப்பிட்டு விட்டு செல்லும் படி சொன்னாள். இருவருமே ஒன்றை போல் அவர்களுக்கு மீட்டிங் இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும்
என்று சொன்னவர்கள், ஆபீஸில் சாப்பிட்டு கொள்வதாக சொல்லி விட்டு கிளம்பினர்.

-நேசம் தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.