தாபம் 107

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 107: திருமணம் உறுதி செய்யப்பட்டது (பார்ட் 2)

செண்பகத்தின் வார்த்தைகள் ராகவியின் பெற்றோர்களின் மனதை தொட்டது. கலங்கிய கண்களோடு செண்பகத்தை பார்த்த சுதாகர், “ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்துட்டோம் மா. அவள கொஞ்சம் பாத்துக்கோங்க." என்றார் உருக்கமாக. 🥺

செண்பகம்: “நீங்க கண் கலங்காதீங்க அண்ணா. நானும் ஒரு பொண்ண வச்சிருக்கேன். என் பொண்ண நான் கல்யாணம் பண்ணி குடுக்கும்போது, அவ போற வீட்ல அவளை எப்படி மத்தவங்க பாத்துக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கிறேனோ, அத விட அதிகமா நான் ராகவிய பாத்துப்பேன்." என்றாள் உறுதியாக.

சுதாகர்: “ரொம்ப சந்தோஷம் அம்மா." என்றவர், செண்பகத்தை கையெடுத்து கும்பிட்டார். 🙏

செண்பகம்: “கைய முதல்ல கீழ இறக்குங்க. நீங்க என்ன நம்பி என் பையனுக்கு பொண்ணு குடுக்குறதுக்கு நான் தான் உங்க கிட்ட நன்றி சொல்லணும். விடுங்க மாத்தி மாத்தி நம்ப இப்படியே பேசிக்கிட்டு இருக்க வேண்டாம். உங்க பொண்ணு உங்கள விட்டுட்டு எங்க தூரமாவா போக போற...??? இங்க பக்கத்துல தானே கல்யாணம் பண்ணி குடுக்க போறீங்க..???

இனிமே நீங்க ஏன் லேபர்ச் கோட்ரஸ்ல தங்கணும்..??? அதான் அரண்மனை மாதிரி வீடு கட்டி வச்சிருக்கானே உங்க மருமகன்...!! பேசாம நீங்களும் அங்க வந்துருங்க. உங்களுக்கும் உங்க பொண்ணு கூடவே இருந்த மாதிரி இருக்கும்." என்றாள்.

சுதாகர்: நீங்க கேட்டதே போதும் மா. பொண்ணு குடுத்த வீட்ல, நாங்க வந்து தங்குறது நல்லா இருக்காது. நீங்க சொன்ன மாதிரி அவ பக்கத்துல தானே இருக்க போறா நாங்க அடிக்கடி வந்து பார்த்துட்டு வறோம்.

செண்பகம்: எனக்கு நீங்க சங்கடப்படுறது புரியுது. ஆனா நம்ம பெருசா வீடு கற்றதே எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருக்குறதுக்கு தானே...!!! 🏠 அதனால நீங்க அங்க வந்து இருக்கிறத பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ஏன் சொல்றேன்னா... நீங்களே இவ்ளோ பயப்படுறீங்க. புதுசா நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்க போறமே, அந்த வீடு எப்படி இருக்க போகுதுன்னு ராகவிக்கும் அதே பயம் இருக்கும்ல...!!! நீங்களும் அவ கூட இருந்தா அவ சந்தோஷப்படுவா.

நீங்க ஊர் வாய நினைச்சு பயப்படாதீங்க. என்னைக்குமே இந்த உலகம் நம்ம வாழ்ந்தாலும் சரி, தாழ்ந்தாலும் சரி, நம்மள பத்தி பேசுறத நிறுத்தாது. நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நம்ம நடந்துகிட்டா போதும்.

சுதாகர்: “நீங்க சொல்றது எல்லாமே சரி தான் மா. ஆனா என்னவா இருந்தாலும், பொண்ண கட்டிக் குடுக்குற வீட்ல வந்து இருக்கறதுல எனக்கு விருப்பமில்ல." என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

செண்பகம்: ஓகே. நீங்க உங்க விருப்பப்படியே செய்யுங்க. ஆனா நீங்க அங்க வந்தா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்.

ரேவதி: சரிங்க மா. கல்யாணத்த எப்ப வச்சுக்கலாம்னு இருக்கீங்க...????

செண்பகம்: “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வெச்சிடலாம்னு தான் இருக்கேன் அண்ணி. என் ஹார்ட்ல ஏற்கனவே ஓட்டை இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. எனக்கு ரொம்ப வயசானதுனால, எனக்கு அத தாங்குற பாடி கண்டிஷன் இல்லைன்னு ஆபரேஷன் பண்ணாம இருக்காங்க. அதனால நான் எத்தன நாள் இருப்பேன்னு எனக்கே தெரியல. இந்தக் கல்யாணம் சீக்கிரம் நடந்துட்டா, எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும், நான் போறதுக்குள்ள ராகவிக்கு சொல்லிக் குடுத்துடுவேன்." என்று கண் கலங்க உருக்கமாக பேசினாள்.

ரேவதி: கவலைப்படாதீங்க மா. நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருப்பீங்க.

செண்பகம்: “எனக்கு ரொம்ப நாள் நல்லா வாழனும்ன்னு எல்லாம் ஆசை இல்லை. நான் எப்படியோ என் விஷ்வாவுக்கு மட்டும் ஒரு நல்ல வாழ்க்கையா அமைச்சு குடுத்துட்டா போதும். என் மத்த பிள்ளைகளை அவனே அப்பா ஸ்தானத்தில இருந்து நல்லா பாத்துக்குவான். அவன் கிட்ட இருக்கிற பிரச்சினையை அவன் மத்த எல்லார பத்தியும் யோசிப்பான். ஆனா, அவன பத்தி மட்டும் அவன் யோசிக்கவே மாட்டான். இனிமே ராகவி தான் அவன நல்லா பாத்துக்கணும்.

எல்லா பொறுப்பையும் தூக்கி ராகவி தலையில நான் போடுறேனே கடைசில நான் இல்லைனா ராகவிய யார் நல்லா பாத்துப்பாங்கனு நினைக்காதீங்க. நான் இல்லைனாலும் அவளுடைய புருஷனும், பையனும், அவளுக்காக இருப்பாங்க. செத்துப்போன ஜான்வியால்வே இத்தன நாளா நினைச்சுட்டு இருக்கிறவன், ஒரு நாள் ரித்திகா மேலையும் உயிரா இருப்பான்." என்று உறுதியாக சொன்னாள்.

பின் அவர்கள் தங்களுடைய குடும்பத்தை பற்றி ஒருவருடன் மற்றொருவர் பேசிக் கொண்டு இருந்தனர்.

நாராயணன் பேலஸுல்....

ஹரி சொன்னதற்காக வேறு வழி இன்றி அவனுடைய அத்தையை வரவேற்பதற்காக, ஹாலில் காத்திருந்தான் அவனுடைய மேனேஜர் தர்ஷன். உள்ளுக்குள் சீத்தா தன்னை என்னென்ன கேள்வி எல்லாம் கேட்டு தொலைக்கப் போகிறாளோ என்று நினைத்து பயந்து கொண்டு இருந்தான் தர்ஷன். அப்போது சிறிது நேரம் கழித்து அங்கே, சீத்தா தன்னுடைய மூத்த மகள் தேவ தர்ஷினியையும், கடைசி மகன் சூர்ய குமாரையும், அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அவர்களைப் பார்த்த தர்ஷன், எழுந்து நின்று விட்டான்.

