Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 52

போதையடி நீ எனக்கு CH 52

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 52 

நித்திலா பேசுவதைக் கண்டு தாத்தா ஷாக் ஆகி ரிஷியையும், அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார். “அந்த பேபி எங்க? நித்து அக்கா நம்ம கூட வரலையா?” என்று நிரஞ்சனாவை பற்றியும் அவளது குழந்தை பற்றியும் நிதிலா சாதாரணமாக விசாரிக்க, அப்போது தான் தாங்கள் இருவரும் தாத்தாவுடன் அவரது காரில் சென்று கொண்டு இருப்பதையே நினைவு கூர்ந்த ரிஷி “போச்சு, எல்லாம் முடிஞ்சுது.” என்று நினைத்து திரும்பி தாத்தாவை பார்த்து திருதிருவென்று முழித்தான். 

ரிஷியை முறைத்துப் பார்த்த தாத்தா “நீ என் கிட்ட ஏதாவது சொல்ல நினைக்கிறியா ரிஷி?” என்று கேட்க, “ஆமா தாத்தா.. இதுக்கு மேல மறைக்கிறதுக்கு எதுவும் இல்ல. நான் நடந்தது எல்லாத்தையும் உங்க கிட்ட வீட்டுக்கு போய் சொல்றேன். இங்க நம்ம எதுவும் பேச வேண்டாம். அண்ட் உங்க கிட்ட பொய் சொல்றதுக்கு சாரி. நான் இப்படி பண்றதுக்கு பின்னாடி ஒரு ரீசன் இருக்கு. அத பத்தி இப்ப என்னால பேச முடியாது.” என்று நிதானமாக விளக்கினான் ரிஷி. 

தாத்தாவும் நித்திலாவின் முன்னே ரிஷியிடம் எதுவும் கேட்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்து விட்டார். அவர்கள் இருவரும் பேசியதை கவனித்துக் கொண்டு அமர்ந்து இருந்த நித்திலாவிற்க்கு அப்போது தான் ரிஷி தனக்கு சொன்ன ரூல்சை தான் மறந்து இவ்வளவு நேரமாக அவனிடம் தாத்தாவின் முன் பேசிக் கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது. 

அதனால் உடனே அப்பாவியாக தனது உதட்டை பிதுக்கி கொண்டு ம்..ம்..ம்.. என்று அழ தொடங்கி விட்ட நித்திலா “சாரி டிம்பிள்.. நீ மத்தவங்க முன்னாடி பேச கூடாதுன்னு சொல்லியும் நான் தெரியாம பேசிட்டேன். இனிமே இப்படி பேச மாட்டேன். நெஜமா யார் கிட்டயும் பேசவே மாட்டேன். இனி உன் கிட்ட கூட பேச மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். 

“நம்ம யார் கிட்டயும் பேச கூடாதுன்னு அத்தனை தடவை சொல்லியும் தாத்தா முன்னாடி பேசி நல்லா என்னை மாட்டி விட்டுட்டா.. இப்ப இவங்க முன்னாடி இவ பேசுனது கூட பரவால்ல. அங்க மீட்டிங்ல எல்லார் முன்னாடியும் இவ வாய தொறந்து பேசி நான் பொய் சொன்னதை போட்டு கொடுத்திருந்தா இன்னைக்கு சீனே டோட்டலா வேற மாதிரி ஆயிருக்கும்.

நான் பொய் சொல்லி எவளோ ஒரு பைத்தியக்காரிய கூட்டிட்டு வந்து எல்லாரையும் ஏமாத்த பார்க்கிறேன்னு எங்க அப்பனே என் சோழிய முடிச்சுவிட்டு இருப்பான். நல்ல வேலையா தப்பிச்சேன்.”  ‌ என்று நினைக்கும் போது ரிஷிக்கு கொஞ்சம் நித்திலாவின் மீது கோபம் வந்தாலும் கூட, தன்னிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்கும் அவளது அப்பாவியான முகத்தை பார்த்த பிறகு அவனால் தொடர்ந்து அவள் மீது கோபத்துடன் இருக்க முடியவில்லை. 

வழக்கம்போல அவளது தலைமுடியை மென்மையாக வருடிய ரிஷி “விடு விடு அழுகாத.. உன்னால பேச முடியும்னு இப்ப தாத்தாவுக்கு தெரிஞ்சிருச்சு. சோ இனிமே நீ தாத்தா முன்னாடி மட்டும் பேசிக்கலாம். 

பட் மத்தவங்க யார் கிட்டயும் பேசக் கூடாது ஓகேவா? இன்னிக்கி நம்ம வெளிய போன மாதிரி வேற எங்கேயாவது போனா, அவங்க முன்னாடி நீ ஆக்சன் பண்ணி தான் பேசணும். இந்த மாதிரி வாய் திறந்து பேசக் கூடாது. நம்ம தனியா இருக்கும் போது மட்டும் தான் நீ என் கிட்ட பேசணும்னு நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று மென்மையான குரலில் கேட்க, “ம்ம்.. இருக்கு!” என்று தன் கண்ணீரை துடைத்தபடி சொன்னாள் நித்திலா. 

“என் அம்மு good girl தானே.. இனிமே இப்படி எல்லாம் அதை மறந்துட்டு மத்தவங்க முன்னாடி பேசக் கூடாது ஓகேவா? நீ நான் சொல்றது எல்லாத்தையும் கேட்டு சமத்து பொண்ணா இருந்தா, நான் உனக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி உன் தலையில இருக்கிற காயம் சரியானதுக்கு அப்புறம் நீ கேக்குறது எல்லாத்தையும் உனக்கு வாங்கி தருவேன்.” என்று ரிஷி அவளை சமாதானப்படுத்த, “பிரியாணி வாங்கி தருவியா?” என்று நித்திலா அவசரமாக கேட்டாள். 

“இவ சரியான பிரியாணி பைத்தியம இருக்கும் போல.. இதுவே வேற ஏதாவது ஒரு பொண்ணு கிட்ட உனக்கு என்ன வேணுமோ கேளு எதுவா இருந்தாலும் வாங்கி தரேன்னு நான் சொன்னா, கண்டிப்பா அவங்க எக்ஸ்பென்சிவா தான் ஏதாவது கேட்பாங்க. ஆனா இவ அப்படி இல்ல. 

இவளோட மனசு குழந்தை மாதிரி இருக்கு. இவளுக்கு யாரையும் கஷ்டப்படுத்த தெரியாது. பேராசை பட தெரியாது. என் அம்மு ரொம்ப தூய்மையானவ. இவளை மாதிரி ஒரு பொண்ணு யாருக்கும் கிடைக்க மாட்டா. அதனால தான் எனக்கு இவள ரொம்ப புடிச்சிருக்கு.” என்று நினைத்த ரிஷி வாஞ்சையுடன் நித்திலாவை பார்த்துக் கொண்டு இருக்க, “எனக்கு தாகமா இருக்கு தண்ணி வேணும்.” என்று கேட்டாள் அவள்.‌

உடனே காரில் இருந்த வாட்டர் பாட்டிலை  எடுத்து அவளுக்கு தண்ணீர் குடிக்க உதவினான் ரிஷி. குழந்தை போல அதை குடித்து முடித்த நித்திலா கார் ஜன்னல் வழியாக நன்றாக காற்று வந்து கொண்டு இருந்ததால் அப்படியே ரிஷியின் தோள்களில் சாய்ந்து உறங்க தொடங்கினாள். 

தனது தோள்களில் இருந்து அவளை அப்படியே நகர்த்தி தனது மடியில் படுக்க வைத்துக் கொண்ட ரிஷி ஏதோ குழந்தைக்கு தட்டி கொடுத்து தூங்க வைப்பதை போல அவளிடம் மென்மையாக நடந்து கொண்டான். 

அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த தாத்தா நித்திலாவின் தலையில் இப்போது அடிபட்டு இருப்பதை வைத்து “ஒருவேளை இந்த பொண்ணுக்கு மண்டையில ஏதாவது கோளாறா இருக்குமா? அதனால தான் இவ வாய தொறந்து பேசினா மத்தவங்க அதை கண்டுபிடிச்சிடுவாங்கன்னு இவளால வாய் பேச முடியாதுன்னு ரிஷி எல்லார் கிட்டயும் சொல்லி இருப்பானோ!” என்று சரியாக யூகித்தார். 

‌ நித்திலாவின் விஷயத்தில் தாத்தா என்ன முடிவு எடுப்பார்? 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured