அத்தியாயம் 106: திருமணம் உறுதி செய்யப்பட்டது (பார்ட் 1)
ராகவியின் வீட்டில்...
சுதாகரும், ரேவதியும், இதற்கு முன் செண்பகத்தை பார்த்ததில்லை என்பதால் அவள் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் குழப்பமாக செண்பகத்தை பார்த்த ரேவதி, “நான் இப்படி கேட்கிறேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க மா. நாங்க இதுக்கு முன்னாடி உங்கள பாத்ததில்லை. யார் நீங்க..???" என்றாள்.
செண்பகம்: “இதுல தப்பா நினைக்கிறதுக்கு என்ன மா இருக்கு..??? திடீர்னு தெரியாதவங்க யாராவது வீட்டு வாசல்ல வந்து நின்னா, யாரு என்னன்னு கேட்காம எப்படி உள்ள வர சொல்ல முடியும்...??? நானே என்ன அறிமுக படுத்துகிறேன். நான் விஷ்வாவோட அம்மா, செண்பகம். உங்க கிட்ட விஷ்வா, ராகவி கல்யாணத்தைப் பத்தி பேசுவதற்கு வந்து இருக்கேன்." என்றாள், சிறு புன்னகையுடன். 😁 😁 😁
ரேவதி: “ஐயோ சாரி மேடம். நாங்க இதுக்கு முன்னாடி உங்கள பாக்காததுனால எங்களுக்கு உங்களய அடையாளம் தெரியல. ப்ளீஸ் உள்ள வாங்க. ராகவி நீங்க வருவீங்கன்னு சொன்னா. ஆனா நீங்க இன்னைக்கே வருவீங்கன்னு அவ எங்க கிட்ட சொல்லல. அவ எங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணி இருந்தா, நாங்க கொஞ்சம் பிரிப்பர்ட் ஆ இருந்திருப்போம். நீங்க சடனா வரவும் எனக்கு என்ன பண்றதுனே தெரியல." என்று பதட்டத்துடன் சொன்னாள்.
செண்பகம்: “திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்தது என்னோட தப்பு தான். இன்னைக்கு நாள் நல்லா இருந்துச்சு. அதான் உங்க கிட்ட பேசிட்டுு போலாம்னு வந்தேன். நீங்க பதட்டப்படாதீங்க அண்ணி. கேஷுவலா இருங்க. நீங்க எனக்காக ஸ்பெஷலா எதுவும் பண்ணனும்னு அவசியம் இல்ல. நானே சும்மா உங்கள பாத்து பேசிட்டு போலாம்னு தான் வந்தேன்.
நம்ப பேசி எல்லாமே ஃபிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா, நான் இன்னொரு நாள் விஷ்வாவை கூட்டிக்கிட்டு முறையா பொண்ணு பாக்க வரேன்." என்று சொன்னபடியே சோபாவில் அமர்ந்தாள்.
ரேவதி: “இருந்தாலும் நீங்க முதல் முறையா நம்ப வீட்டுக்கு வந்து இருக்கீங்க மேடம். உங்கள நாங்க எப்படி அப்படியே சும்மா உட்கார வைக்க முடியும்...??? இந்தாங்க முதல்ல இந்த தண்ணிய குடிங்க. நான் போய் உங்களுக்கு ஏதாவது ஸ்வீட் செஞ்சு கொண்டு வருகிறேன். இல்ல பர்ஸ்ட் காபி போடுறேன்." என்று பதட்டமாக சொன்னவள், காபி டேபிளில் இருந்த கிளாஸில் தண்ணீரை ஊற்றி அதை நடுங்கிய கைகளோடு செண்பகத்திடம் கொடுத்தாள்.
செண்பகம்: விஷ்வா ராகவியோட கல்யாணம் மட்டும் முடியட்டும் மா. அப்புறமா நான் இங்க வந்து சாவகாசமா விருந்தே சாப்பிடுறேன். இப்ப இந்த தண்ணி மட்டும் போதும். நீங்களும், அண்ணனும், வந்து உட்காருங்க. முக்கியமா இந்த கல்யாணத்தை பத்தி நான் உங்க கிட்ட பேசிட்டு போறதுக்கு தான் இங்க வந்தேன்.
சுதாகரால் இன்னும் இந்த திருமணத்திற்கு மனதார சம்மதிக்க முடியவில்லை. அதனால் எதுவாக இருந்தாலும் ரேவதியே செண்பகத்திடம் பேசி கொள்ளட்டும், என்று நினைத்து அமைதியாக சோபாவில் அமர்ந்தார். சுதாகரின் அருகே அமர்ந்தாள் ரேவதி.
செண்பகம்: சுதாகர் ஆர்வம் இல்லாமல் அமர்ந்து இருப்பதை கவனித்தவள், “அண்ணா நீங்க என் மேல கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். என்ன தான் இருந்தாலும், கல்யாண விஷயத்தை பத்தி நான் முதல்ல உங்க கிட்ட தான் பேசி இருக்கணும். அத விட்டுட்டு நான் ராகவி கிட்ட டைரக்ட்டா பேசினது தப்பு தான் என்ன மன்னிச்சிடுங்க." என்று தன் மனதார மன்னிப்பு கேட்டாள்.
செண்பகம் பேசியதை கேட்ட சுதாகருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து; தனக்கு சரி சமமாக அமர்ந்து, தன்னிடம் இவ்வளவு சாதாரணமாக பேசுவது மட்டுமல்லாமல், தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது, அவருடைய மனதில் செண்பகத்தின் மீது பெரிய மரியாதையை வரவழைத்தது.
சுதாகர்: “எனக்கு உங்க மேல கோவம் எல்லாம் இல்லைங்க மேடம். கொஞ்சம் வருத்தம் தான் இருந்துச்சு. அதுவும் இப்ப நேர்ல உங்கள பாத்த உடனே இல்லாம போயிடுச்சு." என்று அவசரமான குரலில் சொன்னான்.
செண்பகம்: “எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. இப்ப உங்க மனசுல என்ன ஓடிட்டு இருக்கும்ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. நான் ஏன் எடுத்தவுடனே உங்க கிட்ட பேசாம ராகவி கிட்ட பேசினேன்ன, எனக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது. நான் இந்த விஷயத்தை பற்றி உங்க கிட்ட சொன்னா, நீங்க எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவீங்களோனு எனக்கு குழப்பமா இருந்துச்சு.
என்ன இருந்தாலும் ஒன்னு சேந்து வாழ போறவங்க ராகவியும், விஷ்வாவும், தான். அதான் இந்த விஷயத்தை பத்தி உங்க கிட்ட பேசுறதுக்கு முன்னாடி ராகவி கிட்ட பேசி, அவளுக்கு இதுல விருப்பமானு கேட்டேன். நான் உங்க பொண்ணு கிட்ட சொன்னத தான் உங்க கிட்ட சொல்றேன். நீங்க உங்க பொண்ண தங்கமா வளர்த்து இருக்கீங்க. அவ எல்லார் மேலயும் ரொம்ப அன்பாகவும், மரியாதையோடையும், இருக்கா. நான் சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியல. நான் ஃபர்ஸ்ட்... ஃபர்ஸ்ட்... உங்க பொண்ண கோயில்ல பாத்தபோவே எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருச்சு.
அப்ப ராகவி யாருன்னு கூட எனக்கு தெரியாது. அப்பவே நான் எனக்கு ராகவே மாதிரி ஒரு மருமக கிடைச்சா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். கடைசியில பாத்தா எங்க்க சித்தார்த், ராகவி கூட பிரண்ட் ஆயிட்டான். ராகவியோட நல்ல குணத்துக்கு அவளை யாருக்கு தான் பிடிக்காது...??? ராகவியும் சித்தார்த் மேல ரொம்ப பாசமா இருக்கா. ராகவிய தவிர சித்தார்த்த வேற யாரும் நல்லா பாத்துக்குவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. சித்தார்த்தும் அவளைத் தவிர வேறு யாரையும் தன்னுடைய அம்மாவை ஏத்துக்க மாட்டான்.
