அத்தியாயம் 7
ஐஸ்வர்யா தொடர்ந்து மம்மி மம்மி என்று சொல்லிக் கொண்டிருந்ததால் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கொண்டிருந்த அஸ்வின் தரையில் விழுந்து கிடந்த ஐஸ்வர்யாவின் அருகில் சென்று அவள் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து “இவ்ளோ நடந்து நீ இன்னும் அந்த பொம்பளையை தானே தேடுற! அவ கூட சேர்ந்து எல்லாத்தையும் பண்ணிட்டு, என் முன்னாடி மட்டும் நல்லவ வேஷம் போட்டு நடிச்சு உன் குடும்பத்தில இருக்கிறவங்க பண்ணதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நீ சொன்னா நான் நம்பனுமா?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கோபமாக கேட்டான்.
அப்போதுதான் அவள் செய்த தவறை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா “ஐயோ இல்ல அஸ்வின்! அவங்க உங்களுக்கு பண்ண துரோகத்தை கேள்விப்பட்ட உடனே எனக்கு அவங்க மேல இருந்த பாசம் மரியாதை எல்லாம் போயிடுச்சு. அவங்க எல்லாரும் என் ஃபேமிலி மெம்பர்ஸா இருந்தாங்க.
இப்ப செத்து போய்ட்டாங்க. அவ்வளவு தான். நான் இப்ப உன்ன பத்தி மட்டும் தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவர்களை பத்தி யோசிச்சு ஃபீல் பண்ற அளவுக்கு எல்லாம் அவங்க நல்லவங்க இல்ல. ஏதோ கீழ விழுந்த ஷாக்ல பழக்க தோசத்துல அப்படி சொல்லிட்டேன். நீ என்ன தப்பா நினைக்காத ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள்.
அவள் கண்களில் இருந்து அருவி போல கண்ணீர் கொட்ட, அவளது வாடிய முகத்தை பார்க்க முடியாமல் அப்படியே அவளை கட்டிலில் தள்ளிய அஸ்வின் “உன்ன இப்ப தாண்டி நான் சரியாவே புரிஞ்சுக்கிறேன். இத்தனை வருஷமா உன்ன பத்தி தெரியாம தப்பா தான் நினைச்சிட்டு இருந்தேன். உனக்குள்ள இவ்ளோ இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, உங்க எல்லாரையும் மொத்தமா நான் எப்பவோ இல்லாம பண்ணியிருப்பேன்.” என்று கோபமாக சொன்னான்.
“நான் எத்தனை தடவை என் மேல தப்பு இல்லைன்னு சொன்னாலும் நீ என்ன நம்ப மாட்டியா அஸ்வின்?” என்று நினைத்து ஐஸ்வர்யா அவனை பாவமாக பார்க்க, அவள் விழுந்து கிடந்த பொசிஷனில் வெறும் bad Robe மற்றும் அணிந்து இருந்ததால் அவளது இடுப்புக்கு கீழே இருக்கும் பொக்கிஷங்கள் எல்லாம் அரைகுறையாக வெளியில் தெரிந்தது.
அவளை இப்போதே வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அளவிற்கு அவள் மீது அவனுக்கு கோபம் வந்தாலும், அவனுடைய ஆண்மை அவளை அப்படி பார்க்கும்போது ஒரு நொடி ஆட்டம் கண்டது. பின் தன்னை தானே சுதாரித்துக் கொண்ட அஸ்வின் அப்படியே அவளை தூக்கிக் கொண்டான். அவனது கைகளில் பயத்தில் நடுங்கி கொண்டிருந்த சிறிய நாய் குட்டியை போல தஞ்சம் புகுந்த ஐஸ்வர்யா “இவனா திடீர்னு நம்ம கிட்ட எப்படி க்ளோசா பிஹேவ் பண்றான்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தாள். அவள் கைகள் தானாகவே அவன் தோள்களைப் பற்றிக் கொண்டது.
அவளை தூக்கிக் கொண்டு தனது ரூமிற்கு சென்ற அஸ்வின் அவளை அங்கிருந்த கட்டிலில் சிறிதும் தயக்கம் இன்றி ஏதோ குப்பையை தூக்கி எறிவதைப்போல எரிந்தான். அதில் ஏற்கனவே கீழே விழுந்ததால் இடுப்பு வலியில் தவித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு மீண்டும் தனது உடல் முழுவதும் ஒரு கூர்மையான வலி ஏற்படுவதை போல இருந்தது. இருப்பினும் அவன் கோபப்படக் கூடாது என்பதற்காக அவள் இப்போது தன் வலியை கூட வெளிக்காட்ட முடியாமல் தன் உதட்டை கடித்துக் கொண்டு கண்களில் நீர் வழிய வெறுமனே அவனை பார்த்தாள்.
அந்த நொடி அவளை பார்க்க அவனுக்கும் பாவமாக தான் இருந்தது. ஆனால் அவன் உதட்டில் வந்த வார்த்தைகள் அதற்கு நேர் மாறாக “என்ன டி என்ன.. இது உன் நியூ பிளானா? நான் வரும்போது இப்படி ஹாட்டா டிரஸ் பண்ணி இருந்தா, உன்னோட செக்ஸி பாடிய காட்டி அப்படியே என்னை மயக்கிடலாம்னு நினைக்கிறியா? ச்சீ.. இவளோ மட்டமா இறங்கிட்டியே உனக்கு இதெல்லாம் கேவலமா இல்ல? உங்க வீட்ல எப்பயும் இப்படித் தான் இருப்பியா? கருமம்.. ஒரு காலத்துல உன்னை எல்லாம் நான் என் மனசுல எங்க வச்சிருந்தேன் தெரியுமா டி! அதை எல்லாம் இப்ப யோசிச்சு பார்த்தா நான் எவ்ளோ பெரிய முட்டாளா இருந்து இருக்கேன்னு என்ன நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.” என்று சொல்லிவிட்டு தன் புருவங்களை சுருக்கி ஏதோ ஒரு அர்ப் புழுவை பார்ப்பது போல அவளை கேவலமாக பார்த்தான் அஸ்வின்.
அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை ஏற்கனவே இருக்கும் உடல் வலி போதாது என்று மனதளவிலும் பெருமளவில் காயப்படுத்த, அவமானத்தில் கூனி குறுகிய ஐஸ்வர்யா அங்கே கிடந்த பெட்சீட்டை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டு “நீ என்ன இங்க கூட்டிட்டு வரும்போது என் திங்ஸ் எதையுமே நான் எடுத்துட்டு வரல. நான் நைட் குளிச்சிட்டு தேடும்போது எனக்கு போட்டுக்குறதுக்கு இத தவிர வேற எதுவும் கிடைக்கல. அப்போ ட்ரெஸ் அரேஞ்ச் பண்ணனும்னு யோசிக்கிற மைண்ட் செட்டில எல்லாம் நான் இல்ல.
அதான் வேற வழி இல்லாம இதை எடுத்து போட்டேன். மத்தபடி நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் கேவலமானவ இல்ல அஸ்வின். என் ஃபேமில இருக்கிறவங்க பண்ண தப்புக்காக அதை மீன் பண்ணி நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். பட் என் கேரக்டர மட்டும் தப்பா பேசாத அஸ்வின். என்னால அதை ஏத்துக்கவே முடியல.” என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னாள்.
அவளை மேலும் கீழும் உற்றுப் பார்த்த அஸ்வின் “ஏன் இந்த வீட்ல உன்ன தவிர வேற யாருமே இல்லையா! உனக்கு டிரஸ் வேணும்னா கீதா அக்கா கிட்ட கேட்க வேண்டியது தானே! இந்த வீட்ல அக்ஷயாவோட டிரஸ் எத்தனை இருக்கு! அது இல்லைன்னா கூட வேற ஏதாவது உனக்கு அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருப்பாங்க இல்ல! சும்மா பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு அப்படியே நல்லவ மாதிரி நடிச்சு கொட்டாத.” என்று தன் வார்த்தைகளால் அவளை தேல் போல கொட்ட,
அவனைப் பார்த்து விரக்தியுடன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகைத்த ஐஸ்வர்யா “என் ஃபேமிலி உங்களுக்கு என்னென்ன பண்ணாங்கன்னு நீங்க இருக்குற எல்லாருக்கும் தான் நல்லா தெரிஞ்சிருக்கே! சின்ன வயசுல இருந்து என் கூட பழகுன உனக்கே என்ன பத்தி முழுசா தெரியல. நான் என்ன பண்ணி என் மேல தப்பு இல்லன்னு சொன்னாலும் நீ அதை நம்ப ரெடியா இல்ல. அப்புறம் இந்த வீட்ல இருக்கிற மத்தவங்க மட்டும் எப்படி என்ன நம்பி எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைப்பாங்க அஸ்வின்?
இதுக்கு முன்னாடி நான் இந்த வீட்டுக்கு வரும்போது என் கிட்ட சகஜமா பேசிட்டு இருந்தவங்க எல்லாரும் இப்ப என்ன கேவலமா பாக்குறாங்க. எந்த தப்புமே பண்ணாம அவங்க எல்லாரும் முன்னாடியும் போய் அசிங்கப்பட்டு நிற்கிறது எனக்கு எப்படி இருக்குன்னு நான் சொன்னாலும் உனக்கு புரியாது அஸ்வின். வித்யா என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியல. நான் அவளை வீட்டுக்கு போய் என் திங்ஸ் எல்லாத்தையும் கொண்டு வர சொல்றேன்.” என்று சொல்ல,
அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த அஸ்வின் “என்னமோ பண்ணி தொலை. பட் நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ! இந்த வீட்டுக்கு நான் உன்னை ஒன்னும் சும்மா கூட்டிட்டு வரல. நான் கட்டின தாலி உன் கழுத்துல தொங்குது. Mind it. சோ மிஸ்ஸஸ் அஸ்வின் கர்ணா இங்கதான் இந்த ரூம்ல தான் இருக்கணும். இன்னொரு தடவை இந்த ரூம விட்டு எனக்கு தெரியாம நீ காலை எடுத்து வைக்கிறத நான் பார்த்தேன், அப்புறம் நடக்கிறதுக்கு உனக்கு கால் இருக்காது சொல்லிட்டேன்!” என்று சொல்லி அவளை எச்சரித்துவிட்டு அங்கே இருந்து வெளியேறினான்.
