தாபம் 12

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 12: ரித்திகா ஒரு சண்டைக்காரி

சித்தார்த்தின் பள்ளியில்…


லஞ்ச் பீரியட் தொடங்கி இருந்தது. ஷாலினி இடம் சித்தார்த்தை பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டு கிளம்பிய ரித்திகா, சித்தார்த்தின் வகுப்பறைக்கு சென்று சித்தார்த்தை தேடினாள். ரித்திகாவை பார்த்த சித்தார்த், நேற்றை போலவே.. இன்றும் அவனாகவே ஓடி வந்து அவளை கட்டி பிடித்துக் கொண்டான். பின் இருவரும் பேசி கொண்டு இருந்தனர். இவர்கள் இப்படி சந்தோஷமாக பேசி கொண்டு இருப்பதை பார்த்த சுகந்தி மகிழ்ந்தாள்.

ரித்திகா: “சாப்டியா நீ?" என்று சித்தார்த்தை பார்த்து கேட்டாள்.

சித்தார்த்: “இல்ல" என்று தலையை ஆட்டிய படி சொன்னான்.

சுகந்தி: “நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் ம்மா. தம்பி சாப்பிடவே இல்ல. உங்கள பாத்துட்டு தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சாரு." என்று ரித்திகாவிடம் புகார் செய்தாள்

ரித்திகா: “நேத்து தானே சொன்னேன் உன் கிட்ட.. குட் பாய்ஸ் அடம் பிடிக்க மாட்டாங்கன்னு.. மறுபடியும் அடம் பிடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா நீ...?"

சித்தார்த்: “நீ தான் என்ன வந்து பாக்குறேன்னு சொல்லிட்டு வரல அதான் சாப்பிட மாட்டேன்னு சொன்னேன். நான் குட் பாய் தான். என்ன பேட் பாய் -ன்னு சொல்லாத." என்று அவனுடைய முகத்தை சோகமாக வைத்த படி சொன்னான். 😞

ரித்திகா: “சரி..!! சரி..!! முகத்தை இப்படி வெச்சுகாத. இனிமே அடம் பிடிக்காம டைம்க்கு கரெக்டா சாப்பிடணும் சரியா..?"

சித்தார்த்: “ம்ம்ம்... இனிமே நான் அடம் புடிக்க மாட்டேன் ரித்து. ஆனா நீ என்ன டெய்லியும் வந்து பாக்கணும். ஓகே ஆ?”

ரித்திகா: “ஓகே.. 😁"
சுகந்தியை பார்த்தவள், “அக்கா இனி மேல் இவன் எதுக்கு அடம் புடிச்சான்னாலும்... என் கிட்ட வந்து சொல்லுங்க.. அப்புறம் நான் இவன் கிட்ட பேசவே மாட்டேன்."

சுகந்தி: “சரி மா. 😁"

ரித்திகா சித்தார்த்தை பார்த்தவள்... “டைம் ஆச்சு.. நீ போய் சாப்பிடு. நானும் போய் சாப்பிடுறேன்." என்று சித்தார்த்தை கீழே அமர வைத்த படி சொன்னாள்.

சித்தார்த்: “நீயும் என் கூடவே சாப்பிடு ரித்து."

ரித்திகா: “அப்படியா..? என்னோட... லஞ்ச் பாக்ஸ் ஸ்டாப் ரூம் ல இருக்கே... நீ சாப்பிடு. இப்ப போய் எடுத்துட்டு வந்தனா லேட் ஆயிடும். லஞ்ச் முடிஞ்சு கிளாஸ் இருக்கு. சாரி சித்தார்த். நான் நாளைக்கு உன் கூட கண்டிப்பா சாப்பிடறேன் ஓகேவா..?" என்று அவனுடைய கைகளை பிடித்த படி சொன்னாள்.

சித்தார்த்: “என் கிட்ட நிறைய சாப்பாடு இருக்கு. என் கூடவே சாப்பிடு ரித்து."

ரித்திகா: “உன்ன மாதிரி குட்டி பசங்களுக்கு குட்டி லஞ்ச் பாக்ஸ் தான் குடுப்பாங்க. அத நான் சாப்பிட்டுட்டா அப்புறம் நீ என்ன சாப்பிடுவ..? சித்தார்த்துக்கு பசிச்சா என்ன பண்றது..?"

சித்தார்த்: “எப்பயும் நான் சாப்பிட்டாலும் நிறைய சாப்பாடு மிச்சம் இருக்கும்." என்று அவனுடைய இரு கைகளையும் விரித்த படி சொன்னான்.

ரித்திகா: “அப்ப டெய்லியும் நீ நிறைய சாப்பாடு கொண்டு வரியா..? எங்க காமி பாப்போம் நீ எவ்ளோ சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன்னு..?"

சித்தார்த்: “இங்க பாரு இங்க இருக்கிற எல்லாமே என்னோட சாப்பாடு தான்" என்று அவனருகில் இருந்த உணவுகளை காண்பித்தான்.

அவன் காட்டிய திசையில் பார்த்த ரித்திகா அதிர்ச்சி அடைந்தாள். அங்கே பெரிய கேரியர் திறந்து வைக்க பட்டு இருந்தது. அதில் வகை வகையான உணவுகள் இருந்தது. அங்கிருந்தவைகளை பெரியவர்கள் சாப்பிட்டாலே இரண்டிலிருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடும் அளவிற்கு உணவு இருந்தது.

ரித்திகா: சுகந்தியை பார்த்தவள், ஆச்சரியமான குரலில்.. “இவ்வளவு சாப்பாடு எதுக்கு க்கா..?" என்று கேட்டாள்.

சுகந்தி: “எப்பயுமே சித்தார்த் தம்பி சாப்பிடுறதுக்கு ரொம்ப அடம் பிடிப்பாரும்மா. திடீர்னு ஏதாவது ஒரு சாப்பாடு பேர சொல்லி அது தான் வேணும்னு சொல்லுவாரு. நம்ம அத கொண்டு வந்தா.. அது வேணாம்னு சொல்லி வேற ஒன்னு வேணும்ன்னு கேட்பாரு. அதனால எப்பவுமே தம்பிக்கு பிடிச்ச எல்லா சாப்பாட்டையும் சமைச்சு கொண்டு வருவோம் அவருக்கு புடிச்சத சாப்பிடுவாரு. மீதி சாப்பாட்ட திரும்பி வீட்டுக்கே அமிச்சுருவோம்.”

ரித்திகா: “அக்கா சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. குழந்தைகளுக்கு இந்த மாதிரி எல்லாம் பழக்கப் படுத்த கூடாது. அவங்க அடம்பிடிக்கிறாங்கன்னு அவங்களுக்கு தகுந்த மாதிரி நம்ம எல்லாமே செஞ்சு குடுத்துட்டே இருந்தா.. அது அவங்கள என்கரேஜ் பண்ற மாதிரி ஆகிடும். அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சு குடுக்கலாம் அது தப்பில்லை. ஆனா இவ்வளவு ஆப்ஷன்ஸ் குடுக்கிறது ரொம்ப தப்பு அக்கா." என்று கண்டிப்பான குரலில் சொன்னாள்.

சுகந்தி: “என்ன பண்றது மா..? தம்பிய சாப்பிட வைக்கிறதே பெரிய போராட்டமா இருக்கு. என்ன பண்ணியாவது சாப்பிட வச்சா போதும்ன்னு இருக்கும். அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கோம்." என்று பாவமாக சொல்ல,

ரித்திகா: “இதுக்கு முன்னாடி எப்படியோ இனி மேல் அப்படி பண்ணாதீங்க. அவனுக்கு என்ன வேணும்னு அவன் கிட்ட கேளுங்க. அத மட்டும் செஞ்சு கொண்டு வந்து கொடுங்க போதும் அவன் சாப்பிடுவான்." என்று உறுதியாக சொன்னவள் சித்தார்த்தை பார்த்தாள்.

சுகந்தி: “தம்பி சாப்பிட்டா போதும் மா." என்று இறுதியாக சொல்லி விட,

ரித்திகா: “இங்க பாரு சித்தார்த் இனிமேல் சுகந்தி ஆன்ட்டி உன் கிட்ட வந்து சாப்பிடறதுக்கு என்ன வேணும்னு கேட்பாங்க. நீ உனக்கு புடிச்சத சொல்லு அவங்க செஞ்சு கொண்டு வருவாங்க. அவங்க ஒரு புட்டு மட்டும் தான் கொண்டு வருவாங்க. அத நோ சொல்லாம சாப்பிடணும் ஓகேவா..?"

சித்தார்த்: “நான் இப்போ குட் பாய். அடம்பிடிக்காம எது கொடுத்தாலும் சாப்பிடுவேன் ரித்து. இப்ப நீ என் கூட சாப்பிடு ப்ளீஸ்" என்று ரித்திகாவின் கைகளை பிடித்த படி பாவமாக கேட்டான்.

“சரி...!!" என்றவள், கை கழுவிவிட்டு சித்தார்த்துடன் அமர்ந்து சாப்பிட்டாள். சுகந்தி சித்தார்த்திற்கு ஊட்டி விட அவனும் அடம் பிடிக்காமல் சாப்பிட்டான். இருவரும் சாப்பிட்டு முடிப்பதற்கும், லஞ்ச் பீரியட் முடிவதற்கும் சரியாக இருந்தது. சித்தார்த்தை நாளை வந்து பார்ப்பதாக சொல்லி.. அவனுக்கு பை சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிய ரித்திகா அவசரமாக ஸ்டாஃப் ரூமுக்கு சென்றாள்.

ஸ்டாஃப் ரூமிற்கு வந்தவள், அவளுடைய டைம் டேபிள் ஐ செக் செய்து விட்டு அவள் செல்ல வேண்டிய வகுப்பறைக்கு சென்று விட்டாள்.

மாலை வேளையில்…


லாஸ்ட் பீரியட் முடிந்து ஸ்கூல் பெல் அடித்தது. ஸ்டாஃப் ரூமுக்கு வந்தாள் ரித்திகா. அங்கே ரித்திகாவை பார்த்த ஷாலினி அவளை அழைத்தாள்.

ஷாலினி: “என்னக்கா சாப்பிட்டுட்டு இரு இதோ வந்தர்றேன்னு போனீங்க... இப்ப தான் வரீங்க போல" என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😂

ரித்திகா: “ஒய்.. நான் சித்தார்த் கூடவே சாப்பிட்டுட்டேன். அதான் வரத்துக்கு லேட் ஆயிடுச்சு. நான் வந்து பாத்தப்ப நீ தான் இங்க இல்ல.”

ஷாலினி: “சரி..!! விடுங்க. வாங்க ஆஃபிஸ் ரூம்க்கு போய் சைன் போட்டுட்டு கிளம்புவோம்."

ரித்திகா: “ம்ம்..."

ரித்திகாவும், ஷாலினியும், அவர்களுடைய பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கிளம்பி கொண்டு இருக்க.. ஷாலினியை அழைத்தாள் லாவண்யா.

லாவண்யா: “ஓய்.. ஷாலு... கிளம்பிட்டியா வா போலாம்" என்றாள்.

ஷாலினி: “லாவன்ஸ் நீயா..?? நான் கிளம்பிட்டேன்"
என்றவள், “இந்த அக்கா பேரு ரித்திகா, இவங்க புதுசா இங்க ஜாயின் பண்ணி இருக்காங்க" என்று ரித்திகாவை அறிமுக படுத்தினாள்.

லாவண்யா: ரித்திகாவை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தவள், “ஹாய் அக்கா.. ஐ அம் லாவண்யா" என்றாள்.‌ 😁‌

ரித்திகா: “ஹலோ
லாவண்யா நைஸ் டு மீட் யூ" என்றவள், பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள். 😁😁

லாவண்யா: “டே 1 உங்களுக்கு எப்படி போச்சு..?"

ரித்திகா: “ஸ்டார்டிங் தான் கொஞ்சம் சரி இல்ல. அப்புறம் போக போக பரவால்ல தான் மா."

லாவண்யா: “ஏன் கா ஸ்டார்டிங் ல என்ன ஆச்சு?”

ஷாலினி: “எல்லாம் அந்த பிசாசு பண்ண வேலை தான். ஃபர்ஸ்ட் டேவே ஏன் லேட்ன்னு இந்த அக்காவ புடிச்சு திட்டி இருக்கா அவ.."

லாவண்யா: “இது வேறயா.... அவ அப்படி தான் க்கா.. ரொம்ப சீன் போடுவா. ஏதாச்சு பண்ணனும்னே பண்ணுவா.. நீங்க அத நெனச்சு லாம் ஃபீல் பண்ணாதீங்க."

ரித்திகா: “நான் பீல் லாம் பண்ணல மா. அப்போ கொஞ்சம் கடுப்பா இருந்துச்சு அவளோ தான்."

ஷாலினி: “இப்படியே இங்க நின்னு பேசிக்கிட்டு இருந்தா டைம் ஆயிடும் வாங்க நடந்துகிட்டே பேசலாம்."

ரித்திகா: “ஆமா..!! நானும் சீக்கிரமா கிளம்பனும். வீட்டுக்கு நிறைய திங்ஸ் வாங்கிட்டு போகணும்."
இவ்வாறு பேசிய படியே மூவரும் ஸ்டாஃப் ரூமில் இருந்து வெளியே வந்தனர். பின் நேராக ஆபிஸ் ரூமிற்கு சென்றவர்கள், அங்கிருந்த ரெஜிஸ்டரில் சைன் போட்டு விட்டு வெளியே வந்தனர்.

ஷாலினி: “அக்கா நீங்க எப்படி வீட்டுக்கு போவீங்க..? ஸ்கூல் பஸ் ஆ?"

ரித்திகா: “இல்ல ஷாலினி. ஆட்டோ புக் பண்ணி தான் போகணும். நீ எப்படி போவ?"

ஷாலினி: “எங்க வீடு பக்கம் தான் அக்கா. லாவண்யா வீட்டுக்கு என் வீட்டை தாண்டி தான் போகனும். அதனால அவ கூட ஸ்கூட்டியிலயே போயிடுவேன்."

ரித்திகா: “ஓகே மா... ரெண்டு பேரும் பாத்து போங்க."
இப்படியே மூவரும் பேசியபடி செக்யூரிட்டி ஆபீசுக்கு வந்தவர்கள் அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டை ஸ்கேன் செய்து விட்டு வெளியே வந்தனர். ஷாலினியை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் லாவண்யா.

ஃபோனில் ஆட்டோவை புக் செய்த ரித்திகா, ஆட்டோ வறுவதற்காக சிறிது நேரம் காத்திருந்தாள் ரித்திகா.

சிறிது நேரத்திற்குப் பின் ஆட்டோ வர அங்கிருந்து கிளம்பிய ரித்திகா, நேராக ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு சென்று அவளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறியவள், அதன் பின் ஒரு மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று அவளுடைய அப்பா மற்றும் அம்மா விற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி விட்டு அவர்கள் வீடு இருக்கும் “நாராயணன் பேலஸுன்" வாசலில் வந்து இறங்கினாள்.
அப்போது மணி இரவு 7 ஐ கடந்து இருந்தது. வருண் தன்னுடைய ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டு இருக்க அவனுக்கு அவனுடைய அம்மா செண்பகத்திடம் இருந்து கால் வந்தது.

அவர்கள் புதியதாக தொடங்க இருக்கும் காஸ்மெடிக்ஸ் கம்பெனிக்கு சம்பந்தமான மீட்டிங்கிற்கு மும்பை வரை சென்று இருந்த வருண்னின் முதல் தம்பியான ஹரி நாராயணன் வீட்டுக்கு வந்து விட்டதால்... இன்று ஒரு நாளாவது அனைவரும் ஒன்றாக இணைந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று செண்பகம் வருண்னுக்கு கால் செய்து அழைத்தினாளும், வருண்னுக்கும் ஹரி இடம் புதிய கம்பெனி பற்றி பேச வேண்டியது நிறைய இருந்ததினாலும்.. செண்பகம் அவனை வர சொன்னவுடன் ஆபீஸில் இருந்து கிளம்பி விட்டான் வருண்.


வருண் நாராயணன் பேலஸை அடைவதற்கும், ஆட்டோவில் இருந்த ரித்திகா கீழே இறங்குவதற்கும் சரியாக இருந்தது. தன்னுடைய ஸ்போர்ட்ஸ் காரில் வேகமாக வந்த வருண், ரித்திகாவை கவனிக்கவில்லை. அவனுடைய காரை பார்த்த செக்யூரிட்டி ஆபீஸர் வேகமாக கதவை திறக்க சென்றார்.


அந்த பிரம்மாண்டமான கேட்டிற்கு உள்ளே நுழைய இருந்த வருண்னுக்கு ஏதோ மிகவும் பரிச்சயமான ஒரு குரல் கேட்பது போல் இருந்தது. அது யார் என்று சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று அவனுடைய உள்ளுணர்வு அவனிடம் சொல்லிக் கொண்டே இருந்ததால் காரை ரிவர்ஸ் எடுத்து பின்னே சென்றான் வருண்.
தன்னை இரு கண்கள் நோட்டமிட்டு கொண்டு இருப்பதை உணர்ந்திராத ரித்திகா, அவளை கொண்டு வந்து இறக்கி விட்ட ஆட்டோகாரரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.


ஆட்டோகாரர்: “500 ரூபாய்க்கு கம்மினா கட்டாது மா."

ரித்திகா: “அண்ணா 500 ரூபாய் ரொம்ப அதிகம்.. நான் ஆட்டோல ஏறும்போது நீங்க 300 ரூபாய் தானே சொன்னீங்க இப்ப 500 ரூபாய் கேக்குறீங்க..? 😒 நீங்க முன்னாடியே 500 ரூபா ஆகும்ன்னு சொல்லி இருந்தீங்கன்னா நான் ஆட்டோல ஏறி இருக்கவே மாட்டேன்."

ஆட்டோகாரர்: “ஏன்மா...!! நாராயணன் பேலஸ்ல தங்கியிருக்க... ஒரு 500 ரூபாய்க்கு இப்படி கணக்குப் பாக்குற.."

ரித்திகா: “நான் அங்க தங்கி தான் இருக்கேன். ஆனா நான் ஒன்னும் அந்த பேலஸ் ஓனர் கிடையாது. எனக்கு 500 ரூபாய்லாம் ஒரு காசு இல்லைன்னு நான் உங்க கிட்ட சொன்னனா..? நானே இப்ப தான் அண்ணா புதுசா இந்த ஊருக்கு வந்து வேலை தேடி.. வேலை கிடைச்சு செட்டில் ஆகி இருக்கேன். இன்னும் முதல் மாசம் சம்பளம் கூட வாங்கல. ஆட்டோக்கு செலவாகிற காச பாத்தாலே.. வாங்குற சம்பளம் எல்லாம் ஆட்டோக்கே போயிடும் போல.. கொஞ்சம் குறைச்சுகோங்க அண்ணா.”

