அத்தியாயம் 110: வைஷாலியின் திட்டம் (பார்ட் 1)
லாவண்யா முன்னே தன்னை பலவீனமான ஆளாக காட்டிக்கொள்ள விரும்பாத வைஷாலி, அங்கு இருந்து வீராப்பாக கிளம்பி அமைதியாக வந்தாள். ஆனால் உள்ளுக்குள்ளே ஓராயிரம் துண்டுகளாக உடைந்து சிதறி இருந்த அவளுடைய இதயம், அவளால் பொறுக்க முடியாத அளவிற்கு வலித்துக் கொண்டு இருந்தது. 💔 அவளுடைய பக்கத்தில் இருந்து பார்த்தால்; அவள் விஷ்ணுவை காதலித்ததோ, அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதோ, எந்த விதத்திலும் தவறாகாது.
இப்போது வந்த லாவண்யாவே விஷ்ணுவை இழக்க மனமின்றி தன்னுடைய உயிர் தோழிக்கு துரோகம் செய்தாவது எப்படியாவது விஷ்ணுவை தன்னை காதலிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறாள். சிறு வயதில் இருந்து விஷ்ணு தான் தனக்கு, என்று நினைத்து வளர்ந்து இருந்த வைஷாலியால் உடனே இதை எப்படி ஏற்று கொள்ளள முடியும்...??? அதனால் தன்னுடைய வேதனையை தனியாக அழுது தீர்த்து விடலாம் என்று நினைத்த வைஷாலி; ரெஸ்ட் ரூமிற்கு வந்து அதன் கதவை அடித்து சாத்தி தாலிட்டவள், சத்தமின்றி தன்னுடைய இரு கைகளையும் வாயில் பொத்திய படி, அவளுடைய கண்களில் இருக்கும் மொத்த கண்ணீரும் வடிந்து தீர்ந்துவிடும் அளவிற்கு அழுது தீர்த்தாள். 😭 😭 😭
கண்டிப்பாக அவளால் விஷ்ணுவை இழக்க முடியாது. அதுவும் தனக்கு கீழே இருக்கும், விஷ்ணுவை காதலிப்பதற்கான எந்த அடிப்படை தகுதியும் கூட இல்லாத ஷாலினிக்கு அவளால் விஷ்ணுவை விட்டு தர முடியாது என்பதை விட, அப்படி நடந்து விட்டால், அது தனக்கு அசிங்கம் என்றுு அவள் நினைத்தாள். கேவலம் ஒரு மிடில் கிளாசை சேர்ந்த ஷாலினியை விட தான் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டோம்..??? என்று யோசித்த வைஷாலிக்கு, இது காதல் பிரச்சினையை தாண்டி ஈகோ பிரச்சினையாக தெரிந்தது.
அதனால் ஷாலினியை விஷ்ணுவிடம் இருந்து எப்படி பிரிக்கலாம் என்று சில நொடிகள் அமைதியாக யோசித்துப் பார்த்தாள். பேசாமல் இதைப்பற்றி செண்பகத்திடம் சொல்லிவிட்டால் என்ன, என்று அவளுக்கு தோன்றியது. அவளுக்கு தன்னுடைய அத்தை தனக்கு தான் சப்போர்ட் செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அப்போது அவளுக்கு தன்னுடைய அம்மா கால் செய்து, விஷ்வா மற்றும் ராகவியின் திருமணத்தைப் பற்றி சொல்லியது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதை நினைத்துப் பார்த்த வைஷாலி,
“இந்த ஷாலினியும், ராகவியும், வேற ரொம்ப கிளோஸா இருக்காங்களே..!!! ஷாலினிக்கு ராகவி சப்போர்ட் பண்ணா என்ன பண்றது...??? அத்தை சித்தார்த்துக்காக இன்னைக்கு ராகவிய விஷ்வா மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறவங்க, நாளைக்கு ராகவி சொல்றத கேட்டு ஷாலினிக்கும், விஷ்ணு மாமாவுக்கும், கல்யாணம் பண்ணி வச்சிட்டா என்ன பண்றது...???" என்று பலவாறாக யோசித்தவள் தானே சென்று இதை செண்பகத்திடம் தெரிவித்து அவர்களுடைய வழியை இன்னும் சுலபமாக்கி வைத்து விட வேண்டாம் என்று தோன்ற, அமைதியாக தன்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று யோசித்துப் பார்த்தாள்.
அப்போது தான் ஷாலினிக்கு விஷ்ணு யார் என்ற உண்மையே தெரியாது தானே என்று ஞாபகம் வந்தது. அதுவும் இல்லாமல் லாவண்யா சொன்னது படி; விஷ்ணு தான் ஷாலினியை காதலிக்கிறானே தவிர, இன்னும் ஷாலினி அவனை காதலிப்பதாக அவனிடம் சொல்லவில்லை. அதனால், நாம் விஷ்ணுவின் உண்மையான அடையாளத்தை பற்றி அவளிடம் தானெ சொல்லி, அவளுடைய உண்மையான தகுதி என்னவென்று அவளுக்கு புரிய வைத்துவிட்டால், அவளே தன்னுடைய பாதையில் இருந்து விலகி சென்று விடுவாள் அவளுக்கு தோன்றியது.
“எஸ் இது தான் கரெக்ட். என்ன விஷ்ணு அவளுக்காக நம்ம மேல கொஞ்ச நாளைக்கு கோவமா இருப்பான். பரவால்ல, ஹரி மாமாவுக்கும், அக்காவுக்கும், கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்புறம் எப்படியாவது நான் விஷ்ணு மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, போகப்போக அவன் சரி ஆயிடுவான்." என்று நினைத்தவள் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, தன்னை ரெப்ரஸ் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தாள். 😃 😃 😃
இப்போதே ஷாலினியிடம் இதைப் பற்றி பேசிய ஆக வேண்டும் என்று நினைத்தவள், ஷாலினியை தேடி ஸ்டாப்ரூவிற்கு வந்தாள். இன்டர்வெல் பீரியட் முடிந்து இருந்ததால், ஷாலினி தன்னுடைய வகுப்பிற்கு சென்றிருந்தாள். அதனால் வைஷாலியால் இப்போது ஷாலினியிடம் பேச முடியவில்லை. சரி அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள், பள்ளி நேரம் முடியும் வரை காத்திருந்தாள்.
நாராயணன் பேலஸில்...
சுகந்தியுடன் தன்னுடைய வீட்டிற்கு வந்த செண்பகம், அவள் இங்கு வரும் முன் நடந்தவற்றை தர்ஷனின் மூலம் தெரிந்து கொண்டு; கோபமாக இருக்கும் தன்னுடைய நாத்தனாரை சமாதான படுத்துவதற்காக அவளுடைய அறைக்கு சென்றாள். செண்பகம் சீத்தாவின் அறையின் கதவைத் தட்ட, தர்ஷினி தான் வந்து கதவை திறந்தாள்.
செண்பகம்: தர்ஷினியை பாசமாக பார்த்து புன்னகைத்தவள், “எப்படி டி இருக்க..??? இத்தன வருஷம் கழிச்சு இப்ப தான் உனக்கு இந்த வீட்டுக்கு வரதுக்கு மனசு வந்துச்சா...???" என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். 🥺 தர்ஷினி எப்போதும் அனைவரிடமும் அன்பாகவும், மரியாதையுடனும், நடந்து கொள்பவள். பெரியவர்களின் பேச்சுக்கு அவள் மறு பேச்சே பேசியதே இல்லை. அதனால் எப்போதும் அவளுடைய மனதில் தர்ஷினிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.
தர்ஷினி: செண்பகத்தை அணைத்துக் கொண்டவள், “நான் நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க..?? ப்ளீஸ் கண் கலங்காதீங்க." என்று கலங்கிய கண்களுடன் சொன்னாள். 🥺இவளுக்கும் செண்பகத்தை மிகவும் பிடிக்கும். என்ன தான் அவள் செண்பகத்தை அத்தை என்று அழைத்தாலும், தன்னுடைய அம்மாவிற்கு ஒரு படி மேல் அன்பும், மரியாதையையும், செண்பகத்தின் மேல் அவள் வைத்து இருக்கிறாள்.
செண்பகம்: தர்ஷினியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன் ஒரு விரலால் துடைத்தவள், “என்ன அழ வேண்டாம்னு சொல்லிட்டு நீ எதுக்கு அழுகிற..???" என்று சிறு புன்னகையுடன் கேட்டாள். 😁 😁
தர்ஷினி: “அட போங்க அத்தை. நீங்க தான் அழுது, என்னையும் அழ வச்சிட்டீங்க." என்று கண்ணீருடன் சொன்னவள் சிரிக்க முயன்றாள். 🥺😄
செண்பகம்: ம்ம்.. உங்க அம்மா என்ன பண்றாங்க..?? என் மேல ரொம்ப கோவமா இருக்காங்களா..???
தர்ஷினி: எங்க அம்மா மத்தவங்க மேல கோபப்படுறது என்ன புதுசா..??? எங்க அம்மா கோபப்படலைன்னா தான் நீங்க ஆச்சரிய படனும். நீங்க அவங்களை எல்லாம் கண்டுக்காதீங்க. அவங்க என்ன சொன்னாலும் பெருசா எடுத்துக்காதீங்க.
அவங்க ரொம்ப நேரம் கார்ல டிராவல் பண்ணி வந்ததுனால; தலை வலிக்குது, கால் வலிக்குதுன்னு, சொல்லிட்டு இருந்தாங்க. நான் இவ்ளோ நேரம் அவங்களுக்கு கால் புடிச்சு விட்டுட்டு இருந்தேன். இப்ப தான் அவங்க மாத்திரை போட்டுட்டு தூங்குறாங்க. நான் வேணா நீங்க வந்து இருக்கீங்கன்னு சொல்லி அவங்களை எழுப்பட்டுமா?
செண்பகம்: “இல்ல தர்ஷினி, வேண்டாம். அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். நான் அப்புறமா அவங்களை வந்து பார்க்கிறேன்." என்றவள், அங்கு இருந்து சென்று விட்டாள்.
சித்தார்த்தின் பள்ளியில்....
ஷாலினியை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், அவளிடம் விஷ்ணுவை பற்றி பேசிவிடலாம் என்று நினைத்து அவளை நோட்டமிட்ட படியே காத்திருந்தாள் வைஷாலி. லாஸ்ட் பீரியட் முடிந்து மாணவர்களே பள்ளி வாகனத்தில் தங்களுடைய வீட்டிற்கு கிளம்ப தொடங்கிய இருந்தனர். ஆனாலும் அவளுக்கு ஷாலினியுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தங்களுடைய வீட்டிற்கு செல்வதற்காக ராகவியும், விஷ்ணுவும், ஷாலினியும், ஒன்றாக மெயின் கேட் இன் வழியாக வெளியே வந்தனர். அதை கவனித்த வைஷாலி, “என்ன இவன் ஓவரா பண்றான், எப்ப பாத்தாலும் அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான்..??? இன்னைக்கு இவன பத்தி அவ கிட்ட பேசியே ஆகணும். வீட்டுக்கு தானே போறா... போனா போகட்டும். அங்க அவ தனியா தானே இருப்பா... சோ, அங்க போய் பேசிக்கலாம்." என்று நினைத்தவள், விஷ்ணுவோடு கூட வீட்டிற்கு செல்ல விரும்பாமல், ஒரு கால் டாக்ஸியை புக் செய்து கிளம்பினாள்.
விஷ்ணு தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து அதில் அமர்ந்து இருந்தான். 🏍️ ராகவியும் தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து தனக்கு பின்னே ஷாலினியை அமர்த்திக் கொண்டு கிளம்ப தயாராக இருந்தாள்.
விஷ்ணு: “அக்கா ஒரு நிமிஷம்." என்றான் ராகவியை பார்த்து.
ராகவி: “என்ன ஆச்சு நான் சைட் ஸ்டாண்ட்ட ஏதாவது ஒழுங்காக எடுக்காம இருக்கனா...??" என்றவள், கீழே குனிந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்தாள். அனைத்தும் சரியாக தான் இருந்தது. அதனால் விஷ்ணுவைுவை பார்த்தவள், “எல்லாம் கரெக்டா தானே இருக்கு. அப்புறம் ஏன் கூப்பிட்ட..???" என்று குழப்பமாக கேட்டாள்.
விஷ்ணு: “ஐயோ..!!! அக்கா... என்ன பேச விடுங்க. நீங்களா ஒன்ன புரிஞ்சுகிட்டு பேசினா எப்படி..???" என்று கேட்டான்.
ரித்திகா: ஸ்கூட்டியை ஆப் செய்தவள் விஷ்ணுவை பார்த்து, “சரி. இப்ப சொல்லு கேட்கிறேன்." என்றாள்.
விஷ்ணு: இன்னைக்கு என் பிரண்டு மதனோட சிஸ்டருக்கு எங்கேஜ்மென்ட். சோ அவன் என்ன இன்வைட் பண்ணி இருக்கான்.
ரித்திகா: “ஓகே. நல்ல விஷயம் தானே... போயிட்டு வா. அத எதுக்கு என் கிட்ட சொல்ற...??? ஓ...!!! இந்த அக்கா கிட்ட சொல்லாம நீ எங்கயுமே போக மாட்டியா டா தம்பி..??? இந்த காலத்துல எனக்கு இப்படி ஒரு தம்பியா..??? நினைக்கும் போதே எனக்கு கண்ணெல்லாம் கலங்குது டா." என்று பழைய பட பாணியில் நக்கலாக சொன்னவள், தன் கண்களில் இருந்து வராத கண்ணீரை அவளுடைய விரலால் துடைத்தாள். 😥 ரித்திகா சொன்னதை கேட்ட ஷாலினி வாய்விட்டு சிரித்தாள். 😂 😂 😂
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 110
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.