Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 8

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 8

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 8

ஐஸ்வர்யா டைனிங் டேபிளில் அமர்ந்து தயக்கத்துடன் சுற்றி முற்றி யாராவது வந்து தனக்கு பரிமாறுவார்களா என பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அங்கே இருந்த வேலை ஆட்கள் யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை. அதனால் ஒரு நொடி “நம்மள இந்த வீட்டில யாருமே ஒரு மனுஷியா கூட நினைக்க மாட்டேங்கிறாங்க. நம்மளால எப்படி இங்க நிம்மதியா உக்காந்து சாப்பிட முடியும்? இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்றதுக்கு பதிலா பேசாம பட்டினியா கிடந்து செத்துப் போயிடலாம்!” என்று நினைத்த ஐஸ்வர்யா பின் “ஏற்கனவே அஸ்வின் ரொம்ப உடைஞ்சு போயிட்டான். அவனுக்கு அக்ஷயாவை விட்டா இப்ப வேற யாரும் இல்ல.

அவளும் உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருக்கா. இந்த நேரத்துல நானும் அஸ்வினை விட்டுட்டு போயிட்டா, அவனைக் கூட இருந்து பார்த்துக்கிறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க. அண்ட் நான் செத்து போய்ட்டா கூட என் மேல இருக்கிற தப்புனால நான் கில்டியா ஃபீல் பண்ணி சூசைட் பண்ணிக்கிட்டேன்னு தான் அஸ்வின் நினைப்பான். என் மேல எந்த தப்பும் இல்லை. அவன மாதிரியே இந்த விஷயத்துல நானும் பாதிக்கப்பட்டு இருக்கேன்னு அவனுக்கு தெரியணும். அதை தெரியப்படுத்தாம என்ன ஆனாலும் நீ சாகக் கூடாது ஐஸ்வர்யா.”  என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு டேபிளில் இருந்த உணவுகளை எடுத்து தனக்குத் தானே பரிமாறி வேண்டா வெறுப்பாக சாப்பிட தொடங்கினாள். 

சில நிமிடங்களுக்கு பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது டீமுடன் அஸ்வினின் பங்களா வாசலில் வந்து நிற்க, அவர்கள் வந்திருக்கும் தகவலை அஸ்வினுக்கு தெரிவித்தார் வாட்ச்மேன். ஏற்கனவே அவன் இதை எதிர்பார்த்த துதான் என்பதால் “அவங்க வரட்டும் உள்ள விடுங்க.” என்று சாதாரணமாக சொன்னான் அஸ்வின். 

தனது ஆட்களுடன் உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் அஸ்வினை பார்த்து மரியாதையுடன் அவனுடைய குடும்பத்தினர்கள் இப்போது தான் ஒரு பெரிய ஆக்சிடென்டில் இறந்திருக்கிறார்கள் என்பதால் அவனிடம் துக்கம் விசாரித்தார். அனைத்து ஃபார்மாலிடிகளும் முடிந்த பின்பு “நான் இங்க எதுக்காக வந்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன் சார்!” என்று இன்ஸ்பெக்டர் ஆரம்பிக்க, “நீங்க எதுக்காக வந்து இருக்கீங்கன்னு எனக்கு என்ன தெரியும் சார்? நீங்க எதுவா இருந்தாலும் டைரக்டா சொல்லுங்க.” என்றான் அஸ்வின். 

பார்க்க சிறுவனாக இருந்தாலும் அனைத்திலும் இவன் தெளிவாகத் தான் இருக்கிறான் என்று நினைத்த இன்ஸ்பெக்டர் “நேத்து தினகரன் சாரோட வீட்ல ஒரு மேரேஜ் பங்க்ஷன் இருந்துச்சு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்க, “ம்ம்.. தெரியுமே சார்! எங்களுக்கும் இன்விடேஷன் வந்தது.” என்றான் அஸ்வின். 

“நீங்க மேரேஜ்க்கு போனீங்களா?” 

“ம்ம்.. போனேனே! போக வேண்டிய சுச்சுவேஷன் வரும்போது எப்படி சார் போகாம இருக்க முடியும்?” 

