அத்தியாயம் 49
விஷ்வாவுடன் கார்ல போய்கிட்டு இருந்த மேகா, “நீங்க இந்த ஊருக்கு வந்தப்ப நடந்ததெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இல்லையா…?”ன்னு ஆசையா கேட்டா.
அதுக்கு விஷ்வா, “எனக்கு இந்த ஊரு பேரே ஞாபகம் இல்ல. இதுல இங்க நடந்ததெல்லாம் எப்படிடி ஞாபகம் இருக்கும்…?”ன்னு கேட்டான்.
“இந்த இடத்தப் பார்த்ததுக்காவது உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருதான்னு பாக்கலாம்!”-ன்னு சொன்ன மேகா, ஒரு பழைய சிவன் கோயிலுக்குப் பின்னால இருக்குற தெப்பக்குளத்து கிட்ட காரை நிறுத்துனா.
அப்போ மணி 11-க்கு மேல ஆயிருக்க, அந்தக் குளத்து கிட்ட ஒரு ஈ, காக்கா கூடப் பறக்கல. அதனால, ஆள் அரவமே இல்லாத அந்த இடத்தையும், மேகாவையும் மாறி மாறி குறுகுறுன்னு பார்த்த விஷ்வா, “அடிப்பாவி! நிஜமாவே யாருக்கும் தெரியாம என்ன தண்ணிக்குள்ள முக்கிக் கொல்றதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வந்தியா? உன் பிளான் தெரியாம என்னோட வந்தவங்கள எல்லாம் நம்மள ஃபாலோ பண்ணிட்டு வர வேணாம்னு சொல்லிட்டேனே! இருடி, இப்பவே லொகேஷன் அனுப்பி அவங்கள வர சொல்றேன்,”-னு சொல்லிட்டு அவனோட மொபைல் ஃபோனை எடுத்தான்.
“ரொம்ப சீன் போடாதீங்க மிஸ்டர் விஷ்வா!”-ன்னு சொன்ன மேகா அவன் கூட கார்ல இருந்து இறங்கி, அவன் கையைப் பிடிச்சி இழுத்துக்கிட்டு குளத்துக்குள்ள போய் படியில நின்னபடியே, “இந்த இடத்தப் பார்த்ததுக்கு அப்புறம்கூட உங்களுக்கு எதுவும் ஞாபகம் வரலையா?”-ன்னு சோகமா அவன் கிட்ட கேட்டா.
“ஏய்! இப்ப என்ன டி எனக்கு ஞாபகம் வரணும்ங்கிற நீ? எதா இருந்தாலும் டைரக்டா நீயே சொல்லித்தொலை!”-ன்னு விஷ்வா கடுப்பாக, “ம்ம்ஹும்ம்…!”-னு சலிச்சிக்கிட்ட மேகா
“நீங்க சின்ன பையனா இருக்கும்போது ஒரு தடவை உங்க தாத்தா கூட இங்க திருவிழாவுக்கு வந்திருந்தீங்க. அப்போல்லாம் இந்த பக்கம்தான் ராட்டினம், திருவிழாவுக்குப் போட்ட கடை எல்லாமே இருக்கும். அப்போ சின்ன பசங்க எல்லாம் இங்கதான் வந்து விளையாடுவாங்க. அப்படி விளையாடிக்கிட்டு இருக்கும்போது, நீங்க தெரியாம தண்ணிக்குள்ள விழுந்துட்டீங்க.
அப்போ உங்கள காப்பாத்தறேன்னு நானும் தண்ணிக்குள்ள குதிச்சிட்டேன். அந்த டைம்ல எனக்கும் ஓரளவுக்குத்தான் நீச்சல் தெரியும். நீங்க என்னோட பெரிய பையனா இருந்தீங்கள்ல, அதனால உங்களால என்னால காப்பாத்த முடியாம நம்ம ரெண்டு பேருமே தண்ணிக்குள்ள முழுகிக்கிட்டு இருந்தோம். அப்போ வெற்றி ஓடிப்போய் எங்க பெரிய அண்ணன்கிட்ட சொல்லி அவரை கூட்டிட்டு வந்தான். அவரும் இங்க பக்கத்துல இருந்த மத்தவங்களும் சேர்ந்துதான் உங்களையும் என்னையும் காப்பாத்துனாங்க. அதுக்கப்புறம் நம்ம ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம்.
இதே இடத்துல நிறைய தடவை நீங்க, நானு, வெற்றியெல்லாம் சேர்ந்து விளையாடி இருக்கோம். யாருக்கும் தெரியாம எனக்கு மட்டும் ஸ்பெஷலா நீங்க ஃபாரின் சாக்லேட்ஸ் எல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு அதெல்லாம் கொஞ்சம்கூட ஞாபகம் இல்லையா? நீங்க அப்புறம் ரொம்ப வருஷமா இந்தப் பக்கமே வரல. அதனால அப்படியே நான் உங்கள மறந்துட்டேன். இப்ப உங்க ஃபோன்ல நீங்க உங்க தாத்தா கூட இருந்த போட்டோவைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்குப் பழையதெல்லாம் ஞாபகம் வந்துச்சு,”-ன்னு சொன்னவ, அவனுக்கு ஏதாச்சும் ஞாபகம் வந்ததான்னு தெரிஞ்சுக்க ஆசையா அவனைப் பார்த்தா.
அவளைப் பார்த்து நக்கலா குபீர்னு சிரிச்ச விஷ்வா, “நான் நெனச்சதைவிட பொய் சொல்லி ரீல் சுத்துறதுல நீ ரொம்ப டேலண்ட்டு தான்டி. அன்னைக்கு இல்லாத லவ் ஸ்டோரியை அப்படியே நடந்த மாதிரியே பில்டப் பண்ணி சொன்னியே… இன்னைக்கி அதே மாதிரி என் போட்டோவைப் பார்த்துட்டு நீயா ஒரு ஸ்டோரி டெவலப் பண்ணி சொல்றியா? இதெல்லாம் எப்படித் தானா வருதா… இல்ல, அப்பப்போ டைம் கிடைக்கும்போது யோசிச்சு வச்சுப்பியா?”-ன்னு கிண்டலா கேட்டான்.
எரிச்சலான மேகா, “ஸ்டாப் இட் விஷ்வா! எப்பப் பார்த்தாலும் என்னோட ஃபீலிங்ஸை வச்சு உங்களுக்கு ஃபன் பண்றதே வேலையா போயிடுச்சு. இங்க பாருங்க!”-ன்னு சொன்னவ, தன்னோட மொபைல் லாக் ஸ்கிரீன் வால்பேப்பர்ல அவளும் அவளோட அம்மாவும் இருக்குற போட்டோவைக் காட்டி, “என் கிட்ட எங்க அம்மா ஞாபகமா இந்த ஒரு போட்டோ மட்டும்தான் இருக்கு. இதுல அவங்க கூட இருக்குறது நான் தான். இதைப் பார்த்தும் உங்களுக்கு ஞாபகம் வரலைன்னா, அதுக்கு மேல நான் என்ன பண்றது?”-ன்னு கொஞ்சம் கோபமாவே கேட்டா.
அவள் ஃபோனைக் கையில வாங்கிப் பார்த்த விஷ்வாவுக்கு, அவள் சொன்னதெல்லாம் அரைகுறையா ஞாபகம் வர, “என்ன இவ எதைச் சொன்னாலும் அதெல்லாம் அப்படியே நடந்த மாதிரியே இருக்கு!”-ன்னு நெனச்சவன், உடனே மீனாள் பாட்டிக்கு கால் செஞ்சு இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சான்னு விசாரிச்சான்.
“ஆமா விஷ்வா. திருவிழாவுக்குப் போய் உன்ன கேர்லெஸ்ஸா உங்க தாத்தா விட்டதுனால தான் நீ தண்ணிக்குள்ள விழுந்துட்டேன்னு உங்க அப்பா அவர் கிட்ட சண்டை போட்டு ரொம்ப நாளா பேசாம இருந்தாரு. இதெல்லாம் நடந்து ரொம்ப வருஷமாச்சுல்ல… இப்ப எதுக்குப்பா கேக்குற?”-ன்னு மீனாள் பாட்டி குழப்பமா கேட்க, “ஒண்ணுமில்ல பாட்டி.
நான் வெளியூருக்கு வந்திருக்கேன். நான் ஊருக்கு வந்ததுக்கப்புறம் எல்லாத்தையும் உங்க கிட்ட டீடெய்லா சொல்றேன். பை. நீங்க உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க!”-ன்னு சொன்ன விஷ்வா அந்தக் காலை கட் பண்ணிட்டான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)