“என்ன இவ எதுவுமே சொல்லாம அவ பாட்டுக்கு படுத்துட்டா! வேணும்னே எதுவும் கேட்காம இருக்காளா? இல்ல நிஜமாவே இவ என்ன கவனிக்கவே இல்லையா?” என்று குழப்பத்தில் யோசித்து கொண்டு இருந்த அர்ஜுன் அவள் பக்கம் திரும்பி படுத்து அவள் மீது தன் கையை போட்டான். அதை உணர்ந்து அவன் பக்கம் திரும்பி படுத்த தேன்மொழி “அவங்க மட்டும் எதுக்கு இங்க இருக்காங்க?” என்று கேட்டாள்.
“அவங்களா யாரு? யார் இங்க இருக்காங்க?” என்று அர்ஜுன் புரியாமல் கேட்க, “அவங்க தான் உங்க பிசினஸ் பார்ட்னர் ஜூலி. லாங் டிஸ்டன்ஸ்ல இருந்து வந்த வி.ஐ.பிs எல்லாருமே அப்பார்ட்மெண்ட்ல தானே ஸ்டே பண்ணி இருக்காங்க! இவங்க மட்டும் எதுக்கு நம்ம கூட வீட்ல ஸ்டே பண்ணிருக்காங்க? இந்த வீட்ல அவங்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கிடைக்குற மாதிரி இருக்கே!” என்று கேட்டாள்.
“உன்னோட ரிலேட்டிவ்ஸ் கூட தான் ஒன்னு ரெண்டு பேர் வீட்ல தங்கி இருக்காங்க. அதே மாதிரி தான் ஜூலியும் இருக்கா. இதுல அவருக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுக்குறாங்கன்னு நீ ஏன் நினைக்கிற?” என்று அர்ஜுன் கேட்க, “என்னோட ரிலேட்டிவ்சும், உங்களோட பிசினஸ் பார்ட்னரும் ஒன்னா? ஜூலியா விட பெரிய ஆளுங்களை எல்லாம் அப்பார்ட்மெண்ட்ல தங்க அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிக் கொடுத்து அனுப்பி வச்சிட்டு, இவங்கள மட்டும் நம்ம எதுக்காக இங்க வச்சுக்கணும்? அதுவும் அவங்கள பத்தா இந்த ஃபங்ஷனுக்கு வந்த மாதிரி தெரியல. அவங்க ஜனனி கிட்ட நம்ப இங்க இருக்கிற வரைக்கும் அவங்களும் இங்கதான் இருக்க போறதா சொல்லிட்டு இருந்தத நான் கேட்டேன்.” என்றாள் தேன்மொழி.
“அப்படியா? எனக்கே நீ சொல்லித் தான் அதுவும் தெரியும். அவ இங்க இருக்கிறன்னு சொன்னா நம்ப என்ன பண்ண முடியும்?” என்று அர்ஜுன் கேட்க, “நீ பர்மிஷன் குடுக்காம அவங்களால எப்படி இங்க தங்க முடியும்? இது என்ன பிரைவேட் கெஸ்ட் ஹவுஸா.. யார் வேணா இங்க ஸ்டே பண்றதுக்கு?” என்று கோபமாக கேட்டாள் தேன்மொழி. “இவ எதுக்கு தேவை இல்லாம இப்ப ஜூலிய பத்தியே கேட்டுகிட்டு இருக்கா!” என்று நினைத்த அர்ஜுன்,
“அவளும் நானும் ரொம்ப வருஷமா ஃபிரண்ட்ஸ். எனக்கு சியா கூட மேரேஜ் ஆனதுக்கப்புறம் தான் நான் அவ கூட பெருசா பேசுறது இல்ல. அவ இங்க ஸ்டே பண்ணணும்னு நினைச்சா, இல்ல இங்க இருக்காத போடின்னு துரத்தியா விட முடியும்? ரஷ்யால இப்ப என்ன கண்டிஷன் இருக்குன்னு உனக்கே தெரியும் இல்ல! அங்க இருக்கிறவங்க எல்லாரும் இப்ப எங்கையாவது போய் சேஃப்பா இருக்கணும்னு தான் நினைச்சுட்டு இருப்பாங்க. சோ அவளும் கொஞ்ச நாள் நம்ம கூட இங்க இருக்கலாம்ன்னு டிசைட் பண்ணி இருக்கலாம். First of all, ஜூலிய பத்தி உனக்கு எப்படி தெரியும்? நான் அவளை உனக்கு இதுவரைக்கும் இன்ட்ரோ கூட பண்ணி வைக்கலையே!” என்று சந்தேகமாக கேட்டான்.