தன்னுடைய கண்களால் அந்த வீட்டை ஸ்கேன் செய்த படியே ஒய்யாரமாக வந்து சோபாவில் அமர்ந்த சீத்தா தர்ஷனை பார்த்து, “என்ன டா வீட்ல நீ மட்டும் தான் இருக்க... உன்ன தவிர வேற யாரையும் காணோம்...!!! எங்க என் அண்ணி..??? சுகந்தி கூட இருக்கிற மாதிரி தெரியலையே...???" என்று அதிகார தோரணையில் கேட்டாள். 😒

தர்ஷன்: “செண்பகம் மேடமும், என் அம்மாவும், விஷ்வா சாருக்கு ராகவி மேடம் ஐ பொண்ணு கேக்குறதுக்காக அவங்க வீட்டுக்கு போய் இருக்காங்க. நீங்க இங்க வர்றதா இன்ஃபார்ம் பண்ணிங்கன்னு செண்பகம் மேடம் ஹரி சாருக்கு கால் பண்ணி சொல்லி அவர இங்க வந்து உங்க கூட இருக்க சொன்னாங்க. ஆனா திடீர்னு விஷ்வா சாருக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சு. அதான் ஹரி சார் அவர் கூட இருக்காரு. நீங்க இங்க வரும்போது வீட்டில் யாருமே இல்லாம இருந்தா நல்லா இருக்காதுன்னு தான் உங்க கிட்ட இத சொல்றதுக்காக என்ன அனுப்பி வச்சாரு." என்று பயந்து பயந்து சொன்னான். 😟

தர்ஷன் சொன்னதை கேட்ட சீத்தாவிற்கு செண்பகத்தின் மீதும், ஹரியின் மீதும், கோபம் கோபமாக வந்தது. தன்னுடைய கவனத்திற்கு வராமல் இந்த வீட்டில் நிறைய நடக்கிறது என்று நினைத்தவள், “அது யாரு டா அவ..!!! புதுசா அந்த ராகவி மேடம்..???" என்று நக்கலாக கேட்டாள். 😂 😂 😂

தர்ஷன்: அவங்க நம்ப சித்தார்த் படிக்கிற ஸ்கூல்ல தான் டீச்சர் ஆ வேலை பாக்கிறாங்க. சித்தார்த்துக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும். அதனால விஷ்வா சாருக்கு அவங்கள கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்ன்னு செண்பகம் மேடம் நினைக்கிறாங்க.

சீத்தா: “ஓ... அப்ப அவளும் வேலைக்காரி தானா....!!!! இவங்களுக்கு இதுவே பொழப்பா போச்சு. எப்ப பாத்தாலும் வேலைக்காரங்க வீட்டிலேயே பொண்ணு கட்றாங்க. ஏற்கனவே ஒன்னும் இல்லாத வீட்டுல இருந்து அந்த ஜான்விய கட்டிட்டு வந்தது பத்தாதா...??? என் பொண்ண விட அவ தான் ஒசத்தின்னு அவள விஷ்வாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.

அவ தான் இப்ப செத்து தொலைஞ்சுட்டா இல்ல...!!! விஷ்வாவுக்கு பண்ற இரண்டாவது கல்யாணம் ஆவது ஒழுங்கா பண்ண வேண்டாமா...??? நாம்ம பையனுக்கு என்ன குறைச்சல், இப்படி ஒரு வீட்டில போய் நம்ம எதுக்கு பொண்ணு எடுக்கணும்...???" என்று செண்பகத்திடம் கேட்க வேண்டியதை எல்லாம் தர்ஷனிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

தர்ஷன்: அத பத்தி எல்லாம் எனக்கு தெரியல மேடம். ஆனா சித்தார்த்துக்காக தான் இந்த கல்யாணம் நடக்குதுன்னு ஹரி சார் சொன்னாரு.

சீத்தா: “எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு தெரியாத மாதிரியே நடிக்காத டா. இந்த வீட்ல எனக்கு தெரியாம கூட ஏதாவது நடக்கும். ஆனா உங்க குடும்பத்துக்கு தெரியாம தான் எதுவுமே நடக்காதே..!!!! உங்க அம்மா தான் எப்ப பாத்தாலும் நிழல் மாதிரியே எங்க அண்ணி கூடயே ஒட்டிக்கிட்டு சுத்துவாளே...!!! ஏன் அவ உன் கிட்ட இத பத்தி எதுவும் சொல்லலையா...???" என்று அதட்டலாக கேட்டாள்.

தர்ஷன்: எங்க அம்மாவுக்கு இத பத்தி ஏதாவது தெரியுமான்னு எனக்கு தெரியல. ஆனா அவங்களுக்கு தெரிஞ்சாலும், எங்க கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க. உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லையே மேடம்...!!! இங்கே வேலை பார்க்கிறவங்களுக்கு யாருக்கு எது தெரிஞ்சாலும் அவங்க அத பத்தி மத்தவங்க கிட்ட சொல்ல மாட்டாங்கன்னு...!!!!

சீத்தா: “ஆமா, அப்படியே எல்லா சட்ட, திட்டத்தையும் கரெக்டா பாலோ பண்ற மாதிரி தான். அது சரி..!!! விஷ்வாவுக்கு அவ்ளோ சீரியஸா உடம்பு முடியலன்னா, அவன அப்படியே விட்டுட்டா என் அண்ணி அவனுக்கு பொண்ணு பாக்க போனாங்க...??? ஹரி இங்க வர பயந்துகிட்டு சும்மா சாக்கு சொல்றதுக்காக உன்ன அனுப்பி வச்சிருக்கானா...????

உங்க செண்பகம் மேடம் அவன் ஒரு பெரிய மனுசன்னு அவன இங்கே போக சொல்லி அனுப்பினா, அந்த பெரிய மனுஷன், நீ ஒரு பெரிய மனுஷன்னு உன்ன அனுப்பி வச்சிருக்கான். எல்லாரும் இப்படி இருந்தீங்கன்னா இந்த குடும்பம் நல்லா விளங்கும். எல்லாம் என் அண்ணிய சொல்லணும். அவங்க நிர்வாகம் சரி இல்ல. எப்பயுமே எங்க குடும்பத்த நீங்க இரண்டாம் பட்சமா தானே நடத்துறீங்க...!!!" என்று செண்பகத்தின் மேல் தனக்கு இருந்த ஆதங்கத்தை எல்லாம் தர்ஷனிடம் கொட்டிக் கொண்டு இருந்தாள்.

இப்போது தான் சீத்தாவிற்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்து குழம்பிய தர்ஷன், “நீங்க செண்பகம் மேடம் ஐ தப்பா நினைக்காதீங்க மேடம். அவங்க உங்களை எப்பவுமே அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க." என்று ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லிவிட்டான்.

சீத்தா: “ஆமாம்மா... நீ உன்னோட முதலாளி அம்மாவுக்கு தானே வக்காலத்து வாங்குவ..!!!! நீ சொல்றத பார்த்தா நான் தான் வேணும்னே எடுத்துக் கட்டிக்கிட்டு பேசுற மாதிரி இல்ல இருக்கு...???" என்று அவன் மேல் சீறினாள்.

இதற்கு தான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தர்ஷனுக்கு தெரியவில்லை அதனால் வாய் அடைத்து போய் அமைதியாக நின்று சீத்தா என்ன பேசினாலும் பரவாயில்லை என்று கேட்டுக் கொண்டு இருந்தான். அதுவரை தன்னுடைய அம்மாவின் அருகே அமர்ந்து அவள் பேசியது அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த தேவ தர்ஷினி அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல், “போதும் மா..!!! கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க பாட்டுக்கு இப்படி இவர் கிட்ட கேள்வி மேல கேள்வியா கேட்டுக்கிட்டே இருந்தா அவர் பாவம் என்ன பதில் சொல்லுவாரு...??? உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா, அத மாமாகிட்டயும், அத்தைகிட்டயும், கேளுங்க." என்று அமைதியான குரலில் சொன்னாள்.



சீத்தா பேசியதற்கு அப்படியே நேர் மாறாக இருந்தது தர்ஷினி பேசிய விதம். சீதா இங்கே வந்ததில் இருந்து அவளையே பார்த்து பயந்து கொண்டு இருந்த தர்ஷன், அவளுடன் வந்த தர்ஷினியை இப்போது தான் கவனித்தான். பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் பாவாடை தாவணி அணிந்து இருந்த தர்ஷினி, நேர் வகுடு எடுத்து தன்னுடைய நீண்ட கூந்தலை அழகாக பின்னி, தலை நிறைய மல்லிகை பூ வைத்து, பார்ப்பதற்கே மங்களகரமாக எங்க வீட்டு குத்துவிளக்குு என்று சொல்வது போல பிரகாசமாக ஜொலித்து கொண்டு இருந்தாள். ✨

தர்ஷனின் கண்களுக்கு சீத்தாவிடம் இருந்து தன்னை காப்பாற்ற வந்த அழகு தேவதையாக தெரிந்தாள் தர்ஷினி. 😍 ❤️ தன்னுடைய முட்டை கண்களால் தர்ஷனை பார்த்த தர்ஷினி, “இதுவும் எங்க வீடு தான். நாங்க இங்க வர்றப்ப யாரும் வந்து எங்களை இங்க இருந்து வரவேற்கணும்னு எந்த அவசியமும் இல்ல. நீங்க இங்க இருந்து கிளம்புங்க. போய் விஷ்வா மாமாவுக்கு என்னாச்சுன்னுு பாருங்க. அத்தை இங்க வரும்போது வரட்டும். நாங்க எங்களோட ரூமுக்கு போறோம்." என்றவள் தன்னுடைய அம்மாவையும், தம்பியையும், அழைத்து கொண்டு அவர்கள் இங்கே வரும்போது எல்லாம் தங்கும் எப்போதும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்றுு விட்டனர்.

இப்போது தான் தர்ஷனுக்கு போன உயிர் மீண்டும் வந்தது போல் இருந்தது. அதனால் தன் மனதிற்குள் தர்ஷினிக்கு “நன்றி" சொன்னவன் அங்கு இருந்து கிளம்பி மீண்டும் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.

ராகவியின் வீட்டில்....



தான் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதால் எப்படியும் இந்நேரம் சீத்தா வீட்டிற்கு வந்து இருக்க கூடும் என்று நினைத்த செண்பகம், “நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன். என்னோட நாத்தனார் வேற வீட்டுக்கு வர்றதா கால் பண்ணாங்க. எப்படியும் இந்நேரம் வந்திருப்பாங்க. வீட்ல யாரும் இல்லைன்னு அப்புறம் கோபப்படுவாங்க." என்றாள்.

ரேவதி: என்ன சம்மந்தி அம்மா அதுக்குள்ள கிளம்புறீங்க..??? நீங்க வரும்போது அவங்களையும் கையோட கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல்ல...???? நீங்க வந்துட்டு எதுவுமே சாப்பிடாம வேற கிளம்புறது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.

செண்பகம்: என்னோட நாத்தனார் கொஞ்சம் ஷார்ட் டெம்பர். எதா இருந்தாலும் பட்டு பட்டுன்னு பேசிருவாங்க. நான் இன்னும் அவங்க கிட்ட விஷ்வாவுக்கு ராகவிய பொண்ணு பாத்தத பத்தியே சொல்லல. அவங்க பொண்ணு தர்ஷினிய என்னோட இரண்டாவது பையன் ஹரிக்கு கல்யாணம் பண்றது சம்பந்தமா தான் இப்ப பேச வந்து இருக்காங்கன்னு நினைக்கிறேன். நம்ம ராகவி மாதிரியே தர்ஷினியும் ரொம்ப தங்கமான பொண்ணு. விஷ்வா கல்யாணம் முடிஞ்ச உடனே அவளுக்கும், ஹரிக்கும், கல்யாணம் பண்ணிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்.

சுதாகர்: “அடுத்த தடவ வரும் போது விஷ்வா தம்பியை கூட்டிட்டு சொல்லிட்டு வாங்க. நீங்க அப்ப கண்டிப்பா இருந்து சாப்பிட்டு தான் போகணும்." என்று உரிமையாக சொன்னார்.

செண்பகம: “கண்டிப்பா அண்ணே. நான் விஷ்வாவ கூட்டிட்டு ராகவிய பாக்குறதுக்கு வரேன்." என்று சொன்னவள் அங்கு இருந்து கிளம்பினாள்.

- நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 107
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.