அவன் சென்ற பிறகு வித்யாவிற்கு கால் செய்து தன்னுடைய பொருட்களை தனது வீட்டில் இருந்து கொண்டு வரச் சொன்னாள் ஐஸ்வர்யா. அவளைத் தவிர ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இப்போது உயிருடன் இல்லை என்பதால் அந்த வீடு இப்போது கலவரத்துடன் இருக்கும் என்று நினைத்த வித்யா “நான் மட்டும் அங்க தனியா போனா சரியா இருக்காது ஐசு. கண்டிப்பா எதுவும் பிராப்ளம் வரும். இப்போதைக்கு நான் உனக்கு லோக்கல் ஷாப்ல பர்சேஸ் பண்ணி டிரஸ்ஸஸ் சென்ட் பண்ணி வைக்கிறேன். நீ அதை யூஸ் பண்ணு. அக்ஷயா டிரஸ் கூட உனக்கு கரெக்டா தான் இருக்கும் நினைக்கிறேன். வேணும்னா அதை ட்ரை பண்ணு. அப்புறமா நீயும் நானும் சேர்ந்து வேணும்னா உங்க வீட்டுக்கு போய் அங்க என்ன சிச்சுவேஷன்னு பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு வித்யா தனக்கு அனுப்பிய அனைத்து பொருட்களையும் வைத்து தயாராகி அஸ்வினின் அறையில் இருந்து கீழே தயக்கத்துடன் இறங்கி வந்தாள் ஐஸ்வர்யா. அவள் ஹாலிற்கு சென்று பார்க்க, அங்கே அஸ்வின் தனது கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் மற்றும் அவரது அசிஸ்டன்ட்ஸ்களுடன் சீரியஸாக எதையோ பேசிக் கொண்டு இருந்தான். அவனது செதுக்கிய கிரேக்க சிற்பம் போல இருக்கும் அழகிய முகம் இறுக்கமாக இருக்க, அவன் கைகளில் ஏராளமான டாக்குமென்ட்கள் இருந்தது. அனைத்தையும் கூர்மையான கண்களுடன் அவன் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தபடி ஐஸ்வர்யா மெல்ல நடந்து டைனிங் ஏரியாவை நோக்கி செல்ல தொடங்கினாள். அவளது காலடி சத்தத்தை கேட்டு அஸ்வின் உட்பட அங்கிருந்த அனைவரும் திரும்பி அவளைப் பார்த்தார்கள். தன்னை அவர்கள் கவனித்து விட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவளும் திரும்பி அவர்களை பார்க்க, அனைவரும் நடந்த அனைத்திற்கும் இவளது குடும்பம் தானே காரணம் என்ற எண்ணத்தில் அவளை கொலை வெறியுடன் பார்த்தார்கள். அஸ்வின் ஒருவனையே சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு அத்தனை பேரையும் எதிர்கொள்ள தைரியம் வரவில்லை. அதனால் அவள் வேகமாக நடக்க தொடங்கிவிட, அவளது புத்தம் புதிய தங்க கொலுசு ஜல்ஜல் என்று எழுதிய சத்தம் அங்கே எதிரொலித்தது.
ஐஸ்வர்யாவை சந்தேக பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஜென்டில் மேனேஜர் நேத்ரன் “சார் அப்ப நிஜமாவே நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? நான் கூட அது ஜஸ்ட் ரூமரா இருக்கும்னு நினைச்சேன்.” என்று சொல்ல, சென்று கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவை ஒரு பார்வை பார்த்த அஸ்வின் “எளிமியை தூரமா வெச்சிக்கிறதை விட பக்கத்துல வெச்சிக்கிறது பெட்டர்ன்னு தோணுச்சு. அதான் அவளை என் கண்ட்ரோல்ல வச்சிருக்கேன். இனிமே அவ ஃபேமிலியோட பிசினஸ், ப்ராப்பர்ட்டீஸ், shares எல்லாத்தையும் நம்ம தான் மெயின்டைன் பண்ண போறோம். இதனால நிறைய லீகல் இஸ்யூஸ் நம்ம ஃபேஸ் பண்ண வேண்டியது இருக்கும். நீங்க எல்லாத்துக்கும் ரெடியா இருங்க.” என்றான்.
– முத்தங்கள் தொடரும்