“நீ தான் என் கிட்ட சொல்லாம, எனக்கு தெரியாம நிறைய செய்றியே! நான் பிரிட்டோ அண்ணா கிட்ட அந்த பொண்ணு யாருன்னு கேட்டேன். அவர் தான் அவங்க உன் பிசினஸ் பார்ட்னர்னு சொன்னாரு.” என்று தேன்மொழி சொல்ல, “ஓஹோ இது அவன் பார்த்த வேலை தானா? இருக்கட்டும், அவனை நான் பாத்துக்கிறேன்.” என்று நினைத்த அர்ஜுன் “அதை மட்டும் தான் சொன்னானா? வேற எதுவும் சொல்லலையா?” என்று உறுதி செய்து கொள்வதற்காக கேட்டான்.
உடனே தன் மீது இருந்த அவன் கையை எடுத்துவிட்டு அவனை முறைத்து பார்த்த தேன்மொழி “வேற என்ன சொல்லணும்? அப்போ உனக்கும் அந்த ஜூலிக்கும் நடுவுல ஏதோ இருக்கு அப்படித்தானே!” என்று கோபமாக கேட்க, “சப்பா.. இது தான் வாய குடுத்து வாங்கி கட்டுகிறதா?” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அர்ஜூன் “ஏய் லூசு நீயா ஏண்டி அவசரப்பட்டு எல்லாத்தையும் இமாஜின் பண்ணிக்கிட்டு பேசுற? ஜெனரலா அவன் ஜூலியை பத்தி உன் கிட்ட என்ன சொன்னான்னு , தெரியல அவளோட பர்சனல் டீடைல்ஸையும் சேர்த்து சொன்னான்னு தெரிஞ்சுக்க கேட்டேன். அவ்ளோ தான். இப்ப தான் ரீசண்டா அவளுக்கும் அவளோட ஹஸ்பண்டுக்கும் டிவர்ஸ் ஆச்சுன்னு நான் கேள்விப்பட்டேன். அதான் கேட்டேன் போதுமா?” என்று அவளிடம் கேட்டான்.
“அப்ப அந்த பொண்ணுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆயிடுச்சா?” என்று நினைத்து ஒரு நொடி சந்தோஷப்பட்ட தேன்மொழி அடுத்த நொடி “ஆனா இவன் அவளுக்கும் அவளோட ஹஸ்பண்டுக்கும் டிவர்ஸ் ஆயிடுச்சுன்னு சொல்றானே! என்ன பிரச்சனையா இருக்கும்? அவ ஹஸ்பண்டை விட்டுட்டு இங்க வந்து அந்த பொண்ணு எதுக்கு தேவை இல்லாம என் புருஷன் கிட்ட வழிஞ்சுகிட்டேன் இருக்கு?” என்று யோசித்து கடுப்பானாள். அவளுக்கு ஜூலி என்ற பெயரை கேட்டாலே ஏனோ பற்றி கொண்டு வந்தது.
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் தனது கூர்மையான விழிகளால் அவளை பார்த்த அர்ஜூன் நிதானமான குரலில் “நீ என்ன சந்தேகம் படுறியா தேன்மொழி?” என்று கேட்க, அவன் சட்டென்று அப்படி கேட்டதால் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதனால் உடனே எழுந்து அமர்ந்த தேன்மொழி “இல்லை, நான் அப்படி மீன் பண்ணல. எனக்கு என்னமோ அந்த பொண்ணோட பிகேவியர் புடிக்கல. நானே ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ண பத்தி எதுவும் முழுசா தெரியாம இப்படி பேசுறது தப்புதான். இருந்தாலும் சொல்றேன்.. எனக்கு என்னமோ அவங்க சரி இல்லைன்னு தோணுது. நான் எப்பயும் உன்னை சந்தேகப்பட மாட்டேன் அர்ஜுன். பட் எனக்கு அந்த பொண்ணுமேல நம்பிக்கை இல்லை. ” என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டாள்.
“நீ சொல்றது கரெக்ட் தான் ஹனி பேபி. அவ சரியில்ல தான். பட் இப்போ நீ சொல்றதுக்காக நானும் உடனே ஆமானு சொல்லிட்டா, அவ யாரு, அவளுக்கும் எனக்கும் நடுவுல என்ன இருந்துச்சுன்னு எல்லாம் நான் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டியதா இருக்கும். ஆல்ரெடி பொசசிவ்னஸ்ல நீ ஜூலிய பாத்து கோவத்துல இருக்க. நான் again உன்ன டென்ஷன் பண்ண விரும்பல.” என்ற நினைத்த அர்ஜுன் அவளிடம் எதுவும் பேசாமல் மௌனித்தான்.
அவன் ஜூலிக்கு சப்போர்ட் செய்து பேசவில்லை என்பதால் தைரியமாக “அவங்க இந்தியாவுல இருக்கணும்னு நினைச்சா தாராளமா இருக்கட்டும். பட் நம்ம வீட்ல தேர்ட் பர்சன் இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல. என் சொந்தக்காரங்க கூட இன்னும் இரண்டு நாள்ல கிளம்பிடுவாங்க. வேணும்னா ஜூலிக்கு நம்ம அப்பார்ட்மெண்ட்ல நான் ஒரு தனி பிளாட் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்.. அவங்கள அங்க போய் ஸ்டே பண்ண சொல்லு. குட் நைட்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேறு புறமாக திரும்பி படுத்துக் கொண்டாள் தேன்மொழி.
அவள் பேசிய பிறகு சில நொடிகள் ஜூலியை பற்றியும், அவளுடனான தனது கடந்த காலம் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்த அர்ஜுனிற்க்கு லேசாக கண் எரிவதை போல இருந்தது. அது அங்கே அவனுக்கு இருக்கும் வீக்கம் மற்றும் காயத்தை பற்றி ஞாபகப்படுத்த, “ஆமா.. இவ்ளோ நேரமா அவ நம்ம மூஞ்சிய பாத்து தானே பேசிட்டு இருந்தா.. இன்னும் லைட் கூட ஆஃப் பண்ணல. என் கண்ணுக்கு கீழ இவ்ளோ பெரிய காயம் இருக்கு. ஏன் இவ அத பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கல? இதையும் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாளா? அதான் கோபத்துல கேக்காம இருக்காளோ!” என்ற யோசித்த அர்ஜுன் தேன்மொழியின் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்தான்.
அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவள் அமைதியாகவே இருக்க, “என் கண்ணுல இருக்கிற காயத்தை பார்த்ததுக்கப்புறமும் கூட ஏன் டி அதை பத்தி எதுவும் கேட்காம அமைதியாவே இருக்க? உன் கிட்ட நான் மறச்சிட்டேன்னு கோவமா? உனக்கு தெரிஞ்ச கஷ்டப்படுவேனு தான் சொல்லல. மத்தபடி வேணும்னே நான் மறைக்கணும்னே உன் கிட்ட நினைக்கில டி.” என்று மென்மையான குரலில் கேட்டான்.
“நான் கேட்டா மட்டும் நீ உண்மையவா சொல்ல போற? நீ என்ன கஷ்டப்படுத்தாம இருக்கிறதுக்கு எதுவும் சொல்லாம இருப்ப. ஆனா நீ இப்படி என் கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைக்கிறியேன்னு நினைச்சு நான் கஷ்டப்படுறத பத்தி எல்லாம் உனக்கு கவலை இல்லை. அப்புறம் நான் எதுக்கு கேட்கணும்? நான் இங்க பேருக்குத் தானே பொண்டாட்டின்னு இருக்கேன்! ஒரு பொண்டாட்டியா இன்னைக்கி எல்லார் முன்னாடியும் உன் கூட நின்னு எல்லாத்தையும் பண்ணிட்டேன். அவ்ளோ தான், இந்த மாதிரி என் கடமையை நான் கரெக்டா பண்ணினா அது போதும். மத்தபடி பர்சனலா இனிமே உன் கிட்ட எதையும் எதிர்பார்க்க கூடாது. உன் கிட்ட எதுவும் கேட்க கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். உன் இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணாலும் பண்ணு இனிமே நான் கேட்க மாட்டேன்.” என்று கண்கள் கலங்கச் சொன்னாள் தேன்மொழி. அவள் பேச பேச துக்கம் அவள் தொண்டையை அடைந்தது.
அவள் நேரடியாக ஏதேனும் பேசி எதையாவது கேட்டு திட்டி அவனிடம் சண்டை போட்டால் கூட அதை சமாளித்து அவன் அனைத்தையும் எளிதாக கடந்து போயிருப்பான். ஆனால் இவள் என்னமோ இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போலவே பேசுகிறாளே... இனி இவளை எப்படி சமாளிப்பது? என்று நினைத்து வருத்தப்பட்ட அர்ஜுனுக்கு தன் தலையை சுற்றுவதை போல இருந்தது. இந்த உலகத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் அவனை இந்த சாதாரண தேன்மொழி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் பாவம் அவளுக்குத் தான் அது தெரியவில்லை.
“இனிமே நான் இப்படி பண்ண மாட்டேன். சாரி டி.” என்று கெஞ்சும் குரலில் அர்ஜுன் செல்ல, “இப்ப கூட எப்படி அந்த காயம் வந்துச்சுன்னு சொல்றான் பாரு கல்நெஞ்சகாரன்!” என்று நினைத்த தேன்மொழி “உன் சாரி எனக்கு எதுக்கு? நான் இப்ப எதையும் பேசுற மூட்ல இல்ல அர்ஜுன். நாளைக்கு பிரிட்டோ அண்ணா மேனேஜ் இருக்கு. காலையில சீக்கிரமா எந்திரிக்கணும். என்ன தூங்க விடு. நீ இப்படியே ஏதாவது பேசி பேசி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தா, நான் எந்திரிச்சு போய் பக்கத்து ரூம்ல படுத்துக்குவேன்.” என்று கோபமாக சொன்னாள்.
குறைந்தபட்சம் அவள் தன் கையை அவள் மீது தட்டிவிடவில்லை என்பதால் அதை நினைத்து நிம்மதி பெரு மூச்சு விட்ட அர்ஜுன் அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டு அமைதியாக கண்களை மூடி உறங்க தொடங்கினான். பிரிட்டோ தூங்குவதற்காக தங்களுடைய ரூமிற்கு வராததால் அவனுக்கு கால் செய்த கிளாரா “டேய் எங்க டா இருக்க?” என்று கேட்க, “வீட்ல தான் இருக்கேன். என் ஃபிரண்டு ரூம்ல இருக்கேன்.” என்றான் அவன்.
“தூங்குற டைம்ல நம்ப ரூமுக்கு வராம அங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கிளாரா கேட்க, “என்ன பேபி மறந்துட்டியா? நாளைக்கு உனக்கும் எனக்கும் மேரேஜ். ஆபீஸியலா உன் ரூம்ல ஸ்டே பண்றதுக்கு எனக்கு நாளைக்கு ஆக்சஸ் கிடைச்சிடும். சோ நமக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா நாளைக்கு இதே வீட்ல நம்ம அந்த ரூம்ல ஃபர்ஸ்ட் நைட் செலிபிரேட் பண்ணலாம். அதுக்கு நமக்கு நடுவுல இன்னைக்கு கொஞ்சம் கேப் இருந்தா நாளைக்கு பண்ணும்போது exciting-ஆ இருக்கும்னு தோணுச்சு.
அதான் இன்னைக்கு என் ஃபிரண்டு கூட ஸ்டே பண்ணிட்டேன். டோன்ட் வரி, நாளைக்கு அப்புறம் ஒவ்வொரு செகண்டும் நான் உன்கூட தான் இருப்பேன். அன்லிமிடெட்டா ரொமான்ஸ் பண்ணி உன்ன டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பேன்.” என்று ஆர்வமான குரலில் பிரிட்டோ சொல்ல,
“அது எல்லாம் கரெக்டு தான். பட் நாளைக்கு தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ன்னு சொல்ற பாத்தியா.. அதான் காமெடியா இருக்கு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் கிளாரா. அதைக் கேட்டு கொஞ்சம் வெட்கப்பட்ட பிரிட்டோ இதே போல எப்போதும் அவளுடன் சிரித்து பேசி தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-115
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.