Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 2

போதையடி நீ எனக்கு CH 2

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 2

“ஐயையோ பாஸ்.. சத்தியமா நான் அப்படியெல்லாம் இல்ல. என் வைஃப் முன்னாடி மட்டும் இப்படி எல்லாம் நீங்க சும்மா விளையாட்டுக்கு பேசினா கூட, அவ கோச்சிக்கிட்டு என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போய்டுவா.. என் ஃபிரண்ட்ஸ் ஒன்னு ரெண்டு பேருக்கு அடிக்கடி ஸ்டிரஸ் ஆனா இப்படி போற ஹாபிட் இருக்கு! எப்பயாவது கம்பெனி கொடுக்க என்னையும் வர சொல்லி கூப்பிடுவாங்க. பட் நான் நிரஞ்சனாவை தவிர இன்னொருத்திய என் கனவுல கூட நினைச்சு பார்க்க மாட்டேன். சோ ஒரு தடவை கூட, அவங்க கூட அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நான் போனதே இல்லை பாஸ். டாக்டர் வேற இதை தவிர வேற ஆப்ஷன் இல்லைன்னு சொல்லிட்டாரு. இதை விட்டா மறுபடியும் உங்களுக்கு ஃபீலிங்ஸ் வர வைக்கிறதுக்கு வேற‌ என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல பாஸ். அதான் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு சொன்னேன். அதுக்காக எல்லாம் நீங்க என்னை தப்பா நினைக்க கூடாது!” என்றான் திலீப்.  

அவன் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்த ரிஷி எதையோ தீவிரமாக யோசித்தான். அவனுக்குள் ஆயிரம் என்ன ஓட்டங்கள் இருந்தாலும், அவனுடைய மன கண்களில் அவன் அம்மா இறப்பதற்கு முன்பாக, “உன் தங்கச்சியை நான் உன்னை நம்பி தான் விட்டுட்டு போறேன் ரிஷி. இந்த பிணம் தின்னி கூட்டத்துக்கு நடுவுல உன்னால மட்டும் தான் அவளை காப்பாத்த முடியும்.‌இந்த அம்மா கண்ண மூடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு நினைச்சேன்.

ஆனா இவ்வளவு சீக்கிரமா உன்னை விட்டுட்டு போகணும்னு விதி இருந்திருக்கு போல.. இதுக்கு மேல என்னால அதை மாத்த முடியாது. என்ன நடந்தாலும், உன் தங்கச்சியையும், நானும் உங்க தாத்தாவும் நாங்க கட்டி காப்பாத்தின இந்த சொத்தையும் நீ எப்போதும் கை விட்டுடக் கூடாது. என் பையன் நீ எல்லாத்தையும் பத்திரமா பாத்துக்குவேன்ற நம்பிக்கையில தான் ‌ நான் கண்ண மூட போறேன். எனக்கு அப்புறம் நீ தான் எல்லாமாவும் இருந்து நம்ம பிசினஸ் சாம்ராஜ்யத்தை காப்பாத்தணும்.

உனக்கு அப்புறம் இது உன் குழந்தை வரைக்கும் தொடரனும்.” என்று சொல்லிவிட்டு அனைத்தையும் அவன் கட்டிக் காப்பான் என்று அவனிடம் இருந்து சத்தியம் வாங்கிக் கொண்டது வேறு அவன் மனசுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு இறுதியாக வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கும் தனது தங்கையின் அழகிய சிரித்தமுகம் ஞாபகம் வர, “ஓகே” என்ற ஒற்றை வார்த்தை மட்டும் வெறுமையான குரலில் அவன் வாயில் இருந்து வந்தது.

அவன் அதை மெதுவாக சொல்லி இருந்ததால், அரைகுறையாக அதை கேட்டிருந்த திலீப் “இப்ப என்ன பாஸ் சொன்னீங்க? உங்களுக்கு ஓகேவா? இப்பவே என் ஃபிரண்டுக்கு கால் பண்ணி நான் லொகேஷன் கேட்கவா?உங்களுக்கு இது எல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். சோ உங்களுக்காக பிரஷ்ஷா ஏதாவது பொண்ணு கிடைக்கிறதுக்கு சான்ஸ் இருக்கான்னு நான் அவங்க கிட்ட கேட்டுப் பார்க்கிறேன். அப்படி இருந்தா இன்னும் ரொம்ப நல்லது பாஸ்.” என்று உற்சாகமான குரலில் சொல்ல, அதற்கும் ஒற்றை வார்த்தையில் “ம்ம்..!!” என்று பதில் சொன்னான் ரிஷி.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured