Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 1

போதையடி நீ எனக்கு CH 1

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 1

இரவு 11 மணி அளவில் சாலையில் மிதமான வேகத்தில் ஒரு கார் எந்த சலனமும் இன்றி சென்று கொண்டிருந்தது. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவர்கள் ஊருக்கு வெளியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்ததால் அங்கே பெரிதாக வாகன போக்குவரத்து இல்லை. 30களின் தொடக்கத்தில் இருந்த ஒரு இளைஞன் காரை ஓட்டிக் கொண்டு செல்ல, அவனுக்கு பின்னே இறுக்கமான முகத்துடன் தனக்கென ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட பின் சீட்டில் சாய்ந்து தன் கண்களை மூடி அமர்ந்து இருந்தான் ஒருவன்.அந்த இரவு நேரத்திலும் கூட, இந்த மோசமான இருண்ட உலகத்தை பார்க்க விரும்பாமல் அவன் ஒரு பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இருந்தான்.

அது அவனுடைய பாதி இறுக்கமான முகத்தை மறைத்து இருந்தாலும், அதையும் தாண்டி சவரம் செய்யப்படாத அவனது குறுந்தாடியுடன் அவனுடைய பாதிமுகம் காரில் எரிந்து கொண்டிருந்த மெல்லிய லைட் வெளிச்சத்தில் கூட பிரகாசமாக மின்னியது.கார் ஓட்டிக் கொண்டு இருந்தவன் மிரர் வழியாக தனக்கு பின்னே அமர்ந்திருந்தவனை பார்த்து,

“பாஸ்.. எங்க போறதுன்னு தெரியாம நானும் ரொம்ப நேரமா சிட்டிய சுத்தி என்னமோ ஊர்வலம் வர்ற மாதிரி ஒரே இடத்துல ரொம்ப நேரமா போய்க்கிட்டே இருக்கேன். உங்களுக்கு மூடு சரி இல்லனா சொல்லுங்க.. அப்படியே பக்கத்துல எங்கயாவது ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம். பட் எனக்கு என்னமோ ஒரு தடவையாவது நீங்க டாக்டர் சொன்னத ட்ரை பண்ணி பாக்கலாம்ன்னு தோணுது. நீங்க இதுவரைக்கும் தனு மேடம் கூட எப்பயும் கிளோசாவே இருந்ததில்லை.

இதுல உங்களுக்கு இப்படி ஆனதுக்கு அப்புறமா அவங்க சுத்தமா உங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க.‌ சுச்சுவேஷன் ஆல்ரெடி அவுட் ஆஃப் கண்ட்ரோல்ல போயிட்டு இருக்கு பாஸ். இதுக்கு மேலயும் நம்ம டிலே பண்ண முடியாது. டாக்டர் சொன்னத ட்ரை பண்ணி பாக்குறதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. உங்களுக்கு ஓகேன்னு சொன்னீங்கன்னா, நான் உங்க டேஸ்டுக்கு செட் ஆகுற மாதிரி எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்..” என்று மெல்லிய குரலில் செல்ல,

தனது தலையை மட்டும் லேசாக உயர்த்தி அவனை பார்த்த ரிஷி “இந்த விஷயத்துல என்ன விட நீ ரொம்ப curious-ஆ இருக்குற மாதிரி தெரியுது! எனக்கு தெரியாம பார்ட் டைமா இந்த வேலை தான் பாத்துட்டு இருக்கியா? நீ இவ்ளோ கான்ஃபிடன்ட்டா பேசுறத பாத்தா உனக்கு நிறைய கிளைண்ட்ஸ் இருப்பாங்க போலயே!” என்று நக்கலாக கேட்டான். தொடரும்… (என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured