அர்ஜுன், தேன்மொழி இருவரும் ஜோடியாக அமர்ந்து பூஜை செய்து கொண்டு இருந்தார்கள். சித்தார்த், ஆருத்ரா இருவரும் மேடைக்கு சென்று அவர்களது இருபக்கமும் அமர்ந்து கொள்ள, தன் மகன் பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறான் என்று நினைத்த ஜானகி “எப்பயும் நீ இதே மாதிரி ஹாப்பியா இருக்கணும் அர்ஜுன். உங்க சந்தோஷத்து மேல யாரோட கெட்ட பார்வையும் படக் கூடாது. சியா மாதிரியே உனக்கு தேன்மொழி மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சிருக்கா. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப லவ் பண்றீங்க. ஆனாலும் என்னமோ தெரியல அடிக்கடி உங்களுக்குள்ள எதுவும் ஒத்துப் போக மாட்டேங்குது. எது நடந்தாலும், கடைசி வரைக்கும் அது எல்லாத்தையும் சமாளிச்சு நீங்க ஒண்ணா இருக்கணும். அதான் என் ஆசை.” என்று நினைத்து கண் கலங்கினாள்.
அதை கவனித்த ஆகாஷ் ஜானகியின் அருகில் சென்று “என்ன மம்மி.. ரஷ்யால வார் நடந்துட்டு இருக்கு. அது இல்லாம நேச்சுரல் டிசாஸ்டர்ஸ் வேற அதிகமா இருக்கு. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல நம்ம பிசினஸ் என்னாகுமோன்னு நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்களா? நம்ம ஆபீஸ் இருக்கிற சைடு எல்லாம் எந்த பிராப்ளமும் இல்ல.
மொத்த ரஷ்யாவிலும் நம்மளோட ஏ.கே பேலஸ் தான் ரொம்ப சேஃபான பிளேஸ். நமக்கு எதுவும் ஆகாது. இருந்தாலும் ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்க எல்லாருக்கும் லீவு குடுத்தாச்சு. நம்ம ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் இங்க தான் இருக்காங்க. டாடியும் இந்தியா தான் வந்துட்டு இருக்காரு. சோ நோ ப்ராப்ளம்.” என்று ஆறுதலாக சொன்னான்.
“நான் அதுக்காக எல்லாம் ஒன்னும் ஃபீல் பண்ணல டா. என் பையன் அர்ஜுன் எங்க இருந்தாலும் நம்ம பிசினஸ, நம்மள நம்பி இருக்கிற வர்கர்ஸ்சை நல்லா பாத்துக்குவான்னு எனக்கு தெரியும். பட் என இருந்தாலும் இயற்கை பேரழிவ நம்மளால எதுவும் பண்ண முடியாது. இந்த பிரச்சனை எல்லாம் சரியாகற வரைக்கும் நம்ம இந்தியாவிலேயே இருக்கலாம்னு எனக்கு தோணுது. அர்ஜுன் கிட்ட இத பத்தி பேசணும்.” என்று ஜானகி சொல்ல,
“நம்மளோட 60% பிசினஸ் ரஷ்யாவுல தான் நடக்குது. நம்ம அங்க இல்லேன்னாலும் அதை நம்மளால ஹேண்டில் பண்ண முடியும். அதுக்காக ரொம்ப நாள் இந்தியாவுல ஸ்டே பண்றது possible-ன்னு தெரியல. ஆல்ரெடி நானும் அர்ஜுனும் இத பத்தி டிஸ்கஸ் பண்ணோம். அவன் முதல்ல டாடி வரட்டும் பேசிக்கலாம்னு சொல்லிட்டான். நம்ம தாத்தா வேற கொஞ்சம் கிரிட்டிக்கல் கண்டிஷன்ல இருக்காரு. அவரை இப்ப தான் ரஷ்யாவுல இருந்து டிராவல் பண்ணி இங்க கூட்டிட்டு வந்திருக்கோம். அவர அடிக்கடி அங்கேயும் இங்கேயும் ஷிஃப்ட் பண்ணிட்டு இருக்க முடியாது. அதையும் யோசிச்சு பாக்கணும் மம்மி.” என்றான் ஆகாஷ்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பூஜை நடந்தது. அங்கே பூஜை முடிந்த பிறகு வந்தவர்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அர்ஜுன் தேன்மொழி இருவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் புதிதாக அவர்கள் வாங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டை திறந்து வைத்து அங்கேயும் சின்னதாக ஒரு பூஜை செய்தார்கள். அதற்கு விருந்தாளியாக வந்திருந்தவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.
இருந்தாலும் ஜூலி அங்கே வந்திருந்தாள். பங்க்ஷன் முடியும் வரை பிரச்சனை செய்யக் கூடாது என்பதற்காக அனைத்தையும் கவனித்தாலும் அமைதியாகவே இருந்தாள் தேன்மொழி. அனைத்தும் முடிந்து மீண்டும் அனைவரும் வீட்டிற்கு வந்து தனியாக டைனிங் ஹாலில் அமர்ந்து குடும்பமாக சாப்பிட்டார்கள்.
“நான் ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு தான் வந்தேன். அதான் பங்க்ஷன் முடிஞ்சிடுச்சில்ல.. நான் கிளம்புறேன் பாய்.” என்று உதயா செல்ல, “பங்க்ஷன் வந்தவங்க எல்லாருக்கும் ரிட்டன் கிஃப்ட் இருக்கு. நான் ஸ்பெஷலா இன்வைட் பண்ணவங்க எல்லாருக்கும் தனியா நான் கிஃப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீ என் கூட வா நான் உனக்கு எடுத்து குடுக்கிறேன்.” என்ற தேன்மொழி அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அப்போது தன் மகளுடன் அந்த பங்க்ஷனுக்கு வந்திருந்த அனிதா தேன்மொழியை பார்த்தவுடன் அவள் அருகில் சென்றாள். “ஹே அனிதா.. நீ இப்ப தான் வரியா என்ன? நான் நீ வரலைன்னு நெனச்சிட்டு இருந்தேன்.” என்று தேன்மொழி சொல்ல, “நான் எப்பவோ வந்துட்டேன் தேன்மொழி. இங்க பெரிய ஆளுங்க நிறைய பேர் வந்ததுனால இந்த அனிதா உன் கண்ணுக்கு தெரியாம போய்ட்டானு நினைக்கிறேன். நீ பிஸியாவே இருந்த. நான் உன் கிட்ட பேச ட்ரை பண்ணும் போது பூஜை பண்றதுக்காக நீயும் உன் ஹஸ்பண்டும் ஸ்டேஜுக்கு போய்ட்டீங்க. அதான் கடைசி வரைக்கும் என்னால உன் கிட்ட வந்து பேசவே முடியாம போயிடுச்சு. இப்ப உன்ன பார்த்த உடனே அட்லீஸ்ட் உன் கிட்ட சொல்லிட்டாவது கிளம்பலாம்னு வந்தேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அனிதா.
“அச்சோ சாரி அனிதா! நீ ஒரு கால் பண்ணி இருக்கலாமே! எனக்கு அடுத்து இத பண்ணனும் அதை பண்ணனும்னு மண்டிக்குள்ள ஏதாவது ஓடிக்கிட்டே இருக்கு. அதான் வந்தவங்க எல்லாரையும் என்னால ப்ராப்பரா ரிசீவ் பண்ண முடியல. நீ தப்பா நினைச்சுக்காத.” என்று தேன்மொழி சொல்ல, “இட்ஸ் ஓகே, I can understand. ஒரு மல்டி மில்லியனரோட wife-ஆ இருக்கிறதுன்னா எப்படி இருக்கும்னு இன்னைக்கு தான் நான் நேர்ல பார்த்தேன். உன்னோட ரெஸ்பான்சிபிலிடிஸ் எவ்ளோ இருக்குன்னு புரியுது. பெரிய வி.ஐ.பி.ஸ் எல்லாம் வந்திருக்கிற ஃபங்ஷனுக்கு நீ என்னை இன்வைட் பண்ணதுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து புன்னகைத்தாள் அனிதா.
“ஓகே, நீயும் என் கூட வா. நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.” என்று சொல்லி அனிதாவையும், உதயாவையும் அழைத்துச் சென்று அவர்களுக்கான ரிட்டன் கிஃப்ட் ஐ அவர்கள் கையில் எடுத்துக் கொடுத்த தேன்மொழி “வீட்டுக்கு போய் ஓப்பன் பண்ணி பாத்துட்டு இது புடிச்சிருக்கான்னு சொல்லுங்க. எனக்கு இந்த மாதிரி எல்லாம் கிஃப்ட் கொடுத்து பழக்கமே இல்ல. இது எல்லாமே எங்க அத்தையோட ஐடியா தான்.” என்றாள்.
இவ்வளவு பெரிய பணக்கார வீட்டில் கிஃப்ட் கொடுக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அது விலைமதிப்புடையதாகத்தான் இருக்கும் என்று நினைத்த அனிதா சந்தோஷத்தில் தேன்மொழியை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் தேன்மொழி! ரொம்ப நாளைக்கு அப்புறமா என் பொண்ணு கூட நான் இன்னைக்கு தான் ஹாப்பியா இருந்தேன். அவளுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தா. இங்கே இருக்கிற எல்லாத்தையும் இன்ட்ரஸ்டிங்கா பாத்துட்டு இருந்தா. இந்த நாளை என் லைஃப்ல நான் மறக்கவே மாட்டேன்.” என்றாள் அனிதா.
அவளது மகளும் தன் பங்கிற்கு தேன்மொழியை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் ஆன்ட்டி!” என்று சிரித்த முகமாக சொல்லிவிட்டு அனிதாவுடன் சென்றாள். “நம்மளும் அனிதா மாதிரி தேன்மொழியை hug பண்ணி தேங்க்ஸ் சொன்னா என்ன ஆகும்?” என்று நினைத்த உதயா, “அர்ஜூன் எல்லார் முன்னாடியும் எத்தனை பொண்ணுங்கள ஹக் பண்ணி என்ன பண்ணாலும் இங்க யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. அதுக்காக நான் தேன்மொழி கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிற மாதிரி ஏதாவது பண்ணா, இங்க என்ன நடக்குதுன்னு கூட பாக்காம அர்ஜுன் பாஞ்சு வந்து நம்மள அடிக்கிறதுக்கு கூட சான்ஸ் இருக்கு. அப்புறம் அவமானமா போயிடும்.” என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
இரவு 7 மணி அளவில் தனது ரூமிற்கு சோர்வாக சென்றாள் தேன்மொழி. நாளை கிளாரா மற்றும் பிரிட்டோவின் திருமணம் என்பதால் “காலையில சீக்கிரமா எந்திரிச்சு கிளம்பனும். ஆருத்ராவும், சித்தார்த்தம் கூட கரெக்டா டைமுக்கு தூங்குறாங்க. எனக்கு தான் அம்மா சொல்ற மாதிரி இன்னும் மெச்சூரிட்டி வரமாட்டேங்குது போல இருக்கு.” என்று நினைத்த தேன்மொழி டோரை லாக் செய்துவிட்டு அவள் அணிந்திருந்த புடவையை ஆடை மாற்றுவதற்காக கழட்ட தொடங்கினாள்.
டோர் உள்ளே லாக் ஆகி இருந்தாலும் தனது ஃபிங்கர் பிரிண்ட்டை வைத்து சதவை திறந்து உள்ளே வந்தான் அர்ஜுன். ஆடை மாட்டிக் கொண்டிருந்ததால் திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவள் திடுக்கிட்டு தன் உடலை புடவையால் சுற்றிக்கொண்டு திரும்பி கதவு பக்கம் பார்த்தாள். “பயப்படாத.. பயப்படாத நான் தான். நீ டிரஸ் சேஞ்ச் பண்ணு. நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வந்துடறேன்.” என்ற அர்ஜுன் பாத்ரூமை நோக்கி நடந்தான்.
“குளிக்கும்போது கண்ணாடிய கழட்டி வச்சிட்டு குளிப்பியா? இல்லைனா பாத்ரூம்ல கூட லைட் எரியுதே.. ஏன் குளிக்கும்போது கண்ணாடி போடக் கூடாதான்னு டயலாக் பேச போறியா?” என்று நக்கலாக அவள் கேட்க, “ரைட்டு.. இன்னைக்கு நைட்டு ஒரு சம்பவம் இருக்கு.” என்று நினைத்த அர்ஜுன் அவளை திரும்பி பார்க்காமல் தனது கூலிங் கிளாஸை கழட்டி அவனுக்கு முன்னே இருந்த டேபிளில் வைத்துவிட்டு “யாராவது குளிக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுட்டு போவாங்களா? நான் கலட்ட மறந்துட்டேன் அவ்வளவு தான். ஓகே நான் குளிச்சிட்டு வரேன். டின்னர் நம்ம சேர்ந்து சாப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
“எனக்கு பசிக்கல.” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்ட தேன்மொழி தனது புடவையை கழட்டிப் போட்டுவிட்டு டி-ஷர்ட் மற்றும் பைஜாமாவிற்கு மாறினாள். பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது தெளிவாக யோசித்த அர்ஜூன் “பிரிட்டோ சொன்ன மாதிரி இதுக்கு மேலயும் நம்ம இவ கிட்ட ஹைட் அன்ட் சீக் விளையாடிட்டு இருக்க வேண்டாம். உன்னை இருந்தது இந்த வீக்கம் நல்லாவே சரியாயிடுச்சு. அவ எதாவது கேட்டா பாத்துக்கலாம்.” என்று நினைத்து குளித்துவிட்டு ஒற்றை துண்டுடன் கண்ணாடி அணியாமல் அப்படியே வெளியில் வந்தான்.
அவன் வருவதை கண்டு கொள்ளாததைப் போல தனது மொபைல் ஃபோனில் மூழ்கி இருந்த தேன்மொழி இன்று தன் வீட்டில் நடந்த பங்க்ஷன் பற்றி அவளுடைய காலேஜ் குரூப்பில் மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். அவளுடைய நண்பர்களும் ஏராளமானவர்கள் விழாவிற்கு வந்திருந்தார்கள். ஆனால் தனித்தனியாக யாரையும் அவளால் சென்று கவனிக்க முடியவில்லை. இருப்பினும் அவர்கள் தன் வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட தேன்மொழி பொதுவாக வந்து அனைவருக்கும் நன்றி சொல்லி அதில் வாய்ஸ் மெசேஜ் போட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன இவ நம்மள கண்டுக்கவே மாட்டேங்குறா?” என்று நினைத்த அர்ஜுன் அவனது கபோர்ட்டில் இருந்த ஒரு ட்ரவுசரை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னே நின்று கொண்டு அதை மாற்றினான். அப்போதும் அவள் அங்கே ஒருவன் இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. லாஸ்டாக “நாளைக்கு எங்க வீட்ல இன்னொரு மேரேஜ் ஃபங்ஷன் இருக்கு. சோ இயர்லி மார்னிங் தூங்கி எந்திரிக்கணும். நான் அப்புறமா ஃப்ரீயா இருக்கும்போது குரூப்ல சேட் பண்றேன் பாய்.” என்று பேசி வாய்ஸ் மெசேஜ் போட்டுவிட்டு தனது மொபைல் ஃபோனை வைத்துவிட்டு படுத்துக் கொண்டாள் தேன்மொழி.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-114
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.