தாபம் 11

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 11: ப்ளீஸ் அக்கா உங்களுக்கு அவன் வேண்டாம்


வருண்ணிற்கு சித்தார்த்தின் மீது இருக்கும் பாசம் ரித்திகாவின் மீது கோபமாய் மாறியது.


சித்தார்த்தின் பள்ளியில்..


ஷாலினியும், ரித்திகாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது…


ஷாலினி: "அக்கா..!! இன்னிக்கு அந்த மேனாமினுக்கி வந்தாளாம்... நீங்க பாத்தீங்களா..?" என்று தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்க,

ரித்திகா: "மேனாமினுக்கியா..?? அது யாரு?" என புரியாமல் கேட்டாள்.

ஷாலினி: "வேற யாரு அந்த பிராத்தனா தான்."

ரித்திகா: “பிராத்தனா” அதே பெயருடைய பெண்ணை பிரின்சிபல் அறையில் அவள் பார்த்ததை நினைவுபடுத்தினாள், “ஆமா..!! இன்னைக்கு பிராத்தனான்னு ஒரு பொண்ண பிரின்சிபல் ரூம்ல பாத்தேன். பிரின்சிபல் அந்த பொண்ணு கிட்ட ரொம்ப மரியாதையா பேசினாங்க. ஆனா அந்த பொண்ணுக்கு மரியாதைன்னா என்னன்னே தெரியாது போல..!!" 🙁

ஷாலினி: "அவளே தான்க்கா. சரியான மேனாமினுக்கி. அவ கிட்ட போய் யாராச்சும் ரெஸ்பெக்ட் பத்தி பேசினா.. ரெஸ்பெக்ட் ஆ அப்படின்னா என்னான்னு கேப்பா..😒"

ரித்திகா: "அந்த பொண்ண பாத்தா ரொம்ப மோசமான பொண்ணு மாதிரி லாம் தெரியல. என்ன கொஞ்சம் ஆட்டிட்யூட் தான் சரி இல்லை. சின்ன பொண்ணு தானே போக போக சரி ஆயிடுவான்னு நினைக்கிறேன்."

ஷாலினி: "அட போங்க அக்கா. அவளா சின்ன பொண்ணு...? வயசுக்கு தகுந்த பேச்சா பேசுறா அவ? நீங்க ரொம்ப இன்னசென்ட் இருக்கீங்க அக்கா. பார்த்தாலும் அதான் உங்களுக்கு யாரை பார்த்தாலும் நல்லவங்களா தெரியுது."

ரித்திகா: "சரி..!! விடு பொங்காத. அந்த பொண்ணு யாரு? அத முதல்ல சொல்லு."

ஷாலினி: "இந்த ஸ்கூலோட ஃபவுண்டர் இருக்காரே வருண் நாரயணன் சார் அவரொட ஒரே தங்கச்சி தான் இந்த பிராத்தனா". என்றவள், "அவளுக்கு பிராத்தனான்னு பேரு வச்சதுக்கு பதிலா பிசாசுன்னு பேரு வச்சி இருக்காலாம் அக்கா. சரியான ராட்சி அவ." 😒 என்று பொரிந்து தள்ளினாள்.


ரித்திகா: "கூல்.. கூல்..." என்று சிரித்தவள், 😁 "நீ இப்படி ஹை பிட்சில பேசுறத பாத்தா.. அவ கிட்ட பெருசா வாங்கி கட்டி இருப்ப போலவே..?" என்று நக்கலாக கேட்டாள்.

ஷாலினி: "ஆமா அக்கா. ஒரு நாள் அவ இங்க வந்து இருந்தா. அப்போ ஏதோ ஒரு கிளாஸ்ல ஸ்டூடண்ட்ஸ் அ கண்ட்ரோல் பண்ண முடியாம ஒரு டீச்சர் ரொம்ப ட்ரை பண்ணிட்டு இருந்து இருக்காங்க. அசோசியேட் டீச்சர் எங்கன்னு கேட்டு சண்டை போட்டு இருக்கா இந்த பிராத்தனா.... அப்ப தான் க்கா ஒரு பீரியட் முடிஞ்சு இன்னொரு பீரியட் ஸ்டார்ட் ஆச்சு.
அந்த கிளாஸ்ல இருந்த டீச்சர் இன்னும் நான் வரலன்னு போட்டுக் கொடுத்துட்டா. எனக்கு வேற பிளாக்ல கிளாஸ் இருந்துச்சு. அங்க இருந்து இங்கே வர டைம் ஆகாதா க்கா..? நானே அடிச்சு புடிச்சு வேகமா லேட் ஆகுதேன்னு ஓடி வந்தேன். அப்பயும் எப்படியோ பீரியட் ஸ்டார்ட் ஆகி 5 மினிட்ஸ் குள்ள வந்துட்டேன். என்ன பாத்துட்டு என்னென்ன பேச்சு பேசுனா தெரியுமா அவ.. நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்கல க்கா. இஷ்டத்துக்கு அவ பாட்டுக்கு பேசுறா.. நம்மள விட சின்ன பொண்ணு கிட்ட இப்படி திட்டு வாங்குறமேன்னு ரொம்ப ஷேமா இருந்துச்சு அக்கா." என்று பெரியதாக மூச்சுவிடாமல் தன்னுடைய சோக கதையை சொல்லி முடித்தாள். 😒😢


ரித்திகா: "இதெல்லாம் teachers life-ல ரொம்ப சாதாரணம் ஷாலினி.." என்று வடிவேலு பாணியில் சொன்னவள், "இதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணா ஸ்கூல்ல குப்பை கொட்ட முடியும் ஆ? விடு பாத்துகலாம்.. first dayவே லேட்டா வந்தேன்னு நானும் தான் திட்டு வாங்குனேன். உனக்கு ஃபீல் ஆன மாதிரி தான் எனக்கும் ஃபீல் ஆச்சு. அதுக்குன்னு அதையே நினைச்சுட்டு இருக்க முடியுமா...?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ஷாலினி: "அதுவும் கரெக்ட் தான் அக்கா." என்று சொல்ல,
இப்படியே இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஃபர்ஸ்ட் பீரியட் முடிந்து செகண்ட் பீரியட் ஸ்டார்ட் ஆவதற்கான அறிகுறியாய் ஸ்கூல் பெல் அடித்தது.

இருவருக்குமே அந்த பீரியட் க்ளாஸ் இருந்ததால் ஸ்டாஃப் ரூமில் இருந்து அவர்கள் செல்ல வேண்டிய வகுப்பிற்கு சென்று விட்டனர். சில மணி நேரம் கடந்து இருக்க, லஞ்ச் பெல் அடித்தது. வகுப்பறையில் இருந்த ரித்திகா ஸ்டாப் ரூமிற்கு வந்தாள். அங்கிருந்த ஷாலினி ரித்திகாவைப் பார்த்தவுடன் சாப்பிட வருமாறு அழைத்தாள்.


ரித்திகாவும் தன்னுடைய லஞ்ச் பாக்ஸ்ஐ எடுத்துக் கொண்டு ஷாலினி அருகில் சென்று அமர்ந்தாள். ரித்திகா லஞ்ச் பாக்ஸ்ஐ திறந்து சாப்பிட போகும் போதுதான் அவளுக்கு சித்தார்த்தின் ஞாபகம் வந்தது. உடனே அவளுடைய லஞ்ச் பாக்ஸ்ஐ அப்படியே மூடி வைத்தாள் ரித்திகா.

ஷாலினி: ரித்திகாவைப் பார்த்தவள், "அக்கா என்ன ஆச்சு..? ஏன் சாப்பிடாம பாக்ஸ் ஆ க்ளோஸ் பண்ணிட்டீங்க..?"

ரித்திகா: "சித்தார்த்தை இன்னைக்கு வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருந்தேன். நான் போய் பார்க்கலனா அவன் ஃபீல் பண்ணுவான் ல..? அதான் போய் பார்த்துட்டு வந்து சாப்பிடுறேன்."

ஷாலினி: "சித்தார்த் ஆ..?" என்று ஒரு நொடி யோசித்தவள், "சித்தார்த்ன்னு ஒரு கெமிஸ்ட்ரி டீச்சர் இருக்கானே.. அவனவா பாக்க போறிங்க..?" என்று ஆர்வமுடன் கேட்டாள்.

ரித்திகா தான் பார்க்க நினைப்பது ஒரு குழந்தையை என்று சொல்ல வாயைத் திறப்பதற்குள் முந்திக் கொண்ட ஷாலினி, மீண்டும் அவளே பேசத் தொடங்கினாள்.


ஷாலினி: "ஐயோ.. அவன் சரி இல்ல க்கா. எந்த பெண்ணை பாத்தாலும் வலியுவான். நீங்க இன்னைக்கு தான் வந்திருக்கீங்க உங்களையும் அவன் கரெக்ட் பண்ணிட்டானா..? நீங்க எவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, அவன போய் லவ் பண்ணி வழுக்கி விழுந்திடாதிங்க அக்கா. உங்களுக்கு அவன் வேண்டாம்." என்று படபடவென்று பேசினாள்.


ரித்திகா: ஷாலினி பேசியதைக் கேட்டு பலமாக சிரித்தவள்😂, "யம்மா தாயே.. எப்படி இப்டி சாப்பிட்டுகிட்டே இவ்ளோ வேகமா பேசுற..? கொஞ்சம் கேப் விடு மா." என்றாள்.

ஷாலினி: "இப்ப என்ன அக்கா நான் சொல்ற மாதிரி எல்லாம் இல்ல. அவன் ரொம்ப நல்லவன்னு சொல்லப் போறீங்களா..? ப்ளீஸ் அக்கா அவனை நம்பாதீங்க." என்று மீண்டும் ரித்திகாவை பேசவிடாமல் பேசினாள்.

ரித்திகா: "யார்றா இவ.." என்று தன் மனதிற்குள் நினைத்தவள், "அடியே..!! இப்ப நீ என்ன பேச விடுவியா? மாட்டியா?" என்று சலிப்பாக கேட்டாள். 🙁

ஷாலினி: "சாரி அக்கா. நீங்க அவன லவ் பண்றீங்களோன்னு நினைச்சு டென்சன் ஆயிட்டேன் நீங்க சொல்லுங்க.. அப்படி எல்லாம் இல்ல தானே..?"

ரித்திகா: "அப்படி எல்லாம் இல்ல தாயே நான் சொன்ன சித்தார்த்துக்கு அஞ்சு வயசு தான் இருக்கும்.. அண்ட் நீ சொன்ன அந்த கெமிஸ்ட்ரி சார் யாருன்னே எனக்கு தெரியாது."

ஷாலினி: "அஞ்சு வயசு தானா..? அப்ப ஸ்டூடண்ட் ஆ..?"

ரித்திகா: "ஸ்டுடென்ட் இல்ல என்னோட ஃப்ரெண்ட்." என்று சொல்லிவிட்டு அழகாக அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஷாலினி: "என்ன அக்கா குழப்புறீங்க..?"

ரித்திகா: "நீ அநியாயத்துக்கு கொஸ்டின் கேட்குற ஷாலினி. அதுக்கெல்லாம் நான் ஆன்சர் பண்ணிட்டு போனா லஞ்ச் பீரியட்டே முடிஞ்சுரும்." 😂😂 என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

ஷாலினி: "அச்சோ..!! சாரி அக்கா ரொம்ப பேசிட்டேனோ.. 😞" என்று சோகமாக கேட்டாள்.

ரித்திகா: "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டா. நான் போய் பேசிட்டு வந்துரரேன். நீ சாப்பிட்டுட்டு இரு."

ஷாலினி: "ஓகே அக்கா."

ரித்திகா: "1st ஸ்டாண்டர்ட் க்ளாஸ் ரூம் எங்க இருக்கு?"

ஷாலினி: "கிரவுண்ட் ஃப்லோர் தான். ரூம் நம்பர் 10."

ரித்திகா: "ம்ம்ம்.... நான் போய்ட்டு வந்துடுறேன்."

ஷாலினி: "சீக்கிரம் வாங்க லன்ச் 1:30 க்கு முடிஞ்சுரும்."

ரித்திகா: "ஓகே.. ஓகே..!!" என்று சொல்லிவிட்டு ஸ்டாஃப் ரூமில் இருந்து வெளியே வந்தவள், நேராக சித்தார்த்தின் வகுப்பறைக்கு சென்றாள்.

அங்கே நிறைய குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அங்கு சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த குழந்தைகளை அங்கே வேலை பார்க்கும் ஆயம்மாவும், ஒரு ஆசிரியரும் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்துக் கொண்டு இருந்தனர்.

அங்கே இருந்த குழந்தைகளுள் சித்தார்த்தைத் தேடிக் கொண்டு இருந்தாள் ரித்திகா. அப்போது ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்த சித்தார்த், சுகந்தியிடம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

அவனை தேடிக் கொண்டு அங்கே வந்து இருந்த ரித்திகா, இன்னும் அவனை வந்து பார்த்திருக்கவில்லை என்பதால் அவனுடைய முகம் சோகத்தில் வாடிப்போய் இருந்தது.
திடீரென்று தன்னுடைய தலையை தூக்கி பார்த்த சித்தார்த், ஒரு வகுப்பறைக்கு முன் நின்று ரித்திகா யாரையோ தேடிக் கொண்டு இருப்பதை கண்டான். நேற்றை போல் இன்றும்.. ரித்திகாவைக் கண்டவன், ஓடிச் சென்று அவளுடைய கால்களைக் கட்டி பிடித்து கொண்டான்.

திடீரென்று சித்தார்த் எழுந்து ஓடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகந்தி, அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தாள். பின் ரித்திகாவைப் பார்த்த சுகந்தி, சித்தார்த், ரித்திகாவைப் பார்க்க தான் ஓடி வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட சுகந்தி நிம்மதி அடைந்தாள்.


தன்னுடைய கால்களை இரு குட்டி கைகள் கட்டிப் பிடித்த உடனே அது சித்தார்த் தான் என்று புரிந்து கொண்ட ரித்திகா, சிரித்துக் கொண்டே கீழே குனிந்து அவனை தூக்கி தன்னுடைய இடுப்பில் வைத்துக் கொண்டாள்.


சித்தார்த்: "ரித்து.. நான் உன்ன பாக்குறதுக்கு தான் ஸ்கூலுக்கு ஜாலியா கிளம்பி வந்தேன். நீ காலை ல இருந்து என்ன வந்து பாக்கலையா... அதனால நீ வர மாட்டேன்னு நினைச்சு நான் அழுதேன் தெரியுமா..' 😢 என்று அவனுடைய மழலை குரலில் அவனுடைய கண்கள் லேசாக கலங்கியது.


ரித்திகா: "அச்சோ சித்து குட்டி அழக்கூடாது" அவனுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டாள்.

பின் சித்தார்த்தின் தாடையை அவளுடைய கைகளால் பிடித்து அவனை அவளுடைய முகத்தைப் பார்க்கும் படி செய்தவள், “நீ என்ன தேடுனியா?" என்று கேட்டாள்.

சித்தார்த்: "ஆமாம்" என்பது போல சிறு விசும்பல்கள் உடன் தன்னுடைய தலையை ஆட்டினான்.

ரித்திகா: "நான் தான் உன்க்கு ப்ரோமிஸ் பண்ணேன்ல கண்டிப்பா நான் வந்து பார்ப்பேன்னு.. அப்புறம் ஏன் நீ அழுத...?"

சித்தார்த்: "நான் உன்ன மிஸ் பண்ணேன் அதான்.." என்று கரகரத்த குரலில் பாசம் நிறைந்த கண்களுடன் ரித்திகாவைப் பார்த்து சொன்னான்.

ரித்திகா: "நானும் தான் உன்னை மிஸ் பண்ணேன் தெரியுமா..?" என்றவள், அவனுடைய கொழுகொழு கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்.

சித்தார்த்: சிரித்தபடியே ரித்திகா செய்த மாதிரியே ரித்திகாவின் கன்னத்தை பிடித்து அவனுடைய குட்டி கைகளால் கில்லியபடி "அப்ப நீயும் என்ன மிஸ் பண்ணியா..?" என்று கேட்டான்.

ரித்திகா: சித்தார்த்தைப் போலவே அவளும் "ஆமாம்" என்பது போல தன்னுடைய தலையை ஆட்டினாள். பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க.. 😁😁 இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர்.


அவர்களின் அருகே நின்று இருவரையு
ம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த சுகந்தி, சித்தார்த் மகிழ்ச்சியாக இருப்பதை நினைத்து அவளும் மகிழ்ந்தாள்.

-நேசம் தொடரும்...
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.