அத்தியாயம் 13: இவன தூக்கி குப்பையில போட்றலாம்
நாராயணன் பேலஸுல்...
வருண் தன்னுடைய காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தான். அவன் வரும் போது லிவ்விங் ரூம் சோபாவில் செண்பகமும், பிராத்தனாவும், சித்தார்த்தும் அமர்ந்து இருந்தனர்.
வருணை பார்த்த பிராத்தனா.. சிரித்த முகத்துடன் அவன் அருகில் சென்றவள், அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
பிராத்தனாவை பாசமாக அனைத்த வருண், "இன்னைக்கு டே உனக்கு எப்படி போச்சு..?" என்று அக்கறையாக விசாரித்தான்.
பிராத்தனா: "அதுலாம் சூப்பரா போச்சு அண்ணா..." என்றவள், காலை முதல் இரவு அவள் வீடு திரும்பும் வரை நடந்த அனைத்தையும் சின்ன குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஓபிப்பது போல் சிறிதும் மாறாமல் சொன்னாள்.
வருண்: அவள் பேசுவது அனைத்தையும் பொறுமையாக கேட்டவன், "ஓகே டா. நான் போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்." என்றவன், நேராக அவனுடைய அறைக்கு சென்று விட்டான்.
வருண் பிராத்தனாவிற்கு அண்ணனாக இருந்தாலும், அவன் அவளை தன்னுடைய முதல் மகளாகத் தான் நினைக்கிறான். பிராத்தனா குழந்தையாக இருக்கும் போதே இவன் பெரியவனாக வளர்ந்து விட்டதால் வருண் தான் அவளை வளர்த்தான்.
அதனால் மற்றவர்களைப் போல் பிராத்தனா வருணை பார்த்து எப்போதும் பயப்பட மாட்டாள். தன்னுடைய அப்பாவிடம் பெண் குழந்தைகள் பாசமாக ஒட்டி கொண்டு இருப்பதை போல் எப்போதும் வருணை ஒட்டி கொண்டே திரிவாள். எப்போதும் ஒருவரின் மீது ஒருவர் மிகவும் பாசமாக இருப்பார்கள்.
வருண் அங்கிருந்து சென்ற பின் அங்கே விஷ்ணுவும், ஹரியும் வந்தனர். அவர்களைப் பார்த்த செண்பகம் அனைவரும் சேர்ந்து உணவு உண்ணலாம் என்று அனைவரையும் டைனிங் டேபிளில் சென்று அமர சொன்னாள். வருணை தவிர குடும்பத்தில் இருந்த அனைவரும் டைனிங் டேபிளில் ஆஜராகி விட்டனர்.
விஷ்ணு: பிராத்தனாவை பார்த்தவன், "என்ன அனபெல் பொம்மை அதிசயமா சித்தார்த்த அ ஸ்கூலுக்கு லாம் கூட்டிட்டு போய் விட்டு இருப்ப போல...? பொதுவா இன்ஸ்பெக்சன்-னுக்கு போற ஆபிஸர் மாதிரி அங்கு சீன் போட தானே போவ... ஒரு வேளை பொறுப்பான அத்தையா மாறிட்டியோ..? 😂😂" என்று சிரித்த படி நக்கலாக கேட்டான்.
பிராத்தனா: "டேய்...!!! விஷ்ணு சும்மா இருக்க மாட்டியா..?" என்று கோபமாக கேட்டாள். 😠😤
விஷ்ணு: "டேய்..!! விஷ்ணு வா..? நான் உனக்கு அண்ணன். அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?"
பிராத்தனா: "அப்படி தான் கூப்பிடுவேன். நீ தானே என்ன முதல்ல அனபெல் பொம்மை -ன்னு சொன்ன.. 😒 நான் மட்டும் உன்ன மரியாதையா பேசணுமா...? 😒" என்று அவனிடம் சீறினாள்.
விஷ்ணு: "இல்லேன்னா மட்டும் நீ எனக்கு அப்படியே மரியாதை குடுத்து பேசியிருவ போடி அங்குட்டு... 😂"
பிராத்தனா: ஹரியை பார்த்தவள், "அண்ணா ஃபேமிலில இருக்கிறவங்களை யாரையாச்சும் பிடிக்கலைன்னா அவங்களை மட்டும் டிவர்ஸ் பண்றதுக்கு ஏதாவது ஆப்ஷன் இருந்தா சொல்லுங்க இவன் வேணாம். டிவர்ஸ் பண்ணி துரத்தி விட்டுறாலாம். எனக்கு நீங்களும், வருண் அண்ணாவும் மட்டும் போதும்." என்றாள்.
விஷ்ணு: "நீ என்ன ஃபேமிலி ல இருந்து துரத்த போறியா...? 😂 நீ வேணா பாரு முதல்ல உன்ன தான் கல்யாணம் பண்ணி இங்க இருந்து துரத்துவோம்."
ஹரி: விஷ்ணுவை பார்த்தவன், "நீ தான் சும்மா இரேன் டா... அவ தான் சின்ன பொண்ணு அவளுக்கு ஈக்குவல் ஆ போய் சண்டை போட்டுட்டு இருக்க.. ஆள் வளர்ந்த அளவுக்கு உனக்கு எப்ப தான் அறிவு வளர போகுது...?" என்று கேட்க,
பிராத்தனா: "அப்படி நல்லா கேளுங்க அண்ணா" என்றவள்; பின் விஷ்ணுவைப் பார்த்து, "சாப்பிடறதுக்கு வந்தா அந்த வேலையை மட்டும் பாக்கணும். வாய் இருக்கே -ன்னு தேவை இல்லாம பேசினா இப்படி தான் பல்புக்கு மேல பல்பு ஆ கிடைக்கும். புரிஞ்சுதா பிரதர்..? 😂" என்று சிரித்த படியே கேட்டாள்.
இவர்கள் இப்படி மாறி மாறி சண்டை போட்டு கொண்டு இருக்க.. அந்த சத்தத்தை கேட்டு அங்கே வந்தாள் செண்பகம். "என்னைக்காவது ஒரு நாள் தானே இப்படி எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்பிடுறோம் அப்ப கூட அமைதியா இருக்க மாட்டீங்களா..? எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்கீங்க..?" என்று கடிந்து கொண்டார் செண்பகம்.
பிராத்தனா: "நான்லாம் எதுவும் பண்ணலம்மா. எல்லாம் இவன் தான்" என்று விஷ்ணுவை கை காட்டினாள்.
விஷ்ணு: "நான் லாம் எதுவும் பண்ணல. இவன் தான் என்ன திட்டினான்." என்று அமைதியாக இருந்த ஹரியை கை காட்டினான்.
ஹரி: எதுவும் பேசாமல் விஷ்ணுவை முறைத்துப் பார்த்தான். 🤨
விஷ்ணு: "அய்யோ..!! இப்படி முறைக்கிறானே ஒரு வேள கோவமா எந்திரிச்சு வந்து அடிச்சுருவானோ.. ? 🙄 வருண் அண்ணன் ஆச்சு ஏதாவது திட்டுட்டு விட்டுடுவாங்க. இவன் ரொம்ப டெரர் பீஸ் ஆச்சே.. வகையா போய் சிக்கிராத டா விஷ்ணு... யூ டர்ன் போட்டு திரும்பி வந்திரு.." என்று தன் மனதிற்குள் நினைத்தவன், செண்பகத்தை பார்த்து...
"இங்க உங்க பொண்ணு தான் அம்மா ரொம்ப டேஞ்சரான ஆளு. நான் இங்க இல்ல -ன்ன பிராப்பர்டி ல ஷேர் அதிகமா கிடைக்கும் -ன்னு என்னை வீட்டை விட்டு துரத்த பாக்கிறா மா இவ.." என்று அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.
பிராத்தனா: "நான் எங்க டா அப்படி -லாம் சொன்னேன்...? நீதானே என்ன முதல்ல கல்யாணம் பண்ணி துரத்தனும் -ன்னு சொன்ன இப்ப அப்படியே மாத்தி பேசுறியா...? 😠" என்று கோபமாக சொல்ல,
விஷ்ணு: "மாத்தி மாத்தி பேசுறது எல்லாம் உனக்கு தான் தெரியும். என்ன மாதிரி இன்னசென்ட் பையனுக்கு அதுலாம் வராது." என்றான்.
பிராத்தனா: "பாருங்க ம்மா" என்று எதையோ சொல்ல ஆரம்பித்தாள்.
அதற்குள் அவளை தடுத்து நிறுத்திய செண்பகம், இருவரையும் பார்த்து "நீங்க ரெண்டு பேரும் என்னேன்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும்; அமைதியா இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வருண் வந்துருவான். அவன் வந்த உடனே எல்லாரும் அமைதியா சாப்பிட்டுட்டு அவங்கவங்க ரூமுக்கு போய் படுத்து தூங்குங்க. நடுவுல சாப்பிடுவதற்கு தவிர வேற எதுக்கும் வாயை திறக்க கூடாது. புரிஞ்சுதா...?" என்று கண்டிப்பான குரலில் கேட்டாள்.
இருவரும் புரிந்து விட்டது என்பது போல கப் சிப் என்று அமைதியாக உட்கார்ந்து கொண்டனர். அப்போது அங்கே வந்து சேர்ந்தான் வருண்.
வருண்: "இன்னும் என்ன -ம்மா அவங்கள சின்ன பிள்ளைங்க மாதிரி மிரட்டிட்டு இருக்கீங்க..?"
செண்பகம்: "இவங்க இன்னும் சின்னப் புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டே இருந்தா.. சின்ன பிள்ளைங்களை மிரட்டர மாதிரி தான் மிரட்டனும். நான் என்ன பண்றது வருண்.”
வருண்: "அதுவும் கரெக்ட் தான் அம்மா. இவங்க ரெண்டு பேருக்கும் எப்ப மெச்சூரிட்டி வர போகுது -ன்னே எனக்கு தெரியல. சித்தார்த் படிக்கிற ஸ்கூலை இவனை பாத்துக்க சொல்லி அந்த பொறுப்பை கொடுத்தா இவன் அந்த பக்கம் போய் என்ன நடக்குதுன்னு கூட பாக்க மாட்டேங்குறான்."
விஷ்ணு: "என்ன வண்டி நம்ப பாக்கம் திரும்புது.. 🤯" என்று மனதிற்குள் நினைத்தவன், எதையும் கவனிக்காதவன் போல்... அவனுடைய தட்டை பார்த்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
செண்பகம்: "என்ன விஷ்ணு இப்ப உங்க அண்ணன் பேசினது உனக்கு எதுவும் கேட்கல தானே..."
விஷ்ணு: "என்னம்மா என்ன விஷயம்...? எனக்கு எதுவும் கேட்கலையே.. அண்ணா என்ன சொன்னாரு..? என்றவன், பின் வருணை பார்த்து.. அண்ணா என் கிட்ட ஏதாச்சும் கேட்டீங்களா...? சாரி... நான் சாப்பிட்டுட்டு இருந்ததுனால கவனிக்கல" என்று பெரியதாக நடித்து வைத்தான்.
செண்பகம்: "போதும் டா சும்மா நடிக்காத. எத்தனை வேலையா டா வருணும், ஹரியுமே பாப்பாங்க...? கொஞ்சமாச்சும் உன் அண்ணன்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு உனக்கு என்னம் இருக்கா...? இன்னைக்கு அவ ஸ்கூலுக்கு போன -ன்னு அவளை என்ன எல்லாம் பேசுன நீ..? அந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற பொறுப்பு கூட உனக்கு இல்லையே நீ எல்லாம் அவளை பத்தி பேசலாமா...?" என்று சரமாரியாக பல கேள்வி கணைகளை விஷ்ணுவை நோக்கி தொடுத்து அவனை டேமேஜ் செய்தாள்.
விஷ்ணு: "போயும் போயும் அந்த பேய் பொம்மை கூட போய் உன்ன கம்பேர் பண்ணி... அதுவும் அவ முன்னாடியே பேசி அசிங்க படுத்திட்டாங்களே டா விஷ்ணு... நோ.... இந்த அவமானத்தை நீ சரி பண்ணியே ஆகணும்" என்று தன் மனதிற்குள் நினைத்தவன், செண்பகத்தை பார்த்து...
"அம்மா, அண்ணா... நல்லா கேட்டுக்கோங்க இனி மேல் அந்த ஸ்கூல் என்னோட பொறுப்பு. என்னோட மேனேஜ்மென்ட் ல நம்ம ஸ்கூல் ஓஹோன்னு போக போது வெயிட் அண்ட் வாட்ச்." என்று திடமான குரலில் சொன்னான்.
பிராத்தனா: "நீ எதுவுமே பண்ணாம இருந்தாலே நம்ம ஸ்கூல் நல்லா தான் டா போகும். நீ போய் ஏதாவது பண்ணி நல்லா போகிற ஸ்கூல் அ லாஸ் ஆக்கிறாத. 😂😂" என்று நக்கலாக சொன்னாள்.
விஷ்ணு: "மீண்டும் மீண்டும் அவமானமா... என்ன விஷ்ணு இது உனக்கு வந்த சோதனை" என்று தன் மனதிற்குள் நினைத்தவன், செண்பகத்தை பார்த்து... "அம்மா நான் உங்க பேச்சை கேட்டு எல்லாமே கரெக்டா தானே பண்றேன். இவளை அமைதியா இருக்க சொல்லுங்க. எப்ப பாத்தாலும் என்ன டென்ஷன் பண்ணிட்டே இருக்கா.”
செண்பகம்: "ரெண்டு பேருமே அமைதியா இருங்க."
விஷ்ணு: "இல்லம்மா எனக்கு புரியல. என்ன நடக்குது இங்க..? நான் எதாச்சும் பண்ணி என்ன நீங்க திட்டுனா ஓகே. அவ ஏதாச்சு பண்ணாலும் என்னவே திட்டறீங்க... இதெல்லாம் நியாயமே இல்லை தெரியுமா... உண்மைய சொல்லுங்க அம்மா நீங்க என்ன குப்பை தொட்டியில இருந்து தானே எடுத்துட்டு வந்தீங்க...? அதனால தானே உங்களுக்கு என் மேல பாசமே இல்ல..😢" என்று அவனுடைய முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டான்.
அவன் இப்படி பேசினால் உடனே செண்பகம் வருத்தப்பட்டு அவனை சமாதானம் செய்ய அவனிடம் பாசமாக பேசுவாள் என்று எதிர்பார்த்தான் விஷ்ணு.
செண்பகம்: "ஆமா..!! குப்பை தொட்டியில இருந்து தான் எடுத்துட்டு வந்தோம். எப்படி கண்டு பிடிச்ச...? சரி இத கண்டு பிடிக்கிற அளவுக்காவது உனக்கு அறிவு இருக்கே.. என்றவள், வருணை பார்த்து.... டேய் வருண் அந்த குப்பை தொட்டி எங்க இருக்குன்னு கண்டு பிடி. இவன் நமக்கு வேணாம். திருப்பி அதே குப்பை தொட்டியில் போட்டுறலாம்." என்று சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு சொன்னாள்.
வருண்: "ஓகே..!! மா நான் சிவாவை விசாரிக்க சொல்றேன். ஒரு நல்ல நாளா பாத்து தூக்கிட்டு போய் போட்டுட்டு வந்திடலாம்." என்று அவனும் சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.
இவர்கள் பேசுவதை கேட்ட விஷ்ணு அதிர்ச்சி அடைந்தான்.
விஷ்ணு: சாப்பிடுவதை நிறுத்தி விட்டு வேகமாக எழுந்து நின்றவன்... "என்னது என்ன திரும்பவும் குப்பை தொட்டியில போட போறீங்களா...? 🤯 அப்போ நிஜமாவே நான் இந்த வீட்டு பையன் இல்லையா...😦🥺" என்று சோகமான குரலில் கேட்டான்.
அவன் பேசியதை கேட்டு வருண், ஹரி உட்பட அனைவரும் பக்கென்று சிரித்து விட்டனர்... 😂🤣🤣🤣
விஷ்ணு: மற்றவர்கள் அனைவரும் சிரிப்பதைப் பார்த்து குழம்பியவன் அனைவரையும் பார்த்து... "எல்லாரும் ஏன் இப்படி சிரிக்கிறீங்க...? அப்ப நான் இந்த வீட்டு பையன் தானா..? என்ன குப்பை தொட்டியில இருந்து தூக்கிட்டு வரலையா...?" என்று அப்பாவியாக கேட்டான்.
பிராத்தனா: "டேய்..!! லூசு பயலே...😂 எல்லாரும் உன்னை வச்சு ஃபன் பண்ணிட்டு இருக்காங்க டா. அது கூட தெரியலையா உனக்கு..? இதுல நீ ஸ்கூல் அ பாத்துக்க போறியா...?" என்றவள், வயிறு வலிக்க சிரித்தாள்.😂😂
அந்த இடமே அவர்களின் சிரிப்பு சத்தத்தால் நிரம்
பி இருந்தது.
- தேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.