அத்தியாயம் 50
“பாட்டியும் நான் சொன்னது உண்மைதான்னு சொல்லியிருப்பாங்க போல..!!”ன்னு நினைச்சு குஷியாகிட்ட மேகா, குளத்துல இருந்த தண்ணிய தன் கையால விஷ்வாவின்மீது தெளிச்சுட்டு “என்ன மிஸ்டர் விஷ்வா, இப்பதான் உங்களுக்கு ஞாபகம் வந்துச்சா..??”ன்னு கேட்க, அவ கிட்ட உண்மையச் சொல்ல இஷ்டமே இல்லாம,
“வந்துருச்சு.. வந்துருச்சு… உன் மூஞ்சியெல்லாம் ஞாபகமே வெச்சுக்கக் கூடாதுன்னு தான் நான் எல்லாத்தையும் கஷ்டப்பட்டு மறந்திருக்கேன். இப்போ தேவையில்லாம நீ ஞாபகப்படுத்தீட்டே..!!”ன்னு உர்னு முகத்த வெச்சுக்கிட்டு சொன்னான் அவன்.
“ஓஹோ… இந்த மூஞ்சியப் பார்க்கப் பிடிக்காமத்தான் அந்த வயசுலயே யாருக்கும் தெரியாம எனக்கு சாக்லேட்ஸ் கொடுத்து என்ன கரெக்ட் பண்ணப் பாத்தீங்களா..??”ன்னு கிண்டலா கேட்ட மேகா, கை நிறைய தண்ணிய அள்ளி அவன் மூஞ்சில ஊத்திட்டா.
“ஏய் லூசு சும்மா இருக்க மாட்டியா நீ…?”ன்னு கேட்ட விஷ்வா அவளத் துரத்த ரெடியாக இருக்க, “சும்மா இருக்க மாட்டேன். என்ன பண்ணுவீங்க ஹான்…?”ன்னு தன்னோட கைய இடுப்புல வெச்சுக்கிட்டு கேட்ட மேகா திரும்பவும் அவன் மேல தண்ணிய அள்ளித் தெளிச்சுட்டு “முடிஞ்சா என்ன புடிங்க பாப்போம்..!!” ன்னா அவ, அவன்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகப் படிகள்ல ஏறி அங்கயும் இங்கயும் ஓடுனா.
“நில்லு டி..!!”ன்னு விஷ்வா அவளத் துரத்திக்கிட்டு ஓட, “அப்போ சின்ன வயசுல நீங்க என்ன வாணின்னு கூப்புடுவீங்க. உங்களத் தவிர இப்ப வரைக்கும் வேற யாரும் என்ன அப்படி கூப்பிட்டதில்லை. சோ இப்பவும் என்ன ஒரே ஒரு தடவ அழகா வாணின்னு கூப்பிடுங்க பாக்கலாம்..!!”ன்னு ஒரு நிமிஷம் நின்னு அவனப் பாத்துச் சொன்ன மேகா திரும்பவும் ஓட ஆரம்பிச்சுட்டா.
“இந்த கோட் சூட் எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா..? இத ட்ரை க்ளீன் தான் பண்ணணும். இத தண்ணி ஊத்தி நீ ஸ்பாயில் பண்ணதுக்கே இந்நேரம் நான் உன்ன அசிங்க அசிங்கமா திட்டிருக்கணும். இதுல நான் உன்ன செல்லமா அழகோ வாணின்னு வேற கூப்பிடணுமா..? கையில மட்டும் சிக்குன… மவளே நீ கைமா தான்டி.“ன்னு விஷ்வா தொடர்ந்து அவளத் துரத்த, “அடிக்கிற வெயிலுக்கு உங்கள யாரு கோமாளி மாதிரி கோட் சூட் போட்டுட்டு வரச் சொன்னா..? நீங்க என்ன ஆபீஸ் மீட்டிங்கா நடந்துச்சு..? இந்த பட்டிக்காட்டுக்குள்ள நடக்கிற பஞ்சாயத்துக்கு இவ்ளோ சீன் தேவையா..??”ன்ற மேகா திரும்பவும் குளத்துல இருந்த தண்ணிய அள்ளி அவன் மேல தெளிச்சுட்டு ஓடுனா.
அதுனால எரிச்சலான விஷ்வாவுக்கு அந்த கோட் மேலேயே கோபம் வந்துட, அதைக் கழட்டி எறிஞ்சவன் “இன்னைக்கு உன்ன விடமாட்டேன்டி.”ன்னு தன்னோட சட்டை ஸ்லீவ்சுகளை எல்லாம் மேலே ஏத்திவிட்டு மேகாவப் பிடிக்கிறதுக்காக அவள் மேல பாய்ந்தான். படிகள்ல ஏறி ஓடிக்கிட்டிருந்த மேகா அவன் தன்னை நோக்கி வெறியோட வர்றதால பயந்து போய் ஓடும்போது தெரியாம தண்ணிக்குள்ள விழுந்துட்டா.
அவளக் காப்பாத்த ஒரு வேகத்துல “ஆஆஆ..!!”ன்னு கத்திக்கிட்டு விஷ்வாவும் தண்ணில விழுந்தான்.
அவன் போட்ட சத்தத்துல அவனுக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு நினைச்சு பதறிப்போன மேகா நீந்தி மேல வந்து “விஷ்வா.. விஷ்வா.. எங்க இருக்கீங்க..? ஐயோ தண்ணிக்குள்ள மூழ்கிட்டிங்களா..??”ன்னு நாலாப்புறமும் பாத்துக் கத்திக் கேட்டவ, தன் மூக்கப் பிடிச்சுக்கிட்டு திரும்பவும் தண்ணிக்குள்ள மூழ்குனா.
அவ தண்ணிக்குள்ள நீந்திக்கிட்டே அவனத் தேடிக்கிட்டிருக்க, எங்கயோ இருந்து வந்து சட்டென பின்னாடி இருந்து அவளோட இடுப்ப அழுத்தமாப் பிடிச்ச விஷ்வா அவ கூடவே மேல வந்தான்.
இருந்த பயத்துல அவன இறுக்கமா கட்டிப்பிடிச்ச மேகா “நான் உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு நெனச்சு பயந்துட்டேன்..!! நான்தான் எனக்கு ஸ்விம்மிங் தெரியும்னு சொன்னேன்ல.. அப்புறம் எதுக்கு நீங்களும் உள்ள குதிச்சீங்க..??”ன்னு கேட்டா.
தன் வாயில இருந்த தண்ணிய அவள் மேல துப்பப்போற மாதிரி பாவ்லா செஞ்சுட்டு கீழ துப்பிய விஷ்வா “நான் ஒன்னும் உனக்காக குதிக்கல. வந்த வேகத்துல கால் ஸ்லிப் ஆகி தண்ணிக்குள்ள விழுந்துட்டேன்.” ன்னா அவன்.
“சும்மா பொய் சொல்லாதீங்க விஷ்வா..!! என கூடச் சேர்ந்து தண்ணிக்குள்ள விழும்போது, நீங்க மெதுவா என்ன வாணின்னு கூப்பிட்டது எனக்குக் கேட்டுச்சு.”ன்ற மேகா, “நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாதுன்னு சொன்னத இப்போ நிஜமாவே ப்ரூவ் பண்ணிட்டிங்க விஷ்வா…!!”ன்னு நெனச்சு திரும்பவும் அவன இறுக்கமா கட்டி அணைச்சுக்கிட்டா.
அவளோட நெருக்கத்துல தடுமாறின விஷ்வா தன்னையறியாம அவள அணைச்சுக்க, அவன் முகத்தப் பாத்தா மேகா.
ரெண்டு பேரோட கண்களும் மோதிக்கிட்டது. அவங்க தண்ணில முழுசா நனைஞ்சிருந்தனால ஈரம் அவங்க டிரஸ்ஸோட ஒட்டி அவளோட உடம்போட உறவாடிட்டிருந்துச்சு.
தன்னோட கண்களால அவள ஸ்கேன் பண்ணான் விஷ்வா. கடைசியில அவனோட பார்வை அவளோட துடிச்சுக்கிட்டிருந்த ஈர உதடுகள்ல வந்து நிலைச்சு நிக்க, “என்ன அப்படியே சும்மா பாத்துட்டிருக்க..? வா… உனக்கு என்ன டேஸ்ட் பண்ணிப் பார்க்க வேண்டாமா..?”ன்னு அது தன்கிட்டயே கேக்குற மாதிரி உணர்ந்த விஷ்வாவுக்கு அந்த ஸ்ட்ராபெரி உதடுகளைக் கடித்து சுவைக்கணும்கிற ஆசை தோணுச்சு.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)