“அப்ப நீங்க அந்த மேரேஜ் ஃபங்ஷனுக்கு போய் நடக்க இருந்த ஐஸ்வர்யா மேடத்தோட கல்யாணத்தை ஸ்டாப் பண்ண ட்ரை பண்ணதை ஒத்துக்குறீங்களா?” என்று இன்ஸ்பெக்டர் தனது கூர்மையான கண்களால் அவனை பார்த்தபடி கேட்க, 

“இதுல மறைகிறதுக்கு என்ன இருக்கு சார்? நானும் ஐஸ்வர்யாவும் சின்ன வயசுல இருந்தே லவ் பண்றோம். அது அவ ஃபேமிலில இருக்கிற எல்லாருக்கும் தெரியும்‌. அது தெரிஞ்சு இருந்தும் கூட அவங்க ஆனந்த் அண்ணாவுக்கு மேரேஜ் பண்றதா எல்லார் கிட்டயும் சொல்லி ஒரு பெரிய டிராமா பண்ணி ஐஸ்வர்யாவை அவளுக்கு விருப்பமே இல்லாம வேற ஒருத்தனுக்கு மேரேஜ் பண்ணி வைக்க பார்த்தாங்க. 

அது தெரிஞ்சு என்ன வந்து எப்படியாவது காப்பாத்துன்னு ஐஸ்வர்யா கால் பண்ணி என்ன வர சொன்னா. சோ நான் என் ஃபிரெண்ட்ஸ் கூட அங்க போய் அந்த மேரேஜை ஸ்டாப் பண்ணி நான் லவ் பண்ண பொண்ணு அவ விருப்பத்தோட கூட்டிட்டு போயிட்டேன். அண்ட் இப்ப அவ என் ஒய்ஃப். எங்களுக்கு லீகலா நேத்தே மேரேஜ் ஆயிடுச்சு.” என்றான் அஸ்வின். 

“நெஜமாவே இது தான் நடந்ததா? நான் ஐஸ்வர்யா மேடம் கிட்ட இதை பத்தி விசாரிக்கணும். அவங்க இங்க தான் இருக்காங்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “என் வைஃப் என் வீட்ல இல்லாம வேற எங்க இருக்க போறா சார்? இப்ப தான் சாப்பிட போறேன்னு டைனிங் ஏரியா பக்கம் போனா. நீங்க வெயிட் பண்ணுங்க நான் அவளை வர சொல்றேன்.” என்ற அஸ்வின் கீதாவை அழைத்து “ஐசுவை பாக்குறதுக்கு இன்ஸ்பெக்டர் வந்து இருக்காருன்னு சொல்லி அவளை வர சொல்லுங்க அக்கா.” என்றான். 

“சரிங்க தம்பி!” என்ற கீதா சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிடம் சென்று விஷயத்தை சொல்ல, “அச்சச்சோ இருக்கிற பிரச்சினையில இது வேறயா? என் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரையும் கொன்னுது அஸ்வின் தான்னு போலீஸ்க்கு தெரிஞ்சிருச்சா? ஆனா எங்க ஃபேமிலில மிச்சம் உயிரோட இருக்கிறது நான் மட்டும் தான். நான் கம்ப்ளைன்டே கொடுக்கலையே! அப்புறம் எதுக்கு போலீஸ் எல்லாம் வந்திருக்காங்க?” என்று நினைத்து பயந்த ஐஸ்வர்யா அவசர அவசரமாக கை கழுவி விட்டு இன்ஸ்பெக்டரை காணச் சென்றாள். 

நல்ல வேலையாக வித்யா அவளுக்கு சில நல்ல ஆடைகளையும், மேக்கப் ஐட்டங்களையும் வாங்கிக் கொடுத்திருந்ததால் தன் முகத்தில் இருந்த காயங்களை எல்லாம் மறைத்து மேக்கப் போட்டு அழகாக தயாராகி இருந்த ஐஸ்வர்யாவை பார்த்தவுடனேயே “இந்த பொண்ண பாத்தா இவன் சொல்ற மாதிரி இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி தான் இருக்கு. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் அந்த பொண்ணு மயக்கத்துல இருக்கும்போது இவன் அந்த பொண்ணுக்கே தெரியாம அவளை தூக்கிட்டு போயிட்டான். அவ குடும்பத்துல இருக்கிறவங்க எவ்வளவோ ட்ரை பண்ணியும் இவனை அவங்களால தடுக்க முடியலன்னு தானே சொன்னாங்க! முதல்ல இங்க உண்மையா என்ன நடந்துச்சுன்னு நம்ம கண்டுபிடிக்கணும்.” என்று நினைத்தார் இன்ஸ்பெக்டர். 