ஆட்டோகாரர்: “என்ன மா நீ... விலை வாசிகளாம் எவளோ இருக்குன்னு தெரியும் இல்ல... நீ நாலு மணிக்கு ஆட்டோல ஏறுன... இப்ப மணி 7 ஆயிருச்சு. 500 ரூபாய் -க்கு கம்மியாய் இவ்ளோ நேரம் எப்படி வண்டி ஓட்ட முடியும்..? இதுல நீ ஒவ்வொரு கடையா வேற போய் போய் நின்னுக்கிட்டு இருந்த. எவ்வளவு நேரம் உனக்காக நான் வெயிட் பண்ணேன் அதுக்கு தனியா வெயிட்டிங் சார்ஜ் போட்டா எவ்வளவு காசு வரும்.. நீயே யோசிச்சு பாரு."

ரித்திகா: “அண்ணா நீங்க எனக்காக வெயிட் பண்ண டைம் லாம் ரொம்ப கம்மி. டிராபிக்கில் தான் ரொம்ப நேரமா நின்னு நின்னு இவ்ளோ நேரம் கழிச்சு இப்ப வந்து இருக்கோம்.”‌ என்று சொல்ல,
இப்படியே அவர் ஒன்று சொல்ல அதற்கு ரித்திகா பதில் பேச என்று இருவரும் மாறி மாறி பேசி கொண்டு இருந்தனர்.

சிறிது சமாதானம் அடைந்த ரித்திகா இறுதியாக 450 ரூபாய் தருவதாக சொன்னாள். இதற்குமேல் நாம் எவ்வளவு பேசினாலும் இன்னும் அரை மணி நேரம் ஆனாலும் இவள் பேசுவாளே தவிர 50 ரூபாய் சேர்த்து தர மாட்டாள் என்று புரிந்து கொண்ட ஆட்டோகாரர்... பரவாயில்லை என்று அந்த 450 ரூபாயை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

ஆட்டோகாரரிடம் இருந்து ஐம்பது ரூபாயை சேமித்து விட்ட சந்தோசத்தில் அவளுடைய பைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு சிரித்த முகமாய் உள்ளே சென்றாள் ரித்திகா.

இதுவரை நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வருண், உள்ளே செல்லும் ரித்திகாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான். 😒

வருண்: “இவ அந்த ரித்திகா தானே... என்ன இவ இப்படி நடு ரோட்டில நின்னு ஒரு ஆட்டோ காரர்ட்ட 500 ரூபாய்க்கு போய் சண்டை போட்டுட்டு இருக்கா...? இதுல இவளுக்கு நான் கொடுக்கிற சம்பளம் எல்லாம் ஆட்டோகே போயிடும்ன்னு வேற என் முன்னாடியே சொல்றா.. அத்தான் ஸ்கூல் பஸ் இருக்குல்ல அதுல வர வேண்டியது தானே... இவள மாதிரி ஒன்னு ரெண்டு ஆட்களால தான் நாராயணன் குரூப்ஸ் ஓட பேரே கெட்டு போகுது.. ஒரு பப்ளீக் ப்ளேஸ்ல எப்படி டீசண்டா பிஹேவ் பண்ணனும்னு கூட இவளுக்கு தெரியல. இவ என் பையன் படிக்கிற ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்கிறா. இதுல இந்த அம்மாவும், விஷ்ணுவும், இவ ரொம்ப நல்லவன்னு இவளுக்கு சர்ட்பிகேட் கொடுக்கிறாங்க. இவ கூட எல்லாம் என் பையன பழகவிட்டா இவ புத்தி தானே என் பையனுக்கும் வரும். என் பையன் ஜான்வி மாதிரி ரொம்ப சாஃப்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கான். இவ கூட பழகினா இவ்வள மாதிரியே சண்டக்காரன் ஆயிடுவான் போல.. மொதல்ல அம்மா கிட்ட சொல்லி சித்தார்த்த இவ கூட பேச விடாம பண்ணனும்." என்று இந்த உலகத்தில் ரித்திகாவை விட வேறு யாரும் தவறானவர்களே
இல்லை என்பது போல் ரித்திகாவை தன் மனதிற்குள் கழுவி கழுவி ஊத்தினான்.


-நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.