அதனால நீங்க ரெண்டு பேரும் மனசார இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும். இந்த கல்யாணத்து நாள ராகவியோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சுு கவலைப்படாதீங்க. என் பையன பத்தி நானே பெருமையா பேசக்கூடாது தான். ஆனா ஒரு அம்மாவா என்னோட பையன நான் நல்லபடியா வளர்த்து இருக்கேன்னு என்னால தைரியமா சொல்ல முடியும். அவன் செத்துப்போன ஜான்விய நெனச்சுக்கிட்டே ராகவி கூட வாழாம போயிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு வருத்தப்படாதீங்க. இப்ப அவன் தனியா இருக்கறதுனால ஜான்விய பத்தியே யோசிச்சிட்டு இருக்கான்.
நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்ன்னு இல்ல. யாரா இருந்தாலும், ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டா அவன் நம்மளோட பொண்டாட்டின்ற எண்ணம் எப்படி இல்லாம போயிடும்...??? ராகவியோட குணத்துக்கு கண்டிப்பா சீக்கிரமாவே விஷ்வாவுக்கு ராகவிய பிடிச்சு போயிடும். நம்ப ஆசைப்படுற மாதிரியே அவங்க சந்தோஷமா வாழ்வாங்க. ராகவியும் இனி என்னோட பொண்ணு தான். நாளைக்கு விஷ்வாவே ராகவி கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணா கூட, நான் ராகவி பக்கம் தான் நிப்பேன். நான் சொன்ன வார்த்தைக்காக என்னை நம்பி இந்த கல்யாணத்துக்கு ராகவி ஒத்துக்கிட்டா. அவளோட நம்பிக்கையை காப்பாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நீங்க தான் உங்க முடிவ சொல்லணும்." என்று கண்கலங்க உருக்கமாக பேசினாள்.
சுதாகருக்கு இன்னும் இந்த திருமணம் வேண்டுமா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் செண்பகம் பேசியதை கேட்ட பின் அவளிடம் மறுத்து பேசுவதற்கு அவரால் முடியவில்லை. ராகவி ஏன் தங்களிடம் கூட கேட்காமல் இந்த திருமணத்திற்கு செண்பகத்திடம் சம்மதம் சொன்னாள் என்று இப்போது ராகவியின் பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
“என் மனசுல என்ன தோணுதோ அதை நான் அப்படியே உங்க கிட்ட சொல்லிறேன் மேடம்." என்று சுதாகர் பேச தொடங்க; அவர இடை நிறுத்திய செண்பகம், “இந்த கல்யாணம் வேணான்றத தவிர நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க அண்ணா. ஆனா, நீங்க என்ன மேடம்னு மட்டும் கூப்பிடாதீங்க. நீங்க ரெண்டு பேருமே என்னை விட வயசுல பெரியவங்க. சோ தாராளமா நீங்க என்ன பெயர் சொல்லியே கூப்பிடலாம்." என்றாள்.
சுதாகர்: “சரிங்க மா. அது உங்க பெருந்தன்மை. உண்மைய சொல்லனும்னா இன்னமுமே எனக்கு இந்த கல்யாணத்த பத்தி யோசனையா தான் இருக்கு. உங்களுக்கு இருக்கிற வசதிக்கு நாங்க ரொம்ப சாதாரணமானவங்க. உங்க குடும்பத்துல எங்க பொண்ண கல்யாணம் பண்ணி குடுக்கிற அளவுக்கு எங்களால எங்க பொண்ணுக்கு எதுவும் செய்ய முடியாது. ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு நாங்க கஷ்டப்பட்டு சொந்தமா ஒரு வீட்டை கட்டி இருக்கோம். அதை தாண்டி சொத்துன்னு சொல்லிக்கிற அளவுக்கு எங்க கிட்ட வேற எதுவுமே இல்ல." என்று சிறு தயக்கத்துடன் சொன்னார்.
செண்பகம்: “அண்ணா நான் இப்டி சொல்றேன்னு கோச்சுக்காதீங்க. கடவுள் புண்ணியத்துல எங்க வீட்டுல காசு பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இப்ப எங்க வீட்ல மன நிம்மதிக்கு தான் குறைச்சலா இருக்கு. நான் காசு பணத்துக்கு மதிப்பு குடுத்து இருந்தா, நான் அதுக்கு தகுந்த மாதிரி பொண்ணு பாத்து இருப்பேன்ல..??? எனக்கு நல்ல குணம் உள்ள பொண்ணு தான் வேணும். நாளைக்கு எனக்கு அப்புறம் என் இடத்துல இருந்து இந்த குடும்பத்தை நல்ல வழியில நடத்துறவளா இருக்கணும். சித்தார்த்துக்கு சித்தியா இல்லாம, அம்மாவா இருக்கணும்.
நீங்க ராகவியை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி தரத்துக்கு சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னா மட்டும் போதும். என் பொண்ணுக்கு நான் எத்தனை பவுன் வேணாலும் நகை போட்டு நான் அவள என் மருமகளா என் பையனுக்கு கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கூட்டிட்டுபோவேன். நீங்க ஸ்டேட்டஸ் பத்தி எல்லாம் யோசிக்காதீங்க. மனுஷங்களோட மனசு தான் ரொம்ப விலைமதிப்பில்லாதது." என்று உறுதியாக சொன்னாள்.
ரேவதி: நீங்க எதுவும் வேணாம்னு சொல்றது உங்க பெரிய மனசு மா. ஆனா எங்க பொண்ணுக்கு எங்களால என்ன முடியுமோ அது எல்லாத்தையுமே நாங்க செய்வோம்.
செண்பகம்: தாராளமா செய்ங்க. அவ உங்க பொண்ணு. நீங்க உங்க இஷ்டம் போல அவளுக்கு என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ செய்யுங்க. நாங்க நீங்க இத ஏன் செய்றீங்கன்னும் கேட்க மாட்டோம். இத ஏன் செய்யலைன்னும் கேட்க மாட்டோம். நான் முன்னாடியே சொன்ன மாதிரி ராகவி எனக்கும் பொண்ணு தான். நான் ஆசைப்பட்டு அவளுக்கு செய்யணும்னு நினைக்கிறத மட்டும் என்ன செய்ய விடுங்க. வேணான்னு சொல்லி தடுத்துறாதீங்க.
ரேவதி: சரிங்க மா. ஆனா இப்பவும் என்னோட பொண்ணு இவ்ளோ பெரிய வீட்ல கட்டித்தரமேன்னு எனக்கு பயமா தான் இருக்கு. நீங்க குடுத்த நம்பிக்கையில, உங்கள நம்பி தான் நாங்க எங்க பொண்ண உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணி தர சம்மதிக்கிறோம். நாங்களும் விஷ்வா தம்பிய நேர்ல பாத்து பேசி பழகி இருக்கோம் அவரும் நல்லவர் தான்.
ராகவி இன்னும் சின்ன பொண்ணு தான். அவளுக்கு அவ்வளவா வெளி உலகம் தெரியாது. நீங்க இவ்ளோ பெரிய குடும்பத்துல அவளை மூத்த மருமகளா ஆக்கணும்னு நினைக்கிறீங்க. அது நல்ல விஷயம் தான். ஆனா அந்த அளவுக்கு அவளுக்கு ஒன்னும் தெரியாது மா. அவ எதாவது அவளுக்கே தெரியாம தப்பு பண்ணிட்டாலும், நீங்க தான் அவளுக்கு அத பொறுமையா எடுத்து சொல்லி தரணும். நீங்க என்ன சொன்னாலும், அத அவ கேட்டுப்பா. அதான் நீங்களே அவள உங்க பொண்ணுன்னு சொல்லிட்டீங்க. இதுக்கு மேல நாங்க என்ன சொல்றது....!!!!
செண்பகம்: “ரொம்ப தேங்க்ஸ் அண்ணி. ராகவி என்ன தான் சம்மதம் சொல்லி இருந்தாலும், நீங்க வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு நான் நினைச்சு பயந்துகிட்டே இருந்தேன். நீங்க சம்மதிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா, இருக்கு. நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன். ராகவி இனிமே என்னோட பொறுப்பு நீங்க அவளை பத்தி கவலைப்பட வேண்டாம். அவளை நான் பத்திரமா பாத்துப்பேன். என் பையன் கிட்ட கூட நான் அவளை விட்டு தர மாட்டேன்." என்று ரேவதியின் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 106
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.