அவரைப் பார்த்தவுடன் உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியில் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்ட ஐஸ்வர்யா “ஹலோ சார்! நான் தான் ஐஸ்வர்யா அஸ்வின் கர்ணா. நீங்க என்ன எதுக்காக பார்க்க வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று எந்த சலனமும் இல்லாமல் கேட்டாள். 

“என்ன மேடம் உங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நீங்க பிஸியா இருக்கீங்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, திடீரென்று அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்று புரியாமல் குழப்பத்துடன் அவரைப் பார்த்த ஐஸ்வர்யா “நீங்க என்ன மீன் பண்றீங்கன்னு எனக்கு புரியல சார். எதுவா இருந்தாலும் டைரக்டா கேளுங்க. எனி ப்ராப்ளம்?” என எதுவும் தெரியாதவளை போல கேட்டாள். 

“ப்ராப்ளம் தான் மேடம். அஸ்வின் சார் உங்களை கல்யாண மண்டபத்தில

இருந்து தூக்கிட்டு போனதுக்கு அப்புறமா உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் அவரை ஃபாலோ பண்ணிட்டு போயிருக்காங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. இப்ப நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு நியூஸ் மட்டும் தான் வெளியே வந்து இருக்கு. 

‌ உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ரெடியா இருந்தாரே மிஸ்டர் கௌதம்.. இப்ப அவரையும் எங்களால காண்டாக்ட் பண்ண முடியல. அவரும் அவரோட ஃபேமிலியும் எங்க இருக்காங்கன்னு யாருக்கும் தெரியல. சோ டோட்டலா நேற்று என்ன நடந்துச்சுன்னு எல்லாருக்கும் ஒரு மிஸ்டரியாவே இருக்கு.‌ உங்க கம்பெனி கூட பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தவங்க, ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் எங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியணும். 

மிஸ்டர் அஸ்வின் மேல எங்களுக்கு சந்தேகமா இருக்குன்னு என்னோட ஹையர் ஆபீஸியல்ஸ் கிட்ட கேஸ் கொடுத்து இருக்காங்க. முதல் கட்ட விசாரணைக்கு தான் நான் இங்க வந்து இருக்கேன். இதுக்கு அப்புறமா நாங்க கண்டிப்பா என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் கண்டு பிடிக்கும்போது மிஸ்டர் அஸ்வினை நான் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கிற சிச்சுவேஷன் கூட வரலாம்.

நீங்க ஏதாவது சொல்லனும்னா இப்பவே சொல்லுங்க. உங்க கூட நாங்க இருக்கோம். நீங்க யாரைப் பத்தியும் எத பத்தியும் யோசிச்சு பயப்பட தேவையில்லை. உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எங்க கடமை. நேத்து என்ன நடந்துச்சுனு உங்களுக்கு என்னென்ன தெரியுமோ அது எல்லாத்தையும் மறைக்காம எங்க கிட்ட சொல்லுங்க மேடம்.”  என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார் இன்ஸ்பெக்டர். 

சில நொடிகளுக்குள் தன் மூளையில் அடித்து தான் என்னென்ன சொல்ல வேண்டும் என்று ஓட்டி பார்த்த ஐஸ்வர்யா “இப்ப தான் நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு புரியுது சார். ஆக்சுவலி நேத்து எனக்கும் கௌதமுக்கும் தான் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு ஒரு நாள் முன்னாடி வரைக்கும் எனக்கே தெரியாது. எங்க ஃபேமில இருக்கிறவங்க என்னோட பிரதர் ஆனந்துக்கும் அவன் லவ் பண்ற லேக்காவுக்கும் தான் சொல்லிட்டு சொல்லிட்டு இருந்தாங்க. லாஸ்ட் மினிட்ல லேகா வீட்ல ஏதோ பிராப்ளம் இப்போ இந்த மேரேஜ் நடக்காது. 

எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா கல்யாணம் நடக்காம இருக்கிறது நமக்கு அசிங்கம். அதனால நாங்க சொல்றத கேட்டு நீ கௌதமை கல்யாணம் பண்ணிக்கோன்னு எங்க வீட்ல இருக்குறவங்க எல்லாரும் சேர்ந்து ஃபோர்ஸ் பண்ணாங்க. Ofcourse கௌதமை எனக்கு நல்லா தெரியும். He is my friend. பட் அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் எப்பவுமே நினைத்ததில்லை.” என்றவள், அஸ்வினை திரும்பி பார்த்தாள். 

அவள் என்ன சொல்ல போகிறாள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “எனக்கு கௌதம் மேல அப்படி ஒரு ஃபீல் எப்பவுமே வந்ததில்லை. Because I love அஸ்வின். இப்ப இல்ல சார்‌‌..  ரொம்ப வருஷமா நாங்க ஸ்கூல் படிக்கிற டைம்ல இருந்தே.. எங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் அது தெரியும்னு நான் இத்தன நாளா நினைச்சுட்டு இருந்தேன். அவங்க ஏன் திடீர்னு கௌதமை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை force பண்ணாங்கன்னு எனக்கும் இப்ப வரைக்கும் புரியல.

அஸ்வின் எனக்காக நேத்து கல்யாண மண்டபத்துக்கு வரும்போது எங்க அப்பாவும் மத்தவங்களுக்கு சேர்ந்து ரொம்ப ப்ராப்ளம் பண்ணாங்க. நான் அஸ்வின் கூட போறேன்னு சொல்லியும் அவங்க கேக்கல. அந்த இஸ்யூல எங்க அப்பா என்ன தள்ளி விட்டுட்டாரு. அதுல அடிபட்டு தான் நான் மயங்கி விழுந்துட்டேன். சோ அஸ்வின் என்ன தூக்கிட்டு போயிட்டான். 

நான் கண்ண திறந்து பார்க்கும்போது அஸ்வின் கூட எங்க ஃபிரண்ட் வீட்ல இருந்தேன். அங்கயும் வந்து என் ஃபேமிலில இருக்கிறவங்க பிராப்ளம் பண்ணாங்க. எனக்கு கல்யாணம்ன்னு உன்னை நடந்தா அஸ்வின் கூட தான் அது நடக்கும்னு அவங்க கிட்ட ஸ்ட்ராங்கா சொல்லிட்டு நான் தான் என்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறியா அஸ்வின்னு அவன் கிட்ட கேட்டேன். 

Unfortunately, எங்க மேரேஜ் நடக்கும்போது கருணாகரன் அங்கிலும், மலர்விழி ஆண்டியும் எங்க கூட இல்லாம போய்ட்டாங்க. எங்களுக்கு அந்த ஒரு வருத்தம் தான். இருந்தாலும் நாங்க நேத்தே லீகலா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் நானும் அஸ்வினும் இங்க வீட்டுக்கு வந்துட்டோம். லாஸ்ட்டா என் ஃபேமிலி மெம்பர்சை அவங்க எங்களை ஃபாலோ பண்ணிட்டு வரும்போது நான் பார்த்தது. அதுக்கப்புறம் அவங்க எங்க போனாங்க என்னன்னு எனக்கு தெரியாது சார்.” என்றாள் ஐஸ்வர்யா. 

“சோ நீங்க அந்த இன்சிடெண்டுக்கு அப்புறமா அவங்களை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணலையா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “நோ சார், அடுத்தடுத்து பொய் பொய்யா சொல்லி நான் அஸ்வினை லவ் பண்றேன்னு தெரிஞ்சும் என்ன force பண்ணி அவங்க கௌதமுக்கு மேரேஜ் பண்ணி வைக்க ட்ரை பண்ணாங்க. கடைசி வரைக்கும் என் லைஃப் என்ன ஆகும்னு கவலைப்பட்டு என்னை பத்தி யாருமே யோசிக்கல. அப்புறம் நான் மட்டும் எதுக்காக அவங்கள பத்தி யோசிக்கணும்? அதான் நானும் அவங்க கிட்ட பேசாமயே இருந்துட்டேன்.  இப்ப நீங்க சொல்லித் தான் அவங்களை காணோம்னு எனக்கே தெரியுது. உங்களுக்கு அவங்களை பத்தி ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சதுனா ப்ளீஸ் எனக்கும் சொல்லுங்க. அவங்க எல்லாரும் இப்ப எங்க இருக்காங்க, என்ன ஆனாங்கன்னு யோசிச்சா அவங்க மேல கோபமே இருந்தாலும் எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.” என்று கண் கலங்கச் சொன்னாள் ஐஸ்வர்யா. 

– முத்தங்கள் தொடரும்

You may also like

Leave a Comment

About Me

Featured