காலை தேன்மொழி செட் செய்து இருந்த அலாரத்தின் சவுண்ட் கேட்டு அர்ஜுன், தேன்மொழி இருவருமே கண் விழித்தார்கள். உடனே எழுந்து அமர்ந்த தேன்மொழி பரபரப்பாக கிளம்ப முயற்சி செய்ய, அவளை நகர விடாமல் அவள் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து மீண்டும் படுக்கையில் தள்ளிய அர்ஜுன் அவள் மீது படுத்துக் கொண்டு “பிரிட்டோ மேரேஜ்க்கு நம்ம சீக்கிரமா போகணும் இல்ல.. நீயும் நானும் தனித்தனியா போய் குளிச்சிட்டு வந்தா லேட் ஆகும். சேர்ந்து குளிச்சா டைம் சேவ் பண்ணலாம். நம்ம சீக்கிரமா போய் குளிச்சிட்டு வந்துடலாமா பேபி?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டான்.
ஆத்திரம் பொங்க அவனை முறைத்து பார்த்த தேன்மொழி “நான் இருக்கிற டென்ஷன்ல உனக்கு ரொமான்ஸ் பண்றது மட்டும் தான் குறைச்சலா இருக்கா? ஏன் இவ்ளோ பெரிய வீட்ல பாத்ரூம் வேற எங்கேயும் இல்லையோ! நீ வேணும்னா இங்கயே குளி. நான் போய் கெஸ்ட் ரூம்ல ரெடியாகிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பிடித்து தன் மீது இருந்து தள்ளிவிட முயற்சி செய்தாள்.
ஆனால் ஏதோ கம் போட்டு ஒட்டியதைப் போல அவளை இறுக்கமாக தன்னுடன் சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டு அவள் மீது படுத்து கிடந்த அர்ஜுன், “உனக்கு மனசாட்சியே இல்லையா டி! கடைசி வரைக்கும் இப்படியே என் மேல உன்னால கோவமா இருக்க முடியுமா என்ன? இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சு விட்டுடலாம் இல்ல!” என்று அவளிடம் பாவமாக கேட்டான்.
உடனே கண்கள் கலங்க அவனை உற்றுப் பார்த்த தேன்மொழி “நானும் உன்ன மாதிரி எனக்கு நடக்கிற ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை உன் கிட்ட இருந்து மறைச்சா அப்ப தான் அது எப்படி இருக்கும்னு உனக்கு தெரியும் அர்ஜுன். ஆனா உன்ன மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது. அப்படி உன் கிட்ட இருந்து மறைக்கிற அளவுக்கு என் லைஃப்ல எதுவும் இல்ல.” என்று கோபமாக சொல்ல, “பட் உன் கிட்ட இருந்து நான் நிறைய மறைக்கிறேன். உன்ன மாதிரி என் லைஃப் சாதாரணமா இல்லையே டி.. என்னால எப்படி உன் கிட்ட எல்லாத்தையும் மறைக்காம சொல்ல முடியும்? ஒருவேளை நான் சொல்லி மறுபடியும் நீ கோவப்பட்டு என்னை விட்டு பிரிஞ்சு போகணும்னு முடிவு பண்ணிட்டா என்னால அதெல்லாம் தாங்க முடியாது.” என்று நினைத்த அர்ஜுனுக்கு அவளுடைய கலங்கிய கண்களை பார்க்கவே ஒரே கில்ட்டி ஃபீலிங்காக இருந்தது.
“இப்ப என்ன விட்றியா இல்லையா? என்னால மூச்சு விடவே முடியல. அந்த பக்கம் போய் தொல அர்ஜுன்!” என்று தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு தேன்மொழி சொல்ல, அவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அதனால் சட்டென்று அவளை விட்டு பிரிந்த அர்ஜுன் “சாரி!” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு அவளை பார்க்க முடியாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவன் மனதார தனக்காக வருத்தப்படுகிறான் என்று உணர்ந்தாலும், “இப்படியே இவனுக்காக எப்பயும் நானே விட்டுக் குடுத்து போய்க்கிட்டே இருந்தா, கடைசி வரைக்கும் இவன் என்ன ஹர்ட் பண்ணிட்டே இருப்பான். அதென்ன எனக்கு ஒரு நியாயம் இவனுக்கு ஒரு நியாயம்? ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்குள்ள எல்லாமே ஈக்குவலா தானே இருக்கணும்! நான் மட்டும் எல்லாத்துலையும் கரெக்ட்டா இருக்கணும். பட் உன்னால அப்படி இருக்க முடியாதுன்னா எப்படி?” என்று நினைத்து தன் மனதை கல்லாக்கிக் கொண்ட தேன்மொழி அவனை கண்டு கொள்ளாமல் ரெப்ரெஷ் ஆகிவிட்டு அவளுக்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக சென்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் “எப்பயும் உன் கூட ஹேப்பியா வாழனும்னு தான் நான் நினைக்கிறேன். பட் திடீர்னு ஏதாவது நடந்து நாலடி உன் கிட்ட வந்தா எட்டடி உன்ன விட்டு தூரமா போகிற மாதிரி நடந்தது. உனக்கு நான் ப்ராமிஸ் பண்றேன் ஹனி பேபி. இனிமே உன்ன கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். பிரிட்டோ, கிளாராவோட மேரேஜ் எனக்கு ரொம்ப முக்கியம். முதல்ல அது முடியட்டும். அப்புறமா உன்னை சமாதானப்படுத்துறதுக்கு என்ன பண்றதுன்னு நான் யோசிக்கிறேன்.” என்று நினைத்துக் கொண்டு தனக்காக டிசைனர் தயாரித்து கொடுத்த ஆடையையும் தேவையான பிற பொருட்களையும் எடுத்துக் கொண்டு தேன்மொழியை டிஸ்டர்ப் செய்யாமல் அருகில் உள்ள ரூமிற்கு சென்று விட்டான்.
காலை 10 மணிக்கு சர்ச்சில் பிரமாண்டமாக கிளாரா மற்றும் பிரிட்டோவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அர்ஜுன் குடும்பத்தினர்கள் அனைவரும் கிளம்பி எட்டு மணிக்கே அங்கே சென்று விட்டார்கள். வெள்ளை நிற கவுனில் கிளாராவை எப்போது பார்ப்போம் என்று நினைத்து நொடிக்கு நொடி ஏங்கிக் கொண்டு இருந்த பிரிட்டோ தேன்மொழி தான் எப்போதும் அவளுடன் இருப்பாள் என்பதால் அவள் அருகில் சென்று “கிளாரா ரெடி ஆகிட்டாளா மிஸ்ஸஸ் அர்ஜுன்?” என்று ஆர்வமாக கேட்டான்.
ஆருத்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த தேன்மொழி “நீங்க இன்னொரு தடவை இப்படி என்ன மிஸ்சஸ் அர்ஜுன்னு கூப்பிட்டு இருந்தீங்கன்னா நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் அண்ணா. எனக்கு தான் அழகா தேன்மொழியின்னு பெயர் வச்சிருக்காங்களே.. என் பேரை சொல்லி கூப்பிடுங்க. அப்ப தான் உங்க லேடி லவ் எங்க இருக்காங்கன்னு நான் சொல்லுவேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
தேன்மொழி தன்னிடம் தன்னை அண்ணனாக நினைத்து உரிமையாக பேசும் போது பதிலுக்கு அவளிடமும் அப்படிப் பேச வேண்டும் என்று பிரிட்டோவிற்கு கூட சில நேரங்களில் ஆசையாக இருக்கும்.. ஆனால் என்ன இருந்தாலும் அவன் அங்கே யார் என்று அவன் மனதிற்கு நன்றாக தெரியும் தானே! எது எப்படி இருந்தாலும் அவன் தன் கடமைக்கு கட்டுப்பட்டவன், முக்கியமாக அர்ஜுனுக்கு.
அதனால் அந்த சூழ்நிலையில் தர்ம சங்கடமாக உணர்ந்த பிரிட்டோ அர்ஜுனை திரும்பி பார்க்க, “நான் உங்க கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்! நீங்க அவர் கிட்ட கேட்டுட்டா என்ன இந்தியால இருந்து உங்க ஆள் கூட சேர்ந்து கடத்திட்டு போனீங்க! இப்ப மட்டும் எதுக்கு அவர பாக்குறீங்க?” என்று பிரிட்டோவிடம் கோபமாக கேட்டாள் தேன்மொழி.
அதனால் என்ன வண்டி நம்ம பக்கம் திரும்புது என்பதைப்போல தேன்மொழியை பாவமாக பார்த்த அர்ஜுன் பின் பிரிட்டோவை பார்த்து, “ என்னையே நம்ம வீட்ல இருக்கும்போது சீஃப்-ன்னு கூப்பிடக் கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன். நான் சொல்றத நீயும் கிளாராவும் தான் கேட்க மாட்டேங்கறீங்க. அவ தான் உன்னை உரிமையா அண்ணான்னு கூப்பிடறாளே! அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நடுவுல தேவை இல்லாம என்னை ஏன் டா இழுக்கிறீங்க?” என்று கேட்டான்.
“கிளாரா bride's room-ல இருக்காங்க. Father கூப்பிடும்போது தான் அவங்களை கூட்டிட்டு வரணுமாம். அவங்க ரெடி ஆகிட்டாங்க. நீங்க அவங்கள அந்த ட்ரெஸ்ல பாக்கும்போது உங்களோட எக்ஸ்பிரஷன்ஸ் எப்படி இருக்குன்னு ரெக்கார்ட் பண்ணனும்னு கிளாரா சொல்லிட்டு இருந்தாங்க. சோ மேரேஜ் பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகுற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணி தான் ஆகணும் அண்ணா.” என்று தேன்மொழி சொல்ல, “ஓகே மா நான் வெயிட் பண்றேன்.” என்றான் பிரிட்டோ.
“நான் போய் மேரேஜ் அரேஞ்ச் பண்ணி எல்லாம் கரெக்டா இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிட்டு வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் எழுந்து செல்ல, “நானும் உங்க கூட வரேன் சீஃப்!” என்று சொல்லிவிட்டு தானும் எழுந்தான் பரிட்டோ. “கல்யாண மாப்பிள எங்கயும் போகக் கூடாது." என்று தேன்மொழியும், “இன்னைக்கு உன் மேரேஜ். நீ இன்னைக்கு கூட வேலை செய்யணுமா?” என்று தேன்மொழியும் அர்ஜுனும் ஒருசேர கேட்டார்கள்.
அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்த பிரிட்டோ “ஓகே ஓகே, நான் எங்கயும் போகல.” என்று சொல்ல, அர்ஜுன் தேன்மொழி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே தன் முகத்தை திருப்பிக் கொண்ட தேன்மொழி “நீ வா ருத்ரா.. நம்ம கிளாரா ஆன்ட்டிய போய் பார்க்கலாம்.” என்று சொல்லி ஆருத்ராவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
அப்போதும் தன்னை பற்றி யோசிக்காமல் பிரிட்டோ அக்கறையுடன் “என்ன chief மறுபடியும் உங்களுக்குள்ள பிராப்ளமா?” என்று அவனிடம் விசாரிக்க, “இன்னைக்கு உன்னோட my boy! சோ today நீ உன் girlfriend-ஐ பத்தி மட்டும் யோசி.” என்று சொல்லி அவன் தோள்களில் தட்டி கொடுத்துவிட்டு திருமண வேலைகளை பார்ப்பதற்காக அங்கிருந்து சென்று விட்டான் அர்ஜுன்.
ஏற்கனவே அங்கே ஆகாஷ் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்க, அவனுடன் இணைந்து கொண்ட அர்ஜுன் “உன் ஃபிரண்டு மேரேஜுக்கு நீ தியா வேலை பாக்குற மாதிரி இருக்கே!” என்று கேட்க, “ஆமா ஆமா.. இன்னும் நான் நிறைய சர்ப்ரைஸ் பிளான் பண்ணேன். நீதான் அதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லி கெடுத்துட்ட!” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் ஆகாஷ்.
சில நிமிடங்களுக்கு பிறகு பிரிட்டோவை மேரேஜ் ஹாலிற்க்கு ஜானகி, அர்ஜுன், ஆகாஷ் மூவரும் அழைத்துச் செல்ல, அவர்களைத் தொடர்ந்து பிரசாத், தேன்மொழி, லிண்டா மூவரும் கிளாராவை அழைத்து வந்தார்கள். வெள்ளை நிற கவுனில் விண்ணுலக தேவதை போல அழகாக தயாராகி வந்திருந்த கிளாராவை கண்கள் கலங்க பார்த்தபடி நின்று இருந்தான் பிரிட்டோ.
அவனைப் பார்த்து “இன்னைக்கு நம்ம அழக் கூடாது பிரிட்டோ!” என்று சைகை செய்து சொன்ன கிளாரா சிரித்த முகமாக அவனை நோக்கி நடந்து சென்றாள். அந்த அழகான தருணங்களை எல்லாம் அவர்களை சுற்றி நின்ற கேமராமேன் தங்கள் கேமராக்களில் அழகாக படம் பிடித்தார்கள்.
அங்கே குடியிருந்த அனைவரிடமும் இந்த திருமணம் நடப்பதில் உங்கள் அனைவருக்கும் சம்மதமா என்று கேட்ட ஃபாதர் அனைவரும் சம்மதம் தெரிவித்தவுடன் தேவனை வேண்டிக் கொண்டு கிளாரா மற்றும் பிரிட்டோவிடம் உங்களுக்கு ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டார்.
கோரசாக அவர்கள் இருவரும் “Yes father!” என்று சொன்னவுடன், “you may exchange the rings!” என்றார் ஃபாதர். அர்ஜுன், தேன்மொழி இருவரும் தங்கள் கையில் சிவப்பு துணியால் மூடப்பட்டு இருந்த ஒரு வெள்ளித் தட்டில் வைத்திருந்த வைர மோதிரத்தை அவர்கள் முன்னே நீட்டினார்கள். தன் கையில் கிளாராவுக்கான மோதிரத்தை எடுத்துக் கொண்ட பிரிட்டோ தரையில் மண்டியிட்டு அமர்ந்து கிளாரா வின் மோதிர விரலில் அணிவித்தான்.
அவனைப் போலவே கிளாராவும் தரையில் மண்டியிட்டு அவனுக்கு மோதிரம் அணிவித்தாள். அனைத்தையும் கீழே நின்று உற்சாகமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த ஜனனி “wow what a cute couple! நம்ப மேரேஜ் அவசர அவசரமா நடந்துருச்சு. இப்ப அர்ஜுன் அண்ணாவும் நார்மல் ஆகிட்டாரு. எனக்கு இவங்கள பாக்க பாக்க நம்மளும் இந்த மாதிரி இன்னொரு தடவை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்னன்னு தோணுது!” என்று அவள் கணவன் சந்தோஷுடம் சொன்னாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-116
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.