அத்தியாயம் 100: ரித்திகாவின் மீது கோபப்பட்ட கௌதம் (பார்ட் 2)
கௌத்தமின் டான்ஸ் ஸ்டுடியோவில்...
ஷாலினி சொன்னதால் எப்படியும் ரித்திகா தன்னை பார்ப்பதற்காக இங்கே வருவாள் என்று நினைத்த கௌத்தம், அவளுக்காக வாசலை பார்த்த படி, தன்னுடைய டான்ஸ் ஸ்டூடியோவில் காத்திருந்தான். மணி இரவு 9: 00ஐ கடந்து இருந்தும் ரித்திகா அங்கே வராததால், எப்படியும் அவள் கிளம்பிய நேரத்திற்கு இந்நேரம் அவள் இங்கே வந்திருக்கணும்... என்று நினைத்து பதறிய கௌத்தம், ஷாலினிக்கு கால் செய்து ரித்திகாவை பற்றி விசாரித்தான்.
ஷாலினி இந்நேரம் ரித்திகா கௌத்தமை சென்று சந்தித்து இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு இருக்க, இப்போது கௌத்தம் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், “என்ன அண்ணா சொல்றீங்க அப்ப ரித்திகாஅக்கா உங்கள பாக்க வரலையா..??? அந்த பிரண்டு நீங்க இல்லைன்னா அது வேற யாரா இருக்கும்...???" என்று குழப்பமாக கேட்டாள். 🙄
கௌத்தம்: “தெரியல மா. அவ வீட்டுக்கு வந்துட்டாலான்னு நீ அவளுக்கு கால் பண்ணி கேக்குறியா மா...???" என்று மெல்லிய குரலில் சோகமாக கேட்டான். 😞 😣
ஷாலினி: “ஓகே அண்ணா. நான் அவங்க கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன்." என்றவள், கௌத்தமின் கால் ஐ துண்டித்து விட்டு, ரித்திகாவிற்கு கால் செய்தாள். தான் சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு வந்திருந்த ரித்திகா ஷாலினியிடம் இருந்து தனக்கு வந்த காலை அட்டென்ட் செய்து பேசினாள்.
ரித்திகா: “சொல்லு டி." என்றாள், சலிப்பான குரலில்...
ஷாலினி: என்ன அக்கா உங்க பிரண்ட மீட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா...???
ரித்திகா: அதெல்லாம் எப்பவோ வந்துட்டேன்.
ஷாலினி: “ஓ அப்படியா...!!! அப்ப என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க..??? அப்பா, அம்மா, கிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா..???? அவங்க என்ன சொன்னாங்க..????" என்று ஆர்வமாக கேட்டாள்.
ரித்திகா: தன்னுடைய அப்பாவும், அம்மாவும், இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக சொன்னவள்; அவள் வீட்டிற்கு வந்தது முதல் நடந்த அனைத்தையும் தெளிவாக அவளிடம் சொன்னாள்.
ரித்திகா சொன்னதை கேட்ட ஷாலினிக்கு அவளுடைய இறுதி நம்பிக்கையும் பறிபோனதைப் போல் இருந்தது. அவளுக்கு அவள் ஆசைப்பட்டதை போல் கௌத்தமும், ரித்திகாவும், ஒன்று சேராதது மிகவும் வருத்தமாக இருந்தது. 😟 இருந்தாலும் தன் மனதில் இருப்பதை ரித்திகாவிடம் காட்டிக்கொள்ள விரும்பாத ஷாலினி, “நான் கூட அம்மா, அப்பா, பெருசா ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்களோன்னு பயந்துட்டேன். நீங்க வருண் சார் ஐ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தான் விதி போல.... எல்லாம் விதி படியே நடக்கட்டும். நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் அக்கா." என்றவள் சிறிது நேரம் ரித்திகாவிடம் பேசிவிட்டு அந்த கால் ஐ கட் செய்துவிட்டு, மீண்டும் கௌத்தமிற்கு கால் செய்தாள்.
அவளிடம் இருந்து தனக்கு வந்த கால் ஐ ஒரே ரிங்கில் அட்டென்ட் செய்த கௌத்தம், “என்ன ஆச்சு ஷாலினி ரித்திகா வீட்டுக்கு வந்துட்டாளா..??? இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாளா...???" என்று அவசரமான குரலில் கேட்டான். கௌத்தமின் குரலில் இருந்த ஆர்வத்தை கண்டு கொண்ட ஷாலினிக்கு நடந்தவற்றை அவனிடம் சொல்லவே தயக்கமாகவும், வருத்தமாகவும், இருந்தது.
ஷாலினி: “சாரி அண்ணா. நீங்க பாட்டுக்கு சும்மா இருந்தீங்க. நான் தான் உங்க கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசி உங்க மனசுல தேவை இல்லாம ஆசைய வளர்த்து விட்டுட்டேன். ரித்திகா அக்கா அவங்களோட முடிவ மாத்திக்கவே இல்ல. அம்மா, அப்பாவும், இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்..?? அதனால, நீங்க சந்தோஷமா இருந்தா சரி தான் அக்கான்னு சொல்லிட்டேன்." என்று சோகமான குரலில் சொன்னாள். 😣
கௌத்தம்: “ரித்திகா எப்டி வருண் சாரா போய் கல்யாணம் பண்ணிக்க முடியும்..??? இது சரியா வராது. இந்த கல்யாணம் நடக்க கூடாது. இந்த கல்யாணம் நடந்தா ரித்திகா சந்தோஷமா இருக்க மாட்டா." என்று அவசரமான குரலில் கோபமாக சொன்னான். 😒 😡
ஷாலினி: அவங்களோட அம்மா, அப்பாவே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம், நம்ம என்ன அண்ணா பண்ண முடியும்...???? ரித்திகா அக்காவுக்கு வருண் சார் -ன்னு தான் எழுதி இருக்கோ.. என்னமோ...!!! நீங்க அவங்கள நினைச்சு உங்க லைப் ஐ ஸ்பாயில் பண்ணிக்காதீங்க. ரித்திகா அக்கா இந்த கல்யாணத்த சித்தார்த்துக்காக தான் பண்ணிக்கிறாங்க. சோ, இதுல நம்ம அவங்கள எதுவும் தப்பு சொல்ல முடியாது.
கௌத்தம்: “நான் இருக்கிற வரைக்கும் இந்த கல்யாணம் நடக்காது. இத ஸ்டாப் பண்றதுக்கு என்ன பண்ணனுமோ அத நான் பாத்துக்குறேன்." என்று கோபமாக சொன்னவன், ஷாலினியின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அந்த அழைப்பை துண்டித்து விட்டான்.
அந்த இரவு முழுவதுமே கௌத்தமிற்கு சிவராத்திரி ஆக தான் இருந்தது. அவனால் ரித்திகாவை வருனுக்கோ அல்ல, வேறு யாருக்கும் விட்டுத்தர முடியாது. தான் என்ன செய்தால் இந்த திருமணத்தை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தான். ஒரு வேளை ரித்திகாவை தன்னை காதலிக்காமல், வேறு யாராவது அவளுக்கு ஏற்ற மாதிரியான ஒரு நபரை காதலித்து இருந்தால் கூட, கௌத்தம் அவள் நன்றாக வாழ்ந்தால் சரி என்று அவளுடைய திருமணத்திற்கு வாழ்த்திவிட்டு அமைதியாக இருந்து இருப்பான். ஆனால் அவன் வருணை பற்றி நன்றாக அறிந்து இருந்ததால், அவனுக்கும், ரித்திகா விற்கும் , ஒத்து வராது என்று அவனுக்கு ஸ்ட்ராங்காக தோன்றியது.
அடுத்த நாள் காலை...
சித்தார்த்தின் பள்ளியல்.....
ரித்திகா வழக்கம் போல் ஷாலினியுடன் பள்ளிக்கு கிளம்பி வந்து இருந்தாள். இன்று முதல் பீரியடே அவளுக்கு டான்ஸ் கிளாஸ் இருந்ததால், அந்த பீரியட் தொடங்குவதற்குள் அந்த ப்ராக்டீஸ் ஹாலிற்கு சென்று விடலாம் என்று நினைத்து அங்கே வந்தாள். ரித்திகா வருவதற்கு முன்பே அங்கு கௌத்தம் வந்து இருந்தான். ஆனால், அவன் இன்றைக்கு ரித்திகா உடன் இந்த திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் என்ற ஆர்வத்தில், வாட்ச்மேன் வந்து பள்ளியின் கதவை திறப்பதற்கு முன்பே கேட்டின் வாசலில் அவன் வந்து நின்ற கதையை ரித்திகா அறிய வாய்ப்பில்லை.
ரித்திகா: வழக்கம் போல் லேசான புன்னகையுடன் கௌத்தமை பார்த்து, “குட் மார்னிங்." என்றாள். 😁 😁
கௌதம்: யார் என்ன சொன்னாலும் இவள் ஏன் வருணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள் என்று ரித்திகாவின் மீதும் அவனுக்கு கோபம் இருந்தது. அதனால் அவளை சிறு கடுப்புடன் பார்த்தவன், “ம்ம்ம்... குட் மார்னிங்...!! குட் மார்னிங்..!!!" என்றான். 😒
அவனுடைய குரலில் இருந்த கடுமையை உணர்ந்து கொண்ட ரித்திகா, “என்ன ஆச்சு இவருக்கு..!!! காலையிலேயே இவ்ளோ டென்ஷனா இருக்காரு..???" என்று தனக்குள் நினைத்தவள், அவனிடம் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆண்டு விழாவிற்காக அவர்கள் ஆர்டர் செய்து இருந்த ஆடைகள் எல்லாம் வந்து, அந்த ஹாலில் ஒரு மூலையில் குவிந்து கிடந்தன.
அதை கவனித்த ரித்திகா, அவற்றை எல்லாம் சரி செய்து வகுப்பு வாரியாக பிரித்து எடுத்து வைக்க தொடங்கி விட்டாள். ரித்திகாவே பார்க்க பார்க்க கௌத்தமுக்கு அவள் மீது கோபம் கோபமாக வந்தது. “இவ்ளோ நடந்து இருக்கு. அத பத்தி என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு கூட உனக்கு தோணலைல? ஷாலினி மட்டும் எனக்கு கால் பண்ணி சொல்லலைனா, மத்தவங்கள மாதிரி இந்த விஷயம் ஏதாவது நியூஸ் சேனல்ல பப்ளிஷ் ஆனா தான் எனக்கும் தெரிஞ்சி இருந்து இருக்கும். உனக்கு நான் வெறும் மூணாவது மனுஷன் தானா ரித்திகா...??? ஒரு வேளை நீயே என்ன அப்டி நினைச்சாலும், என்னால உன்னை அந்த மாதிரி நினைக்க முடியலையே..!!" என்று தன் மனதிற்குள் நினைத்தவன்,
ரித்திகாவை பார்த்து, “நீ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா..???" என்று மொட்டையாக கேட்டான். இப்போதாவாவது அவளாக தன்னிடம் அவளுடைய திருமணத்தை பற்றி பேசுவாள் என்ற நம்பிக்கையில்.... இவன் மனதில் நினைப்பதை எல்லாம் புரிந்துகொள்ள ரித்திகா என்ன சித்தரா இல்லை ஞானியா...??? அவள் சாதாரண மனுஷி தானே...!!! அதனால், அவன் திடீரென்று எதைப் பற்றி கேட்கிறான் என்று நினைத்து குழம்பியவள், “நான் உங்க கிட்ட என்ன சொல்லணும்..?? நீங்க எத பத்தி கேக்குறீங்க...???" என்றாள். 🙄
கௌத்தம்: “அப்ப நானா வந்து உன் கிட்ட கேட்டா கூட நீ சொல்ல மாட்டியா..???" என்று தனக்குள் நினைத்து கோபப்பட்டவன், தன் பல்லை கடித்து கொண்டு, “ஆன்ன்... ஒன்னும் இல்ல. நீ உன் வேலைய பாரு." என்றான். 😕
திடீர் திடீர் என்று மாறி கொண்டே இருக்கும் கௌத்தமின் முக பாவங்களை கவனித்த ரித்திகாவிற்கு அவன் தன் மீது தான் கோபமாக இருக்கிறான் என்று நன்றாக புரிந்தது. ஆனால், அவன் ஏன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்று மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லைை. இருந்தாலும் அவளுக்கு வேலை அதிகமாக இருந்ததால், அதைப் பற்றி எல்லாம் அவள் கண்டுகொள்ளும் மன நிலையில் இல்லை. அதனால் மீண்டும் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கி விட்டாள்.
பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல், அதற்கு மேல் கௌத்தமால் அமைதியாக ரித்திகாவை பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை. அதனால் ரித்திகாவின் அருகே சென்றவன், “உனக்கும் வருண் சாருக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்கல்ல..???" என்று கடுப்பான குரலில் கேட்டான். 😒 கௌத்தமின் அந்த கேள்வியால் அதிர்ந்து போன ரித்திகா, அது வரை தான் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, அதிர்ச்சியாக கௌத்தம் ஐ திரும்பி பார்த்தவள், “அது எப்டி உங்களுக்கு தெரியும்...??" என்று கேட்டாள். 😳
கௌத்தம்: “ஷாலினி தான் சொன்னா. அவ மட்டும் இத பத்தி என் கிட்ட சொல்லலனா இந்த கல்யாணம் நடக்கிற வரைக்கும் நீ என் கிட்ட சொல்லி இருக்க மாட்டல்ல..???" என்று கேட்டவனின் குரலில் கோபமும், சோகமும், ஒருசேரர கலந்து இருந்தது. 😒
ரித்திகா: "உங்க கிட்ட இத சொல்லாம மறைக்கணும்ன்னு எல்லாம் நான் நினைக்கல. எல்லாம் கன்ஃபார்ம் ஆனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். இப்ப நான் போய் யார்கிட்டயாவது இத பத்தி சொன்னா கூட, யாராவது இத நம்புவாங்களா...?? நீங்களே சொல்லுங்க...!!!" என்று தன் பக்க நியாயத்தை அவனுக்கு விளக்க முயன்றாள்.
கௌத்தம்: “அப்ப நானும் மத்தவங்களும் ஒன்னா உனக்கு..?? ஷாலினி கிட்ட சொல்லணும்ன்னு உனக்கு தோனிருக்குல்ல.. அப்புறம் ஏன் என் கிட்ட சொல்லணும்னு தோணல..??? முதல்ல நீ ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட..??? இந்த கல்யாணம் நடக்க
கூடாது ரித்திகா." என்று கோபமாக சொன்னான்.
- நேசம் தொடரும்...

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 100
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.