அத்தியாயம் 103: மயங்கி விழுந்த வருண் (பார்ட் 1)
மேனேஜர்: “அந்த பாதிக்கப்பட்ட பொண்ணோட குடும்பம், மகளிர் சங்கத்து ஆளுங்க, கட்சிக்காரங்கன்னு நிறைய பேர் உங்களுக்கு பெயில் கூட குடுக்க கூடாதுன்னு போராட்டம் பண்ணிக்கிட்டுு இருக்காங்க. அது மட்டும் இல்லாம, ஏற்கனவே நம்ம ப்ராடக்ட்ஸை யூஸ் பண்ணி அஃபெக்ட் ஆனவங்க எல்லாம் இப்ப புதுசு புதுசா போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால உங்க கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காயிடுச்சு சார். சோ, ஜட்ஜ் உங்களுக்கு பெயில் தர மாட்டேன்னு்னு சொல்லிட்டாரு. எனக்கு இப்ப வேற என்ன பண்றதுன்னு தெரியல." என்றான்.
பிரவீன்: “அப்ப இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு." என்று வில்லத்தனமாக புன்னகைத்த படி சொன்னான். 😁 😁 😁
மேனேஜர் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க ஆர்வமாக இருந்தவன், “என்ன வழி சார் அது?" என்று கேட்டான்.
அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை வருணின் ஆட்களோ, இல்லை போலீஸ்காரர்களோ கூட ஒட்டு கேட்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்த பிரவீன், தன்னுடைய மேனேஜரை தனக்கு அருகில் வரும் படி சைகை செய்தவன், அவனுடைய காதுகளில் எதையோ மெதுவாக கிசுகிசுத்தான். அவன் சொன்னதை கேட்க கேட்க, அந்த மேனேஜரின் குழப்பமான முகம் பிரகாசம் அடைந்தது. 😊 தன்னுடைய மனதில் இருந்த திட்டத்தை செயல்படுத்தும் படி தன்னுடைய மேனேஜரை அறிவுறுத்திய பிரவீன் பின் அவனை பார்த்து, “உடனே நான் சொன்ன மாதிரி செஞ்சுரு. என்னால ரொம்ப நாளைக்கு இங்க எல்லாம் இருக்க முடியாது." என்றான். 😒
மேனேஜர்: “சூர் சார். நீங்க சொன்ன மாதிரி நம்ம செஞ்சா, இது கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். நாளைக்கு நீங்க இந்நேரம் எல்லாம் வெளியில இருப்பீங்க." என்று உற்சாகமான குரலில் சொன்னான். 😁 😁 😁
பிரவீன்: “ஆமா. நீ இங்க தேவை இல்லாம நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத. உடனே போய் நான் சொன்ன வேலையை செய்." என்று அவனுக்கு அதிகார தோரணையில் ஆணையிட்டான்.
பிரவீன் தன்னை அங்கு இருந்து கிளம்ப சொல்லியும், அவனிடம் எதையோ சொல்வதற்காக தயங்கிய படியே அவனைப் பார்த்த படி அங்கேயே நின்று கொண்டு இருந்தான் அவனுடைய மேனேஜர் சங்கர். அதை கவனித்த பிரவீன், “அதான் நான் உன்ன கிளம்ப சொன்னேன்ல... அப்புறம் இன்னும் ஏன் டா இங்கயே நின்னுட்டு இருக்க?" என்றான் கடுப்பாக 😒
மேனேஜர்: “இல்ல சார்... நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்." என்று தயங்கிய படியே சொன்னான்.
பிரவீன்: ஏற்கனவே அவன் ஜெயிலில் இருப்பதால் அதீத கடுப்பில் இருந்தவன், “சரி, என்னனு சீக்கிரமா இழுக்காம சொல்லி தொலை." சிறு எரிச்சலுடன். 😒
அவனுடைய மேனேஜர் சங்கர், “சார் அது வந்து நம்ப ஆராதனா மேடம்..." என்று பேசிக் கொண்டு இருக்கும்போது அவனை இடைநிறுத்திய பிரவீன், “என்ன டா..!! ஆராதனாவுக்கு என்ன ஆச்சு..??? அவளுக்கு ஏதாவது பிரச்சனையா..??? என்று பதட்டமாக கேட்டான். 😟 எப்போதுமே தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களுள், ஆராதனாவின் மீது பிரவீனுக்கு ஒரு தனி பாசம் உண்டு. சொல்லப்போனால், அவன் உண்மையாக பாசம் காட்டும் ஓரிரு ஜீவன்களில் ஆராதனாகவும் ஒருத்தி. அதனால், அவனுக்கு தன்னுடைய தங்கையின் மீது இருக்கும் பாசம் அவனுடைய குரலில் இருந்த பதட்டத்திலேயே தெளிவாக தெரிந்தது.
மேனேஜர் சங்கர்: தன்னுடைய ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டியவன், “சார்...!! நம்ம ஆராதனா மேடம், இப்ப நாராயணன் பேலஸில தான் இருக்காங்க. எனக்கு கிடைச்ச இன்ஃபர்மேஷன் படி, அவங்க ரொம்ப நாளா அங்க இருப்பாங்க போல. இதுல விஷ்வா சார் அந்த ஹரிக்கு,ம் நம்ம ஆராதனா மேடம்க்கும், கல்யாணம் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்குற மாதிரி பேசிட்டு இருக்காங்களாம்."
பிரவீன் அவன் சொன்னதைக் கேட்டு கோபப்பட்டவன், வேகமாக தன் முன் இருந்த சிறையின் கம்பிகளை வேகமாக தன்னுடைய இரு கைகளாலும் அவனுடைய முழு பலத்தையும் கொண்டு சத்தமாக அடித்தான். பின் அவற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தன்னுடைய மேனேஜர் சங்கரை பார்த்தவன், “இவ்ளோ... நடந்து இருக்கு. இத இத்தன நாளா கண்டுபிடிக்காம இருந்து இருக்க. இப்ப வந்து இத சொல்றதுக்கு உனக்கு வெக்கமா இல்லையா டா...???" என்று சீரினான். 😡 🔥
சங்கர்: “சாரி சார். அவங்க நம்ப தேவி மேடம் கிட்ட கூட ஹாஸ்டல்ல இருக்கிற மாதிரியே தான் பொய் சொல்லி பேசிட்டு இருந்து இருக்காங்க. அதுவும் இல்லாம விஷ்வா சார் சப்போர்ட் இருந்ததுனால, ஆராதனா மேடம் அங்க இருக்கிறது இத்தனை நாளா நமக்கு வெளில தெரியாம போயிடுச்சு. இப்பலாம் விஷ்வா சார் அவங்க பேமிலிக்கு ரொம்ப செக்யூரிட்டி டைட் பண்ணிட்டாரு. இதவே நம்ம ஸ்பை ரொம்ப கஷ்டப்பட்டு தான் கண்டுபிடிச்சான்." என்றவன், “அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சார்." என்று இழுத்தான்.
பிரவீன் அவன் மீண்டும் விழித்துக் கொண்டிருப்பது கண்டு கடுப்பானவன், “இன்னும் வேற என்ன:டா..?? ஏன் டா இப்படி கேப் விட்டு ஒன்னு ஒன்னா சொல்லி என்னை சாவடிக்கிற...???" என்றான் சலிப்பாக. 😠 😣
சங்கர்: ஆராதனா மேடம் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி இருக்காங்க சார். அவங்கள ஹரி தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கான். அவங்க ரொம்ப சீரியஸா இருக்கும்போது, அவங்கள வருண் சார் தான் ப்ளட் குடுத்து காப்பாத்தி இருக்காரு." என்று பயந்து பயந்து சொன்னான்.
இப்போது சங்கர் சொன்னதை கேட்ட பிரவீனின் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு ரத்த துளியும் கோபத்தால் கொதித்தது. சங்கரை எரித்து விடும் பார்வை பார்த்தவன், “என்ன டா சொல்ற...!!! இது எல்லாம் உண்மையா...???" என்று தன் பல்லை கடித்துக் கொண்டு கேட்டான். 😡 🔥
சங்கர்: “ஆமா சார் உண்மை தான்." என்று பயந்து போன முகத்துடன் சொன்னான்.
பிரவீன்: “நான் அந்த விஷ்வாவையும், அவனோட குடும்பத்தையும், சும்மாவே விட மாட்டேன் டா. இவனுங்களே அண்ணனும், தம்பியும், சேந்து என் தங்கச்சியை கொல்ல பாத்துட்டு, கடைசில இவனுங்களே அவளை காப்பாத்துற மாதிரி அவ கிட்ட நடிச்சு சீன் போட்டுட்டு இப்ப அவளை அவங்க பக்கம் இழுத்து, அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க. ஆராதனா ஏன் இவ்ளோ பைத்தியக்காரியா இருக்கான்னு எனக்கு தெரியல.
அவ என்னோட தங்கச்சி தானே, அப்ப அவ என்ன நம்பி நான் சொல்றத தானே கேட்கணும்? ஆனா அவ ஏன் இந்த பைத்தியக்காரி அந்த இத்துபோனவனுங்கள நம்பரான்னே எனக்கு தெரியல. அவ இனிமே அவன் வீட்ல இருக்க கூடாது. விஷ்வா, அவள வச்சு என் கூட கேம் ஆடுறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு." என்றான் கோபமாக. 😡 🔥
சங்கர்: “ஆனா, விஷ்வா சார் அப்படி எல்லாம் பண்ண கூடிய ஆள் இல்லையே சார்...!!! அவரும் நம்ம ஆராதனா மேடம் மேல பாசமா தானே இருக்காரு...!!!!" என்றான் மெல்லிய குரலில்...
சங்கர் சொன்னதை கேட்டு கடுப்பான பிரவீன் மீண்டும் தன் முன்னே இருந்த இரும்பு கம்பியின் மீது பலமாக ஓங்கி அடித்தவன், “என்ன டா என் கிட்ட சம்பளம் வாங்கிட்டு, அவன பத்தி என் கிட்டயே பில்டப் பண்ணி பேசிட்டு இருக்கியா..??? இதுல உனக்கு அந்த நாய் விஷ்வா சாரா? அவனால தான் டா நான் இப்ப ஜெயில்ல வந்து உட்கார்ந்து இருக்கேன்." என்று அடித்தொண்டையில் இருந்து சத்தமாகக கத்தினான். 😡 🔥
சங்கர் இதற்கு மேல் அவனிடம் எதையாவது பேசி தன்னுடைய உயிருக்கு உலை வைத்துக்கொள்ள விரும்பாதவன், “ஆமா சார்..!!! நான் தான் தெரியாம பேசிட்டேன் சாரி. நீங்க சொன்னது தான் சார் கரெக்ட்." என்றான்.
பிரவீன்: “என்ன டா உயிருக்கு பயந்து உடனே எனக்கு ஜால்ரா திட்றியா..???" என்று தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாக கேட்டான். 😠 😡 🔥
சங்கர்: “ஐயையோ..!!! அப்படி எல்லாம் இல்ல சார் நான் தான் எதையோ தேவை இல்லாம உளறிட்டேன்." என்றான் பவ்யமாக.
பிரவீன்: “நான் ஏற்கனவே கொலை காண்டுல இருக்கேன். என் முன்னாடி வந்து நின்னுகிட்டு கண்டத பேசி தேவை இல்லாம உன் உயிர விட்றாத. ஒழுங்கா ஓடிப் போய் நான் சொன்னதை செய்." என்று கர்ஜிக்கும் குரலில் ஆணையிட்டான். 😒
அவளுடைய குரலில் இருந்த கடுமையை உணர்ந்து கொண்ட சங்கர், வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.
சித்தார்த்தின் பள்ளியில்....
உணவு இடைவேளை...
வழக்கம்போல் ராகவி; ஷாலினியுடனும், சித்தார்த்டனும், சாப்பிடுவதற்காக மரத்தடியில் அமர்ந்து இருந்தாள். சுகந்தியும் அவர்களோடு சித்தார்த்தை கவனித்த படி அமர்ந்து இருந்தாள். அப்போது சுகந்தியை பார்த்த ரித்திகா, “எங்க நாங்க சாப்பிடறத நீங்க சும்மா பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கிறதுக்கு, பேசாம நீங்களும் சாப்பாடு கொண்டு வந்தா இங்க எங்க கூட சேர்ந்து சாப்பிடலாம் இல்ல...???" என்று கேட்டாள்.
சுகந்தி: “இல்ல மா நான் இங்க சித்தார்த் தம்பியை சாப்பிட வச்சுட்டு கிளம்பி வீட்டுக்கு போய் செண்பா அம்மா கிட்ட சொன்னா தான் அவங்க சாப்பிடுவாங்க. இந்த நேரத்துல அவங்களோட பிள்ளைங்க யாருமே வீட்ல இருக்க மாட்டாங்க. அதனால நானும், செண்பகம் அம்மாவும். சேர்ந்து தான் சாப்பிடுவோம். அதனால, அது அப்படியே பழகிருச்சு." என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😁 😁 😁
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